19/12/2018
உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே....
உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகைக்கு 24 மூச்சு, நிமிடத்திற்கு 360 மூச்சு வகுக்கப்பட்டுள்ளது. (இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது ), ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது.
இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்றுக் கேட்கின்றீர்களா ? சம்பந்தம் இருக்கிறது. இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216 (உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன.
மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே...
யாழ் இசை...
முத்தமிழ் என்றால் இயல், இசை, நாடகம் ஆகும்.
தமிழர்கள் இசையோடு ஒன்றியவர்கள் என்றால் அது மிகையாகாது. இசையில் தனி முத்திரைப்பதித்தவர்கள் தமிழர்கள். தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் இசையைக் கண்டவர்கள் தமிழர்கள்.
பல இசைக்கருவிகளையும் தோற்று வித்தனர். இன்று வழக்கில் இல்லாத பல வகையான இசைக்கருவிகள் இலக்கியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன்.
அவ்வகையில் தந்தி இசைக்கருவியான யாழ் முக்கியமான இடத்தை வகிக்கின்றது.
மரத்தினால் செய்யப்பட்டு நரம்புகள் அல்லது கம்பிகள் பூட்டப்பட்டவை நரம்புக் கருவிகளாகும். அவை யாழ், வீணை, தம்புரா, கோட்டுவாத்தியம், பிடில் (வயலின்) முதலியனவாம்.
இதில் யாழ் மிகவும் பழமையான இசைக் கருவியாகும்.
இவ்விசைக்கருவியை "fairy tale" கார்டோன்களிலும் பழைய ஆங்கில படங்களிலும் அதிகம் காணலாம்.
வழக்கத்தில் இவ்விசைக்கருவியைக் கண்டிராததால் அது மேற்கத்திய இசைக்கருவி என்று பலர் கருதுகின்றனர்.
யாழ் தமிழன் கண்ட இசைக்கருவி என்ற உண்மை நம்மில் பலருக்குத் தெரியாமலே உள்ளது.
பண்டைய நாகரிகங்கள் எல்லாவற்றிலும் யாழ் என்ற இசைக்கருவி பயன்பாட்டில் இருந்துள்ளது. கிரேக்க பாரம்பரியத்தில் இதைக் காணலாம். ஆங்கிலத்தில் யாழ் இசைக்கருவியை ஹார்ப் (harp) என்று அழைப்பர். இன்னும் அவர்களிடையே நவீன யாழாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
ஆனால் தமிழர்கள் மறந்துவிட்ட இசைக்கருவியாக யாழ் திகழ்கின்றது.
இன்று இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை முதன்மையிடம் வகிக்கிறது.
தமிழர் கண்டு வாசித்த முதல் நரம்பு இசைச்கருவி யாழ் ஆகும்.
நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்கு யாழ் ஒர் அடிப்படைக் காரணமாகும்.
தமிழுக்கென்று சிறப்பான எழுத்து “ழ்”. “யாழ்” என்ற சொல்லில் ”ழ்” தாங்கி வருவதிலேயே தெரிகின்றது யாழ் தமிழுக்குரிய இசைக்கருவி என்று.
யாழின் வகைகள் பல...
அவை பேரியாழ் (21 நரம்புகளை உடையது) மகரயாழ் (17 நரம்புகளை உடையது) சகோடயாழ் (16 நரம்புகளை உடையது) செங்கோட்டியாழ் (7 நரம்புகளை உடையது) இவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், சீரியாழ், மருத்துவயாழ், ஆதியாழ் எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.
மேலும், யாழ் நூலில் கூறப்படும் யாழ்கள், வில் யாழ் , சீறி யாழ், செங்கோட்டியாழ், பேரி யாழ், சகோட யாழ், மகர வேல்கொடி யாழ் , மகர யாழ் / காமன் கொடி யாழ் மற்றும், மகர யாழ் / வர்ணர் ஊர்தி யாழ்.
வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். அந்த வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் யாழ் சிந்து சமவெளி நாகரீகத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
தொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக் குறிக்கும். இது மிடற்றிசை அதாவது குரலிசை, நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை) ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும். இந்த பண்வகைகளை ‘யாழின் பகுதி’ எனவும் இசைநூலை ‘நரம்பின் மறை’ எனவும் தொல்காப்பியர் குறித்துள்ளார். பண்டைக்காலத்தில், தந்தி கருவியான யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன என அறியலாம்.
மேலும், அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை. சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பு, பல்வகை யாழ்கள் மற்றும் யாழின் அமைப்புகள் தொடர்பான குறிப்புகள் பல இருக்கின்றன.
சிலப்பதிகரம் தமிழிசையைப் பற்றி தெளிவாக விளக்கும் தமிழிசை நூலாகத் திகழ்கிறது. சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையில் யாழாசிரியனின் அமைதியும், கானல் வரி மற்றும் வேனிற் காதையில், யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எங்கனம் இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
சீவக சிந்தாமணி எனும் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இலக்கிய நூலிலும் யாழ் பற்றி பேசப்பட்டிருக்கிறது. காந்தர்வதத்தை என்னும் இசையில் தேர்ந்த பெண்ணுக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், யாழுக்கு நேரக்கூடிய குற்றங்கள், யாழுடன் சேர்ந்து பாடுவதற்கான இலக்கணம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
பருந்து பறக்கும் பொழுது நிழல் அதனைத் தொடர்வது போன்று மிடற்றிசையும் , யாழிசையும் இணைந்து இருத்தல் வேண்டும் என்றும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
திருமுறையாசிரியர்களின் பதிகங்களில் யாழ் இறையாடலுக்குப் பயன்பட்ட இசைக்கருவியெனப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். திருஞான சம்பந்தர் இயற்றிய தேவாரப்பதிகங்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அழகாக யாழில் வாசித்திருக்கின்றார். இவர் கையில் இருந்தது 14 தந்திகளைக் கொண்ட சகோட யாழ். இதுப் போன்று பக்தி இலக்கியங்களிலும் யாழின் பயன்பாடு அதிகமாகவே காணப்படுகின்றன.
மகர யாழ் 17 அல்லது 19 தந்திகளைக் கொண்டது. இது மகர்மீனின் உருவம் உடையதாகையால் இப்பெயர் பெற்றதாம். அழகிய இந்த யாழ் யவனத் தச்சர்களால் செய்யப்பெற்றது என்று உதயன காவியம் உரைக்கின்றது.
பொருநராற்றுப் படையில் யாழ் பற்றிய வர்ணனை ஒன்று காணப்படுகிறது. அதி அற்புதமான வர்ணனையாகவும் கருதப்படுகின்றது. ஒப்பனைச் செய்யப்பட்ட மணமகளின் அழகிய தோற்றம் போலக் காட்சியளிக்கிறது யாழ் என்கிறார் பொருநராற்றுப் படை இயற்றிய புலவர்.
இத்தகைய யாழை மீட்டி பாணர்கள் இசையைப் பொழியும் போது, அதன் இசையில் மயங்காதவர்கள் எவரும் இல்லை என்கிறார். வழிப்பறிக் கொள்ளையர்கள் கூட இந்த இசையைக் கேட்டதும், தங்களது கொலை, கொள்ளை செய்யும் எண்ணத்தைக் கைவிட்டு விடுவார்களாம்.
தங்களது கையில் மறைத்து வைத்துள்ள கொடிய கொலைக் கருவிகளைக்கூட இசையில் மயங்கிக் கீழே போட்டு விடுவார்கள் என்கிறார் புலவர்
கல்லாடம் என்னும் சைவ நூல் கல்லாடர் என்பவரால் இயற்றப்பட்டது. ஒன்பதாம் திருமுறைகளில் ஒன்றான இந்த நூல் கி.பி. 11-ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய கல்லாடம் அகப்பொருள் நூலாகும்.
கல்லாடத்தில் நாரதப்பேரியாழ், தும்புருயாழ், கீசகயாழ், தேவயாழ் என்று நான்கு வகை யாழ்கள் பற்றிய செய்திகள் உள. நாரதப் பேரியாழ் 1000 நரம்புகளைக் கொண்டது. தும்புருயாழ் 9 நரம்புகளையும், கீசக யாழ் 100 நரம்புகளையும் கொண்டுள்ளது என்கிறது.
