05/03/2019

மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?


மகிழ்ச்சியாய் இருப்பது என்பது நாம் தேடி அடைய வேண்டிய ஒரு இலக்கு அல்ல.

இயல்பாகவே நீங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறீர்கள். இடையில் தான்  எங்கோ குழப்பி விட்டீர்கள்.

குழப்பத்தை விடுங்கள். மகிழ்ச்சியாய்  இருங்கள்.

உயர்ந்த குறிக்கோள் தேவை தான். ஆனால் அது நம் நிகழ்  காலத்தின் இனிமையைப் பாதித்து விடக் கூடாது.

வாழ்வின் மகிழ்ச்சி சென்றடைவதில் தான் இருக்கிறது என்பதில்லை. பயணத்திலும் இருக்கிறது.

உங்கள் மீது உங்களுக்குள்ள உயர்வான எண்ணங்களும், தன்னம்பிக்கையும் கூட உங்கள் மகிழ்ச்சிக்கு அடிப்படையாக அமையும். மகிழ்ச்சி சிறு செயல்களில் கூட இருக்கிறது.

எனக்குத் தலைவலி, காய்ச்சல், என் உடல் நிலை சரியில்லை என்று நினைத்து வருந்தினால் மகிழ்ச்சி இல்லாமல் போவது சில நாட்கள் தான்.

நானே சரியில்லை, என்று நினைத்தால் வாழ்நாள் முழுவதுமே மகிழ்ச்சி இல்லாமல் போகும்.

மனநிலை உடல்நிலையைப் பாதிக்கும்.

உடல்நிலை , மனநிலையில் தெரியும்
ஏதாவது சாதனைகள் செய்தால் தான் மகிழ்ச்சி என்பதில்லை.

சாலை ஓரத்தில் உள்ள புதர்களையும், காட்டுப் பூக்களையும் பார்த்து ரசிப்பது கூட மகிழ்ச்சி அளிக்கலாம்.

மழை  கூட மகிழ்ச்சி தான். நனைந்து தான் பாருங்களேன். ஒரு மழையைக்கூட தாங்காதா உங்கள் உடல்?

மகிழ்ச்சியான மனிதன் குற்றங்கள் புரிவதில்லை. மகிழ்ச்சியாய் வாழ பணம் தேவை. ஆனால் மகிழ்ச்சியைக் குறைத்துக் கொண்டு பணம் பண்ணும் போது வாழ்க்கை அடிபட்டுப் போகிறது.

மகிழ்ச்சி என்பது பட்டாம் பூச்சியைப் போன்றது. நீங்கள் அதை விரட்ட விரட்ட, அது உங்களை விட்டுப் பறந்து கொண்டே இருக்கும்.

புல்  தரையில் அமைதியாக அமர்ந்தால், அதுவும் உங்கள் கையில் அமர்ந்து கொள்ளும்.

பூங்காக்களுக்கு யாரும் வழி சொல்லியா தெரிய வேண்டும்?

தமிழா சிந்தித்துப் பார்...



தமிழ் கலாச்சாரத்தில் வாழை இலை...


தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு. சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை.

இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் . நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே.

விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு.

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும்.

உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.

இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் .

குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன .

எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு. வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம்.

வாழை இலையினைக் குப்பையில் எறிந்தாலும் அதனால் பூமி மாசு அடைவதில்லை, தானாகவே மண்ணோடு மண்ணாக உக்கிவிடும்.

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும்.

முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்...

அதிமுக கூட்டணியில் தேமுதிக உறுதி... திமுக ஸ்டாலின் கதறல்...


https://youtu.be/EajUDirG0rQ

Subscribe The Channel For More News...

ஆழ்மனத்தின் சக்தி...


உங்கள் ஆழ்மனத்தின் சக்தியை அறிந்து கொள்ளுங்கள்...

அதைப் பயன்படுத்தி உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்...

அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் என்பது சித்தர் பாடிய பாடல் வரி.அண்டம் என்பது பிரபஞ்சம்! பிண்டம் என்பது நம் ஒவ்வொருவரின் மனித உடல்...

இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான சக்திகள் உள்ளன.அவற்றில், ஒன்று காஸ்மிக் சக்தி.இதைப் பயன்படுத்தி நமது நியாயமான ஆசைகளை நம் ஒவ்வொருவராலும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இந்த காஸ்மிக் சக்தியைப் பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் நமது ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.

ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர நாம் தினமும் தியானம் இருமுறை செய்துவர வேண்டும்.

காலையில் எழுந்து குளித்துத் தயாரானதும், இரவில் தூங்கும் முன்பாகவும் 15 நிமிடம் வரை நாம் தியானம் செய்துவரவேண்டும்.

மனக்காட்சியின் மூலம் விரும்புவதை அடைவது எப்படி?

இதுதான் ஆழ்மனத்தைப் பயன்படுத்தும் சுலப வழிமுறை.

இதற்கு ஆங்கிலத்தில் கிரியேட்டிவ் விசுவலிசேசன் என்று பெயர்.

இதை தமிழில் படக்காட்சியாகக் கற்பனை செய்து பார்த்தல் எனக் கூறலாம்.

இதை அறிவியல் பூர்வமாக கண்டுபிடித்து நெறிப்படுத்தியவர் ஜோஸ் சில்வா என்ற ஆங்கிலேயர் ஆவார்.

இன்று இதை ஐரோப்பா, அமெரிக்கா கண்டங்களில் எப்படி கற்பனை செய்து பார்ப்பது? என்பதற்கு தனிப்பயிற்சி வகுப்புகள் (workshops) நடத்திக் கொண்டே இருக்கின்றனர்.

இதனால் தான் மேலை நாட்டினர் பல கோடி ரூபாய்கள் சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றனர்...

அடேய் செத்தது 400 பாக்கிஸ்தான் காரன் இல்லடா... 400 மரங்கள் டா...


ரம்புட்டான் பழம்....


ரம்புட்டானின் தாய்நாடு மலேசியா எனக் கருதப்படுகிறது.ஆரம்ப காலங்களில் தெற்காசியாவின் கிழக்கு வலய நாடுகளில் பிரதானமாக பயிர்ச்செய்யப்பட்ட இது தற்போது மத்திய அமெரிக்காவிலும், கப்ரியன் தீவுகளிலும் பயிர்ச்செய்யப்படுகிறது.

உலகில் பிரதானமாக ரம்புட்டான உற்பத்தி மேற்கொள்ளப்படும் நாடு தாய்லாந்து ஆகும்.

ரம்புட் என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது.

ரம்புட்டான் பழம் கிழக்காசியா (சீனா ) மற்றும் தென்கிழக்காசியாவை தாயகமாகக் கொண்டது. ரம்புத்தான் அவுசுத்திரேலியா, நியூ கினி, ஆப்பிரிக்கா, இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விளைகின்றது.

இலங்கையில் பயிர்ச்செய்யப்படும் பழங்களிடையே ரம்புட்டான் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.

பழத்தின் விதையைச் சூழ உட்கொள்ளக் கூடிய சாறு நிறைந்த சதைப்பகுதி காணப்படுவதால் அது மக்களிடையே விரும்பப்படும் பயிராக மாறியுள்ளது.

ஒரு ரம்புத்தான் மரம் நடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் பழம் காய்க்க தொடங்கி விடும். ஒரு ரம்புத்தான் பழம் முழுமையாக பழுப்பதற்கு 90 முதல் 120 வரை எடுத்துக் கொள்கின்றது.

ரம்புத்தான் பழம் பிஞ்சாக இருக்கும் பொழுது பச்சை நிறத்தில் இருக்கும். அதுவே பழுத்த நிலையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரகங்களுக்கு ஏற்றார்ப் போல ஒரு ரம்புத்தான் மரம் ஒரு பருவத்திற்கு 80 கிலோ முதல் 200  கிலோ வரையிலான பயனைத் தரும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள் . எல்லோருக்கும் பிடித்த பழம். ஆடி மாதத்தில் இந்த பழத்தின் பருவகாலம். அந்த நேரத்தில் மட்டும் குவியலாக குவிந்து கிடக்கும் எல்லா இடமும் இந்த பழம்.

ரம்புட்டான் பழம் மஞ்சள் , சிகப்பு என இரண்டு வகைகளில் உண்டு . . உள்ளே தோலை உரித்தால் அதற்குள் சதை பற்றுடன் விதையுடன் இருக்கும் அந்த சதையை சாப்பிட வேண்டும் . மிகவும் நன்றாக இருக்கும்...

மதுக்கடைகள் 2மணி நேரம் குறைப்பு...


பாமக கோரிக்கை மதுக்கடை நேரத்தை குறைக்க வேன்டும்...

நாளை முதல் மதுக்கடைகள் மதியம் 2மணிக்கு திறக்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு...

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி...


நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது.

நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு.

நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.

இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை.

ஆனால், முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும் தான்.முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து.

அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய தேரன் கண்ட உண்மை என்னும் நூலில்...

மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்

பொருள்...

முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர்.

அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம்.

இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.

நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை...

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.

நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.

ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும்.

அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம்.

சங்க காலம் தொட்டு நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றி பாடி உள்ளனர்.

மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது.

100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்...

நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது.

ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அசு(ஸ்)கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரசுக்கள் தாக்காமல் தடுக்கிறது.

இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

மேலும் கார்போகை(ஹை)ட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பொசுபரசு, வைட்டமின் பி பல பாககங்கள் நிறைந்துள்ளது.

வாய்ப்புண் தீர...

நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

பித்தம் குறைய...

15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

இரத்த கொதிப்பு நீங்க...

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

கண் நோய்கள் தீர...

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்...

கட்சிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது திமுக...


நோயை உமிழ்நீர் சொல்லும்....


உங்கள் நோயை உமிழ்நீர் சொல்லும்...

உமிழ்நீர் மூலம் மரபணு நோய்களைக் கண்டறியும் பரிசோதனை சென்னையில் செய்யப்படுகிறது அப்பாவும், தாத்தாவும், கொள்ளுத் தாத்தாவும், எள்ளுத் தாத்தாவும் நமக்கு சேர்த்து வைத்துவிட்டுப் போவது பரம்பரைச் சொத்து மட்டுமல்ல; அவர்களுடைய தனிப்பட்ட குணாதிசயம், ரசனை, பழக்க வழக்கங்கள் எல்லாமே உங்களை ஏதோ ஒருவிதத்தில் தாக்கத்துக்குள்ளாக்குகிறது.

