26/03/2018
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு...
இன்று பல நாடுகள் செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்து விடுகிறது.
3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம் போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது.
எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.
ஆம்.. எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி - திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேசுவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ?
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலக்கதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சியின் போது இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.
விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில் தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது.
இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.
மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.
இன்று வரை விண்ணில் செயற்கை கோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் போது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.
இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டாயம் பிரமிக்க வேண்டும்.
நாம் பல செயற்கை கோள்கள் கொண்டு கண்டறியும் சனிக்கோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீச்சுகள் அதில் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.
இதை மிஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.
நீங்கள் ஏதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவக்கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின் மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்..
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டி விடுங்கள்...
எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டி வைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து.
இந்த அறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறிய வேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்தது தான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...
எது எப்படியோ? நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள். எப்படியா?
அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு...
கவலை இன்றி, மகிழ்ச்சியுடன் வாழ வழிகள்...
1. Take a 10-30 minute walk every day. And while you walk, smile. It is the ultimate anti-depressant.
தினமும் 10 முதல் 30 நிமிடங்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதுவும் புன்னகையோடு! இவை இரண்டும் சிறந்த மனச்சோர்வு நீக்கும் மருந்துகள்..
2. Sit in silence for at least 10 minutes each day.
தினமும் 10 நிமிடம் அமைதியாக உட்காருங்கள்..
3. When you wake up in the morning complete the following statement, My purpose is to ______ today.
காலையில் கண் விழிக்கும் போது, இன்று நான் ………. இதைச் செய்து முடிப்பேன் என்று உறுதி கொள்ளுங்கள்..
4. Live with the 3 E’s — Energy, Enthusiasm and Empathy.
ஆற்றல், ஆர்வம், கருணை இவை மூன்றையும் கைக்கொள்ளுங்கள்.
5. Plan to read at least one book every month .
மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
6. Make time to practice meditation or prayer. They provide us with daily fuel and a mental center to focus on in our busy lives.
கடவுள் வழிபாட்டுக்கும், தியானத்திற்கும் நேரம் ஒதுக்குங்கள். நம் பரபரப்பான வாழ்க்கைப் பயணத்தில் மன ஒருமைப்பாட்டை வளர்க்க இவை உதவும்.
7. Spend more time with people over the age of 70 and under the age of 6.
6. வயதுக்குக் குறைவான குழந்தைகளிடமும், 70 வயதிற்கு அதிகமான முதியோரிடமும் அதிக நேரம் செலவழியுங்கள்.
8. Dream more while you are awake.
விழித்திருக்கும் போது நிறைய கனவு காணுங்கள்.
9. Try to eat more foods that grow on trees and plants and eat less food that is manufactured in plants.
தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உணவுகளை விட இயற்கையாக மரம், செடிகளில் விளையும் உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.
10. Drink green tea and plenty of water.
அதிகமாக தண்ணீர் மற்றும் மூலிகைத் தேயிலை அருந்துங்கள்.
11. Try to make at least three people smile each day with your humor sense..
உங்கள் நகைச்சுவை உணர்வால், தினம் ஒருவரையாவது சிரிக்க வையுங்கள்.
12. Clear clutter from your house, your car, your desk and let new and flowing energy into your life .
கன்னா பின்னாவென்று கிடக்கும் உங்கள் வீடு, கார், மேசை ஆகியவற்றை ஒழுங்காக வைத்துக் கொள்ளுங்கள்.
13. Don’t waste your precious energy on gossip, OR issues of the past, negative thoughts or things you cannot control. Instead invest your energy in the positive aspects of the moment.
தேவையில்லாத கிசு கிசுக்கள், மொக்கைகள், எதிர்மறை சிந்தனைகள், உங்களால் கட்டுப்படுத்த இயலாத நிகழ்வுகள் இவற்றில் உங்கள் பொன்னான நேரத்தினை வீணாக்காதீர்கள். நேர்மறை சிந்தனைகளில் உங்கள் நேரத்தை முதலீடு செய்யுங்கள்.
14. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class, but the lessons you learn will last a lifetime.
வாழ்க்கைப் பாடத்தில் பிரச்சினைகள் ஏற்படுவது சகஜம்… அதை மறந்து விடுங்கள். ஆனால் அது கற்றுத்தந்த படிப்பினையை ஒரு நாளும் மறவாதீர்கள்.
15. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a college going girl .
காலை உணவை ராஜா போலவும், மதிய உணவை ராணி போலவும், இரவு உணவை கல்லூரி மாணவி போலவும் உண்ணுங்கள்.
16. Smile and laugh more. It will keep the negative blues away.
எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருங்கள்.
17. Life isn’t fair, but it’s still good.
வாழ்க்கை எப்போதும் நியாயமானதல்ல எனினும் சிறந்தது.
18. Life is too short to waste time hating anyone.
வாழ்க்கை மிகவும் குறுகியது. மற்றவர்களை வெறுப்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள்...
மரமும் மனிதனும் - இலுப்பை மரம்...
மரச் சாமான்கள் செய்ய மற்றும் எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய மரங்களைப் பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதோடு வாழ்க்கைக்குப் பயனுள்ள பொருட்களைத் தரும் மரங்களையும் கண்டிப்பாக நாம் வளர்க்க வேண்டும். அந்த வகையில் ஒரு முக்கியமான மரம் இலுப்பை. பண்டைத் தமிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன அற்புதமான மரம் இது.
பொதுவாக ஆல், அரசு போன்ற பால் வடியும் மரங்களுக்கு மழை மேகங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. அந்த வகையைச் சேர்ந்ததுதான் இலுப்பையும். அதனால்தான் இத்தகைய மரங்களை நம் முன்னோர்கள் அதிகளவில் வளர்த்து வந்தார்கள்.
மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பு இலுப்பை எண்ணெய் மூலம்தான் விளக்கு எரித்தார்கள். உலர வைத்த இலுப்பைப் பூவை சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்தினர். ஆனால், இவ்வளவு சிறப்பு வாய்ந்த இலுப்பை மரங்கள், தற்போது வழக்கொழிந்து கொண்டு வருவதுதான் வேதனை.
பஞ்சத்தைப் போக்கிய பூ..
இலுப்பை மரத்தையும் ஒரு பணப்பயிராகவே பார்க்கலாம். அந்தளவுக்கு வணிகரீதியாகவும் பலன் தரக்கூடியது. இந்த மரத்தினுடைய பூ, விதை, இலை அனைத்தும் மருந்துப் பொருட்களாகவும் பயன்படுகின்றன. இலுப்பைப் பூவில் இருந்து தயாரிக்கப்படும் ‘மதுகா’ என்னும் மதுபானத்தை பீகார், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் விரும்பிப் பருகுகிறார்கள். அதோடு உணவுப் பொருளாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். 1873-ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் நிலவிய பஞ்சத்தின்போது ஆயிரக்கணக்கான மக்கள் இலுப்பைப் பூவை மட்டுமே உண்டு வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள்.
உலர்ந்தப் பூவில் 74% சர்க்கரை இருக்கிறது. இதிலிருந்து ஜாம், ஜெல்லி போன்றவற்றையும் தயாரிக்கலாம். இலுப்பை விதையில் 52% எண்ணெய் உள்ளது. முன்பு இந்த எண்ணெயைத்தான் சமையலுக்கும் பயன்படுத்தினார்கள். எண்ணெய் எடுத்த பிறகு, கிடைக்கும் பிண்ணாக்கைத் தலைக்குத் தேய்க்கும் ஷாம்பூவாகப் (அரப்பு) பயன்படுத்தினார்கள். தற்போதும் இந்தப் பிண்ணாக்கை ஷாம்பூ நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. தாய்ப்பால் சுரக்காத பெண்கள், இலுப்பை இலையை மார்பில் கட்டிக் கொண்டால் பால் சுரக்கும். இலையில் இருந்து தயாரிக்கப்படும் களிம்பு, தீப்புண், வெட்டுக்காயங்களைக் குணப்படுத்தும் தன்மையுடையது.
இனி, இலுப்பை மரங்களை நட்டு வளர்க்கும் முறைகளைப் பற்றி பார்ப்போம்.
நேரடி நடவே சிறந்தது..
காட்டு இலுப்பை, நாட்டு இலுப்பை என இரண்டு வகைகள் உள்ளன. காட்டு இலுப்பையில் இலை பெரிதாக இருக்கும். இவை பெரும்பாலும் வட இந்தியாவில்தான் பயிரிடப்படுகின்றன. தென்னிந்தியாவுக்கு நாட்டு இலுப்பைதான் ஏற்றது. இது, வெப்ப மண்டலப் பயிராகும். ஆண்டுக்கு 750 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்யும் இடங்களில் வளரக்கூடியது. மணல்சாரி நிலங்கள் மிகவும் உகந்தவை. பெரிய, பெரிய கற்கள் உள்ள நிலங்கள், களிமண் மற்றும் சுண்ணாம்பு நிலங்களிலும்கூட வளரும்.
இதை நேரடியாக நடுவது, நாற்று மூலம் நடுவது, குச்சிகள் (போத்து) மூலம் நடுவது என மூன்று வழிகளில் நடலாம். நீண்ட மென்மையான ஆணிவேரைக் கொண்டு இருப்பதால் நேரடியாக நடுவதுதான் சிறந்த முறை. மரங்களில் இருந்து உதிரும் பழங்களில் சதையை நீக்கி, விதையைப் பிரித்து, உடனே விதைத்துவிட வேண்டும். தாமதித்தால், முளைப்புத் திறன் குறையும். ஒரு கிலோவுக்கு சுமார் 450 விதைகள் கிடைக்கும்.
இலுப்பையின் வேர்கள் மண்ணுக்கு மேற்புரமாக படரும் தன்மையுடையவை என்பதால், கன்றைச் சுற்றி களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நடவு செய்த 8 முதல் 10 ஆண்டுகளில் மரங்கள் மூலமாக பலன் கிடைக்கத் தொடங்கும். இலுப்பைப் பூக்களை காய வைத்து, மூலிகைகளைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகளிடம் விற்கலாம்.
இம்மரங்களில் காய்க்கும் பழங்களை சாப்பிடுவதற்காக ஏராளமான பறவைகள் மரங்களில் தங்க வாய்ப்புகள் உள்ளன. அதனால், விவசாய நிலங்களில் ஆங்காங்கு இவற்றை நட்டு வைத்தால், பூச்சிகளை இயற்கையாகவே கட்டுப்படுத்த முடியும்.
நிலங்கள் என்றில்லாமல், சாலையோரங்கள், வரப்புகள், வாரிப்புறம்போக்கு, மேய்ச்சல் நிலங்கள், பாறைகள் அடர்ந்த சாகுபடிக்கு லாயக்கற்ற தரிசுகள்... என அனைத்து இடங்களிலும் இவற்றை வளர்க்கலாம். அதன் மூலம் இயற்கை எண்ணெய் தொழிலையும் இலுப்பைப் பூக்களைப் பயன்படுத்தி ‘சிரப்’ தயாரிக்கும் தொழிலையும் வளர்க்க முடியும். அதோடு மழையையும் பெற்று நிலத்தடி நீரையும் உயர்த்தலாம்...
நண்பர்களே ஒரு முக்கிய அறிவிப்பு : கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் எனது தம்பி கூறிய வார்த்தை என்னை சிந்திக்க வைத்தது... அது என்னது?
இந்த வருடம் எப்போதும் இல்லாத அளவுக்கு கொஸ்டீனை டஃப் செய்துள்ளார்களாம்.
