09/06/2018

தொட்டாற்சிணுங்கி இய‌ற்கை வைத்தியம்...


தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதை உலகுக்கு உணர்த்திய தாவரம் தொட்டாற்சிணுங்கி. விரல் பட்டதும் சட்டெனத் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் இந்தத் தாவரத்தை எல்லோரும் பார்த்திருப்போம். உணர்வு மட்டும் அல்ல... உன்னதமான மருத்துவக் குணங்களும் இந்த மூலிகைச் செடிக்கு உண்டு.

தொட்டாற்சுருங்கி, தொட்டால் வாடி, இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி என இந்தத் தாவரத்துக்கு நிறைய பெயர்கள்.

சர்க்கரைக்கு சரியான தீர்வு..

தொட்டாற்சிணுங்கி வேரை நன்கு அலசி வெயிலில் உலர்த்தி இடித்துச் சூரணமாக்கிக்கொள்ள வேண்டும். இதேபோல், தொட்டாற்சிணுங்கி இலைகளையும் இடித்துச் சூரணமாக்கி இரண்டையும் சம அளவுக்கு கலந்து கொள்ளவும்.

இந்தக் கலவையை ஒரு கரண்டி அளவு எடுத்துத் தண்ணீரில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால், சர்க்கரை நோயில் இருந்து மீள முடியும். இதே சூரணக் கலவையைத் தினமும் மூன்று வேளை ஒரு கரண்டி அளவு எடுத்து, காய்ச்சியப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டுவந்தால், மூலம், பவுத்திரம் போன்ற நோய்களும் குணமாகும்.

சிறுநீர் சிக்கல் தீர...

சுத்தம் செய்த தொட்டாற்சிணுங்கி வேரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த வேரை மண் சட்டியில் இட்டு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து ஒரு பங்கு ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்ட வேண்டும்.

வடிகட்டிய இந்த நீரை கால் அவுன்சு(ஸ்) அல்லது அரை அவுன்சு வரை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் சம்பந்தமான நீர் அடைப்பு, கல் அடைப்பு ஆகியவை குணப்படும்.

தளர்ச்சி நீங்க... மலர்ச்சி ஓங்க...

தொட்டாற்சிணுங்கி வேரை சுத்தம் செய்து 40 கிராம் அளவு எடுத்து, மண் சட்டியில் இட்டு மூன்று பங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். நீர் ஒரு பங்கு ஆகும் வரையிலும் நன்றாகச் சுண்டக் காய்ச்சிக் கசாயமாக்க வேண்டும்.

சூடு தணிந்த பின் கசாயத்தை வடிகட்டி, அரை அவுன்சு வீதம் தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், தளர்ச்சி நீங்கி உடல் தேறுவதோடு சுக்கில (விந்தணு) இழப்பும் நீங்கும். இதனால் தான் தொட்டாற்சிணுங்கி வேர் 'காமவர்த்தினி’ என்றும் அழைக்கப்படுகிறது...

தமிழ்நாட்டிலும் இது தயாரிக்கபடுகிறது... மேலும் தகவல் அறிய Pad man திரைப்படம் பாருங்கள்...


நுண்ணலை அடுப்பின் தோற்றம்...


இரண்டாம் உலகப் போரின்போது விமானங்களையும், கப்பல்களையும் கண்டறிய உதவும் ரேடார்களில் (Radar) மேக்னட்ரான் (Magnetron) என்ற பொருள் பயன்படுத்தப்பட்டது.

அதன் அருகில் கைகளைக் கொண்டு சென்றால் குளிருக்கு இதமாக, வெதுவெதுப்பாக இருக்கும். பெர்சி ச்(ஸ்)பென்சர் என்ற அமெரிக்கர் அப்படி அடிக்கடி குளிர் காய்வார்.

ஒருநாள் ச்(ஸ்)பென்சர் குளிர்காய்ந்து கொண்டிருந்தபோது, அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த மிட்டாய் உருகிவிட்டது.

அப்போதுதான் அவருக்கு, இதைச் சமையல் உபகரணமாகப் பயன்படுத்தலாமே! என்று தோன்றியது.

ச்பென்சரும், அவரது உதவியாளர்களும் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். சோழன்பொரி  (Popcorn), பன்றி இறைச்சி போன்றவற்றைக் கொண்டு பரிசோதித்தார்கள்.

அடுப்பு \ சூளை (Owen) வைக்கப்பட்ட அவை, நன்றாகச் சமைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து, வர்த்தகரீதியாக நுண்ணலை அடுப்புக்கள் தயாரிக்கத் தொடங்கப்பட்டது.

1953-ம் ஆண்டில் உரிமம் பதிவு செய்யப்பட்டு, ஏழே ஆண்டுகளில் உலகின் வசதிமிக்க சமையலறைகளில் நுழைந்துவிட்டது  நுண்ணலை அடுப்பு...

