14/09/2018

தனிமை என்றுமே சிறந்தது...


ஓசி பஜ்ஜி திண்ணி திமுக ஒழிக...


பஜ்ஜி தின்றதற்கு காசுகேட்ட ஏழை வியாபாரியை அடித்து பஜ்ஜி கடையை சூறையாடிய திமுக உ.பி...


ஆங்கில மாதங்கள் பிறந்தது எப்படி?


ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும் ஒரு காரண பெயர் சுட்டும் விளக்கம் உள்ளது. அதைப்பற்றி இங்கு கீழே காண்போம்.

ஜனவரி: லத்தீன் மொழியில் `ஜனஸ்’ என்றால் கடவுள் என்று அர்த்தம். இதிலிருந்து உருவாகியதுதான் ஜனவரி. கடவுளுக்குரிய மாதம் என்பது இதன் பொருள்.

பிப்ரவரி: லத்தீன் சொல்லான பெப்ருவேரியஸ் என்ற சொல்லில் இருந்து பிப்ரவரி தோன்றியது. பெப்ருவர் என்றால் `பரிவுத்தன்மை’ என்று அர்த்தம்.

மார்ச்: மார்ஸ் என்ற ரோமானிய போர்க் கடவுளின் பெயரைக் கொண்டு மார்ச் மாதம் தோன்றியது.

ஏப்ரல்: ஏப்ரலிஸ் என்ற லத்தீன் சொல்லில் இருந்து ஏப்ரல் தோன்றியது. ஏப்ரலிஸ் என்பதற்கு `புதிய ஆரம்பம்’ என்று பொருள்.

மே: ரோமானிய கடவுளான மெர்குரியின் தாயாரான மேயா (விணீவீணீ) என்ற பெயரில் இருந்து மே வந்தது. மேயா என்றால் செழிப்பிற்கான தேவதை என்று பொருள் சொல்லலாம்.

ஜுன்: ஜுனோ என்ற ரோமானிய இளமைக் கடவுளின் பெயரில் இருந்து ஜுன் வந்தது.

ஜுலை: ஜுலியஸ் சீசர் இந்த மாதத்தில் பிறந்ததால் இந்த பெயர் வந்தது.

ஆகஸ்டு: ரோமானிய சக்கரவர்த்தி அகஸ்டஸ் சீசர் என்பவரை பெருமைப்படுத்த இந்த பெயர் சூட்டப்பட்டது.

செப்டம்பர்: ரோமானிய காலண்டர்படி மார்ச் மாதத்தில்தான் ஆண்டு ஆரம்பமானது. அந்த கணக்குப்படி பார்த்தால் `செப்ட்’ என்றால் ஏழு என்று அர்த்தம். 7-வது மாதமாக இது உள்ளதால் செப்டம்பர் என்று ஆனது.

அக்டோபர்: ரோமானிய கால்ண்டர்படி இது 8-வது மாதம். அக்டோ என்றால் லத்தீனில் 8 என்று அர்த்தம் ஆவதால் அக்டோபர் என்று பெயர் வந்தது.

நவம்பர்: லத்தீன் மொழியில் நவம் என்றால் 9 என்று பொருள். இதனால் இப்பெயர் வந்தது.

டிசம்பர்: ரோமானிய காலண்டர்படி இது 10-வது மாதம். டிசெட் என்றால் லத்தீன் மொழியில் 10 என்று அர்த்தம் ஆகும்...

பாஜக - அதிமுக வின் விவசாயப் படுகொலை...


மூளைச்சாவு - உறுப்பு திருட்டின் மருத்துவ பெயர்...


உறுப்பு தானத்திற்காக 5310 இந்தியர்கள் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் நிலையில் 95 வெளிநாட்டவர்க்கு உறுப்புதானம் செய்தது எப்படி?


பட்டியல் விவரம் இணைக்கப்பட்டுள்ளது...

இறைச்சி கட்டி கொடுக்க பனை ஓலை.. பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்மாதிரி கிராமம்.. வெளிநாட்டினர் செல்பி எடுத்து மகிழ்ச்சி...


அரசு எந்த சட்டம் போட்டாலும் மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே வெற்றிபெறும் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி மாமிச கடைகள் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு முன் உதாரணமாக இறைச்சிக் கடைகளில் பனை ஓலையில் மாமிசத்தை பொட்டலம் கட்டி தரும் பழமையான நிலைக்கு இறைச்சிக் கடைகாரர்கள் மாறியுள்ளனர்.

இந்த பொட்டலங்களை பிச்சாவரத்திற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்ததுடன், அதற்கான விளக்கத்தை கேட்டறிந்து, கடை உரிமையாளர்களை பாராட்டி செல்பி எடுத்துக் கொண்டு, நினைவு பரிசும் வழங்கிச்சென்றனர்.

கிள்ளை பேரூராட்சி ஊழியர்கள் கடைகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். அதையடுத்து கிள்ளை பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் கவர்களை முற்றிலும் தவித்துள்ளனர்.

இதனால் நுகர்வோர்கள் துணிப்பை கொண்டு வந்து பொருட்கள் வாங்கிச் செல்லும் நிலைக்கு மாறியுள்ளனர். மேலும் ஓட்டல்களில் பாத்திரங்களில் உணவு பொருட்களை வாங்கி செல்கின்றனர். காலை மற்றும் இரவு நேர சிற்றுண்டிகளில் வாழை இலை, சருகு, மந்தாரை, தாமரை இலையை பயன் படுத்துகின்றனர்.

