13/06/2017

உச்சகட்ட கோபத்தில் பாமக அன்புமணி...


தந்தி ஊடகத்தை வெலுத்து கட்டும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்..

ஸ்டாலின், ரஜினி, எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, தினகரன், தீபா என எவரையும் விட்டு வைக்கவில்லை....

பலருக்குத் தெரியாத உண்மை - வஉசி...


இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்ற இந்திய அரசாங்கம் இரண்டு பேரை தேர்ந்தெடுத்தது. ஒருவர் "வ. உ. சி பிள்ளை", மற்றொருவர் டாக்டர் "அம்பேத்கர்" ஆனால் தன்னை விட அதிகம் படித்தவர், நல்ல சிந்தனையாளர் நல்ல  மனிதர்  என்று   மேலிடத்தில்   சொல்லி   டாக்டர்.  அம்பேத்கருக்கு, வ. உ. சி பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து விட்டார். டாக்டர் அம்பேத்கர் தன் சுயசரிதையில் இந்த நிகழ்வை பெருமையாக எழுதி வைத்துள்ளார்.

அய்யா வ. உ. சி.யை பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது? ஆனால் அவரை முழுசாக தெரிந்தவர்கள் ஒரு சிலரே.... அய்யா வ. உ. சி. ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் மட்டும்தான் ஓட்டினாரா?  இல்லவே இல்லை அவர் பல துறைகளில் கொடிகட்டி பறந்தார்.

முதன் முதலில் தொழிற்சங்கத்தை நிறுவினார். அதற்குத் தலைவைராகவும் இருந்தார். அன்றைய காலகட்டத்தில் தொழிற்ச்சாலைகளில் ஒரு தொழிலாளி 18 மணி நேரம் கட்டாயம் வேலை பார்க்கவேண்டும் என்று சட்டம் இருந்தது. இதை வ. உ. சி கடுமையாக எதிர்த்து போராடி ஒரு தொழிலாளி 8 மணி நேரம் தான் உழைக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவந்தார்.

அது மட்டுமா வ. உ. சி., சிறந்த இலக்கியவாதி. அனைத்து இலக்கணங்களையும் கற்றவர். அவரிடம் போட்டி போட்டு வெற்றி பெற யாராலும் முடியாது. ஒரு காரியத்தில் இறங்கினால் முன் வைத்த காலை பின் வாங்கமாட்டார். பிடிவாதக்காரர். தாழ்த்தபட்ட மக்களை தன் உயிராக நினைத்தவர். ஏழை எளிய (Sc) மக்களுக்கு தன் வீடு வாசல் நிலங்களை இலவசமாக கொடுத்தவர்.

அது மட்டுமா வள்ளுவர் எழுதிய திருக்குறளில் சில விஷமிகள் தங்கள் சுயநலத்துக்காக திருக்குறளை திருத்தி எழுதி வைத்தனர். இதை வ. உ. சி. கண்டுபிடித்து உண்மையான திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

சட்டம் படித்து வழக்கறிஞர் ஆகி எழை மக்களுக்காக பணம் வாங்காமல் இலவசமாக வாதாடினார். இப்படி இன்னும் பல விஷயங்களை வ. உ. சியை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இப்படியெல்லாம் வாழ்ந்த ஒரு கோடிஸ்வர மகாமனிதர் கடைசியில் தன் குடும்பத்தை காப்பாற்ற தெருத்தெருவாக சைக்கிளில் வைத்து மண்ணெண்னை விற்று பிழைப்பு நடத்தினார் என்று சொன்னால் உங்களுக்கு இரத்தம் கொதிக்கிறதா? இல்லையா?

வ. உ. சியின் வாழ்க்கை வரலாறை படிப்பவர் கண்கள் கலங்குவது உறுதி. வ. உ. சியின் வாழ்க்கை வரலாற்றை படிப்பது தமிழனாய் பிறந்த அனைவரது கடைமையாகும்...

தமிழரின் கால அளவுகள்...


தமிழர்கள் பழங்காலத்திலேயே நுண்ணிய கால அளவுகளை வகுத்துள்ளனர். அதன் விபரம்...

60 தற்பரை=ஒரு வினாடி.
60 வினாடி=ஒரு நாழிகை
60 நாழிகை=ஒரு நாள்
3.75 நாழிகை=ஒரு முழுத்தம்.
2 முழுத்தம்=ஒரு யாமம்.
8 யாமம்=ஒரு நாள்.
7 நாள்=ஒரு கிழமை.
15 நாள்=ஒரு பக்கம்.
2 பக்கம்=ஒரு மாதம்.
2 மாதம்=ஒரு பருவம்.
3பருவம்=ஒரு செலவு.
2 செலவு=ஒரு ஆண்டு.
365நாள், 15நாளிகை, 31வினாடி, 15 தற்பரைகள் = ஒரு ஆண்டு...

மருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்...


அத்திப் பூத்தாப்போல இருக்கே? என்று ஒரு பழமொழி உண்டு.  உண்மையில் அபூா்வமாக பூப்பதாக நினைக்க வேண்டாம். அது பூக்கலேன்னா எப்படி அத்திக்காயும் அத்திப்பழமும் நமக்குக் கிடைக்கும். அந்தப் பூ நம்ம கண்ணுக்கு அவ்வளவா தெரியறது இல்ல. ஏன்னா அது அடிமரத்திலயிருந்து உச்சி வரைக்கும் மரத்த ஒட்டியே காய்க்கும். அதனால் இதை “காணாமல் பூப் பூக்கும் கண்டு காய் காய்க்கும்” என்ற விடுகதையிலும் சொல்வர்.

