04/01/2019

தாய் மொழிக் கல்வியை ஊக்குவிப்போம்... புதிய சாதனைகள் படைப்போம்...


காலத்தை கடந்து நிற்கும் அதிசயங்கள் . இன்றும் இது போன்ற அதிசயங்களை நாம் கட்ட இயலாது.

இவற்றை கட்டியவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டு கட்டவில்லை. அவர்கள் தாய் மொழியில் கணிதம், அறிவியல் பயின்று தான் இந்த அழியாத அற்புதங்களை கட்டினர்.

ஆங்கிலம் படித்தால் தான் சாதிக்க முடியும் என்று சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டனர் சிலர். மாயையில் விழுந்த மக்களும் அதை நம்பினர்.

உண்மையான சாதனைகள் அவரவர் தாய் மொழியில் படித்தால் மட்டுமே சாதிக்க முடியும் ..

அதற்கான சான்றுகள் ஏராளம்.

இன்று தாய் மொழிக் கல்வியை பயிலும் அமெரிக்கர்கள் , பிரித்தானியர்கள் , சீனர்கள் , ஜப்பானியர்கள் உலகத்தை ஆட்டுவிக்கும் அளவிற்கு அறிவியல் சாதனைகள் புரிகின்றனர்..

தமிழர்களோ அறிவுக்காக அடுத்தவரிடம் கையேந்தி நிற்கின்றோம். நாமும் நம் தாய் மொழியில் அனைத்தும் கற்போம் , கற்பிப்போம்...

தாய் மொழிக் கல்வியை ஊக்குவிப்போம். புதிய சாதனைகள் படைப்போம்... வாழ்க தமிழ்...

இந்திய - திராவிடத்தால்... நம் காவிரி ஆறு நிலை...


சிரித்து பேசியதால் மனைவியை மாடியில் தள்ளி விட்டு கொன்ற கணவன்.. காஞ்சிபுரத்தில் பயங்கரம்...


காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த தாழம்பூரில் ராணுவ வீரர்கள் வீட்டு வசதி சங்கம் சார்பில் 26 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடைபெற்றது வருகிறது.

95 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், வருகிற பொங்கலன்று இக்கட்டிடம் திறக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்நிலையில் கட்டிடத்தில் இறுதிகட்டமாக வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வந்தது.

இதில் ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியை சேர்ந்த சந்தோஷ் குமார் (28), அவரது மனைவி பீலாதேவி (22) ஆகிய இருவரும் வேலை செய்து வந்தனர். கடந்த 27ம் தேதி காலை தம்பதி 19வது மாடியில் தரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென பீலாதேவி 19வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில்  உடல் சிதறி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து தாழம்பூர் போலீசார் அங்கு சென்று பீலாதேவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலில் பீலாதேவி தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதினர். ஆனால், அக்கட்டிடத்தில் தவறி விழ முடியாத அளவிற்கு  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதையடுத்து பீலாதேவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறுதி செய்த போலீசார் அவரது கணவர் சந்தோஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர்.

கடந்த சில நாட்களாக வாய் திறக்காத இருந்த சந்தோஷ்குமார்,  பியூலாதேவி கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள மற்ற தொழிலாளர்களுடன் சகஜமாக சிரித்து பேசிவந்ததாக கூறப்படுகிறது. அப்படி பழகக் கூடாது என்று கணவர் எச்சரித்தும் தனது பழக்கத்தை தொடர்ந்துள்ளார் பியூலாதேவி.

சம்பவத்தன்றும் ஒருவரிடம் அவர் சிரித்து பேசியதால், தங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ள சந்தோஷ்குமார், அப்போது உண்டான ஆத்திரத்தில் மனைவியின் தலையில் தாக்கியதோடு,

அவரை 19-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொடூரமாக கொன்றதாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்...

நியூஸ் 7 டிவியின் ஊடக விபச்சாரம்...


மூட்டு வலிக்கு நாட்டு மருந்து...


மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால் தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும்.

மூட்டழற்சி: இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

முடக்குவாதம்: இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

மூட்டழற்சியின் அறிகுறிகள்: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.

முடக்குவாதத்தின் அறிகுறிகள்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம்: முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்...

1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5. ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6. இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7. ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்...

பண்டைத் தமிழர்களின் முகத்தலளவை...


உழக்கு என்பது பண்டைத் தமிழர்களின் முகத்தலளவை அலகுகளில் ஒன்றாகும். உலக அளவை முறையில், ஒரு உழக்கின் அளவு 336 மி. லி ஆகும்.

இந்த உழக்கை நீர், பால், எண்ணெய் போன்ற பாய்மப் பொருள்களை அளப்பதற்கும் நெல், அரிசி, உளுந்து போன்ற தானியங்களை அளப்பதற்கும் பயன்படுத்துவார்கள்.

பண்டையத் தமிழர் பயன்படுத்திய முகத்தல் அளவைகள்...

5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி அல்லது நாழி
8 படி = 1 மரக்கால் (குறுணி)
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி

இவ்வாய்ப்பாட்டின் படி...

1 உழக்கு = 10 செவிடு
1 உழக்கு = 2 ஆழாக்கு
1 உழக்கு = 1/2 உரி
1 உழக்கு = 1/4 படி
1 உழக்கு = 1/16 மரக்கால் ஆகும்...

ஓரியோ பிஸ்கேட் உண்மைகள்...


இன்றைய மாற்றம்...


