12/08/2018

இயங்கியல்...


இயங்கியல் நண்பர்களே எப்போது எதிரி பற்றி மட்டும் சிந்திக்காதீர்கள்

எதிரி நேராக நின்று அழிக்க முடியாது அவன் பலம் அப்படி பலத்துக்கு காரணம் உலகில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் ஆசைகள் இதுவே அவனுக்கு பலம் சேர்க்கிறது.

அதனால நீங்களும் எதிர்மறை சிந்தனையில் இருக்காமல்
நேர்மறை சிந்தனை செய்யுங்கள்.

உலகம் இயற்கை செழித்து வாழ்வது போலவும் எல்லாரும் மகிழ்ச்சி நேர்மையாக குடும்பமாக வாழ்வது போலவும் கனவு காணுங்கள்.

பிரபஞ்சத்தில் பதிவு செய்யுங்கள் அது தான் நாம் கனவு காண்பதை செய்யும் சக்தி.

நாமே நமது வருங்காலத்தை முடிவு செய்கிறோம்.

நாம் பயந்து வரும் காலம் மோசமாக இருக்கும் என்று நினைத்தால் மோசமாக அமையும் அதுவே இங்கு நடக்கும் இயங்கியல்.

அதனால அனைவரும் எவ்ளோ கெட்ட, மனசுக்கு  கஷ்டம் தரும் பதிவு போடுகிறீர்களோ அதற்கு அதிகமாக மகிழ்ச்சி  இயற்கை பதிவை போடுங்கள்..

நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் விதையுங்கள் கண்டிப்பாக நல்லதே நடக்கும். இதுவே அனைவர்க்கும் நான் விடுக்கும் வேண்டுகோள்.

முக்கியமாக
நல்லதை பேசுங்கள்
ஒழுக்கத்தை பற்றி
இயற்கை பற்றி
அன்பு பற்றி
காதல் பற்றி
காமம் பற்றி
அறிவியல் பற்றி
பக்தி பற்றி
குழந்தை பற்றி
சிரிப்பு பற்றி

இதுமாரி நெறைய மனசுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விஷங்கள் இருக்கிறது.

இன்றைய உலகிலும் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளது. அதை ஊடகம் மறைகிறது நாம் வெளிக்கொண்டு நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.

ஊரில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக ஆசை இல்லாமல் இருந்தால் அங்கே எந்த இலுமினாட்டியும் ஒன்றும் பண்ண முடியாது.

அஸ்திவாரத்தை சரி செய்வோம்..

நல்ல எண்ணங்கள்.. நல்ல செயல்களை விதை நல்லதே நடக்கும் அதை யாராலும் தடுக்க முடியாது...

பிரபஞ்ச இரகசியம்...


1. நாம் இந்த பிரபஞ்சத்தின் வெளிப்பாடுகள். தனித்துவமான வெளிப்பாடுகள். அதுதான் உன்னுடைய பெருமை, அதுதான் உன்னுடைய
சுயமரியாதை. அதுதான் உனக்கு ஒரு உள்ளார்ந்த மதிப்பை கொடுக்கிறது.

2. புது மனிதன் மரங்களில், பறவைகளில், நதியில்,
கடலில், மலைகளில், நட்ஷத்திரங்களில் உயிர்துடிப்போடு உள்ள கடவுளை காண்பான். அவன் இந்த பிரபஞ்சம் முழுமையும் தன்னுடைய கோவிலாக மாற்றிக் கொள்வான்.

3. ஆன்மீகம் என்பது வானத்தில் பறக்கும் பறவையின்
பார்வையை போன்றது. குன்றுகள், ஆறுகள், செடிகள், மரம் மக்கள் என அனைத்தின் மீதும் அந்த பார்வை விழும். அதுதான் ஆன்மீகத்தின் அழகே. அது ஒரு குறிப்பிட்ட வகையானதோ,
குறிப்பிட்ட விதமானதோ அல்ல.

4. நட்சத்திரங்கள், பாறைகள், நதிகள் என இவை யாவும் உணர்வின்றி இருக்க முடியாது. உணர்வுதான் அவற்றின் வாழ்க்கையே. மனிதன் தலைகீழாகி
விட்டான். மூளை முக்கியத்துவம் பெற்றுவிட்டது. மேலும் மூளை உணர்வை அடக்கி வைக்கிறது.

5. பிரபஞ்சம் என்பது தொடர்ந்த படைப்பாற்றல்தான். அது ஏதோ யாரோ ஒருவரால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல. அதுவே தெய்வீகமானதுதான்.

6. நீ இயற்கையுடன் இயைந்திருந்தால் முதன்முறையாக நேசம் என்பது என்ன என்பதை உணர்வாய். அது யாருக்கும் குறிப்பாக தனிப்பட்ட விதத்தில்
என்று இருக்காது,. அது யாரையும் நோக்கி இருக்காது...

யின் – யாங்...


பிரபஞ்சம் இரண்டுவித சக்திகளால் ஆனது. மேல்மட்டத்தில் இரண்டும் எதிரெதிரானவை, ஆனால் ஆழத்தில் அவை எதிரெதிரானவை அல்ல. இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. அவற்றை யின் – யாங் என்றோ, எதிர்மறை – நேர்மறை என்றோ, ஆண் – பெண் என்றோ கூறலாம். உண்மையில் யின் – யாங் எல்லா விதமான எதிரெதிரானவற்றையும் இணைத்துச் செல்கிறது. அடிப்படை உண்மை என்னவென்றால் எதிரெதிரானவை எதிரெதிரானவை அல்ல, முரண்பாடுகளல்ல, அவை ஒன்றோடு ஒன்றோடு இணைந்தவை, ஒன்றை ஒன்று சமன் படுத்துபவை.

ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் உள்ள எதிர்மறை சக்தியை கண்டுபிடித்து ஒன்றாக இணைய தியானம் உதவுகிறது.

மனிதன் எனபவன் ஆண் பாகமும் பெண் பாகமும் ஒன்றாய் உள்ளே இணைந்தவன்தான்.

இந்த உலகின் பிரிவினைகள் அனைத்தும் மனதின் பிரிவினைகள்தான்.

யின் – யாங் என்பது ஒரு வட்டம், ஆண் தன்னுள் பெண்ணை கண்டுபிடிக்க வேண்டும், பெண் தன்னுள் ஆணை கண்டு பிடிக்க வேண்டும்.

அரிஸ்டாட்டிலின் தர்க்கத்தின் அடிப்படையில் மட்டுமே வாழ்க்கை அமைவதில்லை, அதில் இரண்டும் கலந்திருக்கிறது.

2.மேல் நோக்கி செல்லுதல்...

உனது சக்தி மேல் நோக்கி செல்ல ஆரம்பிக்கும்போது புவியீர்ப்பு விசை உனது சக்தியை பாதிப்பதில்லை என எல்லா ஞானிகளும் விளக்கி கூறுகின்றனர். உனது சக்தி வேறொரு விதியின் படி செயல்பட ஆரம்பிக்கிறது, ஒளியின் விதி. நீ மேல் நோக்கி எழ ஆரம்பிக்கிறாய், பின் மனிதனுக்கு ஒரு புதுவிதமான வித்தியாசமான உலகத்தைப்பற்றி தெரிய வருகிறது.

ஜென்குரு உன்னை அடிக்கும்போது உனது சக்தி மேல் நோக்கி எழுகிறது, நீ கவனமடைகிறாய்.

புத்திசாலித்தனம் மேல் நோக்கி எழுகிறது, அறிவுஜீவித்தனம் கீழ் நோக்கி செல்கிறது.

எந்த அளவு உன்னிடம் தன்னுணர்வு இருக்கிறதோ அந்த அளவு உனது சக்தி மேல் நோக்கி பாய்கிறது.

குணடலினி என்பது ஒரு மையம், அது சக்தி மேல் நோக்கி எழும்போது செயல்பட ஆரம்பிக்கிறது.

தண்ணீரும் மேல் நோக்கி போகும். ஆனால் அதற்கு சிறிதளவு சூடு தேவை, அவ்வளவுதான்.

3.அழகு..

அழகு என்பது அன்பின் உருவாக்கம்தான். அன்பிற்குரியவர் மிக அழகாக தோன்றுவார், அது அன்பு கொண்ட கண் உருவாக்குவது. சாதாரணமாக மக்கள் அடுத்தவர் மிக அழகாக தோன்றியதால் தாங்கள் அன்பில் விழுந்து விட்டதாக நினைக்கின்றனர். உண்மை இதற்கு நேர் எதிரானது. அவர்கள் காதலில் விழுந்து விட்டதால்தான் அடுத்தவர் மிக அழகாக தோன்றுகின்றனர். அன்புதான் அடிப்படை.

அழகு உடல் சார்ந்தது மட்டுமல்ல, அடிப்படையில் அது ஆன்மீக ரீதியானது.

உனது கண்ணாடியை சுத்தம் செய், உன்னைச் சுற்றி எவ்வளவு அழகு உள்ளது என்று பார்க்க முடியும்.

ஒரு படைப்பு செயல் இந்த உலகின் அழகை மேலும் வளப்படுத்தும்.

வன்முறையின்றி ஏதாவது நிகழும்போது அது அதற்கே உரிய அழகை கொண்டுள்ளது.

எங்கெல்லாம் நீ அழகை பார்க்கிறாயோ அப்போது நீ புனித பூமியில் நிற்பதை நினைவில் கொள்.