மூலிகையின் பெயர்- அத்தி
தாவரப்பெயர் – FICUS GLOMERATA, FICUS AURICULATE
தாவரக்குடும்பம் – MORACEAE
பயன்தரும் பாகங்கள் – இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன..

பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும். அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும்.

அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. அத்திப் பழங்கள் 6 – 8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி என்பது Ficus Carica எனவும், நாட்டு அத்தி என்பது Racemosa எனவும் தாவரவியலில் குறிப்பிடபடுகிறது.

அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம்.

உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.

அத்தி நல்ல மணத்துடன் இருந்தாலும் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். அவற்றை நீக்கி  பதப்படுத்தாமல் உண்ண முடியாது.

பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள் சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது.

அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்துவெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம். மூட்டுவலி, எலும்புத் தேய்மானம், மூலம் குணம் பெற அத்திப் பழங்கள் நல்லது.

 2 தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.

நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒரு வாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.

சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.

அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.

இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும்.

வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.

மரத்தின் பட்டையை இரவில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய்,
மூட்டுவலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம்.

பயன்கள்: அத்திப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.        

மேலும் இவை கல்லீரல் – மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.

கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன. மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது. இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.

அத்திப் பழத்தின் சத்துகள் : அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில்  ஆகியவை 100 கிராம் அத்திப் பழத்தில் அடங்கியவையாகும். உலர்ந்த அத்திப் பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.

அத்தி பழம் (ஒன்றின் சத்துகள்) (1 பழம் = 50gm) (% சராசரி தினப்படி சத்து)

நார்ச்சத்து: 5.8%
பொட்டாசியம்: 3.3%
மாங்கனீசு: 3%
விட்டமின் பி6: 3%
கலோரி(37): 2%
புரதம்-2 கிராம்,
கால்ஷியம்-100 மி.கி,
இரும்பு-2 மி.கி.

அத்தியின் மருத்துவப் பயன்கள் : அத்திப் பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Anti Oxidants உள்ளன. அத்திப் பழம் அதிக போஷாக்கு அளிக்கக் கூடியது அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும்.

உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.

அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும். இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.

நீரழிவு குணமாகும்: அத்தி மரத்தை லேசாக கீறினால் பால் வடியும் இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டாலும் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.
அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.

அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும்.நாட்டு அத்தியின் பால் மரு, மூலம் போன்றவற்றில் போட்டு வர அவை சுருங்கி விடும்.

அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தென்னை, பனை போன்றவற்றில் பாளையில் பால் சுரக்கும். அத்தி வேரில் பால் சுரக்கும். தெளிந்த இந்த நீரை நாளும் 300-400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேகநோய் போகும். நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும்.

அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.
முருங்கை விதை, பூனைக்காலி விதை, நலப்பனைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.

அத்திப் பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக்கடுப்பு, மூலவாயு, இரத்தமூலம், வயிற்றுப் போக்கு தீரும்.

அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச் செய்து 10-20 நாள் சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். பூண்டு, மிளகு, மஞ்சள் கூட்டில் சேர்க்க வேண்டும். பொரியலாகவும் சாப்பிடலாம்.

அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்றுவேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதபேதி, இரத்தபேதி ஆகியவை தீரும்.

காண அரிதாகிவிட்ட இம்மரத்தை அதிகளவில் விவசாய நிலங்களில் நட்டு வளர்த்து வருவது நலம்.

வீட்டுத்தோட்டத்தில் இடம் இருந்தால் அங்கேயும் வளர்க்கலாம்...

நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...


தமிழா ஒன்றுபட்டு கூரல் கொடுப்போம்...


கோட்டையில் காவி கொடி ஏத்துனா அது தேச விரோதம் என்று கூட இவருக்கு தெரியவில்லை இவரெல்லாம் எப்படி ஒரு கட்சி தலைமையில் இருக்கிறாரோ...


ராஜஸ்தானில் தமிழக கால்நடைத்துறை அதிகாரிகளை தாக்கிய பாஜக வின் பசு ரக்‌ஷா தீவிரவாத கும்பல்...


ஒடனே தமிழிசை அக்கா ராஜஸ்தான் CMஐ கண்டித்து அறிக்கையும், தமிழக பா.ஜ சார்பில் ராஜேஷ்தான் பா.ஜ வை கண்டித்து தில்லியில் பேரணியும் நடக்கும்..

மானம், ரோஷம் னு எதாச்சு மிச்சம் இருந்தா...

இதுதாங்க அறிவாளிக்கும் முட்டாளுக்கும் உள்ள வித்தியாசம்...


பாஜக வின் திருவனந்தபுரம் அலுவலகம் குண்டு வீசி தாக்கப்பட்டது...


குண்டு வீசப்படுவதற்கு 2மணி நேரம் முன்பே குண்டு வீசித் தாக்கிய அக்ரமத்தை பாஜக இளைஞர் அணியின் தலைவர் ஜெயவேலு ஹரீசன் நாயர் கண்டித்து மூன்று பதிவுகளை முகநூலில் பதிவு செய்துள்ளான்.

சதித் திட்டம் தீட்டியவனால் சதிச் செயல் நடக்கும் வரை பொறுமையாக இருக்க முடியாததால்  அவனுடைய சதித்திட்டத்தை  முகநூல் காட்டிக் கொடுத்து விட்டது.

இதுக்கு தான் அதிகமா மாட்டு மூத்திரம் குடிக்காதிங்கடான்னு சொல்வது.....

10.6.17-நேர்படப்பேசு விவாதத்தில், பெருமாள் மணி (RSS-BJP கபோதி)...


விவசாயி ஒன்னும் புனிதனெல்லாம் இல்ல...

விவசாயி ஒன்னும் சோறு போடல, அரசாங்கந்தான் சோறு போடுது...

