மூவேந்தர்கள் மீது இது வரை எந்த ஆரிய பார்ப்பானும் படை எடுத்து வந்து வீழ்த்தியது இல்லை.
அப்படி என்றால் யார் தான் வீழ்த்தியது?
இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது. அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள்?
காரணம், தமிழனை வீழ்த்தியதே இந்த திராவிட சிகாமணிகளின் முன்னோர்களான தெலுங்கர்கள் தான் என்பதால்..
தமிழரின் தாயகம் கடைக் கழக காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை என சுருங்கி விட்டது. அதன் பின்னர் எந்த நேரடி ஆரிய படை எடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்தது உண்டா?
எந்த ஆரிய பார்ப்ன் தமிழன் மீது போர் தொடுத்தான்? பதில் உண்டா?
வடக்கில் இருந்து எந்த ஆரிய படை எடுப்பும் விந்திய மலைக்கு தெற்க்கே வந்து வெற்றி பெற்றதே இல்லை. மாறாக, தமிழ் பேரரசர்களே வடக்கு நோக்கிப் படை செலுத்தி வென்று கொடிநாட்டிய வரலாறுகள் உண்டு.
இருப்பினும், வென்ற இடங்களை யாதொரு தமிழரசனும், பிடித்தாண்ட வரலாறு இல்லை. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல வடக்கத்திய நாடுகளை வென்று திரை கொண்டு வந்தாரே அன்றி, அவற்றை பிடித்து ஆள எண்ணியதே இல்லை.
பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்', ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல.
அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கருனாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட நூல்..
மானவக் குலம் என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது.
'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.
அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதாலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்.
Source: http://www.ourkarnataka.com/states/history/historyofkarnataka10.htm
தமிழன் மீது ஆரியன் படை எடுத்து வெல்லவில்லை என்றால், வேறு யார் தான் அவர்களை வென்றார்கள் என்ற கேள்வி இயல்பாய் எழும்.
குலுத்துங்க சோழனுக்கு பிறகு சோழப் பேரரசில் சாளுக்கிய ஆதிக்கம் ஓங்கி வளர்ந்ததும், அதுவே சோழ பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் கருதலாம். இது மண உறவால் சோழர் வீழ்ந்த வரலாறு.
என்ன தான் மூவேந்தர்கள் வீழ்ச்சி நேரடியாகவும் மறைமுகமாவும் தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை உயர்த்தியே பிடித்தனர்.
சமஸ்கிருத கலப்பு இருப்பினும் ஆட்சி மொழி தமிழே. அதில் ஒருக்காலும் அவர்கள் சமரசம் செய்துகொண்டது இல்லை.
இந்த இடத்தில் தான் நாம் 'விஜயநகர பேரரசின்' (திராவிட) படை எடுப்பை கவனிக்க வேண்டும்.
பாண்டிய பேரரசில் சக்களத்தி மக்களுக்கிடையே நிலவிய அதிகார போட்டியில் தலையிடுவதன் மூலம், Trojan Horse போல் உள்ளே நுழைந்தது இந்த விஜயநகர வடுக பேரரசு (அதாவது பெரியார், கருணாநிதி, வைகோ உள்ளிட்ட திராவிட தலைவர்களின் முன்னோர்கள்). பின்னர் நாகம நாயக்கன் என்பானின் வழியாக மதுரை அரசையே கைப்பற்றி கொண்டு, 'நாயக்கர் அரசு' என்னும் ஒரு வந்தேறி ஆட்சியை அமைத்தது.
நாயக்கர் ஆட்சியின் கேடுகள் :
உண்மையில் தமிழர் மீதான நாயக்கரின் போர் என்பது இனப் போர் அல்ல. தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நடந்த மொழிப் போர். தமிழை தூக்கி எறிந்து விட்டு, சமஸ்கிருதத்தை முன்னிறுத்த நடந்த போர்.
இந்த நாயக்கர் ஆட்சியில் தான் கோவிலில் இருந்த தமிழ் தூக்கி எறியப்பட்டு சமஸ்கிருதம் உள்ளே வந்தது.
