30/06/2017

இந்து, இந்தியா, திராவிடம் யாவும் கற்பனையே - பாவலேறு பெருஞ்சித்திரனார்...


திராவிடம் என்னும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல்.

இது முந்தித் தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ, எங்கும் இல்லை.

இக்கால் தூய தமிழர் மதங்களாகிய சிவனியமும் (சைவம்) மாலியமும் (வைணவம்) எவ்வாறு ஆரியக் கலப்பால் இந்து மதம் என்றொரு புதுப்பெயரால் குறிக்கப் பெறுகின்றனவோ, அவ்வாறு, தமிழம் தமிழ்மொழி அவர்களால் திராவிடம் என்று குறிக்கப் பெற்றது.

அது, தமிழ் தவிர்த்த தமிழினில் கிளைத்த மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலிய மொழிகளைக் குறிப்பதற்கு ஆகிய சொல்லாகக் கால்டுவெல் போலும் மொழி நூல் ஆசிரியர்களால் பயன்படுத்தப் பெற்றது.

இனி அதனினும் பின்னர், திராவிட மொழிகள் தமிழினின்று பிரிந்த சேய்மொழிகள் என்பதைப் பெருமைக் குறைவாகக் கருதி..

அத்திராவிட மொழியாசிரியர்களும்,
புலவர்களும் திராவிட மொழிகளுக்கும் மூல மொழியாக இருந்த ஒரு பழம் பெரும்மொழியைக் குறிக்கப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆனால் உண்மையில் திராவிடம் என்று ஒரு மொழியோ, அது தழுவிய ஓர் இனமோ என்றுமே இருந்தன அல்ல.

இந்து மதம், இந்தியா போலும் அதுவும் ஒரு கற்பனைப் பெயரே. வரலாற்றுப் பெயரே அன்று.

நன்றி: தென்மொழி 1988 நூல்,
வேண்டும் விடுதலை,
பக்.294, 295...

பாஜக வும் மாட்டு அரசியலும்...


விற்றவர் இந்து விவசாயி..
வாங்கியவர் இந்து விவசாயி..

இடையில் புகுந்து கலவரத்தை தூண்டியவர்கள் அப்பாவி முகத்துடன் இருக்கும் இவாதான்...

கலவரத்திற்கு மூலகாரணமாக இருந்த இவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும்...

நாளை இரவு 9 மணிக்கு, அமைச்சர் பதவி வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் கறார்...


நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சிக்கு எம்.எல்.ஏ. தங்கச் தமிழ்ச்செல்வனின் பரபரப்பு பேட்டி...

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தடியடி நடத்தும் போது அவங்க தேச பக்த போலீஸாம்...


நேற்று மாட்ட வச்சி கலவரம் பண்ணவங்களை பொலக்கும் போது அவங்க தலிபான் ஏவல்துறையாம் பிஜேபி ஆட்களுக்கு...

மீத்தேன் ஹைட்ரோகார்பன் இன்ன பிற திட்டங்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு தமிழ்நாடு அரசும் வைத்தது ஆப்பு...


இனிமேல் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் ஏதேனும் தகராறு ஏற்பட்டால், மீண்டும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட மாட்டாது.

( நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2014 தொடர்பான வழிமுறைகள் பற்றிய தமிழ்நாடு அரசின் அறிவிப்பு இப்படித்தான் சொல்கிறது).

அப்ப கருத்துக்கேட்புக் கூட்டத்தில் யாரும் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது.

அப்படித்தானே ஆபீசர்ஸ்?

எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து...


எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது..

எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம்.

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும்.

இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கிண்ணம் (cup) தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம்.

இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.

வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்பு சத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது.

மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு குவளையில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது.

வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, காடி (vinegar) இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மேபிள் சாறு (Maple Syrup) சேர்த்து கொள்ளலாம். இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது.

