05/07/2020

பாலியல் தொல்லை அளித்த திமுக பிரமுகர்... தாயும், மகளும் தீக்குளிக்க முயற்சி...



நீங்கெல்லாம் இருக்குற வரைக்கும் சுடலை கடைசி வரைக்கும் மன்னிப்பு கேட்டுட்டே தா இருக்கணும்...

பாலியல் ஜல்சா திமுக...

என் அண்ணனை போலீசார் அடித்து கொன்றார்கள் : தூத்துக்குடியில் ஆசிரியை பரபரப்பு புகார்...


என் அண்ணனை போலீஸார் அடித்து கொன்றிருக்கிறார்கள், என்று தூத்துக்குடியில் ஆசிரியை சாந்தி என்பவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எஸ்.பியிடம் கொடுத்ததாக சொல்லப்படும் மனுவில்...

‘’நான் தூத்துக்குடியில் அப்பாவுடன் அண்ணாநகர் ஏழாம் தெருவில் வசித்து வருகிறேன். தனியார் பள்ளியில் ஹிந்தி, ஆங்கில ஆசிரியையாக கடந்த 10 வருடன் பணியாற்றி வருகிறேன். எனது அண்ணன் வாசுதேவன், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தூத்துக்குடியில் கடந்த 12 வருடமாக பணியாற்றி வந்தார். அவருக்கும் அவர் மனைவி சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்திருந்தனர். 22.2.2020 அதிகாலை 4 மணிக்கு அவருடைய உயரதிகாரிகள் தமிழ்நாடு முதல் மந்திரி வருகையிருப்பதால் அவசரகால மின்சார பழுதை பார்ப்பதற்கு வருமாறு அழைத்தார்கள்.

என் அண்ணன் உடனே தன்னுடைய மோட்டார் பைக்கில் தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று விட்டார். காலையில் சுமார் 7.30 என் அக்காவின் மகள் பவித்ரா மற்றும் என் அண்ணன் மனைவியும் தொலைபேசி மூலம் என் அண்ணன் இறந்து விட்டதாக கூறினார்கள். நான் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். அங்கு நின்ற போலீஸ் என் அண்ணன் வாகன விபத்தில் இறந்து விட்டதாக சொன்னார். என் அண்ணனின் மனைவியிடம் என் அண்ணன் வாகன விபத்தில் இறந்து விட்டதாக புகார் மனுவில் கையெழுத்து வாங்கியதாக சொன்னார்கள்.

அந்த புகார் மனுவில் யாரோ அடையாளம் தெரியாத வாகனம் என் அண்ணன் சென்ற வாகனத்தின் மீது மோதி என் அண்ணன் இறந்து விட்டதாக சொன்னார்கள். நான் அவர் இறந்த இடத்தை பார்க்க எஃப்.சி.ஐ குடோன் பக்கம் சென்றேன். அங்குள்ளவர்களிடம் விசாரித்தேன். அவர்கள் அங்கு அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்று சொன்னார்கள். என் அண்ணனை ரோந்து பணியில் முதல்-மந்திரி பாதுகாப்பில் இருந்த காவலர் அழகிய நம்பியார் அடித்து காயப்படுத்தியதாகச் சொன்னார்கள். முதல்-மந்திரி வருகையின் காரணமாக ஏகப்பட்ட காவலர்கள் அந்த ரோட்டில் நின்று கொண்டிருந்தார்கள்.

ஆகவே மோதிய வாகனம் மோதி விட்டு தப்பிக்க முடியாது. பொய்யாக புகார் மனுவை தயாரித்து என் அண்ணனின் மனைவியிடம் கையெழுத்து வாங்கி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்கள். நான் அதிர்ச்சியடைந்து காவல்துறை அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு உள் துறை அதிகாரிகளுக்கும் நீதி வேண்டும் என்று கேட்டு புகார் அளித்து அனுப்பி உள்ளேன். அந்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையத்தில் விசாரணை இருக்கிறது என்று சொல்லி காவலர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு அழைத்தார். அதற்காக காலை ஜூன் மாதம் ஒன்றாம் தேதி 11 மணி அளவில் காவல் நிலையம் சென்று விசாரணை அதிகாரி காவல் நிலைய ஆய்வாளர் வரவில்லை அரை மணி நேரம் கழித்து வந்தார்.

