01/12/2017

குளிர்காலத்திற்கு ஏற்ற உணவுகள்...


குளிர்காலம் என்றாலே சளி, ஜலதோஷம் பிடிக்கும் என்பதற்காக பழங்களை சாப்பிடுவதையே நிறுத்தி விடுவார்கள்..

இவ்வாறெல்லாம் சரியாக சாப்பிடாமல் இருந்தால் உடலை எந்த ஒரு கிருமிகள் தாக்கினாலும், அவை எளிதில் உடலில் புகுந்து தங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும்.

எனவே குளிர்காலத்தில் எத்தகைய உணவுகள் சாப்பிடலாம் என்ற பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

ஆரஞ்சு- குளிர்காலத்தில் அதிகமான அளவில் சளி, ஜலதோஷம் பிடிக்கும். ஆகவே அத்தகையவற்றை தடுக்க உடலில் போதிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின் சி அவசியமாகிறது..

அத்தகைய சத்து ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளன. எனவே இதனை குளிர்காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பசலைக் கீரை- பொதுவாக கீரை வகைகளை அதிகம் சேர்த்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிலும் பசலைக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்து வந்தால், அதில் உள்ள அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்ந்து நோய் தாக்காமல் உடலை ஆரோக்கியமாக வைக்கும்.

வேர்க்கடலை- வேர்க்கடலையை குளிர்காலத்தில் அதிகம் சாப்பிட வேண்டும். அது வறுத்ததாகவோ, உப்பாகவோ அல்லது சாதாரணமாகவோ இருந்தாலும், அதை சாப்பிட்டால் உடலில் உள்ள வெப்பம் சரியான அளவு இருப்பதோடு, புரோட்டீனும் அதிகம் கிடைக்கும்.

கொய்யாப்பழம்- இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் கொடுப்பதில்லை, இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது.
அதிலும் கொய்யாவில் லைகோபைன் என்னும் பொருள் இருப்பதால், அது இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கிறது.ஆகவே குளிர்காலத்தில் பிங்க் மற்றும் சாறுள்ள கொய்யாப்பழத்தை அதிகம் வாங்கி சாப்பிட வேண்டும்.

கேரட் - கேரட்டை இயற்கையின் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவு இதில் வைட்டமின்களான பி, சி, டி, ஈ மற்றும் கே உள்ளன.

மேலும் இதில் உள்ள கரோட்டீன என்னும் பொருள் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாறிவிடுகிறது. எனவே இத்தகைய கேரட்டை சேர்ப்பது அவசியமாகிறது.

கிவி- இது மற்றொரு சிறப்பான வைட்டமின் சி நிறைந்துள்ள பழம். அதிலும் இந்த பழத்தின் மேல் சிறிது உப்பை தூவி, காலை வேளையில் அல்லது மாலை வேளையில் சாப்பிட்டால் உடலுக்கு சத்து கிடைத்தது போன்றும் இருக்கும், வயிறு நிறைந்தது போன்றும் இருக்கும்.

சிக்கன் சூப்- சூப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அவ்வாறு சாப்பிடும் சூப்பில் சிக்கன் சூப் சாப்பிட்டால், குளிர்காலத்திற்கு இதமாக இருக்கும்.

நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்
சாதாரணமான பழங்களை சாப்பிடுவதை விட, உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

சொல்லப்போனால் நல்ல ஃப்ரஷ்ஷான பழங்களை விட உலர் பழங்கள் தான் நல்லது. ஆகவே இத்தகைய உணவுப் பொருட்களை நட்ஸ் உடன் தினமும் சேர்த்து சாப்பிட்டால், முக்கியமாக குளிர்காலத்தில் சாப்பிட்டால், கிருமிகள் எளிதில் உடலைத் தாக்காமல் தடுக்கும்...

தமிழக அரசே எங்கள் வரிப் பணம் எங்கே செல்கிறது..?


தமிழக மக்களே எச்சரிக்கையாக இருங்கள். தமிழ்நாட்டில் இரண்டு புதிய தடுப்பூசி வரப்போவதாக தகவல்...


1 - Rotavirus vaccine

2 - Cervical cancer vaccine

இயற்கையாகவே உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் நோய்எதிர்ப்பு சக்தி இருப்பதை மறைத்து.

பொய் மூட்டைகள் மூலம் மக்களை பயப்படுத்தி.. கார்ப்பரேட் நிறுவனங்கள்.. தடுப்பூசி என்னும் விதை கொண்டு..

உடல் என்னும் நிலத்தில்..

நோய் விளைச்சல் கண்டு..

பணத்தை அறுவடை செய்யும்..

அயோக்கிய வேலைக்கு அரசும் துனை போகிறது.

இதற்கு அரசு வேறு எதாவது வேலை செய்யலாம்.

உன் குழந்தைக்கு எந்த நோயும் வராக்கூடாது, ஆரோக்கியமாக இருக்க வேண்டும், என வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்கு அக்கறை இருக்குமா..

உன் குழந்தை ஆரோக்கியத்தில் உன்னைவிட உலகில் வேறு யாருக்கு அக்கறை இருக்க முடியும் ?

PETA விற்கு காளைகள் மேல் என்ன அக்கறை வந்ததோ, அதே தான் இவர்களுக்கும்.

எப்படியாவது நம்மை அழிக்க துடிக்கிறார்கள்.

உன் மரபனுவை மந்தமாக்கி
உன்னை மலடாக்க துடிக்கிறார்கள்.

தற்போது உள்ள அதிகப்படியான ஆட்டிசம்..

ஆண் மலட்டுத்தன்மை..

பெண் மலட்டுத்தன்மை..

குழந்தையின்மை..

Muscular dystrophy..

மந்த புத்தி..

இது போன்ற இன்னும் பல நோய்களுக்கு தடுப்பூசி ஒரு முக்கிய காரணம் என்பதை நீ அறிவாயா..

உன் மூளையில் என்ன ஈயம் காய்சி ஊற்றப்பட்டுள்ளதா..

ஏன் சிந்திக்க மறுக்கிறாய்..

ஆயிரம் ஆயிரம் ஆண்டு வாழ்ந்த நம் முன்னோர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு தான் வாழ்ந்தார்களா ?

பந்து, பதினைந்து குழந்தை பெற்ற உன் பாட்டி தடுப்பூசி போட்டாங்களா ?

வயோதிகத்திலும் வயலில் உறுதியாக வேலை செய்யும் உன் தாத்தா தடுப்பூசி போட்டார ?

நீங்கள் உங்கள் உடலை கவனிக்க தூவங்கினால் அனைத்தும் உண்மைகளும் உங்களுக்கு புலப்படும்.

கார்ப்பரேட்டும், அரசும் சேர்ந்தாடும் கொலை வெறி ஆட்டத்திற்கு, கல்லங்கபடமற்ற உங்கள் பிஞ்சு குழந்தையை பலி கொடுத்து விடாதீர்கள்...

நன்றி - ஹீலர்.இரா.மதிவாணன்

பாஜக மோடியும் சர்வாதிகார திருட்டு அரசியலும்...


ஜவஹர்லால் நேரு பாராளுமன்றத்தில் அழுததில்லை...

லால்பஹதூர் சாஸ்திரியும் பாராளுமன்றத்தில் அழுததில்லை...

இந்திராகாந்தி, மொரார்ஜிதேசாய், ராஜீவ்காந்தி, வி.பி.சிங் முதலியவர்களும் பாராளுமன்றத்தில் அழுததில்லை...

உலகின் பெரும்பாலான தலைவர்களும், அவரவர் நாட்டின் உயர்சபைகளில் அழுததில்லை....

