அபிநந்தன் இந்திய எல்லையில் தடம் பதிப்பதை நமக்குக் காட்டுவது பாகிஸ்தானின் பி டிவி. அவருடைய பின்புறம் காண்பிக்கப்படுகிறது.
அவர் இந்தியாவிற்குள் வருவதை படம் எடுக்கும் ஒரு அடிப்படை நாகரிகம் கூட இல்லாத அரசா, நமது அரசு? தூர்தர்ஷன் என்ன செய்து கொண்டிருந்தது?
இந்தக் கேள்வியை நான் பலமுறை கேட்டும் பதில் ஏதும் இல்லை.
நடந்தவை அனைத்தையும் குறித்து இந்திய மக்களுக்கு (இந்துத்துவ வெறியர்களுக்கு அல்ல) பல கேள்விகள் இருக்கின்றன. அவற்றிற்கு பதில்கள் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசிற்கு இருக்கிறது. அல்லது ஏன் உடனடியாகப் பதில்களைச் சொல்ல முடியாது என்பதையாவது விளக்க வேண்டும். இந்திய நாடாளுமன்றத்தைக் கூட்டி விளக்கம் அளிக்க வேண்டியதுதான் முறை. ஆனால் பாரதி சொல்வதைப் போல "சக்கரவர்த்தி என்றே மேலாம் தன்மை படைத்திருப்பவராக" மோதி தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்.
நமது ஊடகங்கள் நிலைமை வெட்கக்கேடு. ஒன்று கோயபல்ஸை மிஞ்சுபவை. அல்லது முதுகெலும்பு இல்லாதவை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.