மேலும், சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம், திருமங்கலம் கோயில்களிலும், பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும், யாழ் குறித்தான பல சிற்பங்களைப் பார்க்கலாம். (இந்த சிற்பங்களின் புகைப்படங்கள் இணையத்தில் காணலாம்)
கொங்குவேளிர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டது பெருங்கதை என்ற காப்பியம். இதில் யாழ், வீணை, குழல், வளை, வயிர் ஆகிய ஐந்து பண்ணிசைக் கருவிகளாகும். பறை, முழவு, முரசு, தண்ணுமை, தடாரி, குடமுழா, பாண்டில் ஆகிய ஏழு தாளக் கருவிகளும் மனிதக் குரலும் இசையெழு தளங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. (தமிழர் இசை பக்கம். 263).
யாழ்நூல், நாரதகீதக்கேள்வி ஆகிய இசை நூல்கள் இருந்தன என்று கூறப்படுகிறது. ‘கேள்வி’ என்ற சொல் யாழ் கருவியையும், இசை நூலையும் குறிக்கும். இசைப்பயிற்சி பெறுவோர் இத்தகைய நூற்களைக் கற்றுத்தேற வேண்டும் என்கிறது. யாழும் பாடலும் வேறுபாடின்றி ஒத்து இயங்குதல் வேண்டும். பண்ணிசை விதிகளை நன்கு அறிந்த குற்றமற்ற கேள்வியறிவு உடையவர்களே சிறந்த இசை வல்லுநர் ஆவார் என்கிறது பெருங்கதை.
யாழினை இசைப்பதற்கென்றே 'பாணர்' என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது.
ஈழத்தவரான சுவாமி விபுலாநந்தர் 1947 இல் ”யாழ் நூல்” என்னும் தமது இசைத் தமிழ் நூலில் யாழைப் பற்றி பல விரிவான ஆய்வுகளைத் தொகுத்துள்ளார்.
யாழ் தமிழர்களின் வாழ்வில் ஒன்றி இருந்ததை இதில் காணலாம். யாழ் மட்டுமல்ல இன்னும் பல தமிழன் கண்ட தமிழ் இசைக்கருவிகள் இலக்கியங்களிலும் புராணங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. மீட்க வாய்பில்லை என்றாலும் பரவாயில்லை அதைப் பற்றி அறிந்து கொள்ள் முற்படுவோமே.
திரிந்து புதைந்த நம் தமிழ் இசையை மீண்டும் தோண்டுவோம். தோண்டி மீட்போம்...
கேன்சர் வர காரணம்...
நம் உடலில் கேன்சர் வர காரணமாக நாம் உண்ணும் தினசரி உணவுகள்..
கீழ்வரும் உணவுகளை உண்ணும் குடும்பம்; குடும்பத்தோடு விஷம் உண்ணுவது போல்..
1. மரபணு மாற்றப்பட்ட உணவு: DNA MODIFIED FOODS/HYBRID: அணைத்து வகை ஹைப்ரிட் காய் கறிகள், சோள உணவுகள் (ஸ்வீட் சோளம்).
2. மைக்ரோவேவில் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன் (ACT-II) MICROWAVED POPCORN.
3. கேன் செய்யப்பட்ட உணவு: (CANNED, PACKAGED DRINKS): REAL, TROPICANA போன்ற குளிர்பானங்கள் PACK செய்ய பயன்படும் TETRAPACKINGல் bisphenol-A (BPA) என்ற மூலக்கூறு உள்ளது. உண்ணும் பானத்துடன் இந்த மூலக்கூறு நம் மூளை செல்களை பாதிக்கும்.
4.எரிக்கப்பட்ட இறைச்சி: GRILLED MEATS: அதிகமாக நேரம் அதிக வெப்பத்தில் கிரில் செய்யப்பட்ட இறைச்சியில் கேன்சர் செல்களை உண்டுசெய்யும் Heterocyclic Aromatic Amines உருவாகிறது. இந்த இறைச்சியை உண்ணும்பொழுது நம் உடலில் நல்ல செல்கள் Heterocyclic Aromatic Aminesவால் சிதைக்கப்பட்டு வளர்ச்சிதை மாற்றங்கள் உருவாகிறது.
