10/10/2022
மனுநீதியின் துரோக வரலாறு.....
கிருஷ்ணராஜ தேவராயன் : 1509 முதல் 1529 வரை ஆட்சி செய்த விஜயநகர பேரரசன். தென்னிந்தியாவில் பிராமண நீதியான மனு சாஸ்திரத்தை பரவச் செய்த முழு முட்டாள் அரசன்.! இவனது ஆட்சிக் காலத்தில் தான் தமிழ் நாட்டில் தெலுங்கு மற்றும் கன்னட பிராமணர்கள் இறக்குமதி செய்யப் பட்டனர். அதுவரை பெரும்பாலும் தமிழ் ஓதுவார்கள் கோலோச்சிய தமிழ் நாட்டுக் கோயில்களில் தமிழை விலக்கி வைத்து சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கை நுழைத்தவன் இவன்.!
1524 ஆம் ஆண்டில், கிருஷ்ண தேவராயன் தனது மகன் திருமலை ராயனை அடுத்த மன்னனாக முடிசூட்டி விட்டு, தான் ஏனைய அரசு அலுவல்களை கவனிக்கப் போகிறான். ஆனால் அவ்விளவரசன் நீண்ட காலம் உயிர் வாழவில்லை.! அவன் விஷம் கொடுத்துக் கொலை செய்யப் பட்டது உறுதியாகிறது.! இறுதி விசாரணையில் ராயனின் முக்கிய அமைச்சரான திம்மராஜின் தொடர்பும், அதில் அந்த பார்ப்பனன் ஈடுபட்டிருப்பதும் தெரிய வருகிறது.!
திம்மராஜுக்கும் அவன் மகனுக்கும் சிரச் சேதத் தண்டனை விதித்து உத்தரவிட்டான் ராயன்.! ஏற்கெனவே மனுநீதி அவனது நாட்டில் சட்டமாக ஏற்றுக் கொள்ளப் பட்டதால் அவனது தீர்ப்பை அவனே நிறைவேற்ற முடியாமல் போனது..! பிராமணர்களான அவர்கள் தலைகளை கொய்வதற்கு வேத நூல்கள் அனுமதிக்காது என்று பார்ப்பனக் கூட்டம் உத்தரவு போட்டதால் இருவரின் கண்கள் மட்டும் குருடாக்கப் படுகின்றன.! இப்படியாக, நமது வரலாறு நெடுகிலும் பார்ப்பனர்கள் சூதுவாது மூலம் நாட்டுக்கும் துரோகம் செய்து, மன்னரையும் ஏமாற்றிய நிகழ்ச்சிகள் ஏராளமாக உள்ளன.! இவர்களே சட்ட நூல்களை எழுதி, தங்களைத் தாங்களே மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிக் கொண்டனர்..!
ஆதாரம் : Pandurang Bhimarao Desai (1970). A History of Karnataka: From Pre-history to Unification. Kannada Research Institute, Karnataka University. p. 371. Raya crowned his six-years-old son Tirumala as yuvaraja and introduced him to the affairs of the state But within one year the young prince died. It was reported that he was a victim of poison...
குழந்தைக்கு தாயானார் நயன்தாரா...
விக்கி நயன் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்று எடுத்து இருக்காங்க. 🤷🏻♀️
இது தெரியாம இவனுங்க கணக்கு பாத்திட்டு இருக்கானுங்க... 😤🤧
குறிப்பு : பயில்வான் ரங்கநாதன் ஏற்கனவே நயன்தாராவால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லியிருந்தார்...