30/12/2018

யார் இந்த நம்மாழ்வார்..?


தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவித்த முனைவர் கோ.நம்மாழ்வார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு சிற்றூரில் (06 ஏப்ரல் 1938)-ல் பிறந்தார்.

தந்தை பெயர் ச.கோவிந்தசாமி. பள்ளிப்படிப்பை முடித்த பின் தந்தை மற்றும் சகோதர்களின் அறிவுரைப்படி விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண்மை படிப்பை தேர்ந்தெடுத்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை அவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். அப்போது ரசாயன உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அவர், விவசாய முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என முடிவு செய்து தனது அரசு வேலையை உதறினார்.

பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டோமினிக் பியர் என்பவர் ஆரம்பித்த Island of Peace என்ற தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து அதன் மூலம் களக்காடு பகுதியில் அடித்தட்டு ஏழை விவசாயிகளுக்கு நவின விவசாய முறைகளில் விவசாயம் செய்யவது, கூட்டுறவுக் கடன்கள் மூலம் கிணறுகள் அமைத்து அவர்களின் வாழ்வை உயர்த்துவது என்று இயங்கினார்.

கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960 ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார்.

ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்கா (Masanabu Fukuoka) ஈர்க்கப்பட்டு இயற்கை வேளாண் விஞ்ஞானி ஆனார், முனைவர் கோ.நம்மாழ்வார்.

ஐரோப்பிய நாடுகள் முழுக்க பயணம் செய்தவர் நம்மாழ்வார். நம் நாட்டு வேப்பிளைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வந்தவர். 

இந்தியாவில் உணவு பஞ்சத்தை போக்குவதற்காக கொண்டுவரப்பட்ட ’பசுமைப் புரட்சி’யின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அமெரிக்க நாடகத்தின் அத்தனை அத்தியாயாங்களையும் தன்னுடைய எழுத்து மற்றும் பேச்சு மூலமாக அடித்து நொறுக்கினார். 

டெல்டா மாவட்டத்தை சுடுகாடாக மாற்றும் திட்டமான மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராகவும், மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகவும், வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், நடைப்பயணம் என பல விதமான போராட்டங்களை முன்னெடுத்தார்.

தன்னுடைய முயற்சியால் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும், இயற்கை விவசாயத்தை விதைத்தார். இதன் மூலமாக, லட்சக்கணக்கான இயற்கை விவசாயிகள் இன்றைக்கு உருவாகியுள்ளனர்.

இதுவரை குடும்பம், லீசா உள்ளிட்ட 250க்கும் மேலான என்.ஜி.ஓ.க்களை உருவாக்கியுள்ளார்.

இவரின் பணியை சிறப்பிக்கும் வகையில், 2007-ம் ஆண்டு திண்டுக்கல், காந்திக்கிராம கிராமியப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி கெளவரவித்தது. 

தொடர்ந்து இயற்கை வேளாண் முறைகளை தமிழகத்தில் பிரபலப்படுத்துவற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதன் விளைவாக தற்போது தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ளது.

இயற்கை வேளாண் விழிப்புணர்வுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நம்மாழ்வார், தமிழக இயற்கை உழவர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் என்ற இயக்கங்களையும் நடத்தி வந்தார்.

ரசாயனத்தில் விளைவிக்கப்படும் உணவுகள் அனைத்திலுமே நஞ்சு கலந்திருக்கிறது. இந்த உணவுகளை உட்கொள்வதால் தான் மக்கள் நோயாளிகளாகி, சீக்கிரமே வாழ்வை இழக்கிறார்கள். இயற்கை விவசாயம் தான் ஆரோக்கியமான வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று நாடு கடந்தும் குரல் கொடுத்து வந்தவர், நம்மாழ்வார்.

விவசாயத்தை, விவசாயிகளே வேண்டா வெறுப் பாகப் பார்த்த நிலையில்...

சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றும் இளைஞர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள்... எனப் பல தரப்பினரையும் விவசாயத்தை நோக்கி ஓடி வரச் செய்தவர், நம்மாழ்வார். 

தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் பயணித் திருக்கும் நம்மாழ்வார், பல்வேறு பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள், போராட்டங்கள் என்று பலவற்றையும் முன்னெடுத்திருக்கிறார்.

குறிப்பாக, மரபணு மாற்றப் பட்ட விதைகள், பூச்சிகொல்லி நச்சுகளைத் தயாரித்து சந்தைப்படுத்தும், அசுர பலமிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக விவசாயிகளைத் திரட்டிப் போராடி யிருக்கிறார்.

இறுதி நிமிடங்கள்...

டிசம்பர் 30 அன்று இரவு, நம்மாழ்வார் இயற்கை எய்தினார்..

தமிழகம் முழுவதிலும் இருந்து விவசாயிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசு சார்பாக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்பையன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

அதன் பிறகு கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ள சுருமான்பட்டியில் அவர் உருவாக்கியிருக்கும் 'வானகம்' உயிர்ச்சூழல் பண்ணைக்குக் ஆங்கிலப் புத்தாண்டு அன்று காலை 4 மணிக்கு   எடுத்துச் செல்லப்பட்டு நம்மாழ்வாரின் உடல், அங்கே ஏற்கெனவே அவர் தேர்வு செய்து சொல்லியிருந்த இடத்தில் விதைக்கப் பட்டது...

அந்த இடத்தில் வேப்ப மரக்கன்று ஒன்றும் அவருடைய குடும்பத்தாரால் நடப்பட்டது...

ஆபத்தான இனங்கள் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டியது மனிதனே மட்டும்...


நக்கீரன் எனும் திமுக விற்கு மாமா வேலை பார்க்கும் விபச்சார நக்கீரன்....


பெருகும் ஆதரவு.. நீக்கப்பட்ட கருத்துக்கணிப்பு: பிரபல பத்திரிக்கைக்கு அன்புமணி கொடுத்த அதிர்ச்சி..? ஊடகங்களால் மறைக்கப்படும் உண்மை...

கருத்துக்கணிப்பு நடத்தியதில் மருத்துவர் அன்புமணிக்கு ஆதரவு பெருகியதை அறிந்த நக்கீரன் அந்த பதிவை நீக்கிவிட்டு மீண்டும் ஒரு பதிவிட்டு மோசடியான முறையில் வரிசைப்படுத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

2018ல் தன் செயல்பாடுகளால் உங்களுக்கு நம்பிக்கையளித்த அரசியல் தலைவர் யார்? - உங்கள் கருத்தை கமெண்ட் செய்யுங்கள்.. என நேற்று காலையில் ஒரு கருத்துக்கணிப்பை பிரபல பத்திரிகையில் வெளியிட்டனர்.

அதில் முதல் வரிசையில் 4 ஆம் இடத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் பெயரை இடம்பெற வைத்திருந்தனர். அந்த கருத்துக்கணிப்பின் கீழே மிக அதிகமானவர்கள் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் என்று பதிவிட்டிருந்தனர்.

ஆனால், இப்போது திடீரென அந்த பதிவினை நீக்கிவிட்டனர்.

அதுமட்டுமல்லாமல் முதலில் 4 ஆம் இடத்தில் இருந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் பெயரை - அவரது பெயரையே மிக அதிகமானோர் தேர்வு செய்திருந்த நிலையில் - தற்போது கடைசியாக 12 ஆவது இடத்தில் வைத்துள்ளனர்.

ஒரு சாதாரண பத்திரிகை கருத்துக்கணிப்பிலேயே மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு அதிகமானோர் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பதற்காக, அந்த கருத்துக்கணிப்பையே பிரபல பத்திரிக்கை நீக்குவது எதற்காக?

தற்போது புதிதாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அதே கருத்துக்கணிப்பில் முன்பு முதல் வரிசையில் 4 ஆம் இடத்தில் வைத்திருந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பெயரை, தற்போது கடைசி வரிசையில் கடைசியாக உள்ள 12 ஆம் இடத்தில் தள்ளியது ஏன்?

சீப்பை ஒளித்து வைத்தால், கல்யாணம் நின்று போகுமா...? என்று பலரும் இது குறித்து சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்...

நக்கீரன் பத்திரிகையை மூடி விட்டு... நேரடியாக திமுக ஸ்டாலினுக்கு மாமா வேலை பார் கோபால்... இன்னும் நல்லா வருமானம் வரும்...

Biological weapons பதிவு - 7... எய்ட்ஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதே...


சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய்...


சென்னையில் நிறையப் பேருக்கு இதை டைடல் பார்க்குக்கு எதிரே ஓடும் சாக்கடை என்ற அளவில் மட்டுமே தெரியும்.

ஹிந்து முதலான நாளிதழ்களில் கொஞ்சம் பேசப் பட்டிருந்தாலும் நான் சந்தித்த நிறைய பேருக்குத் தெரியாத விஷயம் "பக்கிங்ஹாம் கால்வாய்" தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய்.

இதைப் பற்றி நான் இங்கே பதியக் காரணம் இந்த விஷயம் மீடியாக்களால் பேசப் படவில்லை என்பதும், நமது பாடப் புத்தகங்களிலும் பெரிதாக எந்த விவரங்களும் தரப்படவில்லை என்ற ஆதங்கம் தான்.

இதை அரசாங்கம் குப்பைகளாலும் இடி பொருட்களாலும் நிரப்பி மறைத்து விட முயல்வது ஒரு தேச அவமானம்.

தொலை நோக்குப் பார்வை (அப்படின்னா) இல்லாத நமது தமிழக அரசாங்கங்கள் ஆங்கிலேயர் விட்டுப் போன ஒரே புதையலையும் மண்ணாக்கி விட்ட அநியாயம் இது.

1806 ஆம் ஆண்டு வெட்டத் தொடங்கி பல கட்டங்களில் பல்வேறு ஏரிகளையும் ஆறுகளையும் இணைத்து 420 km நீளத்தில் விஜயவாடாவையும் விழுப்புரம் மாவட்டத்தையும் இணைக்கும் இந்த அதிசயம் உருவானது.

தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைத் துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு செல்ல இது பெரிதாக உபயோகப் பட்டு இருக்கிறது.

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களால் பெரிதும் உபயோகப்படுத்தப் பட்ட இந்தக் கால்வாய், சுதந்திரத்திற்குப் பிறகு கவனிப்பார் இல்லாமல் அழியத் தொடங்கியது. மற்ற பகுதிகளில் இன்னும் பெரிதும் பாதிக்கப் படாத இந்தக் கால்வாய் 80 சதவீதம் இன்னும் உபயோக நிலையிலேயே உள்ளது.

சென்னை நகரின் குறுக்கே ஓடும் 30 km நீளமான பகுதி மட்டுமே கடும் நாற்றம் வீசும் சாக்கடையாக மாறி விட்டிருக்கிறது.

MRTS என்ற பறக்கும் ரயில் திட்டம் இந்தக் கால்வாயை ஒட்டியே திட்டமிடப் பட்டது.

இந்தக் கால்வாயே ஒரு MRTS என்பது யாருக்குமே புரியவில்லை என்பது பரிதாபம் தான். இந்த ரயில் பாதை கட்டுமானம் பெரும்பாலான இடங்களில் இந்தக் கால்வாயை சிதைத்து விட்டிருக்கிறது. சில ரயில் நிலையங்கள் பக்கிங்ஹாம் கால்வாயை நிரப்பிக் கட்டப் பட்டிருப்பது போன்ற ஒரு முட்டாள்தனம் உலகத்தின் எந்த மூலையிலும் காணக் கிடைக்காத ஒன்று.

2004 ஏற்பட்ட சுனாமியின் பொது பல லட்சம் உயிர்களை இது ஒரு வடிகாலாக இருந்து காப்பாற்றியதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து தமிழக மற்றும் ஆந்திர அரசுகளிடம் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனாலும் பெரிதாக ஒரு முயற்சியும் எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை.

