சூழலியல்வாதிகளே தடுப்பூசிக்கு ஆதரவாக பரப்புரை செய்யும் அவலம் எல்லாம் தமிழ்நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது...
02/09/2020
தடுப்பூசி என்ற கருத்தே இயற்கை வாழ்வியலுக்கு எதிரானது - ம.செந்தமிழன்...
சூழலியல்வாதிகளே தடுப்பூசிக்கு ஆதரவாக பரப்புரை செய்யும் அவலம் எல்லாம் தமிழ்நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது...
1922 வாக்கில் இந்திய ரூபாய் மதிப்பு 1அமெரிக்க டாலர்=1 இந்திய ரூபாய்...
இதற்க்கு பசு மாடு வளர்ப்பு மிகப்பெரும் காரணம் என்றால் நம்ப முடியுமா, நம்பித்தான் ஆகவேண்டும்..
2 பசு மாடு வளர்ப்பு மாதம் ரூ35000 கிடைக்கும்..
அது மட்டுமா..
பசுவின் பாலில் இருந்து தயிர், நெய், வெண்ணெய் போன்ற உணவு பொருட்களும், பசுவின் சாணம் எருவாட்டியாக அடுப்பெரிக்க உதவியதும்,
அந்த சாம்பல் கொண்டு பல் துலக்கியதும், திருநீர் செய்ய பயன்படுத்தப்பட்டதும்,
சாணம், தயிர், கோமேயம் இன்னபிற பொருட்களை கொண்டு பஞ்கவ்யம் எனும் உரம் செய்து விவசாயத்திற்கு பயன் படுத்தப்ப்ட்டது.
மேலும் கோமேயம் பூச்சி, புழு விரட்டியாக கூட உபயாகப்பட்டுள்ளது.
சரி இது அனைத்திற்க்கும் இந்திய ரூபாய் மதிப்பிற்க்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றால்...
காலையில் பல்விளக்க பேஸ்ட்,
அடுப்பெரிக்க அரபு நாட்டு பெட்ரோலிய பொருள்கள், கிருமி நாசினி டெட்டால், விவசாய உணவு உற்பத்திக்கு உரங்கள், உழவு செய்ய டிராக்டர்கள், அதற்காக பெட்ரோலிய பொருட்கள், விவசாய பண்ணை தொழிலுக்கு தேவையான பலவற்றை இறக்குமதி செய்யப்பட்டதன் விளைவு ருபாய் மதிப்பு குறைந்து கொண்டே வர ஆரம்பித்தது..
மேற்சொன்னபடி பசு வளர்ப்பில் கிடைத்த பொருட்கள் உபயோகிக்கப்பட்டதால் அன்று ரூபாய் மதிப்பு குறையாமல் இருந்து இருக்கும்..
இன்னும் சொல்லப்போனால் உளவு மாடு உபயோகம் ஒரு மாபெரும் வரப்பிரசாதம்,
நிலம் உழுதிட, விளை பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்ல,
மக்கள் வாகனப்பயன்பாட்டிற்க்கு என பலவகையில் உபயோகிக்கப்பட்டு உள்ளது.
இவை அனைத்தும் ரூபாய் மதிப்பு குறையாதிருக்க மறைமுக காரணங்களாக இருந்து இருக்கும்.
இப்போது ஜல்லிக்கட்டு தடையின் மாபெரும் உள்நோக்கத்தை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சற்று சிந்தித்துக் கொண்டே பசுவதை எதிர்ப்புக்கும் ஆதரவு குரல் கொடுக்க சிந்திக்கலாம்..
நாட்டு மாடு வகைகள்:
1.அத்தக்கருப்பன்
2. அழுக்குமறையன்
3.அணறிகாலன்
4. ஆளைவெறிச்சான்
5. ஆனைச்சொறியன்
6. கட்டைக்காளை
7. கருமறையான்
8. கட்டைக்காரி
9. கட்டுக்கொம்பன்
10. கட்டைவால் கூளை
11. கருமறைக்காளை
12. கண்ணன் மயிலை
13. கத்திக்கொம்பன்
14. கள்ளக்காடன்
15. கள்ளக்காளை
16. கட்டைக்கொம்பன்
17. கருங்கூழை
18. கழற்வாய்வெறியன்
19. கழற்சிக்கண்ணன்
20. கருப்பன்
21. காரிக்காளை
22. காற்சிலம்பன்
23. காராம்பசு
24. குட்டைசெவியன்
25. குண்டுக்கண்ணன்
26. குட்டைநரம்பன்
27. குத்துக்குளம்பன்
28. குட்டை செவியன்
29. குள்ளச்சிவப்பன்
30. கூழைவாலன்
31. கூடுகொம்பன்
32. கூழைசிவலை
33. கொட்டைப்பாக்கன்
34. கொண்டைத்தலையன்
35. ஏரிச்சுழியன்
36. ஏறுவாலன்
37. நாரைக்கழுத்தன்
38. நெட்டைக்கொம்பன்
39. நெட்டைக்காலன்
40. படப்பு பிடுங்கி
41. படலைக் கொம்பன்
42. பட்டிக்காளை
43. பனங்காய் மயிலை
44. பசுங்கழுத்தான்
45. பால்வெள்ளை
46. பொட்டைக்கண்ணன்
47. பொங்குவாயன்
48. போருக்காளை
49. மட்டைக் கொலம்பன்
50. மஞ்சள் வாலன்
51. மறைச்சிவலை
52. மஞ்சலி வாலன்
53. மஞ்ச மயிலை
54. மயிலை
55. மேகவண்ணன்
56. முறிகொம்பன்
57. முட்டிக்காலன்
58. முரிகாளை
59. சங்குவண்ணன்
60. செம்மறைக்காளை
61. செவலை எருது
62. செம்ம(ப)றையன்
63. செந்தாழைவயிரன்
64. சொறியன்
65. தளப்பன்
66. தல்லயன் காளை
67. தறிகொம்பன்
68. துடைசேர்கூழை
69. தூங்கச்செழியன்
70. வட்டப்புல்லை
71. வட்டச்செவியன்
72. வளைக்கொம்பன்
73. வள்ளிக் கொம்பன்
74. வர்ணக்காளை
75. வட்டக்கரியன்
76. வெள்ளைக்காளை
77. வெள்ளைக்குடும்பன்
78. வெள்ளைக்கண்ணன்
79. வெள்ளைப்போரான்
80. மயிலைக்காளை
81. வெள்ளை
82. கழுத்திகாபிள்ளை
83. கருக்காமயிலை
84. பணங்காரி
85. சந்தனப்பிள்ளை
86. சர்ச்சி
87. சிந்துமாடு
88. செம்பூத்துக்காரி
89. செவலமாடு
90. நாட்டுமாடு
91. எருமைமாடு
92. காரிமாடு...
திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் தமிழர்களை காயப்படுத்தும் விதமாக, இந்து விரோதப்போக்கினை பன்னெடுங்காலமாக தொடர்ந்து வருகிறார்....
தமிழர்களின் கடவுள் நம்பிக்கையை சீர்குலைப்பதோடு, எந்த வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில்லை...
இந்நிலையில் கேரள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்கு சமீபத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழர்களை புறந்தள்ளும், இத்தகையப் போக்கு திமுகவினருக்கே எரிச்சலை கிளப்பியுள்ளது...
குறிப்பு : தமிழர் பண்டிகைக்கு வாழ்த்துக்களை சொல்லி உற்சாகப்படுத்தி விட்டால்... பிறகு தமிழன் என்ற உணர்வு வந்துவிடும்..
அப்படி உணர்வு வந்துவிட்டால்.. திராவிடம் என்ற பெயரில் தெலுங்கர்களால் கார்ப்பரேட் அரசியல் வியாபாரம் செய்ய முடியாது...
பழந்தமிழர் திருமண மரபு...
திருமணம் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது..
பழந்தமிழர் வாழ்க்கையில் களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இருவகை ஒழுக்கங்களையும் கொண்டிருந்தனர்.
மணச்சடங்கினை பற்றி தொல்காப்பியம் கூறும் செய்திகளில், பழந்தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர்..
எண்வகை மணமுறைகள் நிகழ்ந்துள்ளன; பின்னர் இந்தச் செயல்பாட்டில் பொய்மையும், வழுவும் மிகுதிப்படவே அதனைக் களைய வேண்டி சில விதிமுறைகளை வகுத்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
மணத்தைக் குறிக்க பல்வேறு சொற்கள் பழந்தமிழரால் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடி, மணம், மன்றல், வதுவை, வதுவை மணம், வரைவு என அவை நீளும்.
