15/05/2017
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஏன் ? அரசியல்வாதிகளின் சுருட்டலால் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்...
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 7000 கோடி பாக்கி வைத்துள்ளது தமிழக அரசு, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம், பென்சன், என ஊழியர்களுக்கு சேர வேண்டிய 7000 கோடி ரூபாயை கொடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது தமிழக அரசு.
மேலும் ஆளுங்கட்சியினர் தலையீட்டில் பல கோடி சுருட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதை கண்டித்தும் நிலுவையில் உள்ள பணத்தை தரும் படியும் கோரிக்கை வைத்தே இந்த போராட்டம் நடைபெறுகின்றது.
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநில பொது செயலாளர் லட்சுமணன் இது தொடர்பாக முன்னர் கூறிய போது...
மாநிலம் முழுவதும், எட்டு போக்குவரத்து கோட்டங்களில், 1.40 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 65 ஆயிரம் தொழிலாளர்கள் ஓய்வு பெற்றனர். தினமும், 1 கோடி கி.மீ., பஸ்களின் பயண ஓட்டம் உள்ளது. 2.26 லட்சம் பயணாளிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு எந்த விதமான பணபலன்கள் வழங்கப்படாமல் உள்ளது. தமிழகம் முழுவதும், 319 பணி மனைகளில், நாள்தோறும், 3000 பேர், ஆளுங்கட்சியின் ஆதரவுடன் எவ்வித பணியும் செய்யாமல், சம்பளம் பெற்று வருகின்றனர். இதன் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ஒன்றரை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பஸ்களுக்கு தேவையான உதரி பாகங்கள் இல்லாத அவல நிலையில், பஸ்களை இயக்க வேண்டிய நிலை உள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களின், பி.எப்., தொகை, இன்சூரன்ஸ் தொகை, வங்கியில் வாங்கிய கடன் தொகை என தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை, அந்தந்த துறைக்கு செலுத்தாமல், 6000 கோடி ரூபாய் வரை போக்குவரத்து துறையினர் சுருட்டியுள்ளனர்.
இது போன்ற நிலையால் தொழிலாளர்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர். எனத் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் சுருட்டலாலும் பொறுப்பற்ற நிர்வாகத்தாலும் கடைசியில் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான்..
பொதுமக்கள் வருடத்தில் 364 நாட்கள் படும் கஷ்டத்தை ஓட்டு போடும் ஒரு நாளில் மறக்கடித்து விடுகின்றது பணம்..
பிறகு யாரை குறை சொல்லி என்ன பயன் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்...
முட்டாள் தமிழா திருந்து...
ஏறு தழுவுதலுக்கு தமிழகம் முழுவதும் மாணவர்கள் பேராடிய போது போராடத்தை மாணவர்கள் கைவிட வேண்டும் என சொன்ன ரசினி...
காவிரி பிரச்சினையில் தமிழக ஒட்டுநர்களை தாக்கிய கன்னட வெறியர்களை கண்டித்து ஒரு வார்த்தையாவது விட்டாரா..
சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ரசினி மிகப்பெரிய நடிகன்..
அவரது ரசிகர்கள் என்று தான் உணர்வார்களோ?
பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...
பதன்கோட் தீவிரவாத தாக்குதில் உயிர் நீத்த ராணுவ வீரரின் குடும்ப பெண்களை காவல் நிலையத்திற்கு முன்பாகவே வைத்து தாக்கும் கும்பல்...
ட்ராவல் ஏஜண்ட் ஒருவன் இவர்களிடம் பணம் பெற்று ஏமாற்றியுள்ளான், அதற்காக பஞ்சாப் மாநிலம் Gurdaspur மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் ராணுவ வீரரின் குடும்பத்தார் புகார் கொடுக்க வந்துள்ளனர், அவர்களை காவல் நிலையத்திற்கு முன்பாகவே ஒரு கும்பல் காட்டுமிராண்டி தனமாக தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம் தேசத்திற்காக உயிர் நித்த வீரணுக்கு நம் தேசம் அளிக்கும் பரிசு... என கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது...
வெள்ளையர்கள் செய்த அட்டூழியங்கள்...
அமெரிக்காவில் இந்த வெள்ளையர்கள் கருப்பு மக்கள் மீது செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல...
அவர்கள் ஆயிரக்கணக்கான வெள்ளையர்களை வைத்து கருப்பர்களை கொல்வதற்காகவே அமைப்பை வைத்து இருந்தனர். இதில் கொடுமை என்னவென்றால் இன்றும் கூட அந்த அமைப்பு உள்ளது..
