24/02/2018

ஏர்செல் டவர்கள் படிப்படியாக சீரடைய தொடங்கிவிட்டன...


செல்போனை ஒருமுறை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு பின்பு ஆன் செய்யுமாறு வாடிக்கையாளர்களுக்கு ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் அறிவுறுத்தல்...

நாங்கள் இனவெறியர்களல்ல.. எங்கள் உரிமைகளுக்காக உங்கள் சுரண்டல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் வந்தாரை வாழ வைக்கும் தமிழர்கள்...


மஞ்சள்காமாலை நோய்க்கு எளிமையான வைத்தியம்...


புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் கானப்பேட்டை என்கிற கடியாபட்டி.. 622505.. தா.சி.அழகுகோனார்....

புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மருந்து மற்றும் வைத்தியம் கிடையாது...

மற்ற தினங்களில் காலை 6ல் இருந்து 10 வரை...

நாள்பட்ட நோயிலிருந்து அனைத்துக்குமே ஒரு நல்ல தீர்வு....

மே17 எனும் திராவிட இயக்கத்தில் இருந்துக் கொண்டு.. தாலி அறுக்கவில்லை என்றால் எப்படி..?


சேலம் மக்களே தயாராகுங்கள்...


பூணூல் போட்டக் குயவர்...


வேறு எந்த சாதியையும்
அவன்-இவன்,
அந்த பய -இந்த பய,
அந்த புத்தி - இந்த புத்தி,
அதுக - இதுக
என்று பேசினால் பிற்போக்கு..

ஆனால்...

பார்ப்பனர்களை
பாப்பான்,
பாப்பாரப்பய,
பார்ப்பன புத்தி, குடுமி,
பூணூல்,
அவாள்,
என்றெல்லாம் பேசினால் அது மட்டும் முற்போக்கு..

இப்பொது முற்போக்கிற்கு வந்த சோதனையைப் பாருங்கள்...

1837 ல் வரையப்பட்ட இந்த ஓவியம் பூணூல் போட்டபடி ஒரு குயவர் பானை செய்யும் காட்சியை கண்முன் நிறுத்துகிறது..

"Seventy-two Specimens of Castes in India" எனும் புத்தகத்தில் இது இடம்பெற்றுள்ளது.

நம்புங்க மக்களே...

பூணூல்னா பார்ப்பான்..
ஒரு பூணூல் ஒரு கோடி ரூபாய்..
அது போட்டவன் உயர்சாதி..
சமஸ்கிருத ஆரியனின் அடையாளம்...

பூணூல்.. பூணூல்.. பூணூல்...

ஐயா பக்கோடா கடை போட ஒரு 10,000 கோடி வங்கியில் லோன் வேணும் உதவி கிடைக்குமா..?


இந்தியாவின் வளரச்சிக்கு தமிழ்நாடு என்ன பலியாகுனுமா, இந்தியாவில் தான் இருக்கிறதா தமிழ்நாடு?


அனிதா சடலத்துக்கு 100 விவாதம் நடத்திய விபச்சார ஊடகங்கள்... ஏன் 1590 சடலங்களுக்கு விவாதங்கள் இல்லை..?


கிருத்தவ St. ஜோசப் கருணை கொலை இல்லம்...

தமிழ் கலாச்சாரத்தை பாஜக மோடிக்கு கற்றுக் கொடுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் மனைவி...


ஒதுக்கப்படும் பாரம்பரிய உணவுகள்...


நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பது தான்..

அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?

நிலத்திலே மனிதர்களால் விளைவிக்கின்ற நன்செய், புன்செய் பயிர்களின் நன்மைகளை எளிதில் சொல்லிவிட முடியாது. இதில் அரிசியானது சுவையும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகவும் விளங்கி வருகிறது.

இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டு வகையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியா, பர்மா, சீனா, யப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் அரிசி உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் உண்ணும் உணவாகவும் விளங்கிவருகிறது.

ஆனால் இன்று நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பதுதான்.

பிறந்தது முதல் அரிசி உணவு சாப்பிட்டு பழகியவர்கள் இதைக்கேட்டதும் வாடி வதங்கி, தங்களுக்கு பெரும் நோய் ஏற்பட்டுவிட்டது என்பதுபோல் முடங்கி விடுகிறார்கள்.