இந்தியாவை விவசாய நாடாலாம் வச்சுக்கிட்டிருக்க முடியாது...

விவசாயி பிரதமர பாக்கனும்னு சொன்னா பாக்கனுமோ?

நீங்க (நெறியாளர் செந்திலிடம்) இவுங்களுக்கு சாதகமாலாம் பேசக்கூடாது...

எனினும், நிகழ்ச்சியின் இறுதியில் செந்தில் இப்படியாக நிகழ்ச்சியை நிறைவு செய்தார்..

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்...

விவசாயிகள் ஒன்னும் புனிதர்கள் இல்லை - பெருமாள் மணி...


அஞ்சு பத்து வாங்கி தின்கிற எச்சை பயலுக்கு பேச்சை பாரு புறம்போக்கு எச்சை பொருக்கி  நாய்...

இவன் பரம்பரையே சோறு தின்னாம மலம் தின்னுட்டு இருப்பானுங்க..

நண்பர்களே இவனை கழுவி ஊத்துற வேகத்தை பார்த்து இனி இவன் இனி தொலைக்காட்சி விவாதத்திற்கு வரவே கூடாது அப்படி திட்டி பதிவிடுங்கள் அவனை போய் சேரட்டும்....

கர்நாடகாவில் முழு அடைப்பு.. போலீஸார் குவிப்பு...


கர்நாடக மாநிலத்தில், கன்னட அமைப்புகள் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்துகின்றனர். கர்நாடக மாநில விவசாயிகளின் கடன்களை ரத்துசெய்யக் கோரியும் மேகதாது பிரச்னைக்கு தீர்வு காணவும் கோலார், சிக்காபல்லாபூர், தாவண்கரே மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களில் குடிநீர் பிரச்னைகளைத் தீர்க்கவும் வலியுறுத்தி, இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்துகின்றனர்.

இன்று அதிகாலை, தமிழகப் பேருந்துகள் கர்நாடக-தமிழக எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டன. ஆனால், சிறிது நேரத்தில் தமிழகப் பேருந்துகள் கர்நாடக மாநிலத்துக்கு வழக்கம்போல இயக்கப்பட்டன.

அங்கு பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகா முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் சுமார் 15,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்...

நடிகர் விஜய் வீட்டுக்கு பாஜக டூபாக்கூர்களின் சேட்டை ஏதாவது இருந்துச்சு தமிழகமெங்கும் செருப்படி தான் விழும்...


பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக வாழ்ந்தான்....


சங்க இலக்கிய அறிவியலில் சூரியனும் விமானமும்...

சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை.

இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே

இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப் போனார்கள்.

நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது.

அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது...

இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு.

அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப...

இதன் பொருளைப் பாருங்கள்..

விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து.

இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம்.

இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப் பார்க்க வேண்டியதொன்றாகும்.

விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.

எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள் என்று திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் உலங்குவானூர்தியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்ப ராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி.. இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா?

தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மை தான்...

திராவிடலு பகுதி - 2...


தமிழர் அப்படி என்ன தவறு செய்தனர் என்று பார்ப்பதற்கு முன் இதையெல்லாம் ஏன் நான் பதிவிடுகிறேன் என்று கூறிவிடுகிறன்.

இன்றைய திராவிடக் கட்சிகளில் உள்ள சிலர் திராவிடம் என்பது சரியானக் கோட்பாடு என்றும் இன்று முன்னனியில் உள்ள திராவிடக் கட்சிகள் பெயருக்கு திராவிடத்தை வைத்திருப்பதாகவும் அவைகள் உண்மையான திராவிடக் கொள்கைகளை பின்பற்றவில்லை என்றும் திராவிட வழிநடக்கும் கட்சிகளே தமிழருக்கு நன்மை பயக்கும் என்றும் கூறுகின்றனர்.

உண்மையில் திராவிடம் எனும் கோட்பாடு தமிழரைச் சுரண்டி அடக்கியாளவே பிறந்தது என்பதையும் அதன் விளைவுகள் இன்னும் மோசமாகும் முன் தடுக்க வேண்டிய அவசியத்தை தமிழருக்கு உணர்த்தி திராவிடத்தின் தோலுரிக்கவே இதை எழுதுகிறேன்.

இப்போது விடயத்திற்கு வருவோம்.

அன்றையத் தமிழர் செய்த தவறு என்னவென்றால் ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட ஆங்கிலம் கற்பது தவிர்க்க முடியாததாக இருந்தது.

ஆனால் மாநில மொழிகளில் எதை வேண்டுமானாலும் கற்கலாம் என்கிற வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில் தமிழர்களில் கனிசமானோர் குறிப்பாக பிராமணர்கள் சமசுக்கிருதத்தையும் இசுலாமியர் அரபி அல்லது உருது போன்ற மொழிகளையும் கற்கலாயினர்.

இன்றும் இவ்விரு வகைத் தமிழரிடமும் மேற்கண்ட மொழிகள் வேறூன்றி உள்ளன.

ஆனால் இதனால் சில நன்மையும் ஏற்பட்டது வெளி மாநிலங்களில் குடியேறியத் தமிழர்கள் தங்கள் தாய்மொழியைக் கற்க வழியேற்பட்டது.

ஆம், வெளிமாநிலத்தமிழர் தமிழைக் கற்க, மாநிலத்தமிழர் தங்கள் தாய்மொழியைப் புறக்கணித்து ஆங்கிலம் மட்டும், அல்லது அதோடு சேர்ந்து வேற்று மொழிகளைக் கற்கலாயினர்.