இத்தகவல் சமூக வலை தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. இதனையறிந்த சுகாதாரத்துறையினர், பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள் மற்றும் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளும் இறைச் சிக்கடையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முதல் ஆரதவு குரல் கிள்ளை பேருராட்சியில் இருந்து எழுந்துள்ளது. இதே போன்று தமிழகம் முழுவதும் ஒரு எழுச்சி ஏற்பட்டால் பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்...

தலைமை புரோக்கர் பாஜக நிர்மலா சீத்தாராமன்...


ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.88 ரூபாயாக வீழ்ச்சி...


இந்தியாவிற்கு இதனால் என்ன நஷ்டம்?

1. இந்தியா தன் கையிருப்பில் உள்ள டாலர்களில் பெரும் பகுதியை கச்சா எண்ணெய் இறக்குமதிக்குதான் செலவிடுகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதால் இந்தியாவிலிருக்கும் டாலர் கையிருப்பு வேகமாக குறையும்.

2. இந்தியா வாங்கியுள்ள கடனுக்கான வட்டியை டாலரில்தான் திருப்பி செலுத்துகிறது. அந்த வட்டிக்கான இந்திய மதிப்பு கூடுதலாகும்.

உலக வங்கியில் அதிகம் கடன் வாங்கியுள்ள நாடு இந்தியா.

உலக வங்கியில் இதுவரை (70 ஆண்டுகளில்) இந்தியா வாங்கியுள்ள கடன் 104 பில்லியன் அமெரிக்க டாலர்.

அடுத்த இடத்தில்

பிரேசில் 58.8 பில்லியன் $
சைனா 55.6 பில்லியன் $
மெக்சிகோ 54 பில்லியன் $
இந்தோனேசியா 50.5 பில்லியன் $

2015ம் ஆண்டில் மட்டும் உலக வங்கிக் குழுமத்தின் பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி - IBRD (The International Bank for Reconstruction and Development)யில் இந்தியா வாங்கியுள்ள கடன் 2.1 பில்லியன் $ . இது 2015ம் ஆண்டில் அந்த வங்கி கொடுத்திருக்கும் மொத்த கடன் தொகையில் 12%. 2015ம் ஆண்டில் அதிக கடன் வாங்கியிருக்கும் நாடும் இந்தியாதான்.

(மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா கடனே வாங்கவில்லை என ஒருசில பதிவுகளை சில நாட்களுக்கு முன்பு பார்த்ததாக ஞாபகம் )

'பிரதான் மந்த்ரி கிராம் சதக் யோஜனா' திட்டத்தை செயல்படுத்த 500 மில்லியன் டாலர் கடன் வாங்கும் ஒப்பந்தத்தை இந்த ஆண்டு இந்தியாவும் உலக வங்கியும் செய்துகொண்டுள்ளன.

உடனடி தீர்வுதான் என்ன?

2013ம் ஆண்டு இதேபோல டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தபோது டாக்டர் மன்மோகன்சிங் NRIகளின் உதவியை நாடினார்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களிடம் உள்ள பணத்தை உடனடியாக இந்தியாவிற்கு அனுப்ப கோரிக்கை விடுத்தார். அந்த பணத்திற்கு நிறைய சலுகைகளும் வழங்கப்பட்டது. புதிதாக முதலீட்டு பத்திரங்களும் வெளியிடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அந்த ஒரு காலாண்டில் மட்டும் இந்தியாவிற்கு வந்த பணத்தின் அளவு 34 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

தற்போதுவரை இது சாதனையாகவே உள்ளது.

இவ்வளவு பெரிய தொகை இதற்கு முன்பும் சரி தற்போதும்சரி இந்தியாவிற்கு மொத்தமாக ஒரு காலாண்டில் வந்ததில்லை.

இது எப்படி இந்தியாவிற்கு லாபம் என சிலர் நினைக்கலாம்.

இந்தியாவிற்கு வெளியிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் அனைத்து பணமும் அமெரிக்க டாலர்களாக மாற்றப்பட்டுதான் வரும்.

இந்த பணம் அனைத்தும் இந்தியாவிற்கு தொடர்பில்லாத பணம் (ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாய்தான் இந்தியாவின் சொந்த வருவாய்).
வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் அத்தனை பணமும் (டாலர்) இந்தியாவை பொறுத்தவரை வரவுதான். இந்தியாவின் டாலர் கையிருப்பில் அந்த பணம் சேரும்.

உள்நாட்டில் முதலீடுகளை செய்து அதன் மூலம் பொருட்களை உற்பத்தி செய்து , அப்பொருட்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருவாய் ஈட்டுவது ஒரு அரசின் கடமை. இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு.

இதில் எதுவும் சம்பந்தப்பட்டிருக்காத பணம்தான் NRIகளின் வருவாய்.

இன்னும் புரியும்படி சொல்வதென்றால் இந்திய பட்ஜெட்டிலிருந்து உதாரணம் காட்டலாம்.