பல கோடி செலவில் சாலைகள் அமைத்து நம்மிடம் சுங்கம் வசூலிக்கும் அரசு, இது போன்ற எளிய இயற்கையான போக்குவரத்து வழிகளை ஏன் மறந்து விட்டிருக்கிறது?

இன்றைய தேதிக்கு இது போன்ற திட்டத்தை அமைக்க எத்தனை ஆயிரம் கோடிகள் தேவைப்படும் என்று யாராவது யோசித்தால் தேவலை (200% மந்திரி வரிகள் தனி).

ஒவ்வொரு முறை விமானத்தில் பறக்கும் போதும் பல இடங்களில் ஸ்கேல் வைத்துப் போட்டது போல நேராகத் தெரியும் இந்த பக்கிங்ஹாம் கால்வாய் நாம் எவ்வளவு அறிவில்லாமல், பொறுப்பில்லாமல் வாழ்கிறோம் என்பதை ஒரு அளவுகோல் போல நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது...

13 வயது சிறுவனை கற்பழித்த 72 வயது பாட்டி.. இளைஞர்களை மட்டுமே குறி வைத்தது அம்பலம்...


அமெரி்க்காவின்  நார்த் கரோலினின் ரெட் போர்ட்டை சேர்ந்தவர் கரோலின் மெக்கி.  72 வயது மூதாட்டியான இவர்  இளைஞர்க ளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து மூதாட்டியை கைது  செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் இவர் இளைஞர்களை மட்டுமே குறி வைத்து அவர்களுடன்  வலுக்கட்டாயமாக உறவு வைத்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் 13 வயது சிறுவனும் இவரால் பாதிக்கப்பட்டுள்ளான்.

இது குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை  நடத்த வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே முழு விவரமும் தெரிய வரும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்...

தமிழினமே சிந்தித்துப் பார்...


பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல்...


உண்மையில் பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல் என்பதை அறியுங்கள்.

பனை மரத்திலும் தென்னை மரத்திலும் இருக்கும் நார் போன்ற பகுதிதான் பன்னாடை. அந்த காலத்தில் இதனை கல் முதலியவற்றை வடிகட்ட பயன்படுத்தினர்.

பன்னாடையானது மீந்த சக்கையை தன்னிடம் வைத்துக்கொண்டு நல்லவற்றை விட்டுவிடும்.

நன்னூலில் ஒரு பாடலில் பன்னாடையைப் பற்றி கூறுகிறார் பவணந்தி.

நன்னூல் என்பது பதிமூன்றாம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்டதமிழ் இலக்கண நூலாகும்.

"அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்."

பொருள்:

அன்னம், பசு போன்றோர் முதல் மாணாக்கர். மண், கிளி போன்றோர் இடை மாணாக்கர். இல்லிக் குடம் (ஓட்டைக் குடம்) ஆடு, எறுமை, பன்னாடை (நெய்யரி) போன்றோர் கடை மாணாக்கர்.

விளக்கம்:

அன்னம் நீரிலிருந்து பாலைப் பிரித்து உண்ணும், அது போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் சொல்வதிலிருந்து நல்லனவற்றை எடுத்துக் கொள்வர்.

பசுவானது கிடைக்கும் போது புல்லை தின்றுவிட்டு பின்னர் அதை அசை போடும். அதே போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் இருக்கும் போது அவர்களிடம் கலைகளைக் கற்றுக்கொண்டு பின்னர் அதனைப் பயிற்சிப்பர்.

மண்ணை எந்த அளவு பண்படுத்துகிறோமோ அது அந்த அளவு பயன் தரும். அது போல் ஆசிரியரின் பயிற்சிக்கு ஏற்ப கற்பவரும், கிளியைப் போன்று சொன்னதைச் சொல்பவரும் இடை மாணாக்கர்.

ஓட்டைக்குடம் எதையும்தக்க வைத்துக் கொள்ளாது. ஆடு கண்ட இலைகளையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயும். எதையும் உருப்படியாக உண்ணாது. எருமை குளத்து நீரிலே கிடந்து அதனையே கலக்கிவிடும்.

நெய்யரி (பன்னாடை) நெயியை (நல்லதை) விட்டு கசடை (வேண்டாததை) வைத்துக்கொள்ளும். இத்தகைய குணங்கள் உடையவர்கள் கடை மாணாக்கர்...

ஆமணக்கின் மருத்துவ பயன்கள்...


ஆமணக்கின் இலை, வேர், விதை, நெய் ஆகியவை ஆயுர்வேத மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுகின்றன. ஆமணக்கு யூஃபோர்பியேசி என்ற ஒற்றைப் பூவிதழ் வட்டத்தையுடைய இரு விதையிலைக் குடும்பத்தைச் சார்ந்தது. ஏறக்குறைய இந்தியா, இலங்கை முழுவதும் பரவிக் காணப்படுகிறது. இதை, ஆமணக்கு என்றும் சிற்றாமணக்கு என்றும் கூறுவர்.

இலை...

சிற்றாமணக்கின் இலையையும், கீழா நெல்லி இலையையும் ஒரே அளவு எடுத்து அரைத்து எலுமிச்சங்காய் அளவு மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து நான்காம் நாள் மூன்று அல்லது நான்கு முறை வயிறு போவதற்குரிய அளவு சிவதைப் பொடி கொடுக்கக் காமாலை குணமாகும்.

இலைகளைச் சிறுக நறுக்கிச் சிற்றாமணக்கு நெய்விட்டு வதக்கிச் சூட்டுடன், வலியுடன் கூடிய கீல் வாய்வுகளுக்கும், வீக்கங்களுக்கும் ஒற்றடம் கொடுக்கலாம். ஆமணக்கின் இலையைச் சிற்றாமணக்கு எண்ணெய் தடவி, அனலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டினால் பால் பெருகும்.

ஆமணக்கின் இலையை விளக்கெண்ணெய் தடவி அனலில் வதக்கிக் கட்டிகளில் வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும். வெளி மூலம், இரத்த மூலம் மற்றும் ரத்தம் கசியும் புண்களில் ஆமணக்கு இலையை அரைத்து பூசி வர இரத்தக் கசிவு மறையும். ரணம் ஆறும். சரும வியாதிகள், நரம்பு வலிகள், வீக்கம், தசை வலி, போன்றவற்றில் ஆமணக்கு இலையை அனலில் வாட்டி கட்டி வர நல்ல பலன் தெரியும்.

வேர்...

ஆமணக்கின் வேரைக் குடிநீர் செய்து அதில் சிறிது பூநீறு சேர்த்து மூன்று அல்லது, ஐந்து நாள்களுக்குக் காலை, மாலை ஆகிய இரு நேரங்களில் உட்கொண்டால் பக்கச்சூலை குணமாகும். வளிக் குற்றத்தைத் தன்னிலைப்படுத்தச் செய்யும் குடிநீர்களிலும், தைலங்களிலும் ஆமணக்கின் வேரைச் சேர்ப்பது வழக்கம். பல் வலி, ஈறு வலி, ஈறில் இரத்தம் கசிதல் போன்றவற்றில் ஆமணக்கு இலை மற்றும் குச்சியை மென்று சாப்பிட ரத்தக் கசிவு மறையும். ஈறுகள் பலம் பெறும்.

விதை...

ஆமணக்கின் விதையை மேல்தோல் நீக்கிக் காரசாரம் வைத்துத் துவையல் செய்து கழற்றிக் காயளவு கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும். விதையை ஓடு நீக்கி அரைத்துக் கட்டிகளின் மேல் பற்றிட அவை பழுத்து உடையும். கன்று ஈனாத எருமைப் பாலில் ஆமணக்கின் பருப்பை இழைத்துக் கண்களில் தீட்டினால் மறுநாள் பீளை போகும். பின்னர்க் கண்கள் மிகவும் தூய்மையாக இருக்கும்.

எண்ணெய்...

ஆமணக்கின் விதையிலிருந்து நெய் இருவகையாக எடுக்கப்படும். அவை பச்சை எண்ணெய், ஊற்றினை எண்ணெய் என்பனவாகும். தினசரி காலை, மாலை இரு வேளை மூன்று மி.லி. அளவு உள்ளுக்கு கொடுக்க நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், மலக்கட்டு, மூட்டுவலி போன்றவை மறையும்.

குடல் இறக்கம் (hernia), வயிற்றுப் பூச்சிகள், சமிபாட்டுக் கோளாறு, போன்றவற்றிற்கும் மூன்று மில்லி எண்ணெய்யை தினசரி காலை மாலை உள்ளுக்கு கொடுக்கலாம். சிறுநீர் கோளாறுகள், எரிச்சல், சிறுநீர் பாதையில் எரிச்சல் போன்றவற்றிலும் விளக்கெண்ணையை உள்ளுக்கு கொடுக்கலாம்.

தீராத மூட்டு வலி, மூட்டு பிடிப்பு, மூட்டு வாதம், எலும்பு தேய்வு, மூட்டு வீக்கம் போன்றவற்றிற்கும் 2 – 3 மி. லி. தினசரி எண்ணெய்யை உள்ளுக்கு கொடுக்கலாம். வீக்கம், உடல் வலி, போன்றவற்றிலும் விளக்கெண்ணையை உள்ளுக்கு கொடுக்க நல்ல பலன் தெரியும்.

பச்சை எண்ணெய்...

ஆமணக்கு விதைகளை உலர்த்தி ஓடுகளை நீக்கி, எந்திரத்தின் மூலமாய்ப் பருப்புகடிள அழுத்திப் பிழியும் எண்ணெய், பச்சை எண்ணெய் எனப்படும்.

ஊற்றின எண்ணெய்...

ஓர் அகன்ற பாத்திரத்தில் நான்கு பங்கு நீர் விட்டு, அதில் ஆமணக்குப் பருப்புகளை இடித்து, ஒரு பங்கு சேர்த்து, தீயில் எரிக்க நெய் கக்கி நீரின் மீது மிதக்கும். இதை அகப்பையால் எடுத்து, வேறு பாத்திரத்தில் சேர்த்து, அதில் கலந்துள்ள நீரை, அனலில் வைத்து போக்கும் முறையே ஊற்றின எண்ணெய் எனப்படும். இதில் நீருக்குப் பதிலாக, இளநீர் சேர்த்துக் காய்ச்சி எடுக்கும் எண்ணெய் குற்றமற்றதும், உடலுக்கு மிகுந்த நன்மை பயப்பதுமாகும்.

இதைக் கைக்குழந்தை, இளவயதுடையவர்கள் சூல் கொண்டவர்கள், பிள்ளை பெற்றவர், சீதக் குருதிப் பேதியால் வருந்துபவர் முதலானோர்க்கு அச்சமின்றி வயிறு கழியக் கொடுக்கலாம். தற்போது இம்முறை வழக்கொழிந்து வருகிறது.

மலக்கட்டு உள்ளவர்கள் ஆமணக்கெண்ணையை மல வாயின் உட்புறத்தில் தடவ மலம் இளகி வெளிப்படும் வயிற்று வலியினால் அவதியுறும் குழந்தைகளுக்கு அடிவயிற்றிலும், பெரியவர்களுக்கு தொப்புளைச் சுற்றிலும் ஆமணக்கெண்ணையைத் தடவி, ஒற்றடம் இட வயிற்று வலி குறைந்து, மலம் வெளிப்படும்.

உடம்பில் மேல்தோல் உராய்ந்து, எரிச்சல் ஏற்பட்டால் அவ்விடத்தில் விளக்கெண்ணையைத் தடவ எரிச்சல் நீங்கி முன்பிருந்த நிலையை அடையும். கண்கள் மருந்துகளின் வேகத்தாலும், தூசுகள் விழுவதாலும் அருகிச் சிவந்தால் ஆமணக்கெண்ணையும், தாய்ப்பாலும் சேர்த்துக் குழைத்துக் கண்ணிலிடச் சிவப்பு மாறிக் குணமாகும்.