அத்தோடு தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் அண்டை மாநிலத்தவர் வந்து குடியேறி குடியேறி தமது எண்ணிக்கை கிட்டத்தட்ட தமிழருக்கு இணையாக வர வழிசெய்திருந்தனர்.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன.

இவ்வந்தேறு குடிகளும் தம் தாய்மொழியையே கற்க தமிழரும் அவர்கள் மொழியைக் கற்கலாயினர்.

இதனால் நாயகர், செட்டியார் போன்ற தமது சாதிப்பெயரையும் மாற்றி தெலுங்கரின் நாய்க்கர், ஸெட்டி போன்ற பெயர்களையும் சேர்த்துக் கொள்ளத் தொடங்கினர்.

தமிழகத்தின் 35% பூர்வீக மண் இலட்சக்கணக்கானத் தமிழரோடு அண்டை மாநிலங்களால் ஆக்கிரமிக்கப்பட அடிகோலினர்.

ஆனால் தமிழகத்தின் உட்பகுதியில் சில நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் வந்தேறுகுடிகள் தமிழைக் கற்கலாயினர் என்பதையும் இங்கு கூறத்தான் வேண்டும்.

மற்ற எந்தவொரு மக்களைவிடவும் தங்கள் தாய்மொழியைப் புறக்கணித்தப் பெரும்பிழையைச் செய்தனர் தமிழ்மக்கள்.

இன்று ஈழப்பிரச்சனையின் ஆரம்பம் என்பது அக்காலத்தில் ஆங்கிலக் கல்வியை கற்று உயர்ந்த பதவிகள் பெற்று அதிகாரவர்க்கமாக மாறிய வடக்குப்பகுதித் தமிழர் மீது சிங்களவருக்கு ஏற்பட்ட வெறுப்பே ஆகும்.

தமிழர் ஆதிகாலத்திலிருந்தே இப்பிழையைச் செய்தே வந்துள்ளனர்.

தமிழரின் தனித்தன்மை  என்பது 'இனப்பற்று இல்லாமை' ஆகும்.

அதனாலேயே ஆங்கிலேயர் மற்ற எவரையும் விடத் தமிழரையே ஆயிரக்கணக்கில் அடிமைகளாக கூலிகளாக தாங்கள் ஆளும் தேசமெல்லாம் கொண்டு செல்வது சுலபமானது.

அவர்கள் அனைவரும் தமது தாய்மண்ணின் ஆதரவு கிடைக்காமல் இன்றும் அதேநிலையில் உள்ளனர் என்பதே கசப்பான உண்மையாகும்.

காரணம் தமிழர் அனைவரும் வேற்றினத்தாரின் இரும்புப்பிடிக்குள் சிக்கியுள்ளனர்.

தமிழர் பெரும்பான்மையாக வாழும் தமிழகத்தலேயே மற்ற இனத்தவர் எப்படி நம்மை ஆளமுடிகிறது?

இதற்குக் காரணம் யார்?

இதில் திராவிடத்தின் பங்கு என்ன?

- தொடரும். . . .

பாஜக மோடி யின் போலி முகத்திரையை யார் கிழித்தாலும்.. அவர்கள் தீவிரவாதி தான்...


இந்தா  சொல்லிட்டானுங்கல்ல...

ஏம்பா  விஜய்  ரசிகர்கள்   காதில  விழுகுதா  தீவிரவாதியாம்  விஜய்..

கொஞ்சம்  பார்த்து  செய்யுங்க...

இலுமினாட்டி யும்.. இளவரசி டையனாவின் பலியும்...


இளவரசி டையானா வின் இறப்பின் பின்னனியில் பல சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

இங்கிலாந்து அரச குடும்ப மகாராணி எலிசபெத்தே தற்போதைய இலுமினாட்டிளின் தலைவி..

டையனா வை பற்றி பேசுவோம்...

இளவரசி டையனா இளவரசர் சார்லஸின் மனைவி. கார் விபத்தில் இறந்ததாக கூறப்படுகிறது.

உண்மையாக அவள் பலியிடப்பட்டாள்.


அவள் சில இரகசியங்களை வெளியில் சொல்ல முயற்சித்ததாகவும் சொல்லப்படுகிறது.

டையனா என்றால் பெண் இறை சந்திரன் Goddess of moon. உரோமை கடவுள்.

இந்த கடவுளுக்கு விழா கொண்டாடும் நாள் ஆகத்து 13.  டையனா இறந்தது ஆகத்து 31.


டையனா தனது பென்சு மகிழ்வுந்தில் தேவையில்லாமல் சுற்றி வழியின் அழைத்து செல்லப்பட்டார். ஓட்டுனர் ஹென்றி பால்.

மகிழ்வுந்து ஓர் சுரங்கத்தில் வழியே செல்லும் போது 13வது தூணில் மோதி விபத்து நிகழ்ந்தது.

அந்த சுரங்கத்தின் பெயர் Pont D 'Alma. இதன் பொருள் சந்திர இறைவியின் பாதை Passage Of The Moon Goddess.

witching hour (12:00AM - 1:00AM) என்று அழைக்கப்படும் அம்மானுஷ்ய பலி கொடுக்கப்படும் நேரத்தில் விபத்து நடந்துள்ளது.

சாவின் ‌‌இடமாக கருதப்படும் (Crossing rode) இரு பா‌தைகள் சந்திக்கும் ‌இடத்தில் விபத்து ‌நடந்துள்ளது.


மேலும் டையனாவின் நினைவாக சுரங்க முடிவில் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. அது ஓர் தீப்பந்தம்.

இதே தீ பந்தம் தான் சந்திர இறைவியின் கையிலும் உள்ளது. ‌

அதுவும் கீ‌ழ்நோக்கு ஐமுக நட்சத்திரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது.

இது இலுமினாட்டிகளின் வேலை என்பதில் சந்தேகம் இல்லை...