நான் அவரிடம் என் அண்ணன் மேற்படி போலீஸ் காவலர் அடித்துதான் மரணத்தை விளைவித்திருக்கிறார்கள். பொய்யாக எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு இருக்கிறது. ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டேன். அதற்கு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மிகவும் கோபப்பட்டு இந்த மனுக்களை வாபஸ் வாங்கும்படி வற்புறுத்தினார். நான் முடியாது என கூறினேன். உடனே அவர் தலைமுடியை பிடித்து இழுத்து உள்ள அறைக்குள் கொண்டுபோய் தன் கைகளினால் முதுகில் பலமுறை ஓங்கிக் குத்தினார் அடித்தார் வலியால் அழும் பொழுது தன் காலால் என் வயிற்றில் பல முறை எட்டி உதைத்தார். நான் கீழே விழுந்துவிட்டேன் கெட்ட வார்த்தைகள் பேசி வாயில் பலமுறை அசிங்கமாக திட்டினார் என்னை அடித்தார். அதனால் எனக்கு உடல் உடம்பு காயம் ஏற்பட்டது. என்னைக் கைதுசெய்து தூத்துக்குடி முதல் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 முன்பு என்னை இரவு 8 மணி அளவில் ஆஜர் படுத்தினார்.

அதுவரை என்னை காவல் நிலையத்தில் வைத்து கொடுமைப் படுத்தினார்கள் எனக்கு குடிக்க தண்ணீர் சாப்பிட சாப்பாடு வரவில்லை நான் நீதியுடன் நீதிபதியிடம் காவல் நிலையத்தில் நடந்த அத்தனை சம்பவங்களையும் கூறினேன். நீதிபதி அவர்கள் அத்தனையையும் எழுதிக்கொண்டார். என் உடம்பில் உள்ள அனைத்து காயங்களையும் கூறினேன். என் உடம்பில் உள்ள காயங்களை பார்வையிட்டார். அதன் குறித்து கொண்டார். அதன் பின் என்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு இருந்த டாக்டர் என் உடம்பு உள்ள அத்தனை காயங்களையும் பார்வையிட்டு குறித்துக் கொண்டார். காயங்களுக்கான சிகிச்சையும் கொடுக்கப்பட்டது. காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா இருந்தால் நிச்சயமாக என்னை இழுத்து போனது பதிவாகி இருக்கும். ஆகையால் தயவு கூர்ந்து பெண் என்றும் பார்க்காமல் அடித்து உதைத்து அசிங்கப்படுத்தின காரணத்துக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்’’ இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது...

கட்டபொம்மன் எனும் வழிப்பறி கொள்ளைக்காரன் தெலுங்கு கெட்டிபொம்மலு...



இந்த புத்தகத்தை படிக்க ஆர்வம் உள்ளவர்கள் இந்த லிங்கில் போய் படிக்கலாம்...

https://drive.google.com/file/d/1e4-OmlP0aJ4NYPxXwn9iH33dlR52ZLx5/view?usp=drivesdk

ஆர்.எஸ்.எஸ். - பாஜக வுடன் கூட்டணி வைத்ததால் பாமக வுக்கு கிடைத்த பலன்...


சாத்தான்குளம் இரட்டை படுகொலை நடத்திய கொலைகாரன் இன்ஸ்பெக்டர் ஶ்ரீதரன் தப்பிக்க பயன்படுத்திய கார் திருட்டு கார்...


அடமானம் வைத்த தனது காரை  மூன்றாண்டுகள் காணவில்லை.

அடமானம் வாங்கியவர் கந்து வட்டியில் சிறை போனதால் வண்டி எங்கே என்ற நிலையில் தனது காரை பார்த்து பேட்டி தருகிறார் உரிமையாளர்.

