கதிராமங்கலம்,நெடுவாசல் தொடர்ந்து இப்போது நன்னிலத்திலையும் மீத்தேன் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதனை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது....
சரி மீத்தேன் திட்டத்தை பற்றி முழுமையான உண்மை பின்னணி பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
ஆசியாவிலே மிகப்பெரிய நெற்சமவெளிபரப்பை கொண்ட காவிரி ஆற்றுப்படுக்கை தனது நிலத்திலிருந்து 10,000 அடிக்கு கீழே ஆசியாவிலே மிகப்பெரிய நிலக்கரிப்படுக்கையும் தன்னுள் கொண்டுள்ளது, பாண்டிசேரி பாகூர் தொடங்கி நெய்வேலி படர்ந்து நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட நிலப்படுக்கைகளுக்கு அடியில் கிளர்ந்தது பரவியிருக்கிறது.
மொத்தம் 19,500 க்யூபிக் மில்லியன் டன் நிலக்கரிப்படுக்கையை கொண்டுள்ளது. அரசும்,தனியார் நிறுவனங்களும் இந்த நிலக்கரிப்படுக்கையை கறுப்புதங்கமாக பார்க்கின்றனர்
ஆனால் இதை கைப்பற்ற இவர்களுக்கு வேறுமாதிரியான சிக்கல்கள் உள்ளது. காவிரி டெல்டா பகுதியை எளிதில் நெய்வேலி போல் சுரங்கம் அமைத்து நிலக்கரியை எடுத்துவிட முடியாது, அப்படி எடுக்க எண்ணினால் நிலக்கரிப்படுக்கையின் மேலடுக்கு பாறையில் உள்ள மீத்தேனும் அதற்கும் கீழ் உள்ள shale rock எனப்படும் களிப்பாறை இடுக்குகளில் உள்ள ஷெல் வாயும் பற்றி எரியும்.
கறுப்புதங்கமான நிலக்கரியை எடுக்க இந்த சிக்கல்களை சமாளிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு புவியில் விஞ்ஞானிகள் வகுத்தளித்த திட்டம்தான் மீத்தேன்,ஷெல் எரிவாயு எடுக்கும் திட்டம்.
எனவேதான் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டின் உரிமையான காவிரி நீரின் அளவை குறைத்தும் தடுத்தும் வருகிறது கர்நாடகஅரசு இதை மத்தியிலும், மாநிலத்திலையும் எத்தனை அரசுக்கள் மாறினாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அரசியல் நாடகம் நடத்தி வருகின்றன.
இதன் விளைவால் காவிரிடெல்டா பகுதிகளில் நாளுக்குநாள் விவசாயம் குறைந்துகொண்டே வருகிறது, மேலும் இந்த நிலையை தொடர்ந்து செய்து விவசாய பெருங்குடிமக்களுக்கு நெருக்கடியை கொடுத்து விவசாயம் முற்றிலும் அழிய செய்வார்கள், வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் தாங்களாகவே நிலத்தை கொடுத்துவிட்டு வெளியேறுவார்கள் பிறகு மீத்தேன், ஷெல் எரிவாயு போன்ற அபாயகரமான திட்டத்தை நிறைவேற்ற அவர்களுக்கு எளிதாகிவிடும், இதனால் மத்தியஅரசு நீதிமன்றத்தில் இப்போதைக்கு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மனுத்தாக்கல் செய்துள்ளது.
இப்படி காவிரிப்படுக்கையை கைப்பற்ற துடிக்கும் இவர்கள் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மீத்தேன் எடுப்பார்கள் அதற்குள் அப்பகுதிகள் எந்த உயிரினமும் வாழமுடியாத பகுதியாக ஆகிவிடும்.
பிறகு காவிரிபடுகையை அகழ்ந்து திறந்தவெளி சுரங்கம் அமைத்து 80 ஆண்டுகளுக்கு மேல் நிலக்கரி எடுப்பார்கள் சுமார் 1650 அடி ஆழம் வரை நிலக்கரி எடுத்துவிட்டு மண்ணை இழுத்து மூடுவார்கள், இதை மத்திய, மாநில அரசுகளே வளர்ச்சி திட்டம் என கதைவிடும்.
தொழில் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் சக்தி தான் தேவையெனில் அதை பெற பலவழிகள் உள்ளது அதை விடுத்து நிலத்தில் தான் மீத்தேன் எடுப்பேன் என சாதிப்பதேன்?
வெப்பமண்டல காவிரி பகுதிகளில் சூரியஒளியில் மற்றும் கழிவுகளை கொண்டும் மின்சாரம் உற்பத்தி செய்யலாமே? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு நன்மை செய்யாமல் பன்னாட்டு நிறுவன இலாபத்திற்காக தொன்றாடுவது ஏன்? யோசியுங்கள்...
சொந்த மண்ணில் அகதிகளாக வரும் நிலைக்குள் விழித்து கொள்வோம். இது போன்ற மண்ணை மலடாக்கி , ஆற்றை அமிலமாக்கும் திட்டங்களை தடுப்போம்.....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.