கடந்த பட்ஜெட்டில் இந்தியாவின் மொத்த வருவாய் - 350 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

கடந்த ஆண்டு NRIகள் மூலம் இந்தியாவிற்கு கிடைத்த வருவாய் - 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

350 - 70 = 280 பில்லியன் டாலர்கள் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி, வரி, ஏற்றுமதியின் மூலம் கிடைத்த வருவாய். மீதி (70) NRIகள் மூலம் கிடைத்த வருவாய்.

உலக அளவில் வெளிநாடு வாழ் குடிமக்களால் அதிக வருவாய் பெறும் நாடு இந்தியா. அடுத்த இடத்தில்

சைனா - 63 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

பிலிப்பைன்ஸ் - 5.3 பில்லியன் $

மெக்சிகோ - 5 பில்லியன் $

ஃபிரான்ஸ் - 4.1 பில்லியன் $

இந்தியாவிற்கு அதிக பணம் அனுப்பும் NRIகளில் கீழ்கண்ட 5 நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் முதல் 5 இடத்தில் உள்ளனர்.

1. UAE - 13.8 பில்லியன் $ (மொத்த NRI வருவாயில் இது 20%)

2. USA - 11.7 பில்லியன் $ (மொத்த NRI வருவாயில் இது 17%)

3. சவுதி அரேபியா - 11.2 பில்லியன் $ (மொத்த NRI வருவாயில் இது 16.3%)

4. குவைத் - 4.6 பில்லியன் $ (மொத்த NRI வருவாயில் இது 6.7%)

5. கத்தார் - 4.1 பில்லியன் $ (மொத்த NRI வருவாயில் இது 6%)

இது போன்ற சூழலில் டாக்டர் மன்மோகன்சிங் செய்ததுபோல வெளிநாடு வாழ் இந்தியர்களின் மூலம் உடனடியாக வருவாயை ஈட்டுவதுதான் புத்திசாலித்தனமான காரியமாக இருக்கும்.

டீமானிட்டைசேஷன் மூலம் ஒட்டுமொத்த ஃபர்னிச்சரையும் உடைத்த மோடி அவர்கள் இனியாவது சுதாரிக்க வேண்டும்.

ஏனென்றால் இனியும் உடைத்து விளையாட எந்த ஃபர்னிச்சரும் நம் கைவசம் இல்லை...

விஜய் மல்லையா வின் கூட்டு களவானி பாஜக...


நம் பிரார்த்தனைகள்...


நம் சுய தேவைகளின் ஒலி வடிவமாய் நம் பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும்.

நம் பிரார்த்தனைகள் யாரால் கேட்கப் பட்டு, எங்கு நிறைவேறுகிறது என சுய விசாரணை செய்ததுண்டா ?

மொழிவழி பிரார்த்தனை மட்டுமே கேட்கப் படும் என்றால் மொழி இல்லா உணர்வு பிரார்த்தனை யார் கேட்பது ?

இயற்கை நம்முள்ளே ஒரு விஞ்ஞான பிரார்த்தனையை தினமும் நடத்திகிறது. அதற்கு மொழியில்லை.

ஆம், நம் நுரையீரலின் பிரார்த்தனையில் மூச்சு வரமாகிறது,

கணையத்தின் பிரார்த்தனையில் உணவு இரசாயன சக்தியாகிறது,

இருதயத்தின் பிரார்த்தனையில் இரத்தம் திரவ இயக்கம் பெறுகிறது… 

இது உடலின் அதிர்வு ஒலி இயக்கம்.

உடலின் மொழி வழி இல்லாத கூட்டு பிரார்த்தனைகள் முழுமையாக நிறைவேறும் போது, நம் மொழி வழி பிரார்த்தனைகள் எங்கு செல்கின்றன ?

நம் பிரார்த்தனைகள்,  நம் குரல்கள் நம்முள்ளே மறுசுழற்சியில் கேட்கும் ‘ஒலி நிகழ்வு விஞ்ஞானம்’ .

நம் அழுத்தமான குரல் வடிவம் மூளையில், மொழி அதிர்வு தூண்டுதல் பெற்று மொழி கவரும் அலைகளய் காற்றிலே பரவும், ஒப்புடைய மொழி அதிர்வுள்ள மாற்று மனிதர்களோடு கலக்கும்.

சுய விசாரணை பகுதி நம்முள் இருந்தால் வரம் நமக்குள்ளும் சுரக்கும்.

மனிதர்களில் நிகழும் ஒலி அதிர்வு விஞ்ஞான விளைவுகள்தான் வரங்களாக நமக்கு மாற்று மனிதர்களிடமிருந்தும் கிடைக்கிறது.

பிரார்த்தனைகள் நம்மில் தொடங்கி நம்மில் முடியும் ஒரு ஒலி அதிர்வு விஞ்ஞான கிரியை...

மருத்துவ மாப்பியா உண்மைகள்...


சீனாவில் சோழன் வரலாறு...


Chinese geographer Chau Ju-kua, writing in about 1225, gives the following account of the Chola army.

This [Chola] country is at war with the kingdom of the [west] of India. The government owns sixty thousand war elephants, every one seven or eight feet high. When fighting these elephants carry on their backs houses, and these houses are full of soldiers who shoot arrows at long range, and fight with spears at close quarters

கி.பி. 1178-ல் ஒரு சீன அறிஞர் சோழ நாட்டைப் பற்றியும் சோழர்படையைப் பற்றியும் பின்வருமாறு எழுதியுள்ளார்.