முலைக்காம்பு புண், வெடிப்பு இவற்றிற்கு இதைத் தடவி வரலாம். முக்கூட்டு நெய்யில் இதுவும் ஒன்று. பலவகையான உள், வெளிப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் முறைகளில் ஆமணக்கெண்ணெய் சேர்க்கப்படுகிறது.

ஆமணக்கு எண்ணெய்...

ஆமணக்கு எண்ணெய்யை 5 மி.லி. வீதம் காலையும், மாலையும் உட்கொண்டு வர வாதம், நரம்பு வலி, தசை வலி, முக வாதம் போன்றவற்றிற்கு பயன் தரும்.உள்ளுக்கு 5 மி.லி. வீதம் உட்கொள்ள சமிபாட்டுக் கோளாறுகள் சீராகும். குடல் இறக்கம் பிரச்சனை குறையும்...

ரத்தசோகை போக்கும் பேரீச்சம்பழம்...


பெண்களுக்கு தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்ய உதவும்.

ரத்தசோகையை தவிர்த்திடும். நன்கு பழுத்த உலர்ந்த பழங்களை சுத்தம் செய்து விதை நீக்கி உண்பது நல்லது.

பழங்களை பாலில் கொதிக்க வைத்து மசித்து உண்ணலாம்...

இந்திய கடற்கரை விற்பனைக்கு - பாஜக மோடி...


கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை - 2018 மத்திய அரசு ஒப்புதல்...

இந்திய கடற்கரையில் பாரம்பரிய மீனவர்களின் உரிமைகள் பறிப்பு.

சுற்றுலா, வளர்ச்சி பெயரில்
கடற்கரை கபளீகரம்.

CRZ-2011, பிரிவு-5, இணைப்பு-1,ல் அறிவித்த...

பாரம்பரிய மீனவமக்களுக்கான
பயன்பாட்டு உரிமைகள், பாதுகாக்க இன்று வரை நடவடிக்கை இல்லை..

CRZ-2011 விதி மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது இதுவரை சட்ட நடவடிக்கை இல்லை?

ஆனால்,(CRZ-2018) கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை -2018
மத்திய அரசு உடனே ஒப்புதல்...

பாஜக அடிமை அதிமுக எனும் கார்ப்பரேட் அரசின் திட்டமிட்ட சதி இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு...


முறுக்கு, அதிரசம், கடலை உருண்டை, பொரி உருண்டை, சீடை போன்ற உள்ளூர் குடிசை தொழில் உணவுகளை பிளாஸ்டிக் பைகளில் அடைக்க தடை?

ஆனால் கார்பரேட் பொருளை பிளாஸ்டிக்கில் பேக் செய்ய தடையில்லை....

மனித தோல் பற்றிய தகவல்கள்...


பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்பன்னர் என அழைக்கலாம் உடலின் மேற்புறம் முழுவதும் போர்வையாக அமைந்துள்ளது. இவ்வமைப்பு உடலின் உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கிறது. உடலில் நீர் ஆவியாதலைத் தடுக்கிறது.

உடலின் வெப்பத்தைப் பாதுகாக்கிறது. உடலுக்கு வைட்டமின் D தயாரித்தளிக்கிறது. தொடு உணர்ச்சி, வலியறிதலில், வெப்பமறிதலில் போன்ற உணர்வுகளை உடலுக்கு உணர்த்துகிறது. இவ்விதம் பலதரப்பட்ட பணிகளைச் செய்வதால் தோலை 'பலதொழில் விற்பன்னர் எனலாம்.

மேல்தோலானது கை(ஹை)ப்போடெர்மிசு(ஸ்) (கீடெர்மிஸ்) எனும் செல்š பரப்பின் மீது அமைந்துள்ளது.

கை(ஹை)ப்போடெர்மிசு(ஸ்), தோலை அடியில் உள்ள எலும்பு, தசைகளுடன் இணைக்கும். மேலும் தோலின் நரம்புகளையும் இரத்தக் குழல்களையும் பெற்றிருக்கும்.

தோலில் டெர்மிசு(ஸ்) , எபிடெர்மிசு(ஸ்) (மேடெர்மிஸ்) என இருமுக்கிய திசுக்கள் உண்டு. டெர்மிசு இணைப்புத் திசுவிலிருந்து தோன்றும். இத்திசுவே தோலுக்கான அடிப்படை வலுவைத்தரும். இப்பகுதியில் நரம்பு முடிவுகள் , ரோமங்களின் அடிப்பகுதிகள், மென்மைத் தசைகள் மற்றும் சுரப்பிகள் உள்ளன

டெர்மிசு பகுதி இரண்டு அடுக்கு கொண்டது. அவை மேற்புற பாப்பில்லரி அடுக்கு கீழ்ப்புற ரெட்டிகுலார் அடுக்கு ஆகும். ரெட்டிகுலார் அடுக்கு டெர்மிசின் முக்கிய பகுதியாகும். இப்பகுதி அடர்த்தியான தன்மையுடன் கீழ்டெர்மிசுடன் தொடர்பு கொண்டிருக்கும்

தோலானது தடித்தோ அல்லது மென்ம்மையனதகவோ இருக்கலாம். தடித்த தோலில் மேற்குறிப்பிட்ட ஐந்து அடுக்குகளும் உண்டு. உடல்பரப்பு மென்மையான தோல் கொண்டது. தொடர்ந்து உராய்வு உள்ள இடங்களில் தோலில்த் தடிப்பு ஏற்ப்படும் . இதில் கார்னியம் அடுக்கு, பல அடுக்கு செல்களை கொண்டிருக்கும்.

நிறமிகள் தோலின் நிறத்தை உண்டாக்குகின்றன. கார்னியம் அடுக்கின் அடர்த்தி, அடியில் உள்ள இரத்த ஓட்டம் போன்றவைகளும் நிறமளிக்கலாம். நிறமானது மெலனின் நிறமிகளால் தோன்றும் . இந்நிறமி தோல், ரோமம், கண்கள் போன்ற பகுதிகளுக்கு நிறமளிக்கும். சூரியன், உதா கதிர்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும்...

திமுக வின் அடுத்த சாதனை...


காய்களால் ஆரோக்கியம்...


உடல் ஆரோக்கியத்தை தேடி பயணிக்கும் இயந்திர உலகில், இயற்கை மருந்தாய் கிடைத்திருப்பது காய்களும், பழங்களும். இதில், தான் நம் உடலுக்கு தேவையான, அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.

காய்கறி நிறம், மணம், சுவையை உள்ளடக்கியது. காய்கறிகளில் இருந்து மாவுச்சத்து, புரதம், தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை கிடைக்கிறது.

காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மற்றும் ஏற்படும் நன்மைகள்...

நார்ச்சத்து: காய்களில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தூண்டி, மலச்சிக்கலை தவிர்க்கிறது. உணவுக் குழாயில் உணவு எளிதாக பயணிக்க உதவும்.

வைட்டமின் சத்து: பச்சை இலை காய்களில், கீரைகளில் தான் அதிகளவில் வைட்டமின் இருக்கிறது. முக்கியமாக கரோட்டின் இருக்கிறது. கரோட்டின் நம் உடம்பில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இது கண் பார்வையை சீராக்குகிறது. மாலைக்கண் நோயை தடுக்கிறது. கீரை வகைகளில் கரோட்டினுடன் ரைபோபிளேவின் மற்றும் வைட்டமின் சியும் அதிகளவில் உள்ளது.

தாது உப்புகள்: தண்டுகீரை, அகத்தி, வெந்தயக் கீரை மற்றும் முருங்கைக் கீரையில் கால்சியம் அதிகளவில் காணப்படுகிறது. கீரை வகைகளில் இரும்புச் சத்தும் நிறைந்து காணப்படுகிறது. தினமும் நம் உணவுடன், 50 கிராம் கீரையை சேர்த்துக் கொண்டால் நமக்கு ஒரு நாளைக்கு தேவையான இரும்புச்சத்து, கால்சியம், கரோட்டின், வைட்டமின் சி ஆகியவை கிடைத்துவிடும்.

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த காய்களை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழும் போது, மனமும் எவ்வித பிரச்னையை தாங்கக்கூடிய தன்னம்பிக்கையை பெறுகிறது.

ஆகவே, ஆரோக்கியமே அனைத்திற்கும் முக்கிய காரணம் என்பதை உணர்ந்து, காய்கறிகளை உணவில் சேர்க்க முன்வர வேண்டும்...

ஒரு புறம் கழுகு பார்வை மறுபுறம் பாம்பின் விஷம் இந்திப்பெருங்கடல் மீது...


எகிப்து பிரமிடின் அமானுஷ்யம் - பால் பிரடனின் நேரடி அனுபவம்...


எகிப்தும் இந்தியா வை போன்றே இன்னொரு சித்தர்கள் தேசம் என்றால் அது மிகையாகாது.

இந்தியாவைப் போன்றே மிகப்பழமையான நாகரிகம் வாய்ந்த எகிப்து ஆன்மீகத் தேடல்களிலும் சிறந்தே விளங்கியது.

இன்றும் ஸ்பிங்க்ஸம், பிரமிடுகளும் எத்தனையோ ஆன்மீக ரகசியங்களைத் தங்களுள் மறைத்து வைத்திருக்கின்றன என்பது பலருடைய ஆழ்ந்த நம்பிக்கை.

அதுவே பால் ப்ரண்டனை அங்கும் ஈர்த்தது. பால் ப்ரண்டன் இன்னொரு தேடலை எகிப்தில் தொடர்ந்தார்.

எகிப்தில் பிரமிடுகளைக் காக்கும் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஸ்பிங்க்ஸ் மனிதத்தலையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு.

அது எப்போது கட்டப்பட்டது என்பதை இன்றும் யாராலும் சரியாக ஊகிக்க முடியவில்லை.

கிறிஸ்து பிறப்பதற்கும் முன் சுமார் 2500 ஆண்டுகளிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்பிற்குள் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் அனுமானிக்கிறார்கள்.

மிகப்பழமை வாய்ந்த அந்த ஸ்பிங்க்ஸ் தேவதை மனிதனின் நுண்ணறிவையும், சிங்கத்தின் தேகபலத்தையும் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது.

அது ஏழு முறை பாலைவன மணலால் புதையுண்டது என்றும் ஏழு முறை அந்த மணல் விலகி மீண்டது என்றும் சொல்லப்படுகிறது.

பால் ப்ரண்டன் ஸ்பிங்க்ஸ் மற்றும் பெரிய பிரமிடு இரண்டிலிருந்தும் ஞானச் செய்தி பெற வேண்டும் என்று விரும்பினார். ஸ்பிங்க்ஸ் முன் பாலைவன மணலில் ஒரு நாளிரவு முழுவதும் தனியாக அமர்ந்து தியானம் செய்த பால் ப்ரண்டன் கடைசியில் அதிகாலை நேரத்தில் ஸ்பிங்க்ஸிடமிருந்து ஒரு செய்தி கிடைத்ததாகக் கூறுகிறார். நீ உருவாகி அழியும் சதைகளால் ஆன உருவமல்ல மனிதனே. நீ அழிவில்லாத ஆத்மா! உன்னுடைய இதயத்தில் அது நீ கண்டடையக் காத்திருக்கிறது, இந்தப் பாலைவன மண்ணில் நான் காத்திருப்பதைப் போல். அதனால் உன்னையே நீ அறிவாய்...

அடுத்ததாக உலக அதிசயங்களில் ஒன்றான பெரிய பிரமிடின் உள்ளே ஒரு நாள் இரவைக் கழிக்க எண்ணினார் பால் ப்ரண்டன். இங்கே பிரமிடுகளைப் பற்றி சில தகவல்களை அறிந்து கொள்வது நல்லது.

