19/12/2017

மன ஒருமைப்பாடு வேண்டுமா..?


நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும் படாமலும் சுண்டு விரலை நேராகப் பிடித்தால் மனதில் ஒரு வகை உணர்வு தோன்றும்.

அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மன ஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும்.

அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா?

இதற்குச் சந்தனம் சரியான மருந்து. 

குங்குமம் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும்.

மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.

ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு.

நம் கபாலத்தில் உள்ள சிந்தனை நரம்புகளின் முடிச்சு இரு புருவங்களுக்கு இடையில் உள்ளது.

மனிதன் அதிகமாக சிந்திக்கும் போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி தலைபாரம், தலைச்சுற்றல் ஏற்படும். மன உளைச்சல் ஏற்பட்டுத் தன் நிலை மறக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி பல விரும்பத் தாகத விளைவுகள் ஏற்படும்.

ஆகவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.

சந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு.

எனவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சந்தனம் பூசி, சந்தனம் காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம்.

இவற்றைத் தரித்தால் புத்துணர்வும், புதுத் தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன.

மனிதனின் உடற்கூறுக்கு உகந்த முறைகளைத்தான் நாம் இறை வழிபாடுகள் மூலம் அடைகிறோம்...

ஆர்.கே. நகர் தேர்தல் கலாட்டா...


நாயர்களின் பூர்வீகம் கேரளம் அல்ல... மாறாக நேபாளம் ஆகும்...


உஸ்பெக், கசக் மற்றும் ஆப்கான் பகுதிகளைக் கொண்டு அமைந்திருந்த பகுதியே சித்தியா..

இந்த சித்தியாவில் இருந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பலவித நகர்வுகள் இந்திய தீபகற்ப பகுதிகளை குறிவைத்து நேர்ந்தன..

இன்றைய வடுகர்கள் இப்பகுதிகளைச் சேர்ந்தோர் ஆவர்..

இப்படியான வடுகர்களின் ஒரு பிரிவினர் நேபாளத்தில் குடியேறினர், இவர்களே நேவர் என்ற நாயர்கள் ஆவர்..

நேபாளத்தில் மங்கோலியர்களின் கை ஓங்கியதின் விளைவாக அங்கிருந்து தப்பிய நாயர்கள் சாதவாகனர்களின் படைகளில் இடம்பெற்று பின்னர் அவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் தொண்டை மண்டலம் அடைந்தனர்..

அங்கு பல்லவர்களின் படையணியில் வலிமையாக இருந்த படையாட்சி.. நாயர்களை எதிர்த்து விரட்டியதால் அவர்கள் மேலை சாளுக்கியத்தின் தென் பகுதியில் குடியேறினர்..

கேரளத்தில் (சேர நாட்டில்) வில்லவர் வலிமை குன்றிய நேரத்தில் இந்த நாயர்கள் பெரும்தாக்குதலில் இறங்கி சேர நாட்டினைக் கைப்பற்றினர்.

இவர்கள் பல்வேறு பகுதிகளில் மாறி மாறி வாழ்ந்தமையால் இவர்களுக்கென்று பொது மொழி இல்லாமற்போனது.

பாகதம், தெலுங்கு, துளு, கன்னடம் எனத் துவங்கி இறுதியில் சேரநாட்டின் தமிழ் மொழியைக் கைப்பற்றி அதனை மணிபிரவாளம் ஆக்கி இன்று சேர நாட்டினை ஆண்டும் வருகின்றனர்.

இவர்கள் அடுத்துக் கெடுக்கும் நச்சினத்தார் ஆவர்....

இந்திய - தமிழக அரசுகள்... தமிழர்களை அழிப்பதற்காக மட்டுமே உள்ளது...


யாழ் இசை...


முத்தமிழ் என்றால் இயல், இசை, நாடகம் ஆகும்.

தமிழர்கள் இசையோடு ஒன்றியவர்கள் என்றால் அது மிகையாகாது. இசையில் தனி முத்திரைப்பதித்தவர்கள் தமிழர்கள். தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் இசையைக் கண்டவர்கள் தமிழர்கள்.

பல இசைக்கருவிகளையும் தோற்று வித்தனர். இன்று வழக்கில் இல்லாத பல வகையான இசைக்கருவிகள் இலக்கியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன்.

அவ்வகையில் தந்தி இசைக்கருவியான யாழ் முக்கியமான இடத்தை வகிக்கின்றது.

மரத்தினால் செய்யப்பட்டு நரம்புகள் அல்லது கம்பிகள் பூட்டப்பட்டவை நரம்புக் கருவிகளாகும். அவை யாழ், வீணை, தம்புரா, கோட்டுவாத்தியம், பிடில் (வயலின்) முதலியனவாம்.

இதில் யாழ் மிகவும் பழமையான இசைக் கருவியாகும்.

இவ்விசைக்கருவியை "fairy tale" கார்டோன்களிலும் பழைய ஆங்கில படங்களிலும் அதிகம் காணலாம்.

வழக்கத்தில் இவ்விசைக்கருவியைக் கண்டிராததால் அது மேற்கத்திய இசைக்கருவி என்று பலர் கருதுகின்றனர்.

யாழ் தமிழன் கண்ட இசைக்கருவி என்ற உண்மை நம்மில் பலருக்குத் தெரியாமலே உள்ளது.

பண்டைய நாகரிகங்கள் எல்லாவற்றிலும் யாழ் என்ற இசைக்கருவி பயன்பாட்டில் இருந்துள்ளது. கிரேக்க பாரம்பரியத்தில் இதைக் காணலாம். ஆங்கிலத்தில் யாழ் இசைக்கருவியை ஹார்ப் (harp) என்று அழைப்பர். இன்னும் அவர்களிடையே நவீன யாழாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் தமிழர்கள் மறந்துவிட்ட இசைக்கருவியாக யாழ் திகழ்கின்றது. 

இன்று இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை முதன்மையிடம் வகிக்கிறது.

