1-திங்கள் நாட்கள் அல்லது திங்களின் பக்கங்கள் அல்லது ஒருக்கலைகள்.
2-கிழமை (வாரம்)என்னும் ஞாயிறு நாட்கள் (Solar days).
3-நாள்மீன்கள் உடுக்காலங்கள் (நட்சத்திரங்கள்).
4-உடுக்களும் கோள்களும் ஒன்றோடொன்று புணர்வதை பற்றிய ஓகம் (யோகம்).
5-கணிய அல்லது வானியல் கணக்கைக் குறிக்கும்.
முதலில் பஞ்சாகத்தை பார்த்து நாள்கோள் குறிப்புகளைச் சொல்பவன் என்ற பொருளிலேயே,
பார்ப்பான் என்ற பெயர்ச்சொல் வந்திருக்க வேண்டும்,
ஆதாரமாக தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் இயற்றிய பாயிரத்தில்,
ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியனே எனும் வரிக்கு நாள்கோள் பற்றிய,
கணியநூலை (பஞ்சாங்கத்தை)க் கற்றுத்தேர்ந்தவன் என்று பொருளாகும்,
இதிலிருந்து மாறுபடும் கருத்துகள் நான்மறையிலிருந்து ஓத்துகளை ஓதிவந்தப் பூசாரியை பார்ப்பான் என்று வந்ததாக கூற்று,
வேள்வி வளர்த்து தமிழரில்லாத பார்ப்பானை வேளாப் பார்ப்பானாக (வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த)கூறிவந்ததாக பாவணார் கூற்று,
பார்ப்பனப் பாங்கன், சூத்திரப் பாங்கன் என்றும் பாங்கர்கள் இருவகைப்பட்டார்கள்,
பாண்குடியினரான பிற்கால பறையரே சூத்திரப் பாங்கர் என்று பாவணார் கூறுகிறார்,
அவரணராக வைக்கப்பெற்ற பறையர்களுக்குச் சூத்திரன் என்ற இழிவான பட்டம் என்றுமே இருந்ததேயில்லை,
பாணர்களுக்கு உரியதாயிருந்த பாங்கன் தொழில் பின்னர் பார்ப்பார் வசமாகியதாக கூறுகிறார்,
ஆக நான்மறையிலிருந்து ஓத்துகளை ஓதிவந்த பூசாரியே (பார்ப்பான்) பிற்காலத்தில் சூத்திரனாக்கப் பட்டானா?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.