நமது மரபணுக்களில் பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் சமாச்சாரம் இது என்று அறிவியல் சொல்கிறது. உங்கள் தாத்தா நாதசு(ஸ்)வர வித்வானாக இருந்திருக்கும் பட்சத்தில், நீங்கள் அட்டகாசமாக சாக்ச(ஸ)போன் வாசிப்பவராக இருந்தால், அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

இவை மட்டுமின்றி, அவர்களுடைய நோய்களையும் நம் மரபணுக்களில் விதையாக ஊன்றிச் செல்கிறார்கள் என்பதுதான் வேதனை. அவர்கள் விட்டுச் செல்லும் சொத்து மட்டும் வேண்டும், நோய்கள் வேண்டாம் என்றால் எப்படி?

கவலைப்படாதீர்கள், இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கவும் அறிவியல் ஒருவழியை கண்டுபிடித்துத் தந்திருக்கிறது. செர்சி(ஜி) மிகாலோவிச் ப்ரின் என்று பெயர் சொன்னால் உடனே தெரியாது.

ஆனால், ‘கூகுள்’ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் என்று சொன்னால் தெரியுமில்லையா?

இந்த செர்சியின் மனைவி ஓர் உயிரியல் தொழில்நுட்பப் பட்டதாரி. கணனி  விற்பன்னரும், உயிரியல் தொழில்நுட்பம் தெரிந்தவரும் இணைந்தால் என்னாகும்?

ஆராய்ச்சிதான். மனித மரபணுக்கள் தொடர்பாக நிறைய துறை சார்ந்த பேராசிரியர்களிடம் நாட்கணக்கில் பேசிப் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

அதாவது நமது மூதாதையர்களிடமிருந்து நமது மரபணுக்களில் கடத்தப்படும் செய்திகள், கணனிகளில் சேமிக்கப்படும் தரவு தளம் (Database) மாதிரி அவற்றை வாசித்துப் புரிந்து கொண்டால், மென்பொருளை திருத்துவது மாதிரி நமக்குத் தேவையான சில திருத்தங்களை செய்து கொள்ளலாம்.

இதெல்லாம் தேவையற்ற வேலை. எதிர்காலத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ளாத வாழ்க்கையே ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்றெல்லாம் நிறைய பேர் செர்சியை விமர்சித்தார்கள். செர்சி மெனக்கெட்டு இவ்வளவு ஆராய்ச்சிகளுக்குள் தன்னை உட்படுத்திக் கொள்ள ஒரு தனிப்பட்ட காரணம் இருந்தது.

அவரது தாயாரை பார்கின்சன் நோய் தாக்கியிருந்தது. இது பரம்பரையாக தாக்கக்கூடிய நோய் என்று அவர் நினைத்தார். இதிலிருந்து தன்னை எப்படி எதிர்காலத்தில் காத்துக்கொள்வது என்கிற தேடலில் மூழ்கியதன் விளைவே இதெல்லாம் (பிற்பாடு அந்த நோய் பரம்பரையாக கடத்தப்படுவதல்ல என்ற முடிவுக்கு அவர் வந்தது வேறு கதை).

இப்படியாகத்தான் 23andMe என்கிற மரபணு பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கிற ஒரு நிறுவனத்தை தம்பதி சமேதரரா தொடங்கினார்கள். 23 என்கிற எண் நம்முடைய குரோமோசோம் சோடிகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. 2007ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மரபுரீதியாக நமக்கு என்ன நோய்கள் வரும் என்பதை அறிந்துகொள்ள ஓர் எளிமையான முறையைக் கண்டறிந்தது.

அதாவது நம் எச்சிலைத் துப்பினால் போதும், அதில் இருக்கும் மரபணுக்களை ஆராய்ந்து, அவர்கள் வாசித்துக் கொள்வார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு நமக்கு வரக்கூடிய மரபார்ந்த நோய்களை அறிவார்கள். இவற்றைத் தவிர்ப்பதோ, கட்டுப்படுத்துவதோ எப்படி என்று மருத்துவர்கள் மூலமாக ஆலோசனை சொல்வார்கள்.

2008ம் ஆண்டு இந்தச் சோதனை முறையை வருடத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக, ‘டைம்’ பத்திரிகை அறிவித்தது. அமெரிக்கர்கள் பலரும் கடந்த ஐந்தாண்டுகளில் இச்சோதனையை மேற்கொண்டு, எதிர்காலத்தில் தமக்கு விதிக்கப்பட்டிருக்கும் நோய்களின் தாக்குதலை சமாளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அமெரிக்கர்கள் மட்டும்தான் மனிதர்களா..? அவர்களுக்கு மட்டும்தான் பரம்பரை நோய்கள் வருமா..?

இந்த நவீன சோதனைமுறை அவர்களுக்கு மட்டும்தானா என்று அவசரமாக மனம் குமுறாதீர்கள். நமக்கும் இந்த வசதி வந்துவிட்டது. அதிலும் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் மரபணு நோய்களை முன்கூட்டியே கண்டறியும் பரிசோதனையை செய்யும் நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது.

எக்சு(ஸ்)கோட் வாழ்க்கை அறிவியல் (Ekskot Life Sciences) என்கிற நிறுவனம் இந்தக் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள மட்டுமே பெரும் முதலீட்டில் களமிறங்கியிருக்கிறது. அதற்காக சோதனைக்கு நம்முடைய சொத்தையே எழுதி வாங்கிவிடுவார்களோ என்று அச்சப்பட வேண்டியதில்லை.

சோதனைக் கட்டணம் ரொம்பவும் அதிகமல்ல, அதே நேரம் ரொம்பவும் குறைவுமல்ல. இச்சோதனையை மேற்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது என்ன? www.xcode.in என்கிற இணையதள முகவரிக்குச் சென்று, உங்கள் மரபணுக்களை சேகரிக்க வேண்டியஉபகரனத்தைக் கோரலாம்.

இரண்டு நாட்களில் உங்கள் வீட்டுக்கு வந்துவிடும். எச்சிலை சிறியகுழாயினுள் துப்பிவிட்டு, அவர்கள் குறிப்பிடுவதைப் போல தயார் செய்துவிட்டு போன் செய்தால் போதும், பொதி (Courier) மூலமாக அவர்களே வீட்டுக்கு வந்து பெற்றுக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

மருத்துவமனைக்கோ, பரிசோதனைக் கூடத்துக்கோ அலைய வேண்டியதில்லை. மொத்தமே அவ்வளவுதான். உங்களுடைய அறிக்கையை  நான்கிலிருந்து ஆறு வாரங்களுக்குள்ளாக உங்கள் வீட்டுக்கே அனுப்பிவிடுவார்கள்.

சர்க்கரை நோய், கொழுப்பு, இதயநோய், வாதம் தொடர்பான நோய்களுக்கான சோதனை முறைகள்தான் இப்போதைக்கு இருக்கின்றன. எதிர்காலத்தில் மரபுரீதியாக வரக்கூடிய மற்ற நோய்களைக் கண்டறிவதற்கான வசதியும் இங்கே கிடைக்கும்.

உங்களுக்கு என்னென்ன நோய்கள் வரக்கூடுமென்று சொல்லுவதோடு, அவற்றைத் தவிர்க்கவோ கட்டுப்படுத்தவோ என்னென்ன மாதிரியான உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள் ஆகியவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம் என்று மருத்துவ ஆலோசனையும் தருகிறார்கள்.

இப்போது இருக்கும் சோதனை முறைக்கு அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய்வரைதான் செலவாகும். அப்புறமென்ன? என்னென்ன நோய் வருமோ என்று அஞ்சி நடுங்காமல், ஒரு சோதனையை எடுத்துவிட்டு வருமுன் காக்கத் தயாராகுங்கள்...

புத்த மதம் சார்ந்த அபிநந்தன் படத்தை வைத்து இந்துக்களை ஏமாற்றி வாக்கு பிச்சை் எடுக்கும் பாஜக...


பாஜக மோடி இராணுவத்தை வைத்து செய்யும் ஏமாற்று அரசியல்...


அபிநந்தன் இந்திய எல்லையில் தடம் பதிப்பதை நமக்குக் காட்டுவது பாகிஸ்தானின் பி டிவி. அவருடைய பின்புறம் காண்பிக்கப்படுகிறது.
அவர் இந்தியாவிற்குள் வருவதை படம் எடுக்கும் ஒரு அடிப்படை நாகரிகம் கூட இல்லாத அரசா, நமது அரசு? தூர்தர்ஷன் என்ன செய்து கொண்டிருந்தது?
இந்தக் கேள்வியை நான் பலமுறை கேட்டும் பதில் ஏதும் இல்லை.

நடந்தவை அனைத்தையும் குறித்து இந்திய மக்களுக்கு (இந்துத்துவ வெறியர்களுக்கு அல்ல) பல கேள்விகள் இருக்கின்றன. அவற்றிற்கு பதில்கள் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசிற்கு இருக்கிறது. அல்லது ஏன் உடனடியாகப் பதில்களைச் சொல்ல முடியாது என்பதையாவது விளக்க வேண்டும். இந்திய நாடாளுமன்றத்தைக் கூட்டி விளக்கம் அளிக்க வேண்டியதுதான் முறை. ஆனால் பாரதி சொல்வதைப் போல "சக்கரவர்த்தி என்றே மேலாம் தன்மை படைத்திருப்பவராக" மோதி தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்.

நமது ஊடகங்கள் நிலைமை வெட்கக்கேடு. ஒன்று கோயபல்ஸை மிஞ்சுபவை. அல்லது முதுகெலும்பு இல்லாதவை...

தடுப்பூசி போடுவதே நமக்கு நோய்களை உண்டாக்கத் தான்...


கடலுக்கு அடியில் 8,500 அடி ஆழத்தில் மர்ம உயிரினம்...


கியூபா நாட்டுக்கு அருகாமையில் பக(ஹ)மாசு(ஸ்) ஏனும் நாடு உள்ளது. சிறியதும் பெரியதுமாக சுமார் 3,000 தீவுகளை உள்ளடக்கிய நாடே பகமாசு ஆகும். அத்தீவுகளின் கடலில் சில விஞ்ஞானிகள் ஆராட்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் நிழற்படக் கருவி பொருத்தப்பட்ட இயந்திரம் ஒன்றை கடலுக்கு அடியில் செலுத்தி ஆராட்சிகளை மேற்கொண்டனர்.