நாக்பூரில் இருந்து உத்தரவு வந்துருச்சு போலயே...


ஆக சீக்கிரம் ஆட்சியும் கலைக்கப் படுகிறது...

ஊடக நேர்மையை சவக்குழிக்கு தள்ளிய தந்தி தொலைகாட்சியிடம் தமிழர் விரோத அரசியலை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது...


பாரம்பரிய முறையில் விதைகளை பகிர்ந்தால் 12 ஆண்டு சிறை, ரூ.1.5 கோடி அபராதம்...


பாரம்பரிய முறைப்படி விதைகளை பகிர்ந்துக் கொண்டால் சிறை தண்டனையை எதிர்கொள்ளும் நிலைக்கு டான்சானிய விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாய உற்பத்தியில் ஈடுபடும் மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கும் வகையில் டான்சானிய அரசு புதிய சட்டத்தை கடந்த டிசம்பரில் இயற்றியுள்ளது. இதன்படி காப்புரிமைப் பெறப்பட்ட விதைகள் பரிமாற்றத்திற்கு முழுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விதைகள் பகிர்வானது 80 விழுக்காடு அளவுக்கு பாரம்பரிய முறைப்படி, தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் தங்களுக்குள் பகிர்ந்துக் கொள்ளும் முறைப்படியே டான்சானியாவில் நடைபெற்று வருகிறது.

இதனை தடை செய்வதன் மூலம் டான்சான்யாவின் கிராமப்புற பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடும் என பாரம்பரிய விதை பாதுகாப்பு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

புதிய சட்டத்திற்கு உட்பட்டு நீங்கள் மான்சாண்டோ அல்லது சிங்கெண்டா நிறுவனங்களிடம் இருந்து விதைகள் வாங்குவீர்களேயானால் அதன் அறிவுசார் சொத்துரிமையை அந்நிறுவனங்கள் தக்க வைத்துக் கொள்ளும். ஒருமுறை வாங்கும் விதைகளை நீங்கள் எடுத்துவைத்து, பின்னர் மீண்டும் பயன்படுத்தும் போது, உங்களது நிலத்தில் வர்த்தகமற்ற பயன்பாட்டுக்கு மட்டுமே அதை பயன்படுத்த முடியும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ, உறவினர்களுக்கோ விதைகளை பகிர்வது சட்டப்படி குற்றமாக்கப்பட்டுள்ளது.

துரதிஷ்டவசமாக ஆப்ரிக்காவின் பெரும்பான்மை மக்கள் பாரம்பரிய முறைப்படியே விதைகளை பகிர்ந்து வருகின்றனர். இதனை அரசு சட்டவிரோதமாக்கியுள்ளது என்கின்றனர் விதை பாதுகாப்பு அமைப்பினர்.

புதிய சட்டவிதியின்படி, பாரம்பரிய முறைப்படி விதைகளை பகிர்ந்தால் டான்சானிய விவசாயிகள் 12 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்கவோ அல்லது, 2 லட்சத்து 5,300 பவுண்ட்ஸ் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஒரு நாளுக்கு 2 டாலருக்கும் குறைவான சம்பளத்தை பெறும் டான்சானிய விவசாயிகளுக்கு இந்த அபராதத்தொகை கனவில் கூட காண இயலாதது.

சர்வதேச ஊடகங்களில் இச்செய்தி பெரிய இடத்தை பெறாவிட்டாலும், உணவுரிமைக்காக போராடக்கூடிய பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இது குறித்த செய்திகளை சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களாக பகிர்ந்து வருகின்றனர்.

2012-இல் ஜி-8 நாடுகளின் NAFSN எனப்படும் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான புதிய கூட்டமைப்பு உலகில் ஏழ்மையால் உழலும், பசியால் அவதிப்படும் 50 மில்லியன் மக்களின் நலன் சார்ந்த புதிய முடிவை எடுத்ததாகவும், அதனையொட்டியே டான்சானிய அரசு இந்த புதிய சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விதைகளின் அறிவுசார் சொத்துரிமைக்கு அனுமதி அளித்ததன் மூலம், UPOV 91 கூட்டமைப்பில் இணைந்த முதல் வளர்ச்சி குன்றிய நாடு என்ற சிறப்பை டான்சானியாவிற்கு அளிக்கப்பட்டுள்ளது.

50 மில்லியன் மக்களின் பசியை போக்கக் கூடியதாக சொல்லப்படக்கூடிய இந்த நடவடிக்கை உணவுக்காக டான்சானியாவை ஜி-8 நாடுகளிடம் கையேந்த வைத்துவிடும் என விதைகள் பாதுகாப்பு அமைப்பு கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

தொழில்நுட்பத்தை சிறப்பான முறையில் ஆப்ரிக்க ஏழை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையிலேயே டான்சானியா அரசால் இந்த முற்போக்கு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிங்கெண்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

நன்றி: நியூசு 7 தமிழ்...

இந்திய அரசு கொக்க கோலா என்ற அந்நிய பெருநிறுவனத்திற்கு விளை நிலங்களையும் விவசாயத்தையும் தாரைவாரத்திருப்பது பல ஆயிரம் கோடிகளை அவர்கள் விவசாயத்தில் முதலீடு செய்ய அனுமதித்திருப்பது நாளை நம்மை எப்படி எல்லாம் பாதிக்கும் என்று கொஞ்சம் ஊகித்துப் பாருங்கள், நம்மை ஆள்வது அரசு தானா என்ற கேள்விக்கு விடை காணுங்கள்...

இந்தியா ஜனநாயக நாடு.. சட்டம் அனைவருக்கும் சமம்.. நம்புங்கள்...


