30/12/2017

பாராளுமன்றத்தில் அதிமுக அன்வர் ராஜா பேச்சு...


முத்தலாக் சொல்வதை கிரிமினல் குற்றமாக பார்ப்பதை ஏற்க முடியாது.

மூன்றாண்டு சிறை தண்டனை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது அதை நீக்கிவிட்டு நீதிமன்றம் என்ன சொன்னதோ அதை சட்டமாக்குங்கள்.

மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்துவிட்டு குர்ஆனில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதை சட்டமாக்குங்கள்.

அப்படி கிரிமினல் குற்றம் என்று நீதிமன்றம் சொல்லவில்லை.

நாங்கள் ஷரீயத் சட்ட அடிப்படையில் வாழ்கிறோம்.

இந்த முத்தலாக் என்பது தவறென்றால் நாங்கள் எங்களுக்குள் கூடி முடிவெடுப்போம் முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் அதை மேற்கொள்ளும்.

முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டால் அது இஸ்லாமிய பெண்களை பாதிக்கும்.

குர்ஆன் ஒன்டைம் செட்டில்மெண்ட் கொடுக்கச் சொல்கிறது அப்படி இல்லாமல் கணவனை சிறையில் அடைத்துவிட்டால் அந்தப்பெண் ரோட்டில் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

- அன்வர் ராஜா எம்.பி அதிமுக.

இஸ்லாமிய விரோதிகளுக்கு இஸ்லாமிய பெண்கள் மீது என்ன இவ்வளவு அக்கறை. ஆயிரத்துக்கு அதிகமான பெண்களை குஜராத் கலவரத்தில் கற்பழித்த இந்துத்துவா ஆர்எஸ்எஸ் வெறியர்களுக்கு மோடி அரசு என்ன தண்டனை வாங்கி கொடுத்தது என்பதை சொல்லிவிட்டு பிறகு இஸ்லாமிய பெண்களுக்கு அக்கறை காட்டலாம்...

கள்ளு பரவால்ல.. சரியாக செய்தால் ஏற்றுமதி செய்யலாம்...


ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள்...


தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ள தாலுகா பகுதிகள் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன...

முதல் படம் காலம் 1325 - 1499.
இரண்டாம் படம் காலம் 1499 - 1649.

மேற்கண்ட பகுதிகளில் இன்றும் தமிழரே பெரும்பான்மை..

இதில் குப்பம், சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, மதனப்பள்ளி, நெல்லூர், குடூர் போன்றவை அடங்கும்.

நூல்: Precolonial India in Practice: Society, Region, and Identity in Medieval Andhra
By Cynthia Talbot...

தூதுவளையில் இவ்வளவு விஷயம் இருக்கா?


இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்ப ம் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. துவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.

இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்...

மராட்டிய கன்னட ரஜினி இப்படி தமிழர்களை ஏமாற்றியே பல கோடி சொத்து சேர்த்தாச்சு...


நாதசுவரம்...



தென்ஆப்பிரிக்கா உலக கோப்பை போட்டியில், உவுசலா என்ற இசைக்கருவியும் முக்கிய இடம் பிடித்துள்ளது. இக்கருவி நாதசுவரம் போன்று இருக்கும். உவுசலா பிளாஸ்டிக்கால் ஆனது. நீல்வான் சால்விக் என்ற 37 வயது தென்ஆப்பிரிக்கக்காரர், 15 வருடங்களுக்கு முன் விளையாட்டாக கண்டு பிடித்த நம் தமிழரின் பாரம்பரிய இசைக்கருவி நாதசுவரம் போன்ற இருக்கும்.  நாதசுவரம் வாசிக்க ஞானம் வேண்டும். உவுசலாவுக்கு அதெல்லாம் தேவை இல்லை.

நம்முடைய அனைத்து பாரம்பரிய இசைக்கருவிகளையும் முறையாக கற்றுக் கொண்டு ஸாதகம் செய்தால் மட்டுமே வாசிக்க முடியும். நாம் திருமணம், திருவிழா போன்ற இடங்களில் மிகவும் பரவலாக காணும் ஓர் இசைக்கருவி நாதசுவரம். தவுலும் நாதசுவரமும் ஒன்றாகச் சேர்த்து வாசிப்பர்.