சான்றாக, கல்யாணம் என்ற சொல் மணத்தைக் குறிக்கும் வகையில் நாலடியாரிலும், ஆசாரக் கோவையிலும் அமைந்துள்ளது.
கடி என்ற சொல்லுக்கு காப்பு என்று பொருள் கூறுவர். கடிமகள் வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து என்ற குறிப்பால் காப்பு என்ற பொருளில் கடி என்ற சொல் இடம் பெறுவதையும் காணலாம்.
சீவக சிந்தாமணியில் கடிசேர் மணமும் இனி நிகழும் காலமென்க' என்றும், கடிமணம் எய்தும் களிப்பினால் என்றும் வருகிறது.
சங்க இலக்கியங்கள் வாயிலாக தமிழரின் மணமாக மரபுவழி மணம், சேவை மணம், போர் நிகழ்த்தி மணம், துணங்கையாடி மணம், பரிசம் கொடுத்து மணம், ஏறு தழுவிய மணம், மடலேறிய மணம் ஆகிய மண முறைகளைக் காணமுடிகிறது.
காப்பியங்களில் காணப்படும் பண்டைத் தமிழரிடம் இடம்பெற்ற மண முறைகளைத்தவிர, பொருத்தம் பார்த்தல், மணநாள் குறித்தல், திருமண அழைப்பிதழ் அல்லது முரசு மூலமாக நகர மக்களுக்கு உணர்த்துதல், மணவினை நிகழும் இடத்தை அலகங்கரித்தல், சிறப்பு இறைவழிபாடு செய்தல், மங்கல ஒலி எழச்செய்தல், மணமேடை ஒப்பனை ஆகிய திருமண நிகழ்வுகள் காப்பியங்களிலும் இடம்பெற்றுள்ளன.
பழந்தமிழர் திருமணத்தை பெண் வீட்டில் நிகழ்த்துதலை மரபாகக் கொண்டனர்.
களவொழுக்கம் காரணமாக உடன்போக்கு நிகழும்பொழுது தலைவன் தலைவியைத் தன்னுடன் தனது இடத்திற்கு அழைத்துச் சென்று மணம் செய்துகொள்வதும் மரமாக இருந்துள்ளது.
கற்பு மணம் பெரும்பாலும் மணமகள் இல்லத்திலேயே நிகழ்ந்திருக்கிறது. இதை,
நும்மனைச் சிலம்பு கழீஇயயரினும்
எம்மனை வதுவை நன்மணங்கழிகெனச்
சொல்லி னெவனோ மற்றே வெண்வேல்
வையற விளங்கிய கழலடிப்
பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே!
என்ற ஐங்குறுநூறு பாடலால் அறியலாம்.
ஒரு பெண் மணவினை நிகழும் வரை பிறந்த வீட்டை விட்டு வெளியே வருதல் கூடாது.
பிறர் மனையில் தங்கவும் கூடாது என்ற கொள்கையின்படி பரிசம் போடுதலும், பெண் வீட்டில் திருமணம் செய்தலும் இடம்பெறுவது தமிழர் வழக்கமாக இருந்திருக்கிறது.
காப்பிய காலத்திலும் பெரும்பாலும் மணமகள் வீட்டிலேயே மணவினை நிகழ்ந்துள்ளது.
இன்று அவரவர் வசதிக்கு ஏற்ப இறைவன் முன்னிலையில், திருமணக்கூடம், மணமகன் இல்லம் ஆகிய இடங்களிலும் மணம் நிகழ்த்துதல் இடம்பெறுகிறது.
பழங்காலத் தமிழரின் மண மரபில் இடம்பெற்ற மணவினைச் செயல்கள் காப்பியங்களில் காணப்பட்டாலும் புதியவைகளும் இடம்பெற்றுள்ளன.
பழந்தமிழர்களிடம் இல்லாத வேள்வித் தீ வளர்த்தல் என்பது சிலப்பதிகாரம், பெருங்கதையில் காணப்படுகிறது. காப்பு நூல் கட்டுதல், மங்கல நீர் கொண்டு வருதல், மண மக்கள் ஒப்பனை, மணமகன் அழைப்பு, அம்மி மிதித்தல், பாத பூசை செய்தல், அருந்ததி காட்டல், அறம் செய்தல், மங்கல அணி, சீதனம் கொடுத்தல் முதலிய புதியவைகளும் இடம்பெற்றன.
தமிழர்கள் திருமண முறைகள் பலவாக இருந்தாலும், இருமணம் ஒத்தே வாழ்க்கை நடத்திக் குடும்ப முறைகளைப் பாரம்பரியமாகப் பறைசாற்றி வருகின்றனர் தமிழர்கள்...
கர்நாடக சங்கீதம் தமிழிசையே...
நிறுவிய கிறித்தவரும்
ஆராய்ந்த இசுலாமியரும்
தமிழிசையே இப்போது 'தென்னிந்திய இசை' என்றும் 'கர்நாடக சங்கீதம்' என்றும் வழங்கப் படுகிறது..
வட இந்திய இசை அல்லது 'ஹிந்துஸ்தானி இசை' இந்தத் தமிழிசையின் ஒரு 'வளர்ச்சி நிலையே' என்றும் தெரிய வருகிறது..
தமிழ்நாட்டு வரலாற்றை நாம் கூர்ந்து பார்க்க வேண்டும்..
கி.பி. 3 ம் நூற்றாண்டு முதல் 6ம் நூற்றாண்டு வரை இங்கே களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது.
தொடர்ந்து 20 ம் நூற்றாண்டு வரை தமிழகம் மாறி மாறி பிறமொழி மன்னர் குலங்களால் தான் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.
இடைக் கால சோழர் ஆட்சியும் இடைக் கால பாண்டியர் ஆட்சியும் சிறு இடைவெளிகள் தான்.
இந்தப் பிறமொழி ஆதிக்கம் காரணமாக தமிழ்க்கலைகள் பல ஆதரிப்பார் இல்லாமல் அழிய நேரிட்டது.
பல்லவர்கள் வடமொழிக்கும், தெலுங்குக்கும் முக்கியத்துவம் அளித்தனர்.
நாயக்கர் காலம் தெலுங்கு காலகட்டம்.
பிறகு மாரட்டியரின் காலகட்டம்.
இந்தக் கால கட்டங்களில் பொதுவாக தமிழ்க் கலைகளுக்கு சரிவும், தொடர்ச்சியறுதலும் நிகழ்ந்தன..
பிற மொழியினர் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் வடமொழியிலும், தெலுங்கிலும் எழுதினார்கள்.
வடமொழி என்பது இந்தியா முழுக்க தொடர்பு ஏற்படுத்தித் தரும் தொடர்பு மொழியாக இருந்தது. தெலுங்கு ஆட்சி மொழி. இன்று ஆங்கிலம் நமக்குக் கவர்ச்சியான மொழியாக இருப்பது போல வடமொழியும், தெலுங்கும் உயர்குடி மொழியாகவும் கருதப்பட்டன..
இசை முற்காலத்தில் அரச சபைகளையே பெரிதும் நம்பியிருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
அரச சபை தெலுங்கிற்கும், வடமொழிக்கும் முக்கியத்துவம் தரும் போது பாடகர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் வேறு வழி இல்லை..
சரி, இந்த இசையமைப்பு தமிழ்நாட்டுக்கு உரியது என்பதற்கு என்னஆதாரம்?
நமது பண்டைய இலக்கியங்களே முதல் ஆதாரங்கள்.
ஆபிரகாம் பண்டிதர் அதை விரிவாக நிறுவியிருக்கிறார்.
நான்கு வகை நிலங்களாக இயற்கையைப் பிரித்தது தமிழ் மரபு.
நான்கிற்கும் கருப்பொருள், உரிப் பொருள் வகுத்தது.
இது நமது கலை இலக்கியங்களுக்கெல்லாம் பொதுவான இலக்கண அடிப்படையாகும்.
நான்கு நிலத்திற்கும் தனியாக நான்கு பெரும் பண்கள் கூறப்பட்டுள்ளன.
நான்கு பெரும் பண்களும்.நான்கு சிறு பண்களும் வகுத்துக் கூறப்பட்டுள்ளன.
நான்கு நிலங்களும், பாலையாகத் திரிபு கொள்ளும் போது அதற்கும் பெரும் பண் சிறு பண் வகுக்கப்பட்டுள்ளது.
பண்கள் தான் இராகங்களாக காலப்போக்கில் வளர்ச்சி அடைந்தன..
