26/10/2020
ஆறு கால் ஆச்சரியம் எறும்பு...
நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதோ அல்லது நாம் கவனிக்காமலோ ஒரு சில உணவுத் துகள்கள் கீழே சிந்திவிட்டால், கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு எறும்புக் கூட்டமே வந்து சேர்ந்து விடுவதைப் பார்த்திருக்கலாம். இது எப்படி நடக்கிறது? இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? எறும்புகளுக்குக் கண்கள் கூட ரொம்பத் தெளிவாகத் தெரியாது.
ஆனால் மோப்ப உணர்வு அதிகம். இது மட்டுமில்லாமல் ஓரிடத்தில் உணவு இருப்பதைப் பார்க்கும் முதல் எறும்பு, அத்துகளின் அருகே சென்று தன் தலையில் உள்ள உணர்ச்சிக் கொம்பு (Antenna) போன்ற உறுப்பால் அதைத் தொட்டுப் பார்க்கிறது. அதன் பிறகு அங்கிருந்து திரும்பிச்செல்லும்போது உடலின் பின்பகுதியிலிருந்து ஃபெரமோன் என்ற வேதிப்பொருளைத் தரையில் கோடுபோல இட்டுக்கொண்டே செல்கிறது. இந்தக்கோடு அதன் கூடு வரை நீளும். இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தை பின்பற்றிச் சென்று, உணவு இருக்கும் இடத்தை விரைவாகச் சென்றடைந்து விடுகின்றன.
எறும்புகள் ராணுவ வீரர்களைப் போல எப்போதும் சாரிசாரியாக ஊர்ந்து செல்வதன் மூல ரகசியம் ஃபெரமோன் என்ற வேதிப்பொருள்தான். அந்தக் கோட்டை தவறவிட்டால், வழி தெரியாமல் போய்விடும்.எறும்புகள் போடும் இந்த ஃபெரமோன் பாதை எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும். இடையே சில இடங்களில் நீர் சொட்டிக்கொண்டிருப்பது போன்ற சிறுசிறு ஆபத்துகள் இருந்தாலும் கூட, உணவு கிடைத்துவிட்டால் எறும்புக் கூட்டம் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது.இதை நீங்கள் நேரில் பார்க்கும்போது கவனித்திருக்கலாம்.
உணவைச் சேகரித்து வைப்பது எறும்பின் வேலைகளில் மிக முக்கியமானது. ஆனால் இப்படி சேகரித்துவைக்கும் உணவு, மழைக்காலத்தில் பூசனம் பூத்து கெட்டுப்போய் விடாமல் இருக்க அவை ஒரு வேதிப்பொருளை பயன்படுத்துகின்றன. அந்த வேதிப்பொருளும், அதன் இயல்பும் தற்போது கண்டறியப்பட்டு மருந்து தயாரிப்பில், அது பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு எறும்பின் காலனியில் முகப்பில் இருக்கும் காவலாளி எறும்பு, அங்கே வரும் ஒவ்வொரு எறும்பையும் முகர்ந்து பார்த்துவிட்டு, அது தனது குழுவைச் சார்ந்ததா என்று உறுதி செய்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கும். எறும்புகள் நகர்ந்து செல்லும்போது சில நேரம் ஆண்டெனாவை, மற்றொரு எறும்பின் தலையில் வைத்து, தங்கள் கூட்டத்தைச் சேர்ந்தது தானா என்று பரிசோதிப்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.
உணவுப் பாதை போடுவது போலவே, ஆபத்து ஏற்படுவதையும் வேறொரு வேதிப்பொருளை வெளியிட்டு சிப்பாய் எறும்புகள் எறும்புக் காலனிக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுகின்றன. இதை அறிந்து மற்ற எறும்புகள் தப்பிச் செல்லும். அதேபோல ஆண் எறும்பை இனப்பெருக்கம் செய்ய ஈர்க்கவும் ராணி எறும்புகள் ஒரு வகை ஃபெரமோனை வெளியிடுகின்றன.
