28/01/2018
நான் பன்னீர்செல்வம் மகன் பேசுறேன் - கலெக்டருக்கு வந்த பரபரப்பு போன் கால்...
கிருஷ்ணகிரி மாவட்டக் கலெக்டர் கதிரவனுக்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு போனில் பேசிய நபர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பேசுவதாகவும் கிருஷ்ணகிரி அருகே நடுப்பட்டி ஒந்தியம்புதூரைச் சேர்ந்த தமிழ்த்தென்றல் என் நண்பர் என்றும் அவரின் சகோதரிக்கு சத்துணவுப் பணியாளர் பணி வழங்கும்படி கேட்டுள்ளார். சந்தேகம் அடைந்த கலெக்டர் தன் உதவியார் மூலம் விசாரணை செய்ய உத்தரவிடவே, கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமரேசன் சத்துணவுப் பணியாளர் பணி ஆணையை நேரில் வந்து வாங்கிச் செல்லுமாறு அலுவலகத்துக்கு வரவழைத்துள்ளார்.
ஆறுமுகம்...
26-ம் தேதி குடியரசு தினத்தன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள நடுப்பட்டி ஒந்தியம்புதூரைச் சேர்ந்த ஆறுமுகமும் அதே ஊரைச் சேர்ந்த தமிழ்த்தென்றலும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, கலெக்டரின் உதவியாளர் குமரேசனைச் சந்தித்துப் பேசியபடி, `சத்துணவுப் பணியாளர் பணியிடத்துக்குப் பணி நியமன ஆணை (அப்பாயின்மென்ட் ஆர்டர்) எங்கே?' என அதிகாரம் செய்துள்ளார் ஆறுமுகம். போலீஸ் வருவதற்குள் ஒரு கட்டத்தில் ஆறுமுகமும் தமிழ்த்தென்றலும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமரேசனைக் கடுமையாக மிரட்டியுள்ளனர்.
தமிழ்த்தென்றல்...
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸிஸ் எஸ்.ஐ விசுவநாதன், ஆறுமுகம் மற்றும் தமிழ்த்தென்றலை அள்ளிக்கொண்டு சென்று விசாரித்ததில் 2 பேரும் தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் பெயரைப் பயன்படுத்தி பொய்யான தகவலைக் கூறி மோசடி செய்ததை ஒப்புக் கொண்டதை அடுத்து இருவர் மீதும் மோசடி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர் கிருஷ்ணகிரி போலீஸார்...
நோய்களிலிருந்து காப்பாற்றும் க்ரீன் டீ....
க்ரீன் டீ இப்போது அனைத்து தரப்பினரும் பருகும் டீ. இந்த கிரீன் டீ மகத்துவம் பற்றிக் கூறுகிறார் சித்தவைத்திய நிபுணர் அரவிந்த் ரங்கன்.
பொதுவாகவே டீ வகைகளில் க்ரீன் டீ, ctc டீ என்று இருவகை உண்டு. ctc டீ தான் நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானது. ஆனால் சீன மக்களிடையே தொன்று தொட்டு பாரம்பரியமாக தொடர்ந்து வருவது க்ரீன் டீ. அதன் மருத்துவ குணத்தால், இப்போது நம்மிடையேயும் பிரசித்தி பெற்றுவருகிறது என அவர் கூறுகிறார்.
இதோ மேலும் க்ரீன் டீ பற்றி மேலும் விளக்கிக் கூறுகிறார்.
C.T.C Tea...
(Cut turn and crush tea ஐ தான் CTC Tea என்கிறார்கள். இது பதப்படுத்தப் பட்ட டீ. இதுதான் நாம் அன்றாடம் குடித்து பழகி வரும் டீ.
க்ரீன் டீ என்றால்?
பயோகெமிக்கல் முறையில் நிழலில் உலர்த்தி பதப் படுத்தப் படும் தேயிலைதான் க்ரீன் டீ.
க்ரீன் டீக்கு எதனால் இந்த மகத்துவம்?
கேட்சின் கொலிபெனல்ஸ் (Catechin Colyphenols ) தான் க்ரீன் டீயில் பிரதான விஷயம். அதாவது பவர்புல் ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் எனப்படும் மிகச் சிறந்த நோயெதிர்ப்பு சக்தி இந்த டீயில் குவிந்து கிடக்கிறது என்பதுதான் இதில் ஹைலைட்.
கேன்சருக்கு மிக நல்லது...