2017 நீட் தேர்வு தொடர்பான எந்த வழக்கையும் உயர் நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது - உச்சநீதிமன்றம்...

நீதி வேண்டுவோர் நீதி மன்றத்தை நாடுவது இயல்பான ஒன்று, அது தான் முறையும் கூடா...

ஆனால் உச்ச நீதிமன்றமே கிழை நீதி மன்றங்களுக்கு நீட் தேர்வு குறித்தான எந்த வழக்குகளையும் ஏற்றுக்கொள்ள கூடாது என உத்தரவு போடுவது அயோக்கிய தனம்..

பாஜக அரசாங்கத்தின் மற்றுமோர் சர்வாதிகார போக்கு, இது நாட்டு மக்களுக்கு பாஜக அரசாங்கம் செய்யும் பச்சை துரோகம்...

இந்து மக்கள் கட்சி மலையாளி அர்ஜுன் சம்பத்...


உண்மையான பொருளாதாரம் இது தான்...


நம்ப முடியாத உண்மைகள்...


வேண்டாம் ரஜினி, 'ரஜினி ரசிகன்' இதழ் ஆசிரியர் துரை...


ரஜினிக்கு,

ரஜினி ரசிகன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் துரை எழுதுவது..

தங்களோடு நேரில் பேசிப் பழகியவன் என்ற முறையில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன். வீட்டில், படப்பிடிப்பில் விழாக்களில், எப்போதுமே தாங்கள் பதற்றம் நிறைந்தவராகவே காணப்பட்டீர்கள்.

கொடி பறக்குது, படப்பிடிப்பின் போது வெள்ளை பேண்ட்டில் இருந்து, காக்கி பேண்ட்டிற்கு மாறியபடி என்னிடத்தில் பேசினீர்கள். அந்த எளிமை எனக்கு பிடித்திருந்தது.

தங்களது இமேஜை காப்பாற்றி கொள்ளக்கூட பொய் சொல்லத் தெரியாதவர்கள் நீங்கள். என்னை பொறுத்தவரை அடிப்படையிலேயே 'யூவார் எ டிஸ்டர்ப்டு சைல்டு' எப்போதுமே பதற்றம் நிறைந்தது. தங்கள் நடவடிக்கை என்பது எனது பார்வை.

தவிர்க்கவே முடியாமல் எம்.ஜி.ஆரை குறித்து சில விஷயங்களை பேசியாக வேண்டும். பள்ளிப் பருவத்திலேயே வறுமை, பசி, பட்டினியை அறிந்தவர் கஷ்டமறிந்து பலருக்கு உதவியவர்.

தனது 20 வயதிற்குள்ளாகவே அரசியல் குறித்து அவருக்கு ஒரு கனவு இருந்தது. அதற்காக திட்டமிட்டு கட்சியில் இணைந்தார். தனது படங்களில் வசனங்களில் பாடல்களில் கட்சி கொள்கையை பரப்பினார்.

அவரது படங்களில் அவரது பெயரே கூட உதயசூரியன், கதிரவன் இப்படி இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.

5 ரூபாயிலிருந்து வசூலிக்க கூட்டங்களில் பங்கேற்றார். தலைவர்களோடு பேசிப் பழகினார்.

நடித்து சம்பாதித்த பணத்தை உதவி வள்ளல் என்று பெயர் எடுத்தார். கட்சியில் தன் முக்கியத்துவத்தில் எப்போதுமே கவனமாக இருந்தார். அமைச்சரவையை தீர்மானிக்கும் சக்தியாக கூட இருந்தார்.

தி.மு.கவிற்கும் அவரது ரசிகர் பட்டாளம் பலமாக விளங்கியது.

கட்சியில் இருக்கும்போதே சில மாறுபட்ட அதிரடி கருத்துக்களை முன்வைத்து தன் பலத்தை சோதித்து பார்த்தவர், எம்.ஜி.ஆர்.

இதையெல்லாம் தாண்டி நாடோடி மன்னன் படத்திலேயே தனது அரசியல் ஆட்சி கருத்துக்களை ஆழமாக மக்கள் மனதில் பதிவு செய்தார்.

பெண்களின் வாக்கு வங்கி எம்.ஜி.ஆரைப் போல சாதகமாக வேறு யாருக்கும் இருந்ததில்லை.

கண்ணதாசன், ஜெயகாந்தன் போன்றவர்களின் தொடர் பிரச்சாரத்தால் கூட இதைக் கலைக்க முடியவில்லை.

96ல் உங்களுக்கு இருந்த செல்வாக்கு வேறு; இப்போதைய நிலவரம் வேறு;

திரையுலகில் பாட்ஷா தான் உங்களது உச்சம்.

அதற்கு பின் வந்த படங்கள் எல்லாம் ஊதிபெருக்கி காட்டப்பட்டவையே. இன்றைக்கு.

இதற்குள் உங்களுக்கும், உங்கள் ரசிகர்களுக்குமே கால இடைவேளி, வயது எல்லாம் மாறி விட்டது.

நீங்கள் கார்ட்டூன் கேரக்டராக மாறி விட்டீர்கள்.

அதன் உச்சபட்சம் தான் கோச்சடையான் படுதோல்வி.

ஜெயலலிதாவின் மறு எழுச்சிக்கு பின் உங்களுக்கு அரசியலில் கடந்த 10 ஆண்டுகளில் இடமேயில்லை.

உங்களுக்கு பின் அரசியலில் குதித்த விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்து சரிந்து விட்டார்.

சினிமா வியாபாரத்தில் உங்களது பழைய பிம்பத்தை வைத்து சுமாரான பிசினஸ் இருக்கு. அதை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

நீங்கள் அரசியல் தெரிந்து கொள்வது யாரிடம் வைரமுத்து விடம் தானே.