இப்படியாக வழிகாட்ட, ஆண் எறும்பை ஈர்க்க, எச்சரிக்கை செய்ய என பல்வேறு செயல்பாடுகளுக்காக எறும்பு வெளியிடும் எல்லா வேதிப்பொருளும் ஃபெரமோன்தான். ஆனால், ஒவ்வொரு செயல்பாட்டுக்கான ஃபெரமோனின் வகையும் வேறுபட்டிருக்கும். இந்த வேறுபாட்டை வைத்தே, மற்ற எறும்புகள் விஷயத்தை புரிந்துகொள்கின்றன. இப்படியாக எறும்புகளின் வாழ்க்கையில் வேதியியல் மிகப்பெரிய பங்காற்றுகின்றது.
இந்தியாவில் 1903இல் பணிபுரிந்த ராணுவ அதிகாரியான கர்னல் பிங்காம் எழுதிய புத்தகம்தான் இந்தியாவில் எறும்புகளைப் பற்றிப் பேசிய முதல் புத்தகம். அதற்குப் பிறகு ஏறக்குறைய நூறாண்டுகள் ஆகியும்கூட, எறும்புகள் பற்றிய விரிவான நூல்கள் அதிகமாக வரவில்லை.
தமிழகத்தில் நமக்குத் தெரிந்தவை சிவப்பு நிற சிறிய நெருப்பெறும்பு, உருவத்தில் சற்றுப் பெரியதாக இருக்கும். கருப்பு நிற கட்டெறும்பு, மரத்தில் இருக்கும் கருப்பு நிற கட்டெறும்பு, மரத்தில் இருக்கும் வெளிர் சிவப்பு நிற சூவை எறும்பு, சிறிய பிள்ளையார் எறும்பு ஆகிய நான்கு வகைகள்தான். கட்டெறும்பு பெரும்பாலும் மாமரங்களில் அதிகம் இருக்கும்.
சுள்ளெறும்பு என்று அழைக்கப்படும் சிவப்பு எறும்புகளும், கட்டெறும்புகளும் எதிரி என்று கருதுபவர்களைக் கடிக்கும்.அப்போது உடலில் படும் வேதிப்பொருளால் நமக்கு சிறிது நேரம் வலிக்கிறது. அந்த வேதிப்பொருளின் வீரியம் குறையும் வரை வலிக்கும். சாமி எறும்புகள் எனப்படும் கறுப்பு எறும்பு பெரும்பாலும் கடிப்பதில்லை. கூசுவது போல ஓடிச் சென்று விடும். சில நேரம் பளிச்சென்ற நிறம் ஏதுமில்லாமல் சிறியதாக, வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் எறும்புகளைப் பார்த்திருக்கலாம். அவை முழு வளர்ச்சி அடையாத குட்டி எறும்புகள்.
எறும்புப்புற்றில் சேர்த்து வைத்திருந்த தானியங்களை வறுமையால் வாடிய மனிதர்கள் சிலர் எடுத்து, சமைத்து உண்டதாக அகநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகிறது...
மனமற்ற நிலை என்றால் என்ன.?
இருபத்து நான்கு மணி நேரமும் மனமற்ற நிலை பெறுவது தான் இறுதிச் சாதனை.
இப்படிச் சொல்வதால், மனதை பயன்படுத்தவே கூடாது என்பதல்ல.
மனமற்ற நிலை பற்றி எதுவும் தெரியாதவர்களே அப்படிச் சொல்வார்கள்.
அது பொய்.
மனமற்ற நிலை என்றால், மனம் உன்னைப் பயன்படுத்தக் கூடாது என்று பொருள்.
மனமற்ற நிலை என்றால், மனதை அழித்து விடுவது அல்ல. மனதை ஒரு பக்கமாய் ஒதுக்கி வைப்பது.
அது உலகத்தோடு தொடர்பு கொள்ளும் எந்த வினாடியும் மனதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது உன் பணியாளாக இருக்க வேண்டும்.
நீ சும்மா இருந்தால்கூட 'கடக்கடக் கடக்கடக்' என்று போய்க் கொண்டே இருக்கும். அப்போது உன்னால் எதுவுமே செய்ய முடியாது.
பரிதாபமாக நின்று விடுவாய்.
மனமற்ற நிலை என்பது, மனதைச் சரியான இடத்தில் ஒதுக்கி நிறுத்தி வைப்பது. அது ஒரு வேலையாள் என்ற முறையில் மனம் பெரிய கருவி தான். ஆனால், எஜமானனாகி விடுவது துரதிர்ஷ்டம். அது ஆபத்தானது. உன் வாழ்வையே ஒழித்துக் கட்டிவிடும்.