ஆனால்....

ஹிட்லர் அழுதார்...

முசோலினி அழுதார்...

நரேந்திரமோடி பாராளுமன்ற வாசலில் விழுந்து கும்பிட்டு, பாராளுமன்றத்தில் அழுதார்...

சர்வாதிகாரிகள் எப்போதும் மக்கள் முன்னே முதலைக்கண்ணீர் வடித்து நடிப்பவர்களே...

இலுமினாட்டி களின் தண்ணீர் அரசியல்...


நாம் குடிக்கும் ஒவ்வொரு  துளி சுத்திகரிக்கப்பட்ட நீருக்கும் அமெரிக்காவுக்கு வரி...

ஆமாம் நண்பர்களே.. நீங்கள் ஒவ்வொரு சொட்டு தண்ணீர் குடிக்கும் போதும் அமெரிக்காவுக்கு வரி செலுத்துகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?.

இது என்ன புதுக் கதையா இருக்கேன்னு நீங்க நினைப்பது புரிகிறது. ஆனால் அதுதான் உண்மை.

அக்குவாபினா தண்ணீராய் இருந்தாலும் சரி அல்லது லோக்கல்ல போடர கேன் தண்ணீராக இருந்தாலும் சரி குடிக்கிற ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் நாம் அமெரிக்காவுக்கு வரி செலுத்துகிறோம்.

குடிநீர் சுத்திகரிப்பு RO முறையில்தான் சுத்திகரிக்கப் படுகிறது. அதாவது Reverse Osmosis முறை. இதன் காப்புரிமை அமெரிக்கா வசம் உள்ளது. நாம் எந்த கம்பெனி சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடித்தாலும் சரி அல்லது வீட்டிலேயே RO சாதனம் பொருத்தினாலும் பில்டர் மூலமாக அமெரிக்காவுக்கு வரி செலுத்த வேண்டும்.

இப்போது புரிகிறதா? சுத்தமான மழை நீரை சாக்கடையிலும் கடலிலும் விட்டு விட்டு கடல்நீரை ஏன் குடி நீராக்குகிறார்கள் என்று 1000 கோடி கடல்நீர் குடிநீராக்கும் திட்டமென்றால் காலகாலத்திற்கும் RO மூலமாக அமெரிக்காவுக்கு நாம் வரி செலுத்துவோம்.

அரசியல்வாதிக்கு கமிஷன்.

ஆற்று நீரையெல்லாம் கடலில் கொட்டி விட்டு அம்மா நீர் மூலமாக அமெரிக்காவுக்கு வரி.

ஏரி குளங்களில் மீன் வளர்கிறேன். இறால் வளர்க்கிறேன் என்று நீராதாரங்களை பாழ் படுத்தி விட்டு கிராமங்களில் கூட மக்களை கேன் தண்ணீர் குடிக்க வைத்து அமெரிக்காவுக்கு வரி.

நம் முன்னோர்கள் நெல்லையும், புல்லையும் மட்டும் அறுவடை செய்தவர்கள் என்பது மட்டுமல்ல

நீரையும் அறுவடை செய்து ஏரி, குளம், குட்டை என பல வடிவங்களில் சேகரித்து வந்தனர்.

வளர்ச்சி என்ற பெயரில் ஆறு, ஏரி, கால்வாய், குளம், குட்டை, காடுகள், மலைகள் என குடிநீர் பெறக் கூடிய எல்லா இயற்கை வளங்களையும் திட்டமிட்டு அழித்து நாசப்படுத்தியது மட்டும் அல்லாமல் பெய்யும் மழையும் பெப்சிக்கும், கோக்குக்கும் அக்குவாபினவுக்கும் அம்மா வாட்டருக்கும் என எழுதி வைத்து விட்ட நாட்டில் ஏழைகளுக்கு எது மிஞ்சும்?

ஆறுகள்தோறும் பன்னாட்டு நிறுவனங்களின் கார் கம்பேனிகள்,  ரசாயன ஆலை, சாய பட்டரை ஆலை தோல் பதப்படுத்தும் ஆலை, பேப்பர் சர்க்கரை ஆலை கட்டி நீர் நிலையை பாழாக்கி அமெரிக்காகாரனுக்கு வரி.

நீங்கள் குடிப்பது சுத்திகரிக்கப்பட்ட நீர் இல்லை. மாறாக குளோரின் ஆசிட் போன்ற நச்சு வேதிபொருட்கள் கலந்த மெள்ள கொல்லும் விசம் (Slow Poison) என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நிலத்திற்கு கீழே உள்ள நீர்தான் குடிப்பதற்கு உகந்த நீர் மண்ணை விட சிறந்த வடிகட்டி உலகில் வேறு எதுவும் இல்லை என விழா (முந்நீர் விழவு)  வைத்து அறிவித்த நம் முன்னோர்கள் எங்கே... என் காலுக்கும் ஐந்தடிக்கும் கீழ் உள்ள குடிநீர் என் வாய்க்கு வருவதற்குள் நான் அமெரிக்காவுக்கு வரி கட்ட வேண்டும் என்ற நிலையில் உள்ள நாம் எங்கே.

இந்திய தரகு  முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தனியார் மயம் - தாராள மயம் - உலக மயம், நுகர்வு கலாச்சாரம் இவற்றிற்கு பின்னால்  பன்னாட்டு நிறுவனங்களின்
(கார்ப்பரேட்டுகளின்) சதி உள்ளது என்பதை நாம் எப்போது உணர்வோம்.

வழக்கம் போலவே ஆதாரம் இருக்கான்னு கேட்கறவங்களுக்கு RO அமெரிக்க காப்புரிமை எண் US4574049...

16 வகை லட்சுமி...


மகாலட்சுமி பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.

அந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதன் விவரம் வருமாறு...

ஹரிணி: பசுமையான மேனி அழகைப் பெற்றவள்.

சூர்யா: கதிரவனுக்கு நிகரான ஒளிமயமானவள்.

ஹிரண்மயி: பொன்னி.

ஈஸ்வரி: எல்லா உயிரிலும் உறைபவள்.

ஹிரண்ச வர்ணா: பொன்னிற மேனியாள்.

சந்திரா: நிலவுக்கு நிகரான முகமுடையாள்.

அனபகா முனிம்: நிலை தவறாதவள்.

ஆர்த்திரா: நீரில் தோன்றியவள்.

பத்ம ஸ்திதா: தாமரையில் வாசம் செய்பவள்.

பத்ம வர்ணா: தாமரை வர்ணத்தாள்.

ஆதித்ய வர்ணா: சூரியகாந்தி உடையவள்.

வருஷோபில்வ: கூவளத்தில் தோன்றியவள்.

கரிஷிணி: பெருகும் பசுச் செல்வமுடையவள்.

புஷ்ஷிணி: யானைகளால் வணங்கப்படுகிறவள்.

பிங்கள: செம்மை நிறம் கொண்டவள்.

யக்கரிணி: தர்ம தேவதை.

16 வகை லட்சுமி...

1. ஸ்ரீதனலட்சுமி - நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

2. ஸ்ரீவித்யாலட்சுமி - எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.

3. ஸ்ரீதான்யலட்சுமி - ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீ தான்ய லட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.

4. ஸ்ரீவரலட்சுமி - உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி - ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.

6. ஸ்ரீசந்தானலட்சுமி - எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

7. ஸ்ரீகாருண்யலட்சுமி - எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

8. ஸ்ரீமகாலட்சுமி - நாம் நம்மால் முடிந்ததை மற்றவர் களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத் தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.