இதை பற்றி மற்றொரு சந்தர்ப்பங்களில் கூறுகிறேன்..
இன்று ஆப்பிரிக்காவில் இவர்கள் செய்த அட்டூழியங்களை சொல்கிறேன் வாசியுங்கள் ..
ஹெக்டேர் பீட்டர்சன்...
ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் வெள்ளையர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொண்டு கருப்பின மக்களை கொடுமை படுத்தி வந்தனர்.
அவர்களுக்கு உணவு நீர் இடம் எல்லாவற்றிலும் பாகுபாடு நடந்தது...
மீறி தட்டி கேட்பவருக்கு மரணமே பதிலாக வந்தது..
இதை எதிர்த்து இந்த பீட்டர்சன் சாலையில் அமர்ந்து மக்களுடன் போராடினார்.
அப்போது திடீரென வெடி சத்தம் கேட்டது பொத்தென்று விழுந்தார் பீட்டர்சன்...
ஆம் அவரை இராணுவ குண்டு துளைத்தது.
இன்னொருவர் உடனே கை தாங்களாக பீட்டர்சனை பிடித்து தூக்கி கொண்டு அவரும் உயிர் பயத்தில் கலவர முகத்துடன் அந்த இடத்தில் இருந்து ஓடினார்...
இந்த சம்பவத்தை அருகே இருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் புகைப்படம் எடுத்தார்..
இது தான் பின்னர் இவர்கள் போராட்டத்தின் சின்னமாக அறிவிக்க பட்டது...
இந்த புகைப்படங்கள் உலகம் எங்கும் அனுப்பப்பட்டு போராட்டம் தூண்டப்பட்டது.
பீட்டர்சனை தூக்கி கொண்டு ஓடியது போன்ற புகைப்படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானது. இதே போன்று சிலைகள் வைக்கப்பட்டு போராட்டம் தீவிரப்படுத்த பட்டது...
பிறகு தான் சூழ்நிலையை உணர்ந்த வெள்ளையர் அரசாங்கம் இறங்கி வந்தது..
இன்று தென் ஆப்பிரிக்கா சுதந்திரமாக இருக்க காரணம் பீட்டர்சனின் இறப்பு தான்...
போராட்டம் செய்து குண்டடிபட்டு இறக்கும் போது இந்த பீட்டர்சனுக்கு வயது என்ன தெரியுமா ?
வெறும் 12 வயது தான்....
இலுமினாட்டி - ஜல்லிக்கட்டும் உலக அரசியலும்...
நாம் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை உணவான பால் இரண்டு வகைப்படும் (2 types of protein); இவை A1 மற்றும் A2 என்று வகையருக்கப்படுகிறது.
உலகிலுள்ள அனைத்து பாலூட்டிகளும் இயற்கையாக A2 வகை பாலையே சுரக்கின்றன. மனிதனின் தாய்பாலும் இந்த A2 வகை பால் தான்.
இயற்கையாக A2 வகை பாலை தான் மனிதர்களால் செரிக்க இயலும்.
ஆகவே நம் முன்னோர்கள் இதே வகை பாலை சுரக்கும் நமது பசுவினங்களின் பாலை நம் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தனர்.
ஆனால் பால் வியாபாரம் வர்த்தக மயமாக்கப்பட்டதற்கு பிறகு ஐரோபாவில் அதிகமாக பால் கறக்கும் மாடுகளை மட்டுமே தேர்வு செய்து அவற்றை மட்டுமே இனப் பெருக்கம் செய்ய அனுமதித்தனர் (selective breeding).
இவ்வாறு செய்தமையால் இவ்வகை மாடுகளில் மரபணு மாற்றம் ஏற்ப்பட்டது (mutation).
இதன் விளைவாக A1 என்ற பால் வகை உருவானது. சுவையற்ற இப்பால் உடலுக்கு தீங்கு செய்யக்கூடியது.
சக்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கு இந்த A1 வகை பாலும் ஒரு முக்கிய காரணமாகும்.
குழந்தைகளுக்கு இந்த A1 வகை பாலை செரிக்கும் ஆற்றல் இல்லை. இப்பால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்க செய்யும்.
சரி, இது இந்த அளவுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்க கூடியது என்று நினைத்தால், இப்பாலை உற்பத்தி செய்யும்முறை இதைவிட கொடூரமான தீங்குகளை ஏற்ப்படுதக்கூடியது.
