29/10/2021

உலகம் துரோகத்தால் உருவாவை...

 




இந்த உலகில் உன்னை அழிக்க
இன்னொருவருக்கு நீயே
கொடுக்கும் ஆயுதம் அன்பு..

இந்த உலகில் உன்னை நீயே
ஏமாற்றிக் கொள்வது இன்னொருவர்
மீது வைக்கும் நம்பிக்கை..

ஒரு பொய்யின் ஆழமே..
சிலரின் மேல் கொண்ட
நம்பிக்கையை அழிக்க
காரணம் ஆகின்றது..

பாம்பு தன் தோலை எத்தனை
தடவை உரித்தாலும் அது
எப்போதுமே பாம்பு தான்..

சில மனிதர்களை உங்கள்
வாழ்க்கையில் அனுமதிக்கும்
முன் இதை நினைவில் கொள்ளுங்கள்..

வாழ்க்கையில் அடிபட்ட
பின்பு தான் சிலரின் உண்மையான
முகத்தை புரிந்து கொள்ள முடிகிறது..

மன்னித்து விடுங்கள் உங்களை
ஏமாற்றியவர்களை ஆனால்
மறந்தும் கூட நம்பி விடாதீர்கள்
மறுபடியும் அவர்களை..
 
ஏமாற்றியவர்களுக்கு
நன்றி சொல்..

அவர்கள் ஏமாற்றத்தை 
சொல்லி தரவில்லை..

இனி ஏமாறாமல் இருக்க
அனுபவத்தை கற்று தந்து
இருக்கிறார்கள்..

எத்தனை முறை நீ
ஏமாற்றப்பட்டாலும் ஒரு போதும்
அடுத்தவரை ஏமாற்ற
கற்றுக்கொள்ளாதே அவரவர்
பலன் அவரவர் அனுபவிப்பர்..

நேர்மைக்கு என்றுமே மரணமில்லை.
கவலையை விடு...

தூரோகிகள் யார் தெரியுமா..?

துரோகத்தை செய்து விட்டு..
அந்த குற்ற உணர்வு சற்றும்
இல்லாமல் திரிபவர்கள் தான்..
மிகச் சிறந்த துரோகிகள்..

அவர்கள் மரணத்திற்குள் 
அதற்கான பலனை
அனுபவித்தே தீர வேண்டும்...

துரோகத்தால் பலர் வீழ்ந்ததாய்
வரலாறுண்டு.. ஆனால்..
துரோகித்தவர் ஒருவர் கூட
நல்லா வாழ்ந்ததாய் எந்த
சரித்திரமும் இல்லை..

வாழ்விற்கும் மரணத்திற்குமான
இடைவெளியை நிரப்ப
சில அன்பானவர்களும்..
பல அன்பற்றவர்களும்..
சில துரோகிகளும்..
பல எதிரிகளும்..
தேவைப்படுகிறார்கள்..

இந்த உலகில் பல பேர் தோல்விக்கு
காரணம்.. அவர்களின்
நம்பிக்கைக்கு உரியவர்களால்
முதுகில் குத்தப்பட்டதே காரணம்..

நான் தோல்வியை
வெறுப்பவன் இல்லை..
துரோகத்தை வெறுப்பவன்..

எவ்வளவு நம்பிக்கை வைத்தாலும்
துரோகம் முளைக்காத இடங்கள்
இரண்டு தான்.. 

ஒன்று தாயின் மடி..
இரண்டு இறைவன் அடி..


ஆனால்.. இந்த கலியுகத்தில்
தாயும் துரோகத்தையே செய்கிறாள்..

யாரையும் நம்பி வாழாதே...

தன் தேவைக்காக மட்டுமே
உறவு வைத்துக் கொள்ளும்
உலகம் இது..

தேவைகள் முடிந்ததும்
கண்டிப்பாக தூக்கி
எறியப்படுவாய்...

பெரியாரும் திருட்டு திராவிடமும்...

 


சுயமரியாதை.. தன்மானம்.. பகுத்தறிவு என்பதன் பெயரால் தமிழகத்தில் இதுகால் வரை சாதித்தது என்ன..?

சாதி ஒழிக்கப்பட்டதா..?

சாதிச் சான்றிதழ்கள் வழங்குதலை அரசு தடுத்ததா..?

சட்டத்தின் முன் சகலரும் சமன் என்பதை அரசு நடைமுறைப்படுத்தியதா..?