தனது மகன் பெயர் ஸ்டிக்கர் கூட அப்படியே உள்ளது என்கிறார்....

திட்டமிட்டு சதி செய்து தப்பிக்க
திருட்டு காரை பயன்படுத்தி உள்ளனர்..

அட திருட்டு கொலைகார பயலே...

பலே பலே..🙂

பாஜக மோடி டிஜிட்டல் இந்தியா வின் வளர்ச்சி...


சாலையோரத்தில் பழக்கடை வைத்திருந்த அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுபல கோடிகளுக்கு அதிபதி ஆன வரலாறு - ஆனந்த விகடன்...



மதுரை செல்லூரின் மிகக் குறுகிய சந்துக்குள் இருக்கிறது அந்த வீடு. எப்போதும் அந்த வீட்டுக்குள் இருந்து வெளிவரும் புகை மண்டலம், காற்று மண்டலத்தோடு கலந்தபடியே இருக்கும். அதோடு உச்சஸ்தாயியில் மந்திர உச்சாடனங்களும் ஒலிக்கும். இது அந்த ஏரியாவாசிகளுக்குப் பழகி அலுத்துப்போன காட்சி என்பதால், சின்ன முணுமுணுப்போடு கடந்து செல்வார்கள்.

குட்டி கார்கூட நுழைய முடியாத அந்தக் குறுகிய தெருவில் அப்படி யாக வேள்விகளும் புகை மண்டலமுமாக இருக்கும் வீடு, தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்             கே.ராஜூவுடையது. வீட்டில் அடிக்கடி அக்னிக் குண்டம் வளர்த்து பூஜைகள் நடக்கும். பூஜை முடிந்த பிறகு அக்னிக் குண்டத்தில் இருக்கும் சாம்பலை, ஒரு சிறு புட்டியில் நிரப்பித் தருவார்கள். கார்டனுக்குள் நுழையும்போதோ, கோட்டைக்குக் கிளம்பும்போதோ அந்தச் சாம்பலில் ஒரு சிட்டிகை எடுத்து, மையாகக் கரைத்து, தலையில் தடவிக்கொள்வார் ராஜூ. அந்த மகி'மை’தான் தன் அரசியல் வளர்ச்சிக்குக் காரணம் என்பது மாண்புமிகு அமைச்சரின் மனதில் இருக்கும் நினைப்பு..

பழக்கடை டூ அமைச்சரவை...

மதுரை யானைக்கல் ஏரியாவில் சாலை ஓரத்தில் பழக்கடை வைத்திருந்தவர்கள் ராஜூவின் பெற்றோர். மதுரை தியாகராஜர் கல்லூரியில் பி.எஸ்சி படிக்கும்போது மாலை நேரத்தில் பழக்கடை வியாபாரத்தில் பரபரப்பாக இருப்பார் ராஜூ. வருமானத்துக்காக துணிக்கடையில் வேலைபார்த்த அனுபவமும் உண்டு. பழ மார்க்கெட் பிஸ்தாவான அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் 'பழக்கடை’ பாண்டியின் அறிமுகம் கிடைத்தது ராஜூவுக்கு. கொஞ்சமும் தாமதிக்காமல் அ.தி.மு.க-வில் ஐக்கியமாகி கட்சிக் கூட்டங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கினார். ராஜூவை கணக்குப்பிள்ளையாகவும் நம்பகமான ஆளாகவும் வைத்துக்கொண்டார் 'பழக்கடை’ பாண்டி. அந்த நம்பகத்தன்மை, செல்லூர் வட்டச் செயலாளர் பதவியை ராஜூவுக்குப் பரிசளித்தது. அவரின் அடுத்தடுத்த அரசியல் பதவிகளுக்கு அதுதான் தாயம்.

