18/03/2019

மூட்டு வலி - மூட்டு தேய்மானம்....


மூட்டு வலி வரக்காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்...

1) மூட்டழற்சி(osteo arthritis): இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

2) முடக்குவாதம் (rheumatoid arthritis):  இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

அறிகுறிகள்...

மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.

முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும்.

மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம்...

முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.

முடக்குவாதம் சில கிருமிகளினாலும், கோர்மோன் (hormone) எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும்.

பரம்பரை ரீதியாகவும் மூட்டுத் தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்...

1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5. ஒரு தேக்கரண்டி குதிரைமசால் (இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6. இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேசைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை தோடம்பழம் (ஆரஞ்சு) சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7. ஒரு மேசைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப்பழக்கம்: வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.

காய்கறி சூப்(கஞ்சி) அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட் (carrots),சீமை சர்க்கரைவள்ளிக் கிழங்கு (பீட்ரூட், beetroot) போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்

தவிர்க்கவேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்...

டிடிவி. தினகரன் தேனியில் போட்டியிட்டு ஓபிஎஸ் மகனை தோற்க்கடிக்க அதிரடி திட்டம்...


https://youtu.be/Kjzj7HXuIFQ

Subscribe The Channel For More News...

துவால் என்றால் என்ன.?


எழுதுகோல் என்று தூய தமிழில் எத்தனை பேர் சொல்கிறோம். நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், கருத்துகள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் பதிவுக் கருவி, பேனா. அது தோன்றிய விதம் தெரியுமா?

இன்று நாம், பயன்படுத்துவதற்கு எளிதான பேனாக்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் ஆரம்ப காலத்தில் அப்படி இல்லை. பேனாவுக்குப் பல நூற்றாண்டு வரலாறு உண்டு என்பது ஆச்சரியமான விசயம். ‘லத்தீன்’ மொழியின் ‘பென்னா’ என்றால் ‘பறவையின் இறகு’ என்று பொருள். ‘பென்னா’ என்பதே ஆங்கிலத்தில் ‘பென்’ என்றும், தமிழில் ‘பேனா’ என்று மாறியது. 5ம் நூற்றாண்டில் ‘இறகுப் பேனா’ வழக்கத்துக்கு வந்தது.

அது 18ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

1780ல் சாமுவேல் ஹாரிசன் என்பவர் உருக்கினால் ஆன பேனாவைத் தயாரித்தார்.

1809ல் ஜோசப் பிராமா என்பவர், பறவையின் இறகை, தற்போதுள்ள வடிவில் வெட்டி ‘நிப்’பை உருவாக்கும் கருவியைத் தயாரித்தார். ஜான் ஹாக்கின்சு என்பவர் மாட்டுக்கொம்பு, ஆமை ஓடு ஆகியவற்றைக் கொண்டு ‘நிப்’ செய்தார். ‘நிப்’ன் முனையில் ‘இரிடியம்’ வைக்கும் பழக்கம் 1882ல் வந்தது. அதே ஆண்டு ஜான் மிட்சல் என்பவர் எந்திரத்தினால் செய்யப்பட்ட உருக்கு ‘நிப்’பை கண்டுபிடித்தார்.

1859ல் முதல்முறையாக ‘ஊற்றுப் பேனா’ (‘பவுண்டன் பென்’) காப்புரிமை பதிவு செய்யப்பட்டது. 1883ம் ஆண்டில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வாட்டர்மேன் என்பவர் அனைவரும் பயன்படுத்தத்தக்க ஊற்றுப் பேனாவைத் தயாரித்தார்.

அனைத்திலும் தமிழர்கள் நாம் முன்னோடி என்பதில் சந்தேகம் இல்லை. நம்முடைய இலக்கியங்கள், புராணங்களில் இருந்து பல தகவல்கள் மேலை நாட்டு அறிஞர்களால் எடுக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டு உள்ளது.