ஒசாமா பின்லேடனே வந்து பக்கத்துல நின்னாலும் குழந்த முகமா சிறுச்சுட்டே போட்டோ எடுப்பாருடா அதிமுக எடப்பாடி...


புதுயுக மனிதன் திடீரென்று 50,000 ஆண்டுகளுக்கு முன் ஏன் உலகின் பிற பகுதிகளுக்கு பரவ ஆரம்பித்தான்?


இதற்க்கு காரணமாக பல விஞ்ஞானிகள் கூறுவது மூளையில் ஏற்ப்பட்ட ஒரு மரபனு மாற்றம் தான்.

இன்னும் சிலர் கூறுவது ஆப்பிரிக்காவில் மக்கள் தொகை அளவுக்கு அதிகமாகும் வரை இருந்து பின்னர் புலம் பெயர்ந்தனர் என்று...

பாஜக மோடியின் சாகர்மாலா திட்டப் பயணம்...


மக்களின் உதவியுடன் நகரை சுத்தப்படுத்தும் கொட்டகலை பிரதேச சபை...


சுற்றடல் வாரமாக 05-30-2018 தொடக்கம் 06-05-2018 வரை பிரகடனம் படுத்தபட்டுள்ளது...

இதற்கமைவாக  பல்வேறு நிகழ்ச்சிகள் கொட்டகலை பிரதேச   சபையின்  தலைவர் ராஜமணி பிரசாந்த் அவர்களின் ஆலோசனைக்கு அமைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது..

இன்றைய தினம் பாதை ஓரங்களில் இருந்த குப்பைக்குள் அகற்றப்பட்டன...

பாஜக மோடியின் நீட் தேர்வு யாருக்கானது..?


தூத்துக்குடி துப்பாக்கி சூடு...


ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்றது.

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் செல்வம், பசீர் கருத்து...

ஹார்ட் அட்டாக்... நம்ப முடியாத உண்மைகள்...


பாஜக மோடியின் வேலை வாய்ப்பு சாதனை...


கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 5,19, 075 (ஐந்து லட்சம்) வேலை இழப்பு. 50,000 நிறுவனங்கள் மூடப்பட்டது...

சூப்பர் அப்பு.. எங்களுக்கு என்ன வேலையா இல்ல. தினமும் ஒரு போராட்டம் தினமும் பிரியாணி...

பாஜக - அதிமுக - ஸ்டெர்லைட் ஆலையின் திருட்டு அரசியல்....


வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...


வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் ஓரிரு முறை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய இயக்குநரகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாலச்சந்திரன், தெற்கு அரபிக்கடல் மற்றும் வங்கக் கடல் பகுதியில் தென் மேற்கு பருவக் காற்று வலுவாக வீசுவதாகத் தெரிவித்தார்.

மத்திய வங்கக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடலோர பகுதியில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் ஓரிரு முறை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக வேலூரில் 9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாகக் கூறிய அவர், செய்யாறு, காஞ்சிபுரத்தில் தலா 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், அரியலூர், வந்தவாசி, தேவகோட்டை, திருப்பத்தூர், குமாரபாளையம், உள்ளிட்ட இடங்களில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றுமாலை கருமேகங்கள் சூழ்ந்து ஒருமணி நேரம் மழை கொட்டியது. பலத்தக் காற்றுடன் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சாவூரில் திருவையாறு, திருப்பந்துருத்தி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதேபோல், கும்பகோணத்திலும் மழைப் பொழிவு இருந்ததால் அப்பகுதியில் வெப்பம் தணிந்தது.

இதனிடையே, மத்திய வங்கக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடலோர பகுதியில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

அந்த கருப்பு அரசியல் என்னவென்று உங்களில் பலபேருக்கு இப்போது தெரியும்...


வேறேதும் தமிழகத்தில் நடக்கவில்லையா...? மறக்கடிக்கப்படுகிறோம்...

வாவ் சிக்னல்...


வாவ் சிக்னல் [wow signal] எனப்படும் பிரபலமான சமிக்ஞை [signal] 1977 ஆம் ஆண்டு வேற்றுகிரகவாசிகளைத் தேடும் பணியில் ஈடுபட்ட ஒரு ரேடியோ தொலை நோக்கியில் தென்பட்டது...

72 வினாடிகள் தொடர்ந்த இது சாஜிட்டேரியஸ் நட்சத்திரக்கூட்டம் [Sagittarius Constellation] இருக்கும் திசையில் இருந்து வந்தது.

