குண்டலினி சக்தி பயணம் - பாகம் ஒன்பது...
சுவாச ஒழுங்கு என்ற சக்தி ஊற்று..
குழந்தை பிறக்கும் போது தேகத்தில் ஜீவ சக்தி ஊற்று மூச்சாக திறக்கப் படுகிறது.. இறக்கும் தருவாயில் அந்த ஊற்று அடைக்கப் படுகிறது... அண்ட சக்தி பிண்டத்தில் பாயும் போது அது குண்ட சக்தியாக அதாவது குண்டலினி சக்தியாக மாற்றம் அடைகிறது..
அதாவது லயப்பட்டு லயப்பட்டு ஒடுங்கி ஒடுங்கி ஒரு சுருண்ட சக்தியாக ஒடுக்க நிலை நோக்கி நகரத் தொடங்குகிறது.. ஒரு குறிபிட்ட ஒடுக்கத்திற்கு பிறகு மேலும் ஒடுங்க நினைக்கும் போது, அங்கு அழுத்தம் இறுக்கம் உண்டாக அதன் காரணமாக மீண்டும் விரிவடைய நினைக்கின்றது.. இதன் காரணமாகத் தான் மூச்சு உள்வாங்களும் வெளி விடுவதுமான செயல்பாடு நடக்கின்றது..
இந்த இறுக்கத்தின் காரணமாகத்தான் மனம் என்ற அதிவலைகள் இறுக்கத்தை குறைப்பதற்கான தேடலை துவங்குகிறது.. அந்த தேடல் இறுக்கத்தை குறைப்பதற்கான முயற்சியை மேல் கொள்ளாமல் இன்னும் இன்னும் ஒடுக்கத்தை ஏற்படுத்தி இன்னும் இறுக்கத்தை அதிகப் படுத்தவே பார்கின்றது..
மனம் என்பது குண்டலினி சக்தியின் இறுக்கத்தால் அழுத்ததால் வெளியேற துடிக்கும் ஒரு பகுதி ஆற்றல் என்பதை மறந்து விடக்கூடாது..
இந்த குண்டலினி சக்தியை முறைபடுத்தக் கூடிய ஒரு நிர்வாக சக்தி அதாவது ஆளுமை சக்தி, குழந்தை பருவத்திலேயே கிடைக்கப் பெற்றாலும், உலகியல் சார்புகளின் குறுக்கீடுகளால், குண்டலினி சக்தியின் அழுத்தம் சிறுக சிறுக, பெருக தொடங்கி அந்த நிர்வாக சக்தி பலம் இழந்து விடுகிறது...
அந்த நிர்வாக சக்திதான் புத்தி என்ற காற்று பூதம்...
புத்தி பலவீனமடைவதை அனுபவப் பட ஒரு அறிவு தேவைப் படுகிறது.. அந்த அறிவு தான் ஆகாயம் என்ற பூதம்..
இந்த அனுபவ அறிவே எல்லாம் உணர தொடங்கி ஏற்ற தாழ்வுகளை சரிபார்த்து புத்தியை அப்போதைக்கு அப்போது சரி செய்ய தொடங்குகிறது..
இந்த அனுபவ அறிவும் குறைவாக உள்ள பட்சத்தில், புத்தி தன் வலு இழந்து இருக்கும் நிலையில் மனம் தன் செயல் பாட்டில் தன்னிச்சையாக இருக்கும்...
மனம் குண்டலினி சக்தியின் இறுக்கத்தை தளர்த்த தேட வேண்டியதை தேடாமல், தேடக்கூடாத இடத்தை தேடி மேலும் மேலும் இறுக்கத்தை பலப் படுத்தி ஒடுங்கி ஒடுங்கி ஒரு பெரிய அழுத்ததை தேகத்தில் ஏற்படுத்துவதால் தேக செல்கள் வலு இழந்து சோர்ந்து போவதால் உறக்கம் வருகின்றது..
அந்த உறக்கத்தில் மனமும் செயல் இழந்து போவதால் இறுக்கம் சிறுக சிறுக தளர்ந்து தேக செல்களுக்கு உகந்த ஒரு இறுக்கம் தளர்ந்த சூழ் நிலை ஏற்படும் பொழுது செல்கள் பழைய நிலைக்கு திரும்பி செயல் படக்கூடிய அளவிற்கு பலம் அடைகின்ற போது, உறக்கம் நீங்குகிறது...
செல்கள் பழைய நிலைக்கு திரும்பாமலே இருக்கின்ற சூழ்நிலையில், தேகத்திற்கு மரணம் வருகின்றது..
இந்த இறுக்கம் மேலும் மேலும் அதிகமாகாமல் செய்வது முதல் படி..
இறுக்கத்தை தளர்த்துவது இரண்டாம் படி,..
இறுக்கம் முழுமையாக தளர்த்தி ஆதி சக்தியான அண்ட சக்திக்கு இணையான ஒரு நிலையை குண்டலினி சக்தி பெற்று தேகம் சோர்வு அடையா நிலையான சம ஆதி நிலை அடைவது மூன்றாம் படி..
அனுபவ நிலையான ஆகாய அறிவு குறையாமல், புத்தியின் மூலம் மனதை கட்டுபாட்டில் வைத்து தேகம் கெடாமல் பஞ்ச பூத சமசீர் கூட்டு ஆதிக்கம் பெறுவது முடிவான நான்காம் படி ஆகும்..
