05/12/2021

நம்முள் ஜோதி தரிசனம் கிட்டும்...

 


எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன், பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுனை அளவு நெருப்பாக இருக்கிறான்.

நம் உடம்பில் உட்புகு வாசலாகிய இரு கண்மணியில் ஞான குருவால்  தீட்சை பெற்று..  கண்மணியில் உணர்வு பெற்று அதை நினைந்து நினைந்து உணர்ந்து  உணர்ந்து தியானம் செய்ய வேண்டும்..

தொடர்ந்து முயற்சி செய்யச் செய்ய நெகிழ்ச்சி ஏற்பட்டு கண்களில்  நீர் ஆறாக பெருகி பாயும். இப்படியே சாதனை தொடர வேண்டும்..

அப்போது கண்மணியின் உள் உள்ள சிறுஜோதி கொஞ்சங் கொஞ்சமாக பெருகும்.. கண்மணியின் சுழற்சி கூடுவாதால் இது நடக்கும்.. மனம் அங்கே நிற்பதால் கை கூடும்.. இரு கண்மணி வழி பெருகும் ஜோதி உள்புகுந்து சேர்ந்து அக்னி கலையுடன் போய் சேரும், அந்த இடம் நம் தலை உச்சிக்கு கீழ் , வாய் அண்ணாவுக்கு மேல் உள்ள இடமே..

"விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு

தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து

உண்ணின் ருறுக்கியொ  ரோப்பிலா   ஆனந்தக்

கண்ணின்று காட்டி களிம்பறுத்  தானே "

- திருமந்திரம்.

சனாதன தர்மத்திற்கு விளக்கம் இந்த ஒரு பாடலே போதும்..

நம் கண்மணியில், வலது கண் சூரியன் இடது கண் சந்திரன் ஆகிய கண்மணிகளிலும் தியானம் செய்வதால் பெருகும் ஒளி உட்புகுந்து அக்னி கலையில் சேரும் - அதுவே முச்சுடரும் ஒன்றான நிலை..

ஜோதி பாதம்.. திருவடி.. இந்நிலைபெறும் முயற்சியிலிருக்கும் சாதகனுக்கு படி படியாக  உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள 72000  நாடி நரம்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி பரவும். உடல் தூய்மையடையும்.. நோய் நொடி வராது.. உடல் உறுதி பெறும்.. உள்ளம் பண்பாடும்.. இறைஅருள் கிட்டும்.. எல்லா ஞானிகளின் ஆசிர்வாதமும் பெறுவான்.. ஜோதி தரிசனம் கிட்டும்.. திரை விலகும் ஆன்மா பிரகாசிக்கும்..

அங்கிருந்து ஜோதி ஊர்த்துவமுகமாக மேல் எழுந்து உச்சியை சகஸ்ராரத்தை அடையும்.. உச்சியை அடைந்தால் அறிவுப்பிரகாசம்.. பரவெளி காணலாம்.. வெட்ட வெளியில் உலாவலாம்..

பேரின்பம்.. பேரின்பம்.. பேரின்பமே...

அதிமுக ஆட்சியில் மதுக்கடைகளுக்கு எதிராக மதுவுக்கு எதிராக போராடிய திமுக ஸ்டாலின் அவர்களே..

 


திமுக ஆட்சிக்கு வந்தால் மது ஒழிப்பு என்று கூறிய கனிமொழி அவர்களே..

திமுக ஆட்சிக் காலத்தில் மது ஒழிக்கப்படும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் அவர்களே..

இன்னும் மதுக்கடைகளை மூட ஏன் தயக்கம்? மொத்தம் உள்ள 12 சாராய_ஆலைகளில் 9 சாராய ஆலைகள் உங்கள் குடும்பத்தினரின் பினாமி ஆட்களால் நடத்தப்படுகிறது என்பதாலா?

உங்கள் வார்த்தைகள் உண்மை எனில், உண்மையாகவே மக்கள் மீது அக்கறை இருப்பின் இனி மக்கள் ஒருவர் கூட பாதிக்கா வண்ணம் மது ஆலைகளை நிரந்தரமாக மூடி மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ வழிவகை செய்வீர்களா? அல்லது நீங்கள் நடத்தியது அனைத்தும் நாடகம் தான் என்று ஒப்புக் கொள்வீர்களா?

நண்பர்களே...

 


ராமாயணப் போர் :பெண்ணுக்காக

மகாபாரதப் போர் :பெண்ணுக்காக

பாகுபலிப் போர் :பெண்ணுக்காக 

இதுல இருந்து என்ன தெரியுது அப்போத்துல இருந்து இப்ப வரைக்கும்..

பொண்ணுங்கனாலே ஒரே அக்கப்போரு தான்..

