21/12/2017

தமிழினமும் புத்தாண்டு குழப்பமும்...


நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்கு தமிழ்ப் புத்தாண்டு...

தமிழருக்கு தொடராண்டு இல்லை. தற்பொழுது நாம் கடைப்பிடிப்பது சித்திரை மாதம் முதல்நாள்.

அத்துடன் தை முதல் நாளைப் புத்தாண்டு பொங்கல் திருநாளாகக் கொண்டாடுகிறோம்.

மற்றைய இனத்தவர் களுக்கு புத்தாண்டு ஒன்று தான். தமிழருக்கு மாத்திரம் ஏன் இரு ஆண்டுகள்?

ஆகவே தமிழராகிய நாம் புத்தாண்டு தை முதல் நாளா.. சித்திரை முதல் நாளா என்பதைத் திட்டவட்டமாக முடிவெடுத்து அதைப் பின்பற்ற வேண்டும்.

தற்பொழுது நாம் கொண்டாடும் புத்தாண்டு, சாலிவாகனன் எனும் வடநாட்டு மன்னரால் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இவர் கி.பி.78இல் இம்முறையை ஏற்படுத்தினார்.

அவ்வாண்டுகள் பிரபவ விபவ பிரமோதூத என்ற 60 ஆண்டுகள்.

சித்திரை தொடக்கம் சுழற்சி முறையில் வருகின்றன.

இவைகளில் ஒரு ஆண்டு கூட தமிழ்ப் பெயரோ அல்லது தமிழினத்துடன் தொடர்புடைய தாகவே இல்லை.

ஆகவே தான் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடுவது முறையல்ல என்று தீர்மானித்து, 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலையடிகளார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் புலவர்கள் கூடி தமிழர்க்கென்று ஒரு தனி ஆண்டு தேவை என்று கருதி திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவது என்றும், திருவள்ளுவர் காலம் கி.மு.31 என்றும் முடிவு செய்தனர்.

ஆனால் அக்காலத்தில் பார்ப்பனர் மிகவும் பலம் வாய்ந்தவர்களாக இருந்தமையால், அவர்களின் கடும் எதிர்ப்பால் இம்முடிவை ஒத்திவைக்க நேரிட்டது..

புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களும் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதை வலியுறுத்துகின்றன..

நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்கு
தமிழ்ப் புத்தாண்டு
தரணி ஆண்ட தமிழருக்குத்
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.

தையே முதற்றிங்கள்;
தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று,
பல்லாயிரத்தாண்டாய்த்
தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தை முதல் நாள் பொங்கல் நன்னாள்.

புதுவருடப்பிறப்பு என்பது மகிழ்வுடன் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நாள்.

சித்திரை மாதம் தமிழரின் தாயகங்களான தமிழ்நாடு, புதுவை, தமிழீழம் ஆகிய பிர தேசங்களில் சூரிய வெப்பம் அதிகரிக்கும் மாதமாக உள்ளது.

தை மாதம் சூடும் குளிரும் குறைந்த மாதம்.

அத்துடன் விவசாயிகள் அறுவடை முடித்து விட்டதால் தானியங்களைத் தங்களது வீட்டிற்குக் கொண்டு வந்து மனநிறைவுடன் குடும்பத்தினர் அனைவருடனும், நண்பர்களுடனும் இணைந்து மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

இவை எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்று உலகத் தமிழினம் நடைமுறைப்படுத்துவது சாலச் சிறந்தது...

வட மாநில குற்றவாளிகளின் சங்கேத மொழி தங்கள் வீட்டின் முன் symbol இருந்தால் ஜாக்கிரதை...


தன் இனத்தின் தலைநகரை மீட்ட அம்பேத்கர்...


மனசாட்சியே இல்லாமல் அம்பேத்கரை ஈ.வே.ரா உடன் ஒப்பிடும் முண்டங்களே..

1948ல் பாம்பே நகரை குஜராத்திகள் சொந்தம் கொண்டாடிய போது..

கொதித்தெழுந்து பாம்பே மராத்தியர்களுக்கே சொந்தம் என்று ஆணித்தரமாக நிறுவி தன் மராத்திய இனத்தின் தலைநகரை மீட்டுக் கொடுத்தவர் அம்பேத்கர்..