உதாரணம், நமது ராமாயணத்தில் ராவணன் சீதையை கடத்திக் கொண்டு செல்ல புட்பக விமானத்தை பயன்படுத்தினான். இந்த தகவல் தான் தற்போதைய விமானத்திற்கு முன்னோடி என்பது எனது தாழ்மையான கருத்து.

அதைப்போன்றே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே குத்தாணியை பயன்படுத்தி பேனாவிற்கு அடிகோல் வகுத்தது தமிழர்களாகிய நாம் தான் என்பதில் பெருமையே.பாரத தேச பிதா காந்தியே தன் கையால் தமிழில் எழுதியிருக்கிறார்.

தமிழர்களே தமிழைத் தமிழில் எழுதுங்கள்...

அரசியல் வியாபாரி வைகோ நாயூடு கலாட்டா...


சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி....


இனி வகை (type)1 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் தேவையில்லை.

அடுத்த மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள் டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் போடுவதிலிருந்து நிரந்தரத் தீர்வு கிடைக்கப் போகிறது. உலகில் முதன்முறையாக இந்தச் சாதனையை செய்யப் போவது சென்னை வைத்தியர் (doctor) ஒருவர்.

டைப் 1 சர்க்கரை நோய் எந்த வயதினரையும் பாதிக்கும், குறிப்பாக குழந்தைகளை. இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக் கணக்கான குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் வகை 1 சர்க்கரை நோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டால் அன்றிலிருந்து வாழ்க்கை முழுவதும் இன்சுலின் ஊசி இல்லாமல் வாழ முடியாது. ஆனால், இனி வகை சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியம் இருக்காது. இது எப்படிச் சாத்தியம்?

விளக்கினார் வைத்தியர் விசய் விசுவநாதன்...

"கணையத்தில் உள்ள இன்சுலினைச் சுரக்கும் கலங்கள் அழிந்து போவதால் வகை 1 வகை சர்க்கரை நோய் வருகிறது. பல நேரங்களில் கணையத்தில் உள்ள 80 சதவிகித செல்கள் அழிந்த பிறகே தெரிய வரும். இதுபோன்ற நேரங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 6 லிருந்து 20 வயது வரை உள்ளவர்கள் வருவார்கள்.

அதன்பிறகு இன்சுலின் அவர்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒன்றாகிவிடும். ஆனால், இந்த கலங்கள் எதனால் இப்படி அழிந்து போகின்றன என்பது தெரியவில்லை. இதற்கு மரபியல் காரணி காரணமாக இருக்கலாம்.

கடந்த 40 ஆண்டுகளாக உலகம் முழுவதும் புதிது புதிதாக இன்சுலின் வந்திருக்கிறது. இன்சுலினைப் போட்டுக்கொள்ளும் முறையிலும் பல வகைகள் உள்ளன. ஆனால், இன்சுலின் இனி தேவையில்லை என்ற நிலை இப்போதுதான் வந்திருக்கிறது.

அமெரிக்காவில் சிகாகோவில் உள்ள இலினோயஸ் (illinnois) பல்கலைக்கழக மருத்துவத்துறை விஞ்ஞானிகள் தொப்புள் கொடியிலிருந்து எடுக்கப்படும் ரத்தத்தை (cord blood) நேரடியாக கணையத்தில் செலுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சுண்டெலிகளை வைத்து செய்த ஆய்வில் 100 சதவிகிதம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், வகை 1 பாதித்த எந்த நோயாளிக்கும் அவர்கள் பரிசோதனை செய்யவில்லை.

அதை சென்னையில்தான் முதலில் செய்யப் போகிறோம். 120 மி.லி. தொப்புள் கொடி ரத்தத்தை ஊசி மூலம் ஒரு தடவை செலுத்தினால் போதுமானது. ஸ்டெம் செல்கள் நிரம்பிய இந்த ரத்தம் அழிந்து போன கணைய செல்கள் புதுப்பிக்கப்பட்டு, பழையபடி உடலுக்குத் தேவையான இன்சுலின் சுரக்க ஆரம்பித்துவிடும்.