கடலுக்கு அடியில் என்றதும் சுமார் 300 அல்லது 400 மீட்டர் என்று நினைக்கவேண்டாம். கடல் மேல்மட்டத்தில் இருந்து சுமார் 8,500 அடி ஆழ்ப்பத்தில் இப்பரிசோதனைகள் நடைபெற்றது. திடீரென ஒரு நாள் கடலுக்கு அடியில் இருந்த இயந்திரத்தில் இருந்து காட்சிகள் கிடைக்கப் பெறவில்லை.

இதனை அடுத்து இந்த இயந்திரத்தை வெளியே எடுத்துப் பார்த்தால் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள். காரணம் நிழற்படக் கருவியின்    கம்பிகள் (Wire) கடிக்கப்பட்டு துண்டாடப்பட்டிருந்தன. அக்கடலில் அவ்வளவு ஆளத்தில் சுறா மீன்கள் வசிக்க முடியாத நிலை உள்ளது. அப்படி என்றால் எந்தவகையான மீன்கள் இவற்றைக் கடிக்கும் தன்மை கொண்டவை என்று அவர்கள் குழம்பிப்போனார்கள்.

இறுதியில் இயந்திரத்தைச் சரிசெய்து திரும்பவும் அதே இடத்தில் இறக்கினார்கள். ஆனால் இம் முறை, அந்த மர்ம உயிரினம்  மாட்டிக் கொண்டது. காரணம் அது மீண்டும் இந்த இயந்திரத்தை கடிக்க வந்தபோது, அதன் உருவம் நிழற்படக் கருவியில் பதிவாகியது. அது மட்டுமல்லாது சுமார் ஒன்றரை அடி நீளமான இந்தப் புதுவகையான உயிரினத்தையும் அவர்கள் சாமர்த்தியமாகப் பிடித்துவிட்டார்கள்.

அதன் கால்களும் மற்றும் வாய்ப் பகுதிகளிலும் காணப்படும் கூரிய நகங்கள், வாள்போன்றவை என விஞ்ஞானிகள்தெரிவித்துள்ளனர். 7 கால்களைக் கொண்ட இந்தஉயிரினம் இதுவரை பூமியில் கண்டுபிடிக்கப்படாத ஒரு இனம் ஆகும். பாத்திநோமசு(ஸ்) ஜயன்டியசு(ஸ்) என்று அழைக்கப்படும் இனத்தில் இதனை இணைத்துள்ளார்கள்.

விஞ்ஞானிகள். கடலுக்கு அடியில் சுமார் 8,500 அடி ஆழத்தில் வாழும் இந்த உயிரினம், தனது குடியிருப்புக்கு அருகாமையில் வித்தியாசமான ஒரு பொருள் இருப்பதை உணர்ந்து அதனை தாக்கியுள்ளது. இதுவசிக்கும் பிரதேசத்தில் எப்போதும் வெளிச்சம் இருப்பதே இல்லை. காலம் முழுவதும் இருட்டில் வாழும் இனங்களில் இதுவும் ஒன்று ஆகும்...

தமிழா விழித்துக்கொள்..


ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?


நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம் நாம் படுத்த பின் உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள் தான் அவை.

அப்போது நாம் எதைப்பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்.

தயவு செய்து இனி படுத்த பிறகு அந்த நேரத்தில்  பிரச்சனைகளை பற்றி யோசித்து விடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகி விடும்.

உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்து விட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.

அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்...

Benefits Of Black Seeds / கருஞ்சீரகத்தின் நன்மைகள்...


https://youtu.be/Y3qnvFzRyFg

Subscribe The Channel For More Tips...

இரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை...


வெந்தயக் கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ சத்தும், சுண்ணாம்பு சத்தும் அதிகளவு காணப்படுகின்றது. வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலுக்கு நல்ல பலனை தருவதுடன், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.

வெந்தயக் கீரையில் வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.

பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

இந்த அல்வாவை காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும். வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியுண்டாகும். சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப்போக்கவும் பயன்படுகிறது...

கடல் ஆமைகளும், தமிழர்களும் வரலாறு - ஐயா ஒரிசா பாலு...


https://youtu.be/8qxuac2YY5E

Subscribe The Channel For More News...

நாஸ்ட்ரடாமஸும் தமிழ் இனமும்...


இன்று பலரும் கேட்கும் கேள்வியான  நாஸ்ட்ரடாமஸ், தமிழர் / ஈழம் பற்றி ஏதாவது குறிப்பிட்டுள்ளாரா? என்ற கேள்விக்கு பொருந்தக்கூடிய அவரின் கூற்றுக்களை ஆராய்வோம்..