9. ஸ்ரீசக்திலட்சுமி - எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.

10. ஸ்ரீசாந்திலட்சுமி - நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை நினைத்து பக்தி seidhaale எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.

11. ஸ்ரீசாயாலட்சுமி - நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை பக்தி செலுத்தி அருளைப் பெற வேண்டும்.

12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி - எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.

13. ஸ்ரீசாந்தலட்சுமி - பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

14. ஸ்ரீகிருத்திலட்சுமி - நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

15. ஸ்ரீவிஜயலட்சுமி - விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்..

16. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி - நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்...

கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகில் உடைப்பு...


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இரு அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி அணையின் முழுக் கொள்ளளவான 52 அடியில் 51 அடி நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 316 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 316 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகுகளில் ஒன்றாம் எண் மதகு உடைந்தது. மதகிலிருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறி

பின்னர், அணையின் மற்றொரு மதகிலிருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் அணையிலிருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக வெளியேற்றப்படுகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை: மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், தண்ணீர் வெளியேற்றம் குறித்து தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு  எச்சரிக்கை...

அந்தணர் – பார்ப்பனர் – பிராமணர் சில சங்க இலக்கியச் சான்றுகள்...


ஆரியத்தின் சாதியம் ஐந்து அடிப்படைகளைக் கொண்டது..

1. பிறப்பு அடிப்படை.
2. குறிப்பிட்ட சாதியினர் குறிப்பிட்ட தொழில்தான் செய்ய வேண்டும் என்ற விதி.
3. பிற பிரிவினருடன் கலவாமை / தனித்துவம் காத்தல்.
4. தீண்டாமை.
5. இவற்றை மீறுவோருக்குக் கடும் தண்டனைகள்.

தொல்காப்பிய நால்வகைத் தொழிற் பிரிவுகளில் இந்த ஐந்து அடிப்படைகளுமே இல்லை. மேலும், தொல்காப்பியர் மிகத் தெளிவாகப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்..

’ஊரும் பெயரும் உடைத் தொழிற் கருவியும்
யாருஞ் சார்த்தி அவைஅவை பெறுமே’ (மரபியல் 75).

இதன் பொருள்..

’ஊர், பெயர்,தொழிற் கருவி ஆகியவை அவரவருக்கு ஏற்ப அனைவருக்கும் உரிமையுடையவையே’ என்பதாகும். எந்தப் பிரிவினர் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பது திணிக்கப்பட்ட ’தர்மம்’ அல்ல என்பதை இந்த விதி விளக்குகிறது.

‘தலைமைக் குணச்சொலும் தத்தமக் குரியதோர்
நிலைமைக் கேற்ப நிகழ்த்துப வென்க’ (மரபியல் 76).

-என்கிறார் தொல்காப்பியர்.

தலைமைப் பண்பைப் பொறுத்தவரை, அவரவரும் தமது நிலைமைக்கேற்பவே நிகழ்த்திக் கொள்ள வேண்டும் என்கிறது இவ்விதி. தலைமைப் பண்பு என்பது, பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது, தொடர்புடையவர், குறிப்பிட்ட சூழலில் எந்த நிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்படும்.

மேற்கண்ட இரு விதிகளும் மிக விரிவாகப் பொருள் கொள்ளத்தக்கவை ஆகும். நால்வருணத்தின் அடிப்படைகளுக்கும் இவ்விதிகளுக்கும் முரண்பாடுகள் மட்டுமே இருக்கின்றன.

மேலும், நால்வருணக் கோட்பாடு வகுத்த அதிகாரப்படிநிலை..

1. பிராமணர்.
2. சத்ரியர்.
3. வைசியர்.
4. சூத்திரர்.

-என்பதாகும்.

தொல்காப்பியம் வகுத்த நான்குவகைப் பிரிவுகளின் அதிகாரப்படிநிலை..

1. அரசர்
2. அந்தணர்
3. வணிகர்
4. வேளாளர்

-என்பது.

இதில், பிராமணர் என்ற பிரிவே இல்லை.
பிராமணர் இருக்க வேண்டிய இடத்தில் அரசர் உள்ளார்.

அவருக்குப் பிறகே, அந்தணர் வருகிறார்.

அந்தணர் என்றால், அது ஆரிய பிராமணரைக் குறிப்பதாக, கற்பனையாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது.

அந்தணர் என்போர் யார் என விரிவாகக் காண்போம்.

தமிழர் மரபில் அந்தணர், ஐயர், பார்ப்பனர் ஆகியோர் யாவர் என்ற கேள்விக்கு விடை கண்டால் மட்டுமே, சங்க இலக்கியங்கள் பதிவு செய்த வாழ்வியலைப் புரிந்துகொள்ள முடியும்.

ஐயர் என்ற சொல் ’தலைவர் / சமூகத் தலைவர்’ எனும் பொருளைக் குறிப்பதாகும்.

’பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். கற்பு மணத்தைச் சமூகத் தலைவர்கள் உருவாக்கினர் என்ற பொருளிலேயே இச்சொல் கையாளப்பட்டுள்ளது. ’ஐயை’ என்பது தலைவியைக் குறிக்கும். ’ஐயா’ என்பது மரியாதையுடன் ஒருவரை விளிக்கும் சொல். இவ்வகையில்தான், ஐயர் என்னும் சொல், தலைவர் என்ற பொருள் தாங்கி நின்றது.

சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்றாகும். சிந்துவெளித் தமிழரின் எழுத்துக்களைப் படித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார் -  முனைவர். இரா.மதிவாணன்.

சிந்துவெளி எழுத்துக்கள் அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களாக இருப்பதை இந்நூல் வாயிலாக உணரலாம்.

இந்நூலில் உள்ள அகர வரிசைச் சொற்களில் ஒன்று,

‘அய்யன்’ என்பதாகும்.

(Indus Script Dravidian / Dr.R.Mathivanan / Tamil Chanror Peravai / 1995 / பக் – 137)

(அ)ய்யஅன்
(அ)ய்ய(ன்) மாசோண(ன்) மன்னன்
(அ)ய்ய(ன்) வைகா சானஅன்
(அ)ய்ய(ன்) காங்கணஅன்
(அ)ய்ய(ன்)

(மேலது நூல் – பல்வேறு பக்கங்களில்)

ஐயர், என்றால் அதுவும் பிராமணர்தான், என்றால், சிந்துவெளித் தமிழரும் ஆரிய பிராமணர்தான் என்பார்களோ, திராவிடக் கோட்பாட்டாளர்கள்.

மேற்கண்ட நூலில் உள்ள ’சானஅன்’ என்னும் சொல் விரிவான ஆய்வுகளுக்குட்படுத்தப்பட வேண்டியதாகும். ஏனெனில், இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில், அந்தனன், அய்யன் போன்ற, அறிவுத் துறைச் சொற்கள் உடன்வருகின்றன.

சாணார், என்போர் சான்றோர். இவரே, பின்னாட்களில் நாடாரெனும் சாதியரானார் என்ற கருத்து நெடு நாட்களாகக் கருத்துலகில் உள்ளது.

சிந்துவெளிச் சொற்களில், சானாஅர், அந்தனஅர், அய்யஅன் ஆகிய மூன்று சொற்களுக்கும் இந்த உறவு உள்ளதாகத் தெரிகிறது.

ஆரியர் வருகைக்கு முன்னரே, அய்யன் என்னும் சொல்லைத் தமிழர்கள் பயன்படுத்தினர் என்பது கவனிக்கத்தக்கது.