இன்றைய உலகில் ஆணும், பெண்ணும் குண்டு உடலை குறைக்க நடை பயிற்சி, உடற்பயிற்சின்னு உடல் வருத்தக்கிறாங்க.

இன்னொரு பக்கம் ஆறு வாரங்களில் அழகான ‘இடை’ ன்னு விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் வாங்கிச் சாப்பிட்டு,எப்படியாவது உடல் எடையை, குறைக்க பணத்தை தண்ணியா செலவழிக்கறதும் உண்டு.

ஆனா, இவ்வளவு சிரமம் இல்லாம, உடல் எடை குறைக்க முடியும். அது ஒரு காலத்துல கடிச்சி, ருசிச்ச சாப்பிட்ட இனிப்பான சமாச்சாரம்தான். அவுசுத்திரேலியா நாட்டில் இருக்கிற மெல்போர்ன் உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் சேர்ந்து ஒரு ஆய்வு செய்துள்ளனர்.

அதன்படி, குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.

உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்...

ஜெயலலிதா மன்னார்குடி மாபியா ஓ பி எஸ் ஈ பி எஸ்க்கு அப்புறம் அதிமுகல அதிகம் சம்பாரிச்சது விஜயபாஸ்கர் தான் போலயே...


தமிழா விழித்தெழு...


இலுமினாட்டி பற்றி தெரியாதவர்கள் முதல் முறையாக தெரிந்து கொள்ளும் நாளில் தூக்கத்தைத் தொலைப்பது நிச்சயம்...


தெரியாதவர்களுக்காக இலுமினாட்டி பற்றி ஒரு சிறு அறிமுகத்துடன் கட்டுரையை தொடங்குகிறேன்.

உலகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சர்வதேச நாட்டாமைகள்தான் இலுமினாட்டிகள்.

உலக அரசியல் அமைப்புகள், மதங்கள், வங்கிகள், ஹாலிவுட், மீடியாக்கள், நுகர்பொருட்கள் எல்லாம் எல்லாம் இவர்களது கையில்.

எதெல்லாம் இவர்களுடையது என்று ஆராய்வதைவிட எதெல்லாம் இன்னும் இவர்களுக்கு சொந்தமாகவில்லை என்பதை வேண்டுமானால் எளிதாக எண்ணிவிடலாம்.

இன்றைய உலகைப் பொறுத்தவரை இயற்றலும் ஈட்டலும் காத்தலும் அழித்தலும் இவர்கள் கையில்.

எகிப்திய பார்வோனின் இரத்தவழி வம்சங்களாகிய 13 முதல் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் இந்த இலுமினாட்டிகள்.

சில உலக அரசியல் தலைவர்களும், மிகப்பெரிய பணமுதலைகளும், கலைத்துறையினரும், விஞ்ஞானிகளும் இதில் அடக்கம்.

இவர்கள் வரலாறு பல நூற்றாண்டுகளைக் கடந்தது. உலகில் இதுவரை நடைபெற்ற அத்தனை புரட்சிகளையும், இரு உலகப்போர்கள் உட்பட அத்தனை யுத்தங்களையும் தங்கள் சொந்த ஆதாயத்துக்காக நடத்தியவர்கள் இவர்கள்தான்.

இதை ஏன் அவர்கள் செய்ய வேண்டும்?

New World Order என்ற பெயரில் உலகம் முழுவதையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்து அதை ஆளவேண்டும் என்பதே இவர்கள் நோக்கம், அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்று விட்டார்கள் என்றே சொல்லலாம்.

இலுமினாட்டிகளின் சிறப்பியல்புகளில் ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்வது இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள உதவும்.

இவர்கள் சொல்லி அடிப்பதில் கில்லாடிகள். பில்லி சூனியம், நரபலிகள், மாந்திரீகம், அஸ்ட்ராலஜி, நியூமராலஜி, occultism போன்றவற்றில் இவர்களை மிஞ்ச உலகத்தில் ஆளில்லை.

3, 6, 7, 9, 11, 22, 33, 333, 66, 666 போன்றவை இவர்களது முக்கிய எண்கள்.