அவரால் தனது சொந்த ஊரில் ஒரு வார்டு கவுன்சிலராகக் கூட முடியாது.

அரசியலில் இரவல் மூளை பயன்படாது.

எம்.ஜி.ஆர். ஒரே நாளிதழை இரண்டு பேரை படிக்கச் சொல்லி கருத்துக் கேட்டு மூன்றாவதாக தனதாக ஒன்றை உருவாக்கி படிக்கப்பட்டவர்.

கட்சி தொடங்கி 6 மாதத்தில் இடைத் தேர்தலில் தனது வேட்பாளரை வெற்றி பெறச் செய்தது எம்.ஜி.ஆரின் பலம் மட்டுமல்ல; கருணாநிதிக்கு அப்போதிருந்த அதிகாரமானதை ஆளாவதும் கூட.

இருபத்தி நாலுமணி நேரமும் எல்லோருடனும் இருந்தாலும் எம்.ஜி.ஆர் எப்போது எதைச் செய்வார் என்ன அறிவிப்பார் என்று கூட இருந்தவர்களுக்கு புரியாத புதிராக இருந்தவர், அவர் உண்மையிலேயே லஞ்சம், ஊழலுக்கு எதிராக 2 ஆண்டு ஆண்டார்.

அந்த ஆட்சி கவிழ்ந்த பின் பணமில்லாமல் அரசியல் பண்ண முடியாது என்று அவர் சரிந்தது தான் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, இத்தனை பொறியியல் கல்லூரி.

இதையெல்லாம் தாண்டி, அவரிடம் ஏழை மக்களிடம் தணியாத அக்கரையும், கனிவும் இருந்ததை பல சாட்சிகளோடு சொல்ல முடியும்.

உங்களது 67 வயது வாழ்க்கையில் அதற்கான சிறு வெளிப்பாடு கூட பார்த்ததோ, கேட்டதோ இல்லை.

அமிதாப் பச்சன் போல வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடியுங்கள்; சம்பாதியுங்கள்; சந்தோஷமாக இருங்கள்.

அரசியலுக்கு அடிப்படை தேவை, பொறுமை அது உங்களிடம் எப்போதுமே இருந்தது கிடையாது. இதுவரை பொறுமையாகத் தானே இருந்தார் என்று சொல்லலாம். இதுவரை அவரிடம் இருந்தது பயம். பொறுமையல்ல. ஜெயலலிதா இல்லை. சசிகலா, தினகரன் சிறையில், இரட்டை இலை முடக்கப்பட்டு விட்டது. அதிமுக இரு அணிகளாக உள்ளது. இதுதான் தருணம் என்று பயம் கலைந்து இருக்கிறார் என்பதே உண்மை.

உங்கள் பெயரையே ஒரு தாளில் நூறு முறை எழுதச் சொன்னால் அந்த தாளை கிழித்து எறிந்து விடக் கூடியவர், நீங்கள்.

பாபா பட வெளியீட்டிலேயே ஸ்டிக்கர், டிசர்ட், கீ செய்ன் விற்பனையில் ஈடுபட்ட உங்கள் மனைவியை தட்டிக் கேட்க முடியாதவர் நீங்கள்.

ஐ.நா. சபையிலே உங்கள் மகளை பரத நாட்டியம் ஆட வைத்தீர்களே. அது ஒன்று போதும் தமிழர்களுக்கலைக்கும் நீங்கள் செய்த புண்ணியம்.

தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான். இது பஞ்ச் டயலாக் அல்ல; தமிழர்களின் முதுமொழி.

பச்சைத் தமிழன்னு அறிவிச்சச மேடையிலேயே தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ் தரமாக இருக்கிறாங்கண்ணு பேசினீங்க.

அதே ஒரு சீமானோ, பாரதிராஜாவோ, சரத்குமாரோ இருந்தா..

நம்மாளுங்க ஏன் இப்படி கீழ் தரமாக இருந்தாங்கன்னு பேசியிருப்பாங்க.

உங்கள் உள்ளத்தில் உள்ளதே உதட்டில் வந்தது.

எதிர்ப்பு மூலதனம் என்று ஆயிரம் பேர் முன்னால பேசி கைதட்டல் வாங்கலாம். நடைமுறைக்கு சாத்தியமல்ல.

எம்.ஜி.ஆர். உயிருக்கு குறி வைக்கப் பட்டது, அதையும் மீறி அவர் ஜெயித்தார்.

காலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும். நல்ல ஆசிரமம் அமைச்சு கடைசி காலத்துலேயாவது தான தர்மம் பண்ணுங்க.

போகிற வழிக்கு புண்ணியம் சேரும்.

போங்க ரஜினி போங்க பேரன் பேத்திகளோட விளையாடி சந்தோஷமா இருக்குற உங்க ரசிகர்களை நிம்மதியா வாழ விடுங்க.

ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு நினைச்சி குதிச்சிராதீங்க..

அன்புடன்,
துரை,
ஊடகவியலாளன்...

பாஜக வுக்கு நடிகர் விஜய் கொடுத்துள்ள செருப்படி...


வல்லரசு நாடாக அப்புறம் மாறலாம்.. முதலில் விவசாயிகளுக்கு ஒரு நல்ல நாடா இந்த அரசு மாற வேண்டும் - நடிகர் விஜய்...

விவசாயிகளை இந்த அரசு கண்டு கொள்வதில்லை - நடிகர் விஜய் காட்டம்...


இந்தியா வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளட்டும்..

முதலில் நல்லரசாக மாற வேண்டும்..

விவசாய பிரச்சனைக்கு அவசரமான அவசியமான தீர்வு வேண்டும்..

நாம் நன்றாக உள்ளோம், ஆனால் உலகிற்கே சோறு போடும் விவசாயிகள் நிலை நன்றாக இல்லை..