அதாவது ஒரு மாடு பால் சுரக்க வேண்டுமென்றால் அது கன்று ஈன்று இருக்க வேண்டும். அந்த கன்றைப் பார்க்கும் போது தாய்மாட்டுக்கு இயக்குநீர் (hormone) சுரந்து அது பாலை சுரக்க தூண்டும்.
ஆனால் இது பல மாடுகள் இருக்கும் பண்ணையில் சாத்தியமில்லை.
ஆகையால் மாட்டுப் பண்ணையாளர்கள் செயற்கையாக இயக்குநீர்களை மாட்டின் உடம்பில் ஊசியின் மூலமாக செலுத்தி பால் சுரக்க வைக்கின்றனர்.
இவ்வாறு செய்வதால் மாட்டின் பாலிலும் இந்த இயக்குநீர்களின் (hormone) அளவு அதிகமாக இருக்கிறது. இந்த இயக்குநீரின் பெயர் ஈத்திரோசன் (Estrogen).
இது பெண்ணிய இயல்பை தூண்டும் இயக்குநீராகும். இந்த ஈத்திரோசன் (Estrogen) கலந்த A1 பாலை உண்ணும் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள், மற்றும் தமிழர்கள் போற்றிக் காக்கும் கற்ப்பொழுக்கத்தையும் கெடுக்கும் விதமாக பிற பாலின ஈர்ப்பு தூண்டலை இயல்பு நிலையிலிருந்து அதிகப்படுத்தும்.
அதுமட்டுமின்றி ஆண் குழந்தைகளுக்கு சோம்பேரித்தனத்தையும், பாலின சம நிலை மாற்றத்தையும் (திருநங்கைகளாக மாறுதல்) ஏற்ப்படுத்தும்.
இது ஒரு சமுதாய பிரச்சனையே தூண்டிவிடும் அளவிற்கு கொடியது.
தமிழகத்திலுள்ள அனைத்து நாட்டு மாட்டினங்களும் A2 பாலை சுரக்கக் கூடியது.
இவைகள் பாலை கம்மியாக சுரந்தாலும் அது உடலுக்கு எந்த வித தீங்கையும் உண்டாக்குவதில்லை. மனிதர்களுக்கு உகந்த பாலும் இந்த A2 பாலே.
சரி, சல்லிக்கட்டுக்கும் உலக அரசியலுக்கும் என்ன தொடர்பு என்று கேட்க்கிறீர்களா?
கொஞ்சம் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள்...
தமிழகத்திலுள்ள நாட்டு மாட்டினங்களின் சாணத்தில் இருந்து பெறப்படும் பொருட்களின் மூலத்திலிருந்தே இயற்க்கை விவசாயம் (natural farming) செய்ய பயன்படும் பூச்சுக்கொல்லி, உரம், பஞ்சகாவியா, போன்ற விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் செய்ய முடியும்.
இது சர்சி (jersey) வகை மாடுகளின் சாணத்திலிருந்து செய்தாலும் பயன்தராது.
ஆகவே மோன்சண்டோ (Monsanto) போன்ற பெரிய நிறுவனங்கள் இயற்க்கை விவசாயத்தை செய்ய உதவும் மாட்டினங்ககளை அழிப்பதற்காக இந்தியா முழுவதும் வெண்மை புரட்சி என்ற திட்டத்தை செயல்படுத்தி கிராம கிராமங்களாக சென்று சர்சி (jersey) மாடுகளை வினியோகித்தனர்.
இது படிப்படியாக இந்தியா முழுவதும் இருந்த நாட்டு மாடுகளை அழித்தே விட்டது.
நமது கிராம மக்களுக்கு கூட நாட்டு மாட்டுக்கும் சர்சி மாட்டுக்கும் வித்யாசம் தெரியாமல் போய்விட்டது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏறு தழுவுதல் (சல்லிக்கட்டு) என்ற வீர விளையாட்டு இருந்தமையால் நமது ஆண் மாடுகள் காப்பாற்றப் பட்டு வந்தது.
ஆண் மாடுகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பெண் மாடுகள் சேர்ந்தே காப்பாற்றப்பட்டு வந்தது.
இது ஆரம்பத்தில் மோன்சண்டோ போன்ற பெரிய நிறுவனங்களுக்கு ஒரு தடையாக இல்லை.
ஆனால் தற்போது தமிழகத்தில் வரும் இயற்க்கை வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு அவர்களை கதிகலங்க செய்து விட்டது.