நான்குநிலத்திற்கும் உரிய பெரும்பண்களை பாலை
என்கிறோம்..
நமது பழந்தமிழ் இலக்கியங்களில் 'ஏழ்பெரும் பாலை' என்பது அடிக்கடி குறிப்பிடப் படுகிறது.
சிலம்பு (உரையாசிரியர்கள்) கூறும் வட்டப் பாலை முறையில் ஏழ் பெரும் பாலைகளை அமைத்து கூறியவர் பண்டிதரே.
ஏழ்பெரும் பாலைகளாவன:
1. செம்பாலை
2.அரும்பாலை
3.கோடிப்பாலை
4.மேற்செம்பாலை
5.படுமலைப்பாலை
6.செவ்வழி
7.விரிம்பாலை
இந்த ஏழு பண்களையும் வட்டப் பாலை முறையில் அமைத்துக் காட்டியவர் பண்டிதரே.
வட்டப் பாலை முறையில் ராகங்கள் எப்படி அமைகின்றன என்று கண்டடைந்து சொன்னதே பண்டிதருடைய முக்கியமான சாதனையாகும்..
எல்லாருக்கும் புரிகிற,தெரிந்த உதாரணம் சொல்கிறேனே.
சிலப்பதிகாரத்தில் 'ஆய்ச்சியர் குரவை' என்ற பாடல் பகுதி வருகிறது.
அது "முல்லைத் தீம்பாணி" என்று குறிப்பிடப் படுகிறது..
‘சரிகபத ‘ என்பது அதன் சுரம்.
இந்த முல்லைத் தீம்பாணி தான் இன்றைய"மோகனராகம்"
கர்நாடக இசை என்ற பெயர் எப்படி வந்தது?
தியாகராஜர் சென்னையைத் தாண்டிப் போனதே இல்லை.
ஒருமுறை திருப்பதி போனதாக தகவல்.
அவர் பாடியதெல்லாம் இங்கே இருந்துதானே?
கர்நாடக இசை என்ற பெயரெல்லாம் பிற்பாடு வந்தது.
பெயர் மாறினால் என்ன?
ருக்மிணி தேவி அருண்டேல் சின்னமேளம் அல்லது சதிர் கச்சேரியை பரதநாட்டியம் என்று பெயர் மாற்றினார்.
பெயர் மாறினால் மரபு மாறுமா?
கேரளத்திலிருந்து திருவிழா ஜெய்சங்கரும்,ஆந்திராவிலிருந்து லால்குடி ஜெயராமனும் ஒரே இசைதானே பாடுகிறார்கள்?
ஆபிரகாம் பண்டிதர் பற்றி...
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் மங்கியிருந்த தமிழ் மரபிசையை, தமிழ் இலக்கிய அறிவுடன் புதுப்பொலிவு செய்தவர் ஆபிரகாம் பண்டிதர்..
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இந்திய இசை ஆராய்ச்சி மற்றும் இலக்கிய ஆராய்ச்சியின் வழியாக,
தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிறபகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்த முன்னோடி ஆய்வாளர்..
சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைகுறித்த செய்திகள் இன்றைய கருநாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதை பண்டிதர் சுட்டிக் காட்டினார்.
இன்றைய ராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிரூபித்தார்.
இராகங்களை உண்டு பண்ணும் முறை,பாடும் முறை ஆகியவற்றை
பழந்தமிழ் இசையிலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து அறிந்து விளக்கிக் காட்டினார்.
அவையே இன்றும் இசையில் அடிப்படைகளாக உள்ளன..
பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917இல் பெரும் இசை நூலாகக் 'கருணாமிர்த சாகரம்' என்ற பெயரில் வெளியிட்டார்.
1395 பக்கங்கள் உடையது இந்நூல்.
இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது...
கடவுள் படைத்தாரா ?
கடவுள் மனிதரை படைத்தாரா என்ற கேள்விக்கு பதில் இருக்கிறதோ இல்லையோ கடவுளை படைத்தது மனிதன் என்பது மட்டும் உண்மை.
அதிலும் மற்ற கடவுளைவிட பிள்ளையாருக்கும், அம்மனுக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது.
மற்ற எல்லா கடவுளுக்கும் குறிப்பிட்ட அவதாரமுண்டு. ஆனால் பிளேக் மாரியம்மன், மைதான மாரியம்மன், தண்டு மாரியம்மன், வேலை கொடுக்கும் பிள்ளையார், இரட்டை விநாயகர், வினை தீர்க்கும் பிள்ளையார் என தெருவுக்கு ஒரு அவதாரம் எடுப்பது இவர்கள் மட்டும்தான். இப்படி மனிதனுக்கு வழிபட கண்டிப்பாக ஒரு உருவம் தேவைப்படுகிறது.
கி மு 483 ல் புத்தர் இறந்தபோது, அவர் உடல் எரிக்கப்பட்டதாம். அதன் சாம்பலை மற்ற நகரங்களுக்கு அனுப்பியதாக ஐதீகம்.
புத்தரின் பல் ஸ்ரீலங்காவில் கண்டியில் மிகவும் ஆரதிக்கப்படுகிறது. ஏதோ ஒரு விதத்தில் வழிபட மனிதனுக்கு அடையாளம் தேவைப்படுகிறது. புதைத்த இடம், எரித்த இடம், மறைந்த இடம், பல், செருப்பு.... இப்படி ஒரு அடையாள ஸ்தலம் இல்லையென்றால் மனித மனம் தவிக்கிறது.
உங்கள் வாழ்க்கை சீராக Highway ல் கார் செல்வதுபோல் சென்றால் பதசஞ்சலிலும் வேண்டாம்; பாதராயணரும் வேண்டாம். ஆனால் அந்த பயணத்தில் சிறு பிரச்சனையை வரும்போதுதான் கடவுளை பற்றிக்கொள்ள மனம் பதப்பதக்கிறது. மனித மனத்தை பொறுத்தவரை, ஒரு கண் கண்ணாடி or ஒரு கைதடி போன்றது கடவுள்.
பக்தி vs ஆன்மீகம்...
பக்திக்கும், ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாடு பலருக்கும் தெரிவதில்லை.
பக்தி ஒன்றை பற்றிக்கொண்டு திரும்ப, திரும்ப அதையே செய்வது. பல ஆண்டுகளாக பக்தி பாடல்களையும், ஸ்லோகங்களும் பாடி பூஜை செய்யும் பலரை நமக்கு தெரியும்.
ஆனால் தாம் தினமும் சொல்லுகின்ற , ஸ்லோகங்களுக்கு அர்த்தம் அவருக்கு தெரியாது. இது போன்ற பக்தியைத்தான் கடவுள் நம்பிக்கையென்று நம் வருங்கால சந்ததிக்கு சொல்லிக் கொடுக்கிறோம்.
ஆன்மீகம் என்பது தன் நிலை உணர்தல். தனக்குள் இருக்கும் கடவுளை தேடுவதாகும் (அகம் பிரம்மாஸ்மி).
யார் கடவுள்...?
நம் மக்களிடையே எஞ்சி நிற்பது வெறும் பக்திதான். மற்ற மொழிக்கில்லதா தனிச் சிறப்பு தமிழுக்கு உள்ளது. தமிழை வளர்த்ததில் பெரிய பங்கு பக்திக்கு உண்டு. தமிழில் உள்ள சிறப்பான நூல்கள் யாவும் பக்தி இலக்கியங்களே. தேவாரம், திருவாசகம், திருப்புகழ், ஆண்டாள் பாசுரம் என தமிழை வளர்த்தது பக்திதான்.
இதுபோன்ற விஷயங்களை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து ஜோதிடம், ஜாதகம், வாஸ்து என மனிதரை பயப் படுத்துகின்றவற்றை தான் நாம் கட்டி காப்பாற்றுகின்றோம். மெள்ள ஒரு மதத்தின் ஆரம்பகால காரணங்கள் விலகிப்போய், அதன் சடங்குகள் மட்டும் மிச்சமிருக்கும்நிலை, எல்லா மததிற்க்கும் வெவ்வேறு அளவில் உண்டு.
கடவுளை எப்படி உணர்வது..
நாம் எப்படி கடவுளை வணங்குகின்றோம்? வழியில் கடந்து செல்லும்போது வருகின்ற பிள்ளையார்; வண்டியில் செல்லும்போது ஒரு நொடிப் பொழுதில் கடக்கும் முருகன்; சினிமா அரட்டை அடித்துக்கொண்டு கடவுளை தரிசிக்க செல்வது; பிரசாதத்திற்காக கோயிலுக்கு செல்வது இவைதான் பக்தியா ?