இதில் இன்னொரு விசயம், யாருடைய ரத்தத்தையும் யாருக்கும் செலுத்தலாம். ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள லைஃப்செல் (ஸ்டெம்) செல் வங்கி எங்களோடு இணைந்து செயல்படப் போகிறது.

8லிருந்து 12 வயது வரை உள்ள டைப் 1 பாதித்த குழந்தைகளுக்கு இதைச் செய்ய உள்ளோம். இதற்கான அனுமதியைக் கேட்டு மத்திய சுகாதாரத் துறையிடம் விண்ணப்பித்து இருக்கிறோம். கூடிய விரைவில் அதற்கான அனுமதி கிடைத்துவிடும். இன்னும் ஆறு மாதங்களுக்குள் வகை 1 பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தன் முயற்சி பற்றி முதன்முறையாக ‘புதிய தலைமுறை’யிடம் இப்படி விளக்கினார் வைத்தியர் விஜய்.

வியப்போம் டாக்டர் விசய் விசுவநாதன் சர்க்கரை நோய் ஆராய்ச்சியில் உலக சுகாதார மையத்துடன் இணைந்து செயல்படும் ராயபுரம் எம்.வி. டயாபடிக் மையத்தின் தலைவர். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சர்க்கரை நோய் எப்படி சிறுநீரகங்களைப் பாதிக்கிறது என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்து 1999ல் பிஎச்.டி. பட்டம் பெற்றவர்.

சர்வதேச அளவில் வெளியாகும் பல மருத்துவ இதழ்களில் இதுவரை 200 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் தயாரித்த டயாசிலிப் என்ற காலணி இன்று பல சர்க்கரை நோயாளிகளின் பாதங்களைப் பத்திரமாகப் பாதுகாக்கிறது.

லண்டனில் உள்ள ராயல் மருத்துவக் கல்லூரியில் எம்.ஆர்.சி.பி. படித்தால்தான் மேல்நிலைப் படிப்பான எப்.ஆர்.சி.பி. படிக்க முடியும். ஆனால், வைத்தியர் விசய்க்கு அவர் சர்க்கரை நோய் மருத்துவத்தில் இத்தனை ஆண்டுகள் செய்த பல்வேறு ஆராய்ச்சியை கௌரவிக்கும் பொருட்டு எப்.ஆர்.சி.பி. கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது...

அடுக்கு மொழியில் ரைமிங்கில் மிமிக்கிரி செய்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த டி.ஆர்...


https://youtu.be/x-Os-jp_WGU

Subscribe The Channel For More News...

பல அதிசயங்களை கொண்டதே மனித உடலாகும்...


நுரையீரலில் 300,000 மில்லியன் இரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் கோர்க்கப்பட்டால், அதன் நீளம் 2400 கிலோமீட்டராக (1500 மைல்) ஆக இருக்கும். ஒரு ஆணின் உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உருவாகின்றன. அவர் மட்டுமே ஒரு முழு கிரகத்தின் மக்கள் தொகையை 6 மாதங்களில் நிரப்ப முடியும்.

மனிதன் தூங்கிக்கொண்டிருக்கும் போது, அவருடைய உயரம் 8mm அதிகரிக்கும். தூங்கி எழுந்த பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார். இதற்கு காரணம், மனிதன் உட்காரும்போது, அல்லது நிற்கும் போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்ப்படும் அழுத்தமாகும்.

ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (FILTERS) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் இரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது. மனிதன் தன் வாழ்நாளில் தோராயமாக 50 டன் உணவையும், 50,000 லிட்டர் நீராகாரத்தையும் உட்கொள்கிறான்.