ஆனால் சென்னையை தெலுங்கர்கள் உரிமை கொண்டாடிய போது ஈ.வே.ரா அதை எதிர்க்காமல் பிள்ளையார் சிலையை உடைத்து கொண்டிருந்தார்..

இதை நாங்கள் மறக்கவில்லை...

தனித்தமிழ்நாடு கேட்டார் என்று திருமாவேலன்கள் காதில் பூ சுற்றவேண்டாம்..

ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா? என்ற தலைப்பில் ஏற்கனவே தோலுரித்து தொங்கவிட்டாயிற்று..

சான்று: அம்பேத்கர் சமர்ப்பித்த மொழிவழி மாநிலமாக மகாராஷ்ட்ரா (Maharashtra as a linguistic province) என்ற ஆவணம்...

எது குறுகிய வட்டம்?


தமிழ் தேசியம் குறுகிய வட்டமாம். மனித நேயம் தான் அதைவிடப் பெரியதாம்..

அப்படியே பார்த்தாலும், பேரண்டத்துடன் ஒப்பிட்டால் உலகமே சிறியது தான். கடுகளவு கூட கிடையாது..

என் உரிமையை நான் ஒரு நொடிக்கு எடுத்துக் கொண்டால் மறுநொடி இந்த உலகமே அழியும் என்ற நிலை வந்தாலும் கவலை இல்லை..

இவ்வுலகம் அடங்கிய சூரிய குடும்பத்தோடு பால்வெளி அண்டமே அழிந்து போனாலும்.. பேரண்டம் பாதிப்பேதும் இல்லாமல் தொடர்ந்து இயங்கத் தான் போகிறது..

ஆக என் உரிமையை விட்டுக் கொடுக்க என்னால் முடியாது போங்கடா...

அதிமுக வின் தலைவர் பாஜக மோடி...


மண்டைய மறைத்தாலும் இவர்களால் கொண்டைய மறைக்க முடியலையே...

தமிழ்ப் புத்தாண்டு குழப்பத்திற்குத் தீர்வு...


தமிழர்களிடம் புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் இல்லை.இருந்தாலும் புத்தாண்டு என்பது இருந்திருக்க வேண்டும்.

இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவி வாழ்ந்த இனமல்லவா?

அதனால் பல நாட்காட்டிகள் நடைமுறையில் இருந்தன.

கதிரவனின் இயக்கத்தைப் பின்பற்றி ஒரு நாட்காட்டி..

நிலவின் இயக்கத்தைப் பின்பற்றி ஒரு நாட்காட்டி..

விண்மீன்களைப் பின்பற்றி ஒரு நாட்காட்டி..

தற்போது தமிழ் மாதங்களும் பஞ்சாங்க ஆண்டுகளும் 15ம் நூற்றாண்டுக்குப் பிறகு அதாவது தெலுங்கர் ஆட்சியில் சமஸ்கிருதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஹேவிளம்பி என்பது தமிழில் பொற்றடை என்று வழங்கப்பட்டது.

இதற்கு சான்று 'விவேக சிந்தாமணி' என்ற நூல் 1400 களில் எழுதப்பட்டது,
அதில் 60 ஆண்டுகளும் (தமிழில்) வருமாறு ஒரு பாட்டு உள்ளது.

ஆக நாரதர் - கிருஷ்ணர் ஆபாசக்கதையை (அதை எழுதியதும் வந்தேறிகளே) திராவிடம் மூலம் பரப்பி அதை ஆரியப் புத்தாண்டு ஆக்கி, தமிழர்கள் தற்போதும் பின்பற்றும் (சமஸ்கிருத மயமாக்கப்பட்ட) தமிழ் (கதிரவன்) நாட்காட்டியை நாமே எதிர்க்குமாறு செய்து நம்மை முட்டாளாக்கி வருகின்றனர்.

நாம் எந்த நாட்காட்டியைப் பின்பற்ற வேண்டும்?எது நமது புத்தாண்டு?

இதையெல்லாம் தமிழர்நாடு அமைந்ததும் வானியல், மெய்யியல், இலக்கியம், வரலாறு என பலதுறைகளைச் சேர்ந்த வல்லுநர் குழுவை அமைத்து முடிவு செய்ய வேண்டும்.

அதுவரை குழம்பாமல் அடித்துக் கொள்ளாமல்  கதிரவன் புத்தாண்டையே பின்பற்றுங்கள்.

தற்போதைய பஞ்சாங்க ஆண்டுகளின் உண்மையான (தமிழ்ப்) பெயர்களை அண்ணன் மேகநாதன் அவர்கள் பதிவிட்டுள்ளார்...

அது பின்வருமாறு,

01. பிரபவ -நற்றோன்றல்
02. விபவ - உயர்தோன்றல்
03. சுக்ல - வெள்ளொளி
04. பிரமோதூத - பேருவகை
05. பிரசோற்பத்தி - மக்கட்செல்வம்
06. ஆங்கீரச - அயல்முனி
07. ஸ்ரீமுக - திருமுகம்
08. பவ - தோற்றம்
09. யுவ - இளமை
10. தாது - மாழை
11. ஈஸ்வர - ஈச்சுரம்
12. வெகுதானிய - கூலவளம்
13. பிரமாதி - முன்மை
14. விக்கிரம - நேர்நிரல்
15. விஷு - விளைபயன்
16. சித்திரபானு - ஓவியக்கதிர்
17. சுபானு - நற்கதிர்
18. தாரண - தாங்கெழில்
19. பார்த்திப - நிலவரையன்
20. விய - விரிமாண்பு
21. சர்வசித்து - முற்றறிவு முழுவெற்றி
22. சர்வதாரி - முழுநிறைவு
23. விரோதி - தீர்பகை
24. விக்ருதி - வளமாற்றம்
25. கர - செய்நேர்த்தி
26. நந்தன - நற்குழவி
27. விஜய - உயர்வாகை
28. ஜய - வாகை
29. மன்மத - காதன்மை
30. துன்முகி - வெம்முகம்
31. ஹேவிளம்பி - பொற்றடை
32. விளம்பி - அட்டி
33. விகாரி - எழில்மாறல்
34. சார்வரி - வீறியெழல்
35. பிலவ - கீழறை
36. சுபகிருது - நற்செய்கை
37. சோபகிருது - மங்கலம்
38. குரோதி - பகைக்கேடு
39. விசுவாசுவ - உலகநிறைவு
40. பரபாவ - அருட்டோற்றம்
41. பிலவங்க - நச்சுப்புழை
42. கீலக - பிணைவிரகு
43. சௌமிய - அழகு
44. சாதாரண - பொதுநிலை
45. விரோதகிருது - இகல்வீறு
46. பரிதாபி கழிவிரக்கம்
47. பிரமாதீச - நற்றலைமை
48. ஆனந்த - பெருமகிழ்ச்சி
49. ராட்சச - பெருமறம்
50. நள - தாமரை
51. பிங்கள - பொன்மை
52. காளயுக்தி - கருமைவீச்சு
53. சித்தார்த்தி - முன்னியமுடிதல்
54. ரௌத்திரி - அழலி
55. துன்மதி - கொடுமதி
56. துந்துபி - பேரிகை
57. ருத்ரோத்காரி - ஒடுங்கி
58. ரக்தாட்சி - செம்மை
59. குரோதன - எதிரேற்றம்
60. அட்சய - வளங்கலன்.

மாதங்களின் பெயர்கள் பின்வருமாறு...

சித்திரை - மேழம்
வைகாசி - விடை
ஆனி - ஆடவை
ஆடி - கடகம்
ஆவணி - மடங்கல்
புரட்டாசி - கன்னி
ஐப்பசி - துலை
கார்த்திகை - நளி
மார்கழி - சிலை
தை - சுறவம்
மாசி - கும்பம்
பங்குனி - மீனம்...

திராவிடமும் சாதி அரசியலும்...


நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு. (Pearlmillet)...


இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேக வைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க...

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு நீங்க...

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய....

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

இதயத்தை வலுவாக்கும்.

சிறுநீரைப் பெருக்கும்.

நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

இரத்தத்தை சுத்தமாக்கும்.

உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

தாதுவை விருத்தி செய்யும்.

இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்...

பாஜக மோடியின் தேர்தல் வெற்றி இரகசியம்...


வெற்றிவேல் நம்பிகை துரோகம் செய்துள்ளார். சின்னம்மாவை அசிங்கப்படுத்தியுள்ளார், ஜெயலலிதா தன்னைதானே பார்த்துக் கொள்ள எடுக்கப்பட்ட வீடியோ அது - கிருஷ்ணப்பிரியா பேட்டி...


தன்னை கொலைகாரி என மக்கள் கூறிய போதும்  சசிகலா அதை வெளியிட்டு தன்னை காத்துக் கொள்ளவில்லை வெற்றிவேல் எப்படி அதை வெளியிடலாம்  ? இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா கேள்வி...

பாஜக தமிழிசை கலாட்டா...


இந்தியாவின் ஜனநாயமும் நீதித்துறையும்...


நீதிபதிகளை விட அரசியல்வாதிகள் நீதியையே வலைக்கும் ஆற்றல் பெற்றவர்களா.....?

சாதனை தமிழனின் பட்டியல்கள்...


தமிழன் என்ன கண்டு பிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் சாதனைதமிழனின் பட்டியல்கள்...

நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்....

பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,
வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு.....

கல்லணை : உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரை புரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் : கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?

அங்கோர்வாட் கோயில் : உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது. திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க  சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

திருநள்ளாறு காரி ஈசன் கோயில் : எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை, கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை, என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

கடல் நடுவே ராமேசுவரம் : கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்: கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

தொல்காப்பியமும் திருக்குறளும் : 5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.
2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது. ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

அணு :

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை ...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்.

சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து... என்று பாடி உள்ளார்.

சித்தர்கள் : சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் , மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

வானியல் அறிஞர்கள் : பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே.. சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.

பூம்புகார் உலகின் தொன்மையான நகரம் : 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

உலகை கட்டி ஆண்ட தமிழன்: கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே. அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது.

இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே  போதும் இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன் நிறைய பகிருங்கள் நமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும்...

அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டது தினகரன் அணி...


பெட்ரோல் டீசல் விலையை GST வரம்புக்குள் கொண்டு வர மாநில அரசுகள் தடுக்கின்றன - பாஜக அருண் ஜெட்லி...


அப்போது, முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் குறுக்கிட்டுப் பேசுகையில்...

மத்தியிலும், 19 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடத்துகிறது. எனினும், பெட்ரோலியப் பொருட்களை ஏன் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரித்திட்டத்தின் கீழ் கொண்டு வரவில்லை. இந்த பிரச்சினை குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

பதில் கூற முடியாமல் முழித்தார் நிதியமைச்சர்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவில்...


2019 பொது தேர்தலுக்கு முன்பாக எதிர்பார்க்கப்படும் திட்டங்கள்...

பெட்ரோல் விலை ரூ.100.

சிலிண்டர் விலை ரூ.1200.

சிலிண்டர் மானியம் ரத்து.

ரயில்வே கட்டணங்கள் இருமடங்கு உயர்வு.

வங்கி டெப்பாசிட் தொகைக்கு ஆப்பு.

அனைத்து அரசு நிறுவனங்கள் தனியார் மயம்.

இன்னும் பல லட்சம் வேலை இழப்புகள்.

மதக்கலவரங்கள் மற்றும் பிற மத & தாழ்ந்த ஜாதி மக்கள் அதிக அளவில் படுகொலை செய்வது.

பிறமத வழிபாட்டுதலங்கள் இடிக்கப்படும்.

ரேஷன் கடைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும்.

அரசு ஆஸ்பத்திரிகள் வளாகத்தில் தனியார் மருத்துவமனை செயல்படும்.

அரசு பள்ளிகள் தனியார் மயம் ஆக்கப்படும்.

மத்திய அரசு மற்றும் மாநில அரசில் தமிழர்களின் வேலைவாய்ப்புகள் படிப்படியாக குறைக்கப்படும்.

வங்கிகள் எண்ணிக்கை குறைக்கப்படும்.