உண்மையில் மற்ற தானியங்களைப் போலவே அரிசியும் பல்வேறு நன்மைகளை தந்து நம்மை காத்து வருகிறது. உண்மையில் அரிசியை பட்டை தீட்டியும், குக்கரில் வைத்து சாப்பிடுவதால் தான் நமக்கு நோய் உண்டாகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை.

உடலை வளர்த்தால் தான் உயிரை வளர்க்க முடியும் என்பதில் தெளிவாக இருந்தார்கள் நமது முன்னோர்கள். எனவே உடலுக்கு எது தேவையோ அதை மட்டுமே உண்டு நலமாக வாழ்ந்தார்கள்.

இதில் தமிழர்களின் முக்கிய உணவான சோறு சமைப்பது என்பதே தனிக்கலையாக விளங்கியது எனலாம். இதில் தமிழர்கள் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள்.

சோறு வடிப்பது என்பது பழைய அரிசியைத் தவிடு, நொய் நீக்கி நன்றாக தீட்டி, முழு அரிசியாய் ஆய்ந்து எடுத்து இளவெந்நீரால் கழுவி சற்று ஆற விட்டுவைத்து கொள்ள வேண்டும். அரிசிக்கு மூன்று பங்கு நீர்விட்டு அடுப்பிலேற்றி அது நுரைவிட்டு கொதிக்கும் பொழுது அரிசியை அதில் போட்டு முக்காற்பங்கு வெந்தவுடன், கரண்டியால் துழாவி வடித்து கொள்ள வேண்டும். கஞ்சி வடிந்தவுடன், அந்த அடுப்பு தணலில் சோற்று பானையை வைத்து விட வேண்டும். அதன் பிறகு நீர் முற்றிலும் வற்றி பக்குவமாய் இருக்கும் சமயத்தில் எடுத்து கொள்வதே சோறு. இந்த சோறே உணவுக்கு ஏற்றது. வாதம் பித்தம் கபம் ஆகிய முக்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஏற்றது. பத்தியத்திற்கும் உகந்தது. ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு பண்பு உள்ளது என்பதையும் சொல்லிவைத்தார்கள்.

முழு அரிசிசோற்றை மிதமான சூட்டுடன் சாப்பிட்டால் முப்பிணிகளையும் நீக்கி உடலுக்கு வன்மை தந்து நலத்துடன் வாழவைக்கும்.

நன்றாக சமையாத சோற்றை உண்பதால் மலம் கட்டும். மறுநாளும் செரிக்காமல் இருக்கும். இதனால் உடலில் இதன் சத்துக்கள் ஊறாது.

குழைந்த சோற்றை உண்டால் இருமல், மந்தம், பீளை, மேகம் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும்.

மிகுந்த சூட்டுடன் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் ரத்தம் சூடாகும், நீர்வேட்கை அதிகரிக்கும், பெருத்த வயிறு ஏற்படும். எனவே முழு அரிசிசோற்றை மிதசூட்டில் சாப்பிடுவதே நன்மை தரும்.

இதில் கார் அரிசியை கொண்டு வடிக்கப்படும் சோறு உடலில் உள்ள சிறு நஞ்சுகளை நீக்கி புண்களை ஆற்றும். ஈர்க்கச்சம்பா அரிசிசோறு கடவுளுக்கு படைக்கும் உணவிற்கு பயன்படுத்தப்படும் அரிசியாகும். இது பார்த்தவுடன் விருப்பத்தையும் நாவிற்கு சுவையை தரும். புழுகுசம்பா அரிசி சற்று அளவில் நீண்டு இருந்தாலும் இந்த அரிசியை சமைத்து உண்பதால் உடலில் வனப்பு ஏற்படும். நல்ல பசி எடுக்கும். தீராத தாகம் நீங்கும்.

கோரைச்சம்பா அரிசியை உண்பதால் வெப்பத்தால் ஏற்படும் வெறி, பெண்களுக்கான வெள்ளைபடுதல், உடலில் உண்டாகும் நமைச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி உண்டாகும். குறுஞ்சம்பா அரிசிசோறு ஆண்மையை பெருக்கி உடலில் குத்துகின்ற வலியை போக்கும். ஆனால் உடல் சூட்டை உண்டாக்கும். மிளகுசம்பா அரிசிசோறு பல நன்மைகளை வாரி வழங்கக் கூடியது. பசியை உண்டாக்கும். பெருவளி என்கின்ற கடுமையான வாத நோய்களை நீக்கும்.சீரகச்சம்பா அரிசி சோற்றை மன்னர்களும், செல்வந்தர்களும் மட்டுமே உண்ணும் பழக்கம் நமது நாட்டில் இருந்து வந்தது.