மற்றவர்களோடு தொடர்பு கொள்ள நீ விரும்பும் போது மனம் ஒரு ஊடகம் மட்டுமே.
ஆனால் நீ தனித்திருக்கையில் மனம் தேவையில்லை. எப்பொழுது பயன்படுத்த வேண்டுமோ அப்பொழுது மட்டும் பயன்படுத்தினால் போதும்.
இன்னொன்றையும் நினைவில் வைத்துக்கொள்.
மனம் பல மணி நேரம் மௌனமாக இருந்தால், அது புத்துணர்ச்சி பெற்று விடும். இளமை துடிப்புடன், படைப்பாற்றலுடன், உணர்வுகளுடன், புதுப்பிறவி எடுத்து விடும். அந்த ஓய்வில் ஏற்படுபவை இவை...
எழுதுகோல் (பேனா) வரலாறைப் பற்றி தெரிந்துக் கொள்ளவோம்...
எழுதுகோல் என்று தூய தமிழில் எத்தனை பேர் சொல்கிறோம். நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், கருத்துகள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் பதிவுக் கருவி, பேனா. அது தோன்றிய விதம் தெரியுமா?
இன்று நாம், பயன்படுத்துவதற்கு எளிதான பேனாக்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் ஆரம்ப காலத்தில் அப்படி இல்லை.
பேனாவுக்குப் பல நூற்றாண்டு வரலாறு உண்டு என்பது ஆச்சரியமான விசயம். ‘லத்தீன்’ மொழியின் ‘பென்னா’ என்றால் ‘பறவையின் இறகு’ என்று பொருள்.
‘பென்னா’ என்பதே ஆங்கிலத்தில் ‘பென்’ என்றும், தமிழில் ‘பேனா’ என்று மாறியது. 5ம் நூற்றாண்டில் ‘இறகுப் பேனா’ வழக்கத்துக்கு வந்தது.
அது 18ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
1780ல் சாமுவேல் ஹாரிசன் என்பவர் உருக்கினால் ஆன பேனாவைத் தயாரித்தார்.
1809ல் ஜோசப் பிராமா என்பவர், பறவையின் இறகை, தற்போதுள்ள வடிவில் வெட்டி ‘நிப்’பை உருவாக்கும் கருவியைத் தயாரித்தார்.
ஜான் ஹாக்கின்சு என்பவர் மாட்டுக்கொம்பு, ஆமை ஓடு ஆகியவற்றைக் கொண்டு ‘நிப்’ செய்தார். ‘நிப்’ன் முனையில் ‘இரிடியம்’ வைக்கும் பழக்கம் 1882ல் வந்தது.
அதே ஆண்டு ஜான் மிட்சல் என்பவர் எந்திரத்தினால் செய்யப்பட்ட உருக்கு ‘நிப்’பை கண்டுபிடித்தார்.
1859ல் முதல்முறையாக ‘ஊற்றுப் பேனா’ (‘பவுண்டன் பென்’) காப்புரிமை பதிவு செய்யப்பட்டது.
1883ம் ஆண்டில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வாட்டர்மேன் என்பவர் அனைவரும் பயன்படுத்தத்தக்க ஊற்றுப் பேனாவைத் தயாரித்தார்.
அனைத்திலும் தமிழர்கள் நாம் முன்னோடி என்பதில் சந்தேகம் இல்லை.
நம்முடைய இலக்கியங்கள், புராணங்களில் இருந்து பல தகவல்கள் மேலை நாட்டு அறிஞர்களால் எடுக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டு உள்ளது.
அதைப் போன்றே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே குத்தாணியை பயன்படுத்தி பேனாவிற்கு அடிகோல் வகுத்தது தமிழர்களாகிய நாம் தான் என்பதில் பெருமையே...
கவனத்தைக் கவர விரும்பாதே...
உன்னைப் பற்றி யாருமே தெரிந்து கொள்ளாத வகையில் உன் வாழ்க்கையை அமைத்துக் கொள்.
நீ இந்த உலகத்தில் இல்லாதது போலவே உன் வாழ்க்கை இருக்கட்டும்.
உன்னுடைய நடவடிக்கைகள் ஒருவருக்கும் தெரியாமல் இருக்கட்டும்.
நீ இங்கு இருப்பதே ஒருவருக்கும் தெரிய வேண்டாம்.
ஆன்மிகத்தின் வெடிப்பை அப்போது தான் உன்னால் அடைய முடியும்.
