20/04/2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் பகுதி -9...

சத்திய யுகம் எனும் நமது வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 9-ம் பகுதியாகும். இந்த 9-ம் தீர்க்க தரிசனத்தில் இடம்பெறும் குறிப்புகள் யாவும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்.


9-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று முதலாவதாக காணும் தீர்க்கதரிசனம் என்னவெனில் மயிலாடுதுறை மக்களின் கவனத்தை ஈர்க்க உள்ளதாகவும், அங்கு உள்ள ஒரு ஆன்மீக அமைப்பில் பல திடுக்கிடும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்க இருப்பதாகவும், சித்தரை 18-ம் நாளிலிருந்து இந்த சம்பவங்கள் துவங்கிட உள்ளதாக 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


காலத்தால் அழிக்க முடியாத காவியமான ஆதிசக்தியின் அவதாரக் கொள்கைகள் யாவும் இப்பூமி முழுவதும் வேர் ஊன்றும் நேரம் வந்துவிட்டது என்றும், இனி மதங்கள் யாவும் ஆட்டம் காணும் பல்வேறு சூழ்நிலைகள் இப்பூமியில் தொடர் நிகழ்வுகளாக நடக்க உள்ளதாக சத்திய யுகத்தின் 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.



கோவிலூர் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய ஊர் என்றும், அங்கு உள்ள ஒரு சிவாலயத்தில் மாபெரும் ஒரு சம்பவம் தற்போது நடக்க இருப்பதாகவும், அச்சம்பவத்திற்கும் தஞ்சைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் என 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய நிகழ்வை பற்றி இங்கே தெரிவிக்கின்றது.



அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் இந்த நாடுகளின் உறவுகளுக்குள் பெரும் விரிசல்கள் உருவாகி பெரும் போர் பதற்றம் ஒன்று தற்போது உருவாகும் சூழல் இருப்பதாகவும், ஒரு நாட்டின் அழிவை இந்த நாடுகள் பார்க்க உள்ளதாக 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது. “சிரியா“வின் போர் பதற்றம் பல நாடுகளுக்கு வேதனைதரக்கூடிய நிகழ்வாக அமையும் என 9-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை இங்கே சுட்டிக்காட்டுகின்றது.


தமிழகத்தில் இனி போராட்டங்களும், மக்கள் பல எழுச்சிப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் தொடர் நிகழ்வுகளும் நடக்க இருப்பதாகவும் இது தமிழகத்தின் அவலநிலையை எடுத்துக் காட்டும் ஒரு நிகழ்வாக அமையும் என 9-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.


தமிழகத்தில் இனி பல திடுக்கிடும் சோகச் சம்பவங்கள் பல நடக்க உள்ளதாகவும், அதன் அறிகுறியாக தமிழக அம்மன் கோவில்களில் “தாலி“ இறங்கும் நிகழ்வு இனி அடிக்கடி நடக்கும் என்றும், இது “சுமங்கலி“ பெண்களுக்கு போதாத காலமாக மக்கள் கூறுவார்கள் என்றும், ஆனால் இது அதற்கான நிகழ்வு அல்ல என பெண்கள் மிக முக்கியமாக கருத வேண்டும் என 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு நிகழ்வை எச்சரிக்கை செய்கிறது. அதே சமயத்தில் இந்நிகழ்வினால் தமிழக மக்களுக்கு பல இன்னல்கள் ஏற்பட உள்ளதாக 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


சேலத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு புதைபொருள் ஒன்று பூமி அதிர்வால் வெளிவரும் நிகழ்வு ஒன்று விரைவாக நடக்க உள்ளதாகவும், இப்பொருளில் உள்ள குறிப்பு என்னவெனில் இவ்வுலகம் மகா மாற்றத்தை தனது அழிவின் மூலம் காண உள்ளதாக இருக்குமென 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


சோழர்கள் ராஜ்யம் இனி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வகையில் இனி பல அரசியல் மாற்றங்கள் திடீர் என்று நடக்க உள்ளதாகவும், இது அரசு ஆட்சியாக இல்லாமல் இறை ஆட்சியாக திகழும் ஒரு அதிசய சம்பவம் திடீரென்று சோழர்கள் வாழ்ந்த பூமியிலிருந்து துவங்கிடும் என்று 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


கடவுள் என்ற கோட்பாடுகள் இனி இப்பூமியில் உண்மையாக உருவெடுத்து உலாவும் பல அதிசய சம்பவங்கள் இனி நடக்க உள்ளதாகவும், இந்த பூமியில் அது இந்தியாவின் தென்தமிழகத்தில் அதிகம் நடக்க இருப்பதாக 9-ம் தீர்க்கதரிசனம் தெய்வீக நிகழ்வுகளைப் பற்றி இங்கே நமக்கு தெரிவிக்கின்றன.



கோரக்கர் என்ற சித்தரின் ஜீவசமாதி ஒன்று வெடித்து சிதறும் ஒரு அதிசய நிகழ்வு நடக்க இருப்பதாகவும், இச்சம்பவம் “ஸ்ரீபோகர்“ இப்பூமியில் மீண்டும் கால்ஊன்றிவிட்டார் என்பதற்கான ஆதாரமாக மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், அதேசமயத்தில் அந்த நிகழ்வின் எதிரொலியாக சீனாவில் உள்ள புத்த மடாலயத்தின் கதவு ஒன்று திறக்கும் சம்பவம் நடைபெறும் என்றும், இந்நிகழ்வின் மூலம் “போதிதர்மனின்“ இரகசியங்கள் இந்த உலகத்திற்கு தெரிய வரப்போகிறது என 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு அரிய அற்புத நிகழ்வை இங்கே நமக்கு தெரிவிக்கின்றது.



போகர் என்ற சித்தரை தொடர்ந்து அவரின் நேரடி சீடரான புலிப்பாணி சித்தரின் பிரவேசம் கொல்லிமலையில் இருக்கும் என்றும், கொல்லிமலையில் உள்ள ஒரு மலைக்குகையை மலைவாழ் மக்களால் இனி கண்டறியப்பட உள்ளதாகவும், அக்குகையில் போகர் வடிவமைத்து வழிபட்ட ஒரு சிவலிங்கத்தை மக்கள் கண்டு வணங்கும் அற்புத நிகழ்வு தற்போது நடக்க இருப்பதாகவும், இது புலிப்பாணி எனும் சித்தர் பிரவேசம் இப்பூமியில் நடந்தற்கான அறிகுறியாக உலக மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.



