14/05/2021
சிறுநீரகக் கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு...
சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர
உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.
சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.
வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.
வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.
உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.
உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்...
தேன் இஞ்சி...
பெரிய இஞ்சி ஒன்றை எடுத்து, அதைத் தோல் சீவி, மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கிப் போட்டு, மேல் ஈரம் காய வெயிலில் வைத்து எடுத்து அவைகளை ஒரு சீசாவில் போட்டு, நல்ல தேனை அதன் மேல்மட்டத்திற்கு மேல் நிற்கும்படி விட்டு, நன்றாகக் குலுக்கி வெயிலில் வைத்து எடுத்து வைக்க வேண்டும்..
இதில் 2-3 துண்டுகள் எடுத்துக் காலை, மாலை சாப்பிட்டால், பித்தம், வாய்வு சம்பந்தமான வியாதிகள் குணப் படுத்தி ஜீரண சக்தியை கொடுக்கும்...
குவாண்டம் உலகம்...
விஞ்ஞானம் இதுவரை நம்மி வந்தபடி எல்லாம் திட திரவ வாயு என்பதை பொய்யாக்கியது குவாண்டம் தியரி.
பிரபஞ்சத்தை ஒப்பிடும் போது சர்க்கரை துகள் எந்த அளவு சிறியதோ, அதை போல் சர்க்கரை துகளை ஒப்பிடும் போது குவாண்டம் உலகம் சிறியது.
மிகவும் சக்தி வாய்ந்த நுண்ணோக்கியின் மூலம் குவாண்டம் உலகை பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ந்து போயினர்.
ஏனெனில் அந்த மட்டத்தில் அவர்கள் கண்டது விஞ்ஞான உலகையே திருப்பி போட்டது.
அவர்கள் அங்கு பார்த்தது எல்லாமே ஆற்றலால் அதிர்ந்து கொண்டு இருக்கக்கூடிய அணுக்களின் தொகுதியைத்தான்.
ஆம் இந்த பிரபஞ்சத்தில் நாம் காணும் அனைத்து பௌதீக பொருட்களும் உண்மையில் பொருட்களே அல்ல.
குவாண்டம் தியரி...
மனம் என்பது இல்லையெனில் பிரபஞ்சம் என்பது சாத்தியமில்லை.
வெற்றிடத்தில் குவாட்ரிக் ஆற்றல் (நுண்ணிய மின்னதிர்வு) செயல்படும்.
இப்போது நான் காணும் அனைத்தும் அணுக்களின் ஆற்றல் பரிமாற்றம் மட்டுமே...
டாக்டர் Vs நோயாளி...
நோயாளி : டாக்டர், நீங்க எழுதிக் குடுத்த TONIC-ஐ காலைல ஒரு மூடி , ராத்திரிக்கு ஒரு மூடி சாப்பிட சொன்னீங்க ??
டாக்டர் : ஆமாம் ,
நோயாளி : ஆனா , அந்த Tonic பாட்டில ஒரே ஒரு மூடி தானே இருக்குது ?
டாக்டர் : 😳 உங்களுக்கு எல்லாம் வைத்தியம் பார்த்தே நான் நோயாளி ஆகிட்டேன்...
திமுக வும் மதவெறியும்...
1969-ல் நாகர்கோவில் பாராளுமன்றத்துக்கு நடந்த இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து டாக்டர் மத்தியாஸ் போட்டியிட்டார்.
மத்தியாஸ்_க்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட கலைஞர், கிறிஸ்தவ பெருமக்களே... உங்கள் ஓட்டு சிவகாமியின் மகனுக்கா? மேரியின் மகனுக்கா? என்றார்.
காரணம், காமராஜர் இந்து. மத்தியாஸ் கிறிஸ்தவர்.
தமிழகத்தில் முதன்முதலில் மதவெறியைத் தூண்டி பிரச்சாரம் மேற்கொண்டவர் திமுக தலைவர் கலைஞர் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்...
முக்தியும் மனமும்...
ஆன்மாவாகிய நாம் முதல் பிறப்பில் இருந்து சேர்த்த எண்ணப் பதிவுகளே நம்மை மறுபிறவிக்கு அழைத்து செல்கிறது.
அதை நாம் மனதின் கர்மம் என்கிறோம். இந்த கர்ம வினைகளை ஒருகாலும் நாம் அழிக்கவே முடியாது.