அதுவரை சைக்கிளில் வலம் வந்து கொண்டிருந்த ராஜூ, செகண்ட்ஹேண்டு லாம்ப்ரட்டா ஸ்கூட்டர் ஒன்றை வாங்கினார். லோக்கல் அரசியலில் அதிகாரப் பரிமாற்றங்கள் நிகழ, மாவட்டச் செயலாளரான ராஜன் செல்லப்பாவோடு ஒட்டிக்கொண்டார். அவரின் கார் கதவைத் திறந்துவிடுவது தொடங்கி, அத்தனை வேலைகளையும் செய்தார். அந்த விசுவாசம், மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ராஜூவுக்கு வழங்கியது. பழக்கடையில் இருந்து அந்த இடத்துக்கு வந்ததையே ராஜூவால் நம்ப முடியவில்லை. ஏனென்றால், ராஜூவிடம் வசீகரப் பேச்சு கிடையாது; பொருளாதார வசதி கிடையாது; அரசியல் குடும்பப் பாரம்பர்யப் பின்னணி கிடையாது. இப்படி ஏகப்பட்ட 'கிடையாது’கள். ஆனால், அரசியலில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற வெறி மட்டும் உள்ளுக்குள் எரிந்துகொண்டிருந்தது. 

ஆனாலும் அரசியலில் ஒருகட்டத்துக்கு மேல் வளர்ச்சி இல்லாமல் தேக்கம் உண்டானது. அப்போது 'மன்னார்குடி லாபி’ கை கொடுத்தது. ஏதேதோ செய்து டி.டி.வி தினகரனின் மனதில் இடம் பிடித்தார். தன் உறவினர் ஒருவர் மூலமும் 'மன்னார்குடி மக்களிடம்’ நல்ல பெயர் வாங்கினார். அதே சமயம் பொருளாதார ரீதியாகவும் தன்னை வளப்படுத்திக் கொள்ளத் தொடங்கினார். மீனாட்சி அம்மன் கோயிலில் செருப்பு வைக்கும் இடம் குத்தகை, கோரிப்பாளையத்தில்  மதுக்கடை, ஜி.ஹெச் அருகே மெடிக்கல் ஷாப், மணல் வியாபாரம் என, பல கிளைகளில் விரிந்தது ராஜூவின் வியாபாரம். அதில் வந்த லாபத்தை அரசியல் நண்பர்களான தங்கம், அவனியாபுரம் ராஜா ஆகியோர் மூலம் ஃபைனான்ஸில்விட்டுப் பெருக்கினார். மாவட்டச் செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையனுடன் நெருக்கமான போது, பகுதிச் செயலாளர் பதவி கிடைத்தது. பின்னர் 'மன்னார்குடி’ ரூட் மூலம் கட்சியின் சீனியர்களை ஒதுக்கிவிட்டு மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடித்தார். அதோடு கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் ஸீட் கிடைத்து வெற்றியும் பெற, 'மன்னார்குடி ரூட்’ மூலமே மந்திரியும் ஆனார். ஆனால், அமைச்சரான கொஞ்ச நாளிலேயே ராஜூவின் நடவடிக்கை பிடிக்காமல் மா.செ பொறுப்பில் இருந்து அவரை நீக்கினார் ஜெயலலிதா. அதுவும் கொஞ்சம் நாட்கள்தான். ஏதேதோ தாஜா செய்து மீண்டும் மா.செ போஸ்டிங் வாங்கிவிட்டார்.

அதே சமயம் தன் வளர்ச்சிக்கு அரசியல் வியூகங்களை மட்டும் நம்பாமல், மந்திர தந்திரங்களையும் கையில் எடுத்தார் ராஜூ. காரணம், இவருடைய மனைவியின் பூர்வீகம், கேரளா. அதனால் யாகங்கள், பூஜைகள்... என கேரளத் தாந்திரீகர்கள் மதுரையில் ராஜூ வீட்டுக்கு அடிக்கடி விசிட் அடித்தார்கள்..

வாயில் சனி..