சைத்தானுக்கு செய்யும் சடங்குகளாக இவர்கள் குறிப்பிட்ட நாளில் சில குறிப்பிட்ட செயல்களை செய்வார்கள்.

அது முழுக்க முழுக்க எண்களின், வானசாஸ்திரத்தின் முக்கியத்துவத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.

இவர்கள் தாங்கள் செய்யப்போவதை ஏதேனும் ஒரு மீடியம் வழியாக ஏற்கனவே வெளியே சொல்லியும் விடுவார்கள், ஆனால் அதை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல.

பெரும்பாலும் சம்பவங்கள் நடந்த பின்னரே அதை உலகம் புரிந்து கொள்ளும்.

அப்படி முன்னரே கண்டு பிடித்தாலும் எந்தக் கொம்பனாலும் அதைத் தடுத்து நிறுத்தவும் முடியாது.

உதாரணத்துக்கு இரட்டை கோபுர இடிப்பு நடத்தப் போவது பற்றி (அதை செய்ததும் இந்தப் புண்ணியவான்கள்தானாம்) சம்பவம் நடப்பதற்கு சிலமாதங்கள் முன்னர் வெளியிட்ட 20$ அமெரிக்க நோட்டில் மறைமுகமாக சொல்லி விட்டார்களாம், அது மட்டுமன்றி சம்பவத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன் வெளியான புகழ்பெற்ற காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைகளிலும் ஆங்காங்கே இந்த இரகசியம் வெளியிடப்பட்டிருக்கிறது, ஆனால் அது அப்போது யாருக்கும் தெரியவில்லை.

யார் இவர்கள்? ஏன் இதைச் செய்கிறார்கள்? இவர்கள் ஏன் வெளிச்சத்துக்கு வருவதில்லை? தாங்கள் செய்யப்போவதை யாருக்கு, ஏன் முன்கூட்டியே சொல்லுகிறார்கள்? அது யார் மூலம், எப்படி வெளிவுலகத்துக்கு கசிகிறது?

இலுமினாட்டிகள் யாரும் தன்னை இலுமினாட்டி என்று அறிவித்துக் கொள்ளமாட்டார்கள். இது ஒரு இரகசியக் குழு, இரகசியம்தான் இவர்கள் பலம்.

இதை ஏன் வெளியே சொல்லுகிறார்கள் என்றால் மக்களுக்காக அதை சொல்லுவதில்லை.

உலகம் முழுவதிலுமுள்ள இலுமினாட்டிகள் தங்களுக்குள் போன் மூலமாகவோ கடிதத்திலோ பேசிக்கொள்ள மாட்டார்கள், இதுபோன்ற சமிஞ்கைகள் மூலமே தங்கள் சக இலுமினாட்டிகளிடம் தகவல்களைப் பரிமாறுகிறார்கள்.

அவற்றை decode செய்து கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. இலுமினாட்டிகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்து, அவர்கள் தகவல்களை decode செய்து மக்களுக்கு வெளியிடும் conspiracy theorists பலர் இருக்கிறார்கள்.

அவர்களது கட்டுரைகள் புத்தகங்கள் மூலம் இணையதளங்கள் வழியே பல நூற்றாண்டுகளாக திரைமறைவில் உலகை ஆட்டிவைத்துக் கொண்டிருந்த இலுமினாட்டி இயக்கம் பற்றிய இரகசியங்கள் இப்போது ஓரளவுக்குக் கசியத்துவங்கி இருக்கிறது.

மலேசிய விமானம் MH370 தொலைந்த அதே நேரத்தில் ரஷ்யா உக்ரேன் பிரச்சனை இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. இரண்டையுமே இலுமினாட்டி சதி என்று பலரும் கூறிவந்தனர்.