பெரிய பிரமிடு ஒவ்வொரு புறமும் 756 அடி நீளமும், 450 அடி உயரமும் கொண்டது. சுமார் இரண்டரை டன் எடையுள்ள கற்கள் 23,00,000 பயன்படுத்தி கட்டப்பட்ட பிரம்மாண்டமான அமைப்பு அது. சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்தது.

அக்காலத்தில் பிரம்மாண்டமான அமைப்புகளை அளக்க சரியான அளவுகோல் இல்லை என்றாலும் எவ்வளவு கச்சிதமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்றால் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கு இடையே உள்ள வித்தியாசம் எட்டு அங்குலங்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. இது இன்றைக்கும் கட்டிட வல்லுனர்களை வியக்க வைக்கிறது.

பிரமிடுகளில் அரசர்கள், அரசிகளின் சவங்களை, ஏராளமான செல்வங்களுடன் புதைத்து வைத்திருந்ததால் பிற்காலத்தில் பலரும் உள்ளே நுழைந்து அந்த செல்வங்களை சூறையாடிச் செல்ல ஆரம்பித்தனர்.

எகிப்துக்குப் படையெடுத்தவர்கள், உள் நாட்டவர்கள் என பல்லாண்டுகள் வந்து கொள்ளையடித்துச் சென்ற பின் மிஞ்சியது விலை போகாத சவங்களும், சில பொருள்களும், எடுத்துச் செல்ல முடியாத பிரமிடுகளின் கட்டிடங்கள் மட்டுமே. ஆனால் பிரமிடுகளில் இருந்து கொள்ளையடித்துச் செல்ல முடியாத ஆன்மீக ரகசியங்கள் இன்னும் ஏராளமாக அவற்றில் உள்ளன என்பது உலகப் பெரியோரின் கருத்து.

எனவே தான் பால் ப்ரண்டன் பெரிய பிரமிடினுள்ளே ஒரு நாள் இரவைக் கழித்து அந்த ரகசியங்களை அறிய விரும்பினார்.

பெரிய பிரமிடு அரசாங்கத்தின் சொத்தாக இருந்ததால், நுழைவுக் கட்டணம் செலுத்தி சென்று பார்த்து வரும் உரிமை பார்வையாளர்களுக்கு இருந்தாலும் அங்கு ஒரு இரவு முழுவதும் தங்க வேண்டுமானால் அரசாங்க உத்தரவு வேண்டும் என்று அவருக்குச் சொல்லப்பட்டது.

எனவே அரசாங்கத்தின் பழங்காலக் கலைப் பொருள் காப்பகத்தில் சென்று தன் விருப்பத்தை அவர் தெரிவித்தார். அந்த அதிகாரி நிலவுக்குச் செல்ல பால் ப்ரண்டன் ஆசைப்பட்டது போல் அவரைத் திகைப்போடு பார்த்தார்.

பின் அவரை ஒரு மனநோயாளியைப் பார்ப்பது போல் பார்த்து சொன்னார். நான் இது வரை இது போன்ற கோரிக்கையைக் கேட்டதில்லை. ஆனால் இதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் என் கையில் இல்லை. உயர் அதிகாரியைப் பாருங்கள்.

அந்த உயர் அதிகாரி அனுமதிக்க முடியாது என்று உறுதியாகச் சொன்னார். அவருடைய பணிக்காலத்தில் இது போன்ற ஒரு கோரிக்கை வந்ததோ, அனுமதிக்கப்பட்டதோ இல்லை என்றார்.

பால் ப்ரண்டன் தன் கோரிக்கையில் விடாப்படியாக நிற்க அவர் இரவு வேளையில் தங்குவது போலீசார் அதிகாரத்தில் தான் வருகிறது. அவர்களைப் போய்ப் பாருங்கள் என்றார்.

போலீசாரும் இந்த வினோத கோரிக்கையை ஏற்க முடியாமல் தங்கள் தலைமை அதிகாரியிடம் அனுப்ப அவரும் திகைத்து முடிவெடுக்க ஒரு நாள் தேவை என்றும் மறுநாள் வந்து பார்க்கும் படியும் சொன்னார்.

மறுநாள் அவர் மறுபடியும் பழங்கால கலைப் பொருள் காப்பகத்தையே அணுகச் சொன்னார். கடைசியில் கெய்ரோ நகர ஜென்ரல் கமாண்டண்டைச் சென்று பால் ப்ரண்டன் தன் கோரிக்கையைச் சொல்ல அவர் பிரமிடுகளைக் காக்கும் போலீஸ் உயர் அதிகாரிக்கு அனுமதி வழங்குமாறு எழுதி அனுப்பினார்.

அந்தப் போலீஸ் அதிகாரி நாங்கள் தினமும் மாலையில் பிரமிடின் நுழைவாயிலைப் பூட்டி வருகிறோம். நீங்கள் உள்ளே செல்ல வேண்டுமென்றால் மறுநாள் காலை வரை உள்ளேயே இருக்க வேண்டி வரும். சுமார் 12 மணி நேரம் உள்ளே இருக்க ஒத்துக் கொள்கிறீர்களா?

பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். மறுநாள் மாலை பால் ப்ரண்டன் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு பிரமிடினுள் நுழைந்தார். ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர் ஒருவர் அவர் உள்ளே சென்றவுடன் நுழைவாயிலைப் பூட்டிக் கொண்டு வெளியே பூட்டிக் கொள்ள தன்னந்தனியனாய் பால் ப்ரண்டன் தன் பயணத்தைத் தொடங்கினார்.

அந்தப் பிரமிடுக்குள் பல பாதாளச் சுரங்கங்கள் இருந்தன. சில மிகவும் குறுகலாய் இருந்தன. சில இடங்களில் அவர் தவழ்ந்து போக வேண்டி இருந்தது. உள்ளே சில இடங்களில் வௌவால்களும், எலிகளும் அவருக்குத் துணையாய் இருந்தன.

வேறொருவராக இருந்திருந்தால் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்து வெளியேற நினைத்திருப்பார். ஆனால் பால் ப்ரண்டன் மனம் தளராமல் அரசனுடைய உடலை வைத்துள்ள பிரபலமான சேம்பரை அடைந்தார்.

அங்கு சென்ற அவர் அங்கு சென்றதும் தான் கொண்டு வந்திருந்த தொப்பி, தேனீர் நிறைந்த ப்ளாஸ்க், தண்ணீர், நோட்டுப்புத்தகம், பேனா எல்லாவற்றையும் கீழே வைத்து விட்டு சம்மணமிட்டு அமர்ந்து தன் டார்ச் லைட்டை அணைத்து விட்டார்.

உடனே இருள் சூழ்ந்தது. மயான அமைதி அங்கு நிலவியது. நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாது அமைதியாகக் காத்திருந்தார். நேரம் செல்லச் செல்ல ஏதோ அமானுஷ்ய சக்திகள் தன்னைச் சுற்றி உலவுவதை அவரால் உணர முடிந்தது. அவர் அந்த இருட்டில் விழிப்புணர்வோடு சூட்சுமமாகக் கவனித்த போது அது கற்பனையல்ல நிஜம் என்பதை அவரால் உணர முடிந்தது. பயத்தில் அவர் உடல் மேலும் சில்லிட்டது.

பிரமிடின் உள்ளே தனிமையில் நள்ளிரவின் கும்மிருட்டில் அமர்ந்திருந்த பால் ப்ரண்டனுக்கு ஏதோ சக்திகளின் நடமாட்டம் இருப்பதை உணர முடிந்தது. சில நாட்கள் விரதமும் தியானமும் இருந்து அவன் தன் புலன்களை கூர்மைப்படுத்தி இருந்ததால் அந்த சக்திகள் துஷ்ட சக்திகள் என்பதையும் அவரால் மிகத் தெளிவாக உணர முடிந்தது.

இப்போது அவர் தனிமையில் இல்லை, உடன் துஷ்ட சக்திகளும் உள்ளன என்பதை உணர்ந்த போது அவர் பிரமிடுக்குள்ளே போகப் போவதாகச் சொன்ன போது ஒரு இளம் அரபு நண்பன் எச்சரித்தது நினைவுக்கு வந்தது. அங்கு ஒவ்வொரு அங்குலமும் தீய சக்திகளாலும் ஆவிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அவை ஒன்றல்ல இரண்டல்ல ஒரு பட்டாளமே இருப்பதால் இந்த விஷப் பரிட்சைக்கு நீங்கள் போகாமல் இருப்பது நல்லது...

சிறிது நேரத்தில் அவரால் அந்த துஷ்ட சக்திகளின் மாய உருவங்கள் கூட அலைகளாய், நிழலாய் தென்படத் துவங்கியது. ஓரிரு உருவங்கள் அவர் முகத்தின் வெகு அருகில் வந்து அவரை உசுப்புவது போல் தோன்றியது. பால் ப்ரண்டன் இரவின் தனிமைக்குப் பெரிதும் பழக்கப்பட்டவர் என்றாலும் இந்த அனுபவம் அவர் இரத்தத்தை உறைய வைத்தது.

அந்த சக்திகள் அவரை உட்கார்ந்த இடத்தை விட்டு எழுப்புவதற்கு முயற்சிப்பதாக அவருக்குத் தோன்றியது. ஒரு கட்டத்தில் பக்கத்தில் வைத்திருந்த டார்ச் விளக்கைப் போட்டு அந்த சக்திகளை விரட்டுவது நல்லது என்று தோன்றினாலும் பிரமிடுகளின் உள்ளே என் ன தான் இரவில் நிகழ்கின்றது என்பதை அறியும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்ற எண்ணம் அவரை அவ்வாறு செய்யாமல் தடுத்தது.

ஒரு கட்டத்தில் அந்த சக்திகளின் பலம் உச்சத்திற்கு சென்றதாய் பால் ப்ரண்டனுக்குத் தோன்றியது. ஆனாலும் ஒரு அசாதாரண மனபலத்துடன் பால் ப்ரண்டன் தாக்குப்பிடித்தார். திடீரென்று அந்த துஷ்ட சக்திகளின் போக்குவரத்து நின்று போயிற்று. அவை எல்லாம் மாயமாக மறைந்து போயின. அங்கு ஒரு வித மயான அமைதி நிலவியது. பால் ப்ரண்டனுக்கு சிறிது நேரம் கழித்தே காரணம் விளங்கியது.

இரு புதிய உருவங்களின் அருகாமையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். மிகவும் அமைதியான தெய்வீக சக்தி உடையவையாய் அவை இருந்தன. துஷ்ட சக்திகளைப் போன்ற தெளிவில்லாத நிழல்களாகவோ, அலைகளாகவோ இல்லாமல் அந்த இரண்டு உருவங்களும் ஓரளவு தெளிவாகத் தெரிந்தன. பழங்கால எகிப்திய குருமார்கள் போலத் தெரிந்த அவர்களிடத்தில் விவரிக்க முடியாத தூய்மையை அவர் உணர்ந்தார். அவர்களைச் சுற்றி ஒரு ஒளிவெள்ளத்தை பால் ப்ரண்டன் கண்டார்.

வந்தவர்கள் இருவரும் பால் ப்ரண்டன் அருகில் வந்து சிலைகளைப் போல் நின்றனர். இருவரும் தங்கள் கைக¨ள் மார்பிலே கட்டிக் கொண்டு நின்று பால் ப்ரண்டனை ஊடுருவிப் பார்த்தார்கள். அடுத்ததாக முதலில் மிக அருகில் நின்றவர் உதடுகள் அசைவது தெரிந்தது. ஆனால் வார்த்தைகள் ஒலியாக வெளிவரவில்லை என்று புரிந்தாலும் பேசுவது தெளிவாக பால் ப்ரண்டன் மூளையை எட்டியது.

ஏனிங்கு வந்தாய்? அபூர்வ சக்திகளைப் பெற வந்தாயா? மானிடர்களின் வழியில் கிடைப்பது போதவில்லையா?