நாதசுவரம் துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவி ஆகும். இதனை நாதஸ்வரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை, மலேசியா போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. மிகவும் இனிமையான இசையைத் தரவல்லது இக்கருவி.

தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலகரமான இசைக்கருவியாகக் கருதப்படுகின்றது. பெரும்பாலன கோவில்களில் இந்தக் கருவி வாசிக்கப்படுவதுண்டு. நேரடியாக இசைக்காவிட்டாலும் பல ஆலயங்களில் இவ்விசைப் பதிவு செய்யப்பட்ட குருந்தட்டுகளைப் வழிபாட்டின் போது ஒலிபரப்புச் செய்கின்றனர்.

இதைத்தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.

இது வன்மரத்தினால் செய்யப்பட்ட உடலையும், மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படும் விரிந்த அடிப் பகுதியையும் கொண்டது.

நாதசுவரம் ஆச்சாமரம் என்னும் மரத்தால் செய்யப்படுகின்றது. இதன் பாகங்கள் வட்டவடிவமாக விரிந்து காணப்படும் அணைசு, உள் கூடான நீண்ட மரக்குழலால் ஆன உடல் , உடலின் மேற் பொருத்தப்படும் கெண்டை (செப்புத் தகடு) அவ்வப்போது வைத்து இசைக்கப்படும் சீவாளி.  உடலின் மேற்பாகத்தில் 12 துளைகள் உள்ளன. மேலிருந்து வரும் 7 துளைகளும் இசைப்பதற்கு ஏற்றவை. மற்றைய ஐந்தையும் அவ்வப்போது மெழுகால் அடைத்தும் திறந்தும் கொள்வார்கள்.

நாதசுவரத்தின் நீளம் சுமார் 2.5 அடி.
நாதசுரத்திற்கு சுருதி கருவியாக விளங்குவது ஒத்து என்ற நாதசுவரத்தைப் போன்றவடிவமுள்ள ஒரு கருவி. இதிலிருந்து ஆதார சுருதி மட்டும் தான் வெளிவரும். இதனை ஒருவர் வாயில் வைத்து, தொடர்ச்சியான ஒலியை எழுப்பி வருவார். இன்று இந்தக்கருவிக்குப் பதிலாக சுருதிப்பெட்டி பயன்படுத்தப்படுகின்றது.

பெரியமேளம்நாதஸ்வரத்துக்கு தாளக் கருவியாக அமைவது தவில் (அல்லது தவுல்) என்ற தோற்கருவியாகும். இதனால் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் பொதுவாகத் தவில் இசைக் கலைஞருடன் சேர்ந்து குழுக்களாகவே செயல் படுவது வழக்கம். நாதஸ்வரக் கலைஞர், ஒத்து வாசிப்பவர், தவில் வித்துவான், தாளக் கலைஞர் (ஜால்ரா) ஆகிய நால்வரும் ஒன்று சேர்ந்த இசைக்குழுவைப் பெரியமேளம் என அழைப்பர்.

நாதசுவரத்தில் இரண்டு வகைகள் உண்டு: திமிரி, பாரி. திமிரி நாதசுவரம் உயரம் குறைவாகவும், ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி நாதசுவரம் உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்...

மராட்டிய கன்னட ரஜினி கலாட்டா...


எடப்பாடி : இந்தா உனக்கு 100... இந்தா உனக்கு 100... இது கம்பெணிக்கு 500...


இலுமினாட்டி யும் - ஐயா நம்மாழ்வார் மரணத்தின் சந்தேகமும்...


தமிழின தந்தை பெரியார் நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம்...

இலுமினாட்டிகளின் செயலாக இருக்க வாய்ப்புண்டு..

மீத்தேன் திட்டத்தை எதிர்க்க உண்மையான தலைமைத்துவம் கொண்ட ஒரே ஆற்றல் ஐயா நம்மாழ்வார்..

அவரின் வழிகாட்டல் இல்லாமல் மீத்தேன் எதிர்ப்பு தவறாக மடைமாற்றப்படுகிறது..

நம்மாழ்வார் இறந்த நாள் 30.12.2013 , இலுமினாட்டிகளின் கணக்கியல் இங்கே நன்றாக பொருந்துகிறது..

30 , 3+0= 3
12 , 1+2= 3
2013, 2+0+1+3=6
336
33 6 .