பொதுவாகவே கேன்சர் ட்ரீட்மென்ட் என்றால் ரேடியேசன் தெரபிதான் மெயின். இந்த ரேடியேசன் கதிர்வீச்சு கேன்சர் செல்களை மட்டுமின்றி கூடவே நல்ல செல்களையும் கொல்கிறது. ஆனால் இந்த க்ரீன் கேன்சர் செல்களை மட்டுமே கொல்கிறது. காரணம் இதன் கேட்சின் கொலிபெனல்ஸ் தான். என்றாலும் கேன்சருக்கான உடனடி ட்ரீட்மென்ட் ஆக மருத்துவர்கள் க்ரீன் டீயைப் பரிந்துரைப்பதில்லை. காரணம் கேன்சரின் ஆரம்ப அறிகுறியிலிருந்து நீண்ட நெடும் காலம் தொடரவேண்டிய வழிமுறை இது என்பதால்தான்.
சீன மக்களின் ஸ்லிம் ரகசியம்...
காலம் காலமாக சீன மக்கள் விரும்பி குடிக்கும் டீ இந்த க்ரீன் டீ. சீனர்கள் பன்றி இறைச்சி சாப்பிடுபவர்கள். கொசுறு கொசுறாக சாப்பாட்டை அடிக்கடி சாப்பிடுபவர்கள். எனவே இவர்கள் உணவு முறையில் கெட்ட கொழுப்பு சேரும் அபாயம் கண்டிப்பாக இருக்கிறது. ஆனால் சீனர்கள் தினமும் அடிக்கடி க்ரீன் டீ பருகும் பழக்கம் இருப்பதால் இந்த க்ரீன் டீ கெட்ட கொழுப்பை உடலில் சேரவிடாமல் தடுக்கிறது.
ரத்த நாளங்களின் அடைப்பை நீக்கும்...
பொதுவாகவே நாம் சாப்பிடும் சமோசா, பீட்சா, வடை, சிக்கன் 65 போன்ற எண்ணெய் பலகாரங்களாலும், அதிக ஸ்வீட் சாப்பிடுவதனாலும் உண்டாகும் கெட்ட கொழுப்பினால், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். இது மாரடைப்பு (Heart Attack) வரை கூட கொண்டு போய் விட்டுவிடும். இப்படிப்பட்ட ரத்த நாளங்களின் அடைப்பைப் போக்கி நார்மல் நிலைக்கு கொண்டுவரும் பணியை செய்கிறது இந்த க்ரீன் டீ.
தொடர்ந்து க்ரீன் டீ பருகி வந்தால் மூட்டு பிரச்சனைகள், ரத்தகொதிப்பு, இதய நோய்கள் போன்ற நோய்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து நாளடைவில் காணாமல் போகின்றன.
சளி, ஜுரம் வராது...
அன்றாடம் காற்றில் நிறைந்துள்ள சின்ன சின்ன தொற்றுக் கிருமிகளால் நமக்கு சளி ஜுரம் உண்டாகிறது. இந்த நோய்களைத் தோற்றுவிக்கும் கிருமிகளைக் கூடக் கொல்கிறது க்ரீன் டீ தரும் எதிர்ப்பு சக்தி.
உடல் நடுக்கம்...
சிலருக்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து போவதால் உடல்நடுக்கம் இருக்கும். நல்ல செல்களை உருவாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதன் மூலம் உடல் நடுக்கத்தைப் போக்குகிறது க்ரீன் டீ.
எடை குறைக்க விரும்புகிறீர்களா?
க்ரீன் டீயைப் பருகுவதால் Fat Oxddations Themnogenesis எனும் குறிப்பிட்ட சிஸ்டம் மூலம் உடலில் சேர்ந்துள்ள கலோரிகள் உடனடியாக எரிக்கப் படுகிறது. எனவேதான் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி க்ரீன் டீ சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சீன மக்களின் உணவுப் பழக்கப் படி அவர்கள் உடல் எடை அதிகமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஸ்லிமாக இருப்பதற்கு அவர்கள் அடிக்கடிப் பருகும் க்ரீன் டீ தான் காரணம்.
சர்க்கரை நோயாளியா நீங்கள்?
நல்ல டயட், உடற்பயிற்சி, மன அழுத்தமின்மை போன்றவற்றோடு, அன்றாடம் க்ரீன் டீ பருகி வந்தால் சர்க்கரை நல்ல கட்டுப்பாட்டில் இருக்கும். காரணம் எந்த உணவும் செரிமானத்துக்குப் பின் குளுகோஸ் ஆக மாறி ரத்தத்தில் சேராத படி க்ரீன் டீ தடுக்கிறது.
க்ரீன் டீக்கு நிகரில்லை...