இறைமையின் முதல் தரிசனம்தான் அழகு...

மனித உயிரை காப்பாற்றுவதற்கான ஓட்டம்...


கேரள மாநிலம் இடுக்கியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை  மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சிறுதோணி பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

பாலமோ சில நிமிடங்களில் வெள்ளத்தில் மூழ்கிவிடும்.

இந்நிலையில் தான் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் குழந்தையை மருத்துவமனையில் சேர்ப்பதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட பீகாரைச் சேர்ந்த கனய்யா குமார் என்ற பேரிடர் மீட்பு அதிகாரி பாலம் மூழ்கும் முன்னர் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடுகிறார்.

இறைவனின் அருளால் குழந்தை பத்திரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு விட்டது.

Big Salute to kanayya Kumar

படம்: ரிஜோ ஜோசப் (மலையாள மனோரமா)...

இந்த நற்செயலை முன்னெடுத்த 'மக்கள் பாதை' அமைப்பின் இளைஞர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்...


பிராமணர்களை அழைத்து திதி கொடுப்பதை நிறுத்துங்கள்...


மகன்கள் தன் தாயையே கொச்சைப்படுத்தும் திதி மந்திரம்..

தன் தாயையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, வாத்தியார் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.

இனியொரு முறை திவசம் செய்யும் போது இந்த மந்திரத்தை உச்சரிப்பார்களா?

உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

இன்னொரு மந்த்ரம். இன்றும்... அம்மாவுக்கு சிரார்த்தம், திவசம், திதி செய்கிறேன் என ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் பவ்யமாய் கடமைகளை நிறைவேற்றும் மகன்களை நாம் பார்ர்க்கிறோம்.

ஒரு வாத்யாரை பணம் கொடுத்து அமர்த்தி... அவர் மூலமாக, தன்னை விட்டுப் பிரிந்த தன் தாய்க்கு வருஷாவருஷம் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் அந்த மகன்கள் இதன் வாயிலாக அம்மாவின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பரிபூரணமாக பெறுவதாக நம்பிக்கையோடு செய்கிறார்கள்.

ஆனால்...?

என்மே மாதா ப்ரலுலோபசரதிஅனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்...

நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்ப வேண்டியுள்ளது.

ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத் தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டு போய் சேர்ப்பீர்.

இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை, வாத்தியர் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.

இந்த அர்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும் போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?

உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா? 

உலகமயமாக்கலின் முதல் எதிரியே தற்சார்பை வாழ்வியலாக கொண்ட மக்கள் தான்...


அதனால் தான் நம்மை சுற்றியே உலகமயமாக்கலின் வலைகள் அதிகம் பின்னப்பட்டன..

ஏனெனில் நாம் மீண்டும் தற்சார்பை நோக்கி சென்றுவிட கூடாது என்பற்காக...

காளத்திக்கும் தெலுங்கருக்கும் என்ன தொடர்பு?


தற்போது ஸ்ரீ காளஹஸ்தி (sri kalahasti) என்று அழைக்கப்படும் காளத்தி புகழ்பெற்ற சைவ திருத்தலம் ஆகும்.

கி.பி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தர் "சந்தமார் அகிலொடு" என்று தொடங்கும் பதிகமும் "வானவர்கள் தானவர்கள்" என்று தொடங்கும் பதிகமும் இத்திருத்தலத்தின் மீது பாடியுள்ளார்.

அதே நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் "விற்றூணொன் றில்லாத" என்று தொடங்கும் பதிகம் இத்திருத்தலத்தின் மீது பாடியுள்ளார்.

கிபி 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் "செண்டா டும்விடையாய்" என்று தொடங்கும் பதிகம் இத்திருத்தலத்தின் மீது பாடியுள்ளார்.

இக்கோவில் உள்ள மலை (கைலாசகிரி என்று ஆவணங்கள் குறித்தாலும்) சிவனுக்கு கண்கொடுத்த கண்ணப்ப நாயனார் பெயரால் "கண்ணப்பர் மலை" என்று மக்களால் அழைக்கப்படுகிறது.

இது பண்டைய தமிழ்நாடான தொண்டைநாட்டின் பகுதியென்பதால் காளத்திக்கு அருகே தொண்டமநாடு அல்லது தொண்டைமான் நாடு எனும் ஊர் உள்ளது.

கிபி 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரதேவ நாயனார் "கயிலை பாதி காளத்தி பாதி" எனும் அந்தாதி பாடியுள்ளார்.

இது பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.

இதே ஆசிரியர் எழுதிய "திருக்கண்ணப்ப தேவர் திருமறம்" எனும் நூலும் பதினோராம் திருமறையில் உண்டு.

இதே நூற்றாண்டில் வாழ்ந்த "கல்லாட தேவ நாயனார்" இயற்றிய "திருக்கண்ணப்ப தேவர் திருமறம்" எனும் அதே பெயரைக் கொண்ட இன்னொரு நூலும் பதினோராம் திருமறையில் உண்டு.

கிபி 11 ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழன் இத்தலத்தை கோவிலாகக் கட்டினான்.

இங்கே உள்ள கண்ணப்பர் கோவிலுக்கு மண்டபமும் தாழ்வாரமும் ராஜேந்திர சோழன் காலத்து வேளிர் மன்னன் "கங்கைகொண்டான் இருங்கோளன்" என்பவரின் தாயார் "புத்தங்கையார்" கட்டிக்கொடுத்துள்ளார்.

முதலாம் குலோத்துங்கன் காலத்தில் "காளத்தி உடையான் மரக்கால்" என்ற அளவுக் கருவி பயன்பாட்டில் இருந்ததாகக் கல்வெட்டு உள்ளது.

இக்கோவிலின் கல்வெட்டுகள் இறைவனை "தென்கயிலாயமுடையார் திருக்காளத்தி உடைய நாயனார்" என்று குறிக்கின்றன.

இப்பகுதியில் ஓடும் ஆறு தற்போது "சொர்ணமுகி" என்று அழைக்கப்படுகிறது.

இது கிபி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் நாயன்மார்களின் வரலாற்றினைத் தொகுத்து படைத்த திருத்தொண்டர் புராணத்தில் (பெரிய புராணம்) கண்ணப்ப நாயனார் பற்றிய பகுதியில் "பொன்முகலி" என்று குறிக்கப்பட்டுள்ளது. (தேவாரம் "முகலி" என்று மட்டும் குறிக்கிறது).

கிபி 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் காளத்திநாதரைப் புகழும் பாடல் "சிரத்தானத்தில்..." என்று தொடங்கி "திருக்காளத்திப் பெருமாளே" என்று முடிகிறது.

கிபி 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த "சேறைக் கவிராயர்" (கவிராச பிள்ளை அல்லது ஆசுகவிராயர் என்றும் அறியப்படுபவர்) பாடிய உலா ஒன்று உள்ளது.

"திருக்காளத்திநாதர் உலா" அல்லது "காளத்தியாள்வார் உலா" என்று இது அழைக்கப்படும். சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்ட படைப்பு ஆகும்.

அதே புலவர் "திருக்காளத்தி நாதர் இட்டகாமிய மாலை" எனும் நூலையும் எழுதியுள்ளார்.

இதைக் கண்டெடுத்து பதிப்பித்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா ஆவார்.

கிபி 16 ஆம் நூற்றாண்டில் "வேளாக்குறிச்சி ஆதின" சீடரான "வீரை ஆனந்தக் கூத்தர்" இத்தலத்தின் மீது இயற்றிய "திருக்காளத்திப் புராணம்" புகழ்பெற்றது.

கிபி 17ஆம் நூற்றாண்டில் சிவப்பிரகாசர் என்பவரும் அவர் தம்பியும் சேர்ந்து இயற்றிய "சீகாளத்தி புராணம்" எனும் படைப்பும் உண்டு.

இதன் தலபுராணம் 18 ஆம் நூற்றாண்டில் கருணைப் பிரகாசர், ஞானப் பிரகாசர், வேலப்ப தேசிகர் ஆகிய மூவரால் சேர்ந்து பாடப்பட்டுள்ளது.

பொன்முகரி ஆற்றுக்கு செல்லும் படித்துறை முகப்பில் ஒரு சிலை உள்ளது.
1912 ஆம் ஆண்டிலேயே 9 லட்சம் செலவில் திருப்பணி செய்த "தேவக்கோட்டை இராமநாதன் செட்டியார்" என்பவரின் சிலைதான் அது.

"பொங்கல்" அன்றும் திருவிழா அன்றும் ஆக ஆண்டின் இரண்டு நாட்களில் மட்டும் உற்சவர் மலையை வலம் வரும் சடங்கு நடக்கிறது.

தமிழக எல்லையில் இருந்து வெறும் 64கி.மீ தொலைவில் இருக்கும் காளத்தி தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதி ஆகும்.

திருப்பதி போல காளத்தியும் தமிழகத்தின் பகுதியே ஆகும்.

இது ஆந்திராவுக்கு போனது ஏன்?

கிபி 1516 ல் கிருஷ்ணதேவ ராயர் நூற்றுக்கால் மண்டபம் ஒன்று கட்டியுள்ளார்.

63 நாயன்மார் சிலைகளுக்குப் போட்டியாகத் தொடர்பேயில்லாமல் பாண்டவர் சிலைகளை கொண்டுவந்து வைத்தார்.