திருச் சிற்றம்பலம்..
மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்த்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே.
கடவுளை பார்த்தவுடன் உடலும் மனமும் நடுங்கி உடலெல்லாம் வியர்த்து, கண்ணீர் ததும்ப்பி, பொய்களை தவிர்த்து கைகளை நெகிழ்ந்து கடவுளை கும்பிடுவதாக மணிக்கவாசகர் கூறுகிறார்.
இந்த உணர்வு எனக்கு கடவுளை பார்த்தவுடன் வரவில்லையே? ஆனால், ஒரு கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓவருக்கு 19 ரன்கள் தேவைப்படும் போதும், அந்த ஆட்டத்தை என்னுடைய அணி வெற்றிப் பெறும்போது என்னால் அதை உணர முடிகிறதே (மணிகவாசகருக்கு ஏற்பட்டதுபோல்). அப்போது கிரிக்கெட் தான் கடவுளா? எது ஒன்று மனிதனை மனம் நெகிழ செய்கிறதோ அதுதான் கடவுளாக இருக்க முடியும்.
பாரதியின் பார்வை..
நாம் எதையெல்லாம் கடவுள் வழிபாடு என்று நினைக்கிறோமோ அந்த எல்லாவற்றையும் உடைத்து எறிகிறான் பாரதி.
காவித் துணிவேண்டா,கற்றைச் சடை வேண்டா;
பாவித்தால் போதும் பரமநிலை யெய்துதற்கே.
சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங் ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா.
தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா.
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தை செய்தாற்போதுமடா.
கடவுளை உணர்வதற்கு எந்த வகையான உடையோ , அணிகலனோ தேவையில்லை. உன்னை உணர்ந்தால் போதும் என்கின்றான் பாரதி.
எந்த தோத்திரங்கள் தேவையில்லை அவனை உன் மனதால் வணங்கி நின்றால் போதும் என்கிறான்...
எண்ணமின் அலைகளின் பயணம்...
நம் மனம் மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளது.
எனவே பிரபஞ்சமே மனம் என்பதால் நமக்கு வேண்டிய தகவலை எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அடுத்த கனமே பெற முடியும்.
அப்படி பெற்று அதை ஆழ்மனம் சீர்படுத்தி மூளையின் வழியாக பிரபஞ்சத்தில் எண்ணமின் அலைகளாக வெளிப்படுத்தும்.
அந்த அலைகளின் மின் ஆற்றலை பொருத்து அதன் தூரம் நிர்ணயிக்கபடும்.
அதற்கு தேவையான ஆற்றல்தான் நாம் மூச்சு பயிற்சியின் மூலமும் தியானத்தின் மூலமும் பெறும் பிராண சக்தி.
அபரிமிதமான பிராண சக்தி உடைய சித்தர்கள் எது நினைத்தாலும் நடப்பதற்கு இதுவே காரணம்.
எனவே நாம் செய்ய வேண்டியது நமக்கு தேவையானதை பற்றி ஆழமாக சிந்தித்து வலிமையான அலைகளை வெளிபடுத்த வேண்டும்.
அப்படி செய்யும் போது அந்த அலைகள் அதற்கு ஒத்தவற்றை ஈர்ப்பு விசையின் உதவியுடன் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
எழுத்து வடிவத்தில் இதை விளக்குவது சற்று கடினம் என்பதால் முடிந்தவரை விளக்கியுள்ளேன். கூடிய விரைவில் இதனை காட்சிகளாக காண்பிக்கிறேன்...
உளுந்து - மருத்துவப் பயன்கள்:..
நோயின் பாதிப்பு நீங்க...
கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.
இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.
உடல் சூடு தணிய:
இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.
உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
தாது விருத்தியாக:
உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.
உளுந்து வடை:
உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.
எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு:
தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.
இடுப்பு வலுப்பெற:
சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.
இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.
குழந்தைகளுக்கு:
சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.
பெண்கள்:
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்...
திமுக - காங்கிரஸ் - நீட் தேர்வும் தமிழன அழிப்பும்...
இந்தியாவில் நீட் தேர்வை கொண்டு வர திட்டம் கொண்டு வந்தது காங்கிரசு...
முதன் முதலில் தமிழகத்தில் நீட் தேர்வு முறைக்கு அனுமதி கொடுத்தது திமுக..
எல்லாம் காலக்கொடுமை, இந்த உலகத்திலியே தான் கொண்டு வந்த திட்டத்திற்கு தானே ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் இருப்பது நம்ம திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.
நீதிமன்றத்திலும் தமிழக மாணவர்களுக்கு எதிராக வாதாடி சதி செய்ததும்.. இதே திமுக காங்கிரசு வழக்கறிஞர்கள் தான்..
இந்த தகவலை விபச்சார ஊடகங்கள் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு மறைக்கின்றது.
இளைய சமுதாயமே விழித்தெழுங்கள்...
குண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்...
குண்டலினி சக்தியை யோக வலிமை உள்ளவர்கள் மட்டுமே எழுப்ப இயலும்.
புத்தகம் படித்து பத்மாசனம் போட்டு குண்டலினி எழுப்புகிறேன் என்றால் நித்யானந்தா சீடர்கள் போல துள்ளி துள்ளி குதிக்க வேண்டியதுதான்.
அலை மனம் நிலை மனம் ஆனால் இறைவனை காணலாம் என்ற சித்தர்களின் தத்துவப்படி மனதை நிலை நிறுத்தும் பயிற்சி புரிவோர்க்கு சிரம் தாழ்ந்த வணக்கம்...
குண்டலினி பயிற்சி பெறுபவர்களுக்கு சோதிட ரீதியாக ஒரு குறிப்பு...
கிருத்திகை நட்சத்திரமும் ஞாயிற்றுகிழமையும் இணைந்த நாளில் ஆக்னியை நினைந்து தவமிருந்தால் குண்டலினி சக்தி ஏறும்.
இது புலிப்பாணி,அகத்தியர் சொன்ன நல்ல நாள் தான். நான் சொல்வது அல்ல.
மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களான; மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரா இவை பல அபூர்வ சக்திகளை எழுப்பி தர வல்லவை. பல அற்புதங்களை செய்பவர்கள்...
உடலில் இந்த குறிப்பிட்ட சக்கரங்களில் ஒன்று வேலை செய்வதால் தான்.. சாதரண மனிதனுக்கு இவை உறங்கி கொண்டிருக்கும்.
இவை சுழல ஆரம்பித்துவிட்டால் அவனுக்கு எல்லா சித்துகளும் கைவரும்.
நட்சத்திரங்கள் பொறுத்து சித்து வேலைகளையும், யோக பயிற்சிகளையும் நம் சித்தர்கள் மேற்க்கொண்டனர்., மிருகசிரீடம், அவிட்டம், உத்திரம், உத்திராடம், கிருத்திகை போன்ற நட்சத்திரங்கள் யோக பயிற்சிக்கு சிறந்த நாட்கள்...
மகம், மூலம் நட்சத்திரம் வரும் நாளில் குருவை வணங்கி பயிற்சி தொடங்க சிறந்த நாள் ஆகும்...
ஆன்மா, ஆன்மீகம், மன அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம் பற்றி அறிவோம்...
நம் ஆன்மா என்பது என்ன என்று கேள்வி கேட்பவர்கள் உள்ளனர்.
பலருக்கு இது குறும்புக் கேள்வி.
சிலருக்கு இது புரியாத புதிர்.
மிகக் சிலர் கொஞ்சம் புரிந்தவர்.
வெகு சிலர் அதிகம் புரிந்தவர்.
நன்கு புரிந்தவர்கள் சொற்பம்.
அவர்களிடமிருந்து கேள்விகள் வராது.
ஆன்மாவைப் பற்றி அறிய விரும்புவோர்க்கு இந்த பதில்...
இறந்த மனிதனிடம் எது இல்லையோ, அதுவே வாழும் மனிதனுக்கும், இறந்தவனுக்கும் உள்ள வித்தியாசம் -ஆன்மா..
அது மின்சாரம் போன்ற ஒரு சக்தி என்று வைத்துக் கொள்ளலாம்.
அது இல்லை எனில் உயிர் இல்லை.
சக்தி இல்லை எனில் சவம்.
இந்த ஆன்மாவை உணர்வது ஆன்மீகம்.
ஆன்மீகம் என்பது நம்மை உணர்வது.
கடவுள் வழிபாடு குறித்த நேரடி வார்த்தை அல்ல...