இங்கு எதோ ஒரு பொருத்தப்பாடு இருப்பது சந்தேகமே...

தமிழர்களே விரைவில் சயல்ப்படுங்கள் , நம்மை சுற்றி நடக்கும் அரசியல் மிகவும் தவறான, ஆபத்தான ஒரு விடயமாக இருக்கிறது..

நம் இனம் ஆபத்தில் இருக்கிறது, உங்களால் தான் உங்களை காத்துக் கொள்ள இயலும்...

பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படாததைக் கண்டித்து தஞ்சாவூரில் விவசாயிகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பரபரப்பு நிலவியது...


திருச்சி துறையூர் பஸ் ஸ்டாப்பில் கத்தியை காட்டி மிட்டி பணம் செல்போன் பறிக்க முயன்றவனை பொதுமக்கள் பிடித்து போலசாரிடம் ஒப்படைத்தனர்...


கத்தியால் தாக்க முயன்ற போது இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது...

Biological weapons பதிவு - 7... எய்ட்ஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதே...


திடீர் அதிரடி அரக்க பறக்க ஓட்டம் வீட்டுக் கதவை தட்டி, லஞ்சப் பணத்தை திருப்பி அளிக்கும் அதிகாரிகள்...


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அரசு பணியாளர்களுக்கு யாராவது லஞ்சம் கொடுத்து இருந்தால் 1100 என்ற உதவி மையத்தை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்; அந்தப் பணம் அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் என கடந்த மே மாதம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதனை டிஜிட்டல் முறையில் தற்போது மேம்படுத்தி உள்ளார். ஏற்கனவே அரசு பள்ளிகளில் டிஜிட்டல் கல்வி முறையை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இதன் மூலம் பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களை சுமந்து கொண்டு செல்வதை தடுத்துள்ளார். மேலும், இ-கவர்னஸ் மூலம் காகிதம் இல்லாத அரசாட்சியை நடத்தி வருகிறார்.

இவர் மேற்கொள்ளும் அமைச்சரவைக் கூட்டங்கள், உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்களில் காகிதங்கள் உபயோகிக்காமல் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலமாகவும், ஐ-பேட் மூலமாகவும் மட்டுமே புள்ளி விவரங்களைக் கொண்டு விவாதிக்கப்படுகின்றன. அனைத்து அரசுத் துறையிலும் காகிதங்கள் இல்லா தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது.

இந்தநிலையில் ஆந்திர மாநிலம் இரண்டாமிடத்தில் உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவித்தது.

இதனை தொடர்ந்து ஊழலை அடியோடு வேரறுக்க சந்திரபாபு நாயுடு டிஜிட்டல் முறையில் புகார் தெரிவிக்கும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளார்.

புகார் அளிப்பவர்களின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதால் இந்த உதவி மையத்தில் புகார்கள் குவிய தொடங்கின.

இதையடுத்து, புகார் அளிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் முதல்கட்டமாக துறை ரீதியான விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொள்பவர்கள் மேல் நடவடிக்கைக்கு பயந்து, யாரிடம் இருந்து லஞ்சமாக பணம் வாங்கினார்களோ, அவர்களின் வீடுதேடி சென்று, கதவைத் தட்டி வாங்கிய பணத்தை திருப்பி அளித்து வருகின்றனர்.

அவ்வகையில், கடந்த ஆறு மாதங்களில் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொதுமக்ககள் கொட்டி அழுத பல லட்சக்கணக்கான ரூபாய் அளவிலான லஞ்சப்பணம் திரும்பி வந்து சேர்ந்துள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன...

பாஜக மோடியின் ஜிஎஸ்டி வரி சாதனை...


தொடர்ந்து மூன்றாவது மாதமாக GST வரி வசூல் குறைந்தது.. கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு நவம்பர் மாதத்தில் குறைவு..

ஜூலை - 94,063 கோடி
ஆகஸ்ட் - 90,669 கோடி
செப்டம்பர் - 92,150 கோடி
அக்டோபர் - 83,346 கோடி
நவம்பர் - 80,808 கோடி

இந்த அரசு உருப்படியா பண்ணிட்டு இருந்த ஒரே வேலை "வரி வசூல்" மட்டும் தான்.. அதையாது ஒழுங்கா பண்ணுங்கடா லூசு பசங்களா...

http://www.thehindu.com/business/Economy/gst-collection-falls-further-to-80808-cr-in-november/article22282072.ece

திமுக வின் சன் டிவி மக்களை எப்படி திசை திருப்பி சிந்தனையை மாற்றுக்கிறது பாருங்கள்...