மக்களின் பொருளாதார ஏற்றத் தாழ்வுநிலையைப் போக்கி எல்லோருக்கும் எல்லா அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்ததா..?

எல்லோருக்கும் கல்வி அறிவூட்டல் செய்ததா..?

அறிவியல் கல்வியை வழங்கியதா..?

மொழி சீர்திருந்தகளை செய்து தமிழை அடுத்த நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க தயார் செய்ததா..?

இல்ல ஆங்கிலத்தைப் படித்தால் போதும் என்றிருக்கிறதா..?

ஜப்பானியர்களும் சீனர்களும் ரஷ்சியர்கள் சொந்த மொழியில் தானே அறிவியலை கற்கின்றனர். ஏன் தமிழை அந்த நிலைக்கு முன்னகர்த்த முயற்சிக்கவில்லை..?

ஆங்கிலம் தான் அறிவியல் என்ற மாயை ஏன் வளர்க்கப்பட வேண்டும்.

ஆங்கிலத்தை தொடர்பாடலுக்கு படிப்பது என்பது வேறு.. ஆங்கில நூல்கள் சொல்லும் அறிவியல் என்பதைப் பெறுவது வேறு..

தாய் மொழியை இகழ்வதும்.. அதன் இருப்பைக் கேலி செய்வதும் மிக மோசமான இனவிரோதச் செயற்பாடு...

ராகுல்காந்தி வெத்து சோறு.. உண்மை தான்...

 


மீ Vs நண்பன்...


அண்ணே நீங்க ஏன் வெறும் காமெடியா போஸ்ட் பண்றீங்க.. இந்த கவிதைலாம் வராதோ.... 🤔

எல்லா ஈர வெங்காயமும் எனக்கு தெரியும்டா..

நாளை பின்ன நாலு புள்ளைங்க கவிதையில மயங்கி..

கட்டுனா உங்களதான் கட்டுவேன்னு கண்ண கசக்கிட்டு வந்து நின்னுட்டா.

அப்புறம் அவளுங்க புருசனுங்கல்லாம் அருவாள தூக்கிட்டு என் வீட்டு வாசல்ல நின்றுவானுங்க..

இப்போ தெரிஞ்சுகிட்டியா அண்ணன் ஏன் கவிதைய அவாய்ட் பண்றேனு...

🤣🤣🤣

பிராடு பாஜக மோடியின் நிலக்கரி ஊழல்கள்...

 


கோல் இந்தியா நிறுவனம் டாட்டா வுக்கும், அம்பானிக்கும் டன் ரூ.2500 விலையில் தருவதற்காக டன் ரூ.25000க்கு ஆஸ்திரேலியா, இந்தோனேசியா நாடுகளிலிருந்து வாங்குகிறது இல்லையா?  

அந்த ஆஸ்திரேலியா, இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளிலும் நிலக்கரியை வெட்டி எடுக்கிற கான்ட்ராக்ட் பணியை அம்பானியும், டாட்டாவும் செய்கிறார்கள். இப்போது கூடுதலாக அதானியும் அதில் சேர்ந்துள்ளார்.

அதாகப்பட்டது டாட்டா, அம்பானி ஆகிய இருவரும் வெட்டி எடுக்கிற நிலக்கரியையே, இருவரிடமிருந்துமே  ஒரு டன் ரூபாய் 25 ஆயிரத்திற்கு கோல் இந்தியா நிறுவனம் வாங்கி, அதே டாட்டா, அம்பானி முதலாளிகளுக்கு  நிலக்கரியை ஒரு டன் ரூபாய் 2500-க்குக் கொடுக்கிறார்கள். 

ஏழு வருசத்துல இந்தியப் பெரு முதலாளிகளோட சொத்து 26% உயர காரணமாக மோடி அல்லும் பகலும் உழைக்கிறார்...

குழந்தைகளை குறி வைக்கும்.. கொரோனா மருத்துவ மாஃபியா..

 


விரைவில் கொரோனா நாடகம் பகுதி 3 தொடக்கம்...

 


தெலுங்கன் பெரியாரும் திருட்டு திராவிடமும்...

 


20 நூற்றாண்டு நாத்திகர்களில் ஈ.வெ.ராமசாமி மட்டுமே ஒரு மொழியை மட்டுமே காட்டுமிராண்டி மொழி, பகுத்தறிவுக்கு ஓவ்வாத மொழி தமிழ் என்று குற்றம் சாட்டிய ஒரே மாபெரும் நாத்திகர்..