கிருஷ்ண தேவராயரின் அவைப்புலவர் தூர்ஜாட்டி "ஸ்ரீ காலஹஸ்தீஸ்வர மகாத்யம்" எனும் நூலும் "ஸ்ரீ காலஹஸ்தீஸ்வர சதகம்" எனும் நூலும் இயற்றியுள்ளார்.

அதன்பிறகு அச்சுதராயர் ஒரு பதினாறுகால் மண்டபம் கட்டியுள்ளார்.

இது தவிர தெலுங்கருக்கும் காளத்திக்கும் எந்த தொடர்பும் இல்லை...

திமுக குடும்ப சண்டை ஆரம்பம்...


தமிழக மீனவர்களை அழித்துக் கொண்டிருக்கும் பாஜக - அதிமுக அரசுகள்...


பன்னாட்டு கம்பெனிகளின் கப்பல்களும், இந்திய கப்பல்களும் இப்படி நமது படகுகள் மீது மோதி மூழ்கடிப்பதும், எண்ணற்ற மீனவர்கள் கடலோடு சாவதும் மாதத்திற்கு ஒரு நிகழ்வாக இப்போது தொடர்கதையாகி விட்டது.

ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருந்தாலும் காது கேட்காதவர்களுக்காக மீண்டும் மீண்டும் ஊதுவோம்.... நண்பர்களுக்காக, கடந்த 6ம்தேதி கொச்சி நடுக்கடலில் கிட்டத்தட்ட 40 நாட்டிகல் மைல் தொலைவில் கடலோர காவல்படை கப்பல் மோதி விசைப்படகு தாழ்ந்து போனது. அதில் மொத்தம் 14 பேர் இருந்தனர். இருவர் மீட்கப்பட்டனர். மூவர் பலி. மீதியுள்ள 9 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. இன்று 5 நாட்கள் ஆகிறது. பாதுகாப்பு அளிக்க வேண்டிய கப்பல்படை மோதிவிட்டு அவர்களை மீட்காமல் சென்று விட்டது. குரங்கனி தீ விபத்தை விட மோசமான விபத்து நிகழ்ந்துள்ளது. இது வரை எந்த ஊடகத்திலும் செய்தி வரவில்லை. அந்த 9 பேர் குடும்பங்கள் கதி கலங்கிப் போய் இருக்கின்றன. ஒக்கி புயல் பாதித்த அதே மீனவப் பகுதி மக்கள்தான் தற்போதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு தேடுகிறது தேடுகிறது தேடிக் கொண்டே இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது...

மே 17 இயக்க திருமுருகன் காந்தியும் உண்மையும்...


இந்த அரசாங்கம் என்ன செய்யும்.. ஏன் செய்கிறது.?

அரசியல்வாதிகள் இயக்கங்கள் மக்களை ஏன் ஏமாற்றுகிறது..

எதை நோக்கிய முடிவு என அறிந்தோர்க்கே உண்மை புலப்படும்..

யோகத்தினால் மாற்றலாம் இவை அனைத்தையும்...


உயிர் உடம்பில் இல்லை ...
ஆம் நம் உயிர் உடம்பில் இல்லை ...
பிறகு எங்கே இருக்கிறது ?

கர்மா (வினை) என்றால் என்ன ...
என்னுடைய கர்மா என்ன செய்யும்...
அது எங்கே இருக்கிறது ?

ஆத்மா சாவதில்லை...
ஆத்மா வலியில் இருக்கிறது ,
அது அனு தினமும் வேதனை படுகிறது..
உன் இறப்புக்கு பின்னால்..
அப்படி என்றால் அதற்கு மரணம் இல்லையா ?

கோயில் என்ற உடம்பை ...
நம்முடைய மிகப்பெரிய சொத்தாகிய உடம்பை..
நாம் ஏன் அழித்து கொண்டு இருக்கிறோம் ?

கிருத யுகத்தில் மனிதனது ஆயுள் 1000
திரேதா  யுகத்தில் மனிதனது ஆயுள் 600
துவாபர யுகத்தில் மனிதனது ஆயுள் 200
கலி யுகத்தில் மனிதனது ஆயுள் 120....

ஆனால் இன்று..?

யோகத்தினால் மாற்றலாம் இவை அனைத்தையும்...

பாஜக மோடியின் ரஃபேல் விமான ஊழல்...


இயற்கை என்றுமே தமிழ்நாட்டின் பக்கமே...


கேரளா மாநில  இடுக்கி அணையை காப்பாற்ற முல்லைப்பெரியாறு அணையில்  142 அடிக்கு மேல் நீர் தேக்க கூடாது என்ற வழக்கை கேரளா வாபஸ் பெற வேண்டிய நிலைமை.

142 அடிக்கு மேல் முல்லைபெரியாரில் நீர்தேக்கினால் மட்டுமே இடுக்கி அணையை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் கேரளாவுக்கு.

முல்லை பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீரை தேக்க முடியும்.

காரணம் இதுதான்.

முல்லை பெரியாறு அணைக்கு கீழே இருப்பது இடுக்கி அணை.

இந்த இடுக்கி அணை ஆசியாவிலிருக்கும் உயரமான வளைவு அணைகளுள் (arch dam) இது இரண்டாவது மிகப்பெரிய அணை.

இந்த அணை விவசாய தேவைக்கோ, குடிநீர் பயன்பாட்டிற்கோ கட்டப்பட்ட (1973) அணை அல்ல .

167.68 மீட்டர் உயரம் கொண்ட இந்த பிரமாண்ட அணை 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 72 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் அளவிற்கு பெரியது.

ஏறக்குறைய நம் மேட்டூர் அணையின் கொள்ளளவில் மூன்றில் இரண்டு பங்கை இந்த அணை கொண்டிருக்கிறது.

750 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க கட்டப்பட்ட இந்த அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அரபிக் கடலில் நேரடியாக கலந்துவிடும்.

இந்த அணை கட்டப்பட்ட பிறகு இதுவரை இரண்டுமுறை (1992, 2018) மட்டுமே அதன் முழு கொள்ளளவை அடைந்திருக்கிறது.

இந்த அணை நிரம்பாததற்கு காரணம் மேலேயிருக்கும் முல்லை பெரியாறு அணை. முல்லை பெரியாறு அணையின் தண்ணீர் குடிநீருக்கும், விவசாய பாசனத்திற்கும் தமிழகத்தின் பக்கம் திருப்பிவிடப்படுவதால் இடுக்கி அணை நிரம்ப போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.

முல்லை பெரியாறு அணை இல்லாவிட்டால் இடுக்கி அணை வருடம் முழுவதும் நிறைந்திருக்கும். அதற்கு தடையாக இருப்பது முல்லை பெரியாறு அணை. அதனால்தான் அந்த அணையை அகற்ற அணை பலவீணமாக இருக்கிறது, அணையில் ஓட்டை விழுந்துவிட்டது என பல கதைகளை சொல்லி 155 அடி தண்ணீர் தேக்கப்பட்டு வந்த முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க செய்துவிட்டது கேரளா.

பிறகு தொடர்ச்சியான சட்ட போராட்டத்தால் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கும் உரிமையை பெற்றுக் கொடுத்தார் மறைந்த முதல்வர் அம்மா.

இடுக்கி அணையில் நீர் நிரம்ப வேண்டும். அதற்கு இடைஞ்சலாக இருக்கும் முல்லை பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்பதற்காக முல்லை பெரியாறு அணை பற்றிய வதந்திகளை கேரள அரசும், கேரள ஊடகங்களும் தொடர்ச்சியாக செய்து வந்தன.

1973ல் கட்டப்பட்ட இடுக்கி அணை 6 ஆண்டுகளாகியும் நிரம்பாததால் 1979ல் மலையாள மனோரமா பத்திரிக்கை ஒரு வதந்தியை மக்களிடையே பரப்பி பீதியாக்கியது. முல்லை பெரியாறு அணையில் ஒரு யானை நுழைந்து போகும் அளவிற்கு ஓட்டை விழுந்துவிட்டது. அதனால் எப்போது வேண்டுமானாலும் அந்த அணை உடையலாம். அணை உடைந்தால் முல்லை பெரியாறு ஆற்றை ஒட்டியிருக்கும் மக்கள் அனைவரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு அரபிக் கடலில் பிணமாக மிதப்பார்கள் என்ற வதந்தியை மக்களிடையே பரப்பியது. மக்கள் பீதியடைந்து முல்லை பெரியாறு அணைக்கு எதிராக போராட ஆரம்பித்தார்கள்.

அவர்கள் முல்லை பெரியாறு அணை உடையப் போவதாக சொல்லி 39 ஆண்டுகளாகிறது. தற்போதுவரை முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாக தமிழக, கேரள அரசின் சார்பில் நிபுணர்களை கொண்டு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு அறிக்கை கொடுத்திருக்கிறது.

ஆனாலும் கேரள ஊடகங்களும், கேரள அரசும் திருந்தவில்லை. தொடர்ந்து மக்களிடையே பயத்தை கிளப்ப 'டேம் 999' என்ற படத்தை எடுத்து மக்களை அச்சுறுத்தினார்கள். Dam 999 என்ற தலைப்பே விஷமத்தனமானது. Dam 999 என்பது முல்லை பெரியாறு அணையின் ஆயுள். முல்லை பெரியாறு அணையை கட்டி அந்த இடத்தை பயன்படுத்திக் கொள்ள  பிரிட்டிஷ் அரசு திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் 999 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருந்தது. அதைதான் மலையாளிகள் படத்திற்கு பெயராக வைத்தார்கள்.