ஐயர் என்பது, பிராமணரில் ஒரு பிரிவினரைக் குறிப்பதாகப் பின்னாட்களில் அப் பிராமணர்களாலேயே மாற்றிக் கொள்ளப்பட்டது.

அந்தணர் என்னும் பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் அறிவாளர்கள் ஆவர். அரசு உருவாக்கத்தின் போது, அரசர்களுக்கான அறிவுரைகள் வழங்கியும், மெய்யியல் துறைகளில் ஈடுபட்டும் வந்தவர்கள் அந்தணர் ஆவர். இவர்கள் தமிழர்களே.

சான்றாக, பதிற்றுப் பத்து தொகை நூலில் இரண்டாம் பதிகம் பாடிய குமட்டூர் கண்ணனார் ஒரு அந்தணர் (பதிற்றுப் பத்து தெளிவுரை –புலியூர் கேசிகன்).

இவர் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் எனும் சேரப் பேரரசரின் அவையில் இருந்தவர்.

குமட்டூர் கன்ணனார் பாடிய பதிகங்களைப் படித்தாலே, அக்காலத் தமிழரின் ஆரிய எதிர்ப்பின் வீரியம் விளங்கும்.

இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன், இமையம் வரை படையெடுத்துச் சென்று ஆரிய மன்னரைக் கண்டவிடத்தில் எல்லாம் அழித்து வெற்றி வாகை சூடியவன்.

இவ்வரலாற்றை கூறும் பதிகத்தில், இமையவரம்பன் ஆளும் நாட்டின் எல்லையை,

’இமிழ்கடல் வேலித் தமிழகம்’ என்று குறிக்கிறார் கண்ணனார். மேலும், ஆரிய அரசர்கள் தமிழ் அரசனான இமையவரம்பனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டிய செய்திகளையும் குமட்டூர் கண்ணனார் பதிவு செய்துள்ளார்.

குமட்டூர் கண்ணனார் எனும் அந்தணர், ஆரியர் அழிவுற்ற காட்சிகளைப் பின்வருமாறு விவரிக்கிறார்;

’இமையவரம்ப மன்னனே, நீ படையெடுத்துச் சென்ற நாடுகள் எப்படி அழிந்தன தெரியுமா?

இமைய மலைச் சாரலிலே கவரி மான்கள் தாம் உண்ட நரந்தம் புல்லைக் கனவில் எண்ணிப் பார்த்தபடிப் படுத்திருக்கும். (அதுபோல செம்மாந்து இருக்கும்) ஆரியர் நிறைந்த பகுதிகளையும் பிற பகுதிகளையும் தாக்கி அழித்தாய்.

மரணம் வந்து தாக்கிய பிறகு பிணமானது, ஒவ்வொரு நொடியும் அழிந்து கொண்டேயிருக்குமே, அதேபோல் தமது தலைவர்களை இழந்த நாடுகள் கணத்துக்குக் கணம் அழிந்து கொண்டிருந்தன. வயல்கள் எல்லாம் பாழ்பட்டு அங்கே காட்டு மரங்கள் வளரத் தொடங்கி விட்டன.

அவர்களது கடவுள்கள் எல்லாம் காட்டுக்குள் சென்றுவிட்டன. காடுகளின் ஓரங்களில், உனது படையினர் இளம் பெண்களோடு வெற்றிக் களிப்பில் ஆடி மகிழ்கின்றனர்’.

அந்தணர் எல்லாரும் ஆரியப் பார்ப்பனர் என்றால், ஆரியர் அழிந்த நிகழ்வை இவ்வளவு மகிழ்வுடன் பாடியுள்ள குமட்டூர் கண்ணனார் ஆரியரா?

தாம் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குமட்டூர் கண்ணனார் குறிப்பிடுகிறார்.

‘எமது ஆடைகள் பருந்தின் நனைந்த இறக்கைகள் போலக் காணப்பட்டன. எம் உடைகளை மண் தின்று கந்தலாக்கியிருந்தது. அப்படி வந்த எமக்குப் பட்டாடைகள் கொடுத்தாய் அரசே.

வளைந்த மூங்கில் போலத் தோன்றும் எம் பாணர் மகளிர் அனைவருக்கும் ஒளிவீசும் அணிகலன்கள் வழங்கினாய்’ என்ற வரிகளிலிருந்து குமட்டூர் கண்ணனார் பாணர் குலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது.

பாணர்கள் என்போர், இசை, கூத்து ஆகிய கலை நிகழ்வுகளின் வல்லுநர்கள்.
ஆயினும், அவர்கள் நேரடி உற்பத்திசாராத மரபினர் என்பதால், அவர்கள் வறுமையில் வாடியதும் உண்டு. அரசுருவாக்கம் நிகழத் தொடங்கிய பின்னர், அரசர்களைப் பாடியும் அவர்களுக்கு அரசு நடத்தும் முறைமை கற்றுக் கொடுத்தும் தமது இருத்தலை உறுதிப்படுத்தினர் பாணர்கள்.

விறலியர், கூத்தர் ஆகிய பிற பிரிவினரும் இதே நிலையை ஒத்தவர்களே.

இதேவேளை, பாணர் உள்ளிட்ட உற்பத்தி சாரா பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் வர்க்க நிலையில் பின் தங்கியே இருந்தனர்.

உற்பத்தியில் ஈடுபட்ட வேளாண் மாந்தரும் அவரையொத்த பிறரும் வர்க்க நிலைமையில் மேம்பட்டிருந்தனர்.

பின் தங்கிய வர்க்கத்தினராக இருந்தாலும், பாணர்களைத் தமிழ் அரசர்கள் தமக்கு நெருக்கமாக வைத்துப் போற்றினர்.

எனது இக்கூற்றை மெய்ப்பிக்கும் தொல்காப்பிய விதி ஒன்றைக் காண்போம். அகத்திணையியலில் தலைவனது சமூகப் பங்களிப்புகளாகக் கூறப்பட்டுள்ளவை;

‘கல்வி கற்றல், போர்ப் பயிற்சி பெறல், சிற்பக் கலை கற்றல், இவற்றிற்காக வெளியூர் செல்லுதல், முரண்பட்ட இரு அரசர்களிடையே பகை நீக்குதல், அரசர்களிடையே தூதராகச் செல்லுதல், அரசர்களுக்குத் தூதாகச் செல்லும்போதே அரசரது வலிமை, செய்யப் போகும் வேலையின் தன்மை, துணையாக வருவோரின் வலிமை ஆகியவற்றை ஆராய்தல்.... உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன (அகத்திணையியல் 44).

இவ்விதியில், ’தலைவன்’ என்ற சொல் இருப்பதால் இவ்விதி அரசனுக்கானது என்று பொருள் கொள்ளல் தவறு. தலைவன் எனும் சொல்லைத் தொல்காப்பியர் அனைத்துப் பிரிவினருக்கும் கையாண்டுள்ளார்.

அதாவது, குழுத் தலைவன், குடும்பத் தலைவன் என்று அனைத்து அலகுகளின் தலைமையில் உள்ளவன் என்று பொருள். இந்தத் தலைவன், அரசருக்காக செய்ய வேண்டிய / செய்யத்தக்க பங்களிப்புகள் தான் அகத்திணையியலில் கூறப்பட்டது.

அரசு உருவாக்கத்தின்போதும் சமத்துவச் சமூக அமைப்பின் கூறுகளை முன்னிறுத்தியவர் நம் தமிழர் என்பதற்கான சான்று மேற்கண்ட தொல்காப்பிய விதி.

இந்த வகையிலேயே குமட்டூர் கண்ணனார் உள்ளிட்ட எண்ணற்ற அறிவாளர்கள் அரசருக்கு நெருக்கமாக இருந்தனர்.