40 ஆண்டுகளாக வேற்று கிரகவாசிகளால் அனுப்பப்பட்ட சமிக்ஞை எனக்கூறப்பட்டு வந்த இது தற்போது இரண்டு வால் நட்சத்திரங்களைச் சூழ்ந்த ஹைட்ரஜன் வாயுக் கூட்டத்தில் இருந்து வெளிப்படுவதாக உருதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அதே வால்நட்சத்திரங்கள் அதே பகுதியை கடக்கும் போது அதே போல் சமிக்ஞை வெளிப்படுவதை உருதி செய்துள்ளனர்...

அனைத்தும் அவர்களின் திட்டப்படியே நடந்துக் கொண்டிருக்கிறது...


இந்த ஆண்டின் மிகச்சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட புகைப்படம் இது...


தனது குட்டியுடன் கடும் வெயிலில் காட்டை கடக்க முயன்று களைப்படைந்த சிங்கத்தை கண்ட இந்த யானை தனது துதிக்கையை தாழ்த்தி அந்த சிங்க குட்டியை தனது துதிக்கையில் ஏற்றிக்கொண்டு தாய் சிங்கத்துடன் காட்டை கடந்தது...

பாஜக மோடியின் பார்வையில் தேசபக்தியும் தனியார்மயமே...


காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹசைன் மசூத்...


காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையர் ஹசைன் மசூத் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த காவிரி பிரச்சனையில், கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் 6 வார காலங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, மத்திய அரசு கர்நாடக தேர்தலை மனதில் வைத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணியை தள்ளிப் போட்டது. இதனால், பல்வேறு கண்டனங்களுக்கு மத்திய அரசு ஆளானது. இதனை தொடர்ந்து அமைக்கப்பட்ட குழுவில் தற்போது நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...

Government உண்மையான அர்த்தம்...


ஒடுக்கப்பட்ட வர்க்கம் என்று இங்கு எதுவும் இல்லை...


அதிகார வர்க்கம் தான் நிம்மதியாக வாழ்வதற்காக..

அவர்களை தவிர்த்து மற்ற அனைவரையும் சாதி, மத ரீதியாக பிரித்து..

அந்த சாதி, மதத்தில் இருக்கும் சில மனிதர்களை விலைக்கு வாங்கி..

இறுதிவரை மக்கள் தங்களுக்குள்ளே அடிப்பட்டு சாக வேண்டும் என நினைத்துதான் இந்த அமைப்பை கட்டமைத்து இருக்கிறார்கள்...

சோமாலியா - மீத்தேன் உண்மைகள்...


கொலஸ்ட்ராலை குறைக்கும் சூப்பர் பானம்...


உடல் எடை அதிகமானால் நீரிழிவு நோய், மூட்டுவலி, முதுகுவலி, என எல்லா நோய்களும் ஒவ்வொன்றாய் வர ஆரம்பிக்கும்.

உடலில் கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான சக்தியாக மாறி நமக்கு அன்றாட வேலை செய்ய ஆற்றல் தருகிறது.

ஆனால் இந்த கொலஸ்ட்ரால் அதிகமானால்இதயத்தின் ரத்த தமனிகளில் சென்று படிந்துவிடும். பின் இதய நோய்வரும் அபாயம் உள்ளது. கூடவே ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி என வரவேற்கத் தொடங்கி விடுவீர்கள்.

கொழுப்புமிக்க உணவுகளை சாப்பிட்டு, அதன் பின் நோயினால் வாழ்நாள் முழுவதும் ஏன் மருந்து மாத்திரைகளில் நாம் கழிக்க வேண்டும்? எனவே எதுவும் அளவோடு சாப்பிடுங்கள்.

உணவுக்கட்டுப்பாட்டின் மூலமாக கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். அதேபோல் உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமனாக இருப்பவர்கள் இந்த பானத்தை குடித்தால் கொலஸ்ட்ரால் படிப்படியாக குறையும்.

தேவையான பொருட்கள்...

வாழைப்பழம்- 1

ஆரஞ்சு- 1

பட்டைபொடி- அரை ஸ்பூன்

சோயா மில்க் - அரைக்கப்

வாழைப்பழத்தில் எல்லா விட்டமின்களும் உள்ளன. முக்கியமாய் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது ரத்தக்கொதிப்பை அண்ட விடாது.

ஏனெனில் பொட்டாசியம் ரத்தத்தில் உள்ள சோடியம் அளவைக் கட்டுபடுத்தும்.

ஆரஞ்சுபழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது. அது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவினைக் குறைக்கும். சோயா மில்க்கில் அதிகமாய் புரோட்டின் உள்ளது.

உடலுக்கு தேவையான போஷாக்கினை அளித்து அதிக கலோரிகளை எரிக்கிறது. பட்டை சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.

வாழைப்பழம் ஆரஞ்சு, தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்த பின் அதனுடன்சோயா மில்க் சேர்க்கவும். இதனை கிளாஸில் ஊற்றி அதனுள் பட்டைபொடியை சேர்த்து கலந்து பருகவும்.

இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் கொலஸ்ட்ரால் சேராது.

மேலும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு நாளடைவில் குறைந்து விடும்...

நம்ப முடியாத உண்மைகள்...


நீங்கள் வாழ்வில் என்னவாக ஆசை படுகிறேர்களோ , அல்லது உங்களுக்கு என்ன வேண்டுமோ, தினமும் அதை ஏழு நிமிடங்கள் கண்களை மூடி கொண்டு கற்பனையால் அதை உணருங்கள்..


அதை ஏற்கனவே அடைந்து விட்டதாக ஆழமாக உணருங்கள்...

நீங்கள் நினைத்தது நடக்கும்... நீங்கள் கேட்டது கிடைக்கும்.

நீங்கள் எதிர்பார்க்கும் கனவு வீடோ, பிடித்த காரோ, வாழ்க்கை துணையோ, உங்கள் கனவு நிறுவனமோ எதுவாகவும் இருக்கலாம், நீங்கள் பெற விரும்பும் சம்பளம், உயர் பதவி,. நீங்கள் அடைய விரும்புவதை எதுவாக இருந்தாலும், அதை ஏழு நிமிடங்கள் கண்களை மூடி கொண்டு கற்பனையால் தெளிவாக உணருங்கள்.

நீங்கள் கனவு வீட்டை உணர்ந்தால் கற்பனையால் அந்த வீட்டின் சுவற்றை தொட்டு பார்த்து சந்தோஷமடைவதாக உணருங்கள்..ஒவ்வொரு அறைகளாக உருவாக்கி சுற்றி பாருங்கள்...

நீங்கள் வாழ்க்கை துணை பற்றி உணர்ந்தால் கற்பனையால் வாழ்க்கை துணையின் கைகளை பற்றிகொண்டு நடப்பதாக உணருங்கள்..

நீங்கள் கனவு கார் பற்றி உணர்ந்தால் கற்பனையால் அதில் பயணம் செய்வது போல அல்லது அந்த புது காரின் ஸ்டிரிங்கை கைகளால் பிடித்து கொண்டு ஓட்டுவதாக உணருங்கள்..

கற்பனையில் எது செய்தாலும் அந்த தொடு உணர்வை நீங்கள் இப்போது உணர முடியும்..

இப்போது நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி, எங்கே இருந்தாலும் சரி அதை பற்றி துளியும் கவலைபட வேண்டாம்... எப்போது நடக்கும், கேட்டது எப்போது கிடைக்கும் என்பதை பற்றியும் ஆராய வேண்டாம்...அது உங்கள் வேலை அல்ல.

நீங்கள் எவ்வளவு தெளிவாக அக காட்சிகளாக பார்கிறேர்களோ / மனதால் உணர்கிறேர்களோ , அவ்வளவு சீக்கிரம் நீங்கள் நினைத்து நடக்கும்.

நீங்கள் கேட்டது உங்கள் கண்முன் இருப்பதாக, அவற்றுடன் வாழ்வதாக ஆழமாக நம்புங்கள், உணருங்கள்.

நான் கேட்டது எல்லாம் விரைவில் வந்தடையும் . பிரபஞ்சத்திற்கு நன்றி என்று மட்டும் மனதில் சொல்லி கொண்டே இருங்கள். மனதிற்குள் நிறுத்தாமல் சொல்லி கொண்டே இருங்கள். [ சக்திவாய்ந்த செயல்முறை ].

உங்கள் தெளிவான அக காட்சிகள், வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் கொண்டு வரும் நீங்கள் கேட்டது எவ்வளவு பெரிதாக இருந்தாலும்...

வைகோ நாயுடு வின் புரோக்கர் வேலை ஆரம்பம் உஷார்...


இந்த அமைப்பை தான் நாம் சிறந்த சனநாயகம், சுதந்திர இந்தியா என கூறிக்கொண்டு இருக்கிறோம்...


இந்த அமைப்பு வணிகர்களுக்காக கட்டமைப்பப்பட்டது...

தமிழ்நாடு தனி நாடாக அறிவிப்பதை தவிர வேறு வழியில்லை...


இதற்கு இந்த ஈனப்பிறவி அரசியல் வாதிகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்..

ஆனாலும் ரேஷன் கார்டு ஆதார் அட்டைகளை திருப்பி தர நம்மால் முடியும்.. இல்லையேல் இதெல்லாம் அள்ளி போட்டு கொளுத்தவும் முடியும்.

ஒரு மாநில மக்களின் குரல் உங்களுக்கு கேட்கவில்லை என்றால் ஒன்றுக்கும் உதவாத அரசை நம்பி இனி நாம ஏன் வாக்கு செலுத்த வேண்டும்..

நமக்கான ஆயுதம் ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகள்..

இது முடிவு அல்ல ஆரம்பம்...