குண்டலினி சக்தியை யோக வலிமை உள்ளவர்கள் மட்டுமே எழுப்ப இயலும்.
புத்தகம் படித்து பத்மாசனம் போட்டு குண்டலினி எழுப்புகிறேன் என்றால் நித்யானந்தா சீடர்கள் போல துள்ளி துள்ளி குதிக்க வேண்டியதுதான்.
அலை மனம் நிலை மனம் ஆனால் இறைவனை காணலாம் என்ற சித்தர்களின் தத்துவப்படி மனதை நிலை நிறுத்தும் பயிற்சி புரிவோர்க்கு சிரம் தாழ்ந்த வணக்கம்...
குண்டலினி பயிற்சி பெறுபவர்களுக்கு சோதிட ரீதியாக ஒரு குறிப்பு...
கிருத்திகை நட்சத்திரமும் ஞாயிற்றுகிழமையும் இணைந்த நாளில் ஆக்னியை நினைந்து தவமிருந்தால் குண்டலினி சக்தி ஏறும்.
இது புலிப்பாணி,அகத்தியர் சொன்ன நல்ல நாள் தான். நான் சொல்வது அல்ல.
மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களான; மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரா இவை பல அபூர்வ சக்திகளை எழுப்பி தர வல்லவை. பல அற்புதங்களை செய்பவர்கள்...
உடலில் இந்த குறிப்பிட்ட சக்கரங்களில் ஒன்று வேலை செய்வதால் தான்.. சாதரண மனிதனுக்கு இவை உறங்கி கொண்டிருக்கும்.
இவை சுழல ஆரம்பித்துவிட்டால் அவனுக்கு எல்லா சித்துகளும் கைவரும்.
நட்சத்திரங்கள் பொறுத்து சித்து வேலைகளையும், யோக பயிற்சிகளையும் நம் சித்தர்கள் மேற்க்கொண்டனர்., மிருகசிரீடம், அவிட்டம், உத்திரம், உத்திராடம், கிருத்திகை போன்ற நட்சத்திரங்கள் யோக பயிற்சிக்கு சிறந்த நாட்கள்...
மகம், மூலம் நட்சத்திரம் வரும் நாளில் குருவை வணங்கி பயிற்சி தொடங்க சிறந்த நாள் ஆகும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.