இல்லையென்றால், அகந்தை எப்போதும், ஒரு கடினமான பாறையாகச் செயல்பட்டு, அந்த வெடிப்பைத் தடுத்து நிறுத்தி விடும்.
நீ எதற்காக கவனிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாய்?
ஏனென்றால், நீ யார் என்பதைப் பற்றி உனக்கு நீயே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
அப்படியானால், நீ கவனிக்கப்படுவதன் மூலம், நீ யார் என்பது எப்படிப் புலனாகும்?
நீ உன்னைப் பற்றிக் கண்ணாடியில் பார்ப்பதால் தெரிந்து கொள்ள முடியாது.
அவர்கள் உன்னை பாராட்டுகிறார்களோ, விமர்சிக்கிறார்களோ, அந்தக் கண்கள் கண்ணாடியைவிட மேம்பட்டதாக இருக்க முடியாது, நண்பர்கள், எதிரிகள் அனைவருமே கண்ணாடிகள் தான்.
நீ உன்னைப் பற்றி, நேரடியாக, உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நீ உள்ளுக்குள் செல்ல வேண்டும்.
கவன ஈர்ப்பில் தான் அகந்தை வாழ்கிறது.
அது ஒரு தவறான விஷயம். அதைப் புரிந்து கொண்டு, அதிலிருந்து வெளியே வாருங்கள்.
நீ அதிலிருந்து மீண்டுவிட்டால், வித்தியாசமான ஒரு அமைதியும், நிம்மதியும், சாந்தமும் உனக்கு ஏற்படும்.
இயற்கையான, தங்குதடையற்ற ஒரு பரமசுகம் உனக்குள் பொங்கத் தொடங்கும்.
ஓர் உட்புற நடனம் சம்பவிக்கும். உட்புற நடனம் மட்டுமே, தன்னை மறந்த ஒரு நிலை அங்கே இருக்கும்.
அதை நீ அடையாத வரையில், நீ வாழ்வது போலியான வாழ்க்கை.
உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய்...
விடைதெரியா மர்மங்கள் - கல்தட்டு...
வேற்றுகிரக வாசிகள், பறக்கும் தட்டுக்கள் உலகின் பல பகுதிகளுக்கும் வந்து போனதாக பல செய்திகளை படிக்கிறோம்.
மாயன்கள் காலத்தில் (இன்கா), முற்கால எகிப்து, பெரு, இங்கெல்லாம் ஆதாரங்கள் (கற் சிலை) இருப்பதாக அறிகிறோம்.
நேபாளத்தில் எனும் போது இன்னும் ஆச்சர்யம் மிகுதியாகிறது.
12000 வருடங்கள் பழமையான கல் தட்டு (The Lolladoff plate) மர்மங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
பார்பதற்கு பறக்கும் தட்டு (UFO) போலவே இருக்கிறது.
இவ் வட்ட தட்டில் சுருள் வடிவ உடுமண்டலம் (spiral galaxy) வடிவம் (நம் பால்வெளியா?) சுற்றுப்பதையில் ஒரு பறக்கும் தட்டு, சூரியன், இரு கைகளை நீட்டிய வேற்றுகிரக வாசி (நம்மை முறைப்பது போல் உள்ளது), சித்திர எழுத்துகள்.. விசித்திர விலங்கு, ஓணான், சிலந்தி..இப்படி பல வடிவங்கள் உள்ளன.
அக்கால விண்வெளி அறிவாற்றல், வேற்றுகிரகவாசி, பறக்கும் தட்டு, என்பதெல்லாம் உண்மையா?
மேலே சொன்ன நாடுகளோடு அக்காலத்திய தொடர்புகள்..
இப்படி பல்வேறு வினாக்களை எழுப்பி விடை தெரியா மர்மமாக உள்ளது...
முதல்வர் வருகைக்காக அவசர கதியில் தரமற்ற சாலை : அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வாலிபர் சங்கம் போராட்டம்...
தூத்துக்குடியில் முதல்வர் வருகையை முன்னிட்டு அவசர கதியில் தரமற்ற சாலை அமைக்கப்பட்டதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடந்தது.