இனிப்பு சுவையுள்ள இதை உண்பதால் உடலில் ஏற்படும் அனைத்து வளி நோய்களையும் நீக்கும். சாப்பிட்டு முடிப்பதற்குள்ளாக செரித்து மீண்டும் பசியை ஏற்படுத்தும் அளவிற்கு எளிமையானது. கல்லுடைச்சம்பா என்ற அரிசி சோறு அதிகமான ஆற்றலை தரக்கூடியது. மிகுந்த பலசாலியை கூட எதிர்க்கும் உடல் திறனையும் மனத்தெம்பும் ஏற்படுத்தும். நல்லசுவை கொண்ட இதை உண்டுவந்தால் பேசும் திறன் அதிகரிக்கும். குன்றிமணிச்சம்பா சோறு உண்டுவந்தால் உடல் வலித்து ஆண்மை உண்டாகும். வளி நோய்கள் அனைத்தும் போகும்.

அழகும் சுவையும் நிரம்பிய அன்னமழகி என்ற அரிசியை சமைத்து உண்பதால் உடல் வெப்பமாறுபாட்டால் ஏற்படும் சுரங்களை நீக்கி உடலுக்கு நன்மை தரும். மோர்ச்சோறு உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு இவைகளை போக்கும். இரவில் நீரூற்றிய சோற்றை பழையது என்பார்கள். விடியற்காலையில் சோற்றில் உள்ள நீரோடு பழையதை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். உடலில் ஒளி உண்டாகும். வெறிநோய் முற்றிலும் நீங்கும். நன்றாக பசியெடுக்கும்.

பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்கும். இரவில் நன்றாக தூக்கம் வரும். மிகுதியாக உண்டுவிட்டால், அப்பொழுதே உறக்கம் கண்களை தழுவும். பொதுவாக எந்த உணவாக இருந்தாலும் அளவாக தேவைக்கு ஏற்ப சாப்பிடுவதால் கெடுதல் என்பதே உண்டாகாது. அதுவும் உணவே மருந்து. மருந்தே உணவு என்று வாழ்க்கை முறையை வகுத்து கொண்டு வாழும் தமிழர்களின் உணவே, இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களால், பெரிதும் விரும்பும் உணவாகவும் மாறி வருகிறது. எனவே அரிசிசோறு உண்டு நலமுடன் வாழ்வோம்.

பித்தத்தை போக்கும் கஞ்சி...

சோறு கொதிக்கும் போது இருக்கும் நீரை கொதிநீர் என்பார்கள். வீட்டில் சமையல் செய்யும் பெண்கள், பசியுடன் இருக்கும் சிறுவர்களுக்கு இதை குடிக்க கொடுப்பார்கள். தாங்களும் குடிப்பார்கள். இதுவும் மருத்துவ குணம் கொண்டது தான். கொதிநீரை குடிப்பதால் நீர்சுருக்கு என்னும் சிறுநீர்நோய் போகும். சோறு வடித்தவுடன் கிடைக்கும் கஞ்சியை சூட்டுடன் தண்ணீர் கலந்து உப்பிட்டு குடிப்பதால் உடல் பருக்கும். உடலில் ஒளி உண்டாகும். உடலில் உண்டாகும் பித்தம், வெப்பம் நீங்கும். சோறு வடித்த கஞ்சியை எந்த வகையில் குடித்தாலும் சிறு மந்தத்தை உண்டாக்கும் என்றாலும், விழிகளுக்கு குளிர்ச்சியும் கொடுக்கும். உடல் சூட்டால் தோன்றிய பல்வேறு நோய்களை குணமாக்கும்...

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும், அடக்கு முறை கூடாது - பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்...


இங்கு அவர்கள் அதிகமாக பேசுவது இந்த அமைப்பு சரியில்லை, கடந்த ஆட்சிகளின் செயல்பாடு சரியில்லலை, ஊழல் நிறைந்துள்ளது என்ற பொதுவான கருத்துகள் மட்டும்.. ஆம் அது உண்மை தான்...