பிளாஸ்டிக் தடையால் பார்சல் டீ வாங்குவதற்கு தூக்கு வாளிக்கு மாறிய நெல்லை வண்ணார்பேட்டை டீ கடை..

150 ரூபாய் முன்பணமாக செலுத்தி தூக்குவாளியில் டீ வாங்கி செல்லலாம்,பின் தூக்குவாளியை கொடுத்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம்...

கார்ப்பரேட் கைகூலி பாஜக அடிமை அதிமுக அரசே பதில் சொல்...


கழிவு நீரை பளிங்கு நீராக்கி நீங்களும் வீட்டுத் தோட்டம் போடலாம்...


வீட்டுத்தோட்டம் போட ஆசைதான், ஆனால் தண்ணீருக்கு எங்கு செல்வது? என்று மலைத்து நின்றுவிடுவோம். இனி அந்த கவலையை விடுங்கள். வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீரையே எளிய முறையில் சுத்தப்படுத்தி பயன்படுத்தால்.

இதோ அதற்கான தொழில்நுட்பம்...

வீட்டில் உள்ள குளியல் அறை, கழிவறை, சமையல் அறை ஆகியவற்றில் இருந்து வெளியே செல்லும் நீரில் ரசாயனங்கள் கலந்து இருக்கும். அவற்றை அப்படியே செடி, கொடிகளுக்குப் பாய்ச்சினால்... அவை பாதிப்படையும்.

அதேசமயம், இந்த நீரை எளிய முறையில் சுத்திகரித்துவிட முடியும். அதைப் பயன்படுத்தினால் செடி, கொடிகளுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது.

நீளம், அகலம், ஆழம் அனைத்தும் மூன்று அடி அளவுள்ள ஒரு சிமிட்டி (cement) தொட்டியின் வழியாக கழிவுநீர் செல்வது போல் அமைக்க வேண்டும். தொட்டியின் அடிபாகத்தில் தண்ணீர் வெளியேற துளை இருக்க வேண்டும்.

தொட்டியில் நீரை விடுவதற்கு முன்பு, மணல், கருங்கல் ச(ஜ)ல்லி போன்றவற்றை பாதி அளவுக்கு நிரப்பி, அதில் கல்வாழை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை நடவும்.

சல்லியில் உருவாகும் ஒருவித பாசியில் உள்ள பொருட்களைப்புளிக்க வைக்கும் அல்லது நோய் உண்டாக்கும் நுண் உயிரிகள் (bacteria) , குளியல் அறை நீரில் கலந்துள்ள பொசு(ஸ்)பேட் உப்பு (Phosphate salt), வெடியம் (sodium) என பல உப்புகளையும் தின்றுவிடும்.

கல்வாழை செடிகள் சுத்திகரிக்கப்பட்ட நீர் தொட்டியின் கீழ்ப் பகுதிக்குச் செல்ல உதவும். தொட்டியில் நீரை விட்ட ஒரு மணி நேரத்தில், சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியே வரத் தொடங்கும். இப்படி சுத்திகரிக்கப்பட்ட நீரில் செடி, கொடிகள் நன்றாக வளரும்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள்...


பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு...

நம் நோய்களை எதிர்க்கும் சக்தியைப் பெறுவது போலவே மற்றவர் நோய்களையும் ஆழ்மன சக்தியால் குறைக்கவோ, அகற்றவோ முடியும். நம்மிடம் ஆரம்பித்து நம் விஷயத்தில் வெற்றி கொண்ட பின்னர் தாராளமாக அடுத்தவர்களுக்காகவும் முயற்சிக்கலாம். அதற்கு நாம் மேலும் கூடுதலாகப் பயிற்சிகள் செய்து தேர்ந்திருக்க வேண்டும். குறிப்பாக visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளைத் தெளிவாக உருவகப்படுத்திப் பார்க்கும் திறனையும், சக்தி வாய்ந்த ஆழ்மனத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

முதலில் அடுத்தவர் நோயால் படும் அவதியை மனத்திரையில் உள்ளதை உள்ளது போலவே கண்டு, சிறிது சிறிதாக அவர் குணமடைகிறார் என்ற எண்ணத்தை வலுவாக்கி, அவர் அவதிப்படும் காட்சியை மங்க வைத்து, அவர் குணமடைந்த நிலையைத் தெளிவான காட்சியாக மனத்திரையில் ஒளிரச் செய்ய வேண்டும். ஏதாவது மருந்தை உட்கொண்டு குணமாகும் பெரும்பாலான நோய்களை இந்த வகையில் குணமாக்கவோ, குறைத்து விடவோ முடியும். ரெய்கி, ப்ராணிக் ஹீலிங் போன்ற ஏதாவது ஒரு குணப்படுத்தும் முறைகளில் ஒன்றை முறையாகக் கற்றுத் தேர்வது குணப்படுத்துதலின் பல அடிப்படை விஷயங்களையும் கற்றுத்தரும். அப்படி ஒரு முறையில் தேர்ச்சி பெற்று, ஆழ்மன சக்தியையும் பயன்படுத்தினால் அடுத்தவர்களைக் குணப்படுத்தும் முயற்சிகளில் பெருமளவு வெற்றி பெற முடியும். ஆனால் எத்தனை சக்தி படைத்திருந்தாலும், பயிற்சிகளைச் செய்து தேர்ந்திருந்தாலும் விதிப்பயனாலோ, வேறு பல காரணங்களாலோ சில நோய்களைக் குணப்படுத்த முடியாமல் போவதுண்டு. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் முயற்சி செய்பவர் பெற்றிருக்க வேண்டும்.