இந்தியா முழுவதும் காணாமல் போன நாட்டு மாடுகள் தமிழகத்தில் மட்டும் மிஞ்சி இருப்பது எப்படி என்று அவர்கள் தேடிய போது தான், தமிழகத்தில் மட்டுமே உள்ள தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்) நாட்டு மாட்டினங்களை வளர்ப்பதை ஒரு கடமையாகவே கொண்டுள்ளனர் என்பது புலப்பட்டது.
இதை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக தான் சல்லிகட்டிற்கு தடை செய்ய முயற்சி செய்கின்றனர்.
தமிழர்களே.. ஏறு தழுவுதல் என்பது நமது இனத்தின் இறையாண்மை சார்ந்தது. இது கிட்டத்தட்ட ஒரு மதம் போன்றது.
ஏனெனில் மாட்டை பிடிக்கும் வீரர்கள் விரதமிருந்து அம்மாட்டினை பிடிக்கிறார்கள்.
ஆகவே இது ஒரு சமயம் சார்ந்த நம்பிக்கையாகவே நம் மக்களால் கருதப்படுகிறது.
இதை மாற்றும் அதிகாரம் இந்தியாவிற்கே இல்லை.
ஆகவே, நமது அடையாளமான எதையும் இனி இழக்க வேண்டாம்...
தமிழா விழித்தெழு...
ஈழத் தமிழர்களுக்காக இப்போது குரல் உயர்த்தி பேசும் தமிழக தமிழர்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ பேசியதுண்டா?
அதைப்பற்றி நமக்கு என்ன கவலை நாம்தான் சுயநல பதர்களாகிவிட்டோம்.
சாதியால் மதத்தால் பிரிந்து கிடக்கின்றோம் . கல்வி வேலைவாய்பு, பொருளாதாரம், கலை , நாகரிகம் , பண்பாடு, இனஉணர்வு என எல்லாவற்றிலும் பிளவுபட்டு கிடக்கின்றோம்.
இந்த பிளவு நிலைத்திருக்க வேண்டும் என்பதில் திராவிடம் பேசுபவர்கள் ஒரே அணியாக செயல்படுகின்றனர்.
பல நூற்றாண்டு காலமாக இந்த மண்ணையும் மக்களின் உழைப்பையும் சுரண்டி பிழைக்கும் தெலுங்கர், மலையாளி, கன்னட மார்வாடி வடவர்களை நாம் ஏன் புறகணிக்க கூடாது ?
உண்மை கசக்கத்தான் செய்யும் . முரண்பாடுகளை களைய வேண்டும் இன பற்று தான் நம்மை வாழ வைக்கும் , ஆளவைக்கும்..
தமிழ் பேசுகிறவன் எல்லாம் தமிழன் அல்ல...
திராவிட ஆரிய மாயைகளில் சிக்கி சீரழிந்து போன தமிழன் எப்படி மீளபோகிறான்?
எப்போது நாட்டை ஆளபோகிறான்?
யாரும் இங்கே புதிதாக தனி தமிழ்நாடு கோரிக்கையை முன் வைக்க வில்லை..
மூத்த தமிழ் அறிஞர்கள் செய்த அரும்பணிகளை மறந்து போனதால் நினைவூட்டுகிறோம்..
பன்னாட்டு நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமயகி போன தமிழன் தமிழ் தேசியத்தை அறிய தவறிவிட்டான்.
தாய் மொழி வழி கல்வியை மறந்து விட்டதால் இப்படி தாழ்வான நிலைக்கும், சொந்த மண்ணில் வேலை வாய்ப்பிற்கும் ஏங்கி தவிக்கிறான்...
முட்டாள் தமிழினமே...
தமிழர்கள் திராவிடம் பேசிய அழிந்து போவார்கள் என்பது உறுதியோ...
இங்கே நாம் தமிழகத்தில் மட்டும் தான் திராவிடம் என்று கூரி கொண்டிருகிறோம்...
ஆனால் ஒரு மலையாளியோ கன்னடனோ தெலுங்கனோ அவ்வாறு கூறி கொள்வதில்லை..
அப்படி அவர்கள் கூறியிருந்தால் திராவிட நாடு என்று திராவிட கட்சிகள் கேட்ட போதே உருவாகியிருக்கும்..
எந்த திராவிடனும் தமிழனை தவிர திராவிடத்தை பயன்படுத்தவில்லை..
நாம் முட்டாள்கள் என்பது இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்...
அர்த்த சாஸ்திரம் மதுவும்... டாஸ்மாக் மதுவும்...
இன்றைய டாஸ்மாக்குக்கான வரைபடத்தை உருவாக்கித் தந்தவர் சாணக்கியர் என்றால் ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை..