அந்த வார்த்தைகள் எண்ணங்களாக தன் மூளையில் பதியவில்லை என்பதையும், அவருடைய குரலாய் தான் மூளையில் பதிகிறது என்பதையும் புரிந்த பால் ப்ரண்டனுக்கு அது எப்படி என்பது தான் தெரியவில்லை. பால் ப்ரண்டன் சொன்னார். போதவில்லை.

திரும்பிப் போய் விடு. இங்கு ரகசியங்களைத் தேடி வந்தவர்கள் பைத்தியம் பிடித்துப் போயிருக்கிறார்கள்.

நான் தேடி வந்ததை அறியாமல் போக முடியாது.

எங்களை நெருங்கியவர்கள் சொந்த பந்தங்களை இழந்து தனியராகப் போயிருக்கிறார்கள். அது உனக்கு சம்மதமா?

எனக்குத் தெரியவில்லை என்பதை உண்மையில் பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். ஆனாலும் திரும்பிப் போக முனையவில்லை.

சரி அப்படியே ஆகட்டும். நீ தேர்ந்தெடுத்த செயலிற்கான பலனை நீயே அனுபவித்தாக வேண்டும் என்ற அந்த முதல் உருவம் அங்கிருந்து உடனடியாக மறைந்தது. அடுத்த உருவம் பால் ப்ரண்டனை நெருங்கியது. இரண்டாவது உருவத்தின் முகம் மிக மிக வயதானதாக இருந்தது. எவ்வளவு வயதிருக்கும் என்பதை பால் ப்ரண்டனால் அனுமானிக்க முடியவில்லை.

இரண்டாவது உருவத்திடம் இருந்தும் வார்த்தைகள் குரலுடன் பால் பரண்டன் மூளையில் பதிந்தன. மகனே. இரகசிய சக்திகளின் தலைவர்கள் தங்கள் கைகளில் உன்னை எடுத்துக் கொண்டு விட்டார்கள். நீ ஞான மண்டபத்திற்கு தற்போது அழைத்து செல்லப்படவிருக்கிறாய். நீ அமர்ந்திருக்கும் இந்தக் கல்லில் காலை நீட்டி மல்லாக்கப் படுத்துக் கொள்...

பால் ப்ரண்டனுக்கு அதன்படி நடப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அப்படியே படுத்துக் கொண்டார். ஆனால் அதன் பின் நடந்ததென்ன என்று பால் ப்ரண்டனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.

ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு என்ற எண்ணம் வந்து போயிற்று.

உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.

அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது.

அந்த உடலிலிருந்து ஏதோ மங்கலான வெளிர் ஒளி கிளம்பி பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஆவி நிலை வந்திருப்பதை அவர் கண்டார். அது என்ன என்பதை பால் ப்ரண்டனால் சொல்ல முடியவில்லை. சுற்றிலும் உள்ள சுவர்களில் கூட மெல்லிய நிலவொளியாய் அது பிரதிபலிக்கக் கண்டார். உடலில்லாமல் உணர்வுகள் மட்டுமாய் ஒரு மிதவை நிலையில் பால் ப்ரண்டன் இருந்தார். பழங்கால எகிப்தியர்கள் மனிதனின் ஆன்மாவை பறவை வடிவத்தில் பல கல்வெட்டுகளில் வரைந்திருப்பதன் பொருள் உயரத்தில் இருக்கும் போது புரிகிறது போல இருந்தது.

உடலை விட்டுப் பிரிந்திருந்த அந்த நேரத்தில் எடையில்லாத மிகவும் லேசானதொரு நிலையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். தன் உடலைப் பார்க்கையில் பெரியதொரு உண்மை அவருக்குப் புலப்பட்டது. இது தான் மரண நிலை. உடலை விட்டுப் பிரியும் போது உண்மையாக நான் சாவதில்லை. உடலை விட்டுப் பிரிந்தும் நான் இருக்க முடியும் என்ற உண்மை நிரூபணம் ஆகி விட்டதால் நான் நம்புகிறேன். அதே நேரத்தில் இந்த உடலையா நான் "நான்" என எண்ணி இருந்தேன்? என்ற திகைப்பும் அவருள் எழுந்தது.

புவியீர்ப்பு விசை பாதி அவரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, பாதி அந்தரத்தில் மிதப்பது போலிருக்க அந்த நிலையில் அவருக்கு ஆத்மஞானம் கிடைத்தது. அர்த்தமில்லாத இந்த சதைக் குவியல் நான் அல்ல உண்மையில் இந்த உடல் என்னை இத்தனை காலம் சிறை வைத்திருந்தது என்ற எண்ணம் அவருக்கு பலப்பட்டது. அப்போது உடன் இருந்த அந்த முதிய குரு அவருடைய எண்ணத்தைப் படித்தது போல சொன்னார். உண்மையே. மிகப் பெரிய பாடத்தை நீ கற்றாய் மகனே. ஆத்மா அழிவில்லாதது.

அந்த நேரத்தில் பால் ப்ரண்டன் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்து போன அரைகுறையாய் நினைவிருந்த ஒரு பெண்ணின் முகத்தையும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த அவர் நண்பர் ஒருவர் முகத்தையும் ஒரு விபத்தில் அகால மரணமடைந்த ஒரு குழந்தையின் புன்னகை தவழும் முகத்தையும் அண்ட வெளியில் பார்த்தார். அந்த மூன்று முகங்களும் அவரைப் பார்த்தன, பேசின. மிகக் குறுகிய காலமே அவரிடம் பேசிய அந்த முகங்கள் உருகி மறைந்தன.

அந்த குரு அவரிடம் சொன்னார். நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு வாழ்வது போல் அவர்களும் வாழ்கிறார்கள் மகனே. இங்கு இறைவன் படைத்த அனைத்து உயிர்களின் சரித்திரமும் பதிவாகியுள்ளது. மனித இனத்தின் மறைந்து போன ஆரம்ப கால வம்சாவழியினரின் செயல்கள் எல்லாம் கூட இங்கு பதிவாகியுள்ளது.

அட்லாண்டிஸ் நகரம் கற்பனையல்ல. அந்த நகரம் அழிந்ததும் அந்நகர மக்கள் இறைவனை மறந்து வெறுப்பு, தீமைகளின் வழி சென்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் தான். சுயநலமும், ஆன்மீகக் குருட்டுத்தனமும் தான் அட்லாண்டிஸைக் கடலுக்குள் மூழ்க வைத்தது. இறைவன் அன்பு மயமானவன். ஆனால் அவன் ஏற்படுத்திய விதிகளின் படியே உலகம் இயங்குகிறது. அந்த விதிகளின்படி செய்த தவறுகளுக்கான தண்டனையிலிருந்து யாரும் தப்பி விட முடியாது. இங்கிருந்து செல்லும் போது இந்த செய்தியை மனிதகுலத்திற்கு எடுத்துக் கொண்டு போ மானிடனே"

அட்லாண்டிஸ் நகரம் குறித்து இந்த இடத்தில் நாம் தெரிந்து கொள்வது நல்லது. சகல சுபிட்சங்களுடனும் அட்லாண்டிஸ் என்ற தீவு நகரம் சுமார் 11000 ஆண்டுகளுக்கும் முன்னால் இருந்ததாக கிரேக்க ஞானி ப்ளேட்டோ கி.மு.360ல் கூறினார்.

மிக சக்தி வாய்ந்த மனிதர்கள் வசித்த அந்தத் தீவில் எந்த இயற்கை வளத்திற்கும் குறைவிருக்கவில்லை. மனிதர்கள் அனைவரும் மிக அறிவாளிகளாகவும், குணசீலர்களாகவும் இருந்தனர். அவர்கள் வணிகம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் வரை நீண்டதென்றும் அவர்கள் அந்தக் கண்டங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்றும் கூறப்பட்டது.

ஆனால் காலம் செல்லச் செல்ல அவர்கள் தங்கள் பண்புகளிலிருந்தும், அறிவார்ந்த செயல்களிலிருந்தும் விலகிச் செல்ல ஆரம்பித்த பின் அவர்களுடைய சிறப்பு குறைய ஆரம்பித்தது. சுயநலம், பேராசை, பொறாமை என்ற வழிகளில் அவர்களின் தவறுகள் மிக அதிகமாகிய போது அந்தத் தீவு கடலில் மூழ்கி அழிந்தது என்று சொல்கிறார்கள்.

பலரும் கற்பனை என்றும் கதை என்றும் நினைத்த அட்லாண்டிஸ் உண்மையில் இருந்தது என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்களும் இருக்கிறார்கள். அதையே அந்தக் குருவும் இங்கே சொல்கிறார்.

இங்கே வரும் எல்லா மனிதர்களுக்கும் இந்த இரகசியங்கள் விளக்கப்படுவதில்லை. ஆனால் உன் ஆர்வமும், விளக்கினால் புரிந்து கொள்ளப்படும் பக்குவமும் உனக்கு இருப்பதால் மட்டுமே உனக்கு இந்த இரகசியங்கள் விளக்கப்படுகின்றன.

பால் ப்ரண்டன் அடுத்த கணம் புவியீர்ப்பு விசை முழுவதும் தனக்கு அற்றுப் போவதை உணர்ந்தார். முழுவதுமாய் காற்றில் மிதப்பது போல இருந்தது.

உன்னை ஒரு ரகசிய ஞான கருவூலத்திற்கு அழைத்துப் போகப் போகிறேன்....

அப்படிச் சொன்னவுடன் பால் ப்ரண்டன் ஆர்வம் அதிகப்பட்டது. உடனடியாக அந்த இடத்திற்குச் செல்ல விரும்பினார் அவர். அந்தக் குருவின் ஆவி அதைப் படித்தது போல இருந்தது. எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருக்கிறது மகனே அவசரப்படாதே. வா என்னுடன் என்றார் அந்த குரு.

அடுத்த கணம் பால் ப்ரண்டன் ஏதோ கோமாவில் இருப்பவர் போல தன் பெரும்பாலான உணர்வுகள் ஸ்தம்பித்தது போல் உணர்ந்தார். அடுத்ததாக அவர் நினைவு திரும்பிய போது அவர் வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

பால் ப்ரண்டன் சென்றடைந்த பாதை மங்கலாய் ஒளிபடர்ந்ததாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்த போது விளக்கையோ, சன்னல்களையோ அவர் காணவில்லை. பின் எங்கிருந்து ஒளி வருகிறது என்பதை அவரால் ஊகிக்க முடியவில்லை.

தன்னைப் பின் தொடர்ந்து வரும்படி அந்த மதகுருவின் ஆவி அவரிடம் சொன்னது. அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் பின்னால் மட்டும் திரும்பிப் பார்க்காதே. தலையைத் திருப்பாதே என்றும் அவருக்குக் கட்டளையிட்டது. பால் ப்ரண்டனுக்கு அது பிரமிடுக்குள் உள்ள ரகசியப்பாதை என்று தோன்றியது. கீழ்நோக்கிச் சென்ற அந்தப் பாதையின் முடிவில் தூரத்தில் ஏதோ கோயில் போன்ற அமைப்புடைய வாயில் இருந்தது. அவர் பிரமிடுக்குள் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்திருந்தாலும் இந்தப் பாதையையும் தூரத்தில் தெரிந்த அந்தக் கோயில் வாசல் போன்ற ஒரு அமைப்பையும் அவர் பார்த்ததாக அவருக்கு நினைவில்லை. இந்த ரகசியப்பாதை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றறியும் ஆவல் அவருக்கு அதிகமாயிற்று. அந்த மதகுரு ஆவி சொன்னதைப் பொருட்படுத்தாமல் பின்னால் அவர் திரும்பிப் பார்த்தார். அந்த நீண்ட பாதையின் இறுதியில் நுழைவாயில் எதுவும் இருக்கவில்லை. ஏதோ ஒரு நுழைவிடம் போல் தெரிந்த இடம் சதுரமான கற்களால் மூடப்பட்டிருந்தது.