கோரக்கர், போகர், புலிப்பாணி  இவர்களின் வருகையால் தமிழகம் குளிர உள்ளதாகவும், முருகன் சந்நதி அமைந்த ஒரு ஊர் 7 மணிநேர தொடர் மழையினால் புனிதம் அடையப் போவதாக 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

ஆன்மீக பெரியவர் ஒருவர் தற்போது மரணம் அடைவார் என்றும், அவரின் தொண்டர்கள் தமிழகத்தில் பெரும் சோகத்திற்கு ஆளாக நேரிடும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்க இருப்பதாகவும், இது இறைவனின் நீயாயத்தீர்ப்பின்படி அமையும் என 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.



இறைவனின் வருகையால் இப்பூமி பெரும் மாற்றங்களை சந்திக்க உள்ளதாகவும், அந்த இறைவனைக் காண பூமியை நோக்கி வேற்று கிரகவாசிகள் வருகை தரும் பல நிகழ்வுகள் இனி நடக்க உள்ளதாகவும், சனி, புளுட்டோ, வியாழன், செவ்வாய், சந்திரன், அக்குவா-பூ எனும் கிரகங்களிலிருந்து வேற்றுகிரகவாசிகள் வருகை தருவார்கள் என்றும், அக்குவா-பூ எனும் கிரகத்தைப் பற்றி இனிதான் விஞ்ஞானிகள் கண்டறிவார்கள் என 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே சுட்டிக்காட்டுகின்றது.


“HR8634813DU“ “156GRG HERTS“ எனும் எழுத்துக்களை விஞ்ஞானிகள் ஆய்விற்காக எடுத்துக் கொள்வார்கள் என்றும், “எலிமிக்கார்னர்“ எனும் பூமியின் சுற்றுவட்டப் பாதையை விஞ்ஞானிகள் தங்களது தொலை நோக்கிகளால் ஆய்வு செய்து உலக மக்களுக்கு பல புதுமையான விடயங்களை தர உள்ளார்கள் என 9-ம் தீர்க்கதரிசனம் புதுமையான ஒரு செய்திக்குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

இந்த பூமியில் இனி பல வினோத அதிசய உயிரினங்களை மக்கள் காண்பார்கள் என்றும், அவைகளால் மனிதகுலத்திற்கு எவ்வித தீமைகள் இல்லையென்றும், ஆனால் பல புதுமைகளை மக்களுக்கு அவைகள் தர உள்ளன என 9-ம் தீர்க்கதரிசனம் வருங்கால புதுமைகளை பற்றி இங்கே பதிவு செய்கிறது.

இனி உலக மக்கள் கலைகளின் வாயிலாகத்தான் இறைவனின் அற்புதங்களையும், ஆற்றல்களையும் தெரிந்து கொள்ள முடியும் என்றும், கலைகளின் வடிவாகவே உலக மக்களை இறைவன் ஆளுமை செய்வார் என்றும், அப்படிப்பட்ட விஷயங்கள் யாவும் நமது தமிழகத்திலிருந்தே துவங்கிட இருப்பதாக 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


பல ஆன்மீகவாதிகளின் முகத்திரையை கிழித்து அவர்களை பற்றி உலக மக்கள் அறிந்து கொள்ளக்கூடிய பல சம்பவங்கள் இனி இந்தியாவில் அதிகம் நடக்க இருப்பதாகவும், தமிழகத்தில் முக்கிய ஆன்மீகவாதிகள் ஐவர் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்களின் போலியான வேஷங்களை மக்கள் அறியும்படி செய்யும் தொடர் நிகழ்வுகள் பல இனி நடக்க உள்ளதாக 9-ம் தீர்க்கதரிசனம் இங்கே நமக்கு நிகழ்வுகளை பற்றி சுட்டிக் காட்டுகின்றது.


போலிச்சாமியார் ஒருவனின் சொத்துக்கள் யாவும் அரசு கையகப்படுத்தும் சம்பவம் ஒன்று உடனே நடக்க உள்ளதாகவும், அந்த போலிச்சாமியார் தமிழகத்தை சார்ந்தவர் என 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

இறைவன் அவதரிக்கும் அந்த இறுதி சபையில் மிக அருகாமையில் ஒரு சுப நிகழ்வு அரங்கேற்றம் நிகழ உள்ளதாகவும், அதனை தொடர்ந்து அந்த அமைப்பு உலக மக்களின் கண்களுக்கு விரைந்து அடையாளம் காணப்படும் என 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய இறைசார்ந்த நிகழ்வை இங்கே நமக்கு தெரிவிக்கின்றது.

உண்மைகள் உறங்குவதில்லை என்ற நமது வருங்கால தீர்க்கத்தரிசனத்தில் ஏற்கனவே இடம்பெற்ற 12-ம் தீர்க்க தரிசனத்தின் நிகழ்வுகள் இனி நடக்க துவங்கும் என்றும், அதற்கான காலமாக நாம்இக்கால கட்டத்தை நினைவில் கொள்ள வேண்டும் என 9-ம் தீர்க்க தரிசனம் மெய்பட இங்கே கூறுகிறது.

மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற அரசியல் தலைவரின் கனவுகள் தமிழகத்தில் நிறைவேறிடும் என்ற கனவில் தமிழக மக்கள் இருக்கும் இச்சமயத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்றும், இதனால் தமிழகத்தில் பல அரசியல் குழப்பங்கள் உருவாகி மக்களை திசை திருப்பும் நிகழ்வுகள் பல நடக்க போவதாக 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே நமக்கு தெரிவிக்கின்றன.


ஏழையின் பங்களான் இறைமகன் இயேசுவின் சுவிசேஷ கூட்டம் ஒன்றில் அதிசயம் ஒன்று நிகழும் சம்பவம் தமிழகத்தில் நடக்க உள்ளதாகவும், அது தூத்துக்குடியில் நடக்கும் என 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை நமக்கு இங்கே சுட்டிக்காட்டுகின்றது.


9-ம் தீர்க்கதரிசனத்தின் குறிப்புகள் ஒவ்வொன்றும் துவங்கும் காலக்கட்டம் மிக,மிக அருகாமையில் உள்ளது என்றும் அது துவங்கும் காலத்தின் அறிகுறியே சிவாலயம் ஒன்று இடிந்து விழும் நிகழ்வு நடைபெறும் என 9-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

புதுமைகளை மக்கள் காணும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றாலும் இறைவனை காண நாம் புத்துணர்வுடன் காத்திருப்போம்.

குறிப்பு : இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

மீடியாக்களில் வேலை செய்யும் பெண்களை தரம்கெட்டு பேச இவனுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது ?


வேற்றுகிரகவாசிகள் - 1...


இது ஒரு மதம் சார்ந்தது என்றும்
முழுக்க முழுக்க மார்க்க விளக்கத்தை மட்டும் சொல்லக் கூடிய ஒரு தொடர் அல்ல இது. மாறாக, மார்க்க ஆதாரங்களின் வெளிச்சத்திலும், மற்றும் அறிவுசார் ஆய்வுகளின் அடிப்படையிலும் நம்மைச் சுற்றியிருக்கும் உலகில் நடக்கும் விடை காணப்படாத பல மர்மங்களினதும், மற்றும் அமானுஷ்யமான பல நிகழ்வுகளதும் பின்னணிகளை அலசும் ஒரு தொடராகவே இன் ஷா அல்லாஹ் இது இருக்கும். இந்த நெடுந்தொடரில் இரண்டு வகையான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

முதலாவது வகையான தகவல்கள்:

குர்ஆன், மற்றும் ஹதீஸ் ஆகியவற்றின் அடிப்படையில் முஃமின்கள் நம்ப வேண்டிய பல மறைவான அம்சங்கள் பற்றி இங்கு அலசப்படும். இதில் அனேகமானவை ஈமானோடு தொடர்புபட்டவை. இவற்றை எந்த அடிப்படையில் நம்ப வேண்டுமோ, அந்த அடிப்படையில் மட்டுமே ஒவ்வொருவரும் நம்ப வேண்டும். அதற்கு மாற்றமான வேறு அடிப்படைகளில் இவற்றை நம்பினால், இறைச்செய்திகளை நிராகரித்த குற்றத்தைச் செய்தவர்களாக வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படலாம். எனவே, இந்த வகையான செய்திகள், முறையான மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான விளக்கங்களோடு அலசப்படும்.  பகுத்தறிவு, யதார்த்தவாதம் போன்ற சித்தாந்தங்களின் அடிப்படையிலேயே தமது வாழ்வில் அனைத்தையும் சிந்தித்துப் பழகிவிட்ட இன்றைய தலைமுறையில், மறைவான உலகம் பற்றிய மார்க்கத்தின் நிலைபாடுகளை இன்று தலைகீழாகவே புரிந்து வைத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

பல மார்க்க ஆதாரங்களை, அவை கூறும் உண்மையான கருப்பொருளில் புரிந்து கொள்ளாத நிலையில் இவ்வாறானவர்கள் ஆதாரங்களை அனுகுவதையும் பார்க்க முடிகிறது. இவ்வாறான தப்பான அனுகுமுறைகளைத் தகர்த்தெறிய வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இந்தக் கடமையுணர்வின் அடிப்படையிலும் பல அமானுஷ்யமான அம்சங்களை இந்தப் பகுதியில் அலசவிருக்கிறோம். மார்க்க ஆதாரங்களோடு ஒவ்வொன்றும் தெளிவாக நிரூபிக்கப்படும்.

இரண்டாவது வகையான தகவல்கள்:

இந்த வகையைச் சார்ந்த தகவல்கள், மேற்கூறப்பட்ட முதலாவது வகையிலிருந்து சற்று மாறுபட்டது. அறிவியல், மற்றும் நிதர்சனம் சார்ந்த பகுதி தான் இது. இந்த வகையான தகவல்களில் மார்க்க நிலைபாடுகளுக்கு எந்தவகையிலும் முரணாகாத விதத்தில், விஞ்ஞானம் சார்ந்த சில அம்சங்கள் அலசப்படும். மேலும், வரலாற்றுப் பதிவுகளில் சொல்லப்படாமல் மறைக்கப்பட்ட பல வரலாற்று உண்மைகள், மற்றும் தற்கால உலகில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல அமானுஷ்ய நிகழ்வுகள் போன்றவை பற்றியும் தேவைக்கேற்ப இங்கு அலசப்படும். இவ்வாறான அறிவுசார் பகுதிகளில் வரும் கருத்துக்கள் தான் நூற்றுக்கு நூறு வீதம் சரியென்று முழு உத்தரவாதத்தோடு  இவ்வாறான தகவல்கள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவது இதன் நோக்கமல்ல. வாசகர்களாகிய நீங்கள் இவற்றை வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அவரவர் சக்திக்குட்பட்ட வகையில் இது குறித்து மேலதிகத் தேடல்களை நீங்களும் மேற்கொள்ள வேண்டும்.

அந்தத் தேடல்களின் மூலமும் இவற்றில் வரும் கருத்துக்களை சரியென்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே, நீங்கள் இவ்வாறான தகவல்களை ஏற்றுக் கொள்வது சிறந்தது. சுருக்கமாகக் கூறுவதென்றால், மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு வகையான தகவல்களும் இரண்டறக் கலந்த நிலையில் தான் இந்த தொடர் அமைந்திருக்கும். மார்க்க நிலைபாடுகள் சார்ந்த அம்சங்கள் எவை? உலகளாவிய அம்சங்கள் எவை? என்பதை வாசகர்கள் இலகுவாகப் பிரித்தறிந்து கொள்ளும் வண்ணமே இந்தத் தொடர் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு கேள்வி எழலாம். அதாவது, “மார்க்க நிலைபாடுகள், மற்றும் மார்க்கம் அல்லாத உலகளாவிய தகவல்கள் ஆகிய இரண்டு வகையான தகவல்களையும் ஒன்றாகக் கலந்து தான் இந்தத் தொடர் அமைய வேண்டுமா? இரண்டு வகையான தகவல்களையும் தனித்தனியாகப் பிரித்து வெவ்வேறு ஆய்வுகளாக வெளியிட்டால் பல குழப்பங்களைத் தவிர்க்கலாமே..?” என்ற கேள்வி தான் அது.

இந்தக் கேள்விக்கான சுருக்கமான பதில் இது தான்:

இங்கு நாம் அலசவிருக்கும் விடயத்தைப் பொருத்தவரை, மார்க்க ஆதாரங்களையும், அது சார்ந்த உலகளாவிய தகவல்களையும் தனித்தனியாக அலசுவதை விட, ஒன்றாக சேர்த்து அலசுவது தான் பொருத்தமான அனுகுமுறை. இரண்டையும் தனித்தனியாகப் பிரித்து அனுகும் போது, பல மர்மங்கள் பற்றிய உண்மைகளைத் தெளிவான வடிவத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுவது என்பது மிகவும் கடினமான காரியம். இதன் விளைவாகவே இந்த அனுகுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அனுகுமுறையில் இருக்கும் நியாயங்களை, இந்தத் தொடர் நிறைவடையும் போது வாசகர்களாகிய நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

இந்தத் தொடர் மூலம் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் உங்களை வந்தடையக் காத்திருக்கின்றன. இதுவரை நீங்கள் கற்றறிந்திருக்கும் அறிவின் பிரகாரம், இந்த உலகம் எவ்வாறு இயங்குகிறது என்று நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறீர்களோ, அந்த நம்பிக்கையின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்வது போலவும் பல தகவல்கள் இங்கு சொல்லப்படும். இதன் மூலம் உங்கள் சிந்தனையைக் குழப்புவது இந்த பதிவின் நோக்கமல்ல. மாறாக, நிஜம் என்று இதுவரை நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் பல அம்சங்கள் உண்மையில் நிஜங்கள் அல்ல; அவை போலிகள் என்பதை உங்களுக்கு உணர்த்துவதே இந்த பதிவின் நோக்கம்.