பேய்மிரட்டி (ANISOMELES MALABARICA)...
1) மூலிகையின் பெயர் - பேய்மிரட்டி.
2) தாவரப்பெயர் - ANISOMELES MALABARICA.
3) தாவரக்குடும்பம் - LAMIACEAE.
4) வேறு பெயர்கள் - இரட்டைப் பிரமட்டை, இரட்டை பேய்மிரட்டி, எருமுட்டைப் பீ நாறி, சற்று வட்டமான இலையுடைய இனம் ஒற்றைப் பேய் மிரட்டி எனவும், வெதுப்படக்கி எனவும் அழைக்கப் படுகிறது.
5) தாவர அமைப்பு - இது தமிழகமெங்கும் தானே வளர்கிறது. எதிரடுக்கில் அமைந்த வெளிரிய வெகுட்டல் மணமுடைய நீண்ட இலைகளையும் வெளிரிய கருஞ்சிவப்பு மலர்க் கொத்தினையும் உடைய செடி. சுமார் மூன்றடி உயரம் வளரும். வரட்ச்சியைத் தாங்கக் கூடியது. விதை மற்றும் தண்டுகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.
6) பயன் படும் பாகங்கள் - செடி முழுதும். (சமூலம்).
7) மருத்துவப் பயன்கள் - பசி மிகுத்தல், குடல்வாயு அகற்றல், வியர்வை பெருக்குதல், காச்சல் தணித்தல், சதை நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்தல், அசிவு தணித்தல் ஆகிய குணங்களை உடையது.
பேய் மிரட்டியினால் கணமாந்தம், பேதி, வயிற்று நோய், கரப்பான், கோரசுரம்
போகும்.
பேய்மிரட்டிப் பூண்டால் கழிச்சல், மாந்த சுரம், வீக்கம், பேய்மிரட்டு என்னும் படியான கிரக தோஷம் முதலியன போகும் என்க.
உபயோகிக்கும் முறை - இதன் சமூலம் கசப்புச் சுவையுள்ளது இதைக் கியாழமிட்டுக் கொடுக்க வாந்தி பேதி, இருமல், சீதசுரம் போம். ஒரு பலம் சமூலத்தைத் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு அரைப்படி சலம் விட்டு 1/8 படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் தினம் 2 வேளை கொடுக்கலாம். அல்லது கால் ரூபாய் எடை ஓமத்தையும் கால் ரூபாய் எடை மிளகையும் ஒரு புது சட்டியில் போட்டு அடுப்பிலேற்றி வறுத்துக் கரியான சமயம் கால் படி சலம் விட்டு ஒரு பலம் பேய்மிரட்டி இலையைக் குறுக வரித்து சேர்த்து நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் தினம் 3 வேளை கொடுக்கலாம். இத்தகையக் கியாழங்கள் குழந்தைகளுக்குப் பல் முளைக்கும் சமயம் காணுகின்ற பேதியைக் குணப்படுத்த இன்றியமையாத தாகும். இதன் மூலத்தை ஒரு பெரிய பாண்டத்தில் போட்டுச் சலம் விட்டு கொதிக்க வைத்து வேது பிடிக்கச் சுரம், தலைவலி முதலியன போம்.
இலையைக் கொதிக்க வைத்து வேது பிடிக்க விடாத வாதசுரம் தீரும்.
இலைச் சாற்றை 5 துளி வெந்நீரில் குழந்தைகளுக்குக் கொடுக்க பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி தீரும்.
இலையை நீரில் கொதிக்க வைத்துக் காலை, மாலை குடிக்கச் சீதவாதசுரம், முறை சுரம், மலக்கழிச்சல் தீரும்.
ஒரு பிடி நெற்பொறி, 2 இலை நீரில் காய்ச்சி மணிக்கு ஒரு முடக்குக் கொடுத்து வரக் காலரா தீரும்.
10 கிராம் மிளகையும் 3 கிராம் ஓமத்தையும் புது சட்டியிலிட்டு வறுத்துக் கருகிய சமயம் அரை லிட்டர் நீர் சேர்த்து கொதிக்கும் போது 40 கிராம் பேய் மிரட்டி இலைகளைச் சிதைத்துப் போட்டு 125 மி.லி. யாகக் காய்ச்சி 15 மி.லி. யாக மூன்று வேளை கொடுத்து வர குழந்தைகள் பல் முளைக்கும் போது காணும் மாந்தம் குணமாகும்.
இந்த இனத்தில் இலை நீளமாக இருப்பதை இரட்டைப் பேய்மிரட்டி என்றும் இலை வட்டமாக இருப்பதை ஒற்றைப் பேய் மிரட்டி என்றும் கூறுவதுண்டு. இவை முறையே ஆண் பெண் எனக் கருதப் படுகின்றன. ஆண் பிள்ளைகளுக்குக் காணுகின்ற நோயிக்கு பெண் இலையும், பெண்களுக்குக் காணுகின்ற நோய்களுக்கு ஆண் இலையும் சிகச்சைக்கு ஏற்றது என்பது அறிவாளர்களின் கருத்து.
பேய்பூதகண தோஷங்களுக்கு வேப்பிலையைக் கொண்டு மந்திரித்து அடிப்பதைப் போல் பேய் மிரட்டி இலைகளையும் கத்தையாகக் கட்டிக் கொண்டு அடிப்பது வழக்கம் ஆகையால் இது பேய் மிரட்டி எனக் கூறப்பட்டது.
பேய் மிரட்டியின் இலையானது வெதுப்படக்கும் என்றும் வெளுப்பான பேதி, கிலேஷ்மகிரகணி, தாபம், ரூட்சை அள்ளு மாந்தம், வாதாதிக்கம், உட்சுரம், ரத்த தாது விலுண்டாகின்ற மலினம் ஆகியவற்றைப் போக்கும் என்க.
பேய்மிரட்டியின் பச்சிலையை அகல் விளக்கில் திரியாகப் போட்டால் ஒளிரும்.
சமூலம் - ஒரு செடியின் வேர், இலை, தண்டு, பூ, பட்டை எல்லாம் சேர்த்து என்று பொருள். வையித்தியத்தில் உபயோகிக்கும் சொல்.
கோரசுரம் - கடுமையான சுரம் என்று பொருள்.
கியாழமிட்டு - திரவமாக கூழ் போன்று அரைப்பது என்று பொருள்.
அள்ளுமாந்தம் - குழந்தையின் வயறு எக்கி வியாதியால் துன்பப் படுவது.
ரூட்சை - என்பதும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு வித நோயாகும்...
இமயமலையில் தமிழர் சுவடுகள்...
இமய மலையில் Chola pass (சோழ அல்லது சோல கணவாய்) என்ற இடம் இன்றும் உள்ளது.
அதன் அருகிலேயே Tiger hill என்ற இடமும் உள்ளது.
கரிகாலன் இமயம் வரை படையெடுத்து வென்ற காலம் கி.மு.44 முதல் கி.மு.27 க்கு இடைப்பட்ட 15 ஆண்டுகளில் நடந்திருக்கவேண்டும் என்பது திரு.ராசமாணிக்கனாரின் கணிப்பு.
சரி. சங்ககால நூல்கள் என்ன சொல்கின்றன?
சிலப்பதிகாரத்தில் கரிகாலன் இமயம் வரை சென்றவன்,
இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன்,
வழியில் இருந்த அரசரிடம் பரிசு பெற்று மீண்டவன் என்று கீழ் கண்ட வரிகளின் மூலம் கூறப்படுகிறது.
“பகைவிலக் கியதிப்
பயங்கெழு மலையென
இமையவர் உறையும் சிமயப் பீடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையிற்” .
கலிங்கத்துப் பரணியில் இமயத்தில் புலிக்கொடி என்ற பகுதி உள்ளது. அதில்,
“செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிம
சிமய மால்வரை திரித்தருளி மீள வதனைப்
பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்
பாய்பு லிக்குறிபொ றித்தது மறித்த
பொழுதே.”
கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதைக் கூறுகிறது.
12ம் நூற்றாண்டில் சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தில் திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், செய்யுள் 85ல்..
"இலங்குவோர் கரிகால்பெருவளத்தோன் வன்திரள் புலி
இமயமால் வரைமேல் வைக்க வெகுவோன்"
என்றும்,
அதே நூலில் எறிபர்த்தர் கதையில்..
"பொன்மலைப் புலிவென்று ஓங்கப்
புதுமலை இடித்துப் போற்றும்
அறநெறி வழியோட
அயல் வழி அடைத்த சோழன்"
என்றும் கரிகாலன் இமயமலையில் வெற்றிக்கொடி நாட்டியதைக் கூறுகிறார்..