தமிழர் கண்டு வாசித்த முதல் நரம்பு இசைச்கருவி யாழ் ஆகும்.

நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்கு யாழ் ஒர் அடிப்படைக் காரணமாகும்.

தமிழுக்கென்று சிறப்பான எழுத்து “ழ்”. “யாழ்” என்ற சொல்லில் ”ழ்” தாங்கி வருவதிலேயே தெரிகின்றது யாழ் தமிழுக்குரிய இசைக்கருவி என்று. 

யாழின் வகைகள் பல...

அவை பேரியாழ் (21 நரம்புகளை உடையது)  மகரயாழ் (17 நரம்புகளை உடையது)  சகோடயாழ் (16 நரம்புகளை உடையது) செங்கோட்டியாழ் (7 நரம்புகளை உடையது) இவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், சீரியாழ், மருத்துவயாழ், ஆதியாழ் எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.

மேலும், யாழ் நூலில் கூறப்படும் யாழ்கள், வில் யாழ் , சீறி யாழ், செங்கோட்டியாழ், பேரி யாழ், சகோட யாழ், மகர வேல்கொடி யாழ் , மகர யாழ் / காமன் கொடி யாழ் மற்றும், மகர யாழ் / வர்ணர் ஊர்தி யாழ்.

வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். அந்த வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் யாழ் சிந்து சமவெளி நாகரீகத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

தொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக் குறிக்கும். இது மிடற்றிசை அதாவது குரலிசை, நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை) ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும். இந்த பண்வகைகளை ‘யாழின் பகுதி’ எனவும் இசைநூலை ‘நரம்பின் மறை’ எனவும் தொல்காப்பியர் குறித்துள்ளார். பண்டைக்காலத்தில், தந்தி கருவியான யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன என அறியலாம்.

மேலும், அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை. சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பு, பல்வகை யாழ்கள் மற்றும் யாழின் அமைப்புகள் தொடர்பான குறிப்புகள் பல இருக்கின்றன.

சிலப்பதிகரம் தமிழிசையைப் பற்றி தெளிவாக விளக்கும் தமிழிசை நூலாகத் திகழ்கிறது. சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையில் யாழாசிரியனின் அமைதியும், கானல் வரி மற்றும் வேனிற் காதையில், யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எங்கனம் இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

சீவக சிந்தாமணி எனும் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இலக்கிய நூலிலும் யாழ் பற்றி பேசப்பட்டிருக்கிறது. காந்தர்வதத்தை என்னும் இசையில் தேர்ந்த பெண்ணுக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், யாழுக்கு நேரக்கூடிய குற்றங்கள், யாழுடன் சேர்ந்து பாடுவதற்கான இலக்கணம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

பருந்து பறக்கும் பொழுது நிழல் அதனைத் தொடர்வது போன்று மிடற்றிசையும் , யாழிசையும் இணைந்து இருத்தல் வேண்டும் என்றும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

திருமுறையாசிரியர்களின் பதிகங்களில் யாழ் இறையாடலுக்குப் பயன்பட்ட இசைக்கருவியெனப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். திருஞான சம்பந்தர் இயற்றிய தேவாரப்பதிகங்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அழகாக யாழில் வாசித்திருக்கின்றார். இவர் கையில் இருந்தது 14 தந்திகளைக் கொண்ட சகோட யாழ். இதுப் போன்று பக்தி இலக்கியங்களிலும் யாழின் பயன்பாடு அதிகமாகவே காணப்படுகின்றன.

மகர யாழ் 17 அல்லது 19 தந்திகளைக் கொண்டது. இது மகர்மீனின் உருவம் உடையதாகையால் இப்பெயர் பெற்றதாம். அழகிய இந்த யாழ் யவனத் தச்சர்களால் செய்யப்பெற்றது என்று உதயன காவியம் உரைக்கின்றது.

பொருநராற்றுப் படையில் யாழ் பற்றிய வர்ணனை ஒன்று காணப்படுகிறது. அதி அற்புதமான வர்ணனையாகவும் கருதப்படுகின்றது. ஒப்பனைச் செய்யப்பட்ட மணமகளின் அழகிய தோற்றம் போலக் காட்சியளிக்கிறது யாழ் என்கிறார் பொருநராற்றுப் படை இயற்றிய புலவர்.

இத்தகைய யாழை மீட்டி பாணர்கள் இசையைப் பொழியும் போது, அதன் இசையில் மயங்காதவர்கள் எவரும் இல்லை என்கிறார். வழிப்பறிக் கொள்ளையர்கள் கூட இந்த இசையைக் கேட்டதும், தங்களது கொலை, கொள்ளை செய்யும் எண்ணத்தைக் கைவிட்டு விடுவார்களாம்.

தங்களது கையில் மறைத்து வைத்துள்ள கொடிய கொலைக் கருவிகளைக்கூட இசையில் மயங்கிக் கீழே போட்டு விடுவார்கள் என்கிறார் புலவர்
கல்லாடம் என்னும் சைவ நூல் கல்லாடர் என்பவரால் இயற்றப்பட்டது. ஒன்பதாம் திருமுறைகளில் ஒன்றான இந்த நூல் கி.பி. 11-ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய கல்லாடம் அகப்பொருள் நூலாகும்.

கல்லாடத்தில் நாரதப்பேரியாழ், தும்புருயாழ், கீசகயாழ், தேவயாழ் என்று நான்கு வகை யாழ்கள் பற்றிய செய்திகள் உள. நாரதப் பேரியாழ் 1000 நரம்புகளைக் கொண்டது. தும்புருயாழ் 9 நரம்புகளையும், கீசக யாழ் 100 நரம்புகளையும் கொண்டுள்ளது என்கிறது.