எந்தவொரு விடயத்தைப் பற்றியும் சரியான உண்மையை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், அதைப் பல மாறுபட்ட கோணங்களிலிருந்து நோக்க வேண்டும். அப்போது தான், அதன் சரியான வடிவத்தைக் கிரகித்துக் கொள்ள முடியும். இதுவரை இந்த உலகத்தையும், இதிலிருக்கும் படைப்புகள், ஜீவராசிகள் போன்றவற்றையும் குறிப்பிட்ட ஒரு கோணத்தில் மட்டுமே நம்மில் அனேகமானோர் பார்த்துப் பழகி விட்டார்கள். ஆனால், இதே உலகத்தை வேறொரு கோணத்திலிருந்து பார்க்கும் போது, இதுவரை பார்வைக்குப் புலப்படாத பல உண்மைகள் பளிச்சென்று புலப்படும்.

வழமையான கோணத்திலிருந்து பார்த்த போது விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட மர்மங்கள் போல தோற்றமளித்த பல அம்சங்கள், உண்மையில் மர்மங்கள் அல்ல என்பதும் இந்த மாறுபட்ட கோணத்தின் மூலம் புலப்படும்.

இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் தான் இந்தத் தொடர் அமைந்திருக்கும். நான்கு தொடர்களாக ஒன்றன் பின் ஒன்றாக ஓர் ஒழுங்கில் பதிவேற்றப்படவிருக்கின்றது. ஆய்வின் கருப்பொருளை வாசகர் இலகுவில் புரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்திலேயே இவ்வாறு நான்கு தொடர்களாக இந்த ஆய்வு வகுக்கப்படுகிறது. நான்கு தொடர்களதும் சாராம்சம் பின்வருமாறு...

முதலாவது தொடர்: ஜின்களின் உலகம் பற்றி விளக்கும் பல மார்க்க ஆதாரங்களை நமது புரிதலுக்கு ஏற்ப இலகுவாக விளங்கிக் கொள்ளும் பொருட்டு, அல்லாஹ்வின் படைப்புகள் பற்றிய விஞ்ஞான ரீதியான பல அடிப்படைகளை அலசுவதாகவே இந்த முதலாவது தொடர் அமைந்திருக்கும். இதில் கணிசமான அளவு விஞ்ஞானம் பற்றிய தகவல்கள் உள்ளடக்கப் பட்டிருக்கும். எனவே, விஞ்ஞானத்தில் அவ்வளவாக ஈடுபாடில்லாத சில சகோதரர்களுக்கு இந்தத் தொடரை வாசிக்கும் போது சில சமயம் கொட்டாவி வரலாம்; சில பகுதிகள் கொஞ்சம் புரிந்து கொள்ளக் கடினமானவை போலவும் இருக்கலாம். இருந்தாலும் சகித்துக் கொள்ளுங்கள்; வேறு வழியில்லை. ஏனெனில், இந்த ஆய்வின் பிற்பகுதியில் அலசப்பட இருக்கும் ஜின்கள் பற்றிய பல மர்மங்களைப் புரிந்து கொள்வதற்கு இந்த அறிவியல் பற்றிய அறிமுகம் அத்தியாவசியமானது.

இரண்டாவது தொடர்: மார்க்க நிலைபாடுகள் குறித்த எந்தக் கருத்துக்களும் இந்தத் தொடரில் இருக்காது. மாறாக, அதிர்ச்சி தரக் கூடிய, நம்ப முடியாத, மறைக்கப்பட்ட பல வரலாற்றுச் சம்பவங்கள் பற்றி இந்தத் தொடரில் ஓரளவுக்கு அலசப்படும். இந்தத் தொடரில் பல சுவாரசியமான உண்மைச் சம்பவங்கள் பற்றிக் கூறப்படும்.

மூன்றாவது தொடர்: இது தான் முக்கியமான தொடர். மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் ஜின்களின் உலகம் பற்றி விரிவாக அலசும் ஒரு தொடராக இந்தத் தொடர் தான் இருக்கும். இந்த மூன்றாவது தொடர் மக்களுக்குத் தெளிவாகப் புரிய வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு மட்டுமே மேற்குறிப்பிடப்பட்ட முதலாம், இரண்டாம் தொடர்கள் கூட உள்ளடக்கப் பட்டிருக்கின்றன. 

நான்காவது தொடர்: மார்க்க ஆதாரங்களின் அடிப்படையிலும், மற்றும் நவீன அறிவியலின் அடிப்படையிலும் நாம் வாழும் இந்தப் பூமியைப் பற்றி ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் அலசுவதாகவே பிரதானமாக இந்தத் தொடர் அமைந்திருக்கும். இந்தத் தொடருக்கான அவசியம் என்னவென்பதவும் தொடரின் இறுதியில் வாசகருக்கே புரியும். அறிமுகம் போதுமென்று நினைக்கிறேன்; இனி நமது பயணத்தை ஆரம்பிக்கலாம்...

இந்நியா டா நீதி டா நேர்மை டா ஜனநாயகம் டா கருமம் டா...


பல கோடிகள் செலவிட்டு நடக்கும் மரபணு மாற்று ஆராய்ச்சிகள் வியாபாரத்திற்கான முதலீடுகளே..


தமிழ்நாட்டில் GMO கொசுக்களுக்கான பரிசோதனை முயற்சி நடக்கும் இடம் - International Institute of Biotechnology and Toxicology (IIBAT) - படப்பை / சென்னை...

நியூட்ரீனோ வும் தமிழக அழிவும்...


ஆழ்மனத்தின் அரியசக்தி...


நாம் பிறந்தது முதல் இன்றுவரை நம் ஆழ்மனதில் பதிந்த விடயங்களே நம் வாழ்வை தீர்மானிக்கிறது.

உதாரணமாக பத்து வருடங்களாக கார் ஓட்டிய அனுபவசாலியை ஹிப்னாடிசம் செய்து உங்களுக்கு கார் ஓட்ட தெரியாது என அவர் ஆழ்மனத்தை குழப்பிவிட்டால், அவரால் நிச்சயமாக ஓட்டவே முடியாது.

அப்படியெனில் காரை ஓட்டுவது எது?

அவரின் ஆழ்மன தகவலா? அல்லது அவரின் உடலா?

அவரின் ஆழ்மனம் இத்தனை ஆண்டகளாக அவர் கார் ஓட்டும்போது செய்யும் சிறு தவறுகளை கூட கூர்ந்து கவனித்து தகவல்கள்களை சீர்செய்து அவரை ஆபத்தில் இருந்து புதிய உக்திகளை பயன்படுத்தி காப்பாற்றும்.