சிதறிக்கிடந்த இனக்குழுக்களை ஒன்றிணைத்து அரசும், பேரரசும் எப்போது உருவானதோ, அப்போது அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பை மூன்று சாஸ்திரங்கள் ஏற்றன.
ஒன்று, சமூக வாழ்வியலை நிர்ணயிக்கும் மனு தர்ம சாஸ்திரம்.
இரண்டு, அரச நீதியை வலியுறுத்தும் அர்த்த சாஸ்திரம்.
மூன்று, குடும்ப அமைப்பை நெறிப்படுத்தும் காம சாஸ்திரம் என்கிற காம சூத்திரம்.
இந்த மூன்று நூல்களுமே ஆள்வோருக்கு சாதகமாக எழுதப்பட்டிருப்பதால்தான் காலம்தோறும் பெரும்பான்மையான மக்கள் இவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் தான் இன்று டாஸ்மாக்குக்கு எதிராக மக்கள் போராடி வருவதும்.
குடி என்கிற மது, மக்களை அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது என்பதை சாணக்கியர் எனும் கவுடில்யர் அறிந்திருந்தார்.
எனவே அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளில் மக்கள் ஈடுபடாமல் இருக்க இதையே ஓர் ஆயுதமாக பயன்படுத்த முடிவு செய்தார்.
அதன் விளைவுதான் அவரால் எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரம்.
இந்த நூலின் ஒரு பகுதி குடியை பற்றி விளக்கமாக பேசுகிறது. அதன் தீமைகளை விரிவாக பட்டியலிடுகிறது. என்றாலும் அரசே குடியை விற்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக பரிந்துரைக்கிறது.
அதாவது மது நாட்டுக்கும் உடலுக்கும் கேடு என அறிவித்துவிட்டு விற்பனை செய்யும்படி அறிவுறுத்துகிறது.
இதன் வழியாக அரசு கஜானாவுக்கும் பணம் கொட்டும்; மக்களும் போதையில் ஆழ்ந்து அரசாங்கத்துக்கு எதிராக போராட மாட்டார்கள் என ஆள்வோருக்கு புரிய வைத்தது.
சுருக்கமாக சொல்வதென்றால் குடியை அறம் சார்ந்து மட்டும் பார்க்காமல் அதன் பொருளாதாரம் பற்றியும் நுட்பமாக சிந்தித்து வணிக நடவடிக்கையாக அதை மாற்றியது.
அர்த்த சாஸ்திரம் நூலில் சாணக்கியர் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?
மிகைக் குடியை தடை செய்ய வேண்டும். அது தண்டனைக்குரிய குற்றம். இதை கண்காணிக்க சுராதயக் ஷா என ஒரு கண்காணிப்பாளரையும், அவருக்கு கீழ் அதயாக் ஷா எனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைக்க வேண்டும். இவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
மதுபானங்கள வடித்து எடுக்கும் உரிமையும், அதனை கோட்டைக்கு உள்ளும் வெளியிலும் விற்கும் பொறுப்பும் அரசுக்கு மட்டுமே உண்டு. தனியார் யாரும் மது விற்கக் கூடாது.
அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை சுராதயக் ஷா’ - அதயாக் ஷா குழு கண்டுபிடித்து அரசரின் முன்னால் நிறுத்த வேண்டும். அரசர் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
மது அருந்தும் உயர் குடியினர், கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று தங்களுக்கு தேவையானவற்றை வீட்டில் சேகரித்து கொள்ளலாம்.
மற்றவர்கள் மது அருந்துவதற்காக அரசாங்கம் கட்டித் தந்துள்ள கட்டிடங்களில் மட்டுமே குடிக்க வேண்டும். மற்ற இடங்களில் குடிப்பவர்கள் தண்டனைக்கு உரியவர்கள்.
அந்நியர்கள் தங்குவதற்காக விடுதி கட்டியவர்கள், அங்கு மது விற்கக் கூடாது. இதற்கு பதிலாக அந்த விடுதியின் ஒரு பகுதியில் அரசே மது விற்பனை செய்ய வேண்டும்.
திருவிழா காலங்களில் நான்கு நாட்களுக்கு மட்டும் வீட்டிலேயே மதுவை காய்ச்சி குடிக்கலாம். ஆனால், அப்போதும் பொது இடங்களில் அனுமதி பெறாமல் காய்ச்சக் கூடாது...