ஆரியரது அரசக் கோட்பாடுகளோ இதற்கு நேர் எதிரானவை..

’அரசாட்சி நடத்துவது என்பது உதவியாளர்களை வைத்துக் கொண்டால் தான் சாத்தியமாகும். அரசன் அமார்த்யாயர்களை அமர்த்திக் கொள்ள வேண்டும். அவர்கள் அபிப்ராயங்களைக் கேட்க வேண்டும்’ என்றான் சாணக்கியன். அமார்த்தியாயர்கள் என்போர் ஆரிய பிராமணர் ஆவர். அவர்களிலும் வர்க்கத்தால் மேம்பட்டோர் ஆவர். அர்த்த சாத்திர விதிகளின்படி, ’அரசன் அமார்த்தியாயருக்குத் தெரியாமல் எதுவும் செய்யக் கூடாது. அரசனுக்கு உணவு அளிக்கும் உரிமை அரசிக்குக் கூட இல்லை. அமார்த்யாயர்களின் மேற்பார்வையில்தான் உணவு அளிக்கப்பட வேண்டும். அரசன் தன் வாரிசுகளுடன் கூட நெருக்கமாக இல்லாதவாறு பல விதிகள் விதிக்கப்பட்டன.

எல்லாவற்றிற்கும் மேலாக, அரசருக்கும் மக்களுக்குமான உறவு வெகு தொலைவில் இருந்தது. அமார்த்யாயர் எனப்பட்ட ஆரிய பிராமணரே, உண்மையான / மறைமுக ஆட்சியாளர்களாக இருந்தனர்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேதம், கடவுள் ஆகியவற்றின் பெயரால் ஆரிய பிராமணர்கள் செய்து முடித்தனர்.

இந்தக் காலத்தில்தான், தமிழர் மரபு சமூகத்தின் கடைநிலை மாந்தரையும் அரசருக்கு ஆலோசனை சொல்லும் உரிமை உடையவராக அங்கீகரித்தது. அர்த்த சாத்திரம் எழுதப்பட்ட காலம் தொல்காப்பியத்திற்குப் பிந்தியது என்றாலும், அர்த்த சாத்திரத்தின் கூறுகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே ஆரியரிடையே வழக்கத்தில் இருந்தனவே.

ஆரிய பிராமணரான அமார்த்தியாயர் தமது சிறப்புத் தகுதிகளாகக் கூறிகொண்டவற்றில் ’நிமித்தம் பார்க்கும் திறன்’ ஒன்றாகும். அரசருக்கு நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்துச் சொல்வது இதன் முக்கியப் பணி.

நிமித்தம் என்பது வானியல் அறிவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இந்த வானியல் அறிவும் தமிழரிடமிருந்து ஆரியர் திருடியதே.

இது குறித்த ஆழமான ஆய்வு நூல், அறிஞர் குணா எழுதிய ’வள்ளுவத்தின் வீழ்ச்சி’ ஆகும். தமிழர் அறிவைத் தமது பிழைப்புக்காக மூட நம்பிக்கையாக மாற்றியவரே ஆரிய பிராமணர் என்பதை உணர்த்துவதற்காகவே இதை இங்கே குறிப்பிடுகிறேன்.

ஆயினும், அறிஞர் குணா அவர்களின் அரசியல் நிலைகளில் எனக்கு மாறுபாடுகள் உண்டு.

சங்ககாலத்தில் நிமித்தம் பார்ப்பதைப் பிழைப்பாகக் கொண்டு செயல்பட்டோரும் தமிழகத்தில் ‘பார்ப்பார்’ என்று அழைக்கப்பட்டனர்.

இப் பார்ப்பாரில் ஒரு பகுதியினர், தொல்காப்பியர் காலத்திலும் சங்க காலத்தின் பிற்பாதிக் காலம் வரையிலும் சமூகத்தின் கடைநிலை மாந்தராகவே இருந்தனர்.

தமிழகத்திற்கு வந்தேறிய ஆரிய பிராமணரில் பலரும் தமிழகப் பார்ப்பாரோடு கலந்தனர்.

ஆகவே, பார்ப்பார் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பிரிவினரில் தமிழரும் உண்டு, ஆரிய பிராமணரும் உண்டு.

பார்ப்பார் எனும் சொல், குலத் தொழிலைக் குறிக்கும் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டது.

தமிழகத்திற்குப் பிழைப்பு தேடி வந்த எல்லா ஆரிய பிராமணரும், உயர் நிலையில் வைக்கப்படவில்லை. அவர்களது நிலை, தமிழர் அரசுகள் வீழ்ந்த பிறகுதான் உயர்ந்தது.

பார்ப்பாரின் சமூகச் செயல்பாடுகளாகத் தொல்காப்பியர் கூறுபவை..

’தலைவன் (கணவன்) தலைவியைப் (மனைவியை) பிரிந்து செல்லும்போது அவனிடம் சென்று ‘நீ பிரிந்து சென்றால் தலைவியின் வேட்கை மிகும்’ எனக் கூறுதல், தலைவன் செல்வதற்கு வாய்ப்பான நிமித்தம் பார்த்துக் கூறல், தலைவியிடம் சென்று ’தலைவன் பிரிந்து சென்றான்’ எனக் கூறல், இவை போன்ற பிற செயல்கள் அனைத்தும் பார்ப்பாருக்கு உரியனவாகும்’
(தொல்காப்பியம், கற்பியல்-36)

அகநானூற்று பாடல் ஒன்று பார்ப்பாரைப் பற்றிப் பின்வருமாறு விவரிக்கிறது..

’உப்பு வணிகரின் பொதிகளைச் சுமக்கும் கழுதைகளைப் போல் பாறைகள் கிடக்கும் இடத்தின் வழியாக, தூது செல்வதையே பல காலமாகத் தொழிலாகக் கொண்டுள்ள பார்ப்பான் (’தூதொய் பார்ப்பான்’) செல்கிறான். அப் பார்ப்பான், மடியிலே வெள்ளிய ஓலைச் சுவடியை வைத்திருக்கிறான். அவன் வருவதைப் பார்க்கும் மழவர்கள் ’இவன் கையில் வைத்திருப்பது பொன்னாக இருக்கலாம்’ எனக் கருதுவர்.அப்போதே அவனைக்கொன்றும் வீழ்த்துவர். இறந்துகிடக்கும் அப்பார்ப்பானுடைய ஆடைகள் கந்தலாக இருப்பதைக் கண்டதும் அம் மழவர்கள், வெறுப்பில் தம் கைகளை நொடித்தபடியே செல்வர்’
(அகநாநூறு 337).

குறுந்தொகைப் பாடல் ஒன்று பார்ப்பாரை வம்புக்கு இழுக்கிறது.

‘பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருங்க மரத்தின் தடியில் கமண்டலத்தை உடைய, நோன்பிருந்து உண்ணும் வழக்கமுடைய பார்ப்பன மகனே, உங்களுடைய எழுத்து வடிவம் இல்லாத கல்வியாகிய வேதத்தில் (’எழுதாக் கற்பு’) உள்ள இனிய உரைகளில், பிரிந்து சென்ற தலைவன் தலைவியை மீண்டும் புணரச் செய்யும் மருந்து உள்ளதா?’
(குறுந்தொகை 156)

பார்ப்பார் எனப்பட்டோர் தூது செல்வதற்கும் அதற்கேற்ற நிமித்தம் பார்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டனர் என்பவற்றை இப்பாடல்கள் விளக்குகின்றன.