மேற்கண்டவற்றில் இருந்து கரிகாலன் தமிழகம் முழுவதையும் வென்று கடற்கரையை ஒட்டியவாறு தற்போதைய ஆந்திர, ஒரிசா, மேற்குவங்க மாநிலங்களை வென்று (அப்போது அங்கே அவந்தி, வச்சிரம் ஆகிய நாடுகள் இருந்துள்ளன) கங்கையைத் தாண்டி சிக்கிம் வழியே முன்னேறி எவரெஸ்ட் அடிவாரத்தில் கணவாய் தோண்டி இமயமலையைக் கடந்து சென்று போர்புரிய முயன்றதாகத் தெரிகிறது..
கரிகாலன் தோண்டிய கணவாய் சோழ கணவாய் என்றும்
அவன் புலிக்கொடி நாட்டிய இடம் புலிக்குன்று என்றும் அழைக்கப்படுவதாகக் கொள்ளலாம்..
ஆனால், இதற்கு இன்னும் சான்றுகள் தேவை.
இதேபோல சேரன் செங்குட்டுவன் கனகன், விசயன் ஆகிய மன்னர்களை வென்று இமயம் வரை சென்று கல் எடுத்துவந்து அதை தோற்ற மன்னர்கள் தலையில் சுமத்தி தமிரகம் கொண்டுவந்து கண்ணகிக்கு நடுகல் நட்டதாகக் கூறப்படுகிறது.
அதேபோல இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம்வரை எல்லையைக்(வரம்பு) கொண்டவனாகக் கூறப்படுகிறான்.
இன்று உலகின் உயரமான இடமான எவரெஸ்ட் சிகரம் அந்த பகுதி மக்களால் கடல் அன்னை (சாகர்மாதா) என்று அழைக்கப்படுகிறது.
தொடக்கத்தில் இந்தியத் துணைக்கண்டம் ஆசியாவில் இல்லை.
அது ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிந்து ஆசியாவை நோக்கி நகர்ந்து மோதியது.
இதனால் இரு கண்டங்களும் முட்டிக்கொண்ட இடம் நெருக்கிக் கொண்டு மேலே எழும்பியது.
அப்படி உருவானது தான் இமயமலை.
இமயமலையில் கடல்வாழ் உயிரினங்களின் எலும்புகள் பல கிடைத்துள்ளன.
இமயமலையை விட பழமையானது விந்தியமலை.
அதைவிடவும் பழமையானது பொதிகைமலை.
குமரிக் கண்டம் மூழ்கிய போது அதை ஈடுகட்டும் விதமாகப் பாண்டிய மன்னன்.கங்கையையும் இமயத்தையும் எடுத்துக் கொண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன்
வாழி (சிலம்பு. 11-17-22)
அதாவது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவருமே இமயத்துடன் தொடர்பு படுத்தப்படுகின்றனர்.
தற்போதும் இமயமலையில் வாழும் கவரிமா பற்றி சங்கநூல்கள் கூறுகின்றன.
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்
-குறள் 969.
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
தண் நிழல் பிணி யோடு வதியும்
வட திசை யதுவே வான் தோய் இமயம் -புறநானூறு.
பதிற்றுப்பத்திலும் கவரிமா பற்றிய குறிப்புகள் உள்ளன.
நரதந்தைப் புல் தின்று வாழும் நீண்ட சடைமுடி கொண்டது கவரி, மயிர் நீக்கப்பட்டால் இறந்துவிடுமாம்.
இது மான் கிடையாது yak எனப்படும் மாடு.
இது ஒருவகைப் புல்லைத்தான் தின்னும். கடும் குளிரில் வாழும் இவ்விலங்கு முடி உதிர்ந்தாலோ அல்லது வெட்டப்பட்டாலோ குளிர்தாங்காமல் இறந்துவிடும்.
ஆக இமயமே தமிழர்களின் எல்லை.
இன்றைய இந்தியாவை விடப் பெரிய குமரிக்கண்டத்தை நம்மிடமிருந்து இயற்கை பறித்துக் கொண்டது.
நாம் மேலும் சுருங்கி சுருங்கி இன்று உள்ளங்கை அளவு நிலத்தில் அதுவும் மாற்றான் ஆட்சியில் ஒட்டுக் குடித்தனம் போட்டுக் கொண்டு இருக்கிறோம்.
எலிவளை ஆனாலும் தனிவளை வேண்டும்..
இருக்கும் நிலத்தையாவது மீட்போம்.
எவரெஸ்ட் சிகரத்தில் 'தமிழ் வாழ்க'
1997ல் எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்தவர்கள் எம்.மகேந்திரன் மற்றும் என்.மோகனதாஸ்...
சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழரசன்...
ஆயதக் கொள்ளையர்களை பொதுமக்கள் வெறுங்கையாலேயே அடித்துக்கொன்ற சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்ததுண்டா?
ஆனால் வங்கியில் நுழைந்து தம் கண்முண்ணே ஒருவரை சுட்டுக் கொன்று விட்டு வரும் ஆயுதம் தாங்கிய 5 கொள்ளையர்களை வெறுங்கையால் சாதாரண மக்கள் தாக்கிக் கொன்றனர்..
தமிழகத்தில் அந்த அதிசயம் நடந்தது..
ஆம். தமிழ்நாடு ஹிந்திய அரசிடம் இருந்து விடுதலை அடைய 'தமிழ்நாடு விடுதலைப் படை' என்ற இயக்கம் நிறுவி ஆயுதம் தாங்கி போராடிய தமிழரசன்,
கர்நாடகா விதிமுறையை மீறி கட்டிய ஹேமாவதி அணையைத் தகர்க்க திட்டமிட்டார்.
அதற்கு தேவைப்பட்ட நிதியை திரட்ட அரசு வங்கியைக் கொள்ளையடித்தார்.
ஆனால் இந்த தகவல் முன்பே உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது.
தமிழரசனை தடுத்து நிறுத்த ஒரே வழி அவரைக் கொல்வதுதான் என்று முடிவு கட்டிய ஆளும் வர்க்கம்,
நேரடியாக மோத பயந்துகொண்டு அவரது பலவீனம் எது என ஆராய்ந்தார்கள்.
அவர் ஒரு மனிதநேயம் கொண்ட போராளி.
எனவே வெறுங்கையாலேயே குறிப்பிட்ட இடங்களில் அடித்து நொடியில் கொலை செய்யும் பயிற்சியளிக்கப்பட்ட உளவுத்துறை ஆட்கள் பொதுமக்கள் போல வேடமிட்டு வங்கியில் காத்திருந்தனர்.
தமிழரசன் வந்தார், கொள்ளையடித்து விட்டு வாசலை நெருங்கும்போது அந்த உளவுத்துறையினர் திடீரென பாய்ந்தனர்.
மக்கள்தான் தாக்குகிறார்கள் என்று தமிழரசனும் அவரது கூட்டாளிகளும் ஆயுதத்தை பயன்படுத்த தயங்கியதால் சில நொடிகளிலேயே தமிழரசன் உயிரைவிட்டார்.
குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்த அவரது தோழர்களும் இவ்வாறே அடுத்தடுத்து சில நொடிகளில் கொல்லப்பட்டனர்.
உடனடியாக புகைப்படம் எடுத்து ஏதோ மக்களே இதைச் செய்தது போல ஊடகங்களில் பரப்பப்பட்டது.
இதையெல்லாம் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்தது அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது ஏவல்துறை.
ஆம். முல்லைப்பெரியாறு அணை உரிமையைத் திட்டமிட்டு தன் இனத்திற்கு தாரைவார்த்த அதே மலையாளி ராமச்சந்திரன் தான்.
காவிரி நீரைத் தடுத்து தமிழர்களின் கழுத்தை நெறித்துக்கொண்டு இருக்கும் ஹேமாவதி அணையையும் உடையாமல் பார்த்துக்கொண்டவர்.
அது மட்டுமல்லாது நக்சலைட் வேட்டை என்று கூறிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பற்றுகொண்ட இளைஞர்களைக் கொன்று தமிழ்நாட்டின் ஆயுத எழுச்சியை அடக்கியது மலையாளி எம்.ஜி.ஆர் ஆட்சி.
தமிழர்களில் விடுதலை எழுச்சி தமிழரசன் மரணத்தால் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
ஆனாலும் தமிழரசன் வழியில் தொடர்ந்து இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) வீரப்பனாருடன் கைகோர்த்து, கன்னட உச்ச நடிகர் ராஜ்குமார் கடத்தல் மூலம் மீண்டும் தமிழர் உரிமைக் குரலை ஹிந்தியம் அதிர எழுப்பியது.
பிறகு வீரப்பனாரும் வயது முதிர்ந்து தளர்ந்த நிலையில் கன்னடர் ஜெயலலிதாவால் சூழ்ச்சி வலையில் கொலை செய்யப்பட்டார்...
பெங்களூரில் சோழர் கோவில்கள்...
வெங்கலூர் (பெங்களூர்) மற்றும் அதைச் சுற்றிலும் சோழர் கட்டிய கோவில்கள் பல உள்ளன.
பழைய பெயர்கள் மறைந்து விட்டன. தற்போதைய பெயரையே தருகிறேன்..
எட்கர் தர்ஸ்டன் எழுதிய 'castes and tribes of india' volume-5' ல் கி.பி ஒன்றிலிருந்து 1024ல் சோழர்கள் பெங்களூரைக் கைப்பற்றும் வரையான காலத்தில் பெங்களூரை ஆண்ட மன்னர்கள் பற்றி கூறியுள்ளார்.
'கொங்குதேச ராஜாக்கள்' (Kongu chronicle) இதற்கான குறிப்புகளை வழங்கியுள்ளது.
பெங்களூரில் மரதஹல்லி (marathahalli)ல் உள்ள சோமேஸ்வர ஆலயத்தில் 1304ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு உள்ளது.
இதில் இப்பகுதியின் பழைய பெயர் நெற்குந்தி (nerkundi)என்று குறிக்கப்பட்டுள்ளது.
இதேபோல பெங்களூரின் அகரா (agara) பகுதியில் உள்ள 1200 ஆண்டுகள் பழமையான மற்றொரு சோமேஸ்வரசுவாமி கோயிலும் சோழர்கள் கட்டியதே.
பெங்களூரின் வசந்தபுரத்தில் 'வசந்த வல்லபரயர்' ஆலயமும் சோழர்காலத்தில் கட்டப்பட்டதே.
பெங்களூரின் நாகரத்பேட் (nagarathpet)ல் உள்ள 800ஆண்டுகள் பழமையான காளிகாம்பாள்- காமதேஸ்வரர் கோயிலும் சோழர் காலத்தைச் சேர்ந்தது.
பெங்களூர் புறநகரில் உள்ள ஹொஸ்கோட் (hoskote) தாலுகாவில் கோண்ட்ரஹல்லி (kondrahalli)ல் உள்ள தர்மேஸ்வரர் ஆலயம் 1065ல் சோழர்களால் கட்டப்பட்டது.
பெங்களூரில் அனேகல் (anekal) தாலுகாவில் ஹுஸ்கூர் (huskur)ல் மதுரம்மன் ஆலயம் உள்ளது.
இதுவும் 11ம் நூற்றாண்டில் சோழர்கள் கட்டிய கோவில் ஆகும்.
பெங்களூர் அருகே ஹெப்பல் (hebbal) எனுமிடத்தில் உள்ள ஆனந்தகிரி குன்றுகளில் உள்ள 'ஆனந்த லிங்கேஸ்வரர்' கோவில் சோழர்கள் கட்டடக்கலையில் அமைந்துள்ளது. கட்டியது யாரென்று ஆராயப்படவேண்டும்.
இதேபோல பெங்களூர் நகருக்குள் மற்றொரு மதிவாலா சோமேஸ்வரர் ஆலயம் உள்ளது.
இதையும் சோழர்களே கட்டியுள்ளனர்.
இதில் 1247 மற்றும் 1365ம் ஆண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் உள்ளன.
பெங்களூரின் காங்கேரி (kangeri)ல் ஈஸ்வரர் ஆலயம் ஒன்று உள்ளது. இதுவும் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டது.
இது போக முக்கியமானவை,
1)பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம்
இக்கோவில் பெங்களூரில் பேகூர்(Begur, Bangalore) என்ற இடத்தில் உள்ளது.
இவ்வூரின் பழைய பெயர் வெப்பூர் ஆகும்.
தமிழ் கல்வெட்டுகள் கொண்டது.
1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.
நாகேஸ்வரர் கோவில் என்று தற்போது அழைக்கப்படுகிறது.
வெவ்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட ஐந்து லிங்கங்கள் உள்ளன. அதில் ஒன்று சோழேஸ்வரர் என்று பெயர்பெற்றுள்ளது.
2) சொக்கப்பெருமாள் ஆலயம்
பெங்களூரில் உள்ள தொம்லூர் (Domlur) என்ற இடத்தில் உள்ளது.
10ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் உள்ளன.
இதன் பழைய பெயர் தொம்பலூர் அல்லது தேசிமாணிக்கப் பட்டணம் ஆகும்.
பெங்களூரை இலைப்பக்கநாடு என்றும் தென்கன்னடப் பகுதியை தடிகைப்பாடி என்றும் இக்கோவில் கல்வெட்டுகள் குறிக்கின்றன.
1258ஐச் சேர்ந்த ஒரு கல்வெட்டு ஆலால நம்பியார் என்பவர் பூசாரியான 'மணலி திரிபுரந்த ஆசாரியார்' என்பவருக்கு வழிபாட்டுக்கென வழங்கிய கொடையைக் கூறுகிறது.
1270ம் ஆண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் அழகியர் என்பவர் கதவுகள் அளித்தது பற்றியும் மற்றொன்று இக்கோவிலைக் கட்டிய தலைக்காடு பகுதியைச் சேர்ந்த 'திரிபுராந்தகன் செட்டியார்' மற்றும் அவரது மனைவி 'செட்டிச்சி பார்ப்பார்த்தி' ஜலப்பள்ளி மற்றும் விண்ணமங்கலம் குளம் பகுதிகளை கொடையாக அளித்தது பற்றியும் கூறுகிறது.
(சான்று: epigraphica carnatica vol 9, insc of banglore, no 10&13 )
3) போகநாதீஸ்வரர் ஆலயம்
நந்திமலை அடிவாரத்தில் சிக்கபல்லப்பூர் (chikkaballapur) மாவட்டத்தில் உள்ள நந்தி கிராமத்தில் உள்ளது.
தமிழ் கல்வெட்டுகள் கோவில் சுவரில் காணப்படுகின்றன.
4) சோமேஸ்வரர் ஆலயம்
பெங்களூரில் உல்சூர் அல்லது ஹலசூரு என்ற இடத்தில் உள்ளது.
63நாயன்மார்களின் (தமிழர்கள்) சிலைகளும் உள்ளன.
5)கோலாரம்மன் ஆலயம்
கோலார் (kolar) நகரத்தில் அமைந்துள்ளது.
இதைக் கட்டியது ராஜேந்திர சோழன் ஆவான்.
முழுக்க முழுக்க தமிழ் கல்வெட்டுக்கள் நிறைந்துள்ளன.
(epigrapha carnatica vol 10 insc of kolar taluk)
6)முக்தி நாதேஸ்வரர் ஆலயம்
நீலமங்கல தாலுகாவில் பின்னமங்கலா (binnamangala) என்ற என்ற இடத்தில் உள்ளது.
குலோத்துங்க சோழன் காலத்தில் 1110ல் கட்டப்பட்டுள்ளது.
உடையான் ராஜராஜ குலோத்துங்கன் (எ) குலோத்துங்க சோழன் அதிமூர்க்க செங்கிராயன் எனும் பெயருடைய இப்பகுதியின் நிர்வாக அதிகாரியும் மன்னனும் ஆகிய சோழமன்னன்
விக்கிரம மண்டலத்தில் உள்ள குக்கனூர் நாட்டின் விண்ணமங்கலம் ஊரின் சுற்றியுள்ள நிலங்களை முத்தீஸ்வர உடைய மகாதேவருக்கு (இக்கோயில் கடவுள்) தேவதானமாக அளிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
(epigrapha carnatica vol 9 insc of nelamangala taluk, no:3)
7)சித்தேஸ்வரம் ஆலயம்
சோழதேவனஹல்லி (soladevanahalli) எனும் இடத்தில் உள்ள முத்தரையஸ்வாமி கோவில் என்ற கோவில் உள்ளது.
ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.
8)பிடாரி சாமுண்டேஸ்வரி ஆலயம்
இந்த கோவில் தற்போது காணக்கிடைக்கவில்லை.
நீலமங்கலா அருகே மைலானஹல்லி (mailanahalli) என்ற ஊரின் நுழைவாயிலில் இரண்டாம் அடுக்கில் தமிழ் கல்வெட்டு காணப்படுகிறது.