ஆனால் அவர்கள் கூறும் அமைப்பு சரியில்லை என்பதற்குள் தான் மக்களின் வாழ்வாதாரம் அடங்கி இருக்கிறது..

அதை ஏன்..? அவர்கள் வெளிப்படையாக பேச பயப்படுகின்றனர்..?

ஏனெனில் தங்களை அனுப்பியவர்களை அந்த நடிகர்கள் எப்படி எதிர்க்க முடியும்..?

எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அந்த நடிகர்கள் என்றைக்கும் மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கின்ற பிரச்சனைகளை பேசவே மாட்டார்கள்...

குழந்தை திருடிகள்...


இவர்களை பார்த்தவுடன் பிடித்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கவும்...

சலிப்பு...


உங்களது காம ஆசைக்கு ஆதரவு கொடுப்பதற்காகவே ஆடைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

நிர்வாணமான பெண் நீங்கள் கற்பனை செய்வதற்கு எந்த இடமும் கொடுப்பதில்லை.

அதனால் தான் நிர்வாணமான பெண்கள் அந்த அளவுக்கு கவர்ச்சியாக இருப்பதில்லை.

அதே போன்று நிர்வாணமான ஆண்களும் கவர்ச்சியாக இருப்பதில்லை.

ஆனால், ஒரு ஆணோ, பெண்ணோ ஆடைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் போது..

அவர்கள் உங்களது கற்பனைக்கு
அதிகம் விட்டு விடுகிறார்கள்.

இந்த ஆடைகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று நீங்கள் கற்பனை செய்ய முடியும்.

நீங்கள் மீண்டும் கற்பனை செய்யலாம்.

ஆனால், உங்களது மனைவியை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது.

அதுதான் சிக்கல்.

உங்களால் உங்களது பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியை கற்பனை செய்து பார்க்க முடியும்.

அவள் கவர்ச்சியாக தெரிவாள்..

உங்களது மனைவியிடம் உங்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டதென்றால்..

உங்களுக்கு அவளது ஆன்மாவிற்குள் நுழைவது எப்படி என்று தெரியவில்லை.

நீங்கள் அவளது உடலில் நுழைய முடியும்.

ஆனால் அது விரைவில் சலிப்பாக ஆகிவிடும்.

ஏனெனில் அது ஒரே விஷயத்தை
மீண்டும் மீண்டும் செய்வதாக இருக்கும்.

உடல் என்பது மேம்போக்கான விஷயம்.

நீங்கள் உடலோடு ஒருமுறை, இருமுறை, மூன்றுமுறை உறவு கொள்ளலாம்.

அதன்பிறகு அந்த உடலோடும், அதன் வளைவு நெளிவுகளோடும் உங்களுக்கு பரிச்சயம் ஏற்பட்டு விடுகிறது.

அதன் பின்னர் அங்கே எதுவும் புதிதாக இருக்காது.

நீங்கள் அடுத்த பெண்ணின் மீது ஆர்வம்
கொள்ள ஆரம்பித்து விடுகிறீர்கள்.

உங்களது மனைவியைவிட. அவர்களிடம் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்.

அவர்களது ஆடைகளுக்குப் பின்னால்
அவர்கள் ஏதோ ஒன்றினை வித்தியாசமாக பெற்றிருப்பார்கள் என்று குறைந்தபட்சம் உங்களால் கற்பனையாவது செய்து பார்க்க முடியும்.

மக்கள் தங்களது மனைவி மற்றும் கணவன்களோடு சலிப்படைந்து விட்டனர்.

அதற்கான காரணம் ஒருவர் மற்றொருவரின் ஆன்மாவோடு தொடர்பு கொள்ள முடியாமல் போகின்றனர்.

நீங்கள் ஆன்ம நண்பர்கள் ஆகிவிடும் போது அங்கே சலிப்பு என்பது இருக்கவே இருக்காது.

அதனால் தான் தந்த்ரா மார்க்கமானது..

எல்லா மனிதர்களுக்கும் தேவை என்று நான் கூறுகிறேன்.

தந்த்ரா என்பது ஆன்மாக்களோடு தொடர்பு கொள்கின்றன..

அடுத்தவரின் ஆழ்ந்த மையத்திற்கு செல்கின்ற ஒரு விஞ்ஞானம்.