மேலும் அவர்களைப் பிற சமூகத்தினர் இழிவாக நடத்தியமையும் இப்பாடல்களிலிருந்து புலனாகின்றன.

குறிப்பாக, குறுந்தொகைப் பாடல், வேதத்தைக் கேலி செய்கிறது என்றே கொள்ளலாம்.

தமிழ் மொழி தொன்மை இலக்கணங்களுடன் செம்மாந்து இருக்கும்போது, பார்ப்பாரின் வேதங்கள் எழுத்து வடிவம் கூட இல்லாமல் வெறும் வாய்வழியாகவே வேதங்கள் பாடி பரப்பபட்டதை அப்பாடல் குத்திக் காட்டுகிறது.

மேலும், வேதங்களின் அடிக் கருத்தியல் மறுபிறப்புக் கொள்கையைக் கொண்டவை. இப்பிறப்பில் இன்பம் இல்லை என்பவை. அக வாழ்க்கையை எதிர்த்தவை. ஆதலால்தான், ’பார்ப்பான் மகனே... உன் வேதம் புணர்ச்சிக்கு உதவுமா?’ எனக் கேட்கிறார் புலவர்.

இப்பாடல்களில் குறிப்பிடப்படும் பார்ப்பார் அனைவரும் ஆரியர் அல்லர்.

குறுந்தொகைப் பாடலில் வரும் ’பார்ப்பான் மகன்’ மட்டும் ஆரிய பிராமணன் எனத் தெரிகிறது.

நான்கு வேதங்களை முன்னிறுத்தல், வேள்விகள் நடத்தி ஆரியக் கடவுள் கோட்பாட்டைத் தமிழ் அரசரிடம் பரப்புதல், நோன்பு இருத்தல், நிமித்தம் என்ற பெயரில் சோதிடக் கருத்துகளை அதிகரித்தல், இல்லறத்தை வெறுக்கச் செய்து மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தல் ஆகியவை ஆரியர் மேற்கொண்ட திட்டமிட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளாகும்.

இப் படையெடுப்பில் தமிழ்ப் பார்ப்பாரும் அந்தணரும் நேரிடையாகப் பாதிக்கப்பட்டனர். அரச உருவாக்கம் ஆரியரது பண்பாட்டுப் படையெடுப்பை விரைவுபடுத்தியது.

ஆகவே, பார்ப்பார் எனும் சாதி முற்றும் முழுதாக ஆரிய இறக்குமதி அல்ல. அதேவேளை, பார்ப்பார்கள் வானியல் அறிவாளர் குலத்தினராக இருந்து ஆரியப் பார்ப்பனர் வருகையினால் முக்கியத்துவம் இழந்து சிதைந்தவர் எனலாம்.

குறிப்பாக, அந்தணர் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டது, தமிழ் மெய்யறிவாளர்களைத் தானே தவிர, ஆரிய பிராமணர்களை அல்ல.

தொல்காப்பியர், தமிழ்ச் சமூகத்தின் பிரிவுகளில் ஆரிய பிராமணர்களைக் குறிப்பிடக் கூட இல்லை.

ஆனால், மிகத் தவறான புரிதல்களால், திராவிடக் கோட்பாட்டாளர்கள், ‘தொல்காப்பியரே ஓர் ஆரிய பிராமணர்தான்’ என்று பரப்பிவிட்டார்கள்.

மூலமான சான்றுகளைப் படித்து, மெய்யான தமிழர் வரலாற்றை அறிய வேண்டியது தமிழர் கடமை...

பட்டனை அழுத்தினால், வலி இல்லாமல், தற்கொலை செய்யும் இயந்திரத்தை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பிரபலமான கருணைக்கொலை ஆர்வலர் டாக்டர் பிலிப் நிட்ச்கே கண்டு பிடித்துள்ளார்...


இருளர் குலச் செங்கொடி...


ஆதித் தெலுங்கரான சக்கிலியர் (அருந்ததியர்) திடீரென்று ஐந்தாண்டுகளுக்கு முன் பறையர் குலத் தமிழச்சியும் உலகின் முதல் தற்கொலைப் போராளியுமான குயிலி தங்கள் சாதி என்றனர்.

பிறகு பறையர் குலத் தமிழரும் தமிழ்தேசியவாதியும் ஆன பெருஞ்சித்திரனார் ஒரு சக்கிலியர் என்று கதையளந்தனர்.

தற்போது தங்கை செங்கொடியை சொந்தம் கொண்டாடுகின்றனர்.

இது எல்லாமே 2009 க்குப் பிறகு திடீரென்று அவர்கள் கண்டு பிடித்தது ஆகும்.

சான்று கேட்டால் தருவதில்லை.

ஆனால் தங்கையின் வாழ்க்கையை 'இப்படிக்கு தோழர் செங்கொடி' என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்துத் தந்த இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர் செங்கொடி (தமிழினப் பழங்குடியினரான) இருளர் என்று கூறுகிறார்.

நன்றி: 22.08.2012 ஆனந்த விகடன் இதழ்...

கடைகளில் கோழி உணவுகளை வாங்கி உண்ணாதீர்கள்...


ஒரு லோடு கோழி ஏற்றினால் தொலைதூரம் சென்று லோடு இறக்கும் போது 5 to 10% கோழிகள் இறந்து விடும்.

அவ்வாறு இறந்த கெட்டுப்போன கோழிகளை மொத்தமாக எடுத்துச்சென்று மறைவான எந்தவிதமான சுகாதாரமற்ற பகுதியில் வைத்து மேல் தோலை மட்டும் அரைகுறையாக உறித்துவிட்டு தலை, கால், குடல் கழிவுகளை அகற்றாமல் அப்படியே மிஷினில் மாமிச செதில்களாக அரைத்து அணைத்து பேக்கரிகள், தியேட்டர் கேண்டீன்கள் ஆகிய இடங்களுக்கு அவர்களது தேவைக்கேற்ப சப்ளை செய்கிறார்கள்.

அவர்கள் அதை வாங்கி சிக்கன் பப்ஸ், சிக்கன் கட்லெட், சிக்கன் ரோல், என்று தயார்செய்து விற்கிறார்கள்.

எனவே இதுபோன்ற உணவுகளை குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பதையோ, நீங்களோ சாப்பிடுவதை தவிர்க்கவும்..

கடலுக்கடியில் என்ன நடக்கின்றது என்பது புரியாத புதிரே...


இந்தியா வின் ஏழைகளின் சொத்து விபரம்...


60 வருஷம் ஆண்ட காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு - 758 கோடியே 74 லட்சம்..

8 வருஷம் மட்டுமே ஆண்ட BJP  கட்சியின் சொத்து மதிப்பு - 895 கோடியே 88 லட்சம்..

2004-2005 நிதி ஆண்டில் 123 கோடியாக இருந்த பாஜகவின் சொத்து மதிப்பு, 2015-2016நிதி ஆண்டில் 895 கோடியாக 88 லட்சமாக உயர்ந்துள்ளது.

2016 க்கு பிறகு 700% பிஜேபி கட்சின் சொத்து உயர்ந்து இருக்கிறது....

ஒரே வருடத்தில் அமித்ஷா மகனுக்கு16000% லாபம்....

இவர்கள்தான் ஊழக்கு எதிரானவர்கள்...
என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள்...

விசிக எனும் சாதி கட்சி...


தன் சாதி வியாபார அரசியலை மீண்டும் திமுக விற்காக தொடங்கியுள்ளது...

திருவடி தீட்சை என்றால் என்ன?


எட்டு (8), இரண்டு (2) எதை குறிக்கிறது?