நான்கு உலக தலைவர்களுடன் முக்கிய விவாதம் கறிவிருந்து உண்டா? இல்லையா?

இதெல்லாம் நாட்டுக்கு முக்கியமாடா.. தூ..

பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல்...


உண்மையில் பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல் என்பதை அறியுங்கள்.

பனை மரத்திலும் தென்னை மரத்திலும் இருக்கும் நார் போன்ற பகுதிதான் பன்னாடை. அந்த காலத்தில் இதனை கல் முதலியவற்றை வடிகட்ட பயன்படுத்தினர்.

பன்னாடையானது மீந்த சக்கையை தன்னிடம் வைத்துக்கொண்டு நல்லவற்றை விட்டுவிடும்.

நன்னூலில் ஒரு பாடலில் பன்னாடையைப் பற்றி கூறுகிறார் பவணந்தி.

நன்னூல் என்பது பதிமூன்றாம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்டதமிழ் இலக்கண நூலாகும்.

"அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்."

பொருள்:

அன்னம், பசு போன்றோர் முதல் மாணாக்கர். மண், கிளி போன்றோர் இடை மாணாக்கர். இல்லிக் குடம் (ஓட்டைக் குடம்) ஆடு, எறுமை, பன்னாடை (நெய்யரி) போன்றோர் கடை மாணாக்கர்.

விளக்கம்:

அன்னம் நீரிலிருந்து பாலைப் பிரித்து உண்ணும், அது போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் சொல்வதிலிருந்து நல்லனவற்றை எடுத்துக் கொள்வர்.

பசுவானது கிடைக்கும் போது புல்லை தின்றுவிட்டு பின்னர் அதை அசை போடும். அதே போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் இருக்கும் போது அவர்களிடம் கலைகளைக் கற்றுக்கொண்டு பின்னர் அதனைப் பயிற்சிப்பர்.

மண்ணை எந்த அளவு பண்படுத்துகிறோமோ அது அந்த அளவு பயன் தரும். அது போல் ஆசிரியரின் பயிற்சிக்கு ஏற்ப கற்பவரும், கிளியைப் போன்று சொன்னதைச் சொல்பவரும் இடை மாணாக்கர்.

ஓட்டைக்குடம் எதையும்தக்க வைத்துக் கொள்ளாது. ஆடு கண்ட இலைகளையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயும். எதையும் உருப்படியாக உண்ணாது. எருமை குளத்து நீரிலே கிடந்து அதனையே கலக்கிவிடும்.

நெய்யரி (பன்னாடை) நெயியை (நல்லதை) விட்டு கசடை (வேண்டாததை) வைத்துக்கொள்ளும். இத்தகைய குணங்கள் உடையவர்கள் கடை மாணாக்கர்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா கலாட்டா...


மாதுளையின் மகத்துவம்...


மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.

ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்...!

ஆபத்தான இனங்கள் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டியது மனிதனே மட்டும்...


திருட்டு திராவிடமே தமிழர் நிலம் 70,000 ச.கி.மீட்டர் பறிபோனது யாரால்?


இன்று அப்பகுதியில் நாடற்றவர்களை போல கோடிக்கோடி தமிழர் வாழ வேண்டிய நிலையை உருவாக்கியது யார்?

மூன்று முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகள் பறிபோனது யாரால்?

முக்கிய தமிழரின் வழிப்பாட்டுத் தலங்களை பறித்துக் கொண்டு இன்று, அத்தலங்களுக்கு செல்லும் தமிழர் மீது சுடுதண்ணீர் ஊற்றி விரட்டும் நிலையை உருவாக்கியது யார்?

ஒருங்கிணைய இருந்த தமிழரை கன்னடன் மலையாளி என துண்டாடி பிரித்தெடுத்தது யார்?

தமிழ் மூவேந்தரையும் தூக்கி தலையில் வைக்க வேண்டிய தமிழனை.. தூற்ற வைத்து, தூற்ற வேண்டிய இனப்பகையினரை தலையில் தூக்கி வைத்து ஆடும் நிலையை உருவாக்கியது யார்?