ஆனால் அதற்கான ஆதாரம் அப்போது ஒன்றும் சிக்கவில்லை. இலுமினாட்டிகள்தான் சொல்லி அடிப்பவர்களாயிற்றே இதுபற்றி ஏதாவது முன்கூட்டியே சொல்லி வைத்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து சில conspiracy theorist-கள் சில திடுக்கிடும் தகவல்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார்கள். அந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

இலுமினாட்டிகளின் மதத்தில் Poseidon என்ற ஒரு நெப்ட்டியூன் கடவுளுண்டு, இது கடலுக்குரிய கிரெக்கக் கடவுளாகும்.
இதன் கையில் ஒரு மும்முனை குத்தீட்டி வைத்திருக்கும். அந்த மும்முனை குத்தீட்டி (Trident) அதிகாரத்தின் அடையாளமாகும்.

உலகத்தின் அதிகாரம் கடவுளிடமிருந்து சைத்தானுக்கு கைமாறுவதை கொண்டாடும் விதமாக கடல் தெய்வமான நெப்ட்டியூனுக்கு கடலில் நடத்தும் ஒரு சடங்காகவும் 2014-ஆம் ஆண்டில் இந்த மும்முனை குத்தீட்டி சின்னத்தை (Trident) எல்லோருடைய ஆழ்மனதிலும் பதிக்கும் விதமாகவும் அதை உலகம் முழுவதிலும் பிரபலப்படுத்துவது இவர்கள் நோக்கம்.

மக்களது ஆழ்மனதில் இதை ஏன் பதிய வைக்க வேண்டும் என்று conspiracy theorist-களைக் கேட்டால் அவர்கள் இலுமினாட்டிகளை mind manipulators என்று அழைக்கிறார்கள்.

இவர்கள் இன்று உலகத்தை ஆண்டு கொண்டிருப்பதே மக்களை உளவியல் ரீதியில் மூலம் mind control செய்துதானாம்...

கொலைகாரர்கள், ஜனநயக எதிர்ப்பாளர்கள், மனித குல விரோதிகள் எந்த நிறத்தில், எந்த வடிவத்தில் வந்தாலும் இனம் காணுவது காலத்தின் தேவை...


சேரனையும் புகழ்வோம்...


சேரன் கருவூரில் இருந்தான். சோழன் அவனைப் பார்க்க யானைமீதமர்ந்து வந்தான்.

அவன் படையெடுத்துதான் வந்துள்ளான் என்று நினைத்து சேரனின் வீரர்கள் சூழ்ந்துகொண்டனர்.

இதனால் சோழனின் யானைக்கு மதம் பிடித்துவிட்டது.

இதை புலவரும் சேரனும் மாடத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
புலவரிடம் இவன் யார் என்று சேரன் கேட்கிறான்.

புலவர் சோழனின் புகழை எடுத்துக்கூறி அவனைக் காப்பாற்றுமாறு பாடினார்.

(எப்பிடி பாத்தாலும் நம்ம பயடா இவன்)

உடனே சேரன் போய் யானையை அடக்கி சோழனைக் காப்பாற்றினான்.

சேரனின் பெயர்: சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை.

சோழனின் பெயர்: முடித்தலை கோப்பெருநற்கிள்ளி.

புலவரின் பெயர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.

பாடல்: புறநானூறு 13.

இவன்யார் என்குவை ஆயின், இவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்
மறலி அன்ன களிற்றுமிசை யோனே;
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
சுறவுஇனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோர் அறியாது மைந்துபட் டன்றே;
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம,
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.

இவன் யார் என்று கேட்கிறாயா?
இவன் அம்புகளால் துளைக்கப்பட்ட புள்ளிகளுடன் சிதைந்து காணப்படும் புலித்தோலாலாகிய கவசத்தைத் தன் வலிய அழகிய மார்பில் அணிந்து கூற்றுவன் போல் யானைமீது வருகிறான்.

அந்த யானை வருவது கடலில் ஒருமரக்கலம் வருவதைப்போலவும்
பல விண்மீன்களுக்கு நடுவே விளங்கும் திங்களைப்போலவும் காட்சி அளிக்கிறது.