பிரபஞ்சத்தின் உருவான தகவல் ஒருபோதும் அழியாது என தற்போது வாழும் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாங்கிங்கே ஒப்புக் கொண்டார்.
ஆம் நாம் தகவலை அழிக்கவே முடியாது. ஆனால் அந்த கர்மத்தில் இருந்து மனதை பிரிக்க முடியும்.
நாம் பற்றற்ற நிலையில் எல்லா ஆசைகளையும் துறந்தால் நம் ஆன்மா எண்ணப் பதிவுகளில் இருந்து படிப்படியாக விலகும்.
பாவம்-இரும்பு விலங்கிட்டும், புண்ணியம்- பொன் விலங்கிட்டும், நம்மை மறுபிறப்பிற்கு அழைத்து செல்லும்.
எனவே சித்த நிலைக்கு முயல்பவன் மனித வாசனைகள் அல்லாத காடுகளுக்கு சென்று குகைகளில் மறைந்து தனித்து வாழ்கிறான்...
நியான்டர்தால் மனிதர்களின் குகை சவ அடக்கங்கள்.. (Neanderthal Cave Burials)...
சுமார் 100,000 வருடங்களுக்கு முன்பு, பிணங்களை நிலத்தில் சவ அடக்கம் செய்யும் முறையை அறியாத நியான்டர்தால் மனிதர்கள், பிணங்களை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் நீண்ட குகைகளில் போட்டு விடுவார்களாம்..
சில அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நியான்டர்தால் மனிதர்கள், ஒருவரின் ஆத்மாவானது இறந்தபின் வேறு உலகத்திற்கு செல்ல ஏதுவான இடம் குகைகளே என்று நம்பினார்களாம்...
திராவிடம் என்றால் என்ன?
ஏன் கன்னட ராமசாமி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு திராவிட கழகம் என்று ஆரம்பித்தார்?
ஏன் தமிழ் கழகம் என்று ஆரம்பிக்கவில்லை?
திராவிட கழகம் கண்டவர்கள் என்ன இனத்தை சேர்ந்தவர்கள்?
ஏன் கன்னட ராமசாமி தனி தமிழ் நாட்டை அன்று வெள்ளையரிடம் கோரவில்லை?
இதற்க்கு தரவிடர்களின், திராவிடன்களின் , திராவிடச்சிகளின் , திராவிட சோம்பு தூக்கும் தமிழர்களின் பதில் என்ன?
எவனுமே கூறமாட்டான், ஏன்னா அவனுக்கு பணமும் பதவியும் தான் அவசியம்.
தமிழரை திராவிடர் என்று கூறுபவர்கள் , நம்மை ஆண்டு சுகம் கண்டு, நம்மை அழிக்க நினைக்கும் பஞ்சம் பிழைக்க வந்த கூட்டம்.
அடுத்து தமிழினத்தை விற்று பிழைப்பு நடத்தும் துரோக கும்பல்.
ஈ.வே.ராமசாமி ஒரு கன்னடர், அவர் கன்னடர் என்பதால் தான் தமிழ் கட்சி என்றோ, தமிழ் கழகம் என்றோ ஆரம்பிக்க வில்லை.
மேற்க்கத்தேயர் தற்போதைய இந்தியாவின் பூர்வ குடி மக்களை குறிக்க பயன் படுத்திய திராவிடம் என்பதை பயன் படுத்தினார், தன் மொழி பற்றை மறக்காத ராமசாமி. இதுவே தமிழின அழிவிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
திராவிடம் பேசுபவன் எல்லாம் பிறப்பால் தமினாக இருக்க முடியாது, கன்னடன், தெலுங்கன் ஆகத்தான் அதிகமாக இருக்கிறது, இதன் உண்மை அறியா தமிழ் உறவுகளும் இதற்குள் சிக்கி விட்டன் .
திராவிடத்தை அழித்து, தமிழர் தமிழரை அளும் நிலையை உருவாக்கக உறுதி கொள்வோம் தமிழ் உறவுகளே...
இரண்டு பெண்களின் புலம்பல்...
வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..
ஏன்.. குடிச்சிட்டு வந்து ரொம்ப சண்டை போடறாரா..?
இல்லே.. டாக்டர் கொடுத்த டானிக்கைக் கூட ஊறுகாய் இருந்தாதான் குடிப்பேன்னு அடம் பிடிக்கிறாருடி..😺