காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையர் ஹசைன் மசூத் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த காவிரி பிரச்சனையில், கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் 6 வார காலங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, மத்திய அரசு கர்நாடக தேர்தலை மனதில் வைத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணியை தள்ளிப் போட்டது. இதனால், பல்வேறு கண்டனங்களுக்கு மத்திய அரசு ஆளானது. இதனை தொடர்ந்து அமைக்கப்பட்ட குழுவில் தற்போது நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.