நாஸ்ட்ரடாமஸ் எங்கும் தமிழ் இனம் பற்றி தனியாக குறிப்பிட்டு கூறவில்லை, ஆனால் மூன்றாம் உலகப்போரிற்கு ஒரு சிறிய நாடு வித்திடும் என்றும். வேறு ஒரு பகுதியில் அருகருகே இருக்கும் இரு சிறிய நாடுகளால் உலக யுத்தம் மூளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈழம் என்பது தனி நாடாக கருதப்படின், இன்றைய கால கட்டத்தில் இலங்கை உலக யுத்தத்தை மூட்டிவிட வல்ல நாடாகத் தான் திகழ்கிறது என்பது சிந்தித்தால் புரியும்.

இலங்கையில் சீனா மற்றும் இந்தியாவின் தலையீடுகள் இருக்கின்றன.

ஒரு வேளை இலங்கை முற்றாக சீனாவின் பக்கம் சாய்ந்தால் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா பொருளாதார ரீதியில் அழுத்தங்களை கொடுத்து இறுதியாக மத்திய கிழக்கு நாடுகளில் மேற்கொண்டது போன்ற ஒரு யுத்தத்தை ஏற்படுத்தும்.

ஆனால், அவ்வாறு ஒரு யுத்தம் ஏற்பட்டு இலங்கை அமெரிக்காவின் கையில் சிக்குவதை ஒரு போதும் சீனாவும், ரஷ்யாவும் உடன்படாது.

காரணம், இலங்கை அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டால், ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் ஒடுக்கப்படும்..

ஆகவே, நாஸ்ட்ரடாமஸின் கூற்று இலங்கையை குறிப்பதாக பல ஐரோப்பிய ஆய்வாளர்களும் கருதுகிறார்கள்.

அடுத்து, நாஸ்ட்ரடாமஸின் இன்னோர் குறிப்பில்..

உலகை ஆண்ட இனமொன்று மீண்டும் ஆள நினைக்கும்…  அதனால், உலக யுத்தம் மூழும் இனம் மீண்டும் ஆளும், அதற்கு அவர்களின் முன்னோர்களின் ஆவிகள் மனதளவில் தூண்டுதலாக இருக்கும்… எனும் பொருள்பட குறிப்பிட்டுள்ளார்.

இந்த வசங்கள் பெரும்பாலும் பிரித்தானியா விற்கே பொருந்தும் என பல ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

எனினும், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் உணர்வு பூர்வமான பல செயல்கள் இடம் பெறுவதை காண முடிகிறது.

பல ஆய்வாளர்கள் இப்போது தமிழில் அழிந்து போன மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொண்டு வர ஆரம்பித்துள்ளார்கள்.

இதனால், நாஸ்ட்ரடாமஸ் குறிப்பிட்ட அந்த இனம், தமிழ் இனமாக இருக்கலாம் என்று ஜேர்மனிய ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

தமிழினம் ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆண்டதற்கான ஆதாரங்கள் வெளிவரும் நிலையில், பல நூறு ஆண்டுகளாக முடங்கிப்போயிருந்த தமிழ் இனம் மீண்டும் ஆளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த பதிவில், உலக முடிவு எப்போது? எப்படி? என்பதை பார்க்கலாம்...

திமுக எனும் தெலுங்கர்களின் சங்கரமடம்...


எண்ணமும் பிணியும்...


நல்ல ஆரோக்கியமான உணவு, முறையான வாழ்வியல்முறை மற்றும் உடற்பயிற்சி மட்டும் நோயை தீர்த்து விடாது.

ஒருவரின் எதிர்மறை எண்ணமும், மனஉளைச்சலும் தான் அவருடைய உடல் நலனை 70% வரை பாதிக்கிறது.

மனதை சரி செய்யாமல் என்ன வகை மருந்து எடுத்தாலும் அது உங்களுக்கு வேலை செய்யாது.

எதிர்மறை எண்ணங்களும், மனஉளைச்சலும் ஏற்படுத்தும் உடல் நலக்குறைவின் பட்டியல்...

1. பொறாமை குணம்...

அணைத்து வகையான கேன்சர் நோய்களை வரச்செய்யும்.
உடலின் நோய் எதிர்பாற்றலை குறைத்து விடும்.

2. சினம், எரிச்சல், கோபம் கொள்பவர்கள்...

மூச்சுக்குழாய் மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்படுத்தும்.

3. பழிவாங்கும் குணம்...

தொண்டை பகுதியை பாதிக்கப்படுத்தும்.
தூக்கமின்மை கோளாறு ஓங்கும்.

4. பிடிவாத குணம்...

ஒற்றை தலைவலி, அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்படுத்தும்.
கை கால் வீக்கம் ஏற்படுத்தும்.
உடலில் அடிக்கடி கட்டியை தோன்றுவிக்கும்.
நீரிழிவு நோயை உண்டாக்கும்.

5. ஒழுக்கமின்மை...

தொற்றுநோய்க்கு ஆளாகி, தோல் நோயால் பாதிக்கபடக்கூடும்.
நீண்டநாள் சரி செய்யமுடியாத நோய்க்கு ஆட்படுவார்கள்.

6. விரோத குணம்...

உணவு செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், குடல் புண், குடல் ரணம் ஏற்படுத்தும்.

7. ஏமாற்றும் குணம்...

போதைக்கு அடிமையாதல், ஒட்டுண்ணி தொற்று, அழற்சி ஏற்படுத்தும்.
உடலின் நோய் எதிர்பாற்றலை குறைத்து விடும்.