விஷமத்தனமான கருத்துக்களோடு இருமாநில மக்களிடையே பகைமையை ஏற்படுத்த எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதித்தார் அப்போதைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா.

ஆனால் உண்மையில் அவர்கள் வதந்தி பரப்புவதுபோல முல்லை பெரியாறுஅணை உடைந்தாலும் கேரள மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. காரணம் முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவைவிட மிகப்பெரியது இடுக்கி அணை. முல்லை பெரியாறு அணையின் அதிகபட்ச நீர் தேக்குத்திறன் 15 டி.எம்.சி ஆனால் இடுக்கி அணையின் கொள்ளளவு 72 டி.எம்.சி.

முல்லை பெரியாறு போன்ற நான்கு அணைகளின் தண்ணீரை இடுக்கி அணை என்ற ஒரே அணையில் தேக்கிடமுடியும். மேலும் முல்லை பெரியாறு அணை அமைந்திருப்பது மேற்கு தொடர்ச்சி மலையின் மேல் பகுதியில்,  இடுக்கி அணை இருப்பது அதன் அடிவாரத்தில்.

முல்லை பெரியாறு அணை உடைந்தாலும் வெள்ளம் பாய்ந்துவரும் வழியில் எந்த ஊர்களும் இல்லை. மலைக்கு நடுவிலும்,  காடுகளுக்கு இடையேயும் பாய்ந்து வந்து இடுக்கி அணையில் அந்த தண்ணீர் சேர்ந்துவிடும்.

இந்த உண்மை கேரள அரசிற்கும், மலையாள ஊடகங்களுக்கும் நன்றாக தெரியும் ஆனாலும் வெறும் அரசியல் ஆதாயத்திற்காக முல்லை பெரியாறு அணையை எரிச்சலோடு பார்க்கிறார்கள்.

தற்போது 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை இரண்டாம் முறையாக முழுமையாக நிறைந்திருக்கிறது. இடுக்கி அணை தண்ணீரால் வெள்ளத்தில் மிதக்கிறது அலுவா நகரம்.

தற்போது அந்த மக்கள் முல்லை பெரியாரிலிருந்து இடுக்கி அணைக்கு தண்ணீர் வந்துவிடக்கூடாது என பிராத்தனை செய்கிறார்கள்.

ஆனால் நாம் உதவி செய்ய நினைத்தாலும் நம்மால் எதுவும் செய்ய முடியாது. 142 அடிவரை மட்டுமே முல்லை பெரியாறுஅணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அதற்கு மேல் தண்ணீரைதேக்க வேண்டும் என்றால் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்திருக்கும் வழக்கை வாபஸ் பெற வேண்டும். அவர்கள் வழக்கை வாபஸ் பெற்றால் மட்டும்தான் கர்னல் ஜான் பென்னி குயிக் கட்டிக்கொடுத்த 155 அடிவரையிலான அணையில் தண்ணீரை தேக்க முடியும்...

போராடியும் தோற்றுப் போன தமிழகம்...


தலைமை இல்லாமல் இங்கு எதுவும் செய்ய முடியாது என்று இங்கு பலபேர் கூறுகிறார்கள்...


உங்களின் இந்த மனநிலை தான் அவர்களின் வெற்றி...

நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் ஒருவன் கூறியதை கேட்கும் நீங்கள்..

ஏன்..? உங்களுடன் ஒருமித்த கருத்தில் இணைந்துள்ள உங்களை சுற்றியிருக்கும் மக்களுடன் ஒன்றிணைந்து செயல்பட முடியாதா..?

முடியும், அதை நிகழ்த்தி காட்டிய ஒரே மண் நம் தாய் தமிழீழம் தான்...

நாகபஞ்சமி...



நம் நாட்டில் பாம்பைத் தெய்வமாகக் கொண்டாடி பூஜித்து வரும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

பல கோயில்களில் அரசமரத்தின் கீழ் பெரிய நீளமான கற்களில் பாம்பு உருவங்கள் பதிக்கப்பட்டிருக்கும்.

அதற்கு மக்கள் மஞ்சள், குங்குமம் இட்டு, பால் அபிஷேகம் செய்து பூசிப்பார்கள்.

ராகு கேது தோஷம் இருப்பவர்களும் இதைப் பூசிக்கின்றனர்.

திருநாகேஸ்வரம், காளஹஸ்தி போன்ற ஊர்கள் நாகபூஜைக்கு மிகப் பிரபலமானவைகள்.

நாகத்திற்காக சிறப்பு பூஜை செய்யும் நாளொன்றும் உண்டு.

ஆவணி மாதம் வரும் பஞ்சமி திதியில் "நாகபஞ்சமி" என்ற திருநாள் வருகிறது.

நம் பாம்பாட்டிச் சித்தரும் பாம்பின் சிறப்பைப்பற்றி பாடல்கள் இயற்றியிருக்கிறார்.

"நாதர்முடி மேலிருக்கும் நாகப்பாம்பே "என்ற பாடலில்,
"குற்றமற்ற சிவனுக்குக் குண்டலமானாய்,
குருந்திரு மாயனுக்குக் குடைநீயானாய்,
கற்றைக்குழல் பார்வதிக்குக் கங்கணமானாய்”

என்று நாகத்தின் சிறப்புகளைச் சொல்கிறார்...

கேரள அரசியல்வாதிகளே... உங்களுக்கான இயற்கையின் செருப்படி...


சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அதிரடி நீக்கம்...


விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அதிரடியாக  நீக்கப்பட்டுள்ளார்.

விடைத்தாள் மறுமதிப்பீடு விவகாரத்தில் பதிவாளர் இருந்த கணேசனுக்கு தொடர்பு என ஆசிரியர்கள் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.

பதிவாளர் கணேசன் மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளதால் அவரை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், பல்கலைகழகத்தின் பதிவாளர் பொறுப்பில் இருந்து அவரை நீக்கி  துணைவேந்தர் சூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக ஜெ.குமாரை துணைவேந்தர் நியமித்துள்ளார்...

டெல்லியில் தாக்குதல் நடத்த இந்துத்துவா பயங்கிரவாதாகள் சதி...


கேரளா பற்றிய நடுநிலையாளர்கள் கவனத்திற்கு...


மூணாறு : மூணாற்றில் இன்று ஒரு முக்கியமான ஊர்வலம் நடந்திருக்கிறது. ஆர்ப்பாட்டமும் நடந்திருக்கிறது. அது... மூணாறு வாழ்த் தமிழர்கள் நடத்திய ஊர்வலம். ஆர்ப்பாட்டம்.

நடத்தியவர்கள் : (இன்றைய கேரளம் வாழ்த்) தமிழர்கள். தோட்டத் தொழிலாளர்களாகவும், தானி ஓட்டு நர்களாகவும், சிறு வணிகர்களாகவும் ஜீவிக்கும் தமிழர்கள்.

கோரிக்கை : பொது வாக்கெடுப்பு நடத்தி, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடுக்கி, மூணாறு, வண்டிப்பெரியார், உடுமஞ்சோலை, தேவிகுளம், பீர்மேடு முதலான பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்.

காரணம் :  கேரள அரசின் நலத்திட்டங்கள் எதுவும் இடுக்கி மாவட்டம் வாழ்த் தமிழர்களுக்குச் சென்று சேர்வதில்லை. பல்வேறு விதங்களில் இனக் காழ்ப்போடு தமிழர்கள் நடத்தப்படுதல். முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் கேரளத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும் என்று மலையாளிகளால் மிரட்டப்படுதல்.

இருக்கும் தங்கள் உயிருக்கும், உடைமைக்குமே ஆபத்து எனும் நடப்புச் சூழலிலும் தைரியமாக வந்து போராடியிருக்கும் மூணாறு வாழ்த் தமிழர்கள் உண்மையிலேயே பாரட்டுக்குரியவர்கள்.

1950-களில், மொழிவழி மாகாணப் பிரிவினை சமயத்திலேயே எழுந்த குரல் இது. தேவிகுளமும் பீர்மேடும் தமிழகத்துடன்தான் இணைக்கப்பட வேண்டும் என்று ம.பொ.சி.குரல் கொடுத்தார்.

ஆனால், 'குளமாவது, மேடாவது, எல்லாம் இந்தியாவுக்குள்ள தானே இருக்குண்ணேன்' என்று பெருந்தன்மையோடு பேசினார் பெருந்தலைவர்.

பணிக்கர் பேசினார், அங்கு மலையாளிகள் தான் அதிகம், கேரளத்தோடு தான் சேர்க்கணும்னு சொன்னார். சரின்னுட்டேன் என்றார் பெரியார்.

பெருந்தன்மையாலேயே கெட்டானே தமிழன் என்பது இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது...

சிந்தனைப்பதிவு - 2...


பொதுநலப் பதிவு - வரதட்சணையாக வரும் நகையை போட்டுத்திரிவதும் மாட்டு சாணத்தை அப்பிக்கொண்டு திரிவதும் ஒன்று...

மூலிகை நீர்...


ஆவாரம்பூ நீர்: ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம்.

மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

கரிசாலை நீர்: சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.