மேலும், சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம், திருமங்கலம் கோயில்களிலும், பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும், யாழ் குறித்தான பல சிற்பங்களைப் பார்க்கலாம். (இந்த சிற்பங்களின் புகைப்படங்கள் இணையத்தில் காணலாம்)
கொங்குவேளிர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டது பெருங்கதை என்ற காப்பியம். இதில் யாழ், வீணை, குழல், வளை, வயிர் ஆகிய ஐந்து பண்ணிசைக் கருவிகளாகும். பறை, முழவு, முரசு, தண்ணுமை, தடாரி, குடமுழா, பாண்டில் ஆகிய ஏழு தாளக் கருவிகளும் மனிதக் குரலும் இசையெழு தளங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. (தமிழர் இசை பக்கம். 263).

யாழ்நூல், நாரதகீதக்கேள்வி ஆகிய இசை நூல்கள் இருந்தன என்று கூறப்படுகிறது. ‘கேள்வி’ என்ற சொல் யாழ் கருவியையும், இசை நூலையும் குறிக்கும். இசைப்பயிற்சி பெறுவோர் இத்தகைய நூற்களைக் கற்றுத்தேற வேண்டும் என்கிறது. யாழும் பாடலும் வேறுபாடின்றி ஒத்து இயங்குதல் வேண்டும். பண்ணிசை விதிகளை நன்கு அறிந்த குற்றமற்ற கேள்வியறிவு உடையவர்களே சிறந்த இசை வல்லுநர் ஆவார் என்கிறது பெருங்கதை.

யாழினை இசைப்பதற்கென்றே 'பாணர்' என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது.

ஈழத்தவரான சுவாமி விபுலாநந்தர் 1947 இல் ”யாழ் நூல்” என்னும் தமது இசைத் தமிழ் நூலில் யாழைப் பற்றி பல விரிவான ஆய்வுகளைத் தொகுத்துள்ளார்.

யாழ் தமிழர்களின் வாழ்வில் ஒன்றி இருந்ததை இதில் காணலாம். யாழ் மட்டுமல்ல இன்னும் பல தமிழன் கண்ட தமிழ் இசைக்கருவிகள் இலக்கியங்களிலும் புராணங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. மீட்க வாய்பில்லை என்றாலும் பரவாயில்லை அதைப் பற்றி அறிந்து கொள்ள் முற்படுவோமே. 

திரிந்து புதைந்த நம் தமிழ் இசையை மீண்டும் தோண்டுவோம். தோண்டி மீட்போம்...

உண்மை வெற்றி யாருக்கு.. சரியும் பாஜக கோட்டை...


இலுமினாட்டியின் தொடக்க வரலாறு...


இலுமினாட்டி (லத்தின் வார்த்தையான இலுமினட்டஸ் இன் பன்மை, தெளிவூட்டுதல் என்று பொருள்) என்பது வரலாறு சார்ந்த மற்றும் நவீனம் சார்ந்த மற்றும் உண்மையான மற்றும் கற்பனையான ஆகியவற்றைக் குறிப்பிடும் பல்வேறு குழுக்களின் பெயர் ஆகும்..

வரலாற்று ரீதியாக இது, குறிப்பாக பவரிய இல்லுமினாட்டியைக் குறிப்பிடுவதற்கு குறிக்கப்படுகிறது.

இது மே 1, 1776 அன்று கண்டறியப்பட்ட தெளிவடைந்த-கால இரகசிய சமூகம் பொதுவாக புதிய உலக வரிசையைக் (NWO) குறிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.

பல சதித்திட்ட தத்துவ அறிஞர்கள் அது போன்ற புதிய உலக வரிசையை நிறுவுவதற்கு தலைமை வகிக்கும் நிகழ்வுகளின் பின்னணியாக இருக்கும் கூர்ந்த மதியாக இலுமினாட்டி இருப்பதாக நம்புகிறார்கள்.

இலுமினாட்டி சம்பந்தமாக நாம் சொல்ல வரும் அனைத்து விடயங்களும் ஒரே இடத்தில் உங்களால் பார்க்க முடியாது.

ஏன் என்றால் இவர்கள் ஒரு மறைவான கூட்டம். இவர்களைப் பற்றி தகவல் தருபவர்கள் இலுமினாட்டிகளாக இருக்கின்றனர்.

இவர்களின் சரியான செயல்பாடுகளை நாம் கண்டு பிடிக்காது நம்மைத் திசை திருப்பவே இவர்களே இவர்களைப் பற்றி தகவல் தரக் காரணம்.

இன்னொரு சாரார் காழ்ப்புணர்வின் அடிப்படையில் விமர்சிப்பவர்கள். 90% உண்மையோடு வேண்டுமென்றே 10% பொய்யைக் கலந்து தருபவர்கள்.

இவர்களில் இலுமினாட்டிகளின் ஆதரவாளர்களும், எதிரிகளும் அடங்குவர்.

அடுத்த தரப்பினர் நடுநிலையோடு தகவலைத் தருபவர்கள். இவர்களின் தகவல்களும் 100% உண்மை அல்ல. ஆனால் தவறுதலாக ஆய்வின் அடிப்படையில் பிழை விடுபவர்கள்.

இந்த மூன்றையும் வைத்து ஓரளவு உண்மையைக் கண்டு பிடிப்பதே நாம் செய்த வேலை ஆகும். இதனால்தான் நான் சொல்லும் சில விடயங்கள் தேடியும் கிடைக்கப் பெறாது.

அதாவது 3 தரப்பாரும் ஒரே விடயத்தைச் சொன்னால் ஓரளவு அது உண்மையாக இருக்கும் என்ற முடிவுக்கு வரலாம்.

இத்தகவல்கள் அனைத்தையும் குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களோடு உரசி உரசி பெறப்படும் முடிவுகள் தான் எம்மால் இங்கு சொல்லப்பட இருக்கிறது. நீங்களும் தேடித் பார்ப்பதன் மூலம் நாம் பிழையான முடிவுகளை சொல்லும்போது அதை திருத்த உதவியாக இருக்கும்.

இப்போது விடயத்துக்கு வருவோம்..