ஆனால் அவர் தாய் மொழி தெலுங்கா அல்லது கன்னடமா என்று அவருக்கே தெரியாது..

வேறு எந்த உலக நாத்திகரும் மொழி தான் நாத்திகத்திற்கு தடையாக இருக்கிறது என்று குற்றம் சாட்டியது இல்லை..

இவர் குற்றம் சாட்டக் காரணம் தமிழர்களை தனது இனத்தவரே காலகாலத்திற்கும் அடக்கி ஆள வேண்டும் என்ற குறுகிய தன் இனநல வெறியே காரணம்...

என் காதலும்... காதலியும்...

 



நீ விலகிச் சென்றாலும் 
உன் நினைவுகள் என்றும் 
என்னைவிட்டு விலகாதடி...

காலம் கடந்து சென்றாலும் 
நம்  காதலை என்றும் 
மறவாமல் இருப்பேனடி...

கொட்டும் மழை நின்ற பிறகு 
குடை பிடிக்கும் 
காளானென்று நினைத்தாயோ...

வீசும் புயல் காற்றுக்கும் 
விழாமல் வேரூன்றி நிற்கும் 
ஆலமரமடி என் காதல்...

சிங்கிள்ஸாக சந்தோஷமாக வாழ்வோம்...

 


பார்ப்பனர் - பிராமணர் வேறுபாடு...

 


பெரும்பாலான சோழியப் பார்ப்பனர் (முன்குடுமி) தமிழரே...

இவர்களே சங்ககாலப் பார்ப்பனர் (அதாவது ஆதித்தமிழர்)..

சோழியப் பார்ப்பனர் முக்கிய 5 பிரிவுகள் கீழ்வருமாறு..

1) தீட்சிதர் [சிதம்பரம் கோயிலைச் சுற்றி].

2) நம்பியார் [ஆவுடையார் கோவிலைச் சுற்றி].

3) பட்டர் [மதுரை மீனாட்சி கோவிலைச் சுற்றி].

4) ஆனைக்கா அந்தணர் (அய்யா நம்பி, திருண பட்டன், பட்டர்).

5) வீழி அந்தணர் [திருவீழிமிழலை கோயிலைச் சுற்றி].

இவர்கள் போக...

தென்கலை வைணவர் (நம்பி).

நயினார் [திருவாரூர்].

திருசுதந்திரர் [திருச்செந்தூர்].

சிவாச்சாரியார் [தமிழகம், ஈழம்].

குருக்கள் (ஐயர்) [மதுரை].

சோழியர் (ஐயர், ஐயங்கார்).

முக்கானி (ஐயர்) [திருச்செந்தூர்].

ஆகியோரும் தமிழினப் பார்ப்பனரே..

பிற வடமா பிராமணர் (பின்குடுமி) பெரும்பாலும் தமிழரல்லாதார்...

பிரகச்சரணம் (ஐயர்).

வாத்திமா (ஐயர்).

அஷ்டசகஸ்ரம் (ஐயர்).

கேசியர்.

வடகலை வைணவர்.

மத்தியானப் பறையர்.

பட்டஸ்ய.

வடமா (ஐயர்).

வடமா தீட்சிதர்.

நம்பூதிரி.

இவர்களில் வடகலை ஐயங்கார், பிரகச்சரணம், வாத்திமா, வடமா, அஸ்ட சகஸ்ரம் ஆகியவற்றில் சில தமிழ்ப் பிரிவுகள் உள்ளன..

அதாவது பிராமணரிலும் பார்ப்பனரிலும் பல உட்பிரிவுகள் இருந்தாலும் அவை ஒன்றோடொன்று கலப்பதில்லை.

(அதாவது உட்பிரிவுகளே உண்மையான சாதி.. உட்பிரிவில் கோத்திரம் என்பது திருமணம் செய்ய மட்டும். சிறுபான்மையான சாதி என்பதால் நெருக்கமான உறவுகள் திருமணம் செய்வதைத் தடுக்க இந்த முறை)

ஆனால் பல உட்பிரிவுகள் அவர்களின் கொள்கைகளைப் பொறுத்து ஒரு முக்கியப் பிரிவுக்குள் வருகின்றன.

மேற்கண்டவை அத்தகைய முக்கியப் பிரிவுகளே..

அதேபோல ஒரே பட்டத்தை வெவ்வேறு பிரிவினர் பயன்படுத்துகின்றனர்.