இந்த கலையை அறிந்து கொண்ட ஒருவருக்கு இந்த சலிப்பு மறைந்து போகும்...

பாஜக வும் ஊழல்களின் திசை திருப்பும் கலாட்டாவும்...


அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே...


க்ஷயம் என்றால் தேய்வு.. (க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய்) அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம்.

அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்?

இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும்...

மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று நினைத்தால் பரிதாபமாக உள்ளது...

டிடிவி தினகரனை சந்தித்த கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு...


உலக அரசியல் எங்கே ஆரம்பிக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டுமா..?


நீங்கள் வியந்து பாராட்டும் ஹாலிவுட்டில் இருந்தும், ஊடகங்களில் இருந்தும் தான்..

ஏனெனில் மக்களை மனரீதியாக கைப்பற்றி விட்டால், இங்கு எது வேண்டுமானாலும் செய்யலாம்...

திமுகவில் இருந்து அதிமுக தனியே பிரிந்தபின் திமுக அணி தேர்தலில் வாங்கிய ஓட்டு சதவீதம்...



1977:- 24.89%
1980:- 44.43%
1984:- 37%
1989:- 37.89%
1991:- 30.05%
1996:- 53.77%
2001:- 38.67%
2006:- 44.75%
2011:- 39.53%
2016:- 40%
என பதிவிட்டுள்ளார்கள்..உண்மையே...

ஆனால் அது திமுகவின் தனி வாக்கல்ல..

தனி வாக்கு என்றால் அது 1977  ல் தனித்து போட்டியிட்டு  பெற்ற 24 .89 % தான்.

1977 =திமுக தனித்து
1980 =திமுக + காங்கிரஸ்
1984 =திமுக+CPI +CPM +ஜனதா
1989 =திமுக+CPM +ஜனதா
1991 =திமுக+CPI +CPM +ஜனதா
1996 =திமுக+தமிழ் மாநில காங்கிரஸ் +CPI +FB
2001 =திமுக+பிஜேபி+புத+எம்ஜிஆர் அதிமுக+கொமுக
2006 =திமுக+காங்+பாமக+CPI +CPM
2011 =திமுக+காங்+பாமக+வீசி+கொங்கு
2016  =திமுக+காங்+முலீ+மமக+புத +சிறு இயக்கங்கள்
திமுகவின் வாக்கு என்றால் அது 1977  ல் தனித்து போட்டியிட்டு வாங்கிய 24 .89 % தான்..

இதற்கு மேல் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.....

ஒரு தமிழனாக நாம் அறிந்து பெருமைப்பட வேண்டியது...


மரணப்படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன், பவ்யமாக , அவன் காலடியில் நின்று , உபதேசம் கேட்டான்..

உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக்கூடாது , என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும்  என வேண்டினான்.

இராவணன் உபதேசித்தான்...

1 . உன் சாரதியிடமோ , வாயிற்
காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே . உடனிருந்தே கொல்வர் .

2 .தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் , எப்போதும் வெல்வோம் என எண்ணாதே .

3 .உன் குற்றங்களை சுட்டிக் காட்டும்
நண்பனை நம்பு .

4 .நான் அனுமனை சிறியவன் என
எடை போட்டது போல் , எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே .

5 . வானின் நட்சத்திரங்களை வளைக்க
முடியும் என நம்பாதே , ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள்.

6 . இறைவனை , விரும்பினாலும்
மறுத்தாலும் முழுமையாகச் செய்...

விசிக வின்.. அடக்கமறு அத்துமீறு கேபில் காசுகேட்டா.. கத்தியால வெட்டு...


விருதுநகரில் லஞ்சம் வாங்கியதாக திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் கமலி கைது...


மூடிய திருட்டு வீடியோ கடையை மறுபடியும் திறக்க ₹5000 இலஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக சிக்கினார் பெண் ஆய்வாளர் கமலி...

தடுக்க வேண்டியவரே.. தடுமாறி தடம் மாறிவிட்டார்...

பிருத்துவி முத்திரை - உடல் எடை கூட...


இப்போது நாம் பிருத்துவி  முத்திரை பற்றி பார்க்கலாம்...