தீவிர பக்தி செய்கிறவனால் தான் கடவுளை உணர முடியும்.

எதை உன் ஆழ்மனம் முழுமையாக நம்பி ஏற்றுக்கொள்கிறதோ, அதை உனக்கு காட்டும். அது உனக்கு கிடைக்கும். அதுவாகவே நீ மாறுவாய்.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவனை ஐந்தே நிமிடத்தில் வெறும் வார்த்தைகளால் என்னால் காய்ச்சலில் படுக்க வைக்க முடியும்.

நம் வாழ்க்கை நம் எண்ணங்களாலும் பிறரின் கருத்தேற்றத்தாலுமே நகர்கிறது...

உச்சநீதிமன்ற இணையதளம் முடக்கப்பட்டது...


உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும் உங்களை ஒருபோதும் வளரவிட இல்லை...


வளர்ச்சி என்ற மாயை மட்டும் உருவாக்கி உள்ளது..

எது வளர்ச்சி..? என்பதை தேடி பாருங்கள்..

அந்த தேடலில் இப்போது நீங்கள் கூறும் வளர்ச்சி ஒரு போதும் இடம் பெறாது...

ஒரு மாதம் சம்பாரிப்பதை ஒரே நாளில் சம்பாரிக்க ஜுவல்லரி முதலாளிகள் கண்டு பிடித்தது தான் அட்சய திருதியை...


அமானுஷ்யம் - உமிபோஸு பேய்...


மொழுக்குனு தலை ஒத்த மசிருகூட கெடையாது.

கன்னங்கரேல்னு மூஞ்சி பெருசா இருக்கும்.

ரெண்டு முட்டைக் கண்ணு வெள்ள வெளேர்னு பிரகாசமா ஜொலிக்கும்.

ஆக்டோபஸு தெரியுமா அப்படி தான் இருக்கும் அதோட உடம்பு.

அந்ந பேய் இருக்கே ஒரு காலத்துல புத்த துறவிய இருந்துச்சாம்.

திடீர்னு நடுக்கடல்ல இருந்து முளைச்சு வரும். அப்போ கடல்ல சூறாவளி பயங்கரமா வீசும் பெருசு பெருசா அலை அடிக்கும் கப்பல் தடுமாறும் ஆனா கப்பல்ல இருக்கிறவங்க அந்த பேயைப் பார்த்தோ பயப்படாம இருக்கனும் பயம் கண்ணுல தெரிஞ்சுதுன்னு வையி...

அந்த பேய் அப்படியே கப்பலை சுத்தி வளைச்சு மூழ்கடிச்சு, அதுல இருக்கிறவங்களையெல்லாம் கொல்லாம விடாது.

மொழுக் தலையுடன் கூடிய அந்த புத்ததுறவி பேயின் பெயர் உமிபோஸு பேய்களுக்கும் ப்ளாஷ்பேக் உண்டல்லவா.

இந்தப் பேயின் பயங்கரத்துக்கும் பின் உள்ள கதை இதோ...

ஜப்பானிய மீனவ கிராமம் ஒன்றில் புத்தரின் போதனைகளை எடுத்துரைக்க வந்தார் ஒரு துறவி.

மீனவர்களுக்கு அவரது போதனைகளைக் கேட்டு அமைதி வரவில்லை, ஆவேசம் வந்தது. அந்தத் துறவியைக் குண்டுக்கட்டாகத் தூக்கி கொண்டு படகில் ஏறினார்கள்.

நடுக்கடலுக்கு சென்றார்கள். அவரை ஒரு பேரலில் போட்டார்கள். அவர் கதறலைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் கடலில் தூக்கி போட்டு மூழ்கடித்துக் கொன்றார்கள்.

சில நாள்கள் கழிந்திருக்கும். அந்த மீனவர்கள் அதே கடல் பகுதிக்கு மீன் பிடிக்க வந்த போது, அந்த துறவி ஆக்டோபஸ் பேயாக கடலில் தோன்றினார்.

ஆவேசமாக அவர்களது படகைப் புரட்டி போட்டு மீனவர்களை கொன்று ரத்தம் குடித்து பழிவாங்கினார்.

ஆக புத்த துறவியை ரத்தக் காட்டேரியாக மாற்றிய பெருமை அந்ந ஜப்பானிய மீனவர்களுக்கு கிடைத்தது.

இன்றைக்கும் ஜப்பான் கடல் பயணிகளுக்கு உமிபோஸு குறித்த பயம் அகலவில்லை என்பதே நிஜம்..

அதிமுக ஜெயக்குமார் கலாட்டா...


அதிமுக ஜெயக்குமார் கலாட்டா...


சரிப்பா நாங்க எங்க அட்ரஸ் தர்ரோம்,
அதுக்கு முன்னாடி நீ தைரியமான ஆண் மகனா இருந்தால்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடியை இனி தமிழ்நாட்டில் கால் வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று இதே போல பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லுங்க நாங்க நேர்லயே வர்ரோம்...

அமெரிக்கா ட்ரம்ப்.. வடகொரியா கிம்ஜோங்.. இருவரும் விரைவில் சந்திக்க திட்டம்...



மனம்...


நமது வாழ்கையின் வெற்றியை, சந்தோஷத்தை நமது மனம் தான் தீர்மானிகிறது என்று முந்தய பதிவில் பார்த்தோம்...

மனதிற்கு பிடித்த செயலை நாம் செய்வதினாலேயே நாம் வெற்றி அடைய முடியும்.

இந்தக் கருத்தை  மையமாகக் கொண்டு தான் 3 iidots என்ற ஒரு படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளி வந்தது.

அந்தப் படத்தில் நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்று எண்ணி வெற்றியை துரத்திச் சென்றால் உங்களுக்கு விரக்தி தான் மிஞ்சும்.. மாறாக உங்களின் விருப்பத்தில் முழு கவனம் செலுத்தி வேலை செய்தால் வெற்றியானது உங்களின் பின்னால் ஓடி வரும் என்பதே அந்த படத்தின் கருத்து ஆகும்.

உங்களின் விருப்பத்தை எவ்வாறு தேர்வு செய்வது ?

விரும்பிய பணியை செய்தால் தான் வெற்றி கிடைக்கும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும், ஆனால் நான் நம்முடைய மனம் விரும்பும் பணி, செயல் எது என்று எப்படி கண்டுபிடிப்பது என்று உங்களில் சிலருக்கு குழப்பமாக இருக்கலாம்.