செம்பருத்தி நீர்: செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.

காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

நன்னாரி நீர்: தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால் என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

துளசி நீர்: குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து,தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.

வல்லாரை நீர்: யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். காய சித்திக்கு புளியாரை கபால கோளாறுக்கு வல்லாரை என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது.

எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்...

பாஜக விற்கு கூஜா தூக்குவதால் டிராய் தலைவருக்கு பதவிக்காலம் நீட்டிப்பு...


ஆழ்மனதின் அற்புத சக்திகள்...


நீங்கள் ஒரு தொழிலைச் செய்ய எண்ணும் போது என்ன மனப்பாண்மையில் ஈடுபடுகிறீர்களோ, அதற்கேற்ப உங்கள் செயல் வெற்றி - தோல்வியை அடைகிறது, வெற்றி மனப்பான்மையுடன் செயல் பட்டால் வெற்றியும், தோல்வி மானப்பான்மையுடன் தன்னம்பிக்கையற்று செயல்பட்டால் தோல்வியையும் அடைகிறீர்கள், ஆகவே வெற்றியும், தோல்வியும் உங்கள் மனப்பான்மையிலிருந்து உருவெடுக்கிறது, மன்ப்பான்மை என்பது, உங்கள் உள்ளத்தில் தொடர்ந்து நிலைபெறும் சிந்தனைதான் மனப்பான்மையாக மாறுகிறது.

வெற்றி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் மனச்சித்திரங்களே வெற்றி சிந்தனை , இது மீண்டும் மீண்டும் பதிவாகும் போது வெற்றி மனப்பான்மையாக மாறுகிறது.

நீங்கள் விரும்பினால் மனச்சித்திரத்தை மாற்றி ஆழ் மனம் (இதனை சமயோசித அறிவாகக் கொள்ளலாம்) கட்டளை உஙகளுக்கு கைகொடுக்கும், ஆழ்மனக் கட்டளை மூலமும், மனச்சித்திரங்கள் மூலமும் வெற்றி மனோபாவத்தை உருவாக்கிட முடியும், நீங்கள் ஆழ்மனச்சக்தியை பெருக்கி கொண்டால் உழைப்பில் பத்தில் ஒருபங்கு குறைந்தாலும், விளைவு பத்து மடங்காக உயர்ந்திட முடியும், கடும் உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்பதை ஆழ்மனத்திற்கு ஈடு இணை இல்லை என்ற புது பழமொழியை புரிந்து கொள்ளலாம்,

ஆழ்மனதை ஒரு தேவதை என்றே கூறலாம், அது ஆற்றல் மிக்க தேவதை, உங்களுக்கு விசுவாசமான தேவதை. நீங்கள் கேட்பதை பெற்றுத தரும் சக்தி உண்டு, ஆக அது தேவதையோ, அரக்கனோ என்பது நீங்கள் கொடுக்கும் கட்டளையைப் பொருத்தது. உங்கள் கட்டளையின் எண்ணம் முறன்பாடானால் கிடைப்பதும் முறன்பாடாகவே அமையும், உங்களின் ஆழ்மனச்சக்தி பெருகி விட்டால் நீங்கள் நினைத்ததை விரும்பியவாறு அடைய முடியும். இதன் கருத்தை கொண்டே ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

Positive thinking always ever success Nagative thinking always never success

எவராயினும், எந்நிலையிலும், ஆழ்மனக்கட்டளையை நம்பிககையோடு கொடுத்து அடையப் போகிறோம் என்னும் விசுவாசத்தை வளர்த்து நினைத்ததை நினைத்தபடியே அடைய முடியும்.

சிந்தனையிலிருந்து - செயல் பிறக்கிறது. மனத்தின் எண்ணமே செயலுக்கு ஊக்கம் . எண்ணம் திண்ணம் பெறும்போது நினைத்ததை அடைய வெற்றியாக முடிகிறது.

ஆழ்மனக்கட்டளையும. மனச்சித்திரமும் சேர்ந்தது தியானம் - தியானம் தவம் எனப்படுகிறது. தவ வலிமையால் நம் முன்னோர்கள் நம்ப வியலாத அற்புதமான சாதனைகளை செய்ததனர் என்பதை நாம் அறிவோம். ஆழ்மன கட்டளை கொடுக்கும் போதே அதற்கேற்ப மனச்சித்திரம் வரைவதன் மூலம் நீங்கள் அற்புதங்களை நிகழ்த்துபவராக மாறிவிடுகிறீர்கள்.

உங்களின் நீண்டகால குறிக்கோள்களான தியானம் செய்யும் போது உங்களது நம்பிக்கை ஒரு மந்திர சக்தியாகவே பெருக்கெடுக்கிறது. எனவே ஆழ்மன சிந்தனை - தியானம் (ஆல்பா) மூலம் வெற்றி நிச்சயம்...

புகைப்பிடித்தல் உங்கள் உயிரை மட்டும் அல்ல உங்களை சுற்றி உள்ளவர்கள் உயிரையும் கொல்லும்...


உலகப் பந்தில் சோழப் பேரரசு...


சோழர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கடலையும் சேர்த்தால் சோழப் பேரரசு இவ்வளவு பெரியதாக இருந்திருக்கும்.

உலகில் தோன்றிய எந்த ஒரு பேரரசுக்கும் சளைத்ததன்று...

யாரெல்லாம் திராவிடர்? கன்னட ஈ.வே.ரா விளக்கம்...


யாரெல்லாம் திராவிடர்?

எத்தனைமுறை விளக்கம் அளித்தாலும் திராவிடவாதிகள் திரும்பத் திரும்ப கேட்கும் கேள்வி "யார் தமிழர்?" என்பது.

சரி "யார் திராவிடர்?" என்பதற்கு சரியான விளக்கம் உண்டா?

ஈ.வே.ரா இதுபற்றிக் கூறியதைப் பார்ப்போம்,

தமிழர்களாகிய நாம், ‘திராவிட நாடு திராவிடருக்கே’ ஆக வேண்டுமென்பதில் முனைந்திருப்போம்.

சில நாட்களில் ஒரிசாக்காரன் தன்னையும் திராவிடன் என்றுணர்ந்து நம்முடன் சேர்வதாக இருந்தால் சேர்ந்து கொள்ளட்டும்.

இல்லையேல், மலையாளி தன் இனம் திராவிட இனமல்ல என்பதாக அறிந்து, நம்முடைய கூட்டிலிருந்து விலகிவிட விரும்பினால் ஒதுங்கிப் போகட்டும்’.

-- ஈ.வே.ரா  (குடிஅரசு, 03.06.1944)

அதாவது தமிழர்கள் திராவிடர்களாக இருக்க வேண்டும்.

ஒரிசாக்காரரும் மலையாளிகளும் விரும்பினால் திராவிடர் இல்லையென்றால் இல்லை.

அதாவது தமிழர் மட்டும் திராவித்தின் பெயரால் யார் வந்தாலும் தமது நாட்டை  பங்குபோட்டுக் கொள்ள வேண்டும்.

ஆனால் மற்றவர் என்று வரும் போது அவரவர் விருப்பம். 

ஆக திராவிடம் என்பது தமிழகத்திற்கு பஞ்சம் பிழைக்க வந்த கூட்டம் மண்ணின் மைந்தர்களை ஏமாற்றி. கொள்ளையடித்து அவர்கள் வாழ்வதற்காக உருவாக்கப்பட்டது என்று புரிகிறதா முட்டாள் தமிழா...

உச்ச நீதிமன்றப் பரிந்துரையை மதித்து பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுவிக்க வேண்டும் - பாமக அன்புமணி...


சித்தநெறி...


சித்தர்கள் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தி இறைப் பொருளுடன் ஒன்றுவதையே ஒருவிதமான ரசவாதமாகப் பயின்றனர்.

இதையே 'தெய்வீக ரசவாதம்' என்றும் 'பேரின்பரசவாதம்', 'இன்பரசவாதம்', என்றும் 'ஞானரசவாதம்' என்றும் சொல்வார்கள்.

செம்பு பொன்னாகும் சிவாயநம வெனில்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் ஸ்ரீயும் கிரியும் எனச் பொன்னான திருவம்பலவே.

என்று திருமூலர் கூறியிருக்கிறார்.

தூரத்தில் இருக்கும் மலையைக் கிட்டத்தில் தோன்றச் செய்து, கிட்டத்தில் இருந்த மலையைத் தூரத்திற்குச் செல்லவைப்பது;

ரொம்பவும் கிழட்டு ஆசாமிகளை இளைஞர்கள் ஆக்குவது; குழந்தைகளாக இருக்கும் மக்களைக் கிழடாக ஆக்குவது.

ஆணைப் பெண் வடிவிலும் பெண்ணை ஆண்வடிவிலும் தோன்றச் செய்வது.

மலடியைப் பிள்ளைபெறச் செய்தல்.

அங்கவீனர்களுடைய குறைகளைப் பலரும் காணும்போதே உடனே தீர்த்து அவர்களைச் சீர்படுத்துவது.

நாலு லோகத்தையும் பொன்னாக மாற்றுவது.