இத் தொடரின் ஆரம்பத்தில் மருத்துவ ஞானமே இல்லாத எட்கார் கேஸ் பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் கை விரித்த நோயாளிகளுக்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும், மருந்துகள் எங்கு கிடைக்கும், தயாரிக்கும் இடம் என்ன, கடையில் அந்த மருந்தை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது உட்பட சொன்னதைப் பார்த்தோம். அது எப்படி முடிகிறது என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

ஒரு நோயாளியின் உடலில் என்ன கோளாறு, எந்தப் பகுதியில் கோளாறு, அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவனுடைய ஆழ்மன அறிவு துல்லியமாகவே அறிந்திருக்கிறது. நான் அந்த நோயாளியின் ஆழ்மன அறிவைத் தொடர்பு கொண்டு அதை அறிந்து கொள்வேன். அந்த நோய் அல்லது குறைபாட்டை குணமாக்க என்ன மருத்துவம் எப்படி செய்ய வேண்டும், எங்கிருந்து மருந்து அல்லது மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்பதையெல்லாம் பிரபஞ்ச அறிவைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்வேன்.

கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் ஆகாய ஆவணங்களில் (Akashic Records) பதிவாகி இருக்கும் என்றும், பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் ஒருவன் அறிய முடியாதது இல்லை என்றும் எட்கார் கேஸ் சொல்கிறார். கடந்த காலம், நிகழ் காலம் பதிவாகி இருப்பது கூடப் பரவாயில்லை, எதிர்காலம் எப்படி பதிவாகி இருக்கும் என்ற கேள்வி பகுத்தறிவுள்ளவர்கள் மனதில் எழுவது இயற்கையே. ஆனால் ”அறிவியலில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இல்லை” என்பதை ஐன்ஸ்டீனே ஒத்துக் கொண்டதைப் போல இதற்கும் நம்மிடம் பதில் இல்லை. ஆனால் எதிர்காலத்தை அறிய முடிந்தவர்கள், நடப்பதை முன் கூட்டியே சொல்ல முடிந்தவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது முன் கூட்டியே எங்கோ பதிவாகி இருக்க வேண்டும் என்ற அனுமானத்திற்கே நாம் வர வேண்டி இருக்கிறது.

சென்ற நூற்றாண்டில் சில விபத்துகள் நடப்பதற்கு முன்பே அவற்றைப் பற்றி பொதுவாக இல்லாமல் துல்லியமாகவே சொன்ன ஜோசப் டிலூயிஸ் பற்றி இத்தொடரின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தோம். இன்னொரு சுவாரசியமான உதாரணத்தையும் சொல்லலாம்.

1898 ஆம் ஆண்டு மோர்கன் ராபர்ட்சன் (Morgan Robertson) என்ற எழுத்தாளர் Futility என்ற பிரபல நாவலை எழுதினார். அந்தக் கதை Titan என்ற ஒரு ராட்சஸக் கப்பல் பற்றியும், அது கடலில் மூழ்கியதைப் பற்றியும் சுற்றி பின்னபட்டது. அந்தக் கதை எழுதி சுமார் 14 ஆண்டுகள் கழித்து 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி நிஜமாகவே Titanic என்ற ராட்சஸக் கப்பல் கடலில் மூழ்கியது. ஏதோ பெயர் மட்டுமே தான் கதைக்கும், நிஜ சம்பவத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்று நினைத்து விடாதீர்கள். கதையிலும் நிஜத்திலும் 3000 பயணிகள் இருந்தனர். கதையிலும் நிஜத்திலும் கப்பல் பனிப்பாறையில் மோதியே மூழ்கியது. அது போல கதையிலும் நிஜத்திலும் கப்பல் சென்ற வேகம் ஒன்றாகவே இருந்தது. மற்ற திகைப்பூட்டும் (ஏறத்தாழ இருக்கும்) ஒற்றுமைகளையும் பார்க்கலாம்.

கதைப்படி கப்பலின் எடை 70000 டன்கள், நிஜ டைட்டானிக் கப்பலின் எடை 66000 டன்கள். கதைப்படி கப்பலின் எடை 800 அடி. நிஜ டைட்டானிக் கப்பல் எடை 828 அடி. கதையில் அந்தக் கப்பலில் பயணிகளைக் காப்பாற்ற காப்புப் படகுகள் 24 இருந்தன. நிஜ டைட்டானிக்கில் 20 காப்புப் படகுகள் இருந்தன.

ஒரு நிஜ சம்பவம் அது நிகழ்வதற்கு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே கிட்டத்தட்ட அதே போல ஒரு எழுத்தாளரின் கற்பனையை எட்டியது எப்படி?

இராமாயணத்திலேயே புஷ்பக விமானத்தையும் அதன் செயல்பாட்டையும் பற்றி விவரித்திருக்கும் எத்தனையோ விஷயங்கள் இன்றைய விமானத்தின் தோற்றம், செயல்பாட்டுடன் ஒத்துப் போகின்றது என்று சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கவியின் கற்பனைக்கு இன்றைய நிஜ விமானம் எட்டியது எப்படி?

அவர்கள் அறியாமலேயே அவர்களுடைய கற்பனைகள் பிரபஞ்ச சக்தியை, பிரபஞ்ச அறிவைத் தொட்டறிந்த சமாச்சாரங்கள் என்று கூட அவற்றை எடுத்துக் கொள்ளலாமல்லவா?

எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ, எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் முறையாக இயங்குகிறதோ அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்லை. செய்ய முடியாதது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை.

பிரபஞ்ச சக்தியின் ஒரு நுண்ணிய அங்கமே ஒருவரது ஆழ்மன சக்தி. ஒரு மனிதன் மேல் மன அலைக்கழித்தலால் விடுபட்டு அமைதி அடைந்து தியானம் போன்ற பயிற்சிகளால் ஆழ்மன உலகிற்குப் பயணிக்கும் போது எதையும் தெளிவாகக் காண்கிறான். உயர் உணர்வு நிலைக்குச் செல்லும் போதோ பிரபஞ்ச சக்தியின் அங்கமே தான் என்றும் உணர்கிறான்.

நான்கு வகை மின்னலைகளில் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலைகளில் நாம் இருக்கையில் பல அதீத சக்திகள் நமக்கு சாத்தியமாகின்றன என்று சொல்லி இருந்தோம். காரணம் அந்த அலைவரிசைகளில் நாம் பிரபஞ்ச சக்தியுடன் நம் ஆழ்மனம் அந்த தொடர்பு கொள்ள முடிவது தான். மனிதன் டெல்டா அலைகளில் இருக்கையில் கிட்டத்தட்ட எண்ணங்களே அற்ற நிலையை அடைந்து விடுகிறான். (யோகாவில் அதை நிர்விகல்ப சமாதி என்கிறார்கள்). அப்போது ஆழ்மன சக்திகள் அடையும் எண்ணங்கள் உட்பட எல்லா எண்ணங்களும் அற்றுப் போன நிலைக்குப் போய் விடுகிறான். எனவே பொதுவாக ஆல்ஃபா அலைகள், மற்றும் தீட்டா அலைகளில் இருக்கும் போது தான் மனிதன் ஆழ்மன சக்திகளைப் பயன்படுத்தும் நோக்கம் வெற்றி பெறுகிறது என்று கூட சொல்லலாம்.

நாம் இந்த மின்னலைகளின் பெயர்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து எந்த மின்னலைகளில் இருக்கிறோம் என்று அறிய சிரமம் மேற்கொள்ள வேண்டியதில்லை. பொது அறிவுக்காக விளக்கி இருக்கிறோமே தவிர அந்தப் பெயர்களை அறிந்திருத்தல் அவசியமில்லை. மேல் மன எண்ணங்கள், கவலைகள், பயங்கள், பரபரப்புகள், படபடப்புகள் எல்லாம் இல்லாமல் அமைதியாக, அதே நேரம் தூங்கியும் விடாமல், கால ஒட்டத்தை மறந்து இருக்கிற போது நம் ஆழ்மனம் பிரபஞ்ச சக்தியுடன் ‘ட்யூன்’ ஆகும் பக்குவத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதுமானது.

அப்படி இருக்கிற கால அளவு அதிகமாக அதிகமாக நாம் பெறுகின்ற பயன்கள் அதிகமாகின்றன. நமக்கு அறிய வேண்டியவை அனைத்தையும் நாம் அந்த நேரத்தில் அறிய முடியும். நாம் விரும்பியதை அடையத் தேவையான சூழ்நிலைகளையும், அதற்கு உதவக் கூடிய மனிதர்களையும் நாம் நம் வாழ்வில் வரவழைத்துக் கொள்ள முடியும். அந்தக் கால அளவு ஒரு கண நேரமே ஆனாலும் அதன் பயன் அளவில்லாதது. அந்த அனுபவம் ஒரு சுகானுபவமே. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்வார்கள். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வடிக்க எத்தனை தான் முயற்சித்தாலும் பரிபூரணமாய் அதைப் புரிய வைத்தல் எப்படிப்பட்டவருக்கும் சாத்தியமில்லை.

தற்போதைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் இது போன்ற பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது இயலாத காரியம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் பிரபஞ்ச சக்தியுடன் ஒருசில நிமிடங்கள் தொடர்பு கொள்ள முடிந்தால் கூட அது எத்தனையோ மணி நேரங்களை உங்களுக்கு சேமித்துத் தரும் என்பது அனுபவ உண்மை.

பரபரப்பாகவும், அவசரமாகவும் மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை, பிரபஞ்ச சக்தியுடன் ஆழ்மனம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்த நபர் அப்படிப் பெறும் ஞானத்தின் காரணமாக நிமிடக்கணக்கில் கச்சிதமாகவும், சிறப்பாகவும் செய்து காட்ட முடியும். காரணம் தேவையில்லாமல் அலைக்கழியாமல், கவனத்தை பல தேவையில்லாத பகுதிகளில் சிதறி வீணாக்காமல், அந்த வேலையை கச்சிதமாகச் செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நேர்த்தியாகச் செய்ய முடிகிறது என்பது தான்.

ஏதாவது முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானால் நாள் கணக்கில் யோசித்து, பல பேரைக் கலந்தாலோசித்து, குழம்பி, கடைசியில் எடுக்கிற முடிவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஓரிரு நிமிடங்களே ஆனாலும் பிரபஞ்ச அறிவின் தொடர்பு கொண்டவன் மிகச் சிறந்த முடிவைச் சுலபமாக எடுக்க முடியும். சுருக்கமாகச் சொல்வதானால் அம்பு இலக்கை அடைவதைப் போல நேராக, வேகமாக அடைய முடியும். ஊர் சுற்றி, உலகமெல்லாம் சுற்றி, வழி மாறி ஒருவன் தொலைந்து போக வேண்டியதில்லை.