பிருத்துவி முத்திரை உடல் எடையை கூட்டக்கூடியது. அதாவது உடல் வலு குன்றியவர்கள் (பலவீனமானவர்கள்) இதை செய்ய வேண்டும், அவர்களுக்கு இது மிகவும் உதவும்.

பிருத்துவி முத்திரை - மண்\பூமிக்கான முத்திரை...

மோதிரவிரலின் நுனி பெரு விரலின் நுனியை தொட வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நீட்டிக்கொண்டிருக்க வேண்டும்.

பலன்கள்...

உடல் பலவீனத்தை போக்கும்.
உடல் எடை அதிகரிக்க உதவும்.
தோல் நிறத்தை மெருகேற்றும்.
உடல் உறுப்புகளின் செயல்பாடு மேம்படும்....

பாஜக பினாமி கன்னடன் கமல் கலாட்டா...


பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர்.

அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது.

இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.

அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.

இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை...

நதிகளை காப்பாற்ற பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...

கைவிட வேண்டிய பத்து விஷயங்கள்...


1. வெறுப்பை கைவிடுங்கள். நீங்கள் விரும்பவதில் கவனம் செலுத்துங்கள்.

2. கடந்த காலத்தை கைவிடுங்கள், அதில் கற்ற பாடங்களை வைத்துக் கொள்ளுங்கள்.

3. கனகச்சிதமாகத்தான் இருப்பேன் என்ற கருத்தை கைவிடுங்கள்.

4. மக்களை எப்பொழுதும் மகிழ்விப்பராக இருப்பதை கைவிடுங்கள்.

5. எதிர்மறையான சுய பேச்சை கைவிடுங்கள்.

6. வீண் பேச்சுகளையும், எடை போடுவதையும் கைவிடுங்கள்.

7. உங்களை தாழ்த்தி நடத்த்த்து பவர்களை மறந்து விடுங்கள்.

8. கோபத்தால் வெகுண்டெழுவதை கைவிடுங்கள். அமைதிதான் ஆற்றல்.

9. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை தவிருங்கள்.

10 வருத்தப்படுவதை கைவிடுங்கள். எல்லாமே ஒரு காரணத்துக்காகத்தான் நடக்கிறது...

பாஜக மோடியின் அடுத்த ஊழல்...


வேலூர் பெயர் காரணம் தெரியுமா?


நல்லியக்கோடன் என்னும் மன்னன் முருக பக்தனாக இருந்தான்.

அறவழியில் ஆட்சி செய்த அம்மன்னன் மீது பொறாமை கொண்ட பகை மன்னர்கள் படையெடுத்து வருவதாக செய்தி வந்தது.

மனவருத்தத்தோடு, முருகனுக்குரிய இரவு நேர பூஜையை முடித்து விட்டு படுக்கைக்குச் சென்றான்.

கனவில் தோன்றிய முருகன், நல்லியக்கோடா.. யாமிருக்க பயமேன்.. கேணியில் பூத்திருக்கும் தாமரை மலரே உனக்கு ஆயுதம்.. வெற்றி உன் பக்கமே.. என்று வாழ்த்தி மறைந்தார்.

கண் விழித்தான் மன்னன். மீண்டும் அவன் கண்களுக்கு தூக்கம் வரவில்லை. பொழுது புலர்ந்ததும், தாமரைகள் பூத்திருக்கும் கேணிக்குச் சென்றான். அங்கிருந்த மலரைப் பறித்து பகைவர் மீது வீசியெறிந்தான். அது வேலாக மாறி பகைவர்கள் வந்த திசை நோக்கிப் புறப்பட்டது. செய்வதறியாமல் திகைத்த அவர்கள் புறமுதுகிட்டு ஓடினர்.

வேல் எறிந்து வென்ற ஊர் என்பதால், நல்லியக்கோடன் ஆட்சி செய்த ஊருக்கு வேலூர் என்ற பெயர் வந்தது.

திறல்வேல் நுதியில் பூத்தகேணி விறல்வேல் வென்றி வேலூர் என்று இவ்வூர் பற்றி, சிறுபாணாற்றுப்படை என்னும் தமிழ் இலக்கியம் கூறுகிறது.

இந்த மன்னன் தான் பெற்ற வெற்றிக்கு நன்றி செலுத்தும் விதத்தில் பொன்னால் ஆன பதக்கம், ஆபரணங்களை முருகப்பெருமானுக்குச் சூட்டி மகிழ்ந்தான்....