அர்த்த சாஸ்திரத்தில் உள்ள மது தொடர்பான இந்த கட்டளைகள், மவுரியப் பேரரசின் கஜானாவை நிரப்பின. விளைவு, அடுத்தடுத்து வந்த அனைத்து பேரரசுகளும் இந்த வழிமுறைகளையே கடைப்பிடிக்க ஆரம்பித்தன.
அந்த வகையில் பிற்கால சோழர்களின் காலத்தில் வசூலிக்கப்பட்ட ‘ஈழப் பூச்சி வரி’யும், குடிக்கு உரியதுதான்.
ஆங்கிலேயர் ஆட்சியில் அப்காரி (Abhari Excise System) சட்டம், 1790ல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, மது வகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கான உரிமைகள் அதிக தொகை செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து 1799ல் ஆங்கிலேய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில், தஞ்சை மாவட்டம் முழுவதிலும் 1793 - 94ம் ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ‘கள் வரி’யின் மதிப்பு 700 சக்தமாக்கள் (ரூ.1088) என குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தொகை, 1902 - 03ம் ஆண்டுகளில், அதே தஞ்சை மாவட்டத்தில் ரூ. 9 லட்சத்து 28 ஆயிரமாக அதிகரித்தது.
1857ம் ஆண்டு நடைப்பெற்ற விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய ஆங்கிலேய அரசு, அதன் மூலம் கிடைத்த அதிகாரங்களை பயன்படுத்தி பல்வேறு மையப்படுத்தும் நடவடிக்கைகளிலும், வருமானத்தை பெருக்கும் முயற்சிகளிலும் இறங்கியது.
அப்போது அவர்களுக்கு கைகொடுத்ததும் குடி நிர்வாகம்தான்.
இதற்கு 1799ம் ஆண்டு அயர்லாந்தில் மேற்கொண்ட முயற்சிகளை முன்னுதாரணமாக ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொண்டனர்.
மையப்படுத்தப்பட்ட மது உற்பத்தி சாலைகளை ஏல முறையில் மரியாதையும் மூலதனமும் உள்ள பெருவியாபாரிகளிடம் ஒப்படைக்கும் வழக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர். கூடவே சாராய கடைகளையும் ஏல முறையில் விநியோகிப்பது, அரசு நிர்ணயித்த விலையில் பானங்களை விற்பது போன்றவற்றை அமல்படுத்தினர்.
இந்த அடிப்படையில் மக்கள் தொகை அதிகமுள்ள எல்லாப் பகுதிகளிலும் மையப்படுத்தப்பட்ட சாராய ஆலைகளை அமைக்க வேண்டும் என மாகாண அரசுகளுக்கு 1859ல் சுற்றறிக்கை அனுப்பினர்.
இதனை அடுத்து பூனாவில் 10 ஆயிரம் பேரை வைத்து பெரிய அளவில் சாராய உற்பத்தி செய்து வந்த தாதாபாய் துபாஷ் என்பவரிடம் பம்பாய் மாகாண சாராய உற்பத்தியின் ஏகபோகத்தை அளித்தார்கள்.
தென்னிந்தியாவில் 1898ல் ஸ்காட்லாண்ட் நிறுவனமான மெக்டொவல்ஸ் தனது உற்பத்தியை தொடங்கியது. இந்த ஆலையையே 1951ல் விட்டல் மல்லையா - விஜய் மல்லையாவின் தந்தை - வாங்கினார்.
இப்படித்தான் ஆங்கிலேயர் ஆட்சியில் நாடு முழுவதும் சாராய முதலாளிகள் மாகாண அளவில் உருவாக்கப்பட்டனர்.
1947, ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயர்கள் நம் நாட்டைவிட்டு செல்லும்போது நில வருவாய்க்கு அடுத்த படியாக குடி மூலமான வருவாயே இந்தியாவில் இருந்தது.
இவை எல்லாம் கடந்தகால வரலாறுகள் மட்டுமல்ல. இன்றைய நிஜமும் கூட.
குடி மூலமாக வருவாயை பெருக்குவதும், மக்களை மதுவுக்கு அடிமையாக்கி சிந்திக்க விடாமல் தடுப்பதும், ஊழல் அரசுக்கு எதிராக அவர்கள் அணி திரண்டு போராடாமல் பார்த்துக் கொள்வதும்தான், டாஸ்மாக்கின் நோக்கம்.
இதுவே தான் சாணக்கியர் வகுத்த அர்த்த சாஸ்திரத்தின் சாராம்சமும்....
மீண்டும் வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை: 700 கிலோ மீட்டர் பறந்தது...