ராஜராஜசோழன் காலத்தையதான அதில் அப்பகுதி குக்கனூர்நாடு என்றறியப்பட்டதாகவும் அது விக்கிரமசோழ மண்டலத்திற்கு உட்பட்டிருந்ததாகவும் அறியக் கிடைக்கிறது.
மேலும், நீலமங்கலா தாலுகாவில்..
அ) மாதிகேரே (madikere)ல் உள்ள மாதேஸ்வரர் ஆலயம்,
ஆ)ஐங்கந்தபுரம் (ayinkandapura)ல் உள்ள கோபாலகிருஷ்ண ஆலயம்,
இ)சோலதேவன ஹல்லி தர்மேஸ்வர ஆலயம்,
ஈ) ஹெக்குண்டா (heggunda)ல் உள்ள மல்லிகார்ஜுன ஆலயம்,
தேவனஹல்லி தாலுகாவில் உள்ள..
அ) கங்கவாரா ஔடப்பன்ஹல்லி (gangavara chowdappanhalli)ல் சோமேஸ்வரர் ஆலயம்
ஹொஸ்கோட் தாலுகாவில் உள்ள
அ)கடுகோடி (kadugodi) காசி விஸ்வேஸ்வரர் ஆலயம்
சன்னபட்டண தாலுகாவில் உள்ள
அ)மல்லூர் பட்டண (malurpatana)ல் நாராயணஸ்வாமி ஆலயம் மற்றும்
அரக்கேஸ்வரர் ஆலயம்
ஆ)குட்லூர் (kudlur)ல் ராமதேவ ஆலயம் மற்றும் மங்கலேஸ்வரர் ஆலயம்
இ)சிக்கமலூர் (chikkamalur)ல் அரக்கேஸ்வரர் ஆலயம், கோபாலஸ்வாமி ஆலயம், மற்றும் காளீஸ்வரர் ஆலயம்
ஈ)தொட்டமலூர் (doddamalur)ல் அப்ரனேயஸ்வாமி ஆலயம்
போன்றவையும் சோழர்காலத்தவையே..
ஆராய்ந்தால் நிறைய சான்றுகள் கிடைக்கும்...
வாழைப்பழம் - நோய் நீக்கும் மருந்தாகும்...
வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது..
இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
நம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்து கொள்ள உதவி செய்கிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.
நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.
நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.
வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல் படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது...
விவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி...
குண்டலினி யோகத்தின் சாராம்சம் இதுதான்...
பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டு நாடி சுத்தி செய்து சுவாசத்தை சூட்சும்னா நாடியில் ஓடும்படி செய்து கொள்ள வேண்டும்.
பின் சுவாசத்தை இழுத்து பிராணயாமத்தின் மூலம் கும்பகம் செய்ய வேண்டும்.
அப்போது இந்த குண்டலினி (ஆழ்மனம்) ஐ கவனிக்க வேண்டும்.
நமது வாசியை கொண்டு மூலாதரத்தை தாக்க வேண்டும்.
இவ்வாறு பல வருடம் தொடர்ந்து சுவாசித்து கும்பகம் செய்து குண்டலினியில் வாசியை (சுவாசத்தை) கொண்டு தாக்கினால் மூலாதாரத்தில் ”ஒளி “ தோன்றும்.
அதன்பிறகு இதர சக்கரங்கள் தெளிவாக தெரியும். அதன்பிறகே குண்டலினி சக்தி மேலெழும்.. ஆழ்மனம் மேல் எழும்...
மூலாதாரத்தில் ஒளியை காணாதவரை குண்டலினி மேலே எழாது.
மூலாதரத்தை (ஆழ்மனம்) எழுப்ப இதுவே ஒரே வழி என்று சித்தர்கள் திட்டவட்டமாக குண்டலினி யோகத்தில் கூறுகிறார்கள்...
குண்டலினி யோகத்தில் என்ன நடக்கிறது?
பிராணயாமத்தின் மூலம் சுவாசத்தை இழுத்து கும்பகம் செய்வதன் மூலம் ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது. இந்த ஆக்ஸிஜன் (வாசியை)மூலாதரத்தில் தாக்க வேண்டும்.
அதாவது மூலாதரத்தில் உள்ள அடர்பாஸ்பரஸ் உடன் ஆக்ஸிஜன் சென்று தாக்க வேண்டும். அப்போது பாஸ்பரஸ் உடன் ஆக்ஸிஜன் வினை புரிந்து ஒளியை கொடுக்கும். அமானுஷ்ய சக்தி கிடைக்க பெறும்.
சாதகனுக்கு தெய்வீக அனுபவங்கள் கிடைக்க பெறும்.
ஆனாலும் இந்த குண்டலினி யோக பயிற்சி மூலம் எல்லா சீடனாலும் மனிதர்களாலும் சுவாசத்தின் மூலம் பிராணா சக்தி (ஆக்ஸிஜன்)அதிகம் கவரப்பெற்று ஆழ்மனதிற்கு அனுப்பி அடர்பாஸ்பரஸ் ஆக்சைடை இயக்கும்படி செய்ய முடியாது.
ஜோதிட சாஸ்திரப்படி சிலரது ஜாதகத்தில் அமானுஷ்ய சக்தியை பெறுவதற்கு ஏற்ற கிரக நிலையை அமைய பெற்றவராக இருக்க மாட்டார்.
அப்படிப்பட்டவர்களால் அமானுஷ்ய சக்தியை பெறும் பொருட்டு இந்த குண்டலினி யோகம் செய்தாலும் பலன் கிடைக்காது.
ஜாதகத்தில் சனி நீசப்பட்டு இருப்பவர்களுக்கு அவர்களது உடலில் இரும்பு சத்து மிக குறைவாக இருக்கும்.
அதனால் அதிக ஆக்ஸிஜனை பெற முடியாமல் போவர்.
ஆனால் குரு இதனை நன்கறிவார்.
எந்த சீடன் தனக்கு மிகவும் பிடித்து உள்ளதோ , எவன் மிகவும் நேர்மையானவனாக இருக்கிறானோ அவனுக்கு அவரது ஜாதகம் சரியில்லை என்றாலும் சில தாந்திரீக வழியை - குறுக்கு வழியை கடைபிடித்து அந்த சீடனை முன்னேற்றுவார்.
அதாவது அந்த சீடனுக்கு இரும்பு சத்து உள்ள மூலிகைகளை சாப்பிட கொடுப்பார்.
பின் குரு தன் உடலில் பிராணயாமத்தின் மூலம் மிக அதிகமாக சேகரித்து வைத்து இருந்த பிராணா சக்தியை சீடனது மூலாதாரத்தில் கை வைத்து விரல்கள் மூலம் பாய்ச்சுவார்.
அவரது பிராணனால் சீடனது ஆழ்மனம் அடர் பாஸ்பரஸ் ஆக்சைடு அதிகமாக இயங்க ஆரம்பித்துவிடும்.
சாதகன் தெய்வீக அனுபவத்தை பெற ஆரம்பித்து விடுவான்.
இந்த முறையில் குரு தீட்சை அளிப்பது என்பது தனக்கு மிகவும் விருப்பமான சிடனுக்கு மட்டும் தான் செய்வார்.
ஏனெனில் பல காலம் பயிற்சியின் மூலம் பெற்ற பிராணா சக்தியை செலவு செய்வது என்பது பொதுவாக யாரும் விரும்புவது இல்லை.
ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு விவேகானந்தர் மீது ஒரு தனி அக்கறை இருந்தது.
ராமகிருஷ்ணரை பார்த்ததும் விவேகானந்தர் கேட்ட கேள்வி.. கடவுளை பார்த்து இருக்கிறீர்களா?
ராமகிருஷ்ணர் சொன்ன பதில்; ஆம் பார்த்து இருக்கிறேன். உனக்கும் காட்டுகிறேன்.
விவேகானந்தருக்கு ராமகிருஷ்ணர் தன் பிராணா சக்தி முழுவதும் கொடுத்து தீட்சை வழங்கி உள் ஒளியை காட்டினார்.
அதாவது கடவுளை காட்டினார்.
குண்டலினி எழுப்பியதும் பல சக்திகள் விவேகானந்தருக்கு கைவரப்பெற்றாலும் தன் சக்தியை அவர் வீணடிக்கவில்லை.
பல ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட பெரும் நூல்கள் எல்லாம் சில மணி நேரங்களில் மனப்பாடமே செய்து விடுவாராம்...
Subscribe to:
Posts (Atom)