இன்றைய பல யோகப் பயிற்சிகளில் குண்டலினி சக்தியின் மேல் மனதை ஒருமுகப் படுத்தி மேலும் மேலும் அதில் இறுக்கத்தை அதிகப் படுத்துகின்றார்களே தவிர குண்டலினி சக்தியை தளர்த்தும் முறையை யாரும் பின் பற்றுவதில்லை..
தேகமே, எங்கேயோ தேள் கடித்தால் எங்கேயோ நெரி கட்டும் அமைப்பில் உள்ளதால், முறையற்ற குண்டலினி பயிற்சியால்,கெட்ட பக்க விளைவுகள் ஏற்படுகின்றன...
குண்டலினி சக்தி பயணத்தில் சுவாச ஒழுங்கில் சூரிய கலையில், தோன்றா நிலையாக மனம் அற்ற நிலையாக, குண்டலினி சக்தியை அடைகிறது.. அதனால் குண்டலினி எந்த பாதிப்பும் அடைவதில்லை..
சந்திர கலையில் குண்டலினி சக்தி எழும்பி வருவதால், குண்டலினி சக்தி தளர்வடையுமே தவிர, சந்திர கலையில் உள்ள மனதால் துளி அளவும் குண்டலினிக்கு பாதிப்பு இல்லை..
குண்டலினியை விட்டு மனம் மேலே ஏறும் மார்க்கத்தில் வெளியேறி செல்ல முயற்சிப்பதால், குண்டலினி சக்தி தளந்த நிலைக்கு சுலபமாக வருகின்றது....
நித்திய நிலையான பேரண்ட ஆற்றலால் உருவாக்கப் பட்ட தேகம், அந்த நித்திய நிலைக்கு சொந்தமானது.. அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என சொன்னார்கள்..
ஆனால் சிறுக சிறுக அநித்திய நிலை நோக்கி நகர்ந்து முடிவில் மரணம் அடைகிறது.. அதற்கு கவர்ச்சியே காரணம்..
கவர்ச்சியில் ஈடு படும் மனம், சுவாச முரண்பாடு அடைந்து, சந்திர கலை மூலமாக சூரிய கலையிலும், பாய்ந்து, குண்டலினி சக்திக்கு இறுக்கம் மேல் இறுக்கம் சேர்த்து, நிலைமையை மோசம் ஆக்குகிறது..
இதைதான் சித்தர்கள் புலியை மேவிய மான் என்று பரி பாஷையில் சொன்னார்கள்..
கவர்ச்சி இல்லாத இந்த இயல் நிலைக்கு அதாவது பேரண்ட ஆற்றலுக்கு அழைத்துச் செல்லும் சுவாச ஒழுங்கு முற்றிலும் ஆரம்பத்தில் ஒரு கவர்ச்சி அற்ற நிலையில் இருந்தாலும் பயிற்சிக்கு பின் அது தரும் அற்புதங்களை வார்த்தைகளில் விவரிக்க இயலாது..
நுழைவதும் பயிலுவதும் கவர்ச்சியை நாடும் மனம் முதலில் இடம் கொடுக்கா விட்டாலும், பின்னால் ஏற்படுகின்ற பயன்களிலே மனம் சமாதானமாகி, இலயமாகி, பின் அடங்கி நடக்கத் தொடங்கும்..
சித்தர் நிலையிலே பிண்டத்திலிருந்து புறப்படும் குண்டலினி சக்தி அண்டம் கடந்தாலும், ஆதார நிலையான அந்த ஜீவ ஊற்று, அடைக்கப் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்..
அடைப்பட்டால் ஜீவ ஆற்றல் துண்டிக்கப் பட்டு, தேங்கிய சக்தியாய் அல்லது தேடும் சக்தியாய் அகண்ட காரத்தில் உலவி கொண்டு இருக்க வேண்டியது தான்..
இதை தான் ஆவிகள் என்று சொன்னார்கள் போலும்..
அந்த ஆற்றல்கள் எல்லாம் அண்டத்தில் கரைந்த பிற்பாடுதான் மீண்டும் பிறவி எடுக்க முடியும்.. அப்படி பட்ட வலுவான ஆற்றல்களுக்கு மூலாதார தொடர்பு கொடுப்பதின் மூலம்,வசியப்படுத்தி மாந்திரவாதிகள் சில அற்புத சித்துகளை செய்கின்றனர்..
அப்படி செய்கின்ற போது தன் மூலாதார குண்டலினி சக்திக்கு அதிக அழுத்தம் கொடுத்து விரைவில் மரணமும் அடைகின்றனர்..
மாந்திரீகம் அந்த அழுத்தம் கொடுக்காமல் செய்ய முடியாது..
தனக்குள்ளே இருக்கின்ற பேராற்றலை முறையாகப் பயன்படுத்தி, பெரும் அற்புதங்களை செய்வது சித்தர் மார்க்கம்..
வெளி ஆற்றலை பயன் படுத்தி அற்ப விசித்திரங்களை செய்வது மாந்திரீகம்..
மேல் சொன்னவைகள் சுவாச ஒழுங்கின் அவசியத்தையும் குண்டலினி பற்றிய சில குறிப்புகளையும் விளங்க வைக்கும் என நம்புகிறேன்...