அந்த யானையைச் சுற்றிலும் சுறாமீன்களின் கூட்டம் போல் வாளேந்திய வீரர்கள் சூழ்ந்துள்ளனர்.
அவர்களிடையே உள்ள பாகர்கள் அறியாமலேயே அந்த யானை மதம் கொண்டது.

இவன் நாட்டில் வயல்களில் மயில்கள் உதிர்த்த தோகையை உழவர்கள் நெற்கதிர்களோடு சேர்த்து அள்ளிச் செல்வார்கள்.

இவன் கொழுத்த மீனையும் முதிர்ந்த கள்ளையும்,
நீரை வேலியாகவும் உள்ள வளமான நாட்டுக்குத் தலைவன்.
இவன் இன்னலின்றித் திரும்பிச் செல்வானாக...

நன்றி: https:// ta.m.wikipedia. org/wiki/சேரமான்_அந்துவஞ்சேரல்_இரும்பொறை

பழனி பஞ்சாமிர்தம் குறித்து எச்ச ராஜாவின் ட்விட்டும்..தோழர்களின் ரிவிட்டும்...


பாஜக மோடியும் மாட்டு அரசியலும்...


பழனி முதல் உனா வரை இந்தியா முழுவதும் மோடியின் மூன்று ஆண்டுகள் படுதோல்வியை மறைக்க காவிகளுக்கு கொடுக்கப்பட்டிள்ள ஒரே ப்ராஜெகெட், மாட்டை முன்வைத்து ஒரு அரசியல், மக்களை திசை திருப்பும் ஒரு அரசியல்.

வெளிநாட்டு பயணங்கள் எல்லாம் எதையும் பெற்றுத்தரவில்லை மாறாக இரண்டு கோடி வேலையிழப்புகள் தான் மிச்சம் என்கிற பொருளாதார நிபுனர்களின் அறிக்கைகள்.

பண மதிப்பு நீக்கம் தொடங்கி GST வரை எல்லாம் வெத்து வேட்டு அரசியல், பம்மாத்து அரசியல்.

கருப்பு பணம் - 15 லட்சம் ரூபாய் என்று தொடங்கி இன்று மல்லையாவுடன் கொஞ்சி குலாவும் அருண் ஜெட்லியின் தோல்விகளை மறைக்க தினமும் யோகா செய்து மனதை சாந்தமாக்குங்கள் என்று இந்திய மக்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள்.

மாட்டு அரசியல் ஒரு திசைதிருப்பும் அரசியல், கேள்விகளை இன்னும் கூர்மையாக்குங்கள், இன்று நீங்கள் பேசவில்லை என்றால் உங்கள் நாக்கும் அறுத்திரியப்படும்...

பாஜக மோடியும் டூபாக்கூர் அரசியலும்...


பொதுமக்களின் போராட்டத்தால் நெல்லையில் மூடப்பட்ட 2 டாஸ்மாக் கடைகள், சாக்லெட் வழங்கி கொண்டாடிய மக்கள்...


குடும்ப அரசியலுக்கு எதிரான தர்ம யுத்தம் தொடரும்...இப்படிக்கு உத்தமன் டயர் நக்கி அதிமுக பன்னீர்செல்வம்...


அதாவது சசிகலா மற்றும் தினகரன் கட்சியில் இருந்தால் அது குடும்ப அரசியலாம் ஆனால் இந்த மூதேவியின் மொத்த குடும்பமும் கட்சிக்குள் இருந்தால் குடும்ப அரசியல் இல்லையாம்...

முதலில் உன் முதுகில் உள்ளதை கழுவு பிளடி டயர் நக்கி...

பறையர்களை எவ்வாறு அழைப்பது?


தலித் என்று அழைக்கலாமா?

ஓ அழைக்கலாமே...

சிறைக்கம்பிகளை எண்ணவேண்டும் என்ற ஆசை இருந்தால் தாராளமாக அழைக்கலாம்.

1. அரசாணை நிலை எண். 198,
சமூக நலத்துறை, நாள் 21-03-1981..