ஆனால் திரும்பிப் பார்த்ததன் தண்டனையாகவோ என்னவோ பால் ப்ரண்டனை ஏதோ ஒரு பெரும் சக்தி பின்னுக்கு இழுத்தது. அடுத்த கணம் அவர் உடல் கிடந்திருந்த அந்த ஆரம்ப இடத்திற்கே வந்து சேர்ந்தார். பால் ப்ரண்டன் திரும்பிப் பார்க்காதிருந்திருந்தால் அவர் ரகசிய ஞானக் கருவூலத்திற்கு சென்று காணும் பாக்கியம் கிடைத்திருக்கலாம். ஆனால் திரும்பிப் பார்த்த ஒரு தவறு அவரை அந்த வாய்ப்பை இழக்க வைத்தது.

தனது உடலைப் பார்த்தபடி இருந்த அவரை பெருத்த ஏமாற்றம் ஆட்கொண்டது. அந்த மதகுருவின் மெல்லிய குரல் அவருக்குத் தெளிவாகக் கேட்டது. மகனே ரகசியப்பாதையின் வாசலை நீ காண்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. உன் மனதில் உள்ள ரகசிய ஞானக் கருவூலத்திற்கு உன்னை அழைத்துச் செல்லக் கூடிய ரகசியப்பாதையை நீ காண்பதே முக்கியம். இந்தப் பிரமிடின் ரகசியம் உன் ஆத்மாவின் ரகசியமே. உன் ஆத்மாவில் எல்லா ரகசியங்களும் புதைந்துள்ளன. பிரமிடு சொல்வதெல்லாம் மனிதனை தனக்குள்ளே கவனத்தைச் செலுத்தச் சொல்வது தான். அவன் இதுவரை அறிந்திராத அவனுக்குள் உள்ள மையப்புள்ளியில் அவன் ஆத்ம ரகசியத்தை அறிவதன் மூலம் அனைத்து ஞானத்தையும் பெறவே மனைதனைப் பிரமிடு வலியுறுத்துகிறது. போய் வருகிறேன்.

ஏதோ ஒரு சக்தி பால் ப்ரண்டனை அவருடைய உடலுக்குள் பலமாக ஈர்க்க அவர் மறுபடியும் தன் உடலுக்குள் நுழைந்தார். மரத்துப் போயிருந்த உடலை சிறிது சிறிதாக உணர ஆரம்பித்தார். இருள் சூழ்ந்திருந்த பிரமிடின் அந்த அறைக்குள் தனியாக அவர் இருப்பதைக் கண்டார். மதகுருவின் ஆவியைக் காண முடியவில்லை. இருட்டிலும் தெளிவாகப் பார்க்க முடிந்த நிலையும் போயிற்று.

அதிர்ச்சியில் இருந்து மீண்ட அவர் டார்ச்சைத் தேடி எடுத்து போட்டுப் பார்த்த போது எல்லாம் அவர் முன்பு விட்டுப் போயிருந்த நிலையிலேயே இருந்தன. கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார். மணி சரியாக பன்னிரண்டு. பொழுது புலரும் வரை தன் அனுபவங்களைக் குறித்து பால் ப்ரண்டன் சிந்தித்தபடி இருந்தார். பொழுது புலர்ந்து போலீஸ்காரர் வந்து அவரை அழைத்துக் கொண்டு போய் வெளியே விட்டார்.

மதகுரு கடைசியில் பால் ப்ரண்டனிடம் சொன்ன அறிவுரை நம் நாட்டில் உபநிஷத்துக்கள் சொல்லும் அறிவுரையே என்பது நம் ஆன்மீக நூல்களைப் படித்தவர்களுக்கு விளங்கும்...

இந்திய - திராவிட போலி வரலாறுகளை நம்பாதீர்கள்...


புலிக்கொடி சொல்லும் செய்தி...


1977 ஆம் ஆண்டு.. அப்போது தலைவர் பிரபாகரன் பல மாதங்களாக மதுரையில் தான் தங்கியிருந்தார்..

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக கொடி வடிவமைக்கும் பணி அப்போது நடந்தது..

பண்டார வன்னியனின் கொடியான ஒரு கேடயத்தின் குறுக்கான இரண்டு
வாட்கள் உள்ளபடி புலிகள் கொடி இருக்க வேண்டும் என்பது ஈழப் போராளிகளின் யோசனை..

துப்பாக்கியும் 33 தோட்டாக்களும் இருக்க வேண்டும் என்பது தலைவரின் விருப்பம்.
அதென்ன 33?

1977+33=2010

அதாவது 2010 ஆம் ஆண்டு ஈழப் போராட்டம் உச்சநிலை அடைந்து ஈழம் அமையும் என்பது தலைவரின் கணிப்பு..

மூவேந்தர் சின்னத்தை பொறிக்குமாறு தமிழக ஆதரவாளர்கள் யோசனை கூறினார்கள்.

பாண்டியரே ஆதி தமிழ் மன்னர்கள்.

பாண்டியர்கள் தாய்மண்ணை மட்டும் ஆண்டவர்கள்.

சிங்களவரோடு நட்பாக இருந்தவர்கள்.

எனவே மீன் சின்னத்தைச் சேர்க்க வேண்டும் என சில மதுரைக்காரர்கள் கூறினர்.

சிங்களவர்கள் சேரர்களையோ பாண்டியர்களையோ வெறுப்பதில்லை.

சோழர்கள் என்றால் தான் அலறுவார்கள்.

எனவே தான் 1976ல் தலைவர் 'தமிழ்ப் புதிய புலிகள்' என்றே இயக்கம் தொடங்கியிருந்தார்.

இதற்குக் காரணம் சோழர்களைப் பற்றி இராஜரத்தினம் என்ற தமிழகத்து தமிழ் தேசியவாதி 1972வாக்கில் தலைவரிடம் எடுத்துக் கூறியது தான்.

புலிக்கொடி வரையப்பட்ட காலம் 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்று பெயர் மாற்றி ஓராண்டு ஆகியிருந்த காலம்.

சோழர்கள் கடல் கடந்து சென்று பல நாடுகளை பிடித்தவர்கள்.

எனவே அவர்களின் சின்னம் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் போராட்டத்திற்கு சரியாக வராது.

அதோடு ஈழத்து காடுகளில் புலியே கிடையாது.தமிழகக் காடுகளில் தான் உண்டு.

அதனால் நாம் புலியை சின்னமாக வைத்தால் தமிழகத்தையும் தனிநாடாக ஆக்க புலிகள் முயற்சி செய்யலாம் என்று இந்தியா சந்தேகிக்கலாம்.

இந்தியாவை நாம் பகைத்துக் கொள்வது நல்லதல்ல.

எனவே பண்டார வன்னியன் கொடியையே வைப்போம்.

புலி மட்டும் வேண்டாம் என்றார்கள் ஈழப் போராளிகள்.

கொடியை வரைந்து தர ஒரு ஓவியர் தேவைப்பட்டார்.

அப்போது சிவகாசியில் ஓவியராக இருந்தவர் நடராஜன்.

(பின்னாட்களில் மதுரை அரசாங்க மருத்துவமனையில் பார்மசிஸ்ட் ஆக இருந்தார்)

சொந்த ஊர் விருதுநகர் அருகே மல்லாங்கிணறு.

தமிழகத் தமிழர் மாறன் பேபியையும் பிரபாகரனையும் சிவகாசி அழைத்துச் சென்று நடராஜனை சந்தித்து ஈழ விடுதலைப் படைக்கு ஒரு கொடி வரைந்து தர வேண்டும் என்றனர்.

தமிழுணர்வாளரான நடராசன் உற்சாகமாக ஒத்துக்கொண்டு மற்ற வேலைகளை கிடப்பில் போட்டு விட்டு உடனடியாக பணியை ஆரம்பித்தார்.

தலைவர் சொல்லச் சொல்ல நடராசன் புலிக்கொடியை வரைந்தார்.

கொடி வரைந்து முடித்ததும் அதை புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கொஞ்சம் படச்சுருளை (நெகட்டிவ்) நடராசன் வைத்துக் கொண்டார்.

புலிக்கொடியை தம் இருப்பிடத்திற்குக் கொண்டு சென்றார் தலைவர்.

ஈழப்போராளிகள் அதைப் பார்த்தனர்.

அதில் பண்டார வன்னியன்  கொடியின் வடிவமும் இருந்தது.

துப்பாக்கி தோட்டாக்களும் இருந்தன.

புலி நடுவில் எதிர்பார்த்ததை விட பெரியதாக இருந்தது.

ஈழப்போராளிகள் தலைவரை பார்த்தனர்.

தலைவர் புன்னகைத்தார்.

அந்த புன்னகைக்குள் அவர் வெளியே சொல்லாத ஒரு ஆழ்மன விருப்பம் ஒன்று புதைந்து இருந்தது...

இன்றும் உலகின் பெரும் மருத்துவ கம்பனிகளுக்கு ஆப்பரிக்கர்களும் இந்தியர்களும் பரிசோதனை எலிகள் தான்...


ஆயிரக்கனக்கான ஏழைகளை கொன்ற மருந்து சந்தையில் புகுந்து நடுத்தர வர்கத்தை மெல்ல கொல்லும்...

ஒரு நாளவாது மனிதர்கள் சந்தோஷமா இருக்கிறார்களா ?


அப்படி இருந்தால் அந்தநாளில் மட்டுமே வாழ்வை வாழ்ந்து உள்ளார்கள்.

மீதி நாட்கள் அனைத்தும் தன் வாழ்வை ஏமாற்றி கொள்கிறார்கள் பாவம் மனிதர்கள்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


தோல்விகளால் துவண்டு போய் விட்டீர்களா? சோய்செரோவைத் தெரிந்து கொள்ளுங்கள்...


வரலாறு படைக்க வறுமை ஒரு தடையில்லை என நிரூபித்தவர்!!“ தோல்வியே வெற்றியின் முதல் படிக்கட்டு” என்பது நாம் அறிந்ததே. அதற்கேற்றார் போல் தன் வாழ்வில் கண்ட பல தோல்விகளை, எதற்கும் அஞ்சாமல் எதிர்த்து நின்று வெற்றியாய் மாற்றியவரை நீங்கள் அறிவீர்களா? இதோ அவர் சொன்ன  வெற்றியின் இலக்கணம், ” வெற்றி என்பது தொண்ணுற்றி ஒன்பது சதவிகிதம் தோல்வியில் இருந்து வருவதே” (Success represents the 1% of your work which results from the 99% of failure) இவர் தான் தோல்விகளில்  மலர் கொய்து வெற்றி மாலை தொடுத்த ஹோண்டா நிறுவனர், சோய்செரோ ஹோண்டா (Soichiro Honda).

சோய்செரோ ஹோண்டா நவம்பர் 17, 1906 ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள ஷிசுயோகா (Shizuoka) என்ற இடத்தில் பிறந்தார். சிறுவயதிலே அறிவியல் தொழிநுட்பத்தில் ஆர்வம் கொண்டு இருந்த அவர் வாகன தொழில்நுட்பத்தை தனது வாழ்க்கையாகத் தேர்தெடுத்தார்.

அதே நேரத்தில் அவர் தன் தந்தையாலும், சுற்றத்தாராலும், நண்பர்களாலும், துரதிர்ஷ்டசாலி என்று நம்பப்பட்டார். ஏனென்றால்  அவர் எடுத்த எந்த காரியத்திலும் சிறுவயதிலிருந்தே  அவர் வெற்றி பெற்றதே இல்லை. யார்  தன்னை துரதிர்ஷ்டசாலி என்று கூறினாலும், அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், தன் விடாமுயற்சியைக் கொண்டு இலக்கை நோக்கி முன்னேறினார் சோய்செரோ ஹோண்டா.