5.வெள்ளை சக்கரை: REFINED SUGAR: கரும்பில் இருந்து எடுக்கும் சக்கரையை சுத்திகரிப்பு செய்து வெண்ணிறமாக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் சக்கரையை 'மந்த விஷமாக' மாக மாறுகிறது. வெள்ளை சக்கரைக்கு பதில் நாட்டு சக்கரை, பனைவெல்லம், தேன் போன்றவைகளை தேர்ந்தெடுங்கள்.
6. விற்பனைக்கு வரும் உப்பிட்ட உணவுகள், ஊறுகாய் வகைகள்: (SALTED, PICKLED FOODS): விற்பனைக்கு வரும் உப்பிட்டு பாடம் செய்யப்பட்ட உணவுகள், ஊறுகாய் வகைகளில் நிச்சயம் NITRATE செய்யப்பட்ட பதனசரக்கு சேர்க்கப்பட்டிருக்கும். இவைகளை நீண்ட நாள் உபயோகத்தில் பதனசரக்குகள் நமக்கு விஷத்தன்மை வாய்ந்த NITRATES ஐ உடலில் செலுத்தி வளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.
7. சோடா மற்றும் கரியமிலம் ஊட்டப்பட்ட பானங்கள்: கோக் முதல் போவோண்டோ அனைத்திலும் மேல சொன்ன வெள்ளை சக்கரை வகைதான் அதிகம். ஒரு சில பானங்களில் வெள்ளை சக்கரையை விட கொடூரமான சோளச்சக்கரை (CORN SYRUP) சேர்கிறார்கள். இது நம் உடலில் அதிகபடியானவளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.
8. சுத்திகரிக்கப்பட்டு வெள்ளை ஆக்கப்பட்ட மாவு வகைகள்: REFINED WHITE FLOURS: மைதா, ATTA, தோசா MIX போன்ற மாவு வகைகள் தான். கடையில் விற்கப்படும் 80% மாவு வகைகளில் சுத்திகரிக்க CAUSTIC SODA முதல் BROMIDE வரை கலப்பார்கள். அதனால் தான் சப்பாத்தி கூட பூரி போல உப்பும்...
9.பண்ணை மீன்கள்: FARMED FISH : பண்ணை மீன்கள் ஒரே தொட்டியோ குட்டையில் வளர்க்க படுவதால் தொற்றும் அதிகம், தொற்று வராமல், பரவாமல் இருக்க ஒவ்வொரு மீனுக்கும் ANTIBIOTIC ஊசி போடப்படும், அதைவிட PESTICIDE செய்யப்பட்ட நீரில் தான் வளர்கிறது. விலை மலிவில் கேன்சர் செல்கள் தூண்ட காரணமான ரசாயனங்களை மறைமுகமாக வாரம் ஒரு முறை நாம் எடுக்கிறோம். மீனில் இருந்து பெறவேண்டிய ஒமேகா-3 FATTY ACIDS வளர்ப்பு மீன்களில் 1% கூட இருக்காது. எப்பொழுதும் பிரெஷ் கடல் மீன் தான் சிறந்தது.
10.சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்: Hydrogenated & Refined Oils: விதைகள், காய் கறிகளில் இருந்து எண்ணெய்களை எடுக்க கம்பெனிகள் கையாளும் முறையில் பல ரசாயனங்கள் உட்படுத்தப்படுகிறது. உடல் சற்றும் ஏற்றுக்கொள்ளாத வகையில் பல இரசாயன மாற்றங்கள் செய்யப்பட்ட எண்ணைகளில் தான் நாமும் நம் குடும்ப நபர்களும் பல உணவுகளை சமைத்து உண்கிறோம். அருகில் கிடைக்கும் செக்கில் ஆட்டிய தேங்காய், கடலை எண்ணைகளை வாங்கி உபயோகிக்கவும்.
மேல் சொன்ன உணவுகள் தான் நாம் தினமும் உபயோகிப்போம். நல்ல தரமான பொருள் நம் அருகிலேயே கிடைக்கும். தேடிப்பிடித்துதான் வாங்க வேண்டும்.
முடிந்த வரை - SUGAR FREE, DIET, LITE, FAT FREE போன்று அச்சிடப்பட்ட பொருள்களை தவிர்த்தால் கேன்சர் வர காரணமான ரசாயனத்தையும் தவிர்க்கலாம்...
கஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டி.. புதுப்போன் வாங்கி கொடுத்த நடிகர் சூரி...
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகிறார்கள். அவர்களுக்கு திரையுலக பிரபலங்களும், பொது மக்களும் உதவி செய்து வருகிறார்கள்.
நடிகர் ஜி.வி. பிரகாஷ் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார். நடிகர் சூரி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.
அப்பொழுது ஒரு பாட்டி சூரியிடம் வந்து புயலில் என் செல்போன் தொலைந்துவிட்டது, அதனால் என் பேரனிடம் பேச முடியவில்லை என்று கூறினார்.
இதையடுத்து சூரி அந்த பாட்டிக்கு புது செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.
மேலும் அவருக்கு செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்துள்ளார். சூரியின் இந்த செயலை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...
செம்பு குடங்களில் நீர் எதற்கு....
அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்.
சித்தர்கள் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா?
செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று அந்த நிறுவனம் அறிவித்தது.
இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்து தான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்ற தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் 'மினரல் வாட்டர்' மாதிரி அருமையாக மாறி விடுகிறதாம். செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும்.
மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள் தான். தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகளில் செம்புக்குடம்தான். இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில் தான் தண்ணிர் குடிக்கிறார்கள்.
தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம்.
தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா? வாங்க பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...
இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும்.
அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும்.
இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும்.
தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு...
1) பாக்டீரியாக்களை கொல்லும் தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.
2) தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.
3) கீல்வாத வலியை குணப்படுத்தும் தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.
4) புண்களை வேகமாக குணப்படுத்தும் புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.
5) மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.
6) செரிமானத்தை மேம்படுத்தும் வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.
7) இரத்த சோகையை எதிர்க்கும் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.
8) கர்ப்ப காலத்தின் போது: கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.
9) புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.
10) வயதாகும் செயல்முறை குறையும் தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்...
இயற்கை வைத்தியம்...
1. உணவுக்குப் பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்...
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
7. கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
11. காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது...
கண்ணீரே ஒரு கிருமி நாசினி...
பொதுவாக உடலில் காயம் பட்டக் குழந்தைகள் அழுவதால், அவர்களது காயம் விரைவில் ஆறும் என்று கூறினால் நம்புவீர்களா?
ஆம், நிச்சயமாக, அழாத குழந்தைகளை விட, அழும் குழந்தைகளின் காயம் விரைவில் ஆறுவது அறிவியல் உண்மைதான். இதற்குக் காரணமாக அமைவது கண்ணீரில் உள்ள கிருமி நாசினி.
மனிதர்களின் கண்ணீரில் ஒரே ஒரு துளியை எடுத்து 6 ஆயிரம் துளி தண்ணீருடன் கலந்தால் கூட அந்த கலப்பு நீர் நூற்றுக்கணக்கான நோய்க்கிருமிகளைக் கொல்லும் சக்தி கொண்ட கிருமி நாசினியாகவே இருக்கும்.
லைனோசம் என்ற ஒரு வகை ரசாயனம் மனிதர்களின் கண்ணீரில் ஏராளமாய் இருக்கிறது. இதுவே கிருமி நாசினியாக செயல்படுகிறது.
இனி காயம் பட்ட குழந்தைகள் அழுதால் அதற்காக அவர்களைத் திட்ட வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்காக அழச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்...
மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன்...
கணக்கதிகாரம் என்கின்ற புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல். இதைத் தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம்.
இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .
இதில் நீட்டலளவை (தூரத்தை) அளக்கும் ஒரு அட்டவனையை கண்டேன், அதில் "யோசனை" என்ற ஒரு அளவைக் காணமுடிகிறது . அதைப் பற்றிச் சற்றே யோசித்த வாரே இருந்தேன்.
அந்த யோசனை அளவை பற்றி ஒரு யோசனை கிட்டியது. இந்தக் கணக்கதிகாரத்தில் அணைத்து அளவுகளும் ஒரு புறபொருளுடன் ஒப்பிட்டேக் கூறுகின்றனர். ஆக, யோசனை என்று ஒரு அளவு எப்படி இருக்கும் என்று கணித்துப் பார்க்க எண்ணினேன்.
1850 ஆம் வருடம் "ஹெர்மன் வோன் ஹெல்ம்வோல்ட்ச" ( Hermann von Helmholtz ) என்ற புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு தவளையின் கால்களில் மின்சாரத்தை அளக்கும் கருவியைப் பொருத்தி அதன் மனதின் வேகத்தை அளக்க முடியும் என்று நிருபித்தார்.
அதற்கு பின்பு வந்தவர்கள் அதன் சரியான மனதின் வேகத்தின் அளவைக் கண்டுபிடித்தனர். (Speed of Thought). அவை 50 மீட்டர் /நொடி என்று அளவிடப்பட்டது. எனினும் வேகமாக கடக்கும் தசைகள் இதே தகவலை 100 மீட்டர் /நொடி என்ற அளவிலும் கடக்குமாம்.
சரி இவை ஒரு பக்கம் இருக்க அந்த யோசனை என்ற அளவையும் தற்போதிய கணித அளவையும் ஒப்பிட்டுப் பாப்போம்.
1 முழம் = 46.6666 சென்டிமீட்டர் (Cm )
1 சிறுகோல் = 559.9992 சென்டிமீட்டர் (Cm )
1 கூப்பிடுதூரம் = 279999.6 சென்டிமீட்டர் (Cm )
1 காதம் = 1119998.4 சென்டிமீட்டர் (Cm )
1 யோசனை = 4479993.6 சென்டிமீட்டர் (Cm )
சென்டிமீட்டரை கிலோமீட்டராக மாற்றினால்..
1 யோசனை = 44.799936 கிலோமீட்டர் (இது காலத்தை குறிக்காத அளவு)
இப்பொழுது அவர்கள் கூறியபடி 50 மீட்டர்/நொடி என்று கால அளவுடன் கணக்கிட்டால்
50 மீட்டர்/நொடி என்பதை கிலோமீட்டர் கணக்கில் பார்த்தல்
180 km/hr
எனினும் இவர்கள் அறிவித்த இந்த அளவு உணர்ந்து, சிந்தித்து, முடிவெடுத்து, செயல்படுதல் என்ற நான்கு செயல்பாட்டை ஒருகிணைந்த அளவே. இங்கு யோசனை என்ற அளவு சிந்தித்தல் என்ற பகுதியில் வரும். ஆகவே,
180 / 4 = 45 கிலோமீட்டர் / மணித்தியாலம் என்றே வருகிறது .
45 கிலோமீட்டர் / மணித்தியாலம் = 1 யோசனை
எனவே காலத்தைக் குறிக்காத ஒரு யோசனையின் அளவு இவர்கள் அறிவித்த அளவுடன் பொருந்துகிறது.
இதே போல்,
நூற்று ஐம்பதாயிரம் யோசனை = 1 கதிரவநியங்குகிற மட்டு (6719990.4 km)
இரண்டு கதிரவநியங்குகிற மட்டு = 1 விண்மீன் மண்டலம் (13439980.8 Km )
இந்த அளவுகளும், நவீன அறிவியலில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகளிலும் வேறுபாடு இருந்தாலும். முதல் முயற்சி என்றும் தமிழனின் சொந்தமாக இருக்கிறது. இன்றளவும் ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில் முதல் வெற்றி காண்பது கடினந்தான்.
இப்படி ஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்துருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்...
வேண்டியதை பெருங்கள்...
நமக்கு அது கிடைத்தால் நல்லா இருக்கும், இது கிடைத்தால் நல்லா இருக்கும் என நினைப்பதோடு விட்டுவிடுகிறோமே ஒழிய..
அதை ஆத்மார்த்தமாக துளிகூட உடலளவில் உணர்வதில்லை..
உணரும் போது மட்டுமே அதற்கு ஒத்தவற்றை கவர்ந்திழுக்க முடியும்..
ஒரு நாளில் வெறும் அரைமணி நேரமாவது வசதியான நிலையில் உட்கார்ந்தோ அல்லது படுத்தோ..
நமக்கு வேண்டியதை நாம் அடைந்து விட்டதாக உணர்ந்தோமானால்..
அது வெகு விரைவில் நம்மை வந்தடைந்தே தீரும்...
தமிழ்நாடு சட்டமன்றம் 1956 க்கு முன்...
அதாவது மொழிவாரிமாகாண பிரிவினைக்கு முன் இருந்த சட்டங்களை தமிழர் நலன்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும்...
மற்ற மூன்று மாநிலங்கள் அதாவது ஆந்திரம் கர்நாடகம்,கேரளம் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநில நலன்களுக்கான சட்டங்களை இயற்றிக் கொண்டதைப் போல் நாமும் நமக்கான சட்டங்களை இயற்ற வேண்டும்..
ஆனால் அது திராவிடத்தின் போர்வையில் பிறமொழியாளர்கள் ஆளும் வரை இது நடக்காது ..
ஆகையால் இனி தமிழர் நாட்டை தமிழனை மட்டுமே ஆள வைப்போம் என உறுதி எடுப்போம்....
திமுக எனும் தெலுங்கர் கட்சியும் துரோகங்களும்...
கோபங்களையும் துரோகங்களையும் அந்த அந்த இடத்தில் சுட்டிக்காட்டியே ஆகனும்...
கருணாநிதி என்பவர் ஏதோ ஒரு தெருவில் வசிக்கும் ஆசாமியல்ல.
திமுக தலைவர், தமிழர் தலைவர், திராவிட தலைவர்,தமிழக முதல் அமைச்சர், உலக தமிழர்களின் தலைவர்.. என போற்றப்படும் விளம்பரப்படுத்தும் நபர்.
மேலாக திராவிட இயக்க அரசின் உச்ச அதிகாரம்.
இப்படிப்பட்ட நபர் ஈழத்தில் இறுதிப்போர் நடந்த காலத்தில் தமிழர்களின் படுகொலைகள் நடந்துகொண்டிருக்கும் போது இங்கு ஏமாற்று அரசியல் நாடகமும் மகளுக்காக மத்தியில் மண்டியிட்டதும்னு இழிவான அரசியலை நடத்தியவர்.
மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை என தமிழர்களின் உயிர்களை துச்சமாக மதித்த ஈனப்பிறவி.
நாங்கள் அறிவோம் கருணாநிதியால் ஒரு மயிரும் பிடுங்க முடியாதுன்னு ஆனால் தான் வகித்த பதவிக்கு தமிழ் தமிழர் என்று அரசியல் நடத்தியதற்கு குறைந்தபட்சம் திமுக எம்பிக்களை ராஜினாமா செய்தாவது எதிர்பை காட்டியிருக்கலாம்.
கருணாநிதி என்பது கருணாநிதியோடு முடிவான ஒன்றல்ல ஸ்டாலிருந்து அவரின் வாரிசுகள் திமுக உயர்பீடத்தில் இருக்கும்வரை தொடரும்.
இறந்தாலும் கவலைப்பட மாட்டோம்... துரோகத்தினை சொல்லிக் கொண்டேயிருப்போம். அவரை மகானாக்க விடமாட்டோம்...
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை நீட்டிப்பு...
ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதற்கு மேலும் தடை நீட்டிப்பு செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
ஜன.,31க்குள் ஆன்லைன் மருந்து விற்பனையை முறைபடுத்த புதிய விதிகளை வகுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவு
புதிய விதிகளை மத்திய அரசு உருவாக்கும் வரை ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யக்கூடாது; அரசிதழில் வெளியிட்ட 2 மாதத்திற்கு பிறகு முறையான உரிமம் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும்
மருந்து வணிகர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
Subscribe to:
Posts (Atom)