பரீட்சை எழுதவே கடினமான கேள்விகளை தேர்ந்தெடுத்துள்ளனர்.
என்று கூறினார்...
காரணம் மாணவர்கள் தான் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று அரசை கதிகலங்க வைக்கின்றார்கள்
அதனால்தான் இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தேர்வில் கை வைத்துள்ளது என்றார். ...
யூடியூபில் முகநூலில் அரசை எதிர்த்து பேசுவது நமது மாணவர்கள் தான்.
சரி விஷயத்திற்கு வருவோம்
உண்மையில் அரசு என்ற பொரம்போக்கு கூட்டம் பயப்படுவது மாணவர்களிடம் தான். .
எதிர்கட்சியாக செயல்படுவது மாணவர்கள் இளைஞர்கள் தான்.
அவர்களுக்கு சட்டசபை கிடைக்கவில்லை என்றால் என்ன ?
அதற்கு பதிலாக முகநூல் இருக்கிறதே முகநூலில் கிழிக்கும் கிழி அவர்களை ஒன்றும் செய்யவிடாமல்
தடுமாறுகிறார்கள்....
மாணவர்கள் இளைஞர்கள் என்றாலே சினிமா, போதை, காதல், என்ற கருத்தை உடைத்து அரசியல்வாதிகளின் துரோகத்தை ஒரு படி மேலே சென்று நீங்கள் எல்லாம் ம****கு சமம் என்றே தெளிவாக கூறுகின்றனர்....
இது ஒன்றும் பெரிய பாரதூரமான விஷயம் அல்ல இவர்கள் ஒன்றும் மகாத்மாவும் அல்ல.
பின்னாடி வந்து முதுகில் குத்தும் பயல்கள் இந்த அரசியல்வாதிகள் .
இதை மெரினா புரட்சியின் கடைசி நாட்களில் கண்டுக்கொண்டோம்...
தற்சமயம் தெளிவாக தெரிகிறது.
இவர்கள் ஏதாவது அரசியல் கட்சியாக இருந்தாலும் கூட பணத்தை கொடுத்து அடிமையாக ஆக்கலாம் இவர்கள் இளைஞர்கள் ஆயிற்றே எப்படி சமாளிப்பது என்று..
அவசரக்கூட்டம் நடத்தவும்
வாய்ப்பு உண்டு...
இளைஞர்களே மாணவர்களே எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் கடமை இதுவே..
எழுந்து வா,
சிந்தனையாள் திருப்பி அடி.
எழு கேள்வி கேள்.
படிப்பிற்கு மதிப்பில்லாமல் படித்தவனை
அதற்கான ஊதியம் வழங்க துப்பு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது இந்த அடிமை அரசு,
இதற்கு பின்னால் ஒரு கூட்டம் சாராயத்துக்கு சுற்றிக்கொண்டே கிடக்கும் அதற்கு கவலைப்படாதே
மலத்தை கூட ஈக்கள் சுத்தும்.
அப்படி கடந்துவிட்டு செல்.
அர்ஜுன் சம்பத் என்ற அரசியல் வாதியின் பேச்சை கேட்க நேரிட்டது.
அதில் என்னங்க இது நாடு ஒரு அனுவுலைக்கு ஆதரவு இல்ல மீத்தேனுக்கு எதிர்பு இப்படியே போனால் எதை சாப்பிடுவது எரிவாயு இல்லாமல் எப்படி சாப்பிடுவது என்று அறிவாளித்தனமாக கேள்வி கேட்கிறான்
அடேய் முட்டாளே மீத்தேனுக்கு அனுமதி கொடுத்து எரிவாயுவையா சாப்பிட போகிறாய்?
அதற்கு நெல் சாகுபடி செய்யனுமே நீ விவசாய நிலங்களில் தானே மீத்தேன எடுக்கனும் என்று கூப்பாடு
போடுகிறாயே
இப்படி அறிவற்றவர்களின் பேச்சுக்கு செருப்படி இங்கே முகநூலில் தான் கொடுக்கப்படுகிறது.
ஆகவே முகநூலில் தமிழகத்தை காப்பாற்ற நாமே களத்தில் இறங்க வேண்டும். .
போராட்டத்தில் ஈடுபடுங்கள் முடியாதவர்கள் முகநூலில் போராடுங்கள்.
நடிகையின் நாய்குட்டியை நக்கும் ஊடகங்களை கண்டுக்கொள்ள
வேண்டாம். .
நாம் முகநூலில் பதியப்படும் எழுத்துக்கள் தான் வேறு வழியில்லாமல் நாளை ஊடகங்களால் தலைப்பு செய்தியாக உருவாகும் உருவாக்கப்படும். ..
நான் அரசு அரசு என்பது மாநில அரசை மட்டுமல்ல
மிஸஸ் ஸ்ரீ சேனாவை
MRS ஸ்ரீ சேனா என்று அயல்நாட்டில் அவமானப்பட்டு வந்த
மோடி வகையறாக்களையும் சாரும். ..
சிந்தையுள்ள பாஜாக காரன் கோபப்பட மாட்டார்கள்.
சிந்தையுள்ள அதிமுகவினர் கோபப்பட மாட்டார்கள்.
அவர்களும் அவர்கள் சந்ததியை நலமுடன் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால். .
பகிர்வு அவசியம் என்று பட்டால் பதிவை பகிரங்கப்படுத்தங்கள் ..
பதிவு - களவியற் காரிகை...
மானங்கெட்ட நியூஸ்7 தொலைக்காட்சியே... பொறுப்பும் பொதுநலனும் எங்கே டா?
பத்திரிக்கை சுதந்திரம் இல்லையா இன்னும் உங்களுக்கு.?
உங்கள் உரிமைக்கும் போராட வேண்டுமா?