முதல் வெற்றி:  தனது இளம்வயதில் டொயோட்டா (Toyota) நிறுவனத்திற்காக தனது அனைத்துப் பணத்தையும் முதலீடாகக் கொண்டு சிறிய உலோக தொழிற்கூடத்தை உருவாக்கி, சிறிய வகை பிஸ்டனைத் (piston) தயாரித்து எடுத்துச் சென்றார். ஆனால் டொயோட்டா நிறுவனமோ தங்களின்  எதிர்பார்க்கும் அளவிற்கு பிஸ்டன் இல்லை என்று அவருடைய பிஸ்டனை நிராகரித்தது.

பின் சிறந்த தொழில்நுட்பத்தில் பிஸ்டன் உருவாக்கி மீண்டும் டொயோட்டாவிடம் எடுத்து சென்றார். இந்த முறை டொயோட்டா நிறுவனம் அவரின் பிஸ்டனை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் செய்துகொண்டது. டொயோட்டா நிறுவனத்திற்காக பிஸ்டன் நிறைய உருவாக்க பெரிய தொழிற்சாலையை உருவாக்கினார் சோய்செரோ ஹோண்டா.
ஆனால் அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. அமெரிக்காவின் இருபெரும் அணுகுண்டு வீச்சில் ஜப்பான் பெரும் சேதம் அடைந்தது. அதில் சோய்செரோ ஹோண்டாவின் தொழிற்சாலையும் மிகவும் சேதம் அடைந்தது. ஆனால் சேதத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் தன் தொழிலாளர்களைக் கொண்டு மீண்டும் செயல்பட வைத்தார். தொழிற்சாலை நன்றாக செயல்படத் தொடங்கிய ஒரு சில மாதங்களில் அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் தொழிற்சாலை முழுமையாக தரைமட்டமானது.

உலகப் போருக்குப் பின்பு ஜப்பான் மெல்ல இயல்புநிலைக்கு திருப்பினாலும், மக்கள் பெட்ரோல் தட்டுப்பாட்டால் காரைத் தவிர்த்து சைக்கிள் மற்றும் நடைப்பயணத்தை மேற்கொண்டனர். இவற்றையெல்லாம் பார்த்த சோய்செரோ நாம் ஏதாவது புதிய தொழில்நுட்பத்தை கொண்டு ஏதேனும் உருவாக்க வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினர்.

அப்போது அருகில் இருக்கும் புல் வெட்டும் இயந்திரத்தையும், அவருடைய சைக்கிள் வாகனத்தையும் பார்த்தார். அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது, உடனே புல் வெட்டும் இயந்திரத்தில் இருந்த மோட்டாரை கழற்றி சைக்கிள் உடன் இணைத்து இயங்க செய்தார். அதுதான் இந்த உலகின் முதல் இருசக்கர மோட்டார் வாகனம் ஆகும்.

விடா முயற்சி: அவர் ஓட்டிச் சென்ற இருசக்கர மோட்டார் வாகனத்தை பலரும் பார்த்து இதைபோல் தங்களுக்கும் செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். கேட்ட அனைவருக்கும் இருசக்கர மோட்டார் வாகனத்தை செய்துகொடுத்தார். பின் அங்கு மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே அவர் பெரிய இருசக்கர மோட்டார் வாகனத் தொழிற்சாலை உருவாக்கலாம் என்று முடிவு எடுத்தார்.

ஆனால் அரசாங்கமோ, வங்கியோ மற்றும் நண்பர்களோ யாரும் தொழிற்சாலை தொடங்க அவருக்கு உதவ முன்வரவில்லை. ஆனால் அதனால் அவர் சோர்வடையவில்லை.

ஜப்பானில்  அவருக்கு தெரித்த அனைத்து சைக்கிள் கடைகளுக்கும் கடிதம் எழுதினார். தனக்கு முதலீடு செய்யும் சைக்கிள் நிறுவனங்கள் தனது இருசக்கர மோட்டார் வாகன விநியோகஸ்தர்களாக இருப்பார்கள் என்று உறுதி  கொடுத்தார். அதன் பயனாக பல சைக்கிள் நிறுவனங்கள் அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்பயனாக அவர்  பெரிய தொழிற்சாலையை உருவாக்கினார். இந்த தொழிற்சாலை (ஹோண்டா நிறுவனம்) ஆகஸ்ட்  28, 1937 அன்று திறக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் முன்பே வரலாறு எழுதப்பட்டது. கைவிடாத முயற்சிக்கு காலம் அளித்த வெகுமதிதான் ஹோண்டா நிறுவனம்...

பாஜக சதி திட்டம் ஆரம்பம் உஷார் மக்களே...


உலகம்...


நீ இருக்கும் வரை இந்த உலகம் அழியாது...

இந்த உலகம் இருக்கும் வரை நீ அழிய மாட்டாய்..

ஏனெனில் உன்னில் இருந்து தான் உலகமே தோன்றியது...

இமயத்தின் அடிவாரத்தில் அறியப்படாத நாகரிகம்...


ஒரு ரஷ்ய-இந்திய பயணமானது; இமாலயத்தின் அடிவாரத்தில், அறியப்படாத ஒரு நாகரிகத்திற்கு சொந்தமான பண்டைய சடங்கு வளாகங்களையும், தனித்துவமான கல் உருவங்களையும் கண்டுபிடித்துள்ளது, இந்த குழுவில் ரஷ்ய அகாடமி ஆஃப் சயின்ஸின், விக்கியெஸ்லவ் மோலடின் என்ற தொல்பொருளியல் நிறுவனத்தின் துணை இயக்குநர் உள்ளார்.

இந்த கண்டுபிடிப்புகள் இடைக்காலத்திற்கு முந்தையவை, என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த சடங்கு வளாகங்கள் மலைகளின் தொலைதூர மற்றும் உயர்ந்த இடங்களில் அமைந்திருக்கின்றன. அந்த இடங்களில் சுமார் 200 குதிரை வீரர்களின் சிற்பங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் இரண்டு மூன்று வீரர்கள் குதிரை மீது சவாரி செய்வது போலவும்,மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்டதாகவும் சிற்பங்கள் உள்ளது "

ஒவ்வொரு சிற்பமும் ஒரே பாணியில் தயாரிக்கப்படுகின்றன, மேலும் அவை ஒவ்வொன்றும் தனித்துவமானது என்றாலும், அவை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த கலை கண்டுபிடிப்புகள் இதுவரை கவனிக்கப்படாதவை என்கின்றனர். இந்த சிற்பங்களுக்கு அருகில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல நீர் ஆதாரங்கள் மற்றும் பிற பாறை கட்டமைப்புகளை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு வளர்ந்த ஒரு நீண்ட அழிந்த நாகரிகத்தை கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

இந்த சடங்கு பாரம்பரியத்திற்க்கு பின்னால் உள்ள நாகரிகம் என்னவென்று தெளிவாக தெரியவில்லை, என்று மோலடின் கூறுகிறார், ஏனெனில் இது போன்ற கலைகள் மற்றும் கட்டமைப்புகள் இந்தியாவின் எந்தவித கலைகளின் வரலாற்றில் காணப்படவில்லை. எனவே இது #ஆரிய_திராவிட கலாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டது. "இது திடீரென இமயமலையில் தோன்றி, தொலைதூர இடங்களில் குடியேறி பின்னால் இந்த இடத்தை விட்டு வெளியேறியது அல்லது மறைந்தது மாயன் போல" என்று ஆராய்ச்சியாளர்களும் கூறுகிறனர்.

மோலோடின் அவர்கள், இந்த கண்டுபிடிப்புகள் ஆச்சரியம் மற்றும் அற்புதமானவை. "இந்தியாவைப் பற்றி ஏற்கெனவே எல்லாவற்றையும் அறிந்திருக்கிறோம், ஆனால் அறிவியல் விஞ்ஞானம் இந்த நாகரீகம் பற்றி  கேள்விப்பட்ட, வெளியிடப்பட்ட சான்றுகள் சாட்சிகள் எதுவும் இல்லை. (ஒருவேளை இந்த குதிரை வீரர்கள், தங்கள் சக்திக்கு மீறியவர்களிடம் போரிட்டதை நினைவுப்படுத்துவதாகவே உள்ளது என்ற ஒரு கருத்து நிலவுகிறது.!) இந்த கண்டுபிடிப்பு, நமது கிரகத்தைப் பற்றிய முழுமையாக அனைத்தையும் நாம் அறிந்திருக்கவில்லை என்பதையே காட்டுகிறது "என்று RIA ( Radio ஐmmune அssay) நோவோஸ்டி வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

மேலும் மற்றொரு ரஷ்ய அறிஞர், நடாலியா பொலோஸ்மாக்கின் தலைமையிலான பயணம் மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து வருகிறது. கடைசியாக மேற்கொள்ளப்பட்ட பயணத்தின் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் எல்லைகளுக்கு இடையிலான கடினமான சூழ்நிலையில் அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் தடைபட்டன. ரஷ்ய அறிவியல் நிதியம் மற்றும் ஜெர்மனியின் ஹென்ல்கெல் ஃபவுண்டேஷன் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட மானியங்கள் மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இந்தியத்தில் அவர்களுக்கு சாதகமா எந்தவித விசயங்களும் இல்லை என்பதால் ஆய்வில் ஆர்வம் அற்றே உள்ளனர்.. இவர்களை விட அவர்களின் ஆய்வுகளில்தான் திரிப்புகள், சித்தரிப்புகள், மறைப்புகள் இல்லாத உண்மைதன்மை இருக்கும் என்று நம்புவோமாக..  காத்திருப்போம்...

வாழ்க்கை வாழ்வதற்கே...


ஒருநாள் வாழ்க்கை என்றாலும் அதை  மகிழ்ந்து வாழுங்கள்...


ஏறுதழுவல் (ஜல்லிக்கட்டு) : எம் இன உரிமை...


காளைகள் இல்லாத தமிழ்ச் சமூகத்தைக் கற்பனையிலும் காண இயலாது. காளைகள், சிந்துவெளி நாகரிகத் தமிழரின் பெருமிதச் சின்னங்களாக இருந்தன. ஆரியர் குதிரைகளை ஓட்டி வந்தபோது, தமிழர் காளைகளை முன்னிறுத்தியே அவர்களை எதிர்கொண்டனர். பொதுவாகவே, மாடுகள் தொல் பழங்குடியினரின் செல்வங்களாக இருந்து வருபவைதான். மாடு என்ற சொல்லுக்குத் தமிழில் ‘செல்வம்’ என்றும் பொருள் உண்டு.

ஆரியத்தின் கால்நடை அறிவுக்கும் தமிழிய கால்நடை மரபுக்கும் நேர் எதிர் முரண்களே அதிகம். ஆரியர்களைப் பொதுவாக, கால்நடைச் சமூகத்தினர் என்று ஆய்வுலகம் மதிப்பிடுகிறது. ஆயினும் அவர்களை முழுமையான கால்நடைச் சமூகத்தினர் எனக் கூறுவது பொருந்தாது. ஆரியர் குதிரைகளைத் தம் செல்வமாக, பாசத்துக் குரியவையாகக் கருதினர் என்ற பதிவுகளைக் காட்டிலும் அவற்றைப் பலி கொடுக்கும் பொருளாக மாற்றினர் என்பதையே ரிக் வேதப் பாடல்கள்,காட்டுகின்றன.

ஆரியரின் பொருளியல் சிந்தனை, கால்நடைகளை வளர்த்து பொருள் ஈட்டுவதோ, வணிகம் செய்வதோ, வேளாண் தொழில் புரிவதோ அல்ல. மேற்கண்ட தொழில் செய்யும் சமூகங்களைச் சுரண்டியும் சூறையாடியும் பிழைத்திருப்பது என்பதுதான். ரிக் வேதம் ஒன்றே இக் கூற்றைத் தெளிவாக விளக்கும்.