என்னதான் சாப்பாட்டில் மசாலா, அஜினமோட்டோ, போன்ற ஜீரண சக்தி பொருட்களை சேர்த்திருந்தாலும் உணவுக்கு பின் க்ரீன் டீ பருகுவதற்கு நிகர் வேறெதுவும் இல்லை. ஜீரண சக்தியை அந்த அளவுக்கு தூண்டிவிடும், மேலும் உடனடியாக கெட்ட கொழுப்பையும் நீக்கும் என்று முடிக்கிறார் சித்த வைத்திய நிபுணர் அரவிந்த் ரங்கன்.
EXTRA...
1 டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். (2 - 3 நிமிடங்கள்) அடுப்பை நிறுத்தவும். 1/2 ஸ்பூன் டீத்தூள் போடவும். 3 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
அவ்வளவுதான். க்ரீன் டீ ரெடி.. குடிக்கலாம்.
குறிப்பு...
Green Tea யில் நிறம், சுவை கிடயாது. Lite green colour ல தான் இருக்கும்
அதிக நேரம் அடுப்பில் கொதிக்க வைத்தால் தான் கசக்கும். அது உடம்புக்கு கெடுதல்.
அடுப்பை off செய்து விட்டு தான் இலைகளை போட வேண்டும்.
அதிக நேரம் தண்ணீரில் போட்டு வைத்தால் தான் Dark colour ல இருக்கும். அது உடம்புக்கு கெடுதல்.
இதையே 3 முறை பயன்படுத்தலாம்.
முதல் முறை போடுவதை பெரியவங்களுக்கு (சுகர், பிரசர் இருக்குறவங்க) குடுக்கலாம். 2nd, 3rd முறை போடுவதை சுகர், பிரசர் இல்லாதவங்க குடிக்கலாம்...
அல்சர், ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தி செய்யும் பீட்ரூட்...
பீட்ரூட்டின் மருத்துவ குணங்கள்...
1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்..
2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்..
3. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத்தடவினால் தீப்புண், கொப்புளம் ஆகாமல் விரைவில் ஆறும்..
4. பீட்ரூட் கஷாயம் மூலநோயைக் குணப்படுத்தும், பீட்ரூட் ரத்த சோகையைக் குணப்படுத்தும்..
5. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமான சக்தியைக் கூட்டும்..
6. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலமிச்சைச் சாற்றில் தோய்த்து உண்டு வர, ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்...
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அறிவிப்பு...
தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபகாலமாக ATM கார்டு மோசடி குற்றங்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு வங்கி/ இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் போல் அழைப்பு விடுத்து ATM கார்டு காலாவதியாகவுள்ளதாகவும், அதனை புதுப்பிக்க ATM கார்டின் 16 இலக்க எண்ணை கூறுங்கள் என்றும், ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்றும், இன்சூரன்ஸ் போனஸ் தொகை பெறுவதற்கு என்றும் கூறி ஆதார் எண், வங்கி கணக்கு எண், ATM கார்டு எண் மற்றும் இரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை லாவகமாக பெற்று மோசடி செய்து வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து வங்கி மேலாளர்களுக்கு தங்கள் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பாக கிராமப்புற மற்றும் பாமர மக்களுக்கு இது போன்ற மோசடி குறித்து விழிப்புணர்வுடன் இருக்க தமிழில் குறுஞ்செய்தி அனுப்பியும் மற்றும் பொதுமக்களிடையே காவல்துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவல்துறை சார்பில் அந்தந்த உட்கோட்ட அதிகாரிகள் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர்கள் மூலமும் வங்கி நிர்வாகத்துடன் இணைந்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் இதுபோன்ற மோசடி செல்போன் தொலைபேசி அழைப்புகளுக்கு அல்லது இனந்தெரியாத நபர்களிடம் தங்களை பற்றிய குறிப்புகள், தங்களது வங்கி கணக்கு மற்றும் கிரெடிட்/ டெபிட் கார்டு விபரங்களை தெரிவிக்காமல், இரகசியமாக வைத்திருக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெ.மகேந்திரன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்...
தவிர்க்க கூடாத ஒன்பது உணவுகள்...
நம் உடல் பாதுகாப்பாக இயங்க ஒன்பது சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்த ஒன்பது சூப்பர் உணவுகள்.
வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.
வெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.
காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் ொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.
ஆரஞ்சு : வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.
பருப்பு வகைகள் : பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
கோதுமை ரொட்டி : நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தேநீர் : தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.
பாலாடைக்கட்டி : சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
முட்டைக்கோஸ் : குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.
மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்து விடும்...