கையில் வைத்திருக்கும் மாத்திரைக்கோலை ஆகாயத்தில் வீசி எறிந்து, அதை அப்படியே நெட்டுக்குத்தலாய் நிறுத்தி, அதன்மேல் ஊசியை நெட்டுக்குத்தலாய் நிறுத்தி, அந்த ஊசியின் முனைமேல் ஒரு காலின்
பெருவிரலை ஊன்றி அசைவின்று நின்று, அதன்பின்னர் அதே ஊசிமுனை மீது தலைகீழாக நின்று பாதங்கள் மேலே வானில் மலர்ந்திட அப்படியே சுழல்வது.

பறந்து சென்று விண்ணில் தாவி மேகத்தைப் பிடித்து, இடி தோன்றச் செய்து, அந்த மேகத்திலிருந்து குடிநீரைப் பிழிந்தெடுத்து பார்ப்பவர்களெல்லாம் அதிசயம் போல் காட்டுவது.

இது போன்ற சித்திகளைப் பற்றி ஏராளமான விபரங்களைப் பெரும் பெரும் சித்தர்கள் எழுதியுள்ளார்கள்.

சித்தம் போக்கு சிவன்போக்கு என்பது முதுமொழி.

அஃதாவது மனம் போன போக்கெல்லாம் போகக் கூடியவர் சிவபெருமான் என்பதல்ல இதன் கருத்து. சிவனுடைய போக்கு அன்பு நிலை. அதனாலேயே ‘அன்பே சிவம்’ என்றார்.

திருமூலரும்...

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே
என்கிறார்.

இவ்வன்பு நிலையை மையமாகக் கொண்டு இறைவனை நேசித்தவர்கள் சித்தர்கள். அதனால் சித்தர்கள் பின்பற்றிய வழி அன்பு நெறியாகும்.

கடவுள் வெளியில் இல்லை , நம் உள்ளத்திற்குள்ளே இருக்கின்றான் என்று கூறி வலியுறுத்தியவர்கள் சித்தர்கள்.

சித்தர்கள் மெய்யறிவினால் ஐம்புலனைக் காத்து வாழ்வதுதான் முக்தியாம் என்கின்றனர்.

ஐம்புலன்களின் உணர்வுகளை வழிமுறையோடு தெரிந்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் ‘பொறிவாயில் ஐந்து அவித்தல்’ என்றும், சிவநெறியைச் சார்கின்ற அறிவு பெற்று, வரும் வழியைத் தெரிந்து கொண்டால் அதன்பின் இந்த உடம்பு சாவை அடைவதில்லை என்றும்..

ஐந்து புலன்களின் அவாவைக் கட்டறுத்திருந்தால் இந்த உடம்புக்குச் சாவேயில்லை என்றும் கூறுகின்றனர்.

உடம்பினை முழுவதும் அழியாமல் காத்துக் கொள்ள முடியும். அதற்குவழி ஒன்றே தான். குண்டலி யோக சாதனையால் மூலதாரத்தினின்று எழுப்புகின்ற குண்டலினி சக்தியை நெற்றிக்கு நேராகச் சுழிமுனையிலே வியாபித்திருக்கும் ஞானாக்கினியைக் காண வேண்டும். அப்படிக் கண்டு விட்டால் உடம்பானது என்றைக்கும் அழியாதிருக்கும் என்று கூறி, இதுவே சாகாக் கலை அல்லது மரணமிலாப் பெருவாழ்வு என்கின்றனர். இச்சாகாக் கலையைப் பற்றிச் சித்தர்கள் விரிவாகக் கூறுகின்றார்கள்.

சித்த வைத்தியர்கள் அல்லது சித்தர்கள், உடல்நலன் பாதிக்கப்பட்டு நோயுடன் வருபவர்களின் கையின் நாடித் துடிப்பின் தன்மைகளை அறிந்து கொண்டு, நோயினை நீக்குவர்.

மலைகளிலிருந்து கொண்டு வரும் மூலிகைச் செடிகளின் இலைகளைப் பொடியாக்கியும், தைலமாகவும் தருவர்.

இம்மருந்து உடலில் மெதுவாகக் கரைந்து, இரத்தத்துடன் கலந்தபின் நோய் முற்றிலும் குணமாகி விடும். இதனால் எந்த விதமான பின் விளைவும் இருக்காது. தீராத வியாதிகளும், தீர்த்து வைத்திடும் வைத்தியம் சித்த வைத்தியம் ஆகும். இவ்வைத்தியத்தினை எல்லாச் சித்தர்களும் பின்பற்றியுள்ளனர்.

சித்தர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த இலக்கியங்களை, நூல்களை
படைத்துள்ளனர். மொழி நூல், யோகநூல் ; மந்திரம் ; தந்திரம் ; யந்திரம் ;மருத்துவ நூல் ; புவியியல் நூல் ; தாவரயியல் நூல் ; சோதிட நூல் ;கணித நூல் ; வானநூல் என தமிழுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

சில அனுவபங்களை படித்தால் புரியும் , சில கேட்டால் , சில நுகர்ந்தால், சிலவே உணர்ந்தால் புரியும். அத்தனை விதங்களிலும் , நிறைவாய் , சுகானுபவமாய் நமக்கு சாந்தமும் -இன்பமும் அளிப்பது சித்தர் இலக்கியம்.

மனம் பழுத்தால் பிறவி தங்கம் -
மனம் பழுக்காவிட்டால் பிறவி பங்கம் -
தங்கத்தை எண்ணி பங்கம் போதாதே – தங்க இடம் பாரப்பா….

இதுவே சித்தர்களின் கொள்கை. நலம் சிறக்க , நல்லன விளைக...

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மூலிகைகள்...


இன்றைக்கு கூந்தல் வளர்ச்சிக்கும், கூந்தலுக்கு நறுமணம் ஊட்டவும் எண்ணற்ற ஷாம்பு, கிரீம் என விற்பனைக்கு வந்துள்ளன.

அவற்றின் வருகைக்கு முன்னரே பண்டைய காலத்தில் பூந்திக்கொட்டை, கரிசலாங்கண்ணி, மருதாணி என எண்ணற்ற மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

ஷாம்பு, சோப்பு போன்றவைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு முடி கொட்டுவதை தவிர்க்கவும், கூந்தலின் வளர்ச்சிக்கும் இன்றைக்கும் அந்த மூலிகைகளை பயன்படுத்தலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பூந்திக்கொட்டை: நாம் பயன்படுத்தும் குளியல்பொடி மற்றும் கேசப்பொடிகளில் இயற்கையின் கலவை அதிகமாக இருந்தால் தான் நமது தோலும், கேசமும் ஆரோக்கியமாக இருக்கும். கேசத்திற்கு பளபளப்பையும், தோலுக்கு வழுவழுப்பையும் தந்து நுரை பொங்க குளித்த திருப்தியை தரும் மூலிகை தான் பூந்திக்கொட்டை.

இதன் பழத்தோலில் உள்ள சப்போனின்கள், சப்பின்டோசைடுகள், ஹெடராஜெனின்கள் மற்றும் டெர்பினாய்டுகள் பூஞ்சை கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, தோலுக்கு பிரகாசத்தையும் மென்மையும் கொடுக்கின்றன.

வீட்டில் ஏற்கனவே வேறு குளியல் பொடி உபயோகப்படுத்துபவர்கள் பத்தில் ஒரு பங்கு பூந்திக்கொட்டை பொடியை கலந்து கொள்ளலாம். பூந்திக்கொட்டையை லேசாக வறுத்து, மேற்தோலை உரித்து, இடித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது சோறு வடித்த கஞ்சி அல்லது சீயக்காய் தூளுடன் கலந்து தலையில் தேய்த்து, அலசி, குளித்து வரலாம்.

உசிலை இலை, இலுப்பை பிண்ணாக்கு, ரோஜாப்பூ, செம்பரத்தை பூ, செம்பரத்தை இலைகள், சிகைக்காய், வெட்டிவேர், விளாமிச்சம் வேர், நன்னாரி, பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, வெந்தயம், பூந்திக்கொட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, நுண்ணியதாக அரைத்து, துணியில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதை நீரில் கரைத்து சற்று நேரம் வைத்திருந்து பின் தலை மற்றும் உடலில் தேய்த்து குளித்துவர நுரை உண்டாகி, அழுக்கு நீங்கி, தோலும், கேசமும் சுத்தமடையும்.

கரிசலாங்கண்ணி: கூந்தல் வளர்ச்சிக்கு கரிசலாங்கண்ணி சிறந்த மூலிகையாகும். இந்த மூலிகைத் தைலம் கேச வளர்ச்சிக்கு உதவுவதோடு கூந்தல் உதிர்தலை தடுக்கும்.

முடிகளின் வேர்கால்களில் இந்த கூந்தல் தைலத்தை வைத்து மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் வலுவடையும். உடல் குளிர்ச்சியடையும்.

வெந்தயம்: கூந்தலினை பட்டுப்போன்ற மென்மையாக்குவதில் வெந்தயம் சிறந்த மூலிகையாகும். வெந்தயத்தை இரவு நேரத்தில் ஊறவைத்து காலையில் அதனை மைய அரைத்து தலையில் ஊறவைத்து குளிக்கலாம். இதனால் தலைக்கு குளிர்ச்சி ஏற்படும். கூந்தல் பட்டுப்போல மாறும்.

மருதாணி: கூந்தலை கருமையாக்குவதில் மருதாணி சிறந்த மூலிகை. இது இளநரையை தடுக்கும். கூந்தலில் பொடுகு ஏற்படாமல் தடுக்கும். கூந்தலின் வேர்கால்களை வலுவாக்கி உதிர்வதை தடுக்கும்.