எந்த செயலை நீங்கள் செய்யும் போது உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதில்லையோ, எந்த செயலை நீங்கள் செய்யும் போது நீங்கள் உங்களையே மறந்தும் வேலை செய்கிறீர்களோ, எந்த செயலை நீங்கள் செய்யும் போது உங்களுக்கு நேரம் செல்வதே தெரிவதில்லையோ, எந்த செயலை உங்களுக்கு கொடுத்தால் ஒரு நாளில் அதிகநேரம் சந்தோஷமான மனநிலையில் செய்வீர்களோ அதுவே உங்கள் மனம் விரும்பிய செயலாக இருக்கும் நண்பர்களே.

நீங்கள் இதனை நம்பவில்லை என்றால் வாழ்கையில் வெற்றியாளராக இருக்கும் சிலரின் வாழ்கையை படித்துப் பாருங்கள், சச்சின் டெண்டுல்கர் பல ஆண்டுகளாக தனது கிரிக்கெட் விளையாட்டை காதலித்து விளயாடியதாலும், ஏ.ஆர்.ரஹ்மான் பல மணி நேரமாக இசையில் மூழ்கி தன்னுடைய விருப்பமான துறையில்  முழு ஈடுப்படுடன் இருப்பதனால் தான் அவர்களால் இப்படி வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருக்கின்றனர்.

இப்பொழுது நாம் மனதின் விருப்பத்தை தெரிந்து கொண்டோம்..

வெற்றியாளர் ஆவதற்கு விருப்பம் மட்டும் போதுமா ?

மனதின் விருப்பத்துடன் பலர் பணி புரிந்தும் அனைவராலும் வெற்றியாளர் ஆக முடிவதில்லையே ஏன் ?

சரியான இலக்குகளை நிர்ணயிக்காமல் பயணிப்பதலேயே பலரால் வெற்றி பெற முடிவதில்லை...

தண்ணீர்... விழித்துக்கொள் தமிழா...


தாயை பிடித்து சென்றதால் வேதனை: காவல் நிலைய வளாகத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை...


பொங்கலூர் பல்லடம் அருகே குடும்பத் தகராறு காரணமாக வாலிபர் ஒருவர், காவல்நிலைய வளாகத்தில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்தார். நள்ளிரவு மருத்துவமனையில் இறந்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னியகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி தெய்வானை. இவர்களது மகன் அசோக்குமார் (24). கூலித் தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி(20). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டாகிறது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கணவன் அசோக்குமார், தன் மீது சந்தேகப்படுவதாக கூறி புவனேஸ்வரி, பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, போலீசார் அசோக்குமாரை விசாரிப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால், அவர் அங்கு இல்லை. ஆகையால், அசோக்குமாரின் தாய் தெய்வானையை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். இதை அறிந்த அசோக்குமார், தாயை போலீசார் அடித்து விடுவார்களோ என பயந்து, நேற்று மாலை காவல் நிலைய வளாகத்தில் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டு காவல் நிலையத்திற்குள் ஓடினார்.

இதைப்பார்த்த பெண் போலீஸ் ஒருவர், காவல் நிலையத்தின் கதவை மூட முயன்றார்.

அதற்குள், உடலில் பற்றிய தீயுடன் அசோக்குமார், காவல் நிலைய வாசலில் வந்து சுருண்டு விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற பெண் போலீஸ் செவ்வந்திக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அசோக்குமாரை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நள்ளிரவு இறந்தார்.

இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

பாஜக விற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் நன்கொடை அளித்தது.. லண்டன் பத்திரிகை விளம்பரம்..


சிறுமிகள் கொத்தடிமையாக நூல் மில்லில் வேலை பார்க்கும் அவலம்...



திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுற்றுப் பகுதியில் உள்ள தனியார் நூல் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்களை வேலையில் அமர்த்தியுள்ளனர் இந்நிலையில் இன்று 18.04.18 காலை 7.55 திண்டுக்கல்லில் கிளம்பிய வைகை எக்ஸ்பிரஸில் பத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் பயணித்தனர் அவர்களுடன் ஒர் ஆண் பயணித்தார் இச்சிறுமிகள் அனைவரும் பரிதாப நிலையில் பயணித்து வந்தனர் அவர்களை பார்த்து சந்தேகித்த நிலையில் ரயிலில் பயணித்த செய்தியாளர்கள் அவர்களிடத்தில் விசாரித்த போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நாகம்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் SSM குருப் வேலாயுத சாமி என்ற தனியார் நூல் தொழிற்சாலையில் பணியாற்றுவதாகவும் அதில் ஒரு சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சிறுமிகளுக்கான சொந்த ஊரான விருதாட்சலம் சுற்று பகுதியில் கிராம பெண்கள் என்பதால் விருதாட்சலம் ரயில் நிலையத்தில் இறங்கினார்கள் இதில் இவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் பெண் ஊழியர் இல்லாமல் ஒர் ஆணுடன் 10க்கும் மேற்பட்ட சிறுமிகள் இதில் குழந்தை தொழிலாளர்களை வைத்து தொழில் செய்யும் நிர்வாகத்தை கண்டித்து செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

உன் பலவீனம் இது தான் மறுத்தாலும், மறைத்தாலும்....


சங்க இலக்கியத்தில் புவி வெப்பமயமாதலும், பருவநிலை மாறுபடும்...


சங்க இலக்கியம் என்பது தொல் தமிழ்க்குடி வரலாற்றின் வாழ்வியல் பெட்டகமாக விளங்குகிறது. சங்க கால மாந்தர்கள் எல்லா வகையிலும் மேம்பட்டு அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கி வந்துள்ளதை அவர்தம் செவ்வியல் பாடல்கள் வழி உய்த்துணர இயலும்.

மேலும், அகமும் புறமும் ஆன அவர்களின் வாழ்வு இயற்கையுடன் இயைந்து வாழ்க்கை நெறிமுறைகளுள் வெறும் வீரமும் காதலும் மட்டுமல்லாது அவர்களது அறிவியல் தொலைநோக்குச் சிந்தனைகள் ஆய்விற்குரியனவாகக் காணப்படுகின்றன.

அத்தகைய பேரறிவு கொண்ட தமிழினம் உலகத்தோருக்கு வழங்கியுள்ள செய்திகள் ஏராளம். அத்தனையும் அறிவியல் திறம் படைத்தவை. அன்று அவர் கண்ட பகற்கனவுகளும் மிகைக் கற்பனைகளுமே இன்று பலஅறிவியல் கண்டுபிடிப்புகளாக மலர்ந்துள்ளன. ஆதலால் எளிதாக இக்கருத்துக்களை எல்லாம் புறம்தள்ளிவிட முடியாது.