அதுவரை இருந்த தமிழ் பிராமணர்களை(அய்யர், அய்யங்கார்) வெளியேற்றி தெலுங்கு பிராமணர்களை பணிக்கு அமர்த்தியது.
தமிழ் மக்கள் கீழ் நிலை படுத்தப்பட்டு தெலுங்கர்கள் ஆட்சி அதிகாரம், நிலம் உடமைகளை கைப்பற்றினர்.
தமிழ் ஆட்சி மொழி அந்தஸ்தை இழந்து, சமஸ்கிருதம் ஆட்சி மொழியானது. பெரியார் உள்ளிட்டோர் தமிழை சாடுவதும், ஆங்கிலத்தை பேணுவதும் அவரின் முன்னோர்கள் வழி வந்த எண்ணம் தான்.
அது வரை இருந்த ஆட்சி கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டு, தமிழர் நிலம் முழுவதும் 'பாளையங்களாக' பிரிக்கப்பட்டு, பாளையப்பட்டு முறை கொண்டுவரப்பட்டது.
தமிழனை வீழ்த்தியதற்கு அடையாளமாய் ஆமையை கொல்லும் நாயக்கர் சிலை..
ஒவ்வொரு பாளையத்திலும் "இனி தமிழன் எழ கூடாது" என தெலுங்கர்கள் இராணுவத்தை ஆங்காங்கே நிறுத்தி வைத்தனர்.
தமக்கு உதவிய சில கைக்கூலி தமிழ் சாதிகளுக்கு வறண்ட, புழகத்துக்கு புரோஜனம் இல்லாத பாளையங்கள் சன்மானமாக வழங்கப்பட்டன.
மண்ணின் மைந்தர்களை இழித்தும் பழித்தும் பேச புது இளைக்கிய வகையான 'பள்ளு இலக்கியம்' போன்றவை உருவாக்கப்பட்டன.
'பார்த்தாலே தீட்டு, தொட்டாலே தீட்டு' என்று தமிழ் இனம் சாதி புதை சேற்றில் புதைத்து ஒழிக்கப்பட்டது.
Example: http://naickernaidu.blogspot.in/2012/04/blog-post.html
பின்பு குல்பர்கா அரசின் அரசனான வெங்காசி என்ற மராட்டிய வந்தேறியின் படை எடுப்பைத் தொடர்ந்து சோழர்களின் தலைநகராம் தஞ்சையில் மராத்தியர் ஆட்சி அமைந்தது.
இன்று வரை எம் பாட்டன் ராஜ ராஜனின் திரு உருவ சிலை கோவிலுக்கு வெளியில் கேட்பாரற்று கிடக்க முக்கிய காரணமே இன்று தஞ்சை பெரிய கோவிலுக்கு நிர்வாகியாக விளங்கும் மராட்டியரே ஆகும்.
இதில் இருந்து யாம் தெரிந்து கொள்வது:
தமிழும், தமிழரும் ஆரியப்படை எடுப்பால் கெட்டதாக வரலாறு இல்லை. 'திராவிடராம்' கன்னடர், தெலுங்கர், மராத்தியர் ஆகியோரின் படைஎடுப்பாலே தமிழன் வீழ்ந்தான். இது மறுக்க முடியாத கசப்பான உண்மை.
தமிழக மண்ணில் எந்த காலத்துக்கும் வடுகர்களின் (கன்னடர், தெலுங்கர்) ஆதிக்கமே நீடிக்க வேண்டும் என்பதற்காக, இல்லாத ஆரிய பூச்சாண்டியை காட்டியதே திராவிடர்களின் உக்தி என்பதும் தெளிவாகிறது..
மேலும் ஆரியன் என்பவன் சமஸ்கிருதம் மொழி உடையவன் உண்மையெனில்.. தமிழில் இருந்து பிரிந்து சமஸ்கிருதம் கலப்பில் உருவான தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி மொழிக்காரர்கள் தானே ஆரியன்..
ஆரியனும் திராவிடனும் ஒன்று இதை அறியாத தமிழன் வாழ்க்கையே மண்ணு...