சோற்றுக் கற்றாழை: சோற்றுக்கற்றாழை சிறந்த மூலிகையாகும். கூந்தல், சருமம் போன்றவற்றினை பாதுகாக்க சிறந்த மூலிகையாக பயன்படுகிறது.
சோற்றுக் கற்றாழையின் உள்ளிருக்கும் சோற்றை எடுத்து தலையில் தேய்த்து வர முடி உதிர்ந்து வழுக்கையானவர்களுக்கு புதிய முடி முளைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கூந்தலின் வறட்சியை போக்கி மென்மையாக்குவதில் சோற்றுக் கற்றாழை முக்கிய பங்காற்றுகிறது...

அரசியல் தலைவன் எனும் பிராடுகள்...


புளூவேல் போய் மோமோ வந்துள்ளது...


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் இளளஞர்கள் மத்தியில் பரவிய ஒரு ஆபத்தான விளையாட்டு புளூவேல் என்பது தெரிந்ததே...

இந்த விளையாட்டில் தமிழகத்தில் கூட ஒருசில தற்கொலை மரணங்கள் ஏற்பட்டது. தற்போது இந்த விளையாட்டு ஓரளவு குறைந்துள்ள நிலையில் மோமோ சேலஞ்ச் என்ற ஆபத்தான தற்கொலை விளையாட்டு ஒன்று உலகின் முன்னணி நாடுகளில் வைரலாகியுள்ளது மோமோ விளையாட்டு என்பது ஆன்லைனில் முன்பின் தெரியாத நபருடன் பழக வேண்டும்.

அதன்பின்னர் அவர்கள் கொடுக்கும் டாஸ்க்கை செய்ய வேண்டும். இந்த விளையாட்டில் நுழைந்த யாரும் வெளியே வரமுடியாது.

அப்படி வெளியேற முயற்சித்தால் அவர்களை மிரட்டும் விதத்தில் வன்முறையை சித்தரிக்கும் படங்கள் அவர்களுடைய மொபைலுக்கு மெசேஜ் வரும்.

அதுமட்டுமின்றி இந்த விளையாட்டில் உள்ளே நுழையும் போது பதிவு செய்யப்பட்ட விளையாடுபவர்களின் தனிப்பட்ட தகவல்களும் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் பயமுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு வந்த மிரட்டல் காரணமாக அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும் இதுகுறித்து அந்நாட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

உலகின் முன்னணி நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இந்த சேலஞ்ச் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருவதாகவும், இந்த விளையாட்டை உடனடியாக முடக்கி இளைஞர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும், சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்...

நெகிழி (பிளாஸ்டிக்)ஆலைகளை ஒழிக்காமல் நெகிழி ஒழிப்பு என்பது வெறும் கண்துடைப்பே...


அரசாங்கம் மக்களுக்கு தடை விதிப்பது போல, நெகிழி உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு கெடு விதித்து தடை செய்ய முயற்சியாவது எடுக்குமா?

பாஜக மோடியின் ஸ்வெச் பாரத் வியாபாரம்...


வன்மம் எனப்படுவது யாதெனில்...


காலையில் தினத்தந்தியில் திருமுருகன் கைது செய்தியை படித்தபோதே அவ்வளவு ஆத்திரமாக இருந்தது.

ஒரு செய்திக்குள் ஒளிந்திருக்கும் வன்மம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு இந்த செய்தியை உதாரணமாக சொல்லலாம்.

இந்த செய்தியில் இருக்கும்.. `தலைமறைவாக இருந்தவர்.. சிக்கினார்...’ போன்ற வார்த்தைகளை கவனியுங்கள்..

அந்த வார்த்தைகள் உருவாக்கும் தோற்றத்தை உள்வாங்கினால்.. திருமுருகன் காந்தி ஒரு மாபெரும் ரவுடி.. அல்லது மக்கள் பணத்தை ஆட்டையப் போட்டு விட்டு தலைமறைவாக இருந்தவர் என்ற எண்ணத்தை உருவாக்கும்.

தினத்தந்தியின் நோக்கமும் அதுதான்.

திருமுருகன் அரசியல் மீது நமக்கு கருத்தியல் உடன்பாடு இருக்கலாம்.. முரண்பாடு இருக்கலாம்..

ஆனால் மக்களுக்காக களத்தில் வேலை பார்க்க கூடிய ஒரு இயக்கத்தை வழிநடத்தக் கூடியவர்.

அதுவும் நாசகார ஸ்டெர்லைட் குறித்தும் அதற்காக அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்தும்.. சேலம் எட்டு வழிச்சாலை மக்கள் எதிர்ப்பு குறித்தும் ஐநா.வில் பேசிவிட்டு இந்தியா வரும்போது கைது செய்திருக்கிறது போலீஸ்.

தேசத்துரோக வழக்கில் தலைமறைவாக இருந்தவராம்..

தலைமறைவாக இருக்கும் வார்த்தைக்கு பொருள் தெரியுமா.. தெரியாதா..

கடந்த மே மாதத்தில் இருந்து ஜெனிவாவில் இருக்கிறார் திருமுருகன். அங்கு ஐ.நா. மனித உரிமை கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்..

தலைமறைவாக இருப்பவர் செய்யும் வேலையா இது..

ஆக.. தினத்தந்திக்கு இதெல்லாம் தெரியாமல் எழுதுவது இல்லை.. இந்த செய்தி திருமுருகன் மீதான வன்மத்துடன் எழுதப்பட்டிருக்கிறது.

2009 ஈழப்படுகொலைக்குப்பின் தீவிர அரசியல் களத்திற்கு வந்திருக்கும் இன்றைய தலைமுறை இயக்க செயல்பாட்டாளர்களில்.. வெறுமனே.. ஏ.. வந்துப்பார்.. என்றெல்லாம் சவுண்ட் விடாமல் தர்க்க ரீதியாக ஆதாரங்களுடன் விவாதம் செய்வதில் திருமுருகன் முக்கியமானவர்.

எதிரியை அவன் பயன்படுத்தும் அதே யுக்த்தியை கொண்டு எதிர்கொள்வது மிக முக்கியமான அரசியல் பணி. அதை திருமுருகன் செய்கிறார்.

ஸ்டெர்லைட் ஆலை இத்தனை உயிர் பலிகளுக்குப்பின்னரும் மீண்டும் இயக்கப்படுவதற்கான காய் நகர்த்தல்கள் தென்படுகின்றன.. ஆலையின் நிர்வாக பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த புள்ளியில் இருந்துதான் நாம் இந்த செய்தியை அணுக வேண்டும்.

தினத்தந்தியின் இந்த வன்மத்திற்கு காரணம் ஸ்டெர்லைட் காரன் தூக்கிப்போடும் விளம்பரம் எனும் எலும்புத்துண்டுகளும் காரணமாக இருக்கலாம்...

- கார்ட்டூனிஸ்ட் பாலா...

கன்னட கமலும் ஏமாற்று வேலையும்...


சர்வதேச சிலை கடத்தல் கும்பல் அரசியல்வாதிகள்...


இப்போது புரிந்திருக்குமே காய்கள் ஏன் நகர்த்தப்படுகின்றன என்று...

இதே வாய் பொன் மாணிக்கவேல் வேண்டும் என்று கூறியது..

தற்போது மெயின் இடத்தை ஆட்டுவது தி.மு.க-வைகோ பதைபதைக்கிறது...

மேகதாது அணை: கர்நாடகத்தின் தூதராக மத்திய அரசு செயல்படுவதா - பாமக அறிக்கை...


காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழகத்துடனும், கர்நாடகத்துடனும் மத்திய அரசு பேச்சு நடத்தும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்திருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. காவிரி பிரச்சினையில் இரு தரப்புக்கும்  பொதுவானவராக இருக்க வேண்டிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கர்நாடகத்தின் தூதராக மாறி தமிழகத்துடனும் பேச்சு நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது; இதை ஏற்க முடியாது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார்  நேற்று தில்லியில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது மேகதாதுவின் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்ற கர்நாடக அமைச்சரின் கோரிக்கையைக் கேட்ட நிதின்கட்கரி, இதுதொடர்பாக இரு மாநில பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசப்போவதாக உறுதியளித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து மேகதாது அணை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசப்போவதாக  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியிருக்கிறார். இவை இரண்டுமே மிகவும் ஆபத்தானவையாகும்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களாக இருப்பவர்கள் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இரு மாநில அமைச்சர்களையும் அழைத்துப் பேசுவது நியாயமானதாக இருக்காது. ஏனெனில், மேகதாது அணை விவகாரத்தில் மத்திய நீர்வள அமைச்சகம் நீதிபதி நிலையில் உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று நினைத்தால், அதற்கான அனுமதி கோரும் மனுவை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் கர்நாடகம் தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவுடன், மேகதாது அணை கட்டுவதற்கான தமிழகத்தின் ஒப்புதல் கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இருந்தால், அதை ஏற்று அணை கட்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கலாம்; இல்லாவிட்டால் மனுவை திருப்பி அனுப்புவதைத் தவிர வேறு எதையும் மத்திய அரசு செய்ய முடியாது. மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு அனுமதி கொடுங்கள் என்று தமிழகத்திடம் கூறவோ அல்லது இதுதொடர்பாக இரு தரப்பையும் அழைத்துப் பேசவோ மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தினார். இதுதொடர்பாக அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதிக்கு  தொடர்ச்சியாக கடிதங்களையும் எழுதினார். அவற்றுக்கு பதிலளித்து 09.06.2015 அன்று உமாபாரதி  எழுதிய கடிதத்தில் இதை தெளிவாக விளக்கியிருந்தார்.