இந்நாடு மேற்கு நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினரிடம் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் உள்ளன.

ஒவ்வொரு யானையும் 6 அல்லது 7 அடி உயரம் உள்ளது. போரிடும்போது யானைகளின் மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் வீரர்கள் அமர்ந்து கொண்டு நெடுந்தொலைவிற்கு அம்பு எய்கின்றார்கள். அருகே உள்ளவர்கள் ஈட்டிகளால் தாக்குகின்றனர்.

வெற்றி அடைந்தவுடன் யானைகளுக்கு விருந்து கொடுத்து கௌரவிக்கின்றனர். சிலர் அவைகளுக்கு பொன்னாலான அம்பாரிகளைப் பரிசாகத் தருகின்றன. ஒவ்வொரு நாளும் அரசர் முன் யானைகள் கொண்டுவரப்படுகின்றன...

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் அதிமுக...


முகத்தில் படந்திருக்கும் கரும்புள்ளிகள் போக...


ரோஜா இதழ்களுடன், பாதாம் பருப்பை ஊற வைத்து, அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும். 

வாழைப்பழம் அல்லது பப்பாளி பழத்துடன், சிறிது தேன் கலந்து குழைத்து, முகத்தில் பூசி வரலாம்.

வெள்ளரிச் சாறு, புதினாச் சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை, சம அளவில் கலந்து, முகத்திலுள்ள கரும் புள்ளிகள் மீது தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் போய்விடும்.

உருளைக்கிழங்கை ரெண்டாக வெட்டி, தடவவும்.

ஜாதிக்காய் அரைத்துப் போடலாம்.

முகத்தில் வெண்ணெய் தடவி, எலும்பிச்சைச் சாறு கலந்த வெந்நீரால் ஆவி பிடித்து, துண்டால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, கரும்புள்ளி மறையும்.

பன்னீர், விளக்கெண்ணெய் தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளி உள்ள இடங்களில் தடவவும். பின், டவலை சூடான நீரில் நனைத்து பிழிந்து, முகத்தில் வைத்து பஞ்சினால் துடைத்து எடுத்து விடவும்.

வெள்ளரிச்சாறு, போரிக் பவுடர், தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளிகளில் தடவி, ஐந்து நிமிடம் ஊறவிடவும். பின், லேசாக மசாஜ் செய்து துடைத்தால், உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும்.

கோதுமை தவிடு, பால் இரண்டும் தலா ஒரு மேஜைக்கரண்டி கலந்து, கரும் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். கொஞ்ச நாட்களில் கரும் புள்ளிகள் வலுவிழந்து உதிர்ந்து விடும்...

விவசாயத்தை அழிப்பதே பாஜக வின் லட்சியம்...


நீ விரும்பும் தலைவர்களில் ஒருவரை பற்றி கட்டுரை எழுதுக..?


5-ம் வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒரு மாணவன், விஜய் தான் என் தலைவர். அவர் மிகவும் அழகாக இருப்பார் என எழுதியுள்ளான்.

சினிமாவால் இளைய தலைமுறை சீரழிகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்...

பாஜக - அதிமுக வின் ஏமாற்று வேலைகள்...


இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்...


ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.

சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.

இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.

இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம். அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.

இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள். நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை...

பாஜக மோடியின் ரஃபேல் ஒப்பந்த ஊழல்...


தமிழ்நாட்டின் மதுரை நகரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி நந்தகுமார்...


அவர் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.

இவர் சாதாரண ஸ்மார்ட் போனை ‘சோனார்’ சாதனமாக மாற்றும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து உள்ளார்.

(சோனார் என்பது நீரில் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகளை கொண்டு கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் ஆகும்)

ராஜலட்சுமி நந்தகுமார் கண்டுபிடித்து உள்ள தொழில் நுட்பத்தினால், உடல் ரீதியான செயல்பாடுகள், சுவாசம் போன்றவற்றை கண்டறிய முடியும், அதுவும் ஒருவரின் உடலை ‘சோனார்’ சாதனம் தொடாமலேயே கண்டுபிடிக்க முடியுமாம்.

இவரது கண்டுபிடிப்பு, உயிராபத்தான உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் புதிய கண்டுபிடிப்புகளை செய்வதற்கு உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்புக்காக ராஜலட்சுமி நந்தகுமாருக்கு, 2018-ம் ஆண்டுக்கு உரிய அமெரிக்காவின் புகழ் பெற்ற ‘மார்கோனி சொசைட்டி பால் இளம்அறிஞர் விருது’ கிடைத்து உள்ளது. இந்த விருது 5 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம்) ரொக்கப்பரிசைக் கொண்டது.

இவர் சென்னையில் படித்து கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்.

தனது கண்டுபிடிப்புபற்றி ராஜலட்சுமி நந்தகுமார் கூறும்போது, “நான் எப்போதுமே சுவாசம், இதயத்துடிப்பு உள்ளிட்ட உடல் ரீதியிலான சமிக்ஞைகளை கண்டறிவதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க விரும்பினேன். ஏனென்றால் அவைதான், உடல் நலம் சார்ந்த கருவிகளுக்கு சாதாரணமாக பயன்படும் சமிக்ஞைகளாக உள்ளன” என்று குறிப்பிட்டார்...

