30/03/2021
தமிழர்கள் பயன்ப்படுத்திய பலவகை பாரம்பரிய பாத்திரங்களின் மகிமை....
மண் பாண்டத்தின் மகிமை...
மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது.
நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும்.
மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும்.
தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.
மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது.
பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும்.
பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது.
இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.
எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும்.
ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும்.
இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே...
இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால்...
விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.
குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.
இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.
பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித் தொழிக்கும் ஆற்றல் பெற்றது.
அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.
மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகி விடும்...
அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்...
ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.
ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.
யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.
தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.
Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.
ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.
இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?
உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.
செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?
நண்பன் - நண்பனின் அப்பா - நான்...
நண்பன் : அப்பா... எங்க காதலுக்கு தடை போடாதீங்க. எங்க காதல் தெய்வீகக் காதல்..
நண்பனின் அப்பா : அது என்னடா தெய்வீகக் காதல்?
நண்பன் : என் பெயர் பரமசிவம். என் காதலி பெயர் பார்வதி. அதான் அப்படி சொன்னேன்..
அப்பா : ஏன்டா உருப்புடாதவனே... உன் நண்பன் தானே இவன்.. எந்த பொண்ணு பின்னாடியாவது சுத்தி இருக்கானா..? இல்ல லவ்வு கிவ்வுனு ஏதாவது பண்ணியிருக்கானா...
நான் : அப்பா நமக்கு இந்த பொண்ணுங்கனாளே அலர்ஜி... அதனால் தான் நான் பள்ளி கூடத்துல இருந்தே ஆண்கள் பள்ளி கூடமா தேடி கண்டு புடுச்சி சேர்ந்து படிச்சேன்...
நண்பன் : டேய்.. நீ லவ்வும் பண்ணாம.. கல்யாணமும் பண்ணாம எங்க உசுர ஏன்டா எடுக்குற...
நான் : நீ லவ் பண்ணி கல்யாணம் பண்ணுறதுக்கு நான் என் சுதந்திரத்த பலி கொடுக்கனுமா... அய்யோக்கிய பயலே...
நாவல் மரத்தின் மருத்துவ குணங்கள்...
வேர் : வெயில் காலத்தில் எழும் அடங்காதத் தாகத்தைத் தீர்ப்பதில் நாவல் மர வேருக்கு இருக்கும் பங்கு பலரும் அறியாதது. நெல்லிக்கட்டை, நன்னாரி வேர்போல நாவல் மர வேர் கட்டைத்துண்டு ஒன்றையும் அருந்தும் நீரில் ஊறப்போட்டால் அந்த நீரானது எப்பேர்ப்பட்ட அடங்காதத் தாகத்தையும் கட்டுப்படுத்திவிடும். சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு மேற்படி அடங்காதத் தாகம் எப்போதும் உண்டு. அவர்கள் அனைத்து நாட்களிலும் இந்த நாவல் வேர்க்கட்டை ஊறிய நீரைக் குடிக்கலாம். நாவல் மரம் துவர்ப்பு வகையின் கீழ் வரும். இந்தத் துவர்ப்புச் சுவையானது காயங்களை ஆற்றக்கூடியது என்பதால், நாவல் மர வேரை இடித்துப் புண்கள் மீது கட்டுவார்கள்.
மரப்பட்டை : முற்றிய பட்டையைத் தூள் செய்து பவுடராகச் சேகரித்து வைத்துக்கொண்டால், புண்களைக் குணப்படுத்த நீண்ட கால மருந்தாக உதவும். பட்டையின் உள் சதைப் பகுதியை நீர்விட்டு அரைத்து மோர் அல்லது தயிருடன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் சூட்டினால் வரும் கடுப்பு, கழிச்சல் தீரும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க, முற்றியப் பட்டையைக் கஷாயம் வைத்துக் குடிக்கும் பழக்கம் நமது பாரம்பரியத்தில் உண்டு.
சித்த மருத்துவத்தில், சர்க்கரை நோய்க்கு பிரதானக் கஷாயமாக இருக்கும் ஆவாரக் குடிநீர் தயாரிப்பிலும் நாவல் மரப் பட்டைக்கு முக்கிய இடம் உண்டு. பெரும்பாட்டுப் பிரச்னையில் அவதியுறும் பெண்களுக்கு இரும்புச் சத்து இழப்பு அதிகமாக இருக்கும். இதனை ஈடுகட்ட சித்த மருத்துவத்தில் பலன் அளிக்கும் செந்தூர பஸ்பம் தயாரிப்பிலும் நாவல் மரப்பட்டைக்கு முக்கிய இடம் உண்டு.
இலை : வெயில் காலத்தில் படுத்தும் கழிச்சல் தீர, நாவல் மர இலைக் கொழுந்துகளைச் சேகரித்து அரைத்துத் தயிரில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இது மட்டும் அல்ல.... இளம் கொழுந்துகளாய்ச் சம அளவுக்கு மாவிலைக் கொழுந்துகளுடன் சேர்த்து அரைத்துத் தயிருடன் சாப்பிட்டால், தீராத மூலக்கடுப்பும் நாளடைவில் கட்டுக்குள் வரும்.
பழம் : நாவல் மரம் தரும் கனிந்தப் பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. என்ன, அதிகம் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு வரும். இதைத் தவிர்க்க உப்பில் தோய்த்துப் பழங்களை ருசிக்கலாம். சுவைக்கு சுவையுமாச்சு; உடலுக்கு மாமருந்துமாச்சு. இரைப்பையை வலுப்படுத்தவும் மொத்த உணவுப் பாதையை உறுதி செய்யவும் தேவைப்படும் அடிப்படைச் சத்துக்கள் நாவல் பழத்தில் உண்டு. இதன் துவர்ப்பும் குளிர்ச்சியும் இதயத்தை வலுப்படுத்தக்கூடியவை.
கிராமப்புறங்களில், எட்டிக்கொட்டை உண்டதால் ஆன விஷ முறிவுக்கு நாவல் பழச் சாறு அல்லது மரப்பட்டைக் கஷாயத்தை மிகச் சிறந்த முதலுதவி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். சர்க்கரை வியாதியஸ்தர்கள் சாப்பிட உகந்தது நாவல் பழம். ஆனால், சளி - சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மட்டும் இடைவெளிவிட்டு அளவோடு சாப்பிடலாம். பிறக்கும் குழந்தைக்குக் கபம் பாதிக்க வாய்ப்பு உள்ளதால், கர்ப்பம் தரித்தப் பெண்களும் இந்தப் பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும்.
கொட்டை : நாவல் மரம் முழுமையுமே சர்க்கரை நோய்க்கு எதிரான மருத்துவ மகத்துவத்தை உள்ளடக்கியது. நாவல் பழத்தின் கொட்டையில் இந்த மருத்துவ வீரியம் இன்னும் அதிகம். கொட்டையை நிழலில் காயவைத்து மாவாக அரைத்துவைத்துக்கொண்டு, காலை, மாலை இரு வேளைகளும் அரைத் தேக்கரண்டி மாவினை வெந்நீரில் சேர்த்து அருந்த சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
ஆடு தின்னாப் பாலைச் செடியை சாறு செய்து, அதில் இந்த நாவல் கொட்டை மாவையும் சேர்த்து பட்டாணி அளவிலான மாத்திரைகளாக உருட்டி வைத்துகொண்டு, வேளைக்கு இரண்டாக உண்டுவர சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த பலன் கிடைக்கும்...
உயிரணுக்களின் (Cellular memory) ஊடே தொடரும் நினைவுகளும் குணங்களும்...
பொதுவாக மனிதனின் மூளையே நினைவுகளை சேர்த்துவைத்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் மூளையுடன் நமது உயிரணுக்களும், நினைவுகளையும், குணங்களையும் எடுத்துச்செல்கிறது என்பது உறுப்புதானம் வழி தெரிய வந்திருக்கிறது. இதயத்தை தானம் பெற்றவர்களிடம் காணப்பட்ட மாறுபட்ட குணநலன்கள், விருப்பங்கள், சிந்தனைகள் ஆகியவற்றைக்கொண்டு உயிரணுக்கள் நினைவுகளைச் சுமக்கின்றனவா என்ற ஆராய்ச்சிக்கு துவக்கமாக அமைந்தது. ஒருவரிடமிருந்து உறுப்புதானம் பெறும்பொழுது, தானம் கொடுத்தவரின் குணநலன்களின் ஒரு பகுதியும் தானம் பெற்றவருக்கு சென்றிருக்கக்கூடுமா?
வளர்ச்சியடைந்த நாடுகளில் இத்தகைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அந்த நாடுகளில் தானம் கொடுப்பவருடைய விபரங்கள் சட்டப்படி ஒளிவு மறைவாகவே வைக்கப்பட்டுள்ளது. எனவே உறுப்புதானம் கொடுப்பவருடைய முழு குணநலன்களைப்பற்றிய விபரங்களைப் பெறுவது கடினமான காரியம். இத்தகைய சூழலில் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சியைத் தொடர்கின்றனர்.
1970-ல் “கிளாரியா சில்வியா” என்ற பெண்மணி, இதயம் மற்றும் நுரையீரலை 18 வயது ஆடவரிடமிருந்து தானமாகப் பெற்றார். தானம் கொடுத்த இளைஞன், ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்தவர். அவர் இறந்ததனால் அவரது உறுப்புக்கள் தானமாக கொடுக்கப்பட்டன. தானம் கொடுத்தவரைப்பற்றி கிளாரியாவுக்கு எந்தவிதமான விபரமும் தெரியாது. மாற்று உறுப்பு ஆபரேஷன் முடிந்தவுடன், சிக்கன் உருண்டைகள், மது, குடமிளகாய் முதலிய உணவுகளை உட்கொள்ள தன் மனம் மிகவும் ஏங்கியதாக கூறியுள்ளார். ஆபரேஷனுக்கு முன் அவருக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. திடீரென்று தன்னுடைய உணவுப் பழக்கங்களில் மிகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதை அவர் உணர்ந்துள்ளார். தன்னுடைய உணர்வுகளை “A change of heart“ என்று ஒரு புத்தகமாகவும் எழுதியுள்ளார்.
அறிவியலாளர்கள் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்த, உயிரணுக்களின் நினைவுகளின் தொடர்ச்சி எட்டு வயது சிறுமிக்கு நிகழந்தது. எட்டு வயது சிறுமி, பத்துவயது சிறுமியிடமிருந்து இதயத்தைப் பெற்றாள். இதய மாற்று ஆபரேஷனுக்குப் பிறகு, தொடர்ச்சியாக ஒரு சிறுமியை ஒருவர் கொலை செய்வதுபோன்று அந்த எட்டு வயது சிறுமிக்கு கனவுகள் தொடர்ந்தன. மனோதத்துவ நிபுணர், உயிரணுவின் நினைவுகள் பத்து வயது சிறுமியிடமிருந்து தொடர்வதால் கனவுகள் தொடர்வதாக நம்பினார்.
உண்மையில், தானமாக பெற்ற இதயத்தைத் கொடுத்த சிறுமியை, யாரோ கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள். இதயத்தைப் பெற்ற சிறுமி, கனவில் தான் கண்ட கொலைகாரனின் அடையாளங்களை காவல் துறையிடம் கூறியிருக்கிறாள். அந்த அடையாளங்களின் உதவியுடன், காவல்துறையினர் கொலைகாரனை நீதியின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்...
சிரிச்சுட்டு போய்டே இருக்கனும்...
இருட்டு நகரம் என்று அழைக்கப்பட்ட நகரத்தில் அந்த லைப்ரரி இருக்கிறது.
அந்த லைப்ரரியில் இரண்டு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன.
அதில், இரண்டாவது புத்தகத்தில் ஒரே ஒரு பக்கம் மட்டுமே உண்டு.
அந்தப் பக்கம் இரண்டு Column களாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு Columnல் ஆப்பிரிக்க யானையின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது.
இன்னொரு Columnல் Fluffy வகை பூனைகளின் படம் அச்சிடப் பட்டிருக்கிறது.
இதிலிருந்து என்னத் தெரிகிறது?
யானைக்கு ஒரு COLUMN வந்தால், பூனைக்கு ஒரு COLUMN வரும்.
கொலவெறியோட தேடினாலும்...
உங்க கைக்கு நான் சிக்க மாட்டேன்...
😁😁😁
24 மணி நேரத்தில் கேன்சரை குணமாக்கும் பழம்...
உலகில் மிக கொடிய நோயான கேன்சரை குணமாக்கும் அறிய மருந்து ஒன்று குயின்ஸ்லாந்தின் மழைக்காடுகளில் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.
பல நோய்களுக்கு மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்ட இடத்தில் கேன்சரின் விளைவுகளை எதிர்த்து போராடுவதற்கான அற்புதமான புதிய மருந்து ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
BREAK DRUG EBC-46, இது தான் புற்றுநோயை குணப்படுத்தும் அந்த மருந்து.
இந்த மருந்து பிளஷ்வுட் (Blushwood) எனப்படும் மரத்தில் காய்க்கும் பெர்ரியில் இருந்து பெறப்படுகிறது.
இந்த மருந்து நாய் மற்றும் பூனை போன்ற செல்ல பிராணிகள் மீது ஏற்கனவே சோதனை செய்யப்பட்டது.
இந்த EBC-46 என கூறப்படும் மருந்தானது தலை, கழுத்து, மற்றும் பெருங்குடல் ஆகிய பகுதிகளில் உள்ள கட்டிகளை குணப்படுத்துகிறது.
இந்த மருந்தை உபயோகித்த சுமார் 24 மணி நேரத்தில், உடலில் உள்ள கட்டிகள் கருப்பாக மாறி, இரண்டு நாட்களுக்கு பின்னர் அது வெறும் நிற மாறிய தோல் போல காட்சியளிக்கிறது.
பிறகு 1.5 வாரத்தில் அந்த நிறம் மாறிய தோல் விழுந்து, கேன்சர் கட்டிள் முழுவதும் குணமடைந்து சுத்தமான தோலாக காட்சியளிக்கிறது.
இதுகுறித்து பேசிய QIMR Berghofer மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவர் பாயில், இதன் வேகம் என்ன ஆச்சர்யப்படுத்துகிறது என்று கூறினார்.
மேலும், இந்த மருந்து மனித உடல்களில் சோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்...
நரம்புகள் புடைக்கும் நோயை குணப்படுத்தும் ஒரு அற்புத மருத்துவம்...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்த வெரிகோஸ் நோய் ஏற்படலாம்.
நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், மைக்ரோபியல் போன்ற நோய்கள் நம்மை எளிதாக தாக்குகிறது.
வெரிகோஸ் வெயின் நோய் ஏற்பட காரணம் என்ன?
நமது உடலில் உள்ள ரத்தம் வேறொரு பகுதிக்கு செல்ல முடியாமல் ரத்த நரம்புகளிலே தங்குவதால் நரம்புகள் புடைத்து மற்றும் விரிவடையும் இதை தான் வெரிகோஸ் வெயின் நோய் என்கிறோம்.
இந்நோயை குணப்படுத்துவதற்கு நீண்ட நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும். இந்த வெரிகோஸ் வெயின் வருவதற்கு முக்கிய காரணம் அதிகமான உடல் எடை மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை முக்கிய காரணமாகும்.
ஆனால் இந்த வெரிகோஸ் நோயை இயற்கையான முறையில் குணப்படுத்த ஒரு அற்புத பாட்டி மருத்துவம் உள்ளது.
தேவையான பொருட்கள்...
பச்சை தக்காளி - 2
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை...
முதலில் பச்சை தக்காளிப் பழங்களை எடுத்து அதனுடன் தேன் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
பின் அரைத்த அந்த பானத்தை தினமும் காலையில் உணவுக்கு முன் குடிக்க வேண்டும். அல்லது இந்த தக்காளி பழங்களின் தோலை உரித்து விட்டு வெரிகோஸ் வெயின் ஏற்பட்ட இடத்தில் தேய்க்கலாம்.
நன்மைகள்...
இந்த இயற்கை முறை மருத்துவமானது, வெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்துகிறது என்பது நீருபிக்கப்பட்டுள்ளது. இதை தினமும் சரியான அளவில் எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
பச்சை தக்காளியில் உள்ள அல்கலாய்டு சோலனின், நமது உடலில் ஏற்படும் ரத்தம் கட்டுதலை குறைக்கிறது. மேலும் இது நரம்புகளின் சுவர்களை வலிமையாக்கி, வெரிகோஸ் வெயினை எளிதில் குணப்படுத்த உதவுகிறது.
குறிப்பு : வெரிகோஸ் வெயின் சிகிச்சை எடுக்கும் போது, மருத்துவரிடம் டயாபெட்டீஸ் மற்றும் ஹைபர் டென்ஷன் உள்ளதா என்பதை சோதனை செய்துக் கொள்வது நல்லது...
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் மக்களை ராணுவம் வீடு தேடி சென்று கொன்று வருகிறது...
இன்று மட்டும் நூற்றுக்கணக்கான மக்ககளை ராணுவம் கொலை செய்திருக்கிறது..
தற்போது ராணுவம் மக்களை தேடிபிடித்து சித்ரவதை செய்து கொலை செய்யும் காட்சிகளை மறைந்திருக்ககும் சிலர் வீடியோ எடுத்து சமுக வலைதளத்தில் வெளியீட்டு வருகிறார்கள்...
கல்ப விக்ரகமும் மர்மங்களும்...
முதலிலேயே ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன், இந்த தகவல்கள் அனைத்தும் அமெரிக்காவின் CIA நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அலுவலர் வெளிபடுத்தியவை.
இப்பொழுது விஷயத்திற்கு வருவோம் 47 கிராம் மட்டுமே எடை கொண்ட ஒரு வகையான பித்தளை போன்ற உலோகத்தினாலான மிக புராதனமான இந்து கடவுளின் அந்த சிலையை இழந்த அமெரிக்க CIAமிகுந்த வேதனயும் கவலையும் அடைந்தது.
அந்த சிலையை குறித்து சில வினாக்கள் அந்த சிலைக்கும் அமெர்க்க CIA நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு?
ஹிந்துக்களின் கடவுள் சிலையை கொண்டு CIA செய்த காரியம் என்ன?
இவ்வளவு கவலை கொள்ளவும் அளவு அந்த சிலையின் மர்மம் என்ன?
ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பு 1959-1960 திபெத்தின் ஒரு துறவி CIA அதிகாரிகளிடம் ஒரு பேழையை மற்றும் அதனுள் அடங்கிய மிக முக்கியமான பொருளுடன் தருவதுடன், அதனை மிக கவனமாக பாதுகாக்கும் படி லோ மோந்தங் இடத்தில் தருகிறார்.
அத்துடன் அந்த துறவி அந்த பேழையின் முக்கியத்துவத்தை இதற்குரிய CIA அதிகாரியிடம் கூறியதை, அவர் அப்படியே இந்த பேழை மற்றும் அதனுள் இருக்கும் விக்ராகத்தினை பற்றி துறவி கூறியதை குறிப்பினை எடுத்துகொல்கிறார்.
சைனா திபெத் போரில் துறவியும் மற்ற பாதுகாவலர்களும் கொல்லபடுகின்றனர். இதன் பின்னர் அந்த பேழை இந்தியவின் வழியாக ரகசியாமாக தற்பொழுது அமெரிக்காவில் கொலராடோவில் உள்ள கேம்ப் ஹால் கொண்டு செல்லபடுகிறது.
சில வாரங்களுக்கு பின் அந்த சிலை கொண்ட பேழை வாஷிங்கடனில் உள்ளCIAஸ்டோர் ரூமில் "ST Circus Mustang-0183". என்ற லேபிளுடன் வைக்க படுகிறது.
சிலகாலம் கழித்து CIA வின் பார்வை அந்த பேழை மீது திரும்புகிறது, அதன் உள்ளிருக்கும் பொருளின் மர்மம் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் கொண்ட சியா, அந்த பேழைக்குள் வினோத கையெழுத்து பிரதி ஒன்றை கண்டேடுக்கின்றனர்.
மேலும் மிக வினோதமான முறையில் வடிவமைக்கப்பட்ட அதனை மேலும் சோதனை உட்படுத்த முடிவு செய்கின்றனர்.
அந்த பேழை செய்யப்பட்ட மரம் குறித்து அறிய ரேடியோ கார்பன் சோதனை செய்யபடுகிறது.
அமெரிக்காவின் the University of California Radiation லபோரடோரி செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளை கண்ட CIA அதிகாரிகள் அதிர்ந்து போகின்றனர், காரணம் அந்த பேழை இந்த யுகத்தினுடயது இல்லை ஆம் ஹிந்துக்களின் காலகணக்கு படி துவாபர யுகத்தை சேர்ந்தது.
ரேடியோ கார்பனின் ஆய்வுப்படி ஒன்பது அங்குல தடிமன் கொண்ட அந்த பேழையின் வயது ஏறத்தாழ 28450 வருடங்கள் ஏறத்தாழ குருஷேத்திர போருக்கு முந்தியது.
கல்ப விக்ரகம் கண்டெடுக்கப்பட்ட பேழை பண்டைய காலமுறை முடி கொண்ட அமைப்புடன் கம்பி கொண்டு பூட்டும் முறையில் இருந்தது, மேலும் பேழையின் நான்கு புறமும் எட்டு அங்குலம் தடிமனும் அதன் மூடியானது ஆறு அங்குலதடிமனும் கொண்டதாக இருந்தது, இதன் பலகைகள் தேக்கினால் செய்யபட்டும் பித்தளை போன்ற ஒருவித கலவை உலோக தகடு ஒரு அங்குல தடிமனுடன் பொருத்தப்பட்டு பலகையும் தகடும் கடையாணி மூலம் இறுக்கப்பட்டு பலகைகள் காலகாலத்திற்கும் காக்கும்படி பொருத்தபட்டிருந்தது. பேழையின் வெளிப்புற தோற்றமே அது பலகாலம் புதையுண்டு இருந்ததை கூறுவதாக இருந்தது.
மேலும் தொடருவோம்...
சித்தர்கள் பறப்பது எப்படி?
நம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோம். அது எப்படி சாத்தியம் ஆகிறது.
சித்தர்கள் பறந்து செல்பவர்கள், நீரில் நடப்பார்கள். அந்தரத்தில் மிதப்பார்கள் என்றெல்லாம் படித்திருக்கிறோம் அல்லவா. அவை எதுவும் மாயாஜால்மோ அல்ல நடக்க முடியாத கட்டுக் கதையோ அல்ல. பிறகு எப்படி பறக்கிறார்கள்?
எல்லா ஜீவன்களுக்கும் இரண்டு உடல்கள் இருக்கும். ஒன்று நாம் கண்ணால் காணக்கூடிய எலும்பும் சதையும் கொண்ட புற உடல். மற்றொன்று கண்களுக்குப் புலப்படாத மாயா உடல். உதாரணமாக, நாம் பின்னால் ஒருவர் தொடும் தூரத்தில் வந்தி சத்தமில்லாமல் நின்றால் கூட நம்முடைய உள்ளுணர்வு காரணமாக திரும்பி பார்த்து விடுவோம். யோரோ நம் பின்னால் நிற்பது போல இருக்கிறதே என்ற உள்ளுணர்வின் உந்துதல் எதனால் ஏற்படுகிறது? அருகே நிற்பவர் நம் புற உடலைத் தொடாவிட்டாலும் ஆத்மாவின் உடலான மாய உடலைத் தீண்டி நிற்பதால் நமக்கு உள்ளுணர்வு உண்டாகிறது. இவ்வாறுநடமாட்டத்தை உணர்வலைகளின் வாயிலாகவும் மின்காந்தப்புலத்தின் பரிமாற்றத்தாலும் நாம் கண்ணால் பார்க்காவிட்டாலும் உணரமுடிகிறது.
இவற்றில் புற உடல் புவி ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டது. மாய உடல் ஆத்மாவின் உடல். இது பூமியின் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்படாதது.
ஆத்மாவில் லயித்திருக்கும் போது மாய உடலோடு ஒன்றியிருப்பதும், புற உலகில் லயித்திருக்கும் போது சாதாரண உடலோடு ஒன்றியிருப்பதும் நடக்கிறது. சித்தர்களும் முனிவர்களும் தொடர்ந்த பயிற்சியின் மூலமாக மாய உடலையும் , புற உடலையும் ஒரு சேர இயக்க கற்றுக்கொள்கிறார்கள்.
மொத்த சக்தியையும் நாபி எனப்படும் தொப்புளுக்கும் கீழே உள்ள இடத்தில் ஒரு உருண்டையைப் போல திரட்டி அந்த சக்தியையே உடலின் மைய புள்ளியாகக் கொண்டு புவி ஈர்ப்பு விசைக்கு எதிர் விசை கொடுத்து பறக்கிறார்கள்.
மாய உடலை இயக்கும் போது புவியீர்ப்பிலிருந்து விடுபட்டு இவர்களால் பறக்க முடியும். மாய உடலின் ஆதிக்கத்தைக் குறைத்து புற உடலை இயக்கும் போது புவியீர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டு சராசரியாக இயங்க முடியும். இவ்வாறு இவர்களால் புவி ஈர்ப்பு விசையைக் கட்டுப்படுத்த முடியும் போது அந்தரத்தில் நடக்க முடிகிறது. நீரில் நிற்க முடிகிறது. அதற்கு காரணம் தொடர்ந்த பயிற்சிகளால் புற மற்றும் அக உடல் இரண்டின் சக்தியையும் இயக்கக் கற்று விடுகிறார்கள். ப்ரபஞ்சத்தின் சக்தியோடு முழுமையாக ஒன்றி விடுகிறார்கள்.
சலனமற்ற மனமும் அமைதியான தியானமும் இதுபோன்ற உள்ளிருப்பு சக்திகளை வெளியே கொண்டு வர உதவும் முதல் படிகள் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.
நம்மைப் போன்றவர்கள் தான் சலனப்படாத நிமிடங்கள் கூட கிடையாதே! அதனால் தான் 58 பெருக்கல் 28 என்ன என்று கேட்டால் கூட மன சக்தியை பயன்படுத்தாமல் கால்குலேட்டருக்குத் தாவுகிறோம்...
நண்பனும் நானும்...
நண்பன் : டேய் எனக்கு பி பி மாத்திரை வேணும் வாங்கி தா டா..
நான்: ஏன் டா உன் உடம்பு நல்லா தானே இருக்கு எதுக்கு மாத்திரை?
நண்பன் : நாளைக்கு என் மனைவி ஷாப்பிங் போகணும்னு சொல்லியிருக்கா டா 😞
நான் : என்னையா டா மொட்ட பயனு நக்கல் பண்ண..சாவுடா கொய்யால...
சிங்கிள்ஸ் வாழ்க்கை சொர்கம் டா...
யாருகிட்ட 😁😁😁