இவர்களின் கொள்கை - (Luciferianism) கடவுள் மனிதனின் எதிரி. சைத்தான் (லூசிபர்) தான் மனிதனின் நண்பன்..

அதாவது மனிதனைப் படைத்து விட்டுக் கடவுள் அந்த மரத்தை நெருங்காதீர்கள் என்று சொன்னது மனிதனோடு உள்ள பொறாமையினால் ஆகும்.

சாகா வரம் அல்லது கடவுள் தன்மை அல்லது அதுபோன்ற ஏதோ ஒன்று அக்கனியைச் சாப்பிட்டால் மனிதனுக்குக் கிடைத்துவிடும் என்ற பொறாமைதான் கடவுளுக்கு இருந்துள்ளது.

ஆனால் சைத்தான் எப்படியாவது மனிதனுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று எண்ணியதால் தான் அவ் உண்மையை ஆதமுக்குச் சொன்னான். எனவே மனிதனுக்கு நலம் நாடுபவன் சைத்தானே.

நோக்கம், இலக்கு..

உலகத்தின் ஆட்சியை தஜ்ஜாலின் கையில் கொடுத்தல்.

அதாவது ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட லூசிபெரியனிசத்தை மீண்டும் வெற்றிகொள்ளச் செய்தல்.

செயல் திட்டம் - மறைக்கப்பட்டுள்ள இதைத்தான் விரிவாகப் பேச உள்ளோம்.

இந்த லூசிபெரியனிசக் கொள்கையானது பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்களுடைய இயக்கங்களாக வேறுபட்ட செயல்பாடுகளுடன் இயங்கி வந்துள்ளது.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இயக்கம் ஆட்சி (dominant) செய்துள்ளது.

ஒரே கால கட்டத்திலும் இக்கொள்கை வேறுபட்ட பெயர்களிலும் இயங்கி வந்துள்ளது. freemasontry என்பதை இதன் பொதுப் பெயராகக் கொள்ளலாம்.

ஈசா நபி உயர்த்தப்பட்டதில் இருந்து முஹம்மது நபியின் காலம் வரை 2 இயக்கங்கள் அதிகம் செயல்பட்டது.

1. ஜெசுவிஸ்ட். ( Jesuit - இப்போது இது வத்திக்கானை ஆட்சி செய்யும் கூட்டமாக மட்டும் சுருங்கி விட்டது.

2. ப்ரியோரி டி சியோன்(Prieuré de Sion or Priory of Sion).

இவை இரண்டும் ஈசா நபி கொண்டுவந்த உண்மையான மார்க்கத்தை அழிப்பதற்காக பாடுபட்ட இயக்கங்களாகும்.

ஈசா நபி பிறந்த மண்ணில் இருந்து சம்பந்தமே இல்லாத இத்தாலியில் உள்ள வத்திக்கானுக்கு கிறித்தவ தலைமையை மாற்றி அமைத்தது இவர்களின் வெற்றிக்கு சான்றாகும். ( இதன் முழு வரலாறு பின்னர் விளக்கப்படும்).

முகம்மது நபிக்குப் பிறகு சிலுவை யுத்தக் காலப் பகுதியில் ஆட்சி செய்த இயக்கம் தான் நைட் டேம்ப்லேர்ஸ்.

இன்றைய காலத்தில் பெயர் பெற்று விளங்கும் இயக்கம்தான் இலுமினாட்டி.

இஸ்ரவேல் சமுதாய மக்கள் வாழ்ந்த பிரதேசம் கானான், ஜெரூசலம் என்ற பெயர்களால் அழைக்கப்படும். வரலாற்று ஆசிரியர்களால் kingdom of israel என அழைக்கப்படும் பிரதேசம் இதுவே.

ஈசா நபி உலகத்தில் இருந்த காலத்தில் இன்ஜீல் பெரிய அளவு வளரவில்லை. அவர்கள் உயர்த்தப்பட்டவுடன் இன்ஜீலின் வளர்ச்சி பெருகத் தொடங்கியது. ஆனாலும் ஈசா நபியைக் கொல்ல முயன்ற யூதர்களின் கைதான் அப்பிரதேசத்தில் ஓங்கி இருந்தது.

ஈசா நபி உயர்த்தப்பட்டு 66 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெருசலத்தை ரோமர்கள் (இத்தாலியர்கள்) கைப்பற்றினர்.

இவர்கள் பல கடவுள் வழிபாடு செய்வதால் இவர்கள் pagans என அழைக்கப்பட்டனர்.

இவர்கள் யூதர்களுக்கு அதிக அளவில் அட்டூழியம் செய்தனர். குறிப்பாக ஒரு கடவுள் கொள்கையைச் சொல்லும் இன்ஜீலை உடைய யூதர்களுக்கு அதிகம் அநியாயம் செய்தனர்.

ஏன் எனில் இன்ஜீல் ரோமர்களின் மதத்தை அழிக்கும் என்று பயந்தனர்.

அநியாயம் செய்யச் செய்ய, எதிர்க்க எதிர்க்க இன்ஜீலின் வளர்ச்சி இன்னும் அதிகமாகியது.

சத்தியம் இப்படித்தான் வரலாறு நெடுகிலும் வளர்ந்தது. எந்த அளவுக்கு என்றால் 300 ஆண்டுகளில் இன்ஜீல் ரோமப் பேரரசு வரை பரவியது.

பல கடவுள் கொள்கைக்கும் ஒரு கடவுள் கொள்கைக்கும் நிலவிய இந்தப் போராட்டத்தை நிறுத்தி இன்ஜீலை அழிக்க எந்த ரோம அரசராலும் முடியவில்லை.

இந்தக் காலக் கட்டத்தில் தான் கான்ஸ்டடீன் (constantine the great ) ரோமர்களின் அரசராக வருகிறார் (கிபி 306).

இவர் ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிவிட்டார்..

இன்ஜீல் என்பது அடித்து ஒழிக்க முடியுமான மார்க்கம் அல்ல. மாறாக அணைத்து ஒழிக்க வேண்டிய மார்க்கம்.