8. முரட்டுகுணம், மனிதாபிமானமற்ற, இரக்கமற்றத்தனம்...

இரத்தசோகையை ஏற்படுத்தும்.
காசநோய் ஏற்படுத்தும்.
கால்-கை வலிப்பு (epilepsy) தோன்றும்.

9. கூச்சசுபாவம், அதிகம் பேசாத குணம்...

சிறுநீரகம் பாதிப்படைகிறது.
மனநலம் பாதிப்படைகிறது.

10. சர்ச்சை ஏற்படுத்தி சண்டையிடும் குணம்...

THYROID சுரபி பிரச்சனையை அதிகமாக்கும்.

11. அலட்சியகுணம், உற்சாகமின்மை...

நீரிழிவு நோயை உண்டாக்கும்.

12. உணர்ச்சிவசப்படக்கூடிய குணம், நிலையான சிந்தனை இல்லாமை...

ஆணோ/பெண்ணோ இருவருக்கும் மலட்டுதன்மையை ஏற்படுத்தும்.

13. துஷ்பிரயோகம், பண்பற்ற பலவந்தப்படுத்தும் குணம்...

அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.
நீரிழிவு நோயை உண்டாக்கும்.

14. பொருளாசை, பேராசை அடையும் குணம்...

உடலில் ரத்தகட்டிகள், கருப்பையில் நீர்க்கட்டிகள் உண்டாக்கும்.
உடல் பருமனை ஏற்படுத்தும்.
அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

15. கவலை, பயந்தசுபாவம், பதற்றகுணம்...

சரும நோய்களை ஏற்படுத்தும்.
அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.
குடல் செரிமானம் சமந்தப்பட்ட அணைத்து கோளாறுகளையும் வரச்செய்யும்.

நல்லெண்ணத்தை வளர்த்தால், நலம் தானே தேடிவரும்...

அதிமுக ஜெயக்குமார் கலாட்டா...


மனிதனும் ஆறாம் அறிவும்...


மனிதன் மனிதனை வேட்டையாடுவது மட்டுமே இங்கு முரண் காலங் காலமாக யாரோ பலனுக்கு...

விலங்குகளுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு என்ன...

சில விலங்குகள் கூட தன் இனைத்தை சேர்ந்த விலங்குகளை கொல்வது கிடையாது தாக்குவதை தவிர...

மனிதன் எவ்வளவு மட்டமான ஆறாம் அறிவு...

கிராமங்களை தேடி செல்வோம்...



'மன்னா'(Manna) என அழைக்கப்படுவது. விண்ணிலிருந்து பொழிந்த ஒரு மர்மமான உணவுப்பொருளாகும், இது கடவுளால் அனுப்பப்பட்டு, யாத்திராகமத்தின் கடைசி நாற்பது வருட காலப்பகுதியில் பாலைவனப் பயணத்தின் போது இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்டது.

இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, ​​அவர்கள் அடிமைகளாக இருந்தார்கள். அவர்கள் சினாய் பாலைவனத்தை கடக்க வேண்டியிருந்தது. நிறைய இஸ்ரவேலர்கள் வேறு இருந்தனர், இந்த கட்டத்தில், மக்கள் பட்டினியால் மடிவதை தடுப்பதற்காக, கடவுள் மன்னாவை பரலோகத்திலிருந்து பூமியில் அனுப்பினார். வெள்ளிக்கிழமை தவிர, ஒவ்வொரு நாளும் உணவை வழங்கினார்.

யாத்திராகமத்தின் விவிலியத்தில் கூறப்படுகிறது, ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் பனி தோன்றி மறைந்து, சூரியன் உஷ்ணத்தை உறிஞ்சுவதற்கு முன்பு அதை சேகரிக்க வேண்டும். அது தேனோடு தயாரிக்கப்பட்ட பாசியை போல் இருக்கிறது. எனவே இதுக டவுள் அனுப்பிய ஒரு உணவு இருந்தது. ஆனால் அது என்னவென்று சரியாக தெரியவில்லை.

ஆனால் சதி கோட்பாட்டாளர்கள்: இந்த மர்மமான உணவு ஆதாரத்தைப் பற்றி யுதர்களின் புனித நூல்களான #சோஹார் #தோரா மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட #மாய_கஸ்பலா ஆகியவற்றில் விளக்கங்கள் இருப்பதாக கூறுகின்றனர். இந்த நூல்களில் அந்த உணவை வழங்கிய கடவுளை வர்ணிக்கும் போது பல்வேறு அளவிலான மூளை, வெவ்வேறு அளவிலான முகங்கள் மற்றும் வெவ்வேறு ஒளி ஆதாரங்களுடன் இணைந்த வெவ்வேறு அளவிலான உடல் உறுப்புகள் என்றே விவரிக்கிறது.

இது கடவுள் பற்றிய ஒரு விளக்கமாக இருக்கிறது என்று போதித்த போதிலும்கூட, பண்டைய விண்வெளித் தத்துவவாதிகள், நவீன கண்ணோட்டத்தில், இது ஒரு கடவுள் உருவம் அல்ல, மாறாக இது ஒரு வகை இயந்திரம் என்று வாதிடுகின்றனர்: இவற்றில் மன்னா உணவு ஒரு கடவுளிடமிருந்து வந்த உணவு என்பதை விட, அது ஒரு இயந்திரம் உருவாக்கம் என்றே கூறுகின்றனர்.