சில கலைஞர்கள் தங்கள் கலையின் மீது உள்ள எல்லை இல்லாத ஆர்வத்தால் அதில் ஈடுபடும் போது கூட தங்களை மறந்து அதில் ஆழ்ந்து விடுவதுண்டு. தங்களைச் சுற்றி உள்ள உலகை மறந்து விடுவதுண்டு. அதுவும் கிட்டத்தட்ட தியானம் போலவே தான். ஆல்ஃபா தீட்டா அலைகளில் சஞ்சரிப்பது தான். ஆழ்மனம் மூலமாக பிரபஞ்ச அறிவைத் தொடுவது தான். அந்த நிலையில் அவர்கள் உருவாக்கும் கலை-எழுத்தாகட்டும், ஓவியமாகட்டும், இசை ஆகட்டும்-எதுவானாலும் அது காலம் கடந்து நின்று ஜொலிக்கும் என்பது உறுதி. பல்லாண்டுகள் கழித்து இன்றும் நிலைத்து நின்று வியக்க வைக்கும் கலைப் பொக்கிஷங்கள் கூட கண்டிப்பாக இது போல் உருவாக்கப்பட்டவையாகவே இருக்கும்.

இதையெல்லாம் பார்க்கையில் இந்த அவசர நவீன காலத்தில் கூட குறுகிய காலத்தில் நிறைய சாதிக்க, அதுவும் மிகச் சிறப்பாக சாதிக்க, பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்ள செலவழிக்கும் காலம் மிக நல்ல முதலீடு தான் என்றே எண்ணத் தோன்றுகிறது அல்லவா...

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்...


நம் வயிற்றுக் கடுப்பு, மலச்சிக்கல்  செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து...

பித்தத்தைப் போக்கும்...
உடலுக்குத் தென்பூட்டும்...
இதயத்திற்கு நல்லது...
மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்...
கல்லீரலுக்கும் ஏற்றது...

சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்...

கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்...

முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்....

இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்...

மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது...

பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்...

பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது...

பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது...

இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்...

உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது...

இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்...

ஆண்டிபயாடிக் மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்...

நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்...

பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது....

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும்...

மேலும்- நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்...

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்...

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது...

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை....

திமுக - அதிமுக கலாட்டா...


சீரகம் பற்றி சித்தர் தேரையர் சொன்ன இரகசியம்...



சீரகம் = சீர்+அகம்..

எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே
- ஆசான் தேரையர்.

தமிழ்ச் சித்தர்கள் எதையும் காரணப் பெயர் கொண்டே அழைப்பர்.

சிலவற்றைச் சூட்சமப் பெயர் (அவர்களுக்கே விளங்கும் குறிச்சொல்/ மறைபொருள்/ பரிபாசை) கொண்டும் அழைப்பர்.

இங்கே அகத்தைச் சீர் செய்வதால் தமிழ்ச் சித்தர்களால் சீரகம் என அழைக்கப்பட்டது.

அகத்தைச் சீர்செய்யும் சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்.

இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.

உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது.

குமின் என்ற வார்த்தையே அராபிய வார்த்தையாக கூறப்படுகிறது.

சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப் பட்ட வரலாறு சான்று சிரியாவில் இருந்து கிடைத்துள்ளது.

தமிழர்கள் இதை நீண்ட நெடுங் காலமாக உபயோகித்து வந்தனர் என்பது தெரிகிறது.

திருவண்ணாமலையில் கிடைத்த ஒரு கல்வெட்டில் நெல்லுக்கு பதிலாக சீரகம் அடைக்காய் முதலிய வாங்கிய செய்தி கிடைத்துள்ளது .

எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே
என தேரையர் என்ற சித்தர் சவால் விட்டுக் கூறுவதாக பாடல் ஒன்று உண்டு.

சீரகத்திலிருந்து 56% Hydrocarbons, Terpene,Thymol போன்ற எண்ணெய்ப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

இதில் Thymol –[anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic] வயிற்றுப் புழுக்களை அழிக்கவும், கிருமி நாசினியாகவும் பல மருந்துக் கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

BOTONICAL NAME Cuminum Cyminum
FAMILY Apiaceae..

சீரகத்திற்கு ஆங்கிலத்தில் ‘குமின்’ என்று பெயர்.

இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா, கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, காஷ்மீரியில் ஜையுர் என்று பெயர்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும்.

இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய் விடும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது.

பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது.

செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.

சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும்.

ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

பொதுவாக சீரகம்...

வெப்பமுண்டாக்கி stimulant
பசிதூண்டி stomachic
துவர்ப்பி astringent
வாய்வு அகற்றி carminative

மனித குலத்திற்கு நீண்ட காலமாக தெரிந்த ஒரு மூலிகை...

உணவை சுவையாக்கவும் செரிக்கவும் சீரிய ஒரு மூலிகை...

திராவிட மாமாகளுக்கு விருது...


என்னை நானே கேட்டு கொள்கிறேன்...


எனக்கு எதற்காக இந்த ஓர் மாய வாழ்வு என்று..

அதற்கு பதில் மாயையில் கரைந்து விட என்றது..

எதுவரை செல்லுமோ அதுவரை செல்லட்டும்..

கண்காணித்து கொண்டே இருக்கிறேன்
என்னை நானே...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு நிறுத்தம்...