பண்டைத் தமிழன் நிலங்களை ஐவகையாகப் பாகுபடுத்திக் கோலோச்சி வாழ்ந்திருந்தான். அக்காலக் கட்டத்தில், தான் வாழ்ந்திருந்த நிலங்களின் வளத்தினையும் இடர்களையும் கூர்ந்து உற்று நோக்கி இலக்கணம் வழுவாது படைப்பாக வெளிப்படுத்துதலை தம் சமூகக் கடமையாகக் கொண்டிருந்ததன் விளைவே பாட்டும் தொகையும் ஆகும்.

குறிப்பாக, இவற்றுள் பயின்று வரும் பாலை நிலக்காட்சிகள் நடப்பு உலகளாவிய புவி வெப்பமடைதல் வாதத்தோடு ஒப்பு நோக்கத் தக்கவையாகத் திகழ்கின்றன. தவிர, இன்று உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிற புவி வெப்பமடைதலும் பருவகால மாறுபாடுகளும் தொன்றுத்தொட்டே அறிவுறுத்தப்பட்டுள்ளதை இப்போது அறிவோம்.

"கதிர் கையாக வாங்கி ஞாயிறு
பைதறத் தெறுதலின் பயங்கரந்து மாறி
விடுவாய்ப் பட்ட வியன்கண் மாநிலம்" - (அகம் ‍164 : 1-3)

என்னும் பாடலில் சூரியனானது தம்முடைய வெம்மைக் கதிர்கள் மூலம் எங்குமுள்ள ஈரப்பசையினையெல்லாம் கவர்ந்து பசுமையற்றுப் போகும்படியாகக் காய்ந்ததால் இப்பரந்த உலகம் வெடிப்புகள் மிகுந்தும் வளம் ஒழிந்தும் காணப்படுவதாக அமையும்.

மேலும், இக்கதிர்கள் காடுகளின் அழகையெல்லாம் பேரளவு அழிந்து போகுமாறு கடுமையாகப் பொசுக்குவதால் தேக்கு மரங்களின் உயர்ந்த கிளைகளிலிருக்கும் பல அகன்ற இலைகள் ஈரப்பசையற்று வாடிப்போய் ஒல்லென்ற ஓசையுடன் வெப்பக்காற்றினால் உதிர்ந்து போகும். அதன்பின் அம்மரத்தின் நீண்ட கிளைகளும் வறுமையுற்றவரைப்போல வளமற்று விளங்கும் என்பதை,

"கைம்மிகக்
காடுகவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்
நீடுசினை வறியவாக ஒல்லென
வாடுபல் அகலிலை கோடைக்கு ஒய்யும்
தேக்குஅமல் அடுக்கத்து ஆங்கன் மேக்கெழுபு" - (அகம் - 143 : 1 - 5)

என்ற பாடல் விளக்குகிறது. தவிர,

"பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்" - (அகம் - 185 : 8-10)

என்பதில் பசுமையற்றுப் போன வறண்ட பாலை நிலத்தில் வெப்பம் மிகுதி காரணமாக மேகமும் பொழியாது ஒழியும். அதனால் உயர்ந்த சிகரங்களில் அருவியும் உருவாகாது விளங்குமெனக் காட்சியாக்கப்பட்டுள்ளது. இத்தகைய வான் உலந்து மழையானது பெய்யும் இடத்தை விட்டு நீங்கிச் செல்வதால் உண்டாகும் துயரத்தினை,

"உலகுதொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழைகால் நீங்கிய மாக விசும்பில்" - (அகம் - 141 : 5 -6)

என்று உழவுத் தொழில் மட்டுமல்லாது உலகிலுள்ள மற்ற தொழில்களும் இதனால் கெட்டு மடியுமென்று எடுத்துரைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தொழில்களுள் தலையாயது உழவுத் தொழிலாகும். அந்த உழவுத் தொழிலுக்கு அடிப்படையானது மழை.

அம்மழை புவிவெப்பம் காரணமாகவே விட்டு வேறிடம் செல்கிறது. மேலும் பருவம் மாறி பொழிகிறது. ஆக, புவி வெப்பமடைதலும் அதனூடாக நிகழும் பருவகால மாற்றமும் இயற்கை மற்றும் மனிதப் பேரிடர்களால் உண்டாகின்றன. அன்று இயற்கை மனிதனுக்கு சவாலாக விளங்கியது.

இன்று மனிதன் இயற்கைக்கு பெரும் சவாலாகக் காணப்படுகின்றான். இவ்விரண்டினாலும் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாவது மனித இனம் என்பது தான் பெரும் சோகம். இன்றைய நவீன மனிதனிடம் காணப்படும் அதி நுகர்வுத் தன்மை, அறியாமைப் போக்கு, வருங்காலம் குறித்த அக்கறையின்மை முதலியன அக்கால மாந்தர்களிடத்து நிலவாது இருந்தமைக்குச் சான்றே சங்க இலக்கியமாகும். சான்றாக, காதல் பூண்ட மாந்தரிடையே இப்பருவகால மாற்றம் விளைவித்து விடும் துன்பம் அளப்பரியது என்பதை,

"வம்பும் பெய்யுமார் மழையே வம்புஅன்று
கார்இது பருவம் ஆயின்
வாராரோ நம் காதலோரே" - (குறுந் 382 : 4-6)

என்னும் பாடல்வழி உணர முடியும். இவையனைத்தும் நிகழ்கால வாழ்வியல் கூறுகளுடன் ஒப்பிட்டு அறியத்தக்கவை. ஆகவே, மேற்சுட்டிய பாடல்கள் மூலமாக அவற்றின் காட்சி மற்றும் கருத்தின்பத்தை மட்டும் துய்க்காமல் உள்ளீடாக இலங்கும் அறிவு புகட்டுதலையும் உணர்வோமேயானால் உலகத்தைப் பேரழிவிலிருந்துக் காத்துக் கொள்ள இயலும்.

புவி வெப்பம் மற்றும் பருவகால மாற்றம் குறித்த பழம்சிந்தனையில் பெருமளவு உழல்பவர்களாக இன்று நாம் உள்ளோம். இதற்கு மெத்தப் படித்த மேதாவித்தனத்தால் எழுந்த அசட்டையே காரணமாகும். இல்லாவிடில், ஆழ்கடலுக்குள்ளும் மலையுச்சியின் மீதும் உலகின் கவனத்தை ஈர்க்கும் நாடாளும் பேரவைக் கூட்டம் நடத்துவதற்கான அவசியமே எழுந்திருக்காது.

தவிர, இந்தத் துயரம் மூத்தோர் அறிவை நுனிப்புல் மேய்ந்ததால் உண்டான விளைவாகும். உலகத்தாரிடையே பொதுப்புத்தி இல்லாததாலேயே டென்மார்க்கில் புவி வெப்பமடைதல் மாநாடு தோல்வியில் முடிந்தது.