மேலும் இந்த இயந்திரம் இஸ்ரேலியர்கள் எங்கிருந்து வந்ததது என்பதற்கான  விளக்கங்களை சதி ஆலோசனை வெளிப்பாட்டாளர்கள் குழு அளிக்கின்றன. எகிப்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் அதை அவர்களிடமிருந்து யூதர்கள் திருடிவிட்டதாக கூறப்படுகிறது. சரி இந்த இயந்திரம் எகிப்தியர்களுக்கு எப்படி கிடைத்தது.

முதலாவதாக நாம் அறிய வேண்டியது, #அக்னேடென் Akhenaten (மன்னன் டட்ஸ் தந்தை) மோசேயின் போதனையாளராக இருந்தார், அது பற்றி Deadsea scroll இல் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த  அக்னேடென் மன்னன், வெளித்தோற்றம் மற்றும் பிரமிட் உருவாக்கத்தினால், அன்றைய எகிப்து மக்கள் அனைவரும் இவரை ஒரு வேற்றுகிரகவாசியே என்றே சந்தேகித்தனர்.

அவர் ஒரு விண்கலம் வைத்திருந்ததாகவும், மக்களின் கண்ணிலிருந்து மறையக்கூடிய அந்த விண்கலத்தினுள் உள்ள ஒரு இயந்திரத்தின் மூலம் பாலைவனத்தில் மழை பொழியச்செய்ததாகவும், செங்கடலையும் பிரித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த விண்கலம், ஒரு நகரும் மேகம் என்றே பைபிளில் விவரிக்கப்படுகிறது. பின்னர் இந்த மன்னா உணவும் அதிலிருந்து ஒரு கருவியின் மூலம் வெளியிடப்பட்டது என்றும். அந்த இயந்திரத்தையே இஸ்ரேலியர்கள் அபகரித்து சென்றதாக Deadsea scroll இல் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் மன்னா இயந்திரம்: உடன்படிக்கை பேழையில் உண்டாகும் அணுக்கரு ஆற்றலை மையமாகக் கொண்டு காற்றிலுள்ள ஈரப்பதத்தை, ஒருவித உண்ணத்தகுந்த பாசிகளாக மாற்றியதாக கூறப்படுகிறது. யூதர்கள் இஸ்ரவேலை அடைந்தபோது, ​​மன்னா இயந்திரம் உணவை வழங்குவதற்கு இனி தேவைப்படாது என்று உணர்ந்து, சாலமன் ஆலயத்தில் உள்ள பேழையில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது...

கண் பார்வை குறைபாடு நீங்க...


நீ ஏன்டா இந்தியாவை எப்போ பார்த்தாலும் எதிர்த்துக் கொண்டே இருக்க என்று கேட்பவர்களுக்கு..?


பர்மாவில் சீனர்கள் தாக்கபட்ட போது சீனா, இனி ஒரு சீனர்கள் மீது பர்மாவில் தாக்கபட்டாலும் இராணுவத்தை இறக்குவோம் என்றது சீனா, பார்மாவில் சீனர்கள் பாதுகாப்பட்டனர்..

ஆனால் தமிழர்கள் மீது பார்மாவில் தாக்குதல் நடந்த போது பொத்திட்டு இருந்தது இந்தியா..

மலேசியவில் தமிழர்கள் தாக்கபட்ட போது பொத்திட்டு வேடிக்கை பார்த்தது இந்தியா..

200 வருசமா இரத்தம் சிந்தி, உயிரை பணையம் வைத்து இலங்கை தீவின் முன்னேற்றத்துக்கு பாடுபாட்ட மலையக தமிழர்களை திருப்பி அணுப்ப போகிறோம் என்று இலங்கை சொன்ன போது பொத்திகிட்டு 450000 தமிழர்களை திருப்பி அழைத்து கொண்டது இந்தியா..

700 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கொலை செய்த இலங்கை கொலை வெறி அரசை எதிர்த்து கேள்வி கேட்க முடியாத இந்தியா...

கேரளா மீனவர்களை கொலை செய்த இத்தாலி நாட்டுகாரனை கைது செய்தது இந்தியா...

இந்தியாவில் எவனுமே ஏற்றுகாத அணு உலையை தமிழ்நாட்டில் வம்படியா தலையில் கட்டியது இந்தியா..

150000 தமிழர்களை இனப்படுகொலை செய்த முழுமுதற்காரணம் இந்தியா..

சாகர்மாலா, மீத்தேன், காவிரி, கெயில், ஹைட்ரோ கார்பன், மணற்கொள்ளை, காடுகளை அழித்தல் அனைத்தையும் ஆதரிக்கும் இந்தியாவை ஏன் எதிர்க்க கூடாது?

இப்போ சொல்லுங்க நான் ஏன் இந்தியாவை எதிர்க்க கூடாது?

ஏன் தனித் தமிழ்நாடு கேட்க கூடாது?

ஏன் இந்திய தேர்தலில் போட்டியிடும் தமிழக அரசியல்வாதிகளை கேள்வி கேட்க கூடாது?

கேள்விகளுடன்.... நான்..