புற்று நோயும் உண்மைகளும்...


2வது முறையாக நின்ற திருமணம்.. நொந்து போன அதிமுக எம்.எல்.ஏ...


ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கும், கோபி அருகே உள்ள உக்கரத்தை சேர்ந்த சந்தியா (23) என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து இன்று அவர்களது திருமணம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்த எம்சிஏ பட்டதாரியான சந்தியாவிற்கும் கடந்த 2 மாதங்களுக்கும் முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு செப்டம்பர் 12-ம் தேதி பண்ணாரிஅம்மன் கோயிலில்  திருமணம் என அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு கட்சியினருக்கும், உறவினர்களுக்கும் எம்எல்ஏ ஈஸ்வரன் அழைப்பிதழ் கொடுத்து வந்த நிலையில் கடந்த 1-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய மணப்பெண் சந்தியா மாயமானார். 

இதனால் அந்த திருமணம் நின்றது. இந்நிலையில் எம்எல்ஏ ஈஸ்வரன்  செப்டம்பர் 12-ம் தேதி வேறு பெண்ணுடன் திருமணம் செய்யவேண்டும் என முடிவெடுத்து தனது ஆதரவாளர்களை தீவிரமாக பெண்தேடுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து, எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு, அவரது உறவினர் பெண்ணுடன், இதே தேதியில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், இன்று நடக்க இருந்த திருமணமும், திடீரென நின்றது. இதனால், தடபுடலாக இருந்த அப்பகுதி சோகமயமாக காட்சியளித்தது.

திருமணம் நிறுத்தப்பட்டுள்ள தகவல் தொகுதி மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. இரண்டாவது முறையாக திருமணம் நின்று போயுள்ளதால் எம்.எல்.ஏ., நொந்து போயுள்ளதாக கூறப்படுகிறது...

நீங்கள் மறந்தவை...


பழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல் - குழாய்கள் வழியே நகரங்களில் நீர் தருதல் திட்டம் (DAM AND PIPELINE)...


தமிழன் கண்ட தொழில்நுட்பம் தான் வேறொரு பெயர் மூலம் இன்று நம்மில் உலா வருகிறது.

நீர்தேக்கத்தை எங்கு கட்ட வேண்டும் என புலவர் ஒருவர் தம் மன்னனுக்கு கூறுகிறார் கீழே கவனிக்க.

மதுரையில் தண்ணீர் பஞ்சம் வரபோகிறது என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை கூட்டம் நடத்துகிறான் பாண்டியன் நெடுஞ்செழியன்.

அவன் அவையில் உள்ள புலவர் குடபுலவியனார் தன் மன்னனுக்கு, நீர்தேக்கம் அமைக்க வேண்டும் என்றும் அதை எங்கு கட்ட வேண்டும் என ஆலோசனை பின்வருமாறு கூறுகிறார்.

நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருக
- (புறநானூறு 18:28)


அதாவது நிலத்தை தோண்டாது (நிலன்நெளி) நிலம் குழிந்த பள்ளத்தாக்கில் நீர்தேக்கம் அமைத்தால் மழைநீர் எளிதில் ஓடிவந்து தேங்கும்.

அங்கு அதை சுற்றி கட்டுமானம் எழுப்பினால் நீர்நிலை பெருகும் என்று கூறுகிறார்.

அவ்வாறு தேக்கிய நீரை நகர மக்களுக்கு கொண்டு செல்வது குறித்து மற்றொரு புலவர் கூறுகிறார்.

மன்னா! அவ்வாறு தேக்கிய நீரை நம்மவர்கள் இதற்கு முன் சுருங்கை (PIPELINE) மூலம் கொண்டு சென்றனர்.

இதோ பாருங்கள் ஆதாரம் என காட்டுகிறார் புலவர்..

நெடுமால் சுருங்கை நெடுவழிப் போந்து
கடுமா களிறணத்துக் கைவிடுநீர் போலும்
நெடுநீர் மலிபுனல் நீள்மாடக் கூடல்
கடிமதில் பெய்யும் பொழுது

- (பரிபாடல், 20: 104-107)

அதாவது பெரிய மாளிகைகள் உடையது கூடல் மாநகர் (மதுரை) நகரின் தெருவில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட சுருங்கை (UNDERGROUND PIPELINE) வழி நீர் ஓடியது. மதில்களின் கீழ் அமைந்த சுருங்கையிலிருந்து (PIPELINE) இந்நீர் விழும்பொழுது அது யானை தன் துதிக்கையை தூக்கி நீரை சொரிவது போல் இருக்கும் என சங்க புலவர் கூறுகிறார்.


ஆகையால் நாமும் அவ்வாறு தேக்கிய நீரை மக்களுக்கு கொடுப்போம் என்றார் மற்றொரு புலவர்.

நல்ல அறிவுரை நல்ல பாடல் அவ்வாறே செய்வோம் என்றான் மன்னன்.