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
வட கொரியா தொடர்ச்சியாக பல அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.
இதற்கு அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
ஆனாலும், இதை வட கொரியா காது கொடுத்து கேட்பதாக இல்லை.
இவ்வளவு கண்டனங்களுக்கு மத்தியிலும், வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நேற்று நடத்தியுள்ளது.
வட கொரிய தலைநகர் பியோங்யாங்கின் உள்ள குஸாங்கிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை 700 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்துள்ளது.
இதை தென் கொரியா உறுதி செய்துள்ளது.
கடந்த மாதம் வட கொரியா மேற்கொண்ட இரு ஏவுகணை சோதனைகளில், ஏவுகணைகள் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்த நிலையில், இது 700 கிலோ மீட்டர் பறந்துள்ளது முக்கிய விடயமாகும்.
இந்த சோதனைக்கு தென் கொரியா மற்றும் ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தென் கொரிய தலைவர் மூன் ஜே-இன் இது குறித்து அவசரமாக விவாதிக்க பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டியுள்ளார்...
ஆச்சர்யப்பட வைக்கும் பண்டைய மக்களின் பழக்க வழக்கம்...
ஹெரோடோட்டஸ் [Herodotus]... என்பவர் உலக வரலாற்றின் தந்தை
என்றழைக்கப்படுபவர்..
இவரது உலக வரலாற்று புத்தகம் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அவர்களது பழக்கவழக்கங்களை தொகுத்தவர்.
இவரது காலம் இயேசு கிருஸ்து பிறப்பதற்கு முன்பு ஏறக்குறைய 480 ஆண்டுகள் என்று கணக்கிட்டுள்ளனர்.
இவரது பூர்வீகம் கிரேக்கம் ....
இவரை பற்றிய சில விமர்சனமும் உண்டு இதை பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் பாப்போம்.
இவரது நூல்களில் இருந்து தான் தமிழர்களின் பழக்க வழக்கங்களும் எகிப்தியர்களின் சில பழக்க வழக்கங்களும் ஒன்றாக உள்ளதாக பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..
இது மிகப்பெரிய பகுதி இதை பற்றி விரிவாக மற்றொரு சந்தர்ப்பத்தில் பாப்போம்.
ஒரே ஒரு சின்ன விஷயத்தை மட்டும் தருகிறேன் படியுங்கள்.
தமிழர்களை பாண்ட் நாடு என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.
பாண்ட் நாட்டிற்கும் எகிப்தியர்களும் உள்ள ஒற்றுமையை குறிப்பிடுகிறார்.
பைபிள் சொல்ல கூடிய நோவா.
குரான் சொல்லக்கூடிய நூஹ் நபி.
இந்த தீர்க்க தரிசியின் காலத்திலையே வாணிக தொடர்பு இருந்ததாக கூறுகிறார்.
கிட்டத்தட்ட 70 க்கும் மேல் உள்ள
ஒற்றுமைகளை அதாவது தமிழர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை கூறுகிறார்...
இங்கு நான் சொல்ல வரும் விஷயம் தமிழர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை அல்ல..
எகித்தியர்களின் வரலாற்றை குறிப்பிடுகையில் இந்த
விஷயத்தையும் கூறுகிறார்..
அதாவது பண்டைய எகிப்திய மக்கள் மூன்று மாதத்திற்கொருமுறை பேதி மருந்து உண்டு தங்களது சரீரத்தை சுத்தம் செய்கிறவர்களாக இருந்துள்ளனர் என்கிறார்..
அவர்களின் நம்பிக்கையின் படி அணைத்து நோயுக்கும் மூல காரணம் உணவு அதை பார்த்து பார்த்து உண்டாலும்.. உடலில் தங்கி நோயை உண்டாக்கும்..
ஆகவே மூன்று மாதத்திற்கொருமுறை உடலை சுத்தம் செய்யும் பழக்கம் உள்ளவர்களாக பண்டைய எகித்தியர்கள் உள்ளனர் என்று குறிப்பிடுகிறார்...
இன்றைய காலகட்டத்திற்கு இந்த தகவல் பெரிதும் உதவியாக இருக்குமென நம்புகிறேன்...
வரலாற்றில் மனிதனை கடவுளாக ஆக்கப்பட்ட தருணம்...
நான் சொல்ல போகும் விஷயத்தை நன்றாக கூர்ந்து கவனித்து படியுங்கள்..
கொஞ்சம் சிந்தனையை மாற்றுனீர்கலாயின் பதிவு திசை திரும்பி விடும் ..