இரயில் நிலையங்களிலோ, வங்கிகளிலோ, அரசு அலுவலகங்களிலோ தமிழில் சேவை வழங்க மறுத்தால் அதை எளிதாக கடந்து செல்பவரா நீங்கள்...
தமிழில் படித்தவனுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கு என போராடாமல் ‘தமிழ் படித்தால் சோறு கிடைக்குமா’ என உங்கள் குழந்தைகளை இந்தி படிக்க வைக்கும் நபரா நீங்கள்..
அப்படியானால் நம் தாய்த் தமிழ் மொழியை காக்க தமிழை ஆட்சி அரியனை ஏற்ற தன்னுயிரையே ஈகம் செய்த மொழிப் போர் ஈகியர்களை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை...
நாளை என்னுடைய மொழி சாகும் என்றால்...அதற்கு முன் நான் இன்றே செத்து விடுகின்றேன்.. என்று தீக்கு இறையான நம் முன்னோர்கள் இவர்கள்...
நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும்...
எல்லோருக்கும் நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும் கலந்தே வருகிறது...
இதில் கெட்ட எண்ணங்களை எடுத்து செயல்படுத்துபவர்களுக்கே பிரச்சனை ஏற்படுகிறது...
உதாரணமாக உங்கள் உயிர் நண்பர் நீங்கள் செய்த தவறுக்காக உங்களை அடித்து விடுகிறார்.
தவறு உங்கள் மீது இருந்தாலும் உங்களுக்கு கோபம் என்ற உணர்வு மூலம் அவரை திருப்பி கடுமையாக தாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.
அந்த தீயெண்ணத்தை எடுத்து செயல்படுத்தி விட்டீர்கள் எனில், ஓர் நல்ல நட்பை நீங்கள் இழக்க வேண்டி வரும்.
அதே சமயத்தில் வந்த தீய எண்ணத்தை கண்டுகாமல் விட்டுவிட்டு அமைதியாக இருந்து விட்டால் அந்த பிரச்சனை பாதிப்பு இல்லாமல் முடிந்து விடும் அல்லவா.
அதனால் முடிந்தவரை தீய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்காதீர்.
பெரும்பாலும் நல்லெண்ணங்களை எடுத்து செயல்படுத்தி சாமர்த்தியத்துடன் வாழ்பவனே. நிம்மதியை அடைகிறான். மற்றவர்கள் துன்பத்தில் திலைக்கிறார்கள்.
எண்ணங்கள் கடலில் உண்டாகும் அலைகளை போன்றது. அதை தடுக்கவோ கட்டுபடுத்தவோ முடியாது.
ஆனால் எண்ணத்தை எடுக்கும் உரிமை நம்முடையது தான். எனவே பார்த்து எடுங்கள். மகிழ்சியாக வாழங்கள்...
வடமாநில தொழிலாளர்களின் அட்டகாசம்...
கோவை அன்னுரில் வீட்டில் டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்களின் வெறிச்செயல்...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே வீட்டில் டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்கள் பெண்ணை கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்துவிட்டு, அந்த பெண்ணின் கணவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கனுவக்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மயில்சாமி. இவரது மனைவி ராஜாமணி. இவர்களுக்கு, இரண்டு மகள் உள்ளனர். தங்கள் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களின் வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்று வந்துள்ளது. கோவையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவரின் மூலம் டைல்ஸ் பதிக்கும் பணியில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்களை ஈடுபடுத்தியிருந்தார். இவர்கள் மூவரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதால், இரவு அவர்களின் வீட்டிலேயே தங்கி, பணி மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து, நேற்று, டைல்ஸ் ஒட்டும் பணியை மேற்கொண்ட மூவரும், இரவு 12 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜாமணியை, கதவு தட்டி எழுப்பிக் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். உருட்டுக்கட்டையால் அடித்து கொலை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை கதவை திறந்த மயில்சாமியின் மனைவி ராஜாமணியிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இதனை நம்பிய ராஜமாணி கதவை திறந்து வைத்துவிட்டு தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, திடீரென வீட்டிற்குள் புகுந்த அந்த கும்பல், உருட்டுக் கட்டை, கம்பி உள்ளிட்டவற்றால் ராஜாமணியைக் கடுமையாக தாக்கிக் கொலை செய்துள்ளனர்.