2009ல் மாபெரும் ஈழ இன அழிப்பை நடத்தியும் இன்னும் உணர்வற்று கிடக்கும் நிலையை உருவாக்கியது யார்?

20 தமிழரை துன்புறுத்தி சுட்டுக்கொன்ற பின்னரும் குருதி கொதிக்காமல் முடங்கிக்கிடக்கும் நிலையை உருவாக்கியது யார்?

இது போக இன்னும் ஏராளம் உள்ளது..

தமிழின அழிப்பை துளியும் அஞ்சாமல் திறம்பட செய்து, மாய பிம்பத்தால் பொய்யாக நின்று இன்றும் தமிழர் குடியை அழித்திட துணைபோகும், வடுக இனவெறியன் கன்னட தெலுங்கர் ஈ.வெ. ராமசாமியை அரவணைத்து தமிழர் இன விடுதலை காண்போம் என்பது கானல்நீரே...

பாஜக வும்.. இந்திய நீதித்துறை லட்சனமும்...


ஜென்கெம் - குடலை குமட்டும் பதிவு.. விரும்பாதோர் வாசிக்காமல் இருப்பது நலம்...


ஜென்கெம் இதான் இதன் பெயர் கடந்த பல ஆண்டுகளாக மேற்கத்தைய மக்கள் இதன் பெயரை உச்சரிக்காமலோ கேள்விப்படாமலோ அல்லது இதை உட்கொண்டு உணராதவரோ இருக்க முடியாது.

JENKEM இது ஒரு வகையான போதை வஸ்து.

இது 1990 களில் ஜம்பியன் மக்களால் கண்டு பிடிக்கப்பட்டது.

அதுவும் இதை கண்டு பிடித்தவர்கள் சிறுவயது குழந்தைகள் என்றால் நம்ம முடிகிறதா?

ஆம் உண்மையும் கூட..

இதை தடைசெய்வதை பற்றியும் எப்படி இந்த போதையை தடை செய்ய முடியும் என்று குழம்பி போனது உலகம்.

இது என்ன பெரிய விஷயமா.. ஒரு அரசாங்கதால் இந்த போதை தடை செய்யப்படுகிறது என்று அறிவிக்க வேண்டியது தானே என்று நீங்கள் நினைக்கலாம்.. அது தவறு..

ஏன் தடை செய்யப்பட முடியவில்லை என்று இறுதியில் காரணம் கூறுகிறேன் புரியும்.

1995 ல் இந்த போதையால் ஆட்கொண்ட ஒரு நபரை அழைத்து அவரை சோதித்தது மருத்துவ உலகம்.

அப்போது அவர் கூறியது என்னத் தெரியுமா?

இந்த போதை வஸ்து காற்றின் ஊடாக வாய்க்குள் செலுத்தப்படும்.. சென்ற சில நிமிடங்களில் தலைக்குள் இருந்து ஒரு குரல் என்னோடு பேசிக்கொண்டே இருந்ததாக அவர் கூறினார்.

(இது தொடர்ந்து உபயோகப்படுத்தியதால் வந்த விளைவு)..

ஆனால் எனது குடும்பம் எனது மனைவி எல்லாம் தெளிவாக தெரிகிறது என்றும் கூறினார்.

இதே காலகட்டத்தில் ஒருவர் வேகமாக காரை ஓட்டி சென்று விபத்துக்குள்ளாகி பலரை சாகடித்துள்ளார்

அவரை விசாரித்ததில் வங்கியில் கொள்ளை அடித்து செல்லும் வழியில் இவ்வாறான விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் தெரிகிறது.

பிற்பாடு அவர் சொன்னது அவர் அந்த சம்பவம் நடந்த இரவு ஜென்கெம் என்ற போதையை உபயோகப்படுத்தியுள்ளார் என்றும் பின்னர் நன்றாக நான் தூங்கி விட்டேன் நடந்த எதுவுமே எனக்கு தெரியாது சுத்தமாக நியாபகமும் இல்லை என்று கூறியுள்ளார்.

பின்னர் தான் தெரிய வருகிறது இதன் போதையால் இரவில் சுற்றித்திரியும் மிருகம் போன்று நாம் ஆகிவிடுவோம் அதாவது தூக்கத்தில் நடப்பது போன்று தான் ஆனால் எல்லாமும் வேலை செய்யும்.