இது மேம்படுத்தி சொல்வதில்லை..
இதுவரை உங்களுக்கு யாரும் சொல்லாத செய்தி..
அதுவும் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் உள்ள ஒரு விஷயம் அதன் தாக்கம் இன்றும் நம்மிடம் உள்ளது.
என்ற ரீதியின் அடிப்படையில் கூறுகிறேன்..
இறைவன் = இறையன்..
இந்த இரண்டு வார்த்தையும் ஒன்று போன்று இருந்தாலும் அர்த்தங்கள் வேறு வேறானது.
இறைவன் என்றால் கடவுள்..
இறையன் என்றால் புலவன் அதாவது மனிதன் ...
இந்த இரண்டு வார்த்தைக்கும் நடுவில் உள்ள வார்த்தை
ய மற்றும் வ
என்கிற வார்த்தை தான்...
உதாரனத்திற்க்கு துறைவன் + துறையன்..
இரண்டு வார்த்தையும் ஒன்றாக இருந்தாலும் இரண்டுமே வேறு வேறு அர்த்தம் உள்ளவை..
கடல் துறையின் தலைவன் துறைவன்...
கடல் துறையில் வாழ்பவன் துறையன்..
இரண்டும் கிட்டத்தட்ட ஒரே வார்த்தை ஆனால் பெரிய வித்யாசம் உள்ளது...
அதே போன்று தான் இறைவன் + இறையன்..
அதாவது கடவுள் + மனிதன்..
குழப்பமாக இருந்தால் இதுவரை மட்டும் மீண்டும் ஒரு முறை படித்து விட்டு வாருங்கள்...
இப்பொழுது பாருங்கள்....
சங்க கால புலவர்களில் ஒருவர் நல்லிரையனார் இவர் கிள்ளிவளவன்
காலத்தில் வாழ்ந்தவர்..
இந்த கிள்ளிவளவன் யார் தெரியுமா ?
சோழன் வம்சத்தில் வந்த ஒருவர்
அதாவது செம்பியன், அடுத்த தலைமுறை எல்லாளன், இளஞ்சேட்சென்னி, கரிகால் சோழன் நெடுங்கிள்ளி, நலங்கிள்ளி, அடுத்த தலைமுறை கிள்ளிவளவன்..
இந்த கிள்ளிவளவனின் ஆட்சியை புகழ்ந்து பாடும் பொழுது..
நல்லருள் புரியும் இறைவன் கிள்ளிவளவன்.. என்று பாடியுள்ளனர்..
அதாவது நல்லருள் புரியும் இறையன் என்று பாடுவதற்கு பதிலாக இறைவன் என்று பாடியுள்ளனர்..
இங்கு தான் மனிதனை கடவுளாக மாற்றக்கூடிய விஷ[ய]ம் முதன் முதலில் தூவப்படுகிறது...
பிறகு ஆட்சியாளனை கடவுள் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு புலவர்களை கடவுளின் சீடர்களாக மாற்றப்பட்டு..
[அதாவது மன்னரின் உதவியாளர்கள்]
இப்படியே பரிணாமம் பெற்று கடவுள் ஸ்தானத்தை இன்று மலத்தையும் சுமந்து கொண்டு இருக்கும் சக மனிதனுக்கு கொடுக்கபடுகிறது..
சங்க காலத்தில் கடவுளை கடவுளாக இறைவனுக்கு கொடுக்கும் மரியாதையை தமிழர்கள் கொடுத்து கொண்டு தான் இருந்தனர்.
அதன் காரணமாக தான் திருவள்ளுவர் முதல் குறளே ஆதி பகவன் முதற்றே உலகு என்றால்...
அண்டம் பேரண்டம் ஆதி பகவன் ஒன்று பேரண்டத்தின் கடவுள் அவனுக்கே....
ஆதியும் அந்தமும் அவனே என்ற சங்க கால இலக்கணங்கள் எல்லாம் கடவுளை ஒருவனாகவும் மனித தன்மை அற்றவனாகவும் சரியாக மதித்து எழுதப்பட்டது....
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் பாவை இவற்றை அழகாக கூறும்..
இன்று கடவுளின் தன்மையை புரிந்து கொள்ளாமல் மனிதனிடமும் கடவுள் தன்மை வரும் என்று தவறாக நினைக்க.
இறையன் + இறைவன்..
நடுவில் உள்ள ய என்கிற வார்த்தையும்
காரணமாக இருக்கலாம்...
Subscribe to:
Posts (Atom)