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சன்குறிச்சி கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஜல்லிக்கட்டுக்காக போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.

விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து முழுமையான அனுமதி கிடைக்கவில்லை என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அனுமதி கிடைத்தபிறகு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது...

திமுக வேலை தான்...


ஐயப்பன் கோவிலுக்குள் சென்ற பெண்கள் அந்த வழக்கில் இரண்டுமுறை கைதானவர்கள்...


சபரிமலைக்குள் இரண்டு பெண்கள் சென்று தரிசித்த விவகாரம் நாடுமுழுவதும் உள்ள பக்தர்கள் இடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையை வெளியிட்ட தனியார் செய்தி நிறுவனம்...

கேரளாவை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஐயப்பன் கோவிலுக்குள் சென்ற பெண்கள் பற்றிய முழுவிவரத்தை வெளியிட்டுள்ளது.

தவறான நடவடிக்கைகளில் கைதானவர்கள்...

இவர்கள் இருவரும் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் இதற்கு முன்பு பாலக்காட்டில் உள்ள டவுன் காவல் நிலையத்தில் இருவர் மீதும் பெண்களை தவறான முறையில் ஈடுபடுத்துதல் போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

அனைத்து வழக்குகளும் வாபஸ் :

சபரிமலைக்குள் உள்நுழைந்த இரண்டு பெண்கள் மீது உள்ள அத்தனை வழக்குகளையும் கேரள அரசு நீக்கியுள்ளது தெரியவந்துள்ளது. பெண்கள் சபரிமலைக்குள் நுழைவதற்கு பலனாக பினராயி விஜயன் இதனை செய்திருக்கலாம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அமைதியாக இருந்த ஐயப்பன் ஆலயத்தை ஏன் இவ்வாறு போர்க்களமாக மாற்ற கம்யூனிஸ்டுகள் முயல்கிறார்கள் என்று தெரியவில்லை...

இறப்பைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி...


மூப்புளகா யந்தணிந்து
மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு
வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை
கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்

- சித்தர் தேரையர்

முதியவர்கள் இளமை நிறைந்தவர்கள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர்.

நெல்லிமுள்ளி, மருதம்பட்டை, கடல் அழிஞ்சில், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும்.

இதில் 40 கிராம் படிகார பற்பம் கலந்து வைத்துக் கொள்ளவும்.

இதில் இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) காலை- இரவு இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயும் கட்டுப்படும்.

சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது.

சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும்.

மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.

நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்...

காலப் போக்கில் அழிந்து போன எழுத்துக்கள்...


ஏற்கனவே சுமேரியர்களின் ஆப்பெழுத்து முறைகள் என்ற ஒன்றை பற்றி பதிவுபதிந்து இருந்தேன் அல்லவா..

அதே கட்டத்தில் அதற்கும் முன்பு அதாவது இயேசு பிறப்பதற்கு ஏறக்குறைய 8,000 வருடங்களுக்கு முன்பாக இருந்ததாக நம்பப்படும் ஒரு எழுத்து தான் Anatolian hieroglyphs என்ற எழுத்து முறை..

இது எழுத்தாக எழுதப்படாமல் பொருளாகவே இருந்தது [அதாவது மரத்தை செதுக்கி  வடிவமாக ஆக்கி அதை  எழுத்தாக உருவாக்குவது].

இதுவரைக்கும் 500 குறியீடுகளை கண்டு பிடித்துள்ளனர்.

எகிப்தின் படவரியுருக்கள் உலக பிரசித்தி பெற்றதாக ஆகிறது.

இந்த படம் என்ன சொல்கிறது. இது விமானத்தின் முன்னறிவிப்பு என்றெல்லாம் சொல்ல கூடிய நாம் கூட இந்த அனத்தோலியப் படவரியுருக்களை கண்டு கொள்வதே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

இது உருவான இடம் இன்றைய துருக்கி பகுதி என்று சொன்னாலும் சிரியாவில் கூட உருவாகி இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்..

Bronze Age என்று சொல்லக்கூடிய வெண்கல கால பகுதியில் பேசி இருக்க வேண்டும் என்று அனுமானமாக சொல்லுகிறார்கள்..

இந்த கால கட்டம் கி,மு 14 அல்லது 15 ம் நூற்றாண்டில் பேசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது..

புகைப்படத்தில் உள்ள ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு எழுத்தை குறிக்க கூடியது.

நமக்கு வெரும் படமாக இருந்தாலும் அவர்களுக்கு இது ஒவ்வொன்றும் ஒரு எழுத்து...

கார்ப்பரேட் கைகூலி அதிமுக அரசே பதில் சொல்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நம்பமுடியாத நிகழ்வு பண்டைய இந்து நாகரிகத்தில் ஒரு குறிப்பை விட்டுச்சென்றது. எண்ணற்ற பழங்கால நூல்கள், பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்தவர்களால் படைக்கப்பட்டது என்று பல ஆசிரியர்கள் நம்புகின்றனர்.

உலகெங்கிலும் பல பண்டைய நாகரிகங்கள் வரலாற்றில் நமக்குத் தெரிந்தவற்றை மறுபரிசீலனை செய்ய நிர்ப்பந்திக்கிற எண்ணற்ற பண்டைய கதைகள், நினைவுச் சின்னங்கள் மற்றும் பொருள்களின் வரலாற்றில் ஒரு அடையாளத்தை வைத்திருக்கையில், இந்த கேள்விக்கு பெரும்பாலான முக்கிய அறிஞர்களால் நம்பமுடியாத ஒரு பதில் கூறுகின்றனர்.!