விடிந்தால் நானா அப்படி செய்தேன் என்ற வியப்பில் ஆழ்த்தும்.

கொலை , கொள்ளை, கற்பழிப்பு, ஆழ் மனதில் வைத்து இருந்த அத்தனையும் வெளிப்படையாக வெளியே வரும்.

சரி இதை ஏன் உலகம் முழுவதும் தடை விதிக்க முடியாமல் போனது தெரியுமா?

இதன் உருவாக்கம் தான்.

இது எப்படி உருவாகிறது தெரியுமா?

நீங்கள் நம்பினால் நம்புங்கள் மனித கழிவுகளால் தான் உருவாகிறது..

மனித மலம் மற்றும் சிறுநீர் எடுத்து கண்ணாடி குவளையில் கரைத்து ஊற்றி குடுவையின் மேல் பாகத்தில் பலூனின் வாய் பகுதியை இருக்கி வைத்துவிட வேண்டும்.

(மற்றொரு பொருளையும் இதில் கலக்க வேண்டும் அப்போது தான் முழு போதையாக மாறும் அந்த பொருள் பற்றி சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன்)

சூரிய ஒளி படாமல் சில நாட்களுக்கு பிறகு எடுத்தால் கழிவுகள் மூலம் வெளிப்படும் ஒரு வகையான பிராணவாயு பலூனை உப்பி ஊதிய பலூன் போன்று இருக்கும்.

இதை அப்படியே தமது மூக்கில் மற்றும் வாயில் பலூனை செலுத்தி அந்த நாத்தம் புடிச்ச காற்றை திங்க வேண்டும் அல்லது சுவாசிக்க வேண்டும்.

இப்போது புரிகிறதா மனித கழிவை எப்படி தடை விதிக்க முடியும்.

தற்சமய அறிக்கை ஒன்று வெளியானது..

இந்த போதையை உபயோகப்படுத்தும் பலர் எய்ட்ஸ் நோய் மற்றும் புற்றுநோயின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றாரகள் என்கிறது.

ஒரு முறை உபயோகித்தாலும் பாதிப்பு வருவது உறுதி.

இதை பற்றிய கருத்து முரண்பாடுகள் நிறையவே  உண்டு..

எது எப்படியோ எதையும் தெரிந்து
கொள்வது அவசியம்.

ஏன் இதை பற்றியெல்லாம் தேவையில்லாமல் பேச வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு..

மனித கழிவு நம் உடலில் இருக்கும் போது விஷமாக மாறி நம்மை தாக்காமல் வெளியே வந்து சாதாரண கழிவுக்கு  கூட இப்பேர்ப்பட்ட சக்தி உண்டு என்பதை யோசிக்கையில் பல விடயங்கள் புரிகிறது...

தமிழினமே சிந்தித்துப் பார்...


சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய்...


சென்னையில் நிறையப் பேருக்கு இதை டைடல் பார்க்குக்கு எதிரே ஓடும் சாக்கடை என்ற அளவில் மட்டுமே தெரியும்.

ஹிந்து முதலான நாளிதழ்களில் கொஞ்சம் பேசப் பட்டிருந்தாலும் நான் சந்தித்த நிறைய பேருக்குத் தெரியாத விஷயம் "பக்கிங்ஹாம் கால்வாய்" தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய்.

இதைப் பற்றி நான் இங்கே பதியக் காரணம் இந்த விஷயம் மீடியாக்களால் பேசப் படவில்லை என்பதும், நமது பாடப் புத்தகங்களிலும் பெரிதாக எந்த விவரங்களும் தரப்படவில்லை என்ற ஆதங்கம் தான்.

இதை அரசாங்கம் குப்பைகளாலும் இடி பொருட்களாலும் நிரப்பி மறைத்து விட முயல்வது ஒரு தேச அவமானம்.

தொலை நோக்குப் பார்வை (அப்படின்னா) இல்லாத நமது தமிழக அரசாங்கங்கள் ஆங்கிலேயர் விட்டுப் போன ஒரே புதையலையும் மண்ணாக்கி விட்ட அநியாயம் இது.

