25/08/2021

நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள் குறித்து காண்போம்...

 


உண்மை 1..

3 நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. ஒருவேளை 3 நாட்களுக்கு மேல் கோபம் நீடித்தால், அது அவர்கள் மீது அன்பு இல்லை என்பதை வெளிக்காட்டும்.

உண்மை 2..

உண்மையான அன்பை ஒருவர் உங்கள் மீது கொண்டிருந்தால், உங்களது வலியை உங்கள் கண்களைக் கொண்டே அறிந்து கொள்வார்கள். என்ன தான் நீங்கள் வெளியே போலி சிரிப்பை மேற்கொண்டாலும் அறிவார்கள்.

உண்மை 3..

ஆண் மூளை, பெண் மூளை என்று இரு வேறு மூளைகள் உள்ளன என்று மூளையைப் பற்றிய கட்டுக்கதை ஒன்று உள்ளது. உண்மையில் அப்படி ஏதும் இல்லை.

உண்மை 4..

சிறு வயதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுவார்கள். அதனால் தான் பெண்கள் அதிகமாக பேசுகிறார்கள்.

உண்மை 5..

முத்தம் கொடுத்தால், வாழைப்பழம் அல்லது சாக்லேட் சாப்பிட்டால் மற்றும் சூயிங் கம் மென்றால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஆனால் இது உண்மையே.

உண்மை 6..

பிறக்கும் போது நம் கண்கள் எந்த அளவில் இருந்ததோ, வளர்ந்தாலும் அதே அளவில் தான் இருக்கும். ஆனால் காதுகள் மற்றும் மூக்குகள் குறிப்பிட்ட வயது வரை வளரும்.

உண்மை 7..

இனிப்புக்களையும், சாக்லேட்டுக்களையும் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியானவர்களாகவும், வெளிப்படையாக பேசும் சுபாவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

உண்மை 8..

ஒருவர் சிங்கிளாக இருக்கும் போது, சந்தோஷமான தம்பதிகளையும், காதலில் விழுந்த பின் சந்தோஷமான சிங்கிளையும் காணக்கூடும் என மனோதத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.

உண்மை 9..

ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 3000 சிந்தனைகளைக் கொண்டிருப்பான் என்பது தெரியுமா?

உண்மை 10..

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றொரு வழி குளிக்கும் போது பாட்டு பாடுவது. உண்மையில் இவ்வாறு செய்யும் போது, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்து, மனநிலை மேம்படும்...

வீடியோ லீக் ஆகி கறுப்பு ஆடு மாட்டிக்கிச்சு...

 


கல்லூரி திறப்பும்... தடுப்பூசி வியாபாரமும்...

 


ஆசிரியர் Vs மாணவன்...

 


ஆசிரியர் : என்னடா ஓட்டப் பந்தயத்துக்கு வரும்போது கையில தீப்பந்தத்தோட வந்திருக்க?

மாணவன் : நீங்க தானே சார் சொன்னீங்க.. ஜெயிக்கணும்னா ஒரு பயர் வேணும்னு அதான் சார் கொண்டு வந்தேன்.

ஆசிரியர் : ? 😳😳😳

கர்நாடகாவில் தமிழனுக்கு வேலை கிடைக்குமா?

 


1999ஆம் ஆண்டு, ஏ.ஜி.ஓ என்ற நடுவணரசு நிறுவனத்தின் அலுவலர்களாக தேர்வானவர்களில் 26 தமிழர்கள் இருந்தனர்..

கர்நாடகாவில் அவர்கள் பணியமர்த்தப்பட்டது தெரிந்ததும் கன்னடவர்கள் ஒன்றுதிரண்டு அங்கே தமிழர்களுக்குப் பதிலாகக் கன்னடர்களே அமர்த்தப்பட வேண்டும் என்று வன்முறையில் ஈடுபட்டனர்.

ஏ.ஜி.ஓ அலுவலகத்திற்கு அவர்கள் கூட்டமாக வருவது தெரிந்ததும் முதல்நாள் வேலைக்குச் சென்றிருந்த தமிழர்கள் ஓடி ஒளியவேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.