சிலர் இந்த கணக்குகளை புராணங்களாகக் கதைகளாக குறிப்பிடுகின்றனர், சிலர் அதை நாட்டுப்புறமாகக் கதைகளாகவும் குறிப்பிடுகிறார்கள், ஆனால் உண்மை என்னவென்றால் உலகம் முழுவதிலுமுள்ள பண்டைய நாகரிகங்களை நம்பமுடியாத விஷயங்கள் எப்படி இருந்தன என்பதை சுட்டிக்காட்டிய எண்ணற்ற பண்டைய நூல்கள் உள்ளன, மேலும் அவை உண்மையில் நிகழ்ந்தவை என்று உறுதிப்படுத்துகின்றன.

இது போன்ற சம்பவங்களை உலகெங்கிலும் உள்ள பலர், கடந்த பத்தாண்டுகளில், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், மனிதர் அல்லாத ஒருவர்கள் பூமியில் விஜயம் செய்தனர், என்று ஒரு உயர்ந்த சந்தர்ப்பம் இருப்பதாக நம்புகிறார்கள். இன்றும்கூட அவர்கள் இன்னும் விஜயம் செய்கிறார்கள் என பலர் நம்புகின்றனர்.

மேலும் பூமியில் இன்று, வேற்றுகிரக பார்வையாளர்களின் சான்றுகள் எண்ணற்ற படங்கள், காணொளிகள், மற்றும் பதிவுகள் பொதுமக்களுக்கு கிடைக்கின்றன. எண்ணற்ற குற்றஞ்சாட்டப்பட்ட பறக்கும் தட்டு பார்வைகளின் படங்கள் உள்ளன. அவர்களில் சிலர் நமக்கு உண்மையானவர்களாக இருக்க முடியாது, ஆனால் அவர்களில் சிலர் உண்மையிலேயே உண்மையான உடன்படிக்கையுடன் கூட நம்மவர்களின் தொடர்பில் இருக்க முடியும்.

எனினும், பூர்வ மனிதர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திருந்ததை எப்படி பதிவு செய்ய வேண்டும்? 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் எங்காவது வாழ்ந்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள், நீங்கள் வானத்தை நோக்கிப் பார்த்து, இன்று ஒரு பறக்கும் தட்டு என அழைக்கப்படுவதைக் கண்டால். அந்த அனுபவத்தை எப்படி சிறந்த முறையில் ஆவணப்படுத்துவோமோ,
அது போலத்தான் உலகெங்கிலும் உள்ள பழங்கால நாகரிகங்கள் கலை, பெட்ரோகிளிஃப்ஸ், ஜியோகிளிஃப்ஸ், பாட்ரிடார்ட் மற்றும் எழுத்திலும் கூட ஆவணப்படுத்தி இருக்கலாம்.!

மகாபாரதத்தையும் ராமாயணத்தையும் நாம் பார்த்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உள்ள பூர்வ வேற்றுலக தொடர்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் பற்றிய சாத்தியமான எழுதப்பட்ட சான்றுகள் காணப்படுகின்றன. இவற்றை பண்டைய நூல்கள் நம்பமுடியாத தொழில்நுட்பங்களை ஆவணப்படுத்தும் கதைகள் நம் மத்தியில் சதை, இரத்தமாக கலந்துள்ளது..

மகாபாரதம் பண்டைய இந்தியாவின் இரண்டு பெரிய புராண இதிகாசங்களில் ஒன்றாகும், மற்றொன்று ராமாயணமாகும்.
18,000 பாகங்களாகவோ அல்லது எலியட் மற்றும் ஒடிஸி போன்ற இதிகாசங்களை எட்டு முறை இணைப்பதற்க்கு சமமாக இருக்கும் நூல். இது 100,000 வசனங்களை உள்ளடக்கியது. இந்த பண்டைய நூல்கள், ஒரு வரலாற்று கதை விட அதிகம் தான். இது உண்மைகள், புனைவுகள் கதைகள் மற்றும் தொன்மங்கள் ஆகியவற்றின் கலவையாகும்.

அந்த வரலாற்று நூல்களில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு பேரழிவு நிகழ்வின் கதையை நாம் படித்திருப்போம். பண்டைய வரலாற்றில் கூட வேறு எந்த வரலாற்றுக்கு ஒப்பிடமுடியாத இந்த நிகழ்வு, நவீன வரலாற்றை உலுக்கியக் கொண்டிருக்கும் அணு_குண்டுகள் பயன்பாடு நிகழ்வுதான்.

ஹூரோசீமியா மற்றும் நாகசாகியில் உள்ளதை விட மிக அதிகமான அணுக்கதிர் வீச்சு விகிதாச்சாரங்களைக் கொண்டிருக்கும் பெரிய அணுவில்லோகாஸ்டுகள் பற்றி மகாபாரத மற்றும் ராமாயண விளக்கங்கள் நிறைந்துள்ளன என வரலாற்றாசிரியரான கிசார் மோகன் கங்குலி கூறுகிறார்.

எனவே, அந்த பண்டைய உரை என்ன சொல்கிறது? ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியிலிருந்து வெளிவரும் ஒரு அணு நிகழ்வு என்பதை உண்மையில் நீங்கள் எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்?