புரிந்த வினைக்கும் பிராயச்சித்தம் பண்டைய இலக்கியங்களிலேயே நிச்சயம் காணப்படும். தேடுதல் தானே வாழ்க்கை. அவ்வாழ்க்கையை செம்மைப்படுத்துவது இலக்கியம் அல்லவா? ஏனெனில் இலக்கியத்தைப் படைத்தவர்கள் நம்மைப் போன்ற புலனின்பப் பிரியர்கள் அல்லர்; முன்னறிவிப்போர்கள். இது வெறும் பொய்யுரையோ புகழுரையோ அல்ல...

திமுக vs பாஜக கலாட்டா...


எலுமிச்சையின் அற்புத மருத்துவக் குணங்கள்...


சாதாரணமாக அனைத்து இடங்களிலும் வளரக்கூடிய தாவர இனமான எலுமிச்சை பல அற்புதமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது பலருக்கும் தெரியாத விடயம்.

தேள் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும்.

தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம்.

மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.

சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும். சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.

சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும் ரத்த அழுத்தம் சீராகும்...

பல்லாயிரக் கணக்கான கோடிகள் புரளும் பெருவணிகமே டெங்கு காய்ச்சலும் மற்ற மர்மக்காய்ச்சலும்...


மக்களை பரிசோதனை எலிகளாக்கி, நோயை பரப்பி, கொள்ளை அடிக்கின்றனர்...

தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் - பழங்கற்கால கற்கோடரிகள் 15,00,000 – (1.51 மில்லியன்) ஆண்டுகள் பழமையானவை...


கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி...

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் திரு ராபர்ட் புரூசு(ஸ்) ஃபூட் என்னும் புவித் தரைத்தோற்ற வியலாளர் பல்லாவரம் அருகே தரையில் கிடந்த ஒரு கல்லாலான கருவியைக் கண்டெடுத்தார்.

இது பின்னர் வரலாற்றைப் புரட்டிப் போடும் ஆய்வுகளை தொடங்கி வைத்தது. இந்தியாவின் பழங்கால வரலாறுகள் பலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமை இவரையே சாரும்.

சென்னை பல்லாபுரத்தைத் தொடர்ந்து (பல்லாவரம்) பூண்டிக்கருகில் அத்திரம் பாக்கம் குடத்தலை (கொற்றலை/கொசத்தலை) ஆற்றுப் படுகைகளிலும், குடியம் மலைப்பகுதிகளிலும் கிடைத்த பழங்கற்காலக் கற்கோடரிகள், 2,00,000 – ஆண்டுகள் பழமையானவை என (1893-1912 கி.பி.) சர் ராபர்ட் புருசு பூஃட் (Father of Indian Pre-history) அறிவித்தார்.

மைக்கேல் வுட் என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கிலேய நாட்டின் வரலாற்றாய்வர் தனது “இந்தியாவின் கதை” (“ The Story Of India ”) (http://www.pbs.org/thestoryofindia) எனும் வலைத்தளத்தில் 70,000 – 50,000 ஆண்டுகட்கு முன்னர் இந்தியாவில் முதல் மனிதன் குடியேறினான் என்று பதிவு செய்தார்.

பிற வரலாற்றாசிரியர்களும் அவ்வாறே குறிக்கின்றனர். இது தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் சூழ்ச்சியாகவே கருதப்படுகிறது.

சென்னையில் இருந்து சுமார் 60 கி.மி தொலைவில் உள்ள திருவள்ளூரில் இருக்கும் இந்த அத்திரம்பாக்கம் என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கற்கால கருவிகளை . ஆய்வு செய்ததில் இவை சுமார் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு குறையாத தொன்மை வாய்ந்தவை என்பது தெரிய வந்தது.

மேலும் இவ்வளவு தொன்மை வாய்ந்த கண்டுபிடிப்புகள் இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஆய்வு செய்த சாந்தி பப்பு என்னும் ஆய்வாளர் “Early Pleistocene presence of Acheulian hominins in South India” என்ற ஆய்வு அறிக்கையில் இதை வெளியிட்டார்.

இந்த விடயத்தை அறிந்ததும் இந்த ஆய்வுகள் குறித்த மேலும் பல தகவல்களைப் பெற அங்கு விரைந்தோம். ஆனால் அங்கு விசாரித்ததில் இப்படி ஒரு ஆய்வு நடக்கிறது என்பது அந்த கிராம மக்கள் பலருக்குமே தெரியாதது வருத்தமளித்தது.

மேலும் இரு சக்கர வாகனம் கூட பயனிக்க முடியாத அந்த காட்டிலும் நடந்து சென்று விடயம் தெரிந்த ஓரிருவரிடம் வழி கேட்டுச் சென்றும் அந்த இடத்தை அடைய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினோம். அதன் பிறகு இந்த ஆய்வுகளை எடுத்து நடத்தும் நிறுவனத்திடம் விசாரித்த போது.

இந்த ஆய்வுகள் நடத்துவது நிறுத்தப்பட்டு சில ஆண்டுகள் ஆனது என்றார். ஆவலுடன் நாங்கள் ஏன் என்று கேட்ட போது மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்று அவர் கூறியது அதிர்ச்சி அளித்தது.

இன்னும் எத்தனை இரகசியங்கள் இப்படி இருளில் மூழ்கியதோ?

இப்படியே உலகத்தில் தமிழர்களின் வரலாறுகள் இருட்டடிப்புச் செய்யப்படுவதால் தமிழர்களின் சிறப்பு உலகிற்கும் தற்போதைய தமிழ்ச் சந்ததிக்கும் வருங்கால தமிழ்ச் சந்ததிக்கும் மூடிமறைக்கப் பட்டுவிடும்.

இவ்வாறான இழிநிலை மாற்றப்படுவதற்கு தமிழர்களின் தலைமையில் தமிழர்களின் வரலாற்றுத்தேடல் எவ்வித கட்டுப்பாடுகளற்ற சுதந்திர அமைப்பின் ஊடாக தமிழர்களின் பணமுதலீட்டில் நடாத்துவதற்கான முயற்சியினை தமிழ், தமிழ்மக்களுடைய ஆர்வலர்கள் ஒருபோது அமைப்பை ஏற்படுத்தி வரலாற்றுத் தேடலை மேற்கொள்வதே மிகச்சிறந்த வழியாகும்...

தகவல் - நண்பர்

படத்தை விட இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.. செய்ய தயாரா திமுக வின் சின்னதளபதி..


(கேரளா சூர்யா டிவி.. உதயா என தவறாக டைப் ஆகி உள்ளது)...

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் செல்போன் கொண்டுபோக அனுமதி இல்லை....



10 நிமிடம் செல்போன் பாதுகாப்பதற்கு ₹10 ரூபாய்...

சாமான்ய மக்களிடம் பகல் கொள்ளையடிக்கும் அறநிலையத்துறை...