கேரளா அரசு பணியாளர் தேர்வாணையம் (Kerala puplic service commision) நடத்திய தேர்வில் அங்கு வாழும் மாற்று இனத்தவர்கள் தேர்வு எழுத கேரளா அரசால் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
மலையாளி மொழியை திறம்பட கற்றறிந்து , பல தலை முறையாக கேரளாவில் வாழ்ந்து வரும் தமிழருக்கு, கேரளா அரசு ஊழியராகும் தகுதி இல்லை என கேரளா அரசு கூறியுள்ளது .
பல தலை முறையாக இங்கு வாழ்ந்து வந்தாலும் அவர்கள் மலையாளிகள் அல்ல என்று கூறி கேரளா அரசு மாற்று இன மக்களுக்கான உரிமையை மறுத்துள்ளது.
நடுவண் அரசு தொடர் வண்டி தேர்வு எழுத, 200 க்கும் மேற்பட்ட தமிழர்கள் சென்ற ஆண்டு ஆந்திராவிற்கு சென்றனர். ஹைதராபாத்தில் நடந்த தேர்வு மையத்தில் தெலுங்கர்களால் தமிழர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.
காரணம், ஆந்திராவில் உள்ள நடுவண் அரசு வேலை வாய்ப்பு தெலுங்கர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் மாற்று இனத்தவருக்கு கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கையின் அடிப்படையில் ஆந்திர அரசு காவல் துறை ஆதரவுடன் தமிழர்கள் கடுமையாக தாக்கப் பட்டனர்.
இன்று வரை குற்றவாளிகளின் மீது சிறு வழக்கு பதிவு செய்ய ஆந்திர அரசு மறுத்து விட்டது.
கர்நாடகாவிலும், தமிழருக்கு அரசு வேலை வாய்ப்பு கொடுக்க கூடாது என்று கூறி வழக்காடு மன்றம் வரை சென்று கர்நாடக அரசு வாதிட்டது. கன்னடத்தவருக்கே முன்னுரிமை கன்னடதவருக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்பு என்பதில் கன்னட அரசு இன்று வரை உறுதியாக உள்ளது. செயல்படுத்தி வருகிறது.
தமிழ் நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் அரசு வேலையை பெறலாம் என்ற முறையை இங்குள்ள திராவிட அரசுகளால் நடை முறை படுத்தப்பட்டு வருகிறது.
பத்து ஆண்டுக்கும் முன்பு குடியேறிய வட இந்தியர்கள் கூட, தமிழக அரசு ஊழியராக பணி ஆற்றுகின்றனர்.
அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில், வளம் மிகுந்த பதவிகளில் 70 விழுக்காடு மாற்று இனத்தவரே பணி புரிகின்றனர்.
இவர்கள் பெரும் பாலும் தமிழர்களுக்கு எதிராக தன் இன மக்களுக்கு ஆதரவாகவே இன்று வரை செயல் பட்டு வருகின்றனர்.
குறிப்பாக காவல் துறைகளில் பணி புரியும் திராவிடர்களால் தமிழர் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன.
50 ஆண்டு கால திராவிட ஆட்சியில், தமிழர் என்ற போர்வையில் இங்குள்ள திராவிடர்களால் அரசு வேலையை பறித்து விட்டனர்.
மலையாளிகளும், தெலுங்கர்களும், கன்னடர்களும், வட இந்தியர்களும் அரசு துறையில் ஊடுருவியதால் இன்று தமிழர் நாட்டின் அசைக்க முடியாத ஆற்றலாக வளர்ந்து விட்டனர்.
தமிழ் நாட்டை ஆளும் அரசு மற்றும் அதிகாரிகள் வர்கதினரே மாற்று இனத்தவர்தான்.
அரசு துறையில் ஒருவர் பதவியேற்றால் அவர்களை 40 ஆண்டு வரை தமிழர் நாட்டின் தலை விதியை எழுதும் வல்லாதிக்கர்கலாக மாறுகின்றனர்.
இந்த நிலை ஒழிக்க பட வேண்டும் .
நமது அண்டை மாநிலங்களில் (கேரளா ஆந்திரா கர்நாடகா ) அந்த மாநில மண்ணின் மைந்தர்களை தவிர வேறு யாரும் அரசு பதவியை பெற முடியாது என்று அந்தந்த மாநில அரசுகளே சட்டம் இயற்றி செயல் படுத்தி வருகிறது.
தமிழ் நாட்டை ஆளக் கூடியவர்கள், தமிழர் அல்லாதவர்களாக, திராவிடர்களாக இருப்பதால், அவர்கள் தங்கள் திராவிட மக்களுக்கும், மாற்று இன மக்களுக்கும் ஆதரவாக செயல் பட்டு வருகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால், இவர்களை தொடர்ச்சியாக ஆள விட்டால் இங்குள்ள திராவிட மாற்று இன மக்களிடம் கையேந்தி பிச்சை கேட்கும் நிலைக்கு தமிழர்கள் ஆளாக்கப்படுவார்கள்.
தமிழக தமிழர்களையும், தமிழீழ தமிழர்களையும் காக்க, தமிழர் நாட்டையும், தமிழீழத்தையும் மீட்க, தமிழர் நாட்டை தமிழர்களே ஆள வைக்க திராவிடத்தை வீழ்த்த வேண்டும் .
திராவிட கொள்கையை வீழ்த்துவதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
யார் ஆள வேண்டும் என்பதை விட தமிழர் அல்லாதோர் ஆள கூடாது என்பதில் உறுதியாக இருந்து செயல் படுவோம்.
திராவிடம் என்ற ஆலமரத்தை அடியோடு வீழ்த்த நான்கு இன மக்களுக்கான பெரியாரின் திராவிட கொள்கையை வேரறுப்போம்..
திராவிட போர்வையில் இருக்கும் ஆரிய கும்பலை கருவருப்போம்...