இவர் இன்ஜீல் உடையவர்களை எந்த அளவு அணைத்தார் என்றால் அவர் கிபி 312 இல் இன்ஜீல் மார்க்கத்தை தழுவியே விட்டார். கிபி 313 இல் கிறித்தவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்குடன் மிலான் ஆணையை( Edict of Milan) ஏற்படுத்தி அவர்களுக்கு மதச்சுதந்திரம் அளித்தார்.

துருக்கியின் இன்றைய இஸ்தம்பூலை கேந்திர நகரமாக மாற்றி அதற்கு தனது பெயரான கொன்ஸ்தாந்து நோபிள் என்று பெயர் வைத்தவரும் இவர்தான்.

இந்தக் காலக் கட்டத்தில் உண்மையான இன்ஜீலோடு ஏராளமான பித்அத்களும் கலக்க ஆரம்பித்துவிட்டது.

இதன் பின்னர் இவர் ரோமர்களையும், இன்ஜீலை உடையவர்களையும் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாட ஏற்பாடு செய்தார். இதன் முதல் சந்திப்புக்குப் பெயர் council of nicea என அழைக்கப்படும்.

இதில் முதன்மையாகப் பேசப்பட்ட விடயம் தான் எமக்கிடையே ஒற்றுமை முக்கியம் என்பது. ஒற்றுமைக்காக நாம் இரண்டு தரப்பாரும் சில மார்க்க விடயங்களை விட்டுத் தரவேண்டும் என்று பேசப்பட்டது.

இதில் முக்கியமாக சொல்லப்பட்ட விடயம் இன்ஜீலில் சொல்லப்பட்ட ஓரிறைக் கொள்கை முடிந்த அளவு அஜெஸ் பண்ண வேண்டும் என்பது.

தவ்ராத்தின் (அவர்கள் மொழியில் 10 commandments ) சில பகுதிகள் நீக்கப்பட்டன. சிலை வழிபாடு புகுத்தப்பட்டது. உத்தியோகபூர்வமாக இன்ஜீல் modify பண்ணப்பட்ட கிறித்தவமாக மாற்றப்பட்டது இந்த ஒப்பந்தத்தில் தான். இதற்கு nicene creed (கிபி 325) என்று பெயர்.

இதன்போது அங்கிருந்த மிகச்சில இன்ஜீல் வேதத்தை ஓரளவு பிடிப்போடு பின்பற்றியவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

அவர்களின் வாதம் எடுபடாமல் போகவே கடைசியில் அவர்கள் வெளிநடப்பு செய்து கலப்படம் கலந்த இன்ஜீலை தனித்தனியாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். (இவர்களின் வரலாறு தனியாக பேசப்பட வேண்டியது. குறைந்த தகவலே உண்டு ).

இவ்வாறு மாற்றப்பட்டதற்கு ஆதாரமாக இன்று கூட கிறித்தவ ஆலயங்களின் கட்டடக் கலை, சிலைகள் போன்றவை யூத கலாச்சாரம் அல்லாது ரோமக் கலாச்சாரமாகக் காணப்படுகிறது. ரோமன் கத்தோலிக்கம் என்ற பெயர்கூட இதற்கு மிகப்பெரிய சான்றாகும்.

அந்த ஒப்பந்தத்தை ஒத்துக்கொண்ட இன்ஜீலை உடைய மக்களையும், ரோமர்களையும் வைத்து ரோம அரசாங்கம் கிறித்துவத்தை நிறுவியது.

இதுதான் ஈசா நபி கொண்டுவந்த இன்ஜீல் என்று உலகத்துக்கு அறிவித்தது.

இவர்களிடம் ஆட்சி இருந்ததால் உண்மையான ஓரிறைக் கொள்கையாளர்களை விட இலகுவாக தமது பிரச்சாரத்தைப் பரப்ப இலகுவாக இருந்தது.

இதுதான் அரசியல் ரீதியாக இன்ஜீல் ரோமன் கத்தோலிக்கமாக மாறிய சுருக்கமான வரலாறு...

துக்கத்துலேயும் ஒரு சின்ன சந்தோசம் வந்தாலும் விடக்கூடாது போடு குத்த....


விளக்கு வைத்தவுடன் வீடு கூட்டி குப்பை கொட்ட கூடாது ஏன் ?


அக்காலத்தில் மின்சாரம் இல்லை..

சிறு அகல்விளக்கு, வெளிச்சம் பெரியதாக தந்திருக்காது..

அச்சமயம் நாம் பயன்படுத்திய சிறு பொருட்கள்  (விலையுயர்ந்த அல்லது தேவையுள்ள சிறிய பொருட்கள்) ஏதேனும் தவறுதலாக கீழே விழுந்து கிடந்து, கூட்டிப் பெருக்கி குப்பையாக எடுக்கும் பொழுது அவற்றுடன் சேர்த்து கொட்டபடலாம்..

இதனையே பகல் நேரத்தில் செய்தால் ஒரு வேளை நம் கண்களுக்குப் புலப்படலாம்..

எனவே மாலையில் கூட்டிப் பெருக்குதல் கூடாது என சொல்லி சென்றனர்...

குஜராத் தேர்தல் தில்லு முல்லு...


தமிழக அரசின் கப்பல் போக்குவரத்து நிறுவனம் தான் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம்...


இதை தொடங்கிய நோக்கமே நிலக்கரிகளை எண்ணூர் துறைமுகத்தில் இருத்து ஏனைய கிழக்கு கடற்கரை ஒட்டிய அனல்மின் நிலையங்களுக்கு எடுத்து வருவது...

அதற்காக மூன்று கப்பல்கள் வாங்கப்பட்டது 85,86,87 அதாவது 30 வருடங்களுக்கு முன்.

ஒரு வருடம் சராசரி 2 கோடி டன் நிலக்கரி எடுத்து வரப்படுகிறது.