இல்லை சுதந்திரமாக இருப்பீர்கள் என்றால் மக்களின் போராட்டம் பற்றிய பதிவு எங்கே?
இன்று கட்சி போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்யும் நீங்கள்.. நேற்று ஒளிபரப்ப தவறியது ஏன்?
மக்களுக்கான ஊடகமாக செயல்படும் நேரம் எப்போ வரும் ?
செய்திதாள், வார, மாத நாளிதழ் வாங்குவதை தவிருங்கள் தமிழர்களே...
நமது பணத்தில் தின்று கொழுத்து, நம்மை பற்றி அக்கறை இல்லாது கூத்தாடி, அரசியல்வாதி, கார்பரேட்டுகளின் குண்டியை நக்கி பிழைக்கும் ஊடகங்களை புறக்கணியுங்கள்.
உண்மை செய்திகளை தெரிந்து கொள்ள முகநூல் பக்களில் இணைந்து இருங்கள்.
விபச்சார ஊடகங்களை விரட்டி அடிப்போம்.
இந்த செய்தியை பகிர்ந்து அனைவரிடமும் கொண்டு சேருங்கள்...
உடலுக்கு வெளியில் தொங்கும் குடல் - பாஜக ஆட்சியில் நிதியுதவி மறுக்கப்பட்ட இராணுவ வீரர்...
பணியில் இருந்த போது நடத்தப்பட்ட தாக்குதலில் குடல் வயிற்றுக்கு வெளியில் வந்த இராணுவ வீரருக்கு தகுந்த நிதியுதவி வழங்கப்படாமல், மறுக்கப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசம் மொரேனா பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் தோமர். இவர் மத்திய ரிசர்வ் போலிஸ் படையில் கமாண்டோவாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு சண்டிகர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 11 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின் போது அங்கு பணியில் இருந்த தோமரின் வயிற்றில் ஏழு குண்டுகள் பாய்ந்தன. வயிற்றில் இருந்த குண்டுகள் வெளியில் எடுக்கப்பட்டாலும், தோமரின் வயிற்றுக்கு வெளியே தொங்கிக்கொண்டிருக்கும் பெருங்குடல் பாலிதீன் கவரால் கட்டப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகிறார்.
தனக்கு நிதியுதவி கிடைத்தாலும் அது போதுமானதாக இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் தன் தொகுதி நிதியில் இருந்து ரூ.5 லட்சம் தருவதாக கூறியிருந்தாலும், அது எனக்கு இன்னமும் கிடைக்கவில்லை. எனது ஒரு கண்ணில் பார்வை பறிபோய்விட்டது. நாட்டுக்காக 16 ஆண்டுகள் சேவை செய்த எனக்கே இந்த நிலைமை என்றால் என்ன செய்வது என தோமர் வேதனை தெரிவித்துள்ளார்...
வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை ஏன் விரட்டப்பட வேண்டும்?
அனில் அகர்வால் என்ற லண்டனில் குடியேறிய இந்தியரின் 'வேதாந்தா' தொழிற்சாலைக்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் வேதாந்தாவின் தாமிர உருக்கு ஆலை அமைக்க முயன்று, தோற்றுப் போய் பின்னர் மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் 12.12.1989இல் அடிக்கல் நாட்டப்பட்டது. அங்கு விவசாயிகள் கிளர்ந்து எழுந்து போராடியதால், அம்மாநில முதல்வர் சரத்பவார் ஆலை அமைக்க அனுமதி மறுத்து 1.5.1994இல் கட்டுமானப் பணிக்குத் தடை விதித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் 30.10.1994 அன்று ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைக்க அனுமதித்து, கட்டுமானப் பணிக்கு அடிக்கல்லும் நாட்டினார். அதனால் 18.3.1996 அன்று தூத்துக்குடி வந்த ஜெயலலிதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கருப்பு நாளாக அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்துக்கு தாமிரத் தாது கொண்டு வந்த எம்.வி.ரீசா என்ற கப்பல் 20.3.1996 அன்று ஆழ்கடலில் தடுத்து மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்டது. கப்பல் கொச்சிக்கு சென்றது. 78 விசைப்படகுகள், 24 நாட்டுப்படகுகள் கொண்ட சுமார் 500 பேர் கொண்ட சிறிய மீனவர் படைதான் இதனை செய்தது.
பின்னர் 10.4.1996 முதல் இரு பெண்கள் உள்ளிட்ட 16 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர். அரசின் சார்பில் 18.4.1996 முதல் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகள் குழாய்கள் மூலம் கடலில் கலக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டது.
மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து 1996 இல் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பரதவர், நாடார் இடையே திட்டமிட்ட சாதி மோதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பள்ளர், தேவர் இடையே சாதி மோதல்கள் வீரியமானது. இதன் பிண்ணனியில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்தன.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் என்ற - தமிழ்மாந்தன் தலைமையிலான - அமல்ராஜ் என்ற இறையரசு, ராஜேஸ் என்ற கடலரசன், செ.ரெ.வெனி இளங்குமரன், சி.சற்குணம், ம.சான்சன், ம.அன்வர், முத்துராஜ், அ.அருள்ராஜ் ஆகியோரைக் கொண்ட அமைப்பு 20.7.1996 அன்று நடத்திய ஸ்டெர்லைட் மாநாட்டில் திரளான மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
சாதியின் பெயரால் பிரிந்து கிடந்த மக்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி கொச்சியில் இருந்து லாரிகள் மூலம் தாமிரத் தாதுக்கள் கொண்டு வரப்பட்டதோடு, 19.10.1996 இல் எம்.வி.பரங்கவி என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு நேரிடையாகவே தாமிரத்தாதுவை சுமந்து வந்து சேர்ந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுகத் தொழிற்சங்கத் தலைவர் சி.பசுபதிபாண்டியன் தலைமையிலான தொழிலாளர்கள் 20.10.1996 முதல் துறைமுகத்தில் சரக்குகளை இறக்க மறுத்துப் போராடினர். 152 விசைப்படகுகள், 36 நாட்டுப் படகுகளில் ஒன்று திரண்ட மீனவர்கள் 24.10.1996 இல் அக்கப்பலை முற்றுகையிட்டு துறைமுகத்தை விட்டே வெளியேற்றினர்.