செல்லூர் ராஜூவின் மிக முக்கியமான மைனஸ்... அவருடைய வாய்தான். யாராக இருந்தாலும் வார்த்தைகளில் வறுத்தெடுத்துவிடுவார். எவரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவது அவருடைய இம்சை இயல்பு. அமைச்சரான பிறகு கட்சியின் சீனியர்களையே 'வாயா... போயா...’ என அதட்டத் தொடங்கினார். 'காளிமுத்து அண்ணன், சேடப்பட்டி, பரமசிவம் மாதிரி பண்பட்ட ஆட்களோடு அரசியல் செஞ்சுட்டு, இப்போ இவர்கூட வேலைபார்க்க வேண்டியிருக்கே...’ என நொந்துகொள்கிறார்கள் லோக்கல் புள்ளிகள். அரசாங்க நிகழ்ச்சிக்கோ விழாவுக்கோ அமைச்சர் வந்தால், பஞ்சாயத்து நியூஸ் நிச்சயம்..

அரசு விழா ஒன்றில் அரசு அதிகாரிகள் அதிக அளவில் வந்திருப்பதைப் பார்த்து மகிழ்ந்தவர் ஏக குஷியில், 'வி.ஏ.ஓ-வைப் பார்த்தா ஆர்.ஐ-யைப் பார்க்க முடியாது, ஆர்.ஐ-யைப் பார்க்கப்போனால் வி.ஏ.ஓ-வைப் பார்க்க முடியாது. இதைத்தான் கல்லைக் கண்டா நாயைக் காணோம்... நாயைக் கண்டா கல்லைக் காணோம்னு சொல்வாங்க. ஆனா, இங்கே இப்போ எல்லாரும் வந்திருக்கீங்க... சந்தோஷமா இருக்கு’ என வார்த்தைகளைவிட, வருவாய்த் துறை சங்கத்தினர் பொங்கிப் பொருமிவிட்டனர். அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதிக்க, கலெக்டர் மூலம் மன்னிப்புக் கேட்டு விஷயத்தை அமுக்கினார் ராஜூ.

இன்னொரு சம்பவம், அதைவிடக் களேபரம். மகளிர் அணிக் கூட்டம் ஒன்றில் பேசியபோது, 'அம்மாவின் சாதனைகளை இவ்வளவு சொல்றேன். யாரும் கை தட்ட மாட்டேங்கிறீங்க. என்ன மகளிர் அணி நீங்க..? விசில் அடிக்கப் பழகிக்கங்க’ என்றார். அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அதன்பிறகு, 'நாளைக்கு கோயில்ல அம்மாவுக்காக பால் காவடி எடுக்கிறோம். எல்லோரும் சுத்தபத்தமா வந்திருங்க’ என அழுத்தமாகச் சொல்ல, அரங்கிலேயே அமைச்சரைத் திட்டித்தீர்த்தன பல உதடுகள்.

ராஜூவின் பேச்சு, மாவட்ட எல்லை தாண்டியும் பயங்கரவாதத்தைப் பற்றவைத்திருக்கிறது. மதுரையில் நடந்த அரசு விளையாட்டு விழாவில், பரமக்குடி அணி கோப்பையைக் கைப்பற்றியது. பரிசளிப்பு விழாவில் பேசிய ராஜூ, 'நாம குடிச்ச வைகைத் தண்ணியோட மிச்சத் தண்ணியைத்தான் பரமக்குடிக்காரங்க குடிக்கிறாங்க. மிச்சத் தண்ணி குடிச்சவங்க இன்னைக்கு கப் வாங்கியிருக்காங்க. மதுரைக்காரங்க என்ன பண்றீங்க?’ என உற்சாகப்படுத்துகிறேன் பேர்வழியில் என உளற, கொதித்துவிட்டார்கள் ராமநாதபுரத்து மக்கள். ராஜூவின் உருவபொம்மை எரிக்க முடிவு செய்தவர்களிடம், உள்ளூர் பிரமுகர்களை வைத்து பஞ்சாயத்துப் பேசி அமைதியாக்கினார்கள். இதனால் ராஜூ கலந்துகொள்ளும் எந்த விழாவுக்கும் 'வம்பு கன்ஃபார்ம்’ மனநிலையிலேயே வருவார்கள் ர.ர-க்கள்..

துறையில் சாதித்தது என்ன?

கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன் ஆகிய துறைகள் செல்லூர் ராஜூ வசம். இதில் கூட்டுறவுத் துறைதான் இவரின் அடையாளம். ஆனால், அந்தத் துறையில் அவருடைய சாதனை எனச் சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை. அக்கப்போர், குளறுபடி முறைகேடுகள் அரங்கேறாத நாளே இல்லை எனலாம்.

கூட்டுறவுச் சங்கங்களின் 3,589 உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் மோசடி மேளாவே நடந்தது. 'உதவியாளர் பணியிடம்’ என அறிவித்துவிட்டு, ஒரே வேலைக்கு 17 விதமான சம்பளம் நிர்ணயித்தார்கள். அதிக சம்பளப் பதவிக்கான போஸ்ட்டிங் பெற கரன்சி ஏகமாகக் கை மாறியது. ஆனால், அது தொடர்பான புகார்களை அமைச்சர் கண்டுகொள்ளவே இல்லை. கடந்த தி.மு.க ஆட்சியில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், அதில் 10 கோடி ரூபாய் பாக்கியை இன்னும் அ.தி.மு.க அரசு வழங்கவில்லை. கூட்டுறவுச் சங்கங்களில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் கொள்ளை போவதைத் தடுக்க, உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவை ஒழுங்காக வழங்கப்படவில்லை. அங்கு வரும் பொருட்களின் அளவும் பெரும்பாலும் குறைந்தே இருக்கும். அதாவது, ஏற்கெனவே திருடப்பட்ட நிலையில்தான் பொருட்கள் கடைகளுக்கு வந்து இறங்கும். ஆனால், 'பொருட்களின் அளவு குறைகிறது’ என நியாயவிலைக் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். காரணம், அத்தியாவசியப் பொருட்களின் இழப்பு மற்றும் முறைகேடுகளால், அரசுக்கு ஏற்படும் இழப்பை சம்பந்தப்பட்ட ரேஷன் கடைப் பணியாளர்களிடமே வசூலிக்க வேண்டும் என்ற அரசாணை. அது பல நியாயவிலைக் கடை ஊழியர்களை மரண வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஏனெனில், விதிக்கப்படும் அபாரதம், பொருட்களின் மதிப்பைவிட இரண்டு மடங்கு அதிகம். இந்த நெருக்கடி காரணமாக வண்ணாரப்பேட்டையில் இளங்கோ, திருவாரூரில் சாமிநாதன் என நியாயவிலைக் கடை ஊழியர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டனர். ஆனால், இது குறித்தெல்லாம் கவலைப்படாமல் கோயில் கோயிலாகக் காவடி தூக்கிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் ராஜூ.

உள்ளூரின் உள்குத்துப் பஞ்சாயத்து..

அமைச்சர் செயல்பாட்டில்தான் டம்மியே தவிர, லோக்கல் பாலிட்டிக்ஸில் ராஜூ கில்லி. மதுரையில் பல்லாண்டு சீனியர்கள் மேயர் ராஜன் செல்லப்பா, எஸ்.டி.கே.ஜக்கையன், ஏ.கே.போஸ், ராஜாங்கம்... என எவருக்கும் கார்டனின் நல்லாசி கிடைக்கவிடாமல் காய் நகர்த்திவருகிறார். 'எதிரிக்கு எதிரி நண்பன்’ என இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தால்கூட, ராஜூவை அசைக்க முடியவில்லை. ஆனாலும், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, முன்னாள் எம்.பி முத்துமணி, பகுதிச் செயலாளர் சாலைமுத்து... என ஒரு பெரும்பட்டாளமே ராஜூவுக்கு எதிராக, கண்ணிவைத்துக் காத்திருக்கிறது.

அவை எதிலும் இப்போதைக்கு சிக்காமல் தாவித் தாவி சமாளித்துக் கொண்டிருக்கிறார் செல்லூரார்..

அழகிரி, ஸ்டாலின்... இருவருமே ஃப்ரெண்ட்ஸா?