கண்களின் தசையானது ஒரு நாளில் 100,000 முறை அசைகிறது. அதற்க்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் நடக்க வேண்டும். ஒரு சராசரி மனித உடல் 30 நிமிடங்களில், அரை கேலன் தண்ணீரை கொதிப்பதற்க்கு தேவையான வெப்பத்தை கொடுக்கிறது.

ஒரு பெண்ணின் கருப்பையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கரு முட்டை செல்கள் இருந்தாலும் 400 அல்லது சற்று மேற்ப்பட்ட செல்களுக்கு மட்டுமே புதிய உயிரை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். மனிதனின், ஒரு தனித்த ரத்த அணு, மனிதனின் முழு உடலையும் சுற்றி வர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும். மனித உடலின் மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும்.

மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சராசரி பெண்ணின் உயரம், ஒரு சராசரி ஆணின் உயரத்தை விட 5 இஞ்ச் குறைவாகும்.

காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும். ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளை கொண்டிருக்கும். ஒரு மனிதனின் ஒரு ஜோடி பாதங்களில் 250,000 வியர்வை சுரப்பிகள் உள்ளது.

மனிதனின் வயிற்றில் உள்ள செரிமான அமிலமானது துத்தனாகத்தையே கரைக்கும் சக்தி கொண்டது. ஒரு மனிதன் மூளையில் பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை போல் ஐந்து மடங்கு தகவல்களை சேமித்து வைக்க முடியும்.

மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு, மார்பில் மூடியுள்ள ஆண்களை விட “CIRRHOSIS” (ஈரல் நோய்) என்ற நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம். பற்களின் எனாமல் தான் மனித உடலில் உள்ள கடினமான பொருளாகும்.

கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும். மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பாக்டீரியாக்கள் இருக்கும்...

மானங்கெட்ட கிருஷ்ணசாமி...


குங்குமத்தின் சிறப்பு......


பெண்கள் நெற்றியில் அணியும் குங்குமத்தின் சிறப்பு......

பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப் பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்றியில் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக் கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது.

மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது.

மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது. அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் தங்கள் நெற்றியில் குங்குமம் அணிகிறார்கள்...

பாமக வின் அசாத்திய துணிச்சல்..


7 தொகுதியிலும் திமுக வை நேருக்கு நேராக எதிர்த்து போட்டி...

https://youtu.be/mHL80r-G5u4

Subscribe The Channel For More News...

தமிழினத் துரோகி திமுக வால் உருவாக்கப்படுவர் தான் வேல்முருகன்...


தமிழர் விஜய் லைக்கா நிறுவனத்தில் நடித்த படத்தை மட்டும் எதிர்த்த வேல்முருகன்...

மராட்டிய ரஜினி படத்தையோ...
திமுக லைக்கா தொழிலை பற்றியோ..
ஜெயலலிதா லைக்கா கூட்டு பற்றியோ..

பேசியதும் இல்லை... எதிர்த்ததும் இல்லை...

தமிழகத்தில் எந்த தமிழர் கட்சிகள் வளர்ச்சி அடைகிறதோ.. அதை எதிர்ப்பது மட்டும் தான் இவரின் வேலை...

ஏனெனில் தற்போது வைகோ, திருமா பற்றி தமிழக மக்களுக்கு நன்கு தெரிந்து விட்டது...

திருமா, வைகோ இருவரும் தமிழினத் துரோகிகள்.. சாதி, மத சண்டை தூண்டி விட்டு பிழைப்பவர்கள் என்று...

ஆகையால் தான் இவர்களுக்கு மாற்றாக திமுக வேல்முருகனை உருவாக்கிக் கொண்டிருக்கிறது..

வேல்முருகனுக்கு உண்மையில் தமிழர் நலனில் அக்கறை இருந்திருந்தால் ஈழத் தமிழர்களை அழித்த காங்கிரஸ், திமுக வோடு கூட்டணி வைத்திருக்க மாