பிரபஞ்சம் என்றால் என்ன?
இந்த உலகம், மற்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள் எல்லாம் சேர்ந்ததுதான் இந்த பிரபஞ்சம் ஆகும்.
கற்பனைக் கெட்டாத விஸ்தாரணம் இந்த பிரபஞ்சம். எளிதாக புரிந்து கொள்ளுவதற்காக ஆகாயத்தை நாம் பிரபஞ்சம் என்று கொள்ளலாம்.
எல்லா நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி இருப்பது வானம் தானே. அந்த ஆகாயம் எவ்வளவு சக்தி மிக்கதாய் இருந்தால் அத்தனை எடையுள்ள நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி நிற்கும்?
அது தான் பிரபஞ்ச சக்தி (Cosmic Energy) எனலாம். கடவுள் என்றும் கூறலாமே.
பிரபஞ்ச சக்தி மகத்துவமானது. அபரிதமானது. மேலும் நாம் அதை இலவசமாக பெறலாம்.
ஆனால் எத்தனை பேர் அந்த பிரபஞ்ச சக்தியை பயன்படுத்துகிறோம்?
மிக மிகக் குறைவான மக்களே பிரபஞ்ச சக்தியின் பெருமைகளை அறிந்திருக்கின்றனர். வெகு சிலரே பிரபஞ்ச சக்தியைப் பெற்று பயன் பெறுகின்றனர். பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?
தியானம் மூலமே நாம் பிரபஞ்ச சக்தியை உறிஞ்ச முடியும். மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யும் போது நாம் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு பெற முடியும். அந்த சக்தியை நாம் உள் வாங்கவும் முடியும். பிரபஞ்ச சக்தியை நாம் உள் வாங்கும் போது நம் உடலில் உள்ள நோய்கள் நீங்கும். மனம் உறுதி பெறும். நினைத்ததை சாதிக்க முடியும். மன உளைச்சல் நீங்கும்.
நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. அவை தியானம் பண்ணும் போது திறக்கும். அப்பொழுது பிரபஞ்ச சக்தி நம் உடலில் பாயும். நம் வாழ்க்கை வெற்றிகரமானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் மாறும்.
ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைட்டமின் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதற்குப் பதிலாக இலவசமாக கிடைக்கும் பிரபஞ்ச சக்தியை தியானம் மூலம் பெற்று பயன் பெறலாமே?