தூத்துக்குடி, பாளை ரோட்டில் மேம்பாலம் தேவர் சிலை அருகே முதல்வர் வருகைக்காக கடந்த 22ம் தேதி சாலை அமைக்கப்பட்டது. அவசர கதியில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள அந்த சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பாடும் அபாயம் உள்ளது. மக்களின் வரிப்பணத்தை வீணடித்து தரமற்ற சாலை அமைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று மலர்வளையம் வைக்கும் நூதன போராட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் முத்து தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநகர தலைவர் காஸ்ட்ரோ, மாநகர பொருளாளர் பாலா, எஸ்எப்ஐ Iமாவட்டசெயலாளர் ஜாய்சன், ஜேம்ஸ், முத்துகிருஷ்ணன், மாவட்டக்குழு ஆவடையப்பன், ஜெயமுருகன், அஜெய், கார்த்தி, மகராஜன், வேனு சுயம்பு உட்பட பலர் கலந்து கொண்டு, தரமற்ற சாலையை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வே்ணடும். விபத்து ஏற்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்...
உன்னுள் நுழைவதே தியானம்...
எந்த எண்ணத்தையும் உன்னுள் நுழைய விடாமல்.. ஆச்சரியத்துடனேயே இருப்பது தான் தியானம்..
நீ ஆச்சரியமாக இருக்கும் போது.. உன் மனதில் எண்ணம் புகுந்தால்.. நீ யோசிக்க ஆரம்பித்து விடுகிறாய்..
இந்த உலகம் முழுக்க ஆச்சரியம் நிறைந்து இருக்கிறது..
உன்னால் ஆச்சரியத்தில் சாதாரணமாக இருக்க முடியவில்லை என்பதால் கேள்விகள் கேட்கிறாய்..
கேள்விகளுக்கும் பதில்களுக்கும் முடிவே கிடையாது..
ஒரு கேள்வி ஒரு பதிலுக்கு இட்டுச் செல்லும்..
ஒரு பதில் ஆயிரம் கேள்விகளுக்கு இட்டுச் செல்லும்..
ஆச்சரியம் அற்புதத்துக்கு இட்டுச் செல்கிறது..
அதற்கு ஓர் ஆன்மீகப் பெயர் தான் கடவுள்..
கடவுள் என்பது அறிந்து கொள்ள முடியாத ஓர் அற்புதம்..
கேள்விகள் கேட்பதை விட்டு விட்டு.. ஆச்சரியத்தின் மீது கவனம் செலுத்து..
வெகு விரைவில் ஆச்சரியம் மறைந்து போய் அற்புதம் தோன்றி விடும்..
ஆச்சரியம் என்பது ஒரு சிறு அலை..
அற்புதம் என்பது பெருங் கடல்..
நீ ஆச்சரியத்திலேயே இருக்கும் போது.. அது உன்னை அற்புதத்திற்கு இட்டுச் செல்கிறது..
அற்புதம் எல்லையற்றதற்கு இட்டுச் செல்கிறது.. அது கடவுளுக்கு இட்டுச் செல்கிறது..
ஆனால் உடனே சிந்திக்க மட்டும் ஆரம்பித்து விடாதே..
உனக்கு ஏதாவது ஆச்சரியம் தோன்று மானால்.. அதனுடனேயே தங்கி விடு..
அப்போது ஆழ்ந்த மௌனம் உன்னைச் சூழ்ந்து கொள்ளும்..
ஒரு நாள் அந்த ஆச்சரியம் அற்புதத்திற்குள் கரைந்து போகும்..
அந்த ஆச்சரியத் தோடு நீயும் கரைந்து போவாய்..
யோசிக்க ஆசை வரும்..
உன்னுடைய மனது அந்த ஆச்சரியத்தை சிந்தனையாக்கி விடும்..
அதனால் அந்த யோசிக்கும் ஆசையிலிருந்து விடுபட்டு நில்..
நீயும் ஒரு அற்புதமாகி விடுவாய்...
குழந்தைகள்...
அவர்கள் உங்களால் வந்தவர்களே ஆனால் உங்களுக்காக வந்தவர்கள் அல்ல..
இங்கு அனைவருக்கும் ஒரு வாழ்க்கை உண்டு, அதை சுதந்திரமாக, யாருக்கும் அடிமையாக இல்லாமல் வாழ்வோம்..
தாய்-தந்தை என்ற அழகான பிணைப்பு என்பது அடுத்த தலைமுறையை இங்கு விதைத்து செல்வதற்காக மட்டுமே தவிர..