கூட்டமாக நுழைந்த கன்னடர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இது ஒரு நாளல்ல இரு நாளல்ல நாற்பது நாட்கள் மேற்கொள்ளப்பட்டது.

கிடைத்த பொருட்களையெல்லாம் உடைத்தனர்.

வெளியேயும் ஆர்ப்பாட்டம் தீவிரமாக செய்தனர்.

கர்நாடக சலுவளி, கர்நாடக கிரியா கேந்திரா, ராஜ்குமார் ரசிகர்கள், பா.ஐ.க, என்று கட்சி, இயக்க பேதமில்லாமல் மாநில மத்திய கட்சியைச் சேர்ந்த  எம்.பி, எம்.எல்.ஏ எல்லாரும் ஆதரவு தெரிவித்தனர், அறிக்கைவிட்டனர், கலந்து கொண்டர்..

எந்த ஊடகமோ, நாளிதழோ, மாந்தநேய அமைப்போ இதைத் தட்டிக்கேட்கவில்லை.

ஏஜிஓ மேலாண்மையே இதைக் கண்டிக்கவில்லை.

கர்நாடக தமிழர் இயக்கம் இதை வழக்குமன்றம் கொண்டு சென்றது.

இறுதியாக அந்த தமிழர்கள் வேறு நடுவணரசு நிறுவனத்திற்கு அனுப்பட்டு கன்னடர்களே அங்கே பணியமர்த்தப்பட்டனர்.

இது அறமா என்றால் உறுதியாக இல்லை எனலாம்.

தற்போதைய கர்நாடகத்தில் 22% தமிழர் நிலமாகும்.

அங்கே வசிப்பவர் பெரும்பாலும் தமிழரே.

பெங்களூர், மைசூர், மாண்டியா போன்ற நகரங்களும் சத்தியமங்கலம், மாதேசுவரமலை போன்ற வளமான வனப்பகுதியும் காவிரி ஆறு பாயும் பகுதியும் இதில் அடங்கும்.

திப்பு சுல்தான் காலத்தில் பறிபோன நிலமானது மைசூர் சமஸ்தானமாக ஆங்கிலேயர் ஆட்சியில் நீடித்து பிறகு 1956ல் மாநில பிரிவினையின்போது கன்னடவரிடம் பறிபோனது.

தற்போதைய கர்நாடகத்தில் 50%கூட கன்னடர்கள் கிடையாது.

ஆனால், அவர்கள் தமது தாய்நிலத்தைப் போல இருமடங்கு நிலத்தைக் கைப்பற்றி மற்றவர்களை அடக்கி ஆண்டு வருகின்றனர்.

அங்கே 30%க்கும் மேல் தமிழர் இருந்தும் இனவழி அடிமைத்தனத்துக்கு முதல் இலக்காக ஆளாகியுள்ளனர்.

(வீரப்பனார் இருந்தவரை தமிழக எல்லையோரம் கொஞ்சம் விழிப்புடன் இருந்தது, இப்போது அதுவும் இல்லை).

அங்கே எங்கும் கன்னடம் எதிலும் கன்னடவர் என்ற இனவெறி முழக்கமே கேட்கிறது.

இங்கே தமிழகத்தில் என்ன நிலை?

அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவனும் வந்தேறியாக இருக்கிறான்,

வந்தேறி ஒவ்வொருவனும் அதிகாரத்தில் இருக்கிறான்...

இவனுக தான் இந்து மத பாதுகாவலர்களாம்...

 


கல்யாணம் வேற பண்ணல 💯 இவனா தான் இருக்கும் 😂

 


சுண்டு விரலில் உள்ள மூன்று பகுதிகள் உங்களைப் பற்றி சொல்வது என்ன தெரியுமா?

 


ஒவ்வொருவருக்கும் விரல்கள் வேறுபடும். அது வடிவம் மற்றும் நீளத்தில் மட்டுமின்றி, கைவிரல்களில் உள்ள மூன்று பகுதிகளிலும் வேறுபாடு இருக்கும்.