இதற்கிடையில் 1996 இறுதியில் தமிழக முதல்வரான கருணாநிதி அனுமதி கொடுத்ததால் 1997 முதல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்தது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தடை இல்லா சான்றிதழை 1.8.1994ல் இரு கட்டுப்பாடுகளோடு கொடுத்தது. மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும். தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் உருவாக்க வேண்டும். ஆனால் ஆலை 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பசுமை வளையம் குறிப்பிட்ட அளவில் அமைக்கவில்லை.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லாச் சான்று இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
14.10.1996ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 40,000 டன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. ஆனால் ஸ்டெர்லைட் தொழிற் சாலையில் 1,70,000 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக ‘தூய சுற்றுச் சூழலுக்கான தேசிய அறக் கட்டளை’ என்ற அமைப்பின் வழக்குரைஞர் வி.பிரகாஷ் 7.11.1996 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.எம். கனகராஜ், சி.பி.ஐ.அப்பாத்துரை உள்ளிட்டோர் தங்களையும் இணைத்துக் கொண்டனர்.
இதற்கிடையில் 5.7.1997 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவால் அருகிலுள்ள ரமேஷ் பிளவர்ஸ் நிறுவனத்தில் 165 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அதில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அடுத்து 2.3.1999 அன்று அகில இந்திய வானொலி நிலையப் பணியாளர்கள் 11 பேர் ஸ்டெர்லைட் நச்சு வாயுக் கசிவால் மயங்கி விழுந்தனர்.
நீதிமன்ற வழிகாட்டுதலின்படி டாக்டர் கண்ணா தலைமையில் நீரி அமைப்பினர் 1998 இல் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்தனர். அதனடிப்படையில் நடந்த விவாதத்தின் முடிவாக 23.11.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் லிபரான், பத்மநாபன் குழு உத்தரவிட்டது. அதன் பின்னர் நீதியரசர் அகர்வால் தலைமையிலான அமர்விற்கு வழக்கு மாற்றப்பட்டு 25.12.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நாக்பூர் நீரி நிறுவனம், 1998-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நச்சு ஆலை சுற்றுப்புறச் சூழலுக்கும், நிலம், நீர், காற்று மண்டலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வு அறிக்கை தந்து இருந்தது. 1999-ஆம் ஆண்டில் பல்டியடித்த நீரி நிறுவனம், 2003-ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆய்வு அறிக்கை தந்தது.
இதற்கு காரணம் 1998 நவம்பர் அறிக்கைக்கு பின்னர் 1.22 கோடி ரூபாய் நீரி அமைப்பில் உள்ள அறிவியலாளர்களுக்கு ஆலோசனைக் கட்டணமாக ஸ்டெர்லைட் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்கப்பட்ட விதிப்படி ஆண்டுக்கு 1,36,850 டன்னை மட்டுமே இந்த ஆலை உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால், 2003 டிசம்பரில் வேதாந்தா குழுமம் லண்டன் பங்குச் சந்தையில் தனது குழும நிறுவனங்களை பட்டியலிட்டபோது ஆண்டுக்கு 1,80,000 டன் உற்பத்தி செய்வதாக தெரிவித்தனர். இது விதியை மீறிய செயல் ஆகும்.
21.9.2004 இல் முனைவர் தியாகராசன் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆய்வுக் குழு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஆய்வு செய்தது. அப்போது அனைத்து விதிகளும் மீறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது உள்ள உற்பத்தி திறனுக்கு ஏற்ற அளவு கழிவுகளை சுத்திகரிக்கவும், பராமரிக்கவும் தேவையான கட்டமைப்பு இந்த ஆலையில் இல்லை. ஆதலால் இந்த ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் இசைவு அளிக்கக்கூடாது என்றும், முன்னரே இசைவு அளித்திருப்பின் அதை திரும்பப் பெறுமாறும் உச்ச நீதிமன்றத்தின் குழு அறிவுறுத்தியது. ஆனால், மறுநாளே 22.9.2004 மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது.
2004 நவம்பரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் உரிமம் அளிக்கப்பட்டுள்ள 70,000 டன்கள் ஆனோடை விட அதிகமாக, அதாவது 1,64,236 டன்கள் ஆனோடை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்துள்ளது.
இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.
ஆனால், 2005 இல் உச்சநீதிமன்ற ஆய்வுக் குழு இதனையெல்லாம் குறைத்து மதிப்பிட்டு அறிக்கை தயார் செய்தது.
அனுமதியின்றி கட்டப்பட்ட கந்தக அமிலப் பிரிவு தனது உற்பத்தியை 2005 இல் துவக்கியது. அனுமதி அளிக்கப்பட்ட 3,71,000 டன் கந்தக அமில உற்பத்தியைவிட அதிகமாக 5,46,647 டன் கந்தக அமிலம் 2004 ஏப்ரல்- 2005 மார்ச் வரை உற்பத்தி செய்யப்பட்டது. இது உரிமம் வழங்கப்பட்டதை விட 47% அதிகம்.
உச்சநீதிமன்றத்தின் முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட பகுதிகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆலோசனை கூறியது.
7.4.2005 இல் சுற்றுச்சூழல் அமைச்சக தலைமை இயக்குநரான முனைவர் இந்திராணி சந்திரசேகர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, "உச்ச நீதிமன்ற குழுவின் பரிந்துரைப்படி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுக்கலாம்” என்று ஆணை பிறப்பித்தார். அதன்படி, 19.4.2005 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான முனைவர் கிரிஜா வைத்தியநாதன் விதிமுறையை மீறி கட்டப் பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் புதிய பிரிவுகளுக்கு அனுமதி அளித்தார்.
பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டு வந்த நிலையில் 24.7.2010 அன்று ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜன் ரூ.750 கோடி வரிஏய்ப்பு செய்ததாக கைது செய்யப்பட்டார். அப்போது மீண்டும் துவங்கிய போராட்டம் மனித உரிமை பாதுகாப்பு மையம், நாம் தமிழர் அமைப்பு உள்ளிட்ட வழக்குரைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வரதராஜன் நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டார்.
மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல், பேரா.பாத்திமா பாபு முன்னிலையில் தாமிரபரணி பாதுகாப்பு பேரவையின் அமைப்பாளர் நயினார் குலசேகரன் தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் 26.7.2010 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் 28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட ஆணை பிறப்பித்தது.
இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், வழக்கை நடத்தாமல் வேதாந்தா குழுமம் இழுத்தடித்தது. 2012 இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்றன.
தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது சல்பர் டை ஆக்சைடுடன், ஆர்சின் போன்ற வாயுக்களும் வெளியிடப்படுகின்றன. 2000 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 4 கிலோ சல்பர் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. 20 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 0.1 கிலோ துகள்கள் வெளியிடப்படுகின்றன. இவை காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தாமிரம் உற்பத்தியின்போது வெளியிடப்படும் கழிவுநீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் உள்ளன. இவை நீரை நேரடியாக மாசுபடுத்துகின்றன. இந்த உலோகங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. திடக்கழிவுகளில் 0.5-0.7 கிலோ வரை தாமிரம் உள்ளது, ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. இவை நல்ல நிலங்களில் கொட்டப்படுகின்றன. அதனால் நிலம் பாழாகிறது.
அமெரிக்காவில் வசிக்கும் உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆய்வாளார், டாக்டர் மார்க் செர்னைக் என்பவர், ஸ்டெர்லைட் வளாகத்திலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களிலும் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர், ஸ்டெர்லைட் கழிவுகள் இவற்றின் மாதிரிகளை, சோதனைச் சாலையில் ஆய்வு செய்து தந்த ஆய்வு அறிக்கையில், ”மண்ணும், நீரும் நச்சுத் தன்மை வாய்ந்த உலோகங்களின் தாக்கம் கொண்டு இருப்பதாகவும், கால்நடைகள் செத்துப்போகும், மனிதர்கள் புற்று நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவார்கள், மனிதர்கள் ஆயுட்காலம் இவற்றால் குறையும்” என்று பல்வேறு புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்தான், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2013 மார்ச் 23 அதிகாலையில் வெளியேறிய கந்தக டை ஆக்சைடு வாயு, காற்று மண்டலத்தில் கலந்து, தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். கதிர்வீச்சு கலந்து இருந்த இந்த நச்சுக் காற்றால், பனித்துளிகள் படர்ந்து இருந்த செடிகள்,மரங்களின் இலைகளும், பூக்களும், நிறம் மாறி, கருகி உதிர்ந்தன.
அதே நாளில் ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே மயக்கமடைந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் மேத்தா என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை விபத்திற்கான பொறுப்பை ஏற்று, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் 1997 மற்றும் 1998 இரு ஆண்டுகளில் மட்டும் நான்கு முறை மொத்தம் ஒன்பது லட்சத்து நாற்பதாயிரம் அபராதம் கட்டியுள்ளனர்.
1994 முதல், 2004 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமுற்று உள்ளனர். 13 பேர் இறந்து உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் மர்மமாக இறந்துள்ளனர்.
அமெரிக்காவில், 1890 ஆம் ஆண்டு, வாஷிங்டனுக்கு அருகில் அமைக்கப்பட்ட அசார்கோ (Asarco) எனும் தாமிர ஆலை, மக்கள் எதிர்ப்பால், 1984 இல் மூடப்பட்டது. கொள்ளை இலாபம் இந்த ஆலையில் கிடைக்கிறது என்பதால், அமெரிக்காவிலும், சிலியிலும் பயனற்றது என்று தூக்கி எறியப்பட்ட பழைய இயந்திரங்களையும், 70 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய தொழில்நுட்பத்தையும் கொண்டு, தமிழ்நாட்டில் இந்த ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணியில் இருந்து முறைகேடாக, திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலை குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகம் சிகிச்சை பெறுவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம்தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கின்றது.
தூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து வருவதற்கு காரணகர்த்தாவாக ஸ்டெர்லைட் தொழிற்சாலைதான் உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையின் ஸ்லாக் எனப்படும் கருப்பு கழிவுகள், வெள்ளைநிற ஜிப்சம் ஆகிய கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு வருவதோடு, கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைத்து வருவது, கிராமங்களில் கொட்டுவது, நீர் நிலைகளில் கொட்டுவது என்று சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை. இந்தக் கழிவுகளால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.
தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் அதைச் சார்ந்த அ.குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடிநீர் விஷ நீராக மாறிவிட்டது. இதுகுறித்து மஞ்சள் நீர் காயலில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சான்றிதழ் மூலம் தெரியபடுத்தியுள்ளது.
மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வின்படி சுற்று சூழலிலும், நிலத்தடி நீர் மாசுபாட்டிலும் இந்தியாவில் தொழில் நகரமான தூத்துக்குடி மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூல காரணம் ஸ்டெர்லைட் தொழிற்சாலை. அதனால் தங்களது உயிர் காக்க, தலைமுறைகள் தழைக்க, மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட், சத்திஸ்கரில் பால்கோ, ஒரிசாவில் வேதாந்தா அலுமினியம் கோவாவில் சேசா கோவா என்று இந்தியாவையே வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு 2011 ஆம் ஆண்டில் $2.01 மில்லியனும் (சுமார் ரூ 11 கோடி), கடந்த (2010 -2012) மூன்று ஆண்டுகளில் மொத்தம் $5.69 மில்லியனும் (சுமார் ரூ 28 கோடி) நன்கொடையாக கொடுத்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நடந்த 2009-10-ம் ஆண்டில் வேதாந்தாவிடமிருந்து $3.66 மில்லியன் பணத்தை பெற்றிருக்கின்றன இந்திய அரசியல் கட்சிகள்.