முன்று வேலை உணவு கிடைப்பதால் அதன் அருமை நமக்கு தெரிவதில்லை..

ஆனால் அரிசியை விளைவிக்கும் விவசாயிகள் ரேஷனில் இலவச அரிசிக்கு நிற்பது இந்த நாட்டிற்கு பெருத்த அவமானம்..

விவசாயிகளின் வலிகளை உணராவிட்டால் எப்படி இந்த நாடு வல்லரசாகும்?

இப்படியெல்லாம் சொல்வதற்கு ஒரு கெத்து வேணும்...

இதெல்லாம் புதுசா பச்சைத்தமிழன் வேசம்போட்ட நடிகருக்கெல்லாம் வராது...

இந்தி மொழி கற்றால் உடனடி வேலை. தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் - மத்திய பாஜக மோ(ச)டி அரசு...


திமுக தெலுங்கர் ஸ்டாலினும் ஏமாற்று வேலையும்...


ஐ.நா. மனித உரிமை கவுன்சிலை வைத்து ஈழ வியாபாரம் செய்து தமிழ்தேசிய விழிப்புணர்வை திசை திருப்பும் முயற்சி...

ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் நடக்கவே நடக்காத ஒரு கூட்டத்திற்கு, மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டது போலவும், தமிழ்நாட்டில் சட்டமன்றம் கூடுவதால் அதற்கு வர இயலவில்லை என அவர் மறுத்ததாகவும் - ஒரு மிகப்பெரிய மோசடி நாடகத்தை திமுகவினர் நடத்துகின்றனர்.

இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை - ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை ஆணையாளருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடக்காத கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லையாம்..

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை (இக்கூட்டத்தின் நிகழ்ச்சிநிரலை இணைப்பு படத்தில் காண்க.1).

இப்படி இல்லவே இல்லாத ஒரு கூட்டத்தில் 'தான் கலந்து கொள்ள இயலவில்லை' என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் 'காமெடி' கடிதம் எழுதியுள்ளார்.

கூடவே மேலும் ஒரு கருத்தையும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்..

இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தின் இந்த முக்கியமான 35வது அமர்வில், ஈழத்தமிழர்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவும் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன் என்று மு.க. ஸ்டாலின் தனது 'அண்டப்புளுகு' அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சி நிரலிலேயே இல்லாத கற்பனை கூட்டத்தால் எப்படி நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பது மு.க. ஸ்டாலினுக்கே வெளிச்சம்.

உண்மையில் நடப்பது என்ன?

ஈழத்தமிழர் சிக்கலோ இலங்கை விவகாரமோ இப்போதைய 35 ஆவது கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவே இல்லை. அடுத்து ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தில் தான் இலங்கை விவகாரம் விவாதிக்கப்படவுள்ளது.

அதுவரை பேரவையின் பிரதானக் கூட்டத்தில் ஈழச்சிக்கல் பேசப்பட வாய்ப்பு இல்லை.

ஐநா மனித உரிமைப் பேரவையில் அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா அமைப்புகள் NGO துணைக் கூட்டங்களை நடத்த அனுமதி உண்டு.

இது போன்ற பலக்கூட்டங்களை ஐநா மனித உரிமைகள் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பு நடத்தியுள்ளது.

இவ்வாறான கூட்டங்கள் அனைத்தும் அரசு சாரா அமைப்புகளின் முழுக்கட்டுப்பாட்டில் அவர்களே நடத்தும் கூட்டங்கள் ஆகும்.

இக்கூட்டங்களுக்கு யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம்.


அது போல Tamil Uzhagam எனும் ஒரு NGO அமைப்பின் சார்பில் ஜூன் மாதம் 19 ஆம் தேதி இலங்கையில் மனித உரிமை எனும் கூட்டத்துக்கு கூட்ட அரங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது (இணைப்பு படத்தில் காண்க.2).

இக்கூட்டத்துக்கு இதே Tamil Uzhagam NGO அமைப்பினால் மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டுள்ளார். இதற்கும் ஐநா மனித உரிமை பேரவைக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை.

மருத்துவர் அன்புமணியும் மு.க. ஸ்டாலினும்..

கடந்த மார்ச் மாதம் (2017) மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள், ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆம் கூட்டத்தில், ஐநா மனித உரிமைகள் ஆணையரின் முன்பாக, பேரவையின் தலைவர் அழைப்பின் பேரில் இலங்கை மீதான நேரடி விவாதத்தில் பங்கேற்று பேசினார்.

இது போன்ற ஐநா மனித உரிமைப் பேரவையின் நேரடி விவாதத்திற்கு மு.க. ஸ்டாலின் அழைக்கப்படவில்லை.

மாறாக, ஒரு அரசு சாராத NGO அமைப்பின் பிரத்தியோக கூட்டத்திற்கு தான் மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டார்.

NGO அமைப்பின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட மு.க. ஸ்டாலின், அதில் கலந்துகொள்ள இயலவில்லை என்றால், அந்த Tamil Uzhagam NGO அமைப்புக்குத் தான் பதில் சொல்ல வேண்டும்.

அதை விடுத்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறுவதன் மூலம் - ஐநா அவைக் கூட்டத்திற்கே அவர் அழைக்கப்பட்டத்தைப் போன்று, ஒரு போலியான மோசடி தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.


தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரே இப்படி போலியான கட்டுக்கதைகளை வெளியிடுவது தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும்.

படம்:

1. ஐநா மனித உரிமைப் பேரவையின் 35ஆம் கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இல்லை.

2. ஸ்டாலின் அழைக்கப்பட்ட Tamil Uzhagam NGO துணை நிகழ்ச்சி விவரம்...