அ.தி.மு.க புள்ளிகள் அழகிரியைத் திட்டாமல் மதுரையில் அரசியல் பண்ண முடியாது. ஆனால், அங்கும் செக் வைத்திருக்கிறாராம் செல்லூர் ராஜூ. 'அழகிரியைக் கடுமையாக விமர்சித்து பொதுக் கூட்டங்களில் அமைச்சர் பேச மாட்டார். அவரோடு நட்பு பாராட்டுகிறார்’ என லோக்கல் ரத்தத்தின் ரத்தங்களே புலம்புவார்கள். 'அது எப்படிச் சாத்தியம்?’ எனக் கேட்டால், 'தி.மு.க ஆட்சிக் காலத்தில் அழகிரி மதுரையில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த சமயத்தில் ராஜூவுக்கு எதிராக அ.தி.மு.க-வில் அரசியல் செய்தவர்கள் மீது வழக்கு, வம்புதும்பு பஞ்சாயத்துகள் கிளம்பின. அதனால் வேறு வழியே இல்லாமல் அவர்கள் அனைவரும் சைலன்ட் மோடுக்குச் சென்றார்கள். ஆனால், செல்லூர் ராஜூ மீது பழிவாங்கல் அவ்வளவாக இல்லை!’ என லாஜிக் சொல்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, சில மாதங்களுக்கு முன் மதுரை வந்த மு.க.ஸ்டாலின் காலை வேளையில் பூங்காவில் வாக்கிங் போனார். அதே நேரம் மனைவியுடன் அங்கே வந்தார் செல்லூர் ராஜூ. 'ஸ்டாலினைத் தனியா பார்த்தாரு... சிரிச்சுப் பேசிக்கிட்டாரு!’ எனத் தகவல் காட்டுத்தீயாகப் பரவ, கதிகலங்கித்தான் போனார் ராஜூ. கார்டனுக்குத் தகவல் சென்று எந்த நடவடிக்கையும் இல்லை என அறிந்த பிறகுதான், அமைதியானார் ராஜூ!



துக்க அனுஷ்டிப்பு மேளா..

செல்லூர் ராஜூவின் மகன் தமிழ்மணி, சாலை விபத்து ஒன்றில் உயிர் இழந்தார். அந்த அனுதாபம்தான் ராஜூ மீதான கட்சியினரின் புகார்களைக் கண்டுகொள்ளாமல் வைத்திருக்கிறது என்கிறார்கள். ஆனால், தன் மகனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை, பிரமாண்டமாக நடத்தி அசரடித்தார் ராஜூ. பிரமாண்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள், பளபள பேனர்கள், லோக்கல் சேனல்களில் செய்தி, நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரம், அன்னதானம்... என ஒட்டுமொத்த மதுரை மீதும் துக்கப் போர்வை போத்தினார்.

அந்தத் துக்க அனுஷ்டிப்பு மேளாவுக்கான செலவுகளை, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் செய்தார்கள் என்றொரு பேச்சும் கிளம்பியது. வழக்கம்போல இது பற்றிய புகாரையும் தலைமை கண்டுகொள்ளவில்லையாம்!

கரன்சி மழையில் காவடி..

'அம்மா’வின் நலனுக்காகக் காவடி எடுப்பது, பால் குடம் தூக்குவது, வேல் குத்துவது... என எப்போதும் மதுரையை அலங்கமலங்க அடித்துக் கொண்டிருப்பார் செல்லூர் ராஜூ. இலவச சில்வர் குடம், ஒரு பாக்கெட் பால், தேங்காய், 100 ரூபாய் கொடுத்து தாய்க்குலங்களைத் திரட்டி நடத்திய காவடித் திருவிழா மதுரையைத் திமிறச் செய்தது. வண்டியூர் மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில் 5,000 பெண்களைத் திரட்டினார். அவர்களுக்கு ஒரே நிறத்தில் கேரளப் பாரம்பர்ய சேலை, பொங்கல் பானை வழங்கி ஏக தடபுடல். பால்குட வைபவத்துக்கு 200 ரூபாய், வேல் குத்தினால் 2,000 ரூபாய், பறவைக் காவடிக்கு 10 ஆயிரம், மொட்டை போட 500 ரூபாய் என 'ஃபிக்ஸட் ரேட்’ போட்டு ஆட்களைத் திரட்டுவார். ஒருமுறை தமுக்கம் மைதானத்துக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை வரவழைத்து, பிரமாண்ட சண்டியாகம் நடத்தினார். 108 அக்னிக் குண்டங்களுடன் பிராந்தியத்தில் அனலைக் கிளப்பியது அந்த யாகம்.