எல்லா திருடனும் ஒன்னா தான் இருக்கான். ஆனால் நாம் தான் முட்டாளா இருக்கோம்...


ஏன் எதற்கு எப்படி ? (மர்மப்பொருட்கள்)...


அதிசய மர்ம உலோக கோளங்கள்...

சில நூற்றாண்டுகளுக்கு முன் தென் ஆப்பிரிக்காவின் சுரங்கத்தில் 2.8 மில்லியன் ஆண்டு பழமையான கற்பாறைகள் கிடைத்தன.

அவற்றில் இரண்டு ஒரு இஞ்சு விட்ட அளவு உள்ள அபூர்வ உலோக கோளங்கள் (உருண்டைகள்) கிடைத்தன.

ஒன்று நீல நிற உலோகத்தாலானது. இவற்றின் வெளிப்புரத்தில் நடுவில் குறுக்கு கோடு சரி சமமாக பிரிக்கப்பட்டு இருந்த்து. இணையான மூன்று சிறு துளைகள் போடப்பட்டு இருந்தன.

இன்னொரு கோளம் உள்ளீடு அற்றது (காலியான) இதனுள் பஞ்சு போன்ற பொருள் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தது.

எதற்காக யார் இவற்றை உருவாக்கினார்கள் என்ற மர்மம் இன்றுவரை துளங்க வில்லை.

அதிசய கற்பாறை உருண்டைகள்...

1930 ல் கோஸ்டாரிக்காவின் காட்டு பகுதியில் வாழைத்தோட்டம் அமைப்பதற்காக நிலம் சுத்தப்படுத்தப்பட்டது.

அந்த இடத்தில் டஜன் கணக்கிலான சிறிதும் பெரிதுமான கற்கோள உருண்டைகள் கிடைத்தன.

சிறியது டென்னிஸ் பந்து அளவிலும் பெரியது 16 டன் எடையுடன் 8 அடி விட்டத்துடன் இருந்தன.

மிக துள்ளியமான உருண்டைவடிவில் இது இயற்கையாக உருவாக வாய்ப்பு இல்லை மனிதன் உருவாக்கி இருந்தால் எப்படி உருவாக்கி இருக்க முடியும்..

எதற்காக? யார் ? இதை உருவாக்கினார்கள் என்பது இன்று வரை மர்மமாக உள்ளது...

தமிழரின் இயற்கை மருத்துவம்...


1.மார்புச் சளி..

வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.

2.சளிக் காய்ச்சல்..

புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

3.இருமல், தொண்டை கரகரப்பு..

பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

4.சளி..

பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

5.டான்சில்..

வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

6.வயிற்றுப் போக்கு..

சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

7.வாயுக் கோளாறு..

மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

8.நெஞ்சு சளி..

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

9.தலை வலி..

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

10.தொண்டை கரகரப்பு..

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்...

இந்தியம் - திராவிடம் இரண்டுமே தமிழர்களை மறைமுகமாக அழிக்கிறது.. விழித்துக்கொள் என் தமிழினமே...


உலகின் மிக ஆபத்தான இடம்...

முன்னாள் சோவியத் ஒன்றியம் மறைத்து வைத்த மிக மோசமான ரகசியங்களில் ஒன்று அது.

எழுபது வருடங்களில் இரண்டு அணுஉலை விபத்துக்கள்...

23,000 சதுர கிலோமீட்டர்கள் பரப்பிற்கு ப்ளுட்டோனியம் பரவி 1,24,000 மனித உயிர்கள் காலத்திற்கும் முழுவதுமாக பாதிக்கப்பட்டு....

36,00,000 மக்கள்தொகை கொண்ட ரஷியாவின் செல்யாபின்ஸ்க் மாகாணத்திற்கு வாருங்கள்.

இந்த செல்யாபின்ஸ்க்கிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் 1940களின் இறுதியில் மாயக் என்ற அணுஆயுத கட்டுமானம் நிறுவப்பட்டது.

1990 வரை இந்த அணு ஆயுத கட்டமைப்பு இந்தப் பகுதியை அணு மற்றும் ரசாயன கழிவுகளால் தொடர்ச்சியாக கன்னா பின்னாவென்று சீரழித்தது. ஆனால் அதுவல்ல விஷயம்.