ATM எண்ணிக்கை குறைக்கப்படும்.

உச்சா செல்வதற்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்படும்.

சாவுங்கடா...

Biological weapons பதிவு 2 - செயல்திட்டம் பற்றி அடுத்த பதிவில்....


பெரியபுராணத்தில் தமிழிசை...


சேக்கிழார் பெரிய புராணத்தில் ஆனாய நாயனார் புராணத்தைப் பாடும் போது 41 பாடல்களால் அவர் பாடும் இசை முறையைக் கூறுகிறார். அங்கு இசை இலக்கணச் செய்திகளைக் கூறியுள்ளார்.

1) ஆரோகணம் (ச ரி க ம ப த நி ச) என்பதனை ஆரோசை என்றும், அவரோகணம் (ச நி த ப ம க ரி ச) என்பதனை அமரோசை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2) குழல் துளைகள் மேல் விரல்களை மென்மையாக அசைத்தும், வழுக்கியும், தழுவியும், வண்டு மலர்மேல் அசைதல் போல் அசைத்தும் பல்வேறு உள்ளோசைகளை எழுப்ப வேண்டும்.

3) ஆனாயர் முல்லைப் பண்ணை முறைமை வழுவாது இசைத்தார். இசை பண்ணாகும் நிலையை இதன் மூலம் விளக்குகிறார் ஆனாயர். எல்லாச் சுரத்தானங்களையும் நன்கறிந்து அவை முறையாக ஒலி காட்டுகின்றனவா என்பதனை அறிந்து இசைக்க வேண்டும்.

4) பண்ணமைப்பு முறையில் மந்தரம், மத்திமம், தாரம் ஆகியவையும் வலிவு, சமம், மெலிவு ஆகிய பண்ணமை இடங்களும் பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு ஆகிய பாடல்வகைகளும், பாணி, தூக்கு, நடை ஆகிய தானத் தொடர்பான விளக்கங்களும் உள்ளன.

5) குழலைப்பற்றி மிகவிரிவாகக் கூறுகிறது இப்பகுதி. துளை இடும் முறை, நுட்பமான இசை எழுப்பும் முறை, திருவைந்தெழுத்தை இசைத்து, இசை நிகழ்வைத் தொடரும் முறை போன்றன கூறப்பட்டுள்ளன...

வேம்பு கற்பம் (காயகற்பம்)...


புகல்பெறவே நூற்றாண்டின் வேம்பைப்பர்த்து
ஆமாப்ப பட்டையைத்தான் வெட்டிவந்து
அப்பனே நிழல்தனிலே யுலர்த்திபின்பு
காமப்பா யிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து
கரிசாலை மல்லிகையின் சாறு வார்த்து
நேமப்பா அஞ்சுதரம் பாவினையே செய்து
சிறப்பான வெருகடிதூள் கொண்டிடாயே
கொண்டிடவே யனுபான வகையைக்கேளு

மத்தித்து தேனதிலே குடிப்பாயே நாற்பதுநாள்
விண்டிடவே யந்திசந்தி கொள்ளுகொள்ளு
மெய்யெல்லாங் கருங்கல்லின் வைரம்போலாம்
துண்டிடவே நரை திரையு மேல்லாம்போகும்
சுக்கிலந்தான் மேலேறும் கீழோடாது
கண்டிடவே யாருதளம் வெளியே காணும்
காலனுமே அஞ்சிடுவான் காணுங்கானே

- நந்தீசர் சகலகலை ஞானம் -1000..

நாம் காயகற்ப மருந்துகளைத்தேடி எங்கேயும் காடு மலைகளில் அலைந்து திரியாமல் வீட்டிலிருந்தபடி சுலபமாக செய்து சாப்பிட்டு உடலைக் கற்ப தேகமாக மாற்றிக்கொள்ள நந்தீசர் பெருமான் அருளியுள்ளார்..

தமிழ் நாட்டில் எங்கும் சாதாரணமாக காணக்கிடைக்கும் வேப்பமரத்தை நூறாண்டு சென்ற வயதான மரத்தை தேடி அதன் பட்டையை வெட்டிவந்து மேலே உள்ள கடினமான பகுதியை நீக்கி விட்டு உள்ளே உள்ள வெண் சதைப் பகுதியை எடுத்து நிழலிலேயே நன்கு காய வைத்து உரலிலிட்டு இடித்து தூள் செய்து கொள்ளவும்.