1806 ஆம் ஆண்டு வெட்டத் தொடங்கி பல கட்டங்களில் பல்வேறு ஏரிகளையும் ஆறுகளையும் இணைத்து 420 km நீளத்தில் விஜயவாடாவையும் விழுப்புரம் மாவட்டத்தையும் இணைக்கும் இந்த அதிசயம் உருவானது.

தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைத் துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு செல்ல இது பெரிதாக உபயோகப் பட்டு இருக்கிறது.

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களால் பெரிதும் உபயோகப்படுத்தப் பட்ட இந்தக் கால்வாய், சுதந்திரத்திற்குப் பிறகு கவனிப்பார் இல்லாமல் அழியத் தொடங்கியது. மற்ற பகுதிகளில் இன்னும் பெரிதும் பாதிக்கப் படாத இந்தக் கால்வாய் 80 சதவீதம் இன்னும் உபயோக நிலையிலேயே உள்ளது.

சென்னை நகரின் குறுக்கே ஓடும் 30 km நீளமான பகுதி மட்டுமே கடும் நாற்றம் வீசும் சாக்கடையாக மாறி விட்டிருக்கிறது.

MRTS என்ற பறக்கும் ரயில் திட்டம் இந்தக் கால்வாயை ஒட்டியே திட்டமிடப் பட்டது.

இந்தக் கால்வாயே ஒரு MRTS என்பது யாருக்குமே புரியவில்லை என்பது பரிதாபம் தான். இந்த ரயில் பாதை கட்டுமானம் பெரும்பாலான இடங்களில் இந்தக் கால்வாயை சிதைத்து விட்டிருக்கிறது. சில ரயில் நிலையங்கள் பக்கிங்ஹாம் கால்வாயை நிரப்பிக் கட்டப் பட்டிருப்பது போன்ற ஒரு முட்டாள்தனம் உலகத்தின் எந்த மூலையிலும் காணக் கிடைக்காத ஒன்று.

2004 ஏற்பட்ட சுனாமியின் பொது பல லட்சம் உயிர்களை இது ஒரு வடிகாலாக இருந்து காப்பாற்றியதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து தமிழக மற்றும் ஆந்திர அரசுகளிடம் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனாலும் பெரிதாக ஒரு முயற்சியும் எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை.

பல கோடி செலவில் சாலைகள் அமைத்து நம்மிடம் சுங்கம் வசூலிக்கும் அரசு, இது போன்ற எளிய இயற்கையான போக்குவரத்து வழிகளை ஏன் மறந்து விட்டிருக்கிறது?

இன்றைய தேதிக்கு இது போன்ற திட்டத்தை அமைக்க எத்தனை ஆயிரம் கோடிகள் தேவைப்படும் என்று யாராவது யோசித்தால் தேவலை (200% மந்திரி வரிகள் தனி).

ஒவ்வொரு முறை விமானத்தில் பறக்கும் போதும் பல இடங்களில் ஸ்கேல் வைத்துப் போட்டது போல நேராகத் தெரியும் இந்த பக்கிங்ஹாம் கால்வாய் நாம் எவ்வளவு அறிவில்லாமல், பொறுப்பில்லாமல் வாழ்கிறோம் என்பதை ஒரு அளவுகோல் போல நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது...

யார் இந்த நம்மாழ்வார்..?


தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவித்த முனைவர் கோ.நம்மாழ்வார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு சிற்றூரில் (06 ஏப்ரல் 1938)-ல் பிறந்தார்.

தந்தை பெயர் ச.கோவிந்தசாமி. பள்ளிப்படிப்பை முடித்த பின் தந்தை மற்றும் சகோதர்களின் அறிவுரைப்படி விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண்மை படிப்பை தேர்ந்தெடுத்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை அவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். அப்போது ரசாயன உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அவர், விவசாய முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என முடிவு செய்து தனது அரசு வேலையை உதறினார்.

பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டோமினிக் பியர் என்பவர் ஆரம்பித்த Island of Peace என்ற தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து அதன் மூலம் களக்காடு பகுதியில் அடித்தட்டு ஏழை விவசாயிகளுக்கு நவின விவசாய முறைகளில் விவசாயம் செய்யவது, கூட்டுறவுக் கடன்கள் மூலம் கிணறுகள் அமைத்து அவர்களின் வாழ்வை உயர்த்துவது என்று இயங்கினார்.

கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960 ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார்.

ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்கா (Masanabu Fukuoka) ஈர்க்கப்பட்டு இயற்கை வேளாண் விஞ்ஞானி ஆனார், முனைவர் கோ.நம்மாழ்வார்.

ஐரோப்பிய நாடுகள் முழுக்க பயணம் செய்தவர் நம்மாழ்வார். நம் நாட்டு வேப்பிளைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வந்தவர். 

இந்தியாவில் உணவு பஞ்சத்தை போக்குவதற்காக கொண்டுவரப்பட்ட ’பசுமைப் புரட்சி’யின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அமெரிக்க நாடகத்தின் அத்தனை அத்தியாயாங்களையும் தன்னுடைய எழுத்து மற்றும் பேச்சு மூலமாக அடித்து நொறுக்கினார். 

டெல்டா மாவட்டத்தை சுடுகாடாக மாற்றும் திட்டமான மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராகவும், மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகவும், வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், நடைப்பயணம் என பல விதமான போராட்டங்களை முன்னெடுத்தார்.

தன்னுடைய முயற்சியால் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும், இயற்கை விவசாயத்தை விதைத்தார். இதன் மூலமாக, லட்சக்கணக்கான இயற்கை விவசாயிகள் இன்றைக்கு உருவாகியுள்ளனர்.

இதுவரை குடும்பம், லீசா உள்ளிட்ட 250க்கும் மேலான என்.ஜி.ஓ.க்களை உருவாக்கியுள்ளார்.

இவரின் பணியை சிறப்பிக்கும் வகையில், 2007-ம் ஆண்டு திண்டுக்கல், காந்திக்கிராம கிராமியப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி கெளவரவித்தது. 

தொடர்ந்து இயற்கை வேளாண் முறைகளை தமிழகத்தில் பிரபலப்படுத்துவற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதன் விளைவாக தற்போது தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ளது.

இயற்கை வேளாண் விழிப்புணர்வுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நம்மாழ்வார், தமிழக இயற்கை உழவர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் என்ற இயக்கங்களையும் நடத்தி வந்தார்.

ரசாயனத்தில் விளைவிக்கப்படும் உணவுகள் அனைத்திலுமே நஞ்சு கலந்திருக்கிறது. இந்த உணவுகளை உட்கொள்வதால் தான் மக்கள் நோயாளிகளாகி, சீக்கிரமே வாழ்வை இழக்கிறார்கள். இயற்கை விவசாயம் தான் ஆரோக்கியமான வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று நாடு கடந்தும் குரல் கொடுத்து வந்தவர், நம்மாழ்வார்.

விவசாயத்தை, விவசாயிகளே வேண்டா வெறுப் பாகப் பார்த்த நிலையில்...

சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றும் இளைஞர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள்... எனப் பல தரப்பினரையும் விவசாயத்தை நோக்கி ஓடி வரச் செய்தவர், நம்மாழ்வார். 

தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் பயணித் திருக்கும் நம்மாழ்வார், பல்வேறு பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள், போராட்டங்கள் என்று பலவற்றையும் முன்னெடுத்திருக்கிறார்.

குறிப்பாக, மரபணு மாற்றப் பட்ட விதைகள், பூச்சிகொல்லி நச்சுகளைத் தயாரித்து சந்தைப்படுத்தும், அசுர பலமிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக விவசாயிகளைத் திரட்டிப் போராடி யிருக்கிறார்.

இறுதி நிமிடங்கள்...

டிசம்பர் 30 அன்று இரவு, நம்மாழ்வார் இயற்கை எய்தினார்..

தமிழகம் முழுவதிலும் இருந்து விவசாயிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசு சார்பாக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்பையன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

அதன் பிறகு கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ள சுருமான்பட்டியில் அவர் உருவாக்கியிருக்கும் 'வானகம்' உயிர்ச்சூழல் பண்ணைக்குக் ஆங்கிலப் புத்தாண்டு அன்று காலை 4 மணிக்கு   எடுத்துச் செல்லப்பட்டு நம்மாழ்வாரின் உடல், அங்கே ஏற்கெனவே அவர் தேர்வு செய்து சொல்லியிருந்த இடத்தில் விதைக்கப் பட்டது...

அந்த இடத்தில் வேப்ப மரக்கன்று ஒன்றும் அவருடைய குடும்பத்தாரால் நடப்பட்டது...