நமது வலது கண் 8 என்றும், இடது கண் 2 ஆகவும் குறிப்பிடபடுகிறது.

வலது கண் – அ , இடது கண் – ௨
வலது கண் – சூரியன் , இடது கண் -சந்திரன்.
வலது கண் – சிவம் , இடது கண் – சக்தி
வலது கண் – சக்கரம் , இடது கண் – சங்கு

திருவடி தீட்சை என்றால் என்ன?

தீட்சை = தீ + அட்சை. அட்சம் என்றால் கண். அதாவது கண்களில் உள்ள தீயை (ஒளியை) ஞான சற்குரு தன் கண்களின் ஒளியினால் தூண்டுவதே தீட்சை.

தீட்சையின் மூலம் தன் கண்ணில் – கண் மணியில் உணர்வு பெறுகிறான் சீடன்.

நம் கண்மணியை கிருஷ்ண மணி என்பர். தகுந்த ஞான சற்குருவின் மூலம் நம் கிருஷ்ண மணியில் உணர்வு பெறுவதே கிருஷ்ண உணர்வு. இந்த உணர்வை பெறுவதே தீட்சை. இதை தான் சித்தர்கள் “தொடாமல் தொடுவது” , “உணர்வால் உணர வைப்பது” என்றனர்.

நம் ஸ்துல உடலில் உள்ள சூட்சும சரிரம் தீட்சையின் மூலம் பிறக்கிறது. இதனால் தீட்சை கொடுத்த ஞான சற்குருவே தாய் தந்தை ஆகிறார்.

“அக்னியின் மூலம் ஞானஸ்தானம்” என்று பைபிள் இதையே கூறிப்பிடுகிறது. இயேசு நாதர் அக்னியால் வழங்கியே ஞானஸ்தானம் இதுவே.

தீட்சை பெற்றவனே துவிசன் ஆகிறான். துவிசன் என்றால் மறுபடி பிறந்தவன் என்று பொருள். இதையே பைபிள் “மறுபடி பிறவாதவன் பரலோக சம்ராட்சியத்தில் பிரவேசிக்க மாட்டான் ” என்றும் , அகத்திய மகரிஷி “மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை” என்று கூறுவதும் இதையே.

மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.

தீட்சை பெற என்ன தகுதி வேண்டும்?

தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம். தீட்சை பெற முக்கிய தகுதி...

1 . சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும்.

2 . போதை , புகை போன்ற பழக்கங்கள் அறவே விடு நீங்க வேண்டும்.

3 . ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.
சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மா பாதகங்கள் செய்யாதவராக இருத்தல் வேண்டும்.இப்பழக்கங்கள் இருப்பின் உடனடியாக இவைகளை கைவிட்டு , இனி இவைகளை செய்வதில்லை என சங்கல்பம் செய்து கொண்டு பின் தீட்சை பெறலாம்.

தவம் செய்வது எப்படி?

தவம் என்றால் மந்திர ஜபம் அல்ல. தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்பதோ அல்ல. தவம் என்றால் பிரணாயாமமோ அல்ல. தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல.

கண்மூடி செய்யும் எந்த செயலும் தவம் ஆகாது. கண்களை திறந்து தான் “விழி திறந்து” தான் தவம் செய்ய வேண்டும்.

இறைவன் திருவடியில்(நம் கண்ணில்- கண் மணியில் – கண்மணி ஒளியில்) மனதினை நிறுத்துவதே தவமாகும். சும்மா இரு என்பதன் அர்த்தம் இதுவே. அதாவது நம் மனதை திருவடியில் வைத்து இருப்பதே. குரு தீட்சை பெற்று நம் கண்ணில் உணர்வு பெற்று அதை நினைத்து நினைத்து உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து திழைத்து சும்மா இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும்.

இங்நனம் தவம் தொடர்ந்தால் பலவித அனுபவங்கள் நாம் பெறலாம். நமது வள்ளல் பெருமான் ஞான சரியையில் கூறியபடி நாம் இவ்வாறு தவம் செய்தால் பெறலாம் நல்ல வரமே. நம் வினைகள் எல்லாம் எரிந்து விடும். பெறலாம் மரணமிலா பெருவாழ்வே. பிறவாப்பெருநிலை. அருட்பெரும் ஜோதி இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரொளியோடு நாமும் ஒளியாகி இணையலாம். பேரின்பம் பெறலாம்...

இவர்களை திட்டலாமா? இவர்களுக்கு வாக்களித்தவர்களை திட்டலாமா? என்று நீங்களே முடிவு பன்னிக்குங்க....


உலகின் திகில் கிளப்பும் தீவு...


ராஸ் தீவு (Ross Island)...

அண்டார்டிக் பிரதேசத்தில் இருக்கும் ஒரு தீவு. 1841-ல் ஜேம்ஸ் ராஸ் என்ற பிரிட்டிஷ் ஊர்சுற்றி இந்த தீவைக் கண்டு பிடித்தார். அவரின் பெயரே இதற்கு சூட்டப்பட்டது.

எரிபஸ், டெரர் என இரு எரிமலைகள் இங்கு உள்ளது. ராஸ் அமைத்த கூடாரங்கள் இன்னும் இந்த பகுதியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அண்டார்டிக் பகுதியில் ஆராய்ச்சியை மேற்கொள்ள அடித்தளமிட்டது இந்த தீவு தான். 1979-ல் ஒரு மிகப்பெரிய விமான விபத்து ஏற்பட்டு 200க்கும் மேற்பட்டவர்கள் இங்கு இறந்ததாக சொல்லப்படுகிறது.

இந்தத் தீவின் ஒரு சில பகுதிகளுக்கு இன்று வரை யாருமே சென்றதில்லை...

எலும்புத் தேய்மானத்தைத் தடுக்க இயற்கை வைத்தியம்...


வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.

எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.

கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது.

இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும். மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது.

எலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.

எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.

மேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.

இதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும்.

எலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.

பாதுகாப்பு முறை: சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்.

உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.

எனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும்.

ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

ரெசிபி...

பொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.

பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.

ஓட்ஸ் குருமா: பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2 வெங்காயம், தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

பிரட் தோசை: தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.

பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.

சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்...

அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.

அதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.

அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.

மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.

ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.

ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.

உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்...

பாஜக மோடி சொல்வது எல்லாம் பொய்...


44 ஆயிரம் கோடி நட்டத்தில் கொக்கக்கோலா.. இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்து இருக்கிறது கொக்கக்கோலா...


கொக்ககோலா கம்பெனி இந்தியாவில் இந்திராகாந்தி காலத்தில் தடை செய்யபப்ட்டது. கொக்கக்கோலா இந்திய குளிர்பானங்களை எல்லாம் காலி செய்து விட்டு மொத்த இந்தியாவின் மொத்த குளிர்பான சந்தையைப் பிடித்துக் கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய குளிர்பான முதலாளிகள் இந்திராவிடம் முறையிட இந்திரா காந்தி கொக்கக்கோலாவுக்குத் தடை விதித்தார். அன்று வெளியேறிய கொக்கக்கோலா அதன்பிறகு காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் காலத்தில் உலகமயமாக்கம் என்று போர்வையில் இந்தியாவினுள் நுழைந்தது.

இந்தமுறையும் கொக்கக்கோலா இந்திய குளிர்பான சந்தையை தன வசப்படுத்திக் கொண்டது. இந்திய குளிர்பான நிறுவனங்களை  எல்லாம் அழித்துப்போட்டது. மட்டுமல்லாமல் இந்திய குளிர்பான நிறுவங்களை எல்லாம் அது விலைக்கு வாங்கி கொண்டது.

1886  ஆம் ஆண்டு ஜான் பெம்பர்ட்டன் என்னும் ஒரு மருந்தாளுநரால் உருவாக்கப்பட்ட  கொக்கக்கோலா தனிப்பட்ட ரகசியமான கலவையை கொண்டு தயாரிக்கப்படுவதாய் சொல்லப்பட்டது. அதன் தயாரிப்பும், அதன் கலவை ரகசியமும் அந்த நிறுவனத்தின் மிக முக்கியமான நாலு பேருக்கு மட்டுமே தெரியும் என்றும், கொக்கக்கோலா தயாரிப்பு ரகசியத்தை எப்படியாவது தெரிந்து கொள்ளவேண்டும் என்று கொக்கக்கோலாவின் எதிரி நிறுவனங்கள் பலகோடி ரூபாய் செலவு செய்து  அந்த  நாலுபேரையும் தேடிப்பிடித்து கடத்தி செல்ல நினைத்தார்கள். 

ஆனால் அந்த நாலுபேரும்  ஒரே இடத்தில இருக்க மாட்டார்கள் என்றும், வெவ்வேறு நாடுகளில் வெவேறு விமானங்களில் இருபத்தி நான்கு மணி நேரமும் பறந்துகொண்டே இருப்பார்கள் என்றும் பல கதைகள்  நான் சிறுவயதில் கேட்டிருக்கிறேன். கொக்கக்கோலா தயாரிப்பு ரகசியம் இன்றுவரையில் மர்மமாகவே இருக்கிறது. அதுபோன்ற ஒரு பானத்தை இன்னொரு நிறுவனத்தால் தயாரிக்க முடியவில்லை என்பதாலேயே கொக்கக்கோலா நிறுவனம் உலகின் முதல் குளிர்பான நிறுவனமாக இருக்கிறது என்றும்  சொல்கிறார்கள்.

நான் கொக்கக் கோலாவை குடித்தவரையில் அதில் எந்த ரகசியமும் இருப்பதாக தெரியவில்லை. காப்பிக்கொட்டை தண்ணீரில் வெறுமனே  சோடா அடித்து  தருவதாகவே அதன் சுவை இருக்கிறதே தவிர பிரமாதமாக எதுவும் இல்லை.

அப்பேர்ப்பட்ட கொக்கக்கோலா நிறுவனம் இப்போது இந்தியாவை விட்டு வெளியேறுவதாக சொல்கிறது. அது இருப்பதால் எந்த லாபமும் நமக்கு இல்லை, நாட்டம் மட்டும் தான். என்பதால் அது வெளியேறுவதே நல்லது.

நம் தேசத்து தண்ணீரை எடுத்து அதில் காப்பிக்கொட்டை சாயத்தைக்  கரைத்து நமக்கே அநியாய விலைக்கு விற்கிறான் என்பதை விட என்ன இருக்கிறது. எண்பது பைசா தேறாத பானத்தை முப்பது ரூபாய்க்கு விற்கிறான் என்றால் அவன் வெளியேறுவது தானே நல்லது. சீக்கிரம் போய்த் தொலைடா ஒங்கக்கா... மவனே...

பாஜக மோடி கலாட்டா..


நாடே திட்டுதேன்னு பார்த்தா சொந்த கட்சி காரங்களும் திட்டுறானுங்க...

பின் தங்கிய மற்றும் நடுத்தர பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியாவில் 10 ல் ஒரு மாத்திரை போலியாக தயாரக்கப்படுகின்றது - உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவல்...


இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் 10 ல் ஒரு மருந்து நோயை குணப்படுத்தாது என்பதோடு உடலுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக WHO டிரெக்டர் ஜெனரல் Tedros Adhanom Ghebreyesus கூறியுள்ளார்...

பாஜக மோடியும் ஏமாற்று வாக்குறுதிகளும்...


பறிபோன செங்கோட்டை காடு...


மொழிவாரி மாநிலங்கள் மாற்றியமைக்கப்பட்ட போது இரு மாநிலங்களுக்கு இடையே இயற்கையான எல்லையாக அமைந்துள்ள காடுகளைப் பங்கிடுவதில் சிக்கல் வந்தது.

அப்போது வகுத்த விதிப்படி ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 30% காடுகளாக இருக்க வேண்டும்.

ஆனால் இதிலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது.

தமிழகத்தின் மேற்கும் வடக்கும் மலைகளாலும் காடுகளாலும் சூழப்பட்டு இருக்கிறது.

ஆனால் இந்த இயற்கையான எல்லையைத் தாண்டி மறுபக்கமும் தமிழர் வாழ்ந்தனர்.

அவை பறிபோனதுடன் காடுகளையும் கூட தமிழகத்துக்கு தராமல் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

இதில் கேரளா அளவுக்கதிகமான காடுகளை எடுத்துக் கொண்டது.

(அப்போது கேரளாவில் பாதிக்கு மேல் காடாக இருக்க, தமிழகத்தில் கால்பங்கு கூட காடு இல்லை).

பறிகொடுத்த வரலாற்றில் சிறந்த எடுத்துக்காட்டு செங்கோட்டை தாலுகாவில் இருந்த (ஆரியங்காவு மற்றும் குளத்துப்புழா இருக்கும்) செங்குறிஞ்சி, பொன்முடி காடுகள்  பறிபோனது ஆகும்.

1931 மக்கட்தொகை கணக்கெடுப்பு செங்கோட்டை தாலுகா 100% தமிழர் வாழ்ந்த பகுதி்.

அன்றைய மலையாள இனவெறி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த தமிழர் பகுதிகளை மீட்க நேசமணி அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக அவர் கேட்டதில் பாதி கிடைத்தது.

இதில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை அடங்கும்.

மீட்ட பகுதிகளை ஒரே மாவட்டமாக்கும் போது நேசமணியார் செங்கோட்டையை கன்னியாகுமரியின் ஒரு பகுதியாக வைத்திருப்பது மக்களுக்கு இடைஞ்சல் என்று அதை திருநெல்வேலிக்கே கொடுத்தார்.

இழந்த செங்கோட்டை வனப்பகுதி 1950களிலேயே ஆண்டுக்கு 5கோடி வருமானம் கொடுத்த வளமான பகுதியாகும்.

இதை நாம் இழந்தோம்.

வரைபடம்: அன்றைய செங்கோட்டை தாலுகா மீது இன்றைய எல்லை வரையப்பட்டுள்ளது...

இனி ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டமாட்டேன் என 50 முறை எழுதவைத்து அபராதமின்றி அனுப்பிய கேரள காவல்துறை...


மராட்டிய கன்னட சிவாஜிராவ் என்கிற ரஜினி காந்த்... தமிழர்களுக்கு என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்கு...


சிவாஜி படத்துல தமிழ்நாட்டுக்கு காலேஜ், ஆஸ்பத்திரி, ரோடு எல்லாம் போட்டாச்சு..

அருணாசலத்துல 30 நாள்ல 30 கோடிய தமிழக மக்களுக்கு கொடுத்தாச்சு..

படையப்பால தமிழக மக்களுக்கு கருணை வள்ளலா வாழ்ந்தாச்சு..

பாபால மந்திரம் மூலம் தமிழ் மக்களுக்கு பணி ஆத்தியாச்சு..

அதுக்கப்புறமும் என் தலைவனை நோக்கி தமிழ்நாட்டுக்கு என்ன செய்ஞ்சீங்க? என்ன செய்ஞ்சீங்கன்னு  கேக்குறீங்களேடா. நன்றி கெட்ட உலகமடா இது...