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க் கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கும் வேதாந்தா தொடர்ந்து நன்கொடைகளை வழங்கி வந்திருக்கிறது. இந்துத்துவா குழுக்களால் நடத்தப்படும் லண்டனில் இருக்கும் கிருஷ்ணா அவந்தி தொடக்கப் பள்ளிக்கும் வேதாந்தா நிதி அளிக்கிறது. வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிர்வாக இயக்குநராக கடந்த 2004 ஆம் ஆண்டு வரை ப.சிதம்பரம் பதவி வகித்து வந்தார். அதனால் பெரிய அளவில் அரசியல் நெருக்கடி ஏதுமின்றி தொடர்ந்து தப்பித்து வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை.
எனினும் மக்கள் மன்றத்தில் தீர்ப்புகள் எழுதப்படும் போது பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.
நன்றி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்...
பிரம்மத்தை நோக்கி - 3...
நமது மூலம் என்ன? நாம் நமது தாய் தந்தை வழியே இணைய பெற்று இங்கு வந்துள்ளோம். தாயின் கருவில் உள்ள கருமுட்டையில் 46 குரோமோசோம்களும், தந்தையின் விந்தணுவில் உள்ள 46 குரோமோசோம்களும் இணைந்து,
தாயின் மரபணுவில் உள்ள 23 குரோமோசோம்கள் மட்டும், தந்தையின் மரபணுவில் வந்த 23 குரோமோசோம்கள் மட்டும் இணைந்து ஒரு செல் உருவாகி, தாயின் கருவில் வளர்ந்து நாம் இங்கு வந்துள்ளோம்.
சரி தாய் தந்தையின் மூலம் என்ன? நமது தாய் உருவாக இரண்டு பேர் காரணம், அவளது தாய் மற்றும் தந்தை, நம் தந்தை உருவாக இரண்டு பேர் காரணம், அவனது தாய் மற்றும் தந்தை.
ஆக நான்கு பேர்கள். அந்த நான்கு பேர்களின் தாய் தந்தையென எட்டு பேர்கள். இப்படி 2-4-8-16-32-64-128-256-512-1024.
இந்த பெருகி வரும் நம் முன்னோர் சந்ததி இரு வேறு புறத்திலும் விரிவடைகிறது. ஆக, நாம் என்னவோ முப்பாட்டன் பாட்டன் அப்பன் பிறகு நான் எனக்கு அடுத்து என் மகன் என இந்த மரபு ஒரே வழியாக நேரடியாக வரும் மரபு என நினைத்து கொண்டு இருக்கிறோம்.
அது தவறு, அது நேரடியான மரபு அல்ல. உன் முன்னோர்கள் என சொன்னால் அது ஒரு நதியின் நீரோட்டமல்ல. அந்த நதி தாய் தந்தை என இரண்டு கிளைகளாக பிரிகிறது. இன்னும் கொஞ்சம் முன்னே பார்த்தால் அந்த இரண்டுக்கும் நான்கு கிளைகள்.
இப்படி ஒவ்வொரு கிளைக்கும் மொத்தம் 1024 கிளைகள் பிரிந்து செல்கிறது. நம் உயிரானது இந்த கிளைகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் இடத்தில் உருவாகிறது.
ஆம் நம் மூலம் ஒருவழிப் பாதை அல்ல. இருவேறு வழிப்பாதை. நமது இடப்புற பாதையிலும் வலப்புற பாதையிலும் இருவேறு உலகங்கள் அகண்டு விரிந்து பரவுகிறது. பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்...
தாலி அறுத்தான் சந்தை...
குமரி மாவட்டம் மலையாளிகள் பிடியில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட தமிழர்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பெண்கள் மார்பு அளவிற்கேற்ப முலைவரி வசூலிக்கப்பட்டது.
மார்பை மூடவும் அனுமதி இல்லை.
அந்நிலையில் ஒரு சந்தையில் மலையாள சண்டியர்கள் அமர்ந்து கொண்டு மார்பை மூடியுள்ள பெண்களின் முந்தானைகளை அறுத்து எறிந்து தாலியை அபராதம் என்று எடுத்துக் கொண்டு பரிகாசம் செய்து வந்தனர்.
அச்சந்தை இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று அழைக்கப்படுகிறது.
இந்த முலைவரி நாஞ்செலி அல்லது நங்கெலி எனும் தமிழ்ப்பெண் முலைவரி கட்டமுடியாமல் மார்பை அறுத்து கொடுத்ததால் எழுந்த பெரும் போராட்டத்திற்குப் பிறகு (தோள்சீலைக் கலகம்) விலக்கப்பட்டது.
1950 களில் நேசமணி தலைமையில் போராடி கன்னியாகுமரி மலையாள மாநிலத்தில் இருந்து தமிழகத்துடன் இணைந்தது...
பிரம்மத்தை நோக்கி - 2...
மரண பயம் இல்லாத மனிதர் எவரும் இல்லாத அளவிற்கு மரணம் நம்மை பயமுறுத்தி வைத்துள்ளது. இங்கு இருப்பதெல்லாம் அப்படியே இருக்கும், தான் மட்டுமே இல்லாது போய் விடுவோம் என்கிற அறியாமை தான் அதற்கு காரணம்.