1957இல் இந்த அணுஆயுத தொழிற்சாலையின் குளிரூட்டும் பகுதி செயலிழந்தது. இதனால், கதிரியக்க மூலப்பொருள் சேமிப்பு காலன் வெடித்து மிகமோசமான அணு விபத்து சம்பவித்தது.

அந்த அணுஆயுத மையத்தை சுற்றி 23000 சதுர கிலோமீட்டர பரப்பளவிற்கு கதிர்வீச்சு பரவியது. சிறிது நேரத்திலேயே உருவான கதிரியக்க மேகம் செல்யாபின்ஸ்க், ச்வேர்ட்லோவ்ச்க் மற்றும் டியுமென் மாகாணங்களுக்கு மேல் பரவி பொழிந்தது.

நதிக்கரையில் வாழ்ந்து வந்த 1,24,000 அப்பாவி மக்கள் கடுமையான அணு கதிர்வீச்சு பாதிப்பிற்கு உள்ளானார்கள்.

செர்னோபில் அணு விபத்து வெளியிட்டதைவிட கிட்டத்தட்ட இருமடங்கு அணுக் கதிர்வீச்சை இந்த அணுகதிர்வீச்சு விபத்து வெளியிட்டது.

பிறகு.... அந்த இடம் உச்சபட்ச பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு சுமார் 10,700 மக்கள் சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்டனர்.

இந்த அணுகதிர் விபத்திற்கு பிறகு உடனடியாக வியாதிகளும், மரணங்களும் அதிகரிக்கத்துவங்கின. பிறப்பு குறைபாடுகள், ஜீன் பாதிப்புகள், ஆண் பெண் மலட்டுத்தன்மை மற்றும் கேன்சர் எண்ணிக்கைகள் எகிறின.

1950 லிருந்து வெண்குஷ்டம் 41 சதவிகிதம் அதிகரித்தது. அந்த பகுதியின் நூறுகோடி காலன்கள் அளவுள்ள நிலத்தடி நீர் அனுக்கழிவுகளால் மாசு படுத்தப்பட்டுளன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பகுதியின் மக்கள் தொகையில் குழந்தைபேற்றுக்கு தகுதியான மக்களில் சரி பாதி மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1990இல் இந்த பகுதியை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு மனிதனை ஒரே மணி நேரத்தில் கொன்று விடக்கூடிய அளவிற்கு ஆண்டு கதிர்வீச்சு நிரம்பியுள்ளதாக தெரிவித்தனர்.

இன்று...:

இந்தப் பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டன.

அங்கு நீங்கள் ஒரு மணிநேரம் விசிட் செய்தால் இரண்டு நாட்கள் தொடர் தலைவலியால் அவதிப்பட நேரிடும். அந்தப் பகுதியில் காணப்படும் மீன்களில் 17,000 பெகியுரல் என்ற அளவிற்கும் காய்கனிகளில் 8,000 பெகியுரல் என்ற அளவிலும் அதிர்ச்சி தரத்தக்க அளவில் அதிக கதிர்வீச்சு காணப்படுவதாக 1996 ல் ஒரு ஜெர்மன் ஆய்வு தெரிவிக்கிறது.

இவ்வித விஷத்தன்மைகளிளிருந்து இந்தப் பகுதியை தூய்மை படுத்தும் சர்வதேச முயற்ச்சிகள் துவங்கி விட்டன.

அணு உலைகள் மனித உயிருக்கு உலை வைக்கும் என்பதில் ஐய்யம் ஏதும் இல்லை என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துகாட்டு.

நாளை : தமிழகமும் இந்த வரலாற்றில் இடம் பிடிக்க வைக்கவே இந்திய மத்திய அரசு போராடி வருகிறது...

பாஜக வின் ஆர் எஸ் எஸ் அமைப்பு சார்பில் இயங்கிய 125 பள்ளிகளை மூடிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி...


NOC முறையாக வாங்கப்படாமலும் மாநில பாடதிட்டதின் கீழ் இல்லாமல் செயல்பட்டதால் அவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த மாநில கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் மத ரீதியிலான பயிற்றுவித்தலை பள்ளி என்ற பெயரில் அனுமதிக்க முடியாது எனவும் இது தொடர்பாக புகார்கள் வந்ததாகவும் அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது...