தமிழர்களின் தலைமையைக் கைப்பற்றிக் கொண்டதோடு தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, மொழி போன்ற அனைதுக் கூறுகளையும் இழிவு படுத்தி சிதைத்தனர்..
இத்தோடு நில்லாமல், உலக ஆட்சி அதிகாரச் சூட்சுமமான பெரும்பான்மை சிறுபான்மை ஆளும் என்ற அடிப்படையைக் கூட தமிழர்கள் உணராதவாறு திராவிட இன பிறமொழியாளர்கள், பெரும்பான்மை தமிழர்களை அவர்களின் சொந்த மண்ணிலேயே "திராவிடர்கள்" என்ற அடையாளத் திணிப்பைச் செய்து சிறுபான்மை திராவிடத்தை பெரும்பான்மைச் சமூகமாக்கி தலைமையை கைப்பற்றிக் கொன்டனர்...
தமிழர், தமிழினம் என்றதொரு தனித்த ஓர்மையையும் குலைத்தனர்..
சமகாலத்தில் நம் கண்முன்னேயே போக்குவரத்து கழகங்களின் பெயர்களில் இயங்கிக் கொண்டிருந்த திருவள்ளுவர், சேரன், சோழன், பாண்டியன், தளபதி சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, மருது சாகோதரர், போன்ற தமிழின ஆளுமைகளின் அடையளங்களை செயற்கை கலவரம் மூலம் துணிச்சலாக தூக்கினர்..
தமிழர்களின் திருநாளான பொங்கலை "திராவிடர் பொங்கல்" என்ற பெயர் மாற்ற முயற்சியும் நடைபெற்றது.. பின் முறியடிக்கப் பட்டது.. தற்போது மீண்டும் முயற்சி நடக்கத் தொடங்கியுள்ளது...
இப்பொழுது, பெரியார் பிறந்த மண் என்றெல்லாம் பேசி, வந்தேறி கட்சிகளெல்லாம் அரசியலில் எதிரெதிராக நின்றாலும், இன்று தமிழ் தேசியத்திற்கு எதிராக பகை மறந்து ஒன்று படக் கூடிய நேரம் வந்து விட்டதென வெளிப்படையாகக் கொக்கறிக்கும் நிலையையும் கண்டோம்..
ஆரியம் மாயை என்று வந்த திராவிடக் கூட்டத்தின் கருத்தியல் முழுதும், வெறும் வாய் ஜால பேச்சுக்கள். இதுவும் மாயையே என புரிந்து புறந்தள்ளும் விளிம்பு நிலையிலுள்ளோம் என்பதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து பயணித்தால் தமிழ் தேசியம் சென்று சேரலாம்...