சில கோட்பாடுகளில் கைவிரல்கள் ஒருவரின் குண நலன்களைப் பற்றி சொல்வதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் சில மக்கள் சுண்டு விரல் ஒருவரது குணநலன் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்துவதாக நம்புகின்றனர்.

இப்போது சுண்டு விரலில் உள்ள மூன்று பகுதிகள் ஒருவரது குண நலன்களைப் பற்றி சொல்வது என்று பார்ப்போம்..

பகுதி 1..

சுண்டு விரலின் மேல் பகுதி நீளமாக இருந்தால்,

பல மொழிகளை அறிந்தவராக அனைவரையும் கவரக்கூடியவறாக இருப்பர். மேலும் இத்தகையவர்களை அவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியாது.

சுண்டு விரலின் மேல் பகுதி குட்டையாக இருந்தால் இந்த வகை மக்கள், மற்றவர்கள் விரும்பத்தகாத வகையில் இருப்பர். மேலும் இவர்கள் பலவீனமானவர்களாக இருப்பார்கள்.

பகுதி 2...

சுண்டு விரலின் இரண்டாம் பகுதி நீளமாக இருந்தால்,

அவர்களிடம் உதவும் மனப்பான்மை அதிகமாகவும், மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பர். மருத்துவர்கள், உடல்நல நிபுணர்கள் இந்த வகையினராக இருக்க வாய்ப்புள்ளது.

சுண்டு விரலின் இரண்டாம் பகுதி குட்டையாக இருந்தால், பிடிவாத குணமிக்கவர்களாகவும், சிறிது சோம்பேறியாகவும் இருப்பர். மேலும் இந்த வகையினர் மற்றவர்களுக்காக தங்களை மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.

பகுதி 3...

சுண்டு விரலின் கடைசி பகுதி நீளமாக இருந்தால்,

நேர்மையானவர்களாக, எப்போதும் உண்மையே பேசுபவர்களாக இருப்பர். மேலும் இவர்கள் நல்ல சொற்றொடர்பு உள்ளவர்களாக, சமூக திறமை கொண்டவர்களாக இருப்பர். அதுமட்டுமின்றி, இத்தகையவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவர்.

சுண்டு விரலின் மூன்றாம் பகுதி குட்டையாக இருப்பின், அவர்கள் அப்பாவியாகவும், நம்பிக்கை மிக்கவர்களாகவும் இருப்பர். இந்த வகையைச் சேர்ந்தவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் மற்றவர்கள் இவர்களை எளிதில் தன்வசப்படுத்திக் கொண்டு, வேலையை செய்து முடிப்பார்கள்...

100 ஆண்டு பழமையான காலண்டர், அதே தினங்கள் அதே தேதியுடன் இன்றைய மாதம்...

 


ஈகோ என்பது என்ன?

 


தன்னைப் பற்றியே சிந்தித்தல், சுயநலம், வறட்டுக் கௌரவம், தலைக்கனம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய குணங்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகும்..

மனிதனுக்கு பணம், பதவி, அழகு, செல்வாக்கு கூடும் பொழுது, அதே நேரத்தில் படிப்படியாக மமதை, ஆணவம், செருக்கு, திமிர், கர்வம் சிலருக்கு கூடி விடுகிறது..

கடவுள் நம்மை விட்டு வெளியேறுவது என்பதன் சுருக்கம் தான் (Ending God out) ஈகோ என்பர்.

நமது பலவீனத்தை, தவறையாராவது சுட்டிக்காட்டினால் ஈகோ விழித்துக் கொள்கிறது. மோதல் ஏற்படுகிறது..

ஈகோ மனிதர்களின் அடையாளம்...

நம்மிடம் வணக்கத்தை கட்டாயம் எதிர்பார்ப்பர், நன்கு தெரிந்தவர் என்றாலும், கண்டும் காணாதது போல நடப்பர்.

அதிகம் பேச மாட்டார்.

தம் இனத்துடன் மட்டும் பழகுவர்.