அதில் தமிழக அரசின் கப்பல்கள் (owned vessels) எடுத்து வருவது வெறும் 30 லட்சம் வெறும் 15% தான்..

மீது 85% சதவிகித கரியானது வாடகை கப்பலில் (chartered vessels) கொண்டு வரப்படுகிறது...

அப்படி வாடகை தொகை கப்பலுக்கு தமிழக அரசே வழங்க வேண்டும்.

சொந்தமாக வாங்கினால் வாடகை கப்பல் காரரிடம் அதிக விலைக்கு தமிழக அரசு அதிக விலைக்கு வாடகை எடுக்கும்.

அடுத்து அந்த வாடகை கப்பலில் முதலாளிகளே அமைச்சர்களாக பினாமிகளாக இருப்பர். அம்புட்டு நல்லவனுங்களா இவனுங்க..

அடுத்து இதே நிறுவனத்தில் சுற்றுலா போக்குவரத்துக்கு இரண்டு கப்பல்கள்.
ஒன்று பொதிகை அடுத்து குகன். கார்ப்ரேசன் கக்கூஸ் போன்றே இரண்டு இருக்கும்.

தன் நாட்டு மக்களுக்கு இரண்டே இரண்டு நல்ல சுற்றுலா கப்பல் வாங்க வக்கற்ற அரசியல் நிர்வாகத்தில் தான் நாம் உள்ளோம்..

அதுவும் தமிழகத்தின் கண்ணியாகுமரியில் கடற்கரையில் இருந்து திருவள்ளுவர் சிலை போக்குவரத்துக்கு... இதில் வருடம் இருபது லட்சம் மக்கள் பயணிக்கின்றனர்.

வேறு எங்குமே கிடையாது. இப்படி ஒரு தொலைநோக்குடைய அரசு.

ஒரு பக்கம் கடலை கொண்ட மாநிலத்தில் எப்படியெல்லாம் சுற்றுலா துறையை மேம்படுத்தியிருக்கலாம்.

இதற்கு தற்போதைய மந்திரி எடப்பாடி பழனிச்சாமி...

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


செம்பு குடங்களில் நீர் எதற்கு....


அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்.

சித்தர்கள் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா?

செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று அந்த நிறுவனம் அறிவித்தது.

இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்து தான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்ற தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் 'மினரல் வாட்டர்' மாதிரி அருமையாக மாறி விடுகிறதாம். செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும்.

மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள் தான். தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகளில் செம்புக்குடம்தான். இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில் தான் தண்ணிர் குடிக்கிறார்கள்.

தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம்.

தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா? வாங்க பார்க்கலாம்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும்.

அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும்.

இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும்.

தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு...

1) பாக்டீரியாக்களை கொல்லும் தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.

2) தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.

3) கீல்வாத வலியை குணப்படுத்தும் தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

4) புண்களை வேகமாக குணப்படுத்தும் புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.

5) மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.

6) செரிமானத்தை மேம்படுத்தும் வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.

7) இரத்த சோகையை எதிர்க்கும் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.

8) கர்ப்ப காலத்தின் போது: கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.

9) புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.

10) வயதாகும் செயல்முறை குறையும் தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்...

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சனம்...



இயற்கை வைத்தியம்...


1. உணவுக்குப் பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்...

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது...

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


செயற்கையாக நோய்களை பரப்பி உலக மக்கள் தொகையை குறைக்கும் இலுமினாட்டிகள் - The New World Order...


பிரதமர் அவர்களே, தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்...


ஆனால் உண்மையிலேயே நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்களா..?

நாட்டில் பின் தங்கிய நிலையில் உள்ள ஏழைகள், விவசாயிகள், கிராமப்புற மக்களின் குரல்கள் உங்களுக்கு கேட்கிறதா?

- நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கேள்வி...

பாஜக வின் டிஜிட்டல் இந்தியா...


இரண்டாண்டுகளுக்கு முன் வரை இவரை குஜராத்தில் யாருக்கும் தெரியாது...


ஊனா என்ற கிராமத்தில் தலித் குடும்பம் ஒன்றின் மீது பசுக் குண்டர்கள் நடத்திய தாக்குதலையடுத்து தலித் பாதுகாப்புக்காக குரல் கொடுக்கத் தொடங்கினார்.

இவர் ஊனா வரை நடத்திய ஊர்வலம் ஒன்றின் போது மூன்று லட்சம் பேர் திரண்டனர்.

மோடி குஜராத் வருவதற்கு முதல் நாளே இவரை சிறையில் அடைத்து மோடி புறப்பட்ட பின்னரே வெளியில் விடுவார்கள். இதுபோல பத்து முறை சிறையில் தள்ளப்பட்டவர்.

ராகுல் காந்தி நேரில் வந்து ஆதரவு தெரிவித்த போதுகூட கட்சியில் இணையவோ, காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்றோ பரப்புரை செய்ய மாட்டேன் என்று சொல்லியவர்.

பாஜகவுக்கு எதிரான பரப்புரையை மட்டுமே முன்வைத்து சுயேச்சை உள்பட பாஜக அல்லாத யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கவே கோரியவர்.

இவர் சுயேச்சையாக போட்டியிட்ட வட்கம் தொகுதியில் காங்., வேட்பாளரை நிறுத்தவில்லை. அப்படி நிறுத்தி இருந்தாலும் அத்தொகுதியில் கணிசமாக வாக்குகளை பிரித்திருப்பார் ஜிக்னேஷ்...

மக்கள் சிந்திக்க ஆரம்பிச்சிடான்.. இனி கோட்டை ஓட்டை தான்...


வங்கி களில் என் பணத்தை நான் எடுப்பதற்கு நான் ஏன்..? சேவை வரி செலுத்த வேண்டும்..


திருடன் என் கடவுச்சொல்லை திருடி என் பணத்தை திருடுகிறான்.. ஆனால் வங்கிகள் நேரடியாக திருடுகின்றன.. இரண்டுக்கும் வித்தியாசமில்லை..

இனி இந்தியாவை அவர்கள் வங்கிகளின் பொருளாதாரத்தை வைத்தே ஆட்டி படைப்பார்கள்...


இதுக்கு மேல தேர்தல் ஆணையத்தை இப்போது வச்சிருக்கிற பாஜகவை கலாய்க்க முடியாது...


கேன்சர் வர காரணம்...


நம் உடலில் கேன்சர் வர காரணமாக நாம் உண்ணும் தினசரி உணவுகள்..

கீழ்வரும் உணவுகளை உண்ணும் குடும்பம்; குடும்பத்தோடு விஷம் உண்ணுவது போல்..

1. மரபணு மாற்றப்பட்ட உணவு: DNA MODIFIED FOODS/HYBRID: அணைத்து வகை ஹைப்ரிட் காய் கறிகள், சோள உணவுகள் (ஸ்வீட் சோளம்).

2. மைக்ரோவேவில் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன் (ACT-II) MICROWAVED POPCORN.

3. கேன் செய்யப்பட்ட உணவு: (CANNED, PACKAGED DRINKS): REAL, TROPICANA போன்ற குளிர்பானங்கள் PACK செய்ய பயன்படும் TETRAPACKINGல் bisphenol-A (BPA) என்ற மூலக்கூறு உள்ளது. உண்ணும் பானத்துடன் இந்த மூலக்கூறு நம் மூளை செல்களை பாதிக்கும்.

4.எரிக்கப்பட்ட இறைச்சி: GRILLED MEATS: அதிகமாக நேரம் அதிக வெப்பத்தில் கிரில் செய்யப்பட்ட இறைச்சியில் கேன்சர் செல்களை உண்டுசெய்யும் Heterocyclic Aromatic Amines உருவாகிறது. இந்த இறைச்சியை உண்ணும்பொழுது நம் உடலில் நல்ல செல்கள் Heterocyclic Aromatic Aminesவால் சிதைக்கப்பட்டு வளர்ச்சிதை மாற்றங்கள் உருவாகிறது.

5.வெள்ளை சக்கரை: REFINED SUGAR: கரும்பில் இருந்து எடுக்கும் சக்கரையை சுத்திகரிப்பு செய்து வெண்ணிறமாக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் சக்கரையை 'மந்த விஷமாக' மாக மாறுகிறது. வெள்ளை சக்கரைக்கு பதில் நாட்டு சக்கரை, பனைவெல்லம், தேன் போன்றவைகளை தேர்ந்தெடுங்கள்.

6. விற்பனைக்கு வரும் உப்பிட்ட உணவுகள், ஊறுகாய் வகைகள்: (SALTED, PICKLED FOODS): விற்பனைக்கு வரும் உப்பிட்டு பாடம் செய்யப்பட்ட உணவுகள், ஊறுகாய் வகைகளில் நிச்சயம் NITRATE செய்யப்பட்ட பதனசரக்கு சேர்க்கப்பட்டிருக்கும். இவைகளை நீண்ட நாள் உபயோகத்தில் பதனசரக்குகள் நமக்கு விஷத்தன்மை வாய்ந்த NITRATES ஐ உடலில் செலுத்தி வளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.

7. சோடா மற்றும் கரியமிலம் ஊட்டப்பட்ட பானங்கள்: கோக் முதல் போவோண்டோ அனைத்திலும் மேல சொன்ன வெள்ளை சக்கரை வகைதான் அதிகம். ஒரு சில பானங்களில் வெள்ளை சக்கரையை விட கொடூரமான சோளச்சக்கரை (CORN SYRUP) சேர்கிறார்கள். இது நம் உடலில் அதிகபடியானவளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.

8. சுத்திகரிக்கப்பட்டு வெள்ளை ஆக்கப்பட்ட மாவு வகைகள்: REFINED WHITE FLOURS: மைதா, ATTA, தோசா MIX போன்ற மாவு வகைகள் தான். கடையில் விற்கப்படும் 80% மாவு வகைகளில் சுத்திகரிக்க CAUSTIC SODA முதல் BROMIDE வரை கலப்பார்கள். அதனால் தான் சப்பாத்தி கூட பூரி போல உப்பும்...

9.பண்ணை மீன்கள்: FARMED FISH : பண்ணை மீன்கள் ஒரே தொட்டியோ குட்டையில் வளர்க்க படுவதால் தொற்றும் அதிகம், தொற்று வராமல், பரவாமல் இருக்க ஒவ்வொரு மீனுக்கும் ANTIBIOTIC ஊசி போடப்படும், அதைவிட PESTICIDE செய்யப்பட்ட நீரில் தான் வளர்கிறது. விலை மலிவில் கேன்சர் செல்கள் தூண்ட காரணமான ரசாயனங்களை மறைமுகமாக வாரம் ஒரு முறை நாம் எடுக்கிறோம். மீனில் இருந்து பெறவேண்டிய ஒமேகா-3 FATTY ACIDS வளர்ப்பு மீன்களில் 1% கூட இருக்காது. எப்பொழுதும் பிரெஷ் கடல் மீன் தான் சிறந்தது.

10.சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்: Hydrogenated & Refined Oils: விதைகள், காய் கறிகளில் இருந்து எண்ணெய்களை எடுக்க கம்பெனிகள் கையாளும் முறையில் பல ரசாயனங்கள் உட்படுத்தப்படுகிறது. உடல் சற்றும் ஏற்றுக்கொள்ளாத வகையில் பல இரசாயன மாற்றங்கள் செய்யப்பட்ட எண்ணைகளில் தான் நாமும் நம் குடும்ப நபர்களும் பல உணவுகளை சமைத்து உண்கிறோம். அருகில் கிடைக்கும் செக்கில் ஆட்டிய தேங்காய், கடலை எண்ணைகளை வாங்கி உபயோகிக்கவும்.