"குர்கா, என்ற ஒரு விரைவான மற்றும் சக்தி வாய்ந்த பறக்கும் விமானம் , ஒரு ஏவுகணை வீசியது.

புகை மற்றும் சுடர் ஒரு ஒளிரும் பத்தியில், பத்து ஆயிரம் சூரியன் போல் பிரகாசமாக இருந்தது.

இது தெரியாத ஆயுதம், ஒரு இரும்பு இடி, மரணத்தின் மகத்தான தூதர்களால், சடலங்கள் எரிந்தன.

அவைகள் அடையாளம் காணக்கூடியதாக இல்லை. முடிகளும் நகங்களும் வீழ்ச்சியுற்றன; மட்பாண்டம் வெளிப்படையான காரணமின்றி உடைந்தது, பறவைகள் வெள்ளை நிறமாக மாறியது. ஒரு சில மணி நேரம் கழித்து அனைத்து உணவுப் பொருட்களும் பாதிக்கப்பட்டன. இந்த தீவிலிருந்து தப்பிக்க வீரர்கள் நீரோடைகள் தேடி ஓடி தங்களை மற்றும் அவர்களின் உபகரணங்களை சுத்தம் செய்யதனர். "

"சுடர் அடர்ந்த அம்புகள், ஒரு பெரிய மழை போல், எதிரிகளான கௌரவ புரவலன்கள் மீது ஒரு பெருத்த சோகம் விரைவாக முடிந்தது.

திசைகாட்டி அனைத்து புள்ளிகளும் இருளில் இருந்தன. கடுமையான காற்று வீச ஆரம்பித்தது மேகங்கள் மேல்நோக்கிச் சாய்ந்து, சரளைகள் மழை துளியானது. சூரியன் பரலோகத்தில் சூடாக தோன்றியது
பூமி அதிர்ந்தது, இந்த ஆயுதத்தின் கொடூரமான வன்முறை வெப்பத்தால் உமிழ்ந்தது.

மேலே உள்ள உரை ஒரு வன்முறை மற்றும் கொடூரமான சம்பவத்தை விவரிப்பதாக, பல வரலாற்று ஆசிரியர்கள் வாதிடுகின்றனர், ( அன்பே உருவான கடவுள்கள். தங்கள் படைப்பினங்களை இவ்வளவு வன்முறையாக அழித்திருப்பார்களா?? ) பூமியில் வெடிக்கும் ஒரு அணு குண்டுடன் இதனை ஒப்பிடலாம். இருப்பினும், இந்த பேரழிவை கடவுள் தொடுத்ததாகவும் மற்றும் கௌரவர்கள் இதில் அழிந்ததாகவும் தெரியவில்லை. சதி ஆலோசனை ஆய்வாளர்கள் கருத்துப்படி, அங்கு உள்ள சான்றுகள். 1992 இல் கண்டுபிடிக்கப்பட்டது, ஆராய்ச்சியாளர்கள் சுமார் 8 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கும் கதிரியக்க சாம்பல் ஒரு அடுக்கு ஜோத்பூர் மேற்கு, பகுதியில் 16 கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. கதிர்வீச்சு மிகவும் ஆழ்ந்ததாக கூறப்படுகிறது, அது இன்றும் இப்பகுதியை மாசுபடுத்துகிறது.

அந்த இடமானது ஹரப்பா (Harappa) மற்றும் மொகஞ்சதாரோ (Mohenjo-Daro ) பண்டைய தொல்பொருள் தளங்கள் என கருதப்படுகிறது-அங்கு, நிபுணர்கள் திடீரென்று, மிகவும் அழிவுகரமான நிகழ்வு அங்கு ஏற்பட்டது போல கிட்டத்தட்ட முழுவதும் சிதறி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றும் சிதறிய எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது, முழு நகரங்களில் பேரழிவு.

"(இது ஒரு ஆயுதம்) மிகவும் சக்தி வாய்ந்தது அது பூமியை ஒரு உடனடி-
புகை நெருப்பு மற்றும் ஒரு பெரிய ஒலியில், மரணமாக அமைந்துள்ளது... "- ராமாயண

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு உண்மையில் இந்த வாழ்ந்த நாகரீஙங்களுக்கு என்ன நடந்தது?
மகாபாரதத்தையும் ராமாயணத்தையும் உண்மையில் அணு ஆயுதங்களை விவரிக்கிறதா? அப்படியானால் இந்த ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன? யார் அந்த கடவுள்கள்.?

12,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கடவுள்களாலே இந்த நாகரீகம் சிதைவு கண்டதாக சதிக்கோட்பாடுகள் கூறுகின்றது...

அறிவும், பேராசையும்,...


அன்று  அரசர்கள்   = போர் வீரர்கள்      = மக்கள்...

இன்று கார்ப்பரேட் = அரசியல் வாதிகள் = மக்கள்...

நாளை =?

இரண்டிலும்  மக்கள் தான் முட்டாள் செய்ய பட்டனர்...

இனிமேலும் செய்யப்படுவார்கள்..

அனைத்துக்கும் காரணம் : அறிவும், பேராசையும்...

இங்கே மனிதனின் மனம் மாறும் வரை இங்கே ஏதும் மாறாது...

இயற்கை...


ஏமாற்றுவார்கள் இருக்கும் வரை
ஏமாற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது...

ஏமாற்றங்கள் மட்டுமே இங்கு நிலை கொள்கிறது நிழலாக...

இயற்கையை ஏமாற்ற முடியாது ஆறறிவு மனிதனால்...

நிலவின் உண்மைகள்...