‘‘மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் கர்நாடகம் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன்படி அந்த மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.  சிவசமுத்திரம் நீர்மின்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் அனுப்பிய போது அதனுடன் தமிழகத்தின் அனுமதி இல்லாததால் அதை மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது. அதேபோல், மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு எப்போது தாக்கல் செய்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில் அதற்கு தமது அரசு அனுமதி அளிக்காது’’  என்று உமாபாரதி கூறியிருந்தார். உமாபாரதியின் இந்த விளக்கம் அமைச்சர் கட்கரிக்கும் பொருந்தும்.

ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக இருப்பவர் நீதியின் பக்கம் தான் நிற்க வேண்டும். ஒரு தரப்பு கேட்டுக் கொண்டதற்காக இரண்டாம் தரப்பை அழைத்து நீதிபதி பேச்சு நடத்த முடியாது. அதேபோல் தான் மேகதாது அணை விவகாரத்தில் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டிய நிதின்கட்கரி, கர்நாடகத்தின் பக்கம் நின்று மேகதாது விவகாரத்தில் பஞ்சாயத்து பேச தமிழகத்தை அழைக்கக்கூடாது. அது அநீதி. கடந்த காலங்களில் தமிழகம் வறட்சியில் தவித்த போது, காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும்  என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தும்படி கர்நாடகத்தை அறிவுறுத்தாத, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முன்வராத நிதின் கட்கரிக்கு மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்தை பேச்சுக்கு அழைக்க எந்த உரிமையும் இல்லை.

அதுமட்டுமின்றி,கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி ஆகும். 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இடைப்பட்ட காவிரிப் பரப்பு, நீர்நிலைகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் 200 டிஎம்சி தண்ணீரை கர்நாடகத்தால் தேக்கி வைக்க முடியும். இந்த அளவுக்கு கொள்ளளவு இருந்தால் காவிரியில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீரைக் கூட கர்நாடகம் தராது. மேகதாது அணை கட்டப்படுவது அனைத்து வழிகளிலும் தமிழகத்திற்கு ஆபத்தானது என்பதால் அதுகுறித்து பேச்சு நடத்துவதற்கான அழைப்பு,  ஒருவேளை முழு அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அதனிடமிருந்து வந்தால் தவிர, வேறு யாரிடமிருந்து வந்தாலும் அதை தமிழக அரசு ஏற்கக்கூடாது என வலியுறுத்துகிறேன்...

தற்சார்பை பற்றிய விழிப்புணர்வு சொல்வதால் மட்டுமே ஒன்றும் நடந்து விடபோவதில்லை...


தற்சார்பை நோக்கி பயணிக்கும் அனைவருமே இதை போல் வாய்ப்பு கிடைத்தால் உங்களால் முடிந்தளவு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

ஏளனம் செய்வார்களே என்று என்ன வேண்டாம், அடுத்த தலைமுறையை பற்றி சிந்தித்து செயலாற்றுங்கள்...

சக்தி - THE POWER...


நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மகாசக்தி இருக்கிறது. அது நம்முடைய பார்வைக்குத் தெரியாவிட்டாலும்கூட நம்மால் அதனைப் பயன்படுத்திக் கொண்டு பிரமாதமான பலன்களைப் பெறமுடியும் என்கிறார் ரோண்டா பைர்ன்.

இந்த உலகம் பார்த்திருக்கிற புதிய கண்டுபிடிப்புகள், கலைப் படைப்புகள், மருத்துவ சிகிச்சைகள், புத்தகங்கள், இசைத் தொகுப்புகள், இன்னும் நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாமே இந்த ஒரு சக்தியின் துணையோடு உருவாக்கப்பட்டவை தான்.

சராசரி மனித மனத்தில் நல்ல சிந்தனைகள், கெட்ட சிந்தனைகள் இரண்டுமே உண்டு. அவற்றின் விகிதம் மாறலாமேதவிர, முழுக்க முழுக்க நல்லதை மட்டுமே நினைக்கிறவர் என்று யாரும் கிடையாது.

வெறுப்புச் சிந்தனைகளின் தாக்கத்தைக் குறைந்து அன்புச் சிந்தனைகளை ஊக்குவித்து வாழ்க்கையில் அமைதி, நிம்மதி, செயல்திறன், சாதனைகள் என்று படிப்படியாக மேலே அழைத்துச் செல்கிறது.

நமக்குள் இருக்கும் அந்தச் சக்தியை அடையாளம் காண்பது எப்படி? அதை வெளிக்கொண்டுவருவது எப்படி?

எதையும் சாதிக்கக்கூடிய இந்தப் ‘சக்தி’ பூட்டைத் திறப்பதற்கு ரோண்டா மூன்று சாவிகளைச் சொல்லித்தருகிறார். அவை...

1. அன்புச் சாவி
2. நன்றிச் சாவி
3. விளையாட்டுச் சாவி

1. அன்புச் சாவி...

உலகின் மிக உன்னதமான ஆற்றல், அன்புதான். அதைக் கொண்டு எந்தக் கதவையும் திறந்துவிடலாம்.

ஒரு மனிதரை, ஒரு குடும்பத்தை, ஒரு வீட்டை, ஒரு நாட்டைமட்டும் நேசித்தால் போதாது. ஒட்டுமொத்த உலகத்தையும் மானுடகுலத்தையும் நேசிக்கப் பழகுங்கள். அதனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அழகாகும்.

நீங்கள் எதையெல்லாம், யாரையெல்லாம் நேசிக்கிறீர்கள்? மனத்துக்குள் ஒரு லிஸ்ட் போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் அந்த அன்புப் பட்டியலில் உள்ளவர்கள் மத்தியிலேயே அதிக நேரம் செலவிடுங்கள்.

அதன்மூலம் ஏற்படுகிற மகிழ்ச்சியும் திருப்தியும் உங்களுடைய செயல்திறனை உயர்த்தும், உங்களை ஒரு புதிய மனிதராக மாற்றிவிடும்.

2. நன்றிச் சாவி...

வாழ்க்கை இதுவரை உங்களுக்குத் தந்திருக்கிற, தந்துகொண்டிருக்கிற, இனி தரப்போகிற எல்லா விஷயங்களுக்காகவும் மனமார நன்றி சொல்லிப் பழகுங்கள். உரக்கச் சொல்ல வேண்டாம், மனத்துக்குள் அதை உணர்ந்தாலே போதும்.

நீங்கள் சந்திக்கிற எல்லோரும் உங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் உதவுகிறார்கள், ஏதாவது பாடம் சொல்லித்தருகிறார்கள். அந்த உதவி சிறியதோ, பெரியதோ, வாய் திறந்து நன்றி சொல்லுங்கள். உலகம் உங்களை இன்னும் நேசிக்கும். உங்களுடைய வளர்ச்சிக்கு அவர்கள் உதவுவார்கள்.

3. விளையாட்டுச் சாவி...

வாழ்க்கை என்பது சீரியஸான மேட்டர் அல்ல. மனம் விட்டுச் சிரியுங்கள். ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். சுருக்கமாகச் சொல்வ தென்றால், சும்மா பூந்து விளையாடுங்க.

சிறுவயதில் நாமெல்லாம்சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தவர்கள் தான். வயது ஏற ஏற, விளையாட்டை அலட்சியப்படுத்துகிறோம்.

அதனால்தான் அநாவசியப் பதற்றம், பரபரப்பு, டென்ஷன் எல்லாமே.

சின்ன வயதில் விளையாட்டாய் நிறைய கற்பனைகள் செய்வோம். ஆனால் வயது ஏறும்போது கற்பனைகளைக் குறைத்து விடுகிறோம்.

கற்பனை என்பது ஒரு மிகப் பெரிய வரம். அதை வைத்துக்கொண்டு நாம் எங்கேயும் பயணம் செய்யலாம். நம்முடைய பாதையை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் கற்பனைக் குதிரைக்கு ஓய்வே கொடுக்காதீர்கள். தொடர்ந்து ஓடவிடுங்கள். அது மேலும் மேலும் புதிய இலக்குகளை கற்பனை செய்யட்டும். அதன்மீது உட்கார்ந்து சவாரி செய்யும் நீங்களும் புதுப்புது சிகரங்களைத் தொடுவீர்கள்.

‘நம்பிக்கை உள்ள ஒருவருக்கு எதுவும் சாத்தியம்’ என்கிறது பைபிள். நம் ஊரிலும் ‘நம்பினோர் கெடுவதில்லை’ என்று ஒரு வாசகம் உண்டு.

ரோண்டா பைர்ன் சொல்லும் மகாசக்தி எது என்று நமக்குப் புரியாவிட்டாலும் கூடப் பரவாயில்லை. அப்படி ஒன்று நமக்குள் எங்கேயோ இருக்கிறது என்று நம்பிக்கை மட்டும் வைத்து, அன்பு, நன்றி, விளையாட்டு என்கிற மூன்று சாவிகளைப் பயன்படுத்திப் பார்க்கலாமே...