மேல் சொன்ன உணவுகள் தான் நாம் தினமும் உபயோகிப்போம். நல்ல தரமான பொருள் நம் அருகிலேயே கிடைக்கும். தேடிப்பிடித்துதான் வாங்க வேண்டும்.

முடிந்த வரை - SUGAR FREE, DIET, LITE, FAT FREE போன்று அச்சிடப்பட்ட பொருள்களை தவிர்த்தால் கேன்சர் வர காரணமான ரசாயனத்தையும் தவிர்க்கலாம்...

சில மாதம் முன்பு வந்த டெங்கு கூட செயற்கையாக பரப்ப பட்டதே...


2003ல் அப்போதே ஆராய்ச்சி செய்தவர் கொலை செய்யப்பட்டார்...

மிளகின் அற்புதமான மருத்துவக் குணங்கள்...


வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு.

மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.

மிளகில் உள்ள சத்துக்கள்...

தாது உப்புகள்..

1. கால்சியம்
2. பாஸ்பரஸ்
3. இரும்பு

வைட்டமின்கள்..

1. தயாமின்
2. ரிபோபிலவின்
3. ரியாசின்

சளித் தொல்லைக்கு..

மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.

FILE பற்களுக்கு..

மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.

தலைவலி..

மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.

இரத்தசோகைக்கு..

கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .

பசியின்மைக்கு..

ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.

மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது...

மேலும் 5 வருடத்திற்கு பாஜக மோடி இந்தியாவை ஆண்டாள்... இந்தியா காவி தீவிரவாத நாடக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது...


இந்தியாவின் அணைத்து அரசு அமைப்புகளான CBI, தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை, நீதிமன்றம், ஊடகம் என அனைத்தையும் கெடுத்து வைத்துள்ளார்கள்...

இது மிகப்பெரிய அழிவை தேடித்தரப் போவது உறுதி...

நிலக்கரி ஊழல் வழக்கில் மதுகோடா மூன்று வருட சிறை தண்டனை பெற்றுள்ளார்...


இது தண்டனைகள் பெரும் காலம் திமுக வின் 2ஜி வழக்கும் தண்டனையோடு முடியும் என்றே எல்லாரும் கணிக்கிறார்கள்...

பாகிஸ்தானில் இல்லாத பல திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ளது - அதிமுக விஞ்ஞானி தெர்மாக்கோல் செல்லூர் ராஜு...


உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே....


உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகைக்கு 24 மூச்சு, நிமிடத்திற்கு 360 மூச்சு வகுக்கப்பட்டுள்ளது. (இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது ), ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது.

இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்றுக் கேட்கின்றீர்களா ? சம்பந்தம் இருக்கிறது. இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216 (உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன.

மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே...

இயற்கையை உணர்வோம்...


இயற்கையின் நியதி்படி ஒரு மொட்டு எப்பொழுது மலரும்?

அது தனது மகரந்த சேர்க்கைகாக மட்டுமே மலரும்.

ஒரு மொட்டு மலர்வது என்பது மகரந்த சேர்க்கைகான அத்தியாம் ஒரு சாட்சி, மலர்வது என்பது ஒரு செயல் மட்டும் அல்ல ஒரு உயிர் பயணிப்பதற்க்கான ஆற்றல்.

பிரபஞ்சம் உருவானது எதனால்?

அது ஒரு வெடிப்பு, அழுத்த நிலையில் இருந்த ஆற்றல் அந்த ஆற்றலே எல்லாம் ஆனது.

புரியும்படி சொல்கிறேன்...

ஒருவன் தனது வியாபாரம் செழிக்கவில்லை என்னும் கவலையோடு நடந்து கொண்டிருக்கும் போது.. ஒரு பூந்தோட்டத்தின் வழியே கடக்கிறான் அங்கு மலர்ந்த மலர்களில் தேனிகளும், வண்டுகளும் மொய்த்து கொண்டுள்ளன இந்த அழகான இயற்கை காட்சியை பார்த்த அவன் ஒரு மொட்டை அறுத்து கொண்டு சென்று தான் வணங்கும் தெய்வத்தின் முன் மொட்டை தனது கைகளால் மலர்வைத்து தெய்வத்திற்கு படைத்து வழிபடுகிறான், பிறகு அவன் வணிகம் செழிக்கிறது, இங்கு என்ன நடந்தது என உங்கள் யோசனைக்கே விடுகிறேன்.

ஒரு ஆண் ஒரு உயிரை உருவாக்கும் போது மட்டுமே அவனது மொட்டு மலர வேண்டும் அங்கு சிந்தும் இரத்தம் என்னும் ஆற்றல் ஆனது அந்த உயிரின் உண்மையான இயற்கை பயணத்தி்ற்கானது (மனிதன் இயற்கைதான் என நினைப்பவர்களுக்கு இது புரியும்) அந்த ஆற்றலை குழந்தை பருவத்திலேயே அவன் வணிகத்தில் வெற்றிபெற பயன்படுத்துவது வணிகம் என்னும் இயக்கியலை வாழ வைக்குமே தவிர அது இயற்கையாகது, இயற்கைக்கு எதிரானது.

இசுலாத்தில் மலர்களை இறைவனுக்கானது  என்று கூறுவார்கள்.. அதை பெண்கள் தனது கூந்தலில் சூடிக்கொள்ளமாட்டர்கள், ஆனால் குழந்தை பிறந்தால் அவர்களை பார்க்க போகும் போதும் அவர்களை சுற்றியும் மலர்களை வைத்து இருப்பார்கள்.. அரபு நாடுகளில் இது முறையாக பின்பற்றபட்டு வருகிறது. இது எதற்கு என்று உங்கள் சிந்தனைக்கே விடுகிறேன்.

ஆணின் மேல்தோல் உரிப்பு என்பது அவன் இணை சேரும் போது மட்டுமே மலர வேண்டும் இதுவே இயற்கையானது...

பாஜக வெற்றியின் ரகசியம் இதோ...