2. அரசு கடிதம் எண். 24024/ஆதிந-2/1998-2 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 15-03-1999..

3. அரசாணை (ப) எண் 69இ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 05-04-1999..

ஆகிய ஆவணங்களின் படி
"தாழ்த்தப்பட்டோர்"
"தாழ்த்தப்பட்ட மக்கள்"
"தலித்"
"தலித்துகள்"
"தலித் மக்கள்"
"தலித் சாதி"
"தலித் சமுதாயம்"

போன்ற இழிவுப் பெயர்களால் அழைக்கவோ, உச்சரிக்கவோ, எழுத்தால் எழுதவோ, ஆவணங்களில் பதிவு செய்யவோ கூடாது என்று அரசே ஆணை பிறப்பித்துள்ளது.

ஆக தலித், தாழ்த்தப்பட்டோர் போன்ற சொற்களை பயன்படுத்துதல் சட்டப்படி குற்றம் ஆகும்.

ஆதி திராவிடர் என்று அழைக்கலாமா?

1918 ல் திராவிட மகாஜன சபை ஆவணங்களில் பறையர், பஞ்சமர் போன்ற பெயர்களை நீக்கி 'ஆதி திராவிடர்' என்று குறிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது.

மூன்றாண்டுகள் பரப்புரையிலும் ஈடுபட்டது.

1921ம் ஆண்டுக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தமிழ்நாட்டளவில் பரவலாக சுமார் 15,025 பேர் தங்களை 'ஆதி திராவிடர்கள்' என்று சொல்லிக்கொண்டு, குடி மதிப்பீட்டுக் கணக்கேட்டில் அதை ஏறும்படி செய்தனர்.

ஆனால் 1921ம் ஆண்டு குடிமதிப்புக் கணக்கெடுப்பின்படி,சென்னை மாகாணத்தில் SC/ST பிரிவினரின் எண்ணிக்கை 63,72,074 ஆகும்.

இவர்களில் சுமார் 15,000 பேர்தான் ஆதிதிராவிடர் என்று பதிவு செய்து கொள்ள முன்வந்தனர்.

அதாவது ஆயிரத்தில் ஒருவர் கூற 'ஆதி திராவிடர்' என்று பதியவில்லை.

இது, தமிழ்நாட்டு பட்டியல் சாதியாரும் பிறமாநிலத்தாரைப் போல ‘திராவிடர்’ என்னும் பெயரை விரும்பவில்லை என்பதையே புலப்படுத்தியது.

ஆக ஆதிதிராவிடர் எனும் பெயர் அவர்கள் விரும்பிய ஒன்று அல்ல.
திணிக்கப்பட்ட ஒன்று.

பறையர்களை பலமுறை சாதி வெறியுடன் கேவலமாகப் பேசியுள்ள ஈ.வே.ரா இதுபற்றி என்ன கூறியுள்ளார்.

( விடுதலை- ஞாயிறு மலர் 21.8.1994
ஆசிரியர் கேள்வி- பதில் பகுதி)..

கேள்வி: திராவிடநாடு திராவிடருக்கானால் ஆதி திராவிடர்களுக்கு என்ன லாபம்?

பெரியார்: லாபம் இல்லை. நட்டம் தான். ஆதி என்ற இரண்டு எழுத்துகளை வெட்டியெறிந்து விடுவோம்.

அதாவது அவர்கள் திராவிடர்களாக இருந்தால் போதுமாம்.ஆதி குடிகளாக இருக்கக்கூடாதாம்.

ஆகவே பறையர் பெருமக்களை அவர்களின் சமூகத்தைக் கொண்டு குறிக்க பறைய'ர்' என்று மரியாதையாக அழைப்பதே முறை.

அனைத்துப் பிரிவினரையும் சமூகத்தால் குறிப்பிட இங்ஙனம் அழைப்பதே சரி.

அவமானப்படுத்தும் வகையில் சாதிப்பெயரைக் குறிப்பிடுவதும் தண்டனைக்குரிய குற்றமே ஆகும்...

பெரிய புடிங்கியாட்டம் பேஸ்புக்ல பேசுரதெல்லாம் பொய்யா பக்தாள்...


விரைவில் 200 ரூபாய் நோட்டு, அச்சடிக்கும் பணி ஆரம்பம்...


கன்னடர்களின் நல்லுறவுக்காகக் காவிரியைக் காவு கொடுக்கத் துடிக்கிறார் மு.க.ஸ்டாலின்...


காவிரிஉரிமைமீட்புக்குழு
ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் அறிக்கை...

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (27.06.2017) இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், அனைத்திந்திய அளவில் ஆற்று நீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அம்மடலில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை அவர் முன்வைக்கவில்லை! அதுமட்டுமின்றி, தமிழர்கள் காவிரி நீர் உரிமை கோருவதைப் புறந்தள்ளிவிட்டு, கங்கை நீர் இணைப்பைக் கோர வேண்டும் என்று மடைமாற்றும் ஸ்டாலின் உள்நோக்கமும் அதில் பொதிந்துள்ளது! அக்கடிதத்தில், அவர் எழுதிய வரிகளே இதற்குச் சான்று!

உன்னதமான இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகள் தீர்வதோடு, அண்டை மாநிலங்களுக்கு இடையில் அமைதி நிலவி தேசிய ஒருமைப்பாட்டினை மேலும் வலுவாக்கவும், தேசிய வளர்ச்சி மற்றும் தேசிய பொருளாதாரம் மேம்படவும் மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதால் நதிநீர் இணைப்புத் திட்டங்களில் தாங்கள் (பிரதமர்) உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அண்டை மாநிலங்களுக்கு இடையிலுள்ள தண்ணீர்ச் சிக்கல் தீர்ந்து அவற்றிற்கிடையே அமைதி நிலவ அனைத்திந்திய ஆற்று நீர் இணைப்பு உதவும் என்ற ஸ்டாலின் கூற்றில், கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள காவிரிச்சிக்கலையும் உள்ளடக்கித்தான் கூறுகிறார் என்பது தெளிவு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று இந்திய அரசை வலியுறுத்தித் தமிழர்கள் தமிழகந்தழுவிய அளவில் முழுஅடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தி வரும் இக்காலத்தில், அக்கோரிக்கையை மடைமாற்றுவது போல் அனைத்திந்திய ஆற்று நீர் இணைப்பை முன்னிறுத்துகிறார் ஸ்டாலின். முன்னாள் நடுவண் அமைச்சர் கே.எல். இராவ் அவர்கள், 1972இல் பேசிய கங்கை – காவரி இணைப்பை அக்கடிதத்தில் நினைவூட்டியுள்ளார்.

கங்கை - காவிரி இணைப்பை அக்காலத்திலிருந்து இக்காலம் வரை உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். வாச்பாயி தலைமையமைச்சராக இருந்தபோது அமைக்கப்பட்ட கங்கை காவிரி இணைப்புக் குழுவை லல்லு பிரசாத் கடுமையாக எதிர்த்தார். கங்கையிலிருந்து வாய்க்கால் வெட்டினால் அதில் தண்ணீர் ஓடாது, இரத்தம்தான் ஓடும் என்று அப்போது எச்சரித்தார். பின்னர், செயல்பட முடியாத கங்கை – காவிரி இணைப்புக் குழு கலைக்கப்பட்டது.