தம்மை நாடியே பிறர் வர வேண்டும் என்று இருப்பர்.

தன்னை விட மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என எதிர்பார்ப்பர்.

தான் மட்டும் தான் சிறந்தவர் என நம்புவர்.

ஈரமும், இரக்கக் குணமும் அற்றதன்மை பேச்சில் வெளிப்படும்.

மற்றவர் தன்னை மதிக்க வேண்டும், புகழ வேண்டும் என்பதில் தீராத ஆசை கொள்வர்.

தான் எதை செய்தாலும் பிறர்க்கு தெரியும் படி சுய விளம்பரம் செய்ய விரும்புவர்.

தன்னை முந்தி செல்வோர் மீது பொறாமைபடுவர்.

தன் சுயநலத்திற்காக பிறரை சுரண்டுவர்.

தன்னைவிட குறைந்த படிப்பு, பதவி, அந்தஸ்து உள்ளவர்களிடம் அதிகம் பேச மாட்டார்கள்.

தவறு செய்தால் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்.

தன்னை சாதாரண மனிதர்களாய் நினைத்து கொள்வதே கனவிலும் கற்பனை செய்து பார்க்க முடியாத காரியமாகும்.

பிறர் தன்னை மிகவும் குறைவாக மதிப்பிடுவார்கள் என்ற நினைப்பில் தங்களை பெரிய ஆளாக காண்பிப்பதற்கு முயல்வர்.

எல்லா புனிதமான தோற்றத்திற்கு மறுபுறம் இன்னொரு மோசமான குரூரமான முகமிருக்கும்.

தகவல் தொடர்பு சரியான முறையில் இருக்காது.

தெரியாதததைக் கேட்டு தெரிந்து கொள்ள தயங்குவர்.

அதிக  முக்கியத்துவம் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பதில் தீவிரமாக இருப்பர்.

ஈகோ பிரச்சினையால் பல விஷயங்களில் முரண்டு பிடிப்பது.

முட்டுக்கட்டை போட்டு இழுத்தடிப்பது இவர்களது வழக்கமாக இருக்கும்...

ஈகோ அற்றவர்களின் இயல்புகள்..

ஈகோ இல்லாத மனிதர்கள் பதவி கிடைத்து விட்டது என்று அதிகப்படியான அதிகாரம் செய்ய மாட்டார்கள். பதவி நிலையானது அல்ல என்பது அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.

அழகு கூடுகிறது என கர்வம் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு தெரியும். ஒருநாள் உடல் அழகு மங்கப்போகிறது என்று.

பணக்காரர் ஆனாலும் பகட்டாக இருப்பதில்லை. பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது என்பதை நன்கு உணர்ந்தவர்கள்.

அந்தஸ்து வந்தாலும், உடன் பிறந்தவர்களை முற்றிலுமாக பிரிந்துவிட மாட்டார்கள்.

நட்பு கசந்து விடாமல், திருமண வாழ்க்கை சரிந்து விடாமல் கவனமாக நடந்து கொள்வார்கள்.

ஈகோவை விட்டுவிட்டால் வாழ்வு லேசாகி விடும் என்பதை உணர்ந்தவர்கள்.

வானம், பூமி, ஆறு, கடல், மலை எல்லாம் இறைவன் தந்தது. நாம் உருவாக்கியது அல்ல.

நமது சக்தி, பலம், முயற்சி நமக்கு செல்வத்தை தந்து இருக்கலாம். ஞாபகமிருக்கட்டும்.

நமது திறமைகள் கடவுளால் நமக்குத் தரப்பட்ட கொடை.

மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கும் போது ஈகோ குறைந்து விடுகிறது.

அறிவாற்றல் குறைந்தவர்களிடம் ஈகோ அதிகரிக்கிறது...

ஒ... இதற்கு பெயர் தான் காதலா.?

 


அழகுக்கு ஆயிரம் முறை
அர்த்தங்கள் கேட்டாலும்,
உன்னை மட்டுமே
சொல்லுவேன்...


பிராடு பாஜக வனதி சீனிவாசன் கலாட்டா...