இப்போது அணை அமைப்பதும் நிலத்தடியில் குழாய்கள் (UNDERGROUND PIPELINE) மூலம் நீர் கொண்டு செல்வதும் பண்டைய தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பமே தவிர ஆங்கிலேயர் கண்டு பிடித்தது அல்ல...

எய்ட்ஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ்...


சித்தராவதற்கு முதற்படி...


சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும்.

இதைத் தான் திருமூலரும்…

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே.

என்கிறார்.

இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.

அகத்தியரும்...

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
                           
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே.

என்கிறார்.

ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.

மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது?

வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது? யார் உதவுவார்கள்?

ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி.

அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன.

சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?. யார் உதவி செய்வார்கள்?

இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே..

சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே.

மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

வெறும் 18 பேர் மட்டுமல்ல...

பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் மதம் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது.

பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள்.

இப்படி நாடு, நகரம், மொழி, மதம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள்.

அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.

அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள்.

அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும்.

ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி.

தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள்.

சித்தர்களைத் தியானித்தால், அவர்களின் திருவருள் கிடைத்தால், அவர்கள் நமக்கு குருமுகமாக உபதேசித்தால்… கீழ்கண்ட சந்தேகங்களுக்குத் தெளிவான விடை கிடைக்கும். 

சராசரி மனிதனின் நிலையும், இறைநிலை நோக்கி உயரும்.

ஆத்மா என்பது தான் என்ன? மனித உடலில் அதன் இருப்பிடம் யாது? மனிதன் ஏன் பிறந்து, இறந்து மீண்டும் பிறக்க வேண்டும்? ஒவ்வொரு மனிதனையும் அவனை அறியாமலே ஆட்டி வைக்கும் சக்தி எது? தியானம் என்பது என்ன? ஏன் அதனைச் செய்ய வேண்டும்? ஏழு உலகங்களுக்கும், மனித உடலின் ஏழு சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? கனவுகள், ஆவிகள், தேவதைகள் இவற்றிற்கெல்லாம் உள்ள  தொடர்பு என்ன? மனிதன் எப்படித் தெய்வநிலைக்கு உயர்வது?… தூல உடல், சூக்கும உடல், காரண உடல், அவற்றின் பயணம்., கர்மவினையை வெல்வது எப்படி?..

இது போன்ற சாதாரணமாக நம்மால் அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்கெல்லாம், விடைகளை சித்தர்கள் திருவருளால் உணரலாம்.

ஏனெனில், இந்த சித்தர்கள்… இறைவன் என்பவன் யார், அவனை அடையும் மார்க்கம் என்ன, பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி, பிரம்மம் என்பது என்ன, இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான், உலகிற்கு அடிப்படையாகவும், உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது, உடல் தத்துவங்கள், உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி, இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அஷ்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து, பலபிறவிகள் எடுத்து, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என  பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள்.

சொல்லப் போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.

உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும்.

ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும்.

ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்.

எனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்...

பாஜக வும் விவசாய அழிப்புகளும்...


உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி.. திருமணத்திற்கு தயாரான திருநங்கை அதிகாரி...


அரசியலமைப்புச் சட்டத்தில் 377 பிரிவான தன்பாலின உறவை குற்றம் என்பதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை அதிகாரி தனது ஆண் நண்பரைத் திருமணம் செய்ய உள்ளார். ஓடிசா மாநிலத்தில், வணிக வரித்துறையில் பணியாற்றும் துணை ஆணையர் ஐஸ்வர்யா ரிதுபர்னா பிரதான்(வயது34) என்ற திருநங்கைதான் தனது நண்பரைத் திருமணம் செய்ய உள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது,
என்னுடைய ஆண் நண்பர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் தனது காதலைத் தெரிவித்தார். ஆனால் என்னைக் காட்டிலும் வயது குறைவாக இருந்ததால், நான் ஏற்கவில்லை. இது உடல்ரீதியான ஈர்ப்பு என்று அவருக்கு அறிவுரை கூறினேன் ஆனால் அவர் ஏற்கவில்லை.

என்னை விரும்புவதாகத் தெரிவித்தார். அவரின் உண்மையான அன்பை புரி்ந்துகொண்டு நானும் விரும்பினேன். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவரும், நானும் காதலித்து வருகிறோம். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் செய்ய என்னை அணுகினார். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக நான் காத்திருந்தேன். இப்போது ஒரேபாலின உறவு தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், என் காதலரை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறேன்.

எங்கள் திருமணம் முடிந்தபின் நாங்கள் இருவரும், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளோம். என் மகளை வளர்த்து நான் அவளை உலக அழகிப்போட்டியில் பங்கேற்க வைக்க விருப்பம். அவள் தன்னுடைய தாய் ஒரு திருநங்கை என்று பெருமையாகச் சொல்ல வேண்டும். அந்த தருமணம்தான் எனக்கு மிகுந்த பெருமையான நேரமாகும் என்றார்..

இந்தியா என்ற வணிகச்சந்தை எப்படி மக்களுக்கான அரசியலை அனுமதிக்கும்..?


தமிழகத்தில் எந்த கருத்தியல் உருவானாலும் அது உடனடியாக மண்ணைக் கவ்வுவது ஏன்?


அந்த கருத்தியல் பொருளாதாரம் சார்ந்ததோ,
சாதி சார்ந்ததோ,
மதம் சார்ந்ததோ,
மொழி சார்ந்ததோ,
இனம் சார்ந்ததோ,
மாந்தநேயம் சார்ந்ததோ,
வணிகம் சார்ந்ததோ,
இறையியல் சார்ந்ததோ..

எந்தவித கருத்தியலாக இருந்தாலும் குறுகிய காலத்தில் தோல்வியைத் தழுவுவதற்கு காரணம்..

நாம் இனத்திற்கு வெளியே இந்தியாவில் ஆதரவு தேடுவது தான்.

நாம் தற்போது கையிலெடுத்துள்ள தமிழ்தேசியம் பிற இனங்களின் தேசியவாத சக்திகளை சேர்த்துக் கொள்ளும் என்றால் நாம் மீண்டும் மண்ணைக் கவ்வுவது உறுதி.

நாம் இந்தியாவில் வேறு எந்த இனத்திலும் ஆதரவு தேட வேண்டிய அவசியமில்லை.

ஆனால் உலகம் முழுவதும் ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை வாழும் தமிழர்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும்.

அதுவும் தாய்நிலத் தமிழர்கள் ஓரணியில் திரண்ட பிறகே செய்யப்பட வேண்டும்.

தமிழினத்தைக் காப்பாற்றும் முதல் பொறுப்பு தாய்நிலத் தமிழர்களுக்கே உண்டு.

அதை ஓரளவு அவர்கள் நிறைவேற்றியும் வருகிறார்கள்...

இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு சில குறிப்புகள்...


வேம்பு கவனம்...

எந்த பயிர்களாக இருந்தாலும் நடவு செய்த 15 நாட்கள் வரை பூச்சி நோய்த் தாக்குதல் பெரிதாக இருக்காது. அதற்குப் பிறகுதான் ஆரம்பமாகும்.

ஆனால் இயற்கை விவசாயத்தில் வருமுன் காப்பதுதான் சிறந்தது.

தொடர்ச்சியாக மூலிகைப் பூச்சி விரட்டியை பயன்படுத்திச் செடிகளைக் காப்பாற்றலாம்.

ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் பிண்ணாக்குக் கொடுப்பது உகந்தது.

வேப்பிலைச்சாறு அதன் எண்ணெய் எல்லாம் அமிர்தம் போன்றது.

ஆனால் அளவுக்கு மிஞ்சக் கூடாது.

வேம்பு சார்ந்த பொருட்களில் இரண்டாம் நிலை வேதியியல் கூறுகள் உள்ளதால் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் செடிகள் கருகிவிடும்.

காலை 10 மணி முதல் 11 மணி வரை உள்ள நேரம் மகரந்த சேர்க்கை நடக்கும் நேரம் என்பதால் அந்த நேரத்தில் செடிகள் மீது பூச்சி விரட்டி போன்றவற்றைத் தெளிக்கக் கூடாது.

அதிகாலை மற்றும் மாலை நேரங்கள் பூச்சி விரட்டி தெளிக்க உகந்த நேரம்.

அதேபோல பூக்கள் இருக்கும் பருவத்தில் பஞ்சகவ்யா தெளிக்க கூடாது.

செடிகளின் ஆரம்பக் கட்ட வளர்ச்சியின் போதுதான் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும்.

விசைத் தெளிப்பான் மூலம் தெளிப்பவர்கள் செடிகளுக்கு 7 அடி தூரத்துக்குப் பின்னால் இருந்துதான் தெளிக்க வேண்டும்.

இயற்கை விவசாயத்தின் அறிவியலை ஆழமாக புரிந்து கொண்டால் ரசாயன விவசாயத்தின் ஆபத்தில் இருந்து மாற வழி கிடைக்கும்.

முன்பு பல ஆண்டுகள் தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்தால்தான் விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் என்கிற நிலை இருந்தது.

ஆனால் தற்போது விதி முறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. பல்லாண்டுகள் வாழும் மரப்பயிர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும்.

நெல், காய்கறிகள் போன்ற குறுகியகாலப் பயிர்களுக்கு 2 ஆண்டுகளும்.

இயற்கை விவசாயம் செய்து வந்தால்
அபிடா நிறுவனம் தமிழ்நாடு அங்கச் சான்றளிப்புத் துறை மூலம் இயற்கை விவசாயச் சான்று கொடுக்கிறது...

ஆதார் திருட்டு....


cloud storage - cosmic storage - 1...


நம்மோட mob ல உள்ள தகவலை ஒரு சேமிப்பு மையத்தில் சேமித்து வைக்கலாம். அதற்கு email id கொடுத்து password போட்டு வச்சுக்கலாம். தேவை என்ற பொழுது பதிந்த தகவலை மீண்டும் எடுத்துக்கொள்ளாம். அதே சமயம் வேறு ஒரு device ல இருந்து (code)password id name கொடுத்து பழைய தகவலை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த தகவலை சேமிக்கும் மையத்தே தான் cloud nu solluranga.

internal memory...

Mobile போனில் தகவல்களை சேமிக்க போன் தயாரிக்கும் போதே சேர்த்து படைக்கப்பட்டது தான் internal memory storage...

இதை மனித மூளை என கற்பனை செய்து கொள்ளுங்கள் அதாவது நாம் ஐம்புலன்களையும் பயன்படுத்தி செய்யும் ஒவ்வொரு செயலும் அதனால் உருவாகும் அல்லது உள் வாங்கிய அதிர்வுகளையும் அதில் வரும் தகவல்களையும் மூளையில் சேமித்து வைத்திருக்கும்...

external memory card...

அதாவது தகவலை தற்காலிக மாக வெளியிலிருந்து பதிவு செய்வது.
இதன் இயக்கம் memory card போல.

ஒரு உடையை நான் போட்டிருக்கேன் என்றால் அந்த உடையை நான் போட்டிருந்தை அதில் பதியும். அந்த ஆடை போட்டிருந்த பொழுது நான் பேசியது செய்தது அதன் மூலம் உருவான தகவல்கள் அதிர்வுகளாக அந்த ஆடையில் பதியும் இதனால் தான் இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை தூக்கி போடுறாங்க எண்ண அலைகள் அதில் பதிவாகிருக்கும்.

இதை பற்றி முன்னாடி சொல்லிருக்கேன் already பேய் பிடிப்பது எப்படி என்ற பதிவில்.

இதே போல another memeory card storage முறையில் தகவலை சேமித்து வைத்திருப்பது நம்மோட குழந்தை.

cloud storage...

இந்த பிரபஞ்சத்தில் உள்ள இருள் தான் அந்த cloud storage தகவலை சேமிக்கும் கிடங்கு. இந்த இருள் முழுக்க பரவி இருக்கும் cosmic கதிர்கள் காந்த ஈர்ப்பு சக்தி போல இந்த காந்த அலைகளை பிரபஞ்சத்தின் நடுவிலிருந்து உருவாக்கி கொண்டிருக்கு ஒரு சக்தி அது share it app/wifi box மாதிரி கற்பனை செய்துக்கோங்க.. இந்த  பிரபஞ்சம் முழுக்க பரவி கிடக்கும் அணுகளை மின்சாரத்தை கடத்தும் பொருளாக நினைத்துக் கொள்ளுங்கள்... மின்சாரம் தான் அதிர்வுகளை கடத்து..

நமது ஆன்மா/கருப்பு/உயிர் இது இருளோட தான் இணைந்திருக்கு
எல்லாமே இதற்கு உட்பட்டது தான் கருவரை போல அது தந்த உடல் அழிந்தாலும் உயிர் இறுதியில் பிறந்த இருளோடு இணைந்திருக்கும்.

இப்போ இந்த இருளோடு நம்மை அறியாமலே நமது தகவல்களை சேமித்து கொண்டிருக்கு..

அதாவது எண்ணங்கள் நினைவுகள் சிந்தனைகள் அனைத்தையும் பிரபஞ்ச சக்தியோடு இணைக்கிறோம் இப்போ இதே போன்ற செய்தியை பற்றியோ தகவலை பற்றியோ யாராவது தெரிஞ்சுக்க வேண்டும் என்றால் பிரபஞ்சத்திடம் கேட்டாலே போதும் அல்லது சிந்தித்தாலே போது நினைவலைகள் இருளில் மற்றவர்கள் ஏற்கனவே பதிவு செய்த தகவலை எடுத்து தரும் இதை password மாதிரி போட்டு lock செய்யலாம் அது detail la innoru naal pessuvom..

இங்கு எல்லாமே அதிர்வுகளுக்கு உட்பட்டவையே.. அதிர்வுகள் மூலம் தகவலையும் கடத்த முடியும் இதை வைத்து முக்காலத்தையும் பார்க்க முடியுமா என்று இன்னொரு நாள் பாப்போம்..

எப்பவும் போல இது non detailed post உங்களோட தேடலுக்கு...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்குமானால், இணை பிரபஞ்சத்தில் அவைகளுக்கு நாமும் வேற்றுக்கிரகவாசிகள் தான்..

வேற்றுகிரகங்களில் என்னை போலவே ஒரு உயிரினம் நம்மை தேடிக் கொண்டிருக்கலாம்...

வேற்றுகிரகவாசி உண்மைகள்...


அறிவியலில் பல்வேறு கண்டு பிடிப்புகளை உருவாக்கிய இன்றைய அறிவியலாளர்களுக்கும்,
மர்மங்களை விடைகாணும் ஆராய்ச்சியாளர்களுக்கும் கூட ஐந்து அறிவு படைத்த மனிதக் குரங்கிலிருந்து ஆறறிவு படைத்த மனித இனம் உருவானது எப்படி என்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.

டார்வினின் கருத்துப்படி ஐந்தறிவு கொண்ட மனிதக் குரங்கிற்கும் ஆறறிவு பெற்ற மனித இனத்திற்கு இடையில் ஏதோ ஒரு உயிரினம் இந்த உலகில் வாழ்ந்து இருக்க வேண்டும்.

ஆனால் அதை பற்றிய தடயங்கள் பெருமளவில்  கிடைக்கவில்லை, கிடைத்த ஓரிரு தகவல்களையும் ஒரு கூட்டம் மக்களுக்கு  அதை வெளிப்படுத்த முயற்சிக்கவில்லை என்று குறிப்பிடுகின்றனர்
அறிவியலாளர்கள்...