ஆனால், இத்தனை பிரமாண்டங்களை அரங்கேற்ற ஏது கரன்சி? அமைச்சராகும் முன்னர் செல்லூர் ராஜூ காட்டிய ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? 2 லட்சத்து 63 ஆயிரத்து 50 ரூபாய். ஆனால், இப்போது காவடி புராஜெக்ட்டுக்கு நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்..

கோணிப்பை கோக்குமாக்கு..

கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் 31,863 நியாயவிலைக் கடைகளில் விற்கப்படும் அரிசி, undefinedபருப்பு, கோதுமை போன்றவை கோணிப் பைகளில்தான் விநியோகிக்கப்படும். பொருட்கள் விற்கப்பட்ட பிறகு, காலி கோணிப் பைகள் விற்பனை செய்யப்பட்டுவிடும். கூட்டுறவுத் துறையால் நிர்ணயிக்கப்படும் விலைக்குக் குறையாமல் அந்தக் காலிக் கோணிகளை விற்க, டெண்டர் மற்றும் ஏலம் விடப்படும். கடந்த தி.மு.க ஆட்சியில் 16 ரூபாய் வரை விலைபோன கோணிகள் இந்த ஆட்சியில் 11 ரூபாய் வரை மட்டுமே விலைபோனது. காரணம், துறையினரின் ஆசியோடு டெண்டர் எடுப்பவர்கள் அமைத்துக்கொண்ட சிண்டிகேட் என்கிறார்கள். 31,863 நியாயவிலைக் கடைகள் மூலம் ஒரு மாதத்தில் லட்சக்கணக்கில் கோணிப்பைகள் சேரும். அவற்றை விற்பதன் மூலம் கோடிகளில் வருமானம் கிடைக்கும். ஆனால், அது நெல்லுக்குப் பாயாமல், புல்லுக்கே பாய்ந்து கொண்டிருக்கிறது...

- பழைய கதை..

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை மரணத்தை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ், சென்னைக்கு இடமாற்றம். அவருக்கு பதிலாக நீதிபதி சத்யநாராயணன் நியமனம்...



தன்னார்வலர்கள் வேறு.. பிரண்ஸ் ஆப் போலீஸ் வேறு - சிபிசிஜடி...


ஆளுனரை எடப்பாடி சந்தித்த சில மணித்துளிகளில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது...

ஆர்.எஸ்.எஸ் - பாஜக வின் சேவா பாரத் உறுப்பினர்களான பிரண்ஸ் ஆப் போலீஸ் சை காப்பாற்றும் முயற்சியா..?

இதன் பின்னனி மிகப்பெரியதாக இருக்கும் போல...

பாஜக மோடியின் தேர்தல் நாடக அரசியல்...




நர்ஸ் காணோம் குளுகோஸ் பாட்டில் காணோம்...

எங்க ஊர் ஆஸ்பத்திரில பாத்துருக்கேன் இங்க ஒன்னயும் காணாம்🤔

ஒரே விசியத்தில் மூழ்கி கிடக்காம எதை மறைக்கராங்க என்பதை தேடி பாருங்கள்...


கொரோனா தடுப்பூசி எதற்கு.?



இங்கு சிந்திக்க சோம்பேறித்தனம் கொண்ட இனம் அவர்களுக்கு சோதனை எலிகளே...

https://www.africanews.com/2020/07/02/s-africa-protest-against-africa-s-first-vaccine-trial/

https://youtu.be/Fs1bel0HM6Y

தடுப்பூசி அரசியல்...


சாத்தான்குளம் அதிகார பின்புலம்...


சாத்தான்குளம் வழக்கை திசை மாற்றுகிறார்களா.?