உங்களின் நிறைவேறாத ஆசையை குழந்தைகளின் மீது திணப்பதற்கு அல்ல...
திராவிடன் என்பவர்கள் யார்?
நடைமுறை அரசியல்களத்தில் திராவிடர் என்பது கேரளத்தில் வாழும் மலையாளியைக் குறிக்காது. ஆந்திராவில் வாழும் தெலுங்கர்களைக் குறிக்காது. அல்லது கர்நாடகத்தில் வாழும் கன்னடர்களையும் குறிக்காது.
அப்படியானால் தமிழ்நாட்டில் வாழும் தமிழரை மட்டும் அது எப்படிக் குறிக்கும்?
அது தமிழ்நாட்டில் வாழும் பிற இனத்தாரைக் குறிக்கிறது. குறிப்பாக தெலுங்கு, கன்னட, மலையாளிகளைக் குறிக்கிறது.
திராவிடம் என்பது அவர்களின் வல்லாதிக்கத்திற்கான கொள்கையைக் குறிக்கிறது. அது எப்படி தமிழருக்கு நன்மை பயக்கும்?
அந்த திராவிடத்தின் சூத்திரதாரி கன்னட ஈ.வே. ராமசாமி எனும் பெரியார்.
அவர் எப்படி இந்த வீழ்ந்து கிடக்கிற தமிழ் இனத்தில் ஓர் விடுதலைக்கான அடையாளமாவார்?
பெரியார் எனும் பலிஜா கன்னட ராமசாமி நாயக்கர் விட்டுச் சென்ற பணியை சில அடிமைகள் தொடர்கிறது...
கேரளாவில் மலையாளி மேனன்னாகவும், நாயராகவும், நம்பூதிரியாகவும் தன் சாதி அடையாளத்தை இழக்காமல் மலையாளி என்ற இன உணர்வோடு வாழ்கிறான்….
ஆனால் இங்கே தமிழனுக்கு எதிரி தமிழரின் அடையாளமாகிய சாதி தான் என பொய் பிரசாரம் செய்து அதை ஒழிக்கிறேன் என்று கூறிக் கொண்டு தமிழர்களிடையே நிரந்தர பகைமை உணர்வை வளர்த்து திராவிடம் என்ற இல்லாத ஒன்றை நிலைநாட்டி தெலுங்கரையும், கன்னடரையும், மலையாளிகளையும் இங்கே ஆளவிட்டது தான் வெங்காயத்தின் சாதனை..
அந்த வெங்காயம் விட்டுச் சென்ற பணியை தொடர்கிறார்கள் வெங்காயத்தின் வழிகாட்டிகள்...
தமிழ்நாட்டில் நடப்பது, தமிழ் மக்களுக்கான அரசியல் இல்லை...
வந்தேறிகளை அடித்து விரட்ட வேண்டும்... இல்லையெனில் வந்தேறிகள் தமிழர்களை அடித்து விரட்டும் காலம் வரும்...
விசிக திருமா எனும் தமிழின துரோகி...
தன்னுடைய சொந்த ரிஸர்வ்ட் தொகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவரான பெண்மணியை தரையில் அமர வைத்து அவமானப்படுத்திய திமுக வை தட்டிக்கேட்க முடியாத திருமாவளவன் தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யாரோ எழுதி வைத்த கருத்துக்கு எதிராக பொங்குகிறாராம்.. அடேங்கப்பா...
ஆணாக 56 ஆண்டுகள் வாழ்ந்த பெண்...
மராண்டா ஸ்டூஆர்ட் ( Dr.ஜேம்ஸ் பாரி ) ஆண் வேடமிட்டு 1812 ஆம் ஆண்டு எடின்பர்க் மருத்துவ கலூரியில் பட்டம் பெற்றார்.
பெண்களுக்கு அப்போது கல்லூரியில் இடம் இல்லை.
ஆங்கிலேயரின்ஆட்சியின் கீழ் பல நாடுகளிலும் சேவை செய்தார்..
ஆணாகவே வாழ்ந்தாள்.
அவர் இறந்த பிறகு அவர் உடலை சுத்தம் செய்த பெண்மணியே அவர் ஆணல்ல பெண் என்று கண்டு பிடித்தார்..
எத்தனை வைராக்கியம் இருந்தால் அவர் 56 வருடங்கள் ஆணாக வாழ்ந்திருப்பார்...