ஆகையால் சிங்கிளாக இருப்போம்...

நிம்மதியாக சந்தோசமாக  வாழ்வோம்...


🤣😊😊😊

இனிய இரவு வணக்கம்...

அடிப்படைத் தமிழறிவைக் குழந்தைகளுக்கு எப்படி ஊட்டுவது?

 


எண்களோடு எண்ணங்களை இணைத்துக் கற்றுக் கொடுங்கள்.. அப்படியே நெஞ்சில் ஒட்டும்...

ஒன்று: வானம் - ஒன்று.

இரண்டு: ஆண், பெண் - சாதி இரண்டு.

மூன்று: இயல், இசை, நாடகம்- தமிழ் மூன்று.

நான்கு: வடக்கிலிருந்து வருவது வாடை,

தெற்கிலிருந்து வீசுவது தென்றல்,

கிழக்கிலிருந்து தீண்டுவது கொண்டல்,

மேற்கிலிருந்து வாட்டுவது கோடை

தமிழன் காற்றுக்கு வைத்த பெயர்

நான்கு.

ஐந்து: எழுத்து, சொல், பொருள்,

யாப்பு, அணி-இலக்கணங்கள் ஐந்து.

ஆறு: இனிப்பு, கைப்பு, புளிப்பு,

உறைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு-

சுவைகள் ஆறு.

ஏழு: குரல், துத்தம், கைக்கிளை,

உழை, இளி, விளரி, தாரம்-தமிழ்ப்

பண்கள் ஏழு.

எட்டு: நகை, அழுகை, இளிவரல்,

மருட்கை, அச்சம், பெருமிதம்,

உவகை, வெகுளி-மெய்ப்பாடுகள்

எட்டு.

ஒன்பது: கண்ணிரண்டு, காதிரண்டு,

நாசி இரண்டு, வாய் ஒன்று,

முன்னொன்று, பின்னொன்று-உடலி­

ன் வாசல்கள் ஒன்பது.


இப்படி எண்களுக்குப் பக்கத்தில்

எண்ணங்களைப் பொருத்தித்

  1. தமிழியம் கற்றுக்கொடுக்க முடியுமா என்று கருதிப்பாருங்கள்.. தமிழாசிரியப் பெருமக்களே...

அதிமுக கலாட்டா 😁

இனிய இரவு வணக்கம்...

அல்சரை குணப்படுத்தும் கொடுக்கா புளி...

 


கொடுக்கா புளி ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை காய்க்கும். கொடுக்கா புளி இலைகளை பயன்படுத்தி செரியாமை, வயிற்று புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்...

கொடுக்கா புளி இலைகள், பூக்கள், நாட்டு சர்க்கரை, சீரகம், மிளகுப் பொடி. ஒருபிடி இலை மற்றும் பூ எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது மிளகுப் பொடி, கால் ஸ்பூன் சீரகம், நாட்டு சர்க்கரை சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி அல்சர் உள்ளவர்கள் குடித்துவர நல்ல பலன் தரும். வயிற்றுப்புண் வராமல் தடுக்கிறது. வயிற்று கடுப்பு குணமாகும். செரிமானத்தை சீர் செய்யும். சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. வாயு கலைந்து வயிற்று வலி போகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கொடுக்கா புளியின் சதை பகுதியை பயன்படுத்தி பற்கள், மூட்டுகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கொடுக்கா புளி, உப்பு, மிளகுப் பொடி. கொடுக்கா புளியின் மேல் தோலை நீக்கி சதை பகுதியை 15 வரை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது மிளகுப் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர பல் வலி குணமாகும். பற்களுக்கு பலம் கொடுக்கும்.

எலும்புகளை பலப்படுத்தும். மூட்டு வலி சரியாகும். ரத்த சோகையை போக்க கூடியது. ஊக்கம் தரக்கூடிய சத்துக்களை உடையது. கொடுக்கா புளி இலைகளை பயன்படுத்தி மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். கொடுக்கா நீர் விடாமல் அரைத்த புளி இலை பசையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

மேல்பூச்சாக போடும்போது மூட்டு வலி குணமாகும். வீக்கம் கரைந்து, வலி குறையும். கொடுக்கா புளியின் இலைகள் பால்வினை நோய்களுக்கு மருந்தாகிறது. கோண புளியங்காய் என்ற பெயரை கொண்ட இதன் சதை பகுதி எலும்பு, பற்களுக்கு பலம் தரக்கூடியது...

திமுகவின் கொத்தடிமை கம்யூனிஸ்ட் கட்சி...

பிராடு பாஜக மோடி கலாட்டா...

அதிமுக பரிதாபங்கள்...