நகை பணம் கொள்ளை நகை பணம் கொள்ளை ராஜாமணியின் அலறல் சத்தம் கேட்டு வந்த கணவர் மயில்சாமியையும் சுற்றி வளைத்து பிடித்த, வடமாநில தொழிலாளர்கள் பின்னர் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். முதலில் கொலை செய்த ராஜாமணியின் உடலை ஒரு மூட்டையில் கட்டி வைத்துவிட்டு, வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர். மயில்சாமியின் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். மயில்சாமியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தோர் வருவதைக் கண்ட கொள்ளையர்கள், வீட்டின் பின்வாசல் வழியாக தப்பியுள்ளனர். கொள்ளையர்கள் தப்பி ஓட்டம் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம் மின்சாரம் பாய்ந்த வலியில், மயில்சாமி அலறவே அக்கம், பக்கத்தினர் மயில்சாமியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். ஆனால், அதற்குள், வட மாநிலக் கொள்ளையர்கள் மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மயில்சாமியை மீட்ட கிராம மக்கள், அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் மயில்சாமி. தொழிலாளர்கள் போர்வையில் கொள்ளையர் தொழிலாளர்கள் போர்வையில் கொள்ளையர் தகவலறிந்த அன்னூர் காவல்துறையினர், மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களுடன் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தக் கொலை சம்பவம் குறித்து, துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயில்சாமி வீட்டில் டைல்ஸ் வேலைக்கு வந்தவர்கள் உண்மையில் வடமாநில தொழிலாளர்கள் தானா, அல்லது தொழிலாளர்கள் போர்வையில் வந்த வடமாநில கொள்ளையர்களா என விசாரணை நடத்தி வருகின்றனர். வயதான தம்பதியர் பாதிப்பு வயதான தம்பதியர் பாதிப்பு உறவினர்களின் துணையில்லாமல் தனியாக வசிக்கும் வயதான தம்பதியினர் முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களை வேலைக்கு வைக்கும் முன், அவர்களின் பின்னணி குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். வயதானவர்களுக்கு காவல்துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...
எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?
எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டு விடும்.
எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும் தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.
எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்துவிடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக்கொண்டே வருவதைப் போன்றது.
நேர்மறை எண்ணங்களுக்கும் அதே போன்ற சக்தி உண்டு.
எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும் போது அதைப்போக்க எனக்கு உதவிய 10 விஷயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்...
1. தியானம் : தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறை நம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
2. புன்னகை : கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.
3. நண்பர்கள் : முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.
4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல் : சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.
5. குறைகூறாதீர்கள் : உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.
6. உதவுங்கள் : எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும் போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.
7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது : தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும் போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
8. பாடுங்கள் : உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.
9. நன்றி கூறுங்கள் : நன்றி கூறுவதை விட சிறந்த நேர்மறை உணர்வு இருக்க முடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.
10. நல்லதை படியுங்கள் : தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதே போன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்துவரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.
எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது..
உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும்.
உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும்.
உங்கள் செயல்களை கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும்.
உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும்.
உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்...
தமிழர் கெட்டது யாரால்?
தமிழ் நாட்டில் மட்டும் தான் தமிழ் பேசுகிறவன் அனைவரும் தமிழர்கள் என்று தமிழர்களே நினைத்து கொள்வார்கள்...
தான் யார் என்பதும் தன் இனம் எது என்பதும் தெரியாதபடி சிந்தனை மழுங்கி இருக்கிறான்..
அதனால்தான் தமிழினத் தலைவர் என்று சொல்லிக் கொள்கிறவன் எல்லாம் மிக நுட்பமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி நம்மை ஏமாற்றுகின்றனர்...
தமிழர்களிலே இன்னமும் தான் திராவிடன் தான் என்று நினைத்து வாழ்கின்றனர், அதனால் தான் வந்தேறி கூட்டம் எல்லாம் தமிழனை ஏமாற்றி வாழ்கின்றனர்.
இனமான உணர்வு இல்லாத தமிழர்களிடம் எப்படி புரிய வைப்பது முத்துகுமரன் உள்ளிட்டோர் நெருப்பில் மாண்டனர், அவர்களின் மூலம் படிப்பினை பெற்றிருக்க வேண்டும் . அதை உணராமல் ஆளுகிறவர்களின் எண்ணத்திற்கேற்ப தமிழர்கள் குழம்பி விட்டனர்..
தமிழர்களின் நாட்டை தாசி வீடாக கருதிவிட்ட வந்தேறிகளின் அடிமையாக படித்த தமிழர்களே இருகின்றனர்...
சும்மா இருந்தால் சொறிநாய் கூட நம் மீது சிறுநீர் பெய்து விட்டு தான் செல்லும்..
தமிழா சிந்தித்து விழுத்தெழு...
Subscribe to:
Posts (Atom)