சுருக்கமாகக் கூறினால்.. நம்பியார், பட்டர், குருக்கள் போன்ற பட்டங்கள் தமிழரைக் குறிக்கும்.

ஐயர், ஐயங்கார், தீட்சிதர், ஆச்சாரி, சாஸ்திரி போன்ற பட்டங்கள் பார்ப்பனரும் பிராமணரும் பயன்படுத்துகின்றனர். இவர்களில் யார் வடமா அல்லது வடகலை பிரிவோ அவர்கள் தமிழரல்லாதார்.

ஐயங்காரிலும் சாஸ்திரியிலும் பெரும்பாலும் பிராமணர்.

தீட்சிதரிலும் ஐயரிலும் பெரும்பாலும் பார்ப்பனர்.

தமிழக பூசாரி சாதிகளில் 65% பிராமணர். 35% மட்டுமே பார்ப்பனர்.

(இது ஆரம்பகட்ட ஆய்வு தான்.

பார்ப்பனர்களிலும் பிராமணர்களிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. ஒரே உட்பிரிவினர் ஒரு இடத்தில் பார்ப்பனராகவும் வேறு இடத்தில் பிராமணராகவும் உள்ளனர்.

ஆக உட்பிரிவு தெரிந்தாலும் வாழ்விடத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதுபற்றி மேலும் தெரிந்தோர் கருத்துகளில் இடலாம்)...

இதனால் தான் பெரியார் தெலுங்கர் கன்னடர் மலையாளியான பிராமணர்களை எதிர்காமல்... பார்ப்பனர்களான தமிழர்களை எதிர்த்தார்...

பார்ப்பான் என்று சொல்.. மறந்தும் பிராமணன் என்று சொல்லாதே என்று தமிழின பகைவன் பெரியார் எனும் தெலுங்கர் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் சொன்னார்...

தீபாவளி கலாட்டா...

 


மனைவி : இந்தாங்க காபி. கூடவே க்ரோஸின்.

கணவன் : எதுக்கு க்ரோஸின். எனக்கு ஜுரம் இல்லயே?

மனைவி : அப்போ இந்தாங்க டைஜீன்.

கணவன் : எனக்கு வயிறு நல்லாத் தானே இருக்கு.

மனைவி : அப்படின்னா அனாஸின் சாப்பிடுங்க.

கணவன் : தலைவலி கூட இல்லயே?

மனைவி : ப்ரூபன் மாத்திரை போட்டுக் கோங்க.

கணவன் : ஏம்மா?, கை கால் வலி எதுவும் இல்லயே... நல்லா தானே இருக்கேன்?

அப்போ கிளம்புங்க... தீபாவளி ஷாப்பிங் போகணும்...

கணவன்: 😳😳😳?

காதல் எனும் காமம்...

 




காதல் நெடுஞ்சாலையில்
ஆசையோடு பயணித்த
இரு இதழ்கள்..

தனது 
கட்டுப்பாடுகளை இழந்து
நேருக்கு நேர்
சரமாரியாக மோதி
விபத்துக்குள்ளாயின...

சம்பவ இடத்தில்
இரு இதழ்கள்
ஒன்றோடு ஒன்று
பின்னிப் பிணைந்து கிடப்பதை
பார்த்த மனம்...

காயம்பட்ட 
இரு இதழ்களை காப்பாற்றி
காமம் எனும்
அவரச ஊர்தியில் ஏற்றி
கையசைத்து விட்டு சென்றது...

😁😁😁

இந்திய தரகர் பாஜக மோடி கலாட்டா...

 


பிராடு பாஜக கலாட்டா...

 


தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்...

 


தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.. மலையாளிகள் கொண்டாடும் அரிசி...

சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.

நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சபரிமலை செல்லும்போது அங்குள்ள உணவகங்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, வேண்டாம், வேண்டாம்... வெள்ளைச் சோறு போடு... என்று சொல்வதையும், பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, மட்ட அரிசி போடு...' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.

நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்.

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).

இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்.

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.

மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், பொசுபரசு போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன

தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாசு(ஸ்)டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.

செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு(ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.

சிவப்பு பூஞ்சண அரிசி (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், சுவாசகாசம் மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து...

ஜெய் மோடி சர்கார்.. பெட்ரோல் விலை ஏத்து...

 


அம்பானிக்கு தரகர் வேலை பார்க்கும் பாஜக மோடி...