கங்கையிலிருந்து தென்னாட்டிற்குத் தண்ணீர் கொண்டுவர வடநாட்டவர் ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதேபோல், மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கொண்டுவர ஒரிசா, ஆந்திரா, தெலங்கானா அரசுகளும், அம்மாநிலங்களின் மக்களும் ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஏற்கெனவே இயற்கை இணைத்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு ஓடி வந்த காவிரி, பாலாறு, தென்பெண்ணை ஆகியவற்றை சட்டவிரோதமாக அண்டை மாநிலங்கள் பறித்துக் கொண்டு, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வராமல் தடுத்துவிட்டன. ஆங்கிலேய அரசு 120 ஆண்டுகளுக்கு முன் கட்டித்தந்த முல்லைப் பெரியாறு அணையையும் இடிக்க வேண்டுமென்று கேரளாவைச் சேர்ந்த காங்கிரசு – கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் கங்கணம் கட்டிச் செயல்படுகின்றன. கர்நாடகத்தில், காவிரியைத் தடுப்பது காங்கிரசு – பா.ச.க. – மதச்சார்பற்ற சனதா தளம் ஆகிய அனைத்திந்தியக் கட்சிகளே!

இந்த உண்மைகள் மு.க. ஸ்டாலினுக்கு நன்கு தெரியும். தெரிந்தே காவிரி உரிமைப் போராட்டத்தை திசை திருப்பி, மடை மாற்றுவதற்காக கங்கை காவிரி இணைப்புத் திட்டத்தை அவர் இப்பொழுது தமிழர்களிடையே முன்னுக்குக் கொண்டு வருகிறார்.

வரலாற்று வழியாகவும் சட்டத்தின்படியும் தமிழ்நாட்டுக்கு உரிமையாய் உள்ள காவிரி உரிமையை இன்றுவரை அண்டை மாநிலத்திலிருந்து மீட்க முடியாமல் போராடிக் கொண்டுள்ளோம். இந்நிலையில், இமயமலையிலிருந்து கங்கை நீரை காவிரி ஆற்றுக்குக் கொண்டு வருகிறேன் என்று மு.க. ஸ்டாலின் புறப்பட்டிருப்பது, விவரம் தெரியாமல் அல்ல! விவரத்தோடுதான் திசைதிருப்புகிறார்.

காவிரித்தாயை தங்கள் நினைவிலிருந்து தமிழர்கள் அகற்ற முடியாமல் மீண்டும் மீண்டும் கர்நாடகத்தோடு காவிரி நீர் உரிமை கேட்டு, வீதிக்கு வந்து போராடுகிறார்கள். தமிழ்நாட்டில் இந்தப் போராட்டம் வலுப்பெற்றால், கன்னடர்களுக்கு எதிரான தமிழின உணர்ச்சி வளரும். அவ்வாறு கன்னடர்களுக்கு எதிரான தமிழுணர்ச்சி தமிழ்நாட்டில் மக்கள் போராட்டமாக வடிவெடுத்தால், தி.மு.க. தலைவர்களின் சொந்தங்களும் சொத்துகளும் கர்நாடகத்தில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு இக்கட்டான நிலை ஏற்படும்.

தமிழ்நாட்டில் எழும் காவிரிப் போராட்டத்தை ஆதரிக்கவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாமல் திண்டாட வேண்டிய நிலை தி.மு.க.வுக்கு ஏற்படும். அதன் தன்னலச் சந்தர்ப்பவாதம் அம்பலப்பட்டுவிடும் என்று அஞ்சியே “காவிரியை மற – கங்கையை நினை” என்ற உபதேசத்தை ஸ்டாலின் பரப்பத் தொடங்கியுள்ளார் என்று காவிரி உரிமை மீட்புக் குழு வலுவாக ஐயுறுகிறது.

எங்கள் ஐயம் தவறு என்றால், ஸ்டாலின் கங்கை காவிரி இணைப்பு என்ற கானல் நீர் திட்டத்தை மறுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், பாலாறு – பவானி ஆறுகளில் அண்டை மாநிலங்கள் கட்டும் தடுப்பணைகளைத் தகர்த்தெறிய கோரிக்கை வைத்தும் இந்தியப் பிரதமருக்கு புதிய மடல் எழுத வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்...

பாஜக மோடியின்... கடலை மிட்டாய் உடலுக்கு கேடு ஆகையால் 18%வரி பிட்ஷா உடலுக்கு நல்லது எனவே 5%வரி...