உண்மையில் இல்லாமல் போவது நம் மனதும் உணர்வும் மட்டுமே. மரணத்திற்குபின் இல்லாமல் போவது இவை இரண்டும் தான். உண்மையில் இல்லாமல் இருப்பவை தான் இவை.
உன் உடலை விட்டு உயிர் நீங்கியபின் உடலை எரித்து சாம்பலாக்கியபின் எது உள்ளதோ அதுவே உண்மை. அதுவே நிரந்தரம்.
அதற்கு ஆதியுமில்லை, அந்தமுமில்லை. அது நிலையான ஒன்று. தியானத்தின் மூலம் இந்த நான் என்கிற அறியாமையை கடந்து அந்த உண்மை நிலையில் நீ பிரவேசித்து விட்டால் உனக்கு மரணமில்லை.
மரணம் எதில் நிகழுமோ அதையே தொலைத்த பின் மரணம் எங்கு நிகழும். கடந்தகால எண்ணங்களை நீ என நினைப்பது அறியாமை தானே. அந்த எண்ணங்கள் நீயா?
இல்லை அதே போல் ஒவ்வொரு கனமும் மாறிக்கொண்டே இருக்கும் இந்த உணர்வுதான் நீயா? இவை இரண்டும் அல்லாத சாட்சி தன்மையாகிய பிரம்மமே நீ. பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்...
நம்பிக்கை...
நமது திறமையின்மை பெரிய விஷயமல்ல. எல்லா மனிதர்களும் அவர்களுடைய இயற்கைப் பாகத்தில் திறமையில்லாதவர்களே. ஆனால், தெய்வ சக்தியின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து ஒருவன் செயல்படும்போது, அவனது திறமையின்மைகூட திறமையாக மாற்றப்பட்டுவிடும் - ஸ்ரீஅரவிந்தர்..
தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும், மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும் - யாக்கோபு 1:27..
நிச்சயமாக அல்லாஹ் (இறைவன்) மனிதர்களுக்கு எந்தவித அநியாயமும் செய்யமாட்டான். எனினும், மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கின்றார்கள் - திருக்குர்ஆன் 10:44...
இன்று தொடங்கப்பட்ட விமான சேவை எனபது நமது மக்களுக்கான சேவை அல்ல சாகர்மாலா திட்டத்தின் ஒரு பகுதயாக....
ஆதாரம்...
https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=https://en.m.wikipedia.org/wiki/Sagar_Mala_project&ved=0ahUKEwig06r6qYfaAhVDNY8KHXavDvcQFghlMBQ&usg=AOvVaw3rzIxC61QQxvOFxKQIHnwS
கார்பிரேட் கம்பெனி பண முதலைகளுக்கு ஏதுவாக மூடி கிடந்த விமான நிறுவனத்தை தூசி தட்டி மோடி அரசின் கைக்கூலி எடப்பாடி செய்து கொடுத்து இருக்கிறார்.,
UDAN-RCS, national airport development connectivity scheme
உதான் திட்டம் அதன் கீழ் சிறிய அளவிலான சேலம் விமான நிலைய போக்குவரத்தை விரிவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டு இருக்கிறது முதல் விமான சேவை சென்னை டு சேலம் சென்னையில் இருந்து தொழில் ரீதியாக தனியார் முதலாளிகள் வந்து போகலாம் கூடுதலாக தங்களது சொந்த விமான ராணுவ விமான மற்றும் தனியார் ஹெலிகாப்டர்களை கொண்டு வந்து நிறுத்தி பயணிக்க ஏதுவாக தொடக்கப்ட்டது தான் இந்த விமான சேவை.,
ஆதாரம்...
https://en.m.wikipedia.org/wiki/UDAN
குறிப்பு:- சேலம் டூ பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சேலம் டூ பெங்களூர் ரயில் நிலையம் விரிவாக்க திட்டம் நாமக்கல் கரூர் தங்க வழி நெடுஞ்சாலை நாமக்கல் ராசிபுரம் ரயில் நிலையம் கட்டமைப்பு உள்நாட்டு வெளிநாட்டு கோவை மற்றும் திருச்சி விமானநிலையம் இவை எல்லாம் தொடார்பு கொள்ள ஏதுவாக இந்த சர்விஸ் செய்து கொடுக்கபடுகிறது.,
இந்த விமான நிலையத்தில் இருந்து இதற்கு முன்பு (ஏர் டெக்கான்) (ஸ்பைஸ் ஜெட் கலாநிதி மாறன் நிறுவனம்) விமான போக்குவரத்தை செய்து கொண்டு இருந்தனர் இப்பொது இங்கு சேவை கொடுக்கும் நிறுவனம் இந்த( ture ஜெட்) தெலுகு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் நிர்வகிக்கும் சொந்த நிறுவனம் ஆகும்.,
இதை எல்லாம் மறைமுகமாக மக்களுக்கான சேவை என்ற பெயரில் இந்த அரசு செய்து கொடுக்கிறது சாகர் மாலா என்ற கொடூர திட்டத்தின் உதிரி திட்டத்தின் உதவியில் இந்த சேவை நடை பெறுகிறது என்பதை அறிந்து கொள்ளவும்.,
இந்த சாகர்மாலா திட்டத்தில் மொத்தம் 415 project அடங்கும்...
https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=https://en.m.wikipedia.org/wiki/Sagar_Mala_project&ved=0ahUKEwig06r6qYfaAhVDNY8KHXavDvcQFghlMBQ&usg=AOvVaw3rzIxC61QQxvOFxKQIHnwS
References...
பகுதியில் முழுவதும் விளக்கி உள்ளது..
அதில் ஒன்று தான் இது ......
அடுத்து சாலை வசதி..
அடுத்து ரயில் வசதி...
இவை அனைத்தும் சாகர்மாலா திட்டத்திற்காகவே செய்யப்படுகிறது...
Subscribe to:
Posts (Atom)