இதில் வெண் கரிசலாங்கண்ணி சாறு ,கொத்தமல்லி இலையை இடித்த சாறு இரண்டும் சமமாகக்கலந்து வேம்பு பட்டை தூளில் கலந்து அது முழுகும் அளவு சாறு விடவும்.

இதை வெயிலில் வைத்து காயவிடவும் இந்த மூலிகை சாறுகள் நன்கு வற்றியவுடன் மீண்டும் மேற்கண்ட சாறுகளை ஊற்றிக்கலந்து வெயிலில் காயவிடவும்..

இப்படி ஐந்து முறை செய்யவும் இதற்க்கு பாவனை என்று பெயர். இந்த முறையில் தயார் செய்த சூரணத்திற்கு "வேம்பு கற்பசூரணம்"என்று பெயர்.

இதனை பாட்டிலில் பதனம் செய்யவும் இதனை வெருகடியளவு என்பது ஐந்து விரல் கூட்டி எடுத்து (ஒரு டீ ஸ்பூன் அளவு) எடுத்து தரமான தேனில் கலந்து அந்தி சந்தி (காலை -மாலை) என நாற்பது நாள் உண்ணவும்.

இதனால் தேகம் வைரம் போல் இறுகி நாடி நரம்புகள் முறுக்கேறும், தசைகள் இறுகும், தலைமுடி நரை மாறும் , பார்வைத்திறன் அதிகரிக்கும், உடல் இளவயது தோற்றம் பெரும், மற்றும் சுக்கிலம் எனப்படும் விந்து திடப்படும், உடல் உறவில் அதிகநேரம் நீடிக்கும் குண்டலினி யோகப்பயிற்சி செய்வோருக்கு பேரின்ப சித்தி கிட்டும் மற்றும் ஞானத்தின் ஆறு நிலைகளையும் கண்டு உணரலாம் எனவும் இந்த "வேம்பு கற்பம்" உண்டவனைக் கண்டு காலன் என்ற எமன் அஞ்சுவான் என குறிப்பிடுகின்றார்.

இப்படி மகத்துவம் வாய்ந்த "வேம்பு கற்ப சூரணம்"செய்து உண்டு அனைவரும் பெரும் பயனடையலாமே...

தமிழகத்தில் பாஜக ஒரு அடி கூடஎடுத்து வைக்க முடியாது - வைகோ நாயூடு...


அட கடந்த பாராளுமன்ற தேர்தலில் . மோடி வரார் ஓடி வரார்னு குடுகுடுப்பை  அடிச்சுட்டு  இருந்தான் ஒரு  மானஸ்தன்...

யாரவது  பார்த்தீங்களா ?

ரெய்கி...


Reiki and Pranic Healing...

உங்கள் எல்லாருக்கும் Reiki (or) Pranic Healing பற்றித் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள்  வருத்தப்பட வேண்டாம் நான் சொல்கிறேன்..

தெரிந்தவர்கள், Reiki-யும் Pranic Healing-ம் ஒன்றா? என்ற கேள்வியை என்னிடம் முன்வைக்கலாம். அதற்கும் உண்டான பதிலை நானே சொல்கிறேன்.

ரெய்கி என்றால் என்ன?

அது ஒரு வகையான சிகிச்சை முறை. இதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால் வேறு சில விஷயங்களை உங்களுக்குச் சொல்கிறேன்.

நமக்குக் கண்ணுக்குத் தெரிவது எலும்பு, சதை, ரத்தம், நரம்புகளால் ஆன உடல் மட்டுமே. நம் ஒவ்வொருவரின் உடலைச் சுற்றியும் சூட்சும உடல் ஒன்று இருக்கிறது. அது நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை.

பொதுவாகப் பொருள் என்பது Solid, Liquid அல்லது Gas நிலையில் இருக்கும். இந்தச் சூட்சும உடம்பானது Plasma என்னும் நேர் மற்றும் எதிர்மறை அயனிகளால் (Positive and Negative Ions) ஆன ஒரு (நான்காம்) நிலையில் உள்ளது. 