குதிரைகளை ஆரியர் பலி கொடுப்பதைச் சிந்து வெளித் தமிழர் கடுமையாக எதிர்த்தனர். ஆரியரது யாகங்களைத் தமிழ்ப் படை சிதைத்தது. இது ஆரியருக்குக் கடும் ஆத்திரத்தை ஊட்டியது.

வேள்வி செய்யாதவர் களாகவும், தானம் கொடுக்கா தவர்களாகவும் தன்னை வணங் காதவர்களாகவும், தேவனற்றவர் களாகவும் உள்ள தாசர்களைக் கொல்லுகிறவன் எவனோ அவன் இந்திரன்!’ என்கிறது ரிக் வேதம். (ரிக் 2-12-10/ அரப்பாவில் தமிழர் நாகரிகம்/ குருவிக்கரம்பை வேலு / சிவசக்தி 2001/பக்19)

கால்நடைகளைத் தம் சமூக உறுப்பினராகக் கருதும் மரபு தமிழருடையது. ஆயம், என்ற சொல் கூடி வாழுதலைக் குறிக்கும். கால்நடைகளின் கூட்டத்தோடு கூடி வாழ்பவர் ஆயர் எனப்படுவர். இச் சொற் களில், மனிதர் கால்நடைகள் இரண்டும் இணைந்த பொருள் உள்ளதைக் கவனிக்கலாம். அதாவது, ஆடு மாடுகளும் மனிதர்களும் ‘ஒன்றாக’ வாழ்தலை இச்சொல் குறிக்கிறது. கால்நடைகளை மனித சமூகத்தின் அங்கங்களாக தமிழர்கள் அணுகியதன் வெளிப்பாட்டினையே ஆயர் எனும் சொல் காட்டி நிற்கிறது

மானுடவியல் படி மலர்ச்சியில், ஒவ்வொரு சமூக மும் தம் உற்பத்தி முறையை மேம்படுத்தும் விதமான வீர விளையாட்டுகளை வளர்த் தெடுத்து வருகின்றன. மலை நாட்டவருக்கு வேட்டையே முதன்மை உற்பத்தி. ஆகவே, குறிஞ்சி நிலத்தின் வீர விளை யாட்டுகள் கொடும் விலங்கு களை வெல்வதாக இருந்தன.

நெய்தல் மாந்தர், சுறா வேட்டை யை வீர விளையாட்டாகக் கொண்டிருந்தனர். முல்லை நிலத்தவர் பல்லாயிரம் மாடு களை மேய்க்க வேண்டி யிருந்ததால், ஏறு தழுவல் எனும் காளை அடக்குதலை வீர விளையாட்டாகக் கொண் டனர்.

வீர விளையாட்டுகள் என்பவை, வெறும் வெட்டிப் பொழுது போக்குகள் அல்ல. அவை, உற்பத்தி நடவடிக் கையின் கூறுகள். சங்க கால முல்லை நிலப் பெண்கள், ஏறு தழுவும் இளைஞனைத் தம் தலைவனாகத் தேர்ந்தெடுப்பதை மரபாகக் கொண்டிருந்தனர். உற்பத்தி நடவடிக்கையான மாடு மேய்த்தலை யாரால் சிறப்பாகச் செய்ய முடியும்? அடங்காத காளையை அடக்கும் இளைஞர் களால்தான் முடியும். அவ்வா றான சிறந்த உற்பத்தித் திறன் கொண்டவனை மணம் கொள்வது, இல் வாழ்க்கை சிறக்க அடிப்படை என்பதே இதன் கருத்து.

இன்றும் கால்நடைச் சமூகத்தவரால் ஏறு தழுவல் கடைப்பிடிக்கப்படுகிறது. உற்பத்தி நடவடிக்கை என்பதன் உண்மையான பொருள் புரிந்து கொள்ளப்படாமல், வெறும் விளையாட்டு என்ற அளவில் ஏறு தழுவல் பார்க்கப்படுகிறது.

இன்றும் பெரும் மந்தைகளைப் பராமரிக்க, வீரமும் உடல் வலுவும் தேவைதான். திமிர் கொண்டு பெருத்த காளைகளை அடக்க இயலாத எவராலும் அக்காளைகள் அடங்கிய மந்தைகளைப் பராமரிக்க இயலாது.

இது ஒருபுறம் இருக்கட்டும்.

இந்தியாவில் குதிரைப் பந்தயங்கள் அரசு அங்கீகாரத் துடன் நடத்தப்படுகின்றன. இதற்காக குதிரைகள் கோடிக் கணக்கான பணச் செலவில் பராமரிக்கப் படுகின்றன, இறக்குமதி செய்யப்படுகின்றன. இப் பந்தயங்களை நடத்துவோரும் இவற்றில் பங்கு பெறுவோரும், பணச் சூதாடிகள் மட்டுமே! இப் பந்தயங்களுக்காகக் குதிரைகள் மோசமான முறையில் துன்புறுத்தப்படுகின்றன. குதிரை ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி உறுப்புகள் இழக்கின்றனர், மரணம் அடைகின்றனர்.

கிரிக்கெட் ஆட்டக் காரர் கிர்மானி என்பவர் கண்களில் பந்து வேகமாக மோதியதால் பார்வை இழந்தார். கான்டி ராக்டர் என்ற ஆட்டக் காரரின் உச்சந்தலையில் பந்து மோதி, தலையின் மென்மை யான ஓடு உடைந்து போனது. உலோகத் தால் செய்யப்பட்ட செயற்கை ஓடு அவருக்குப் பொருத்தப் பட்டது. கவாஸ்கர் தலையில் பந்து மோதி, மிக மோசமான நிலையை அடைந்து, தீவிர சிகிச்சைக்குப் பின்னர் தப்பினார். ஆணுறுப்பின் மீது பந்து மோதி, விரைகள் வெளியே வந்து மரணம் நடந்த நிகழ்வுகள் கிரிக்கெட் வரலாற்றின் தவிர்க்க இயலாத பகுதிகள்.

இதற்காக, கிரிக்கெட் விளையாட்டைத் தடை செய்ய யாரும் கோரவில்லை. கை விரல்கள் முதல் மயிர் வரை அனைத்து உறுப்புகளுக்கும் பாதுகாப்புக் கவசம் அணிந்து கொண்டு ’வீரர்கள்’ அந்த விளையாட்டை ஆடுகின்றனர்.

கிரிக்கெட் எந்தச் சமூகத்தின் உற்பத்தி யைப் பாதுகாக்கிறது? குதிரைச் சூதாட்டம் எந்தச் சமூகத்தின் உற்பத்தி நடவடிக்கை? முதலாளிய நிறுவனங்களின் விளம்பரங்களுக்குப் பயன்படுகின்றன.

பெருமுதலாளிய ஊழலும் ஆரியச் சுரண்டல் கொள்கையும் இணைந்து இந்திய விளையாட்டுத் துறைகளைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளன. இவற்றுக்கு ஏதுவான விளையாட்டுகளுக்கு சிவப்புக் கம்பளம், எதிரான விளையாட் டுகளுக்குச் சிவப்பு அட்டை. இதுவே இந்தியத் தேசியம்!

ஏறு தழுவலுக்கு நிபந்தனைகள் விதிப்பதன் பின்னணியில் ஒரு வரலாறு இருக்கிறது.

தமிழரின் மரபுசார் உற்பத்தி நடவடிக்கை களை ஆரியம் வெறுக்கிறது. அவற்றை அழிக்கத் துடிக்கிறது. ஆகவே, தமிழரின் கால்நடைச் செல்வங்கள் ஆரியப் பெரு முதலாளியத்துக்கு ஆகாதவை. பால் உற்பத்தி பெரு நிறுவனங்கள் சுரண்ட வேண்டுமானால், மாடு வளர்ப்போர் அழிய வேண்டும். இதைச் சாதிப்பதற்கு ஆரியப் பெருமுதலாளியம் பல ஆயுதங்களைக் கையில் எடுத்துள்ளது. அவற்றில் ஒன்றுதான், ஏறு தழுவலுக்கு எதிரான நெருக்கடிகள்.

மாடுகள் வளர்ப்பதே இழிவு என்ற கருத்து ஏற்கெனவே தமிழகத்தில் ‘முற்போக்கு’ முகமூடி யுடன் தூவப்பட்டு விட்டது. மாடு பிடிப்பது வெட்டி வேலை என்ற
’பகுத்தறிவு’ப் பரப்புரையும் வெற்றிகரமாக நடந்து வருகிறது.

ஏறு தழுவலின்போது ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்கப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றைச் செய்யக் கூடாது என்று நாம் கூறவில்லை. இதைப் பற்றிய விரிவான ஆய்வுகளுக்கும் திட்டமிடல் களுக்கும் நாம் அணியமே. தமிழ் இளைஞரின் உயிர்களையும் உறுப்புகளையும் பாதுகாக்கும் பொறுப்பு ஆரிய திராவிட ’முற்போக்குவாதிகளை’ விட நமக்குக் கூடுதலாக உண்டு.

ஏறு தழுவலைப் பாதுகாப்பதற்காக வழக்கு நடத்திக் கொண்டிருக்கும் போராளிகளுக்கு இத்துறையில் நல்ல அறிவும் தேர்ச்சியும் உண்டு. அரசுக்கு உண்மையிலேயே ஏறு தழுவலைப் பாதுகாக்கும் அக்கறை இருந்தால், இவர் களோடு இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளும். ஆனால், திராவிட அரசுகளும் ஆரியக் கொள்கை யாளர்களும் கூட்டுச் சேர்ந்துதானே தமிழரை ஆள்கின்றனர். ஆகவே அவர்கள் இவ்வகை நடவடிக்கைகளை முன்னெடுக்க மாட்டார்கள். போராட்டங்களின் வழி, ஏறு தழுவலைப் பாதுகாக்க வேண்டும்.

பொதுவாக கிராமங்களில் வகை வகையான மாடுகள் வளர்ப்பது, மாட்டு வேடிக்கையின் போது பெருமிதம் அடையத்தான். காங்கேயம், கண்ணாபுரம், பர்கூர், மணப்பாறை வகைக் காளைகள் கம்பீரமானவை, மிகுந்த ஆற்றல் உடையவை. இவை போன்ற நல் வகைக் காளைகளை வளர்த்து ஏறு தழுவலில் ஈடுபடுத்து வதில்தான் வளர்ப்பவரின் பெருமிதம் அடங்கியுள்ளது.

ஏறு தழுவலுக்கே தடை / நெருக்கடி எனும் நிலையில் இந்த வகைக் காளைகள் முற்றிலும் அழியும். இதே நிலை தொடர்ந்தால், சில ஆண்டுகளில், தமிழர் நாட்டு மாடுகள் மறைந்து போய்விடும் ஆபத்து உள்ளது.

இதைத்தான் ஆரியம் விரும்புகிறது. குதிரகளை வளர்த்து சூதாடினால் ஆரியம் மகிழும். மாடுகளை யாகத்துக்குப் பலியாக்கினால் ஆரியம் உற்சாகம் அடையும். ஆனால், வீரமும் நேர்மையான சமூக உற்பத்தியும் ஆரியத்தால் சகிக்க இயலாதவை.

தமிழரோ, வீரத்தில் விளைந்து வீரத்தில் வாழ்ந்து வந்த மரபினர். ஆரிய –திராவிடக் கூட்டுச் சதியினால் வீர உணர்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏறு தழுவல் எம் இன உரிமை என முழ்ங்குவோம். தமிழர் மரபுப் பொருளாதாரத்தை, பண்பாட்டைக் காப்போம்.

காளைகள் தமிழரின் அடையாளங்கள், குதிரைகள் ஆரியச் சின்னங்கள். ஏறு தழுவலுக்கு எதிராக இப்போது நடப்பவை எல்லாம் 5 ஆயிரம் ஆண்டு இனப் போராட்டத்தின் தொடர்ச்சியே...