09/06/2018

நுண்ணலை அடுப்பின் தோற்றம்...


இரண்டாம் உலகப் போரின்போது விமானங்களையும், கப்பல்களையும் கண்டறிய உதவும் ரேடார்களில் (Radar) மேக்னட்ரான் (Magnetron) என்ற பொருள் பயன்படுத்தப்பட்டது.

அதன் அருகில் கைகளைக் கொண்டு சென்றால் குளிருக்கு இதமாக, வெதுவெதுப்பாக இருக்கும். பெர்சி ச்(ஸ்)பென்சர் என்ற அமெரிக்கர் அப்படி அடிக்கடி குளிர் காய்வார்.

ஒருநாள் ச்(ஸ்)பென்சர் குளிர்காய்ந்து கொண்டிருந்தபோது, அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த மிட்டாய் உருகிவிட்டது.

அப்போதுதான் அவருக்கு, இதைச் சமையல் உபகரணமாகப் பயன்படுத்தலாமே! என்று தோன்றியது.

ச்பென்சரும், அவரது உதவியாளர்களும் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். சோழன்பொரி  (Popcorn), பன்றி இறைச்சி போன்றவற்றைக் கொண்டு பரிசோதித்தார்கள்.

அடுப்பு \ சூளை (Owen) வைக்கப்பட்ட அவை, நன்றாகச் சமைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து, வர்த்தகரீதியாக நுண்ணலை அடுப்புக்கள் தயாரிக்கத் தொடங்கப்பட்டது.

1953-ம் ஆண்டில் உரிமம் பதிவு செய்யப்பட்டு, ஏழே ஆண்டுகளில் உலகின் வசதிமிக்க சமையலறைகளில் நுழைந்துவிட்டது  நுண்ணலை அடுப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.