உடல் திசுக்களின் செல்களில் இருக்கும் அந்த ப்ளாஸ்மா வேறு; இது வேறு.

இந்தச் சூட்சும உடம்பிற்கு Etheric body, Energy body, Bio-Plasmic body எனப் பல பெயர்களை வைத்து வழங்குகின்றனர். நம் உடலில் இருக்கும் ரத்த நாளங்களைப் போல இந்த energy body-யிலும் ஆற்றல் பாதைகள் (energy channels or meridians) இருக்கும்.

இந்தச் சூட்சும உடம்பானது நமது மெய்யுடலைச் சுற்றி ஒரு 4-5 inches கவர்ந்தவாறு கோழி முட்டை வடிவில் இருக்கும். 

நம் உடலின் எந்தப் பாகத்தில் நோய் வருவதாக இருந்தாலும் இந்த energy body-யை முதலில் தாக்கிவிட்டு அதன் பின்னர் தான் நம் உடலில் தாக்கத்தைக் காட்டும். அதே போல, நம் உடலில் வெட்டு போன்ற காயங்கள் ஏற்படும் போது இந்த energy body-யிலும் மாற்றங்கள் தெரியும்.

எனவே இந்த energy body-க்கு ஆற்றல் கொடுப்பதன் மூலம் நோயிற்கான சிகிச்சையை நாம் துரிதப்படுத்த முடியும்.

சரி, இந்த ஆற்றலை நாம் எங்கிருந்து பெறுவது? இதென்னடா வேண்டாத வேலை.. பெட்ரோல் டீசல், CNG (fuel) மாதிரி இதற்கும் ஆற்றல் தேவையா என்று பயப்பட வேண்டாம்.

இந்த ஆற்றலை (energy) நாம் இயற்கையிடமிருந்தே பெறலாம்.

அதாவது பிரபஞ்சத்திடமிருந்து.

சூரியன், காற்று, மரங்கள் போன்றவற்றிலிருந்து வெளிப்படும் ஆற்றல் அலைகளைப் பெற்று உடம்பில் சிகிச்சை தேவைப்படும் இடத்துக்குச் செலுத்துவது தான் இக்கலை. சரி இதற்கு ஏதேனும் கருவி தேவையா? இல்லை.

இதெற்கென மருந்து? இல்லை. சிகிச்சை அளிப்பவர் ஒருவர் இருந்தால் மட்டும் போதும்.

உலகின் எந்த மூலையில் இருப்பவரும் எந்த மூலையில் இருப்பவருக்கும் Distant Healing முறையில் கூட சிகிச்சை அளிக்கலாம்.

“இவ்வளோ நேரம் சீரியஸா கேட்டுட்டு இருந்தோம்.. இப்போ தான் தெரியுது இது ஒரு கப்சானு” என்று சொல்பவர்கள் இப்பொழுதே அப்பீட் ஆகிக் கொள்ளலாம்.

மாறாக இயற்கை நமக்கு அளித்திருக்கும் ஒரு அதிசயமாக இதை எண்ணுபவர்களும் தீராத நோயினால் அவதிப்படுபவர்களும் மேலும் அறிந்து கொள்ள ஆவல் இருப்பவர்களும் தொடர்ந்து படிக்கலாம்.

Common Cold, Fever, Headache, Diabetes, High BP, High Cholestrol, Heart Problems, Thyroid போன்ற Hormone Problems, Kidney Problems, Migraine, Tonsillitis, Sinusitis, STD, Leprosy, Cancer போன்ற எல்லா விதமான நோய்களுக்கும் தனியாகவோ, மருத்துவ சிகிச்சையுடன் சேர்த்து supplement ஆகவோ Pranic Healing சிகிச்சை செய்யலாம். இது சிகிச்சை முறையைத் துரிதப்படுத்தும் catalyst (ஊக்கி) ஆகப் பயன்படுகிறது.

Rei என்றால் Universal; Ki என்றால் Life Energy or Prana (நம்முடைய மொழியில்). இதைத் தான் Reiki என்றும் Pranic Healing என்றும் சொல்கின்றனர். இரண்டு கலைகளும் ஒன்று தான்.

ஆனால் இந்த இரண்டு சிகிச்சை முறைகளும் சில minor வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. Reiki-இல் ஆற்றல் அளிப்பதை (energizing) மட்டுமே முக்கியமாகக் கொள்கின்றனர்.

Pranic Healing-இல் முதலில் ஆற்றல் மையங்களைச் (Energy Chakras) சுத்தம் செய்வது (Cleansing), பின் ஆற்றல் அளிப்பது, சிகிச்சை அளிப்பவர் சிகிச்சை பெறுபவரிடம் இருந்து நோய் (அ) தீய ஆற்றல் தனக்குப் பரவாமல் பார்த்துக் கொள்வது போன்ற வரிசை முறையான செயல்பாடுகளைக் கொண்டுள்ளனர்.

புதிதாகக் கற்க விரும்புகிறவர்கள் Pranic Healing வகுப்பிற்குப் போகலாம்.  ஒவ்வொரு நிலைக்கும் தலா இரண்டு நாட்கள் தான். அற்புதமான, வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும்..

அதன் பிறகு உங்கள் வாழ்க்கையே மாறிப் போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...

2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுக ஆ.ராசா, கனிமொழி உட்பட அனைவரும் விடுதலை...


திமுக எப்போதும் சிறுபான்மையினர் நலனுக்காக பாடுபடும் - ஸ்டாலின்...



தமிழர் நாட்டில் யார் டா சிறுபான்மையினர்..?

தமிழ்நாட்டில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் தான் சிறுபான்மையினர்... தமிழர்கள் பெரும்பான்மையர்..

இந்தியாவில் எப்படி வந்தேறிகளான அத்வானியும், வாச்பாயும், முரளி மனோகர் ஜோசியும்,  சிறுபான்மையரோ..

அதுபோன்றே தமிழ்நாட்டு வந்தேறிகளான கருணாநிதி, ஸ்டாலின், வைகோ, வீரமணி, விசயகாந்த் போன்றவர்கள் தான் சிறுபான்மையர்...

இந்த நாட்டில் இருக்கிற தமிழ் கிருத்துவனும், தமிழ் இசுலாமியனும் தமிழ் இந்துவும் பெரும்பான்மையர்...

தெலுங்கு வந்தேறி வடுகக் கும்பல் தான் சிறுபான்மையர்...

இப்போது புரிகிறதா திமுக ஏன் எப்போதும் சிறுபான்மையர்க்கு துணை  என்று ஓலமிடுவதின் காரணம்...

நெற்றியில் திருநீறு அணிவதால் என்ன நன்மை.?


நம் முன்னோர்கள் விபூதியை பட்டையாக நெற்றியில் பூசுவர்.

இந்த விபூதி பெரும்பாலும் பசுவின் சாணம் மற்றும் சில மரங்களை எரித்து அதில் இருந்து தயாரித்தனர்.

பிறக்கும் போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும் போது மண்ணிலே தான் சாகப் போகிறோம்.

மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத்தான் போகிறது.

நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம்.

இந்த வாழ்க்கை மாயமானது.

நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான்.

இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம்.

மேலும் இந்த சாம்பல் பாக்டீரியவை கொல்லும் திறன் கொண்டது.

எனவே காய்ச்சல் அல்லது உடல் நலகுறைவின் பொழுது பயன்படுத்தபடுகிறது.

விஞ்ஞான பூர்வமாக அது சைனஸ் பிரச்சினைகள் மற்றும் மற்ற பாக்டீரியல் நோய்களை தடுக்கிறது.

இந்த சாம்பல் ஈரபதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது.

எனவே இது நெற்றியில் உள்ள நீரை உறிஞ்சி விடுகிறது.

மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கியப்பாகம்.

அதன் வழியாக மிக அதிகமாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும்.

இது ஒரு வர்ம ஸாதனம் கூட.

சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும்.

மேலும் இந்த சாம்பல் ஈரபதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது.

எனவே இது நெற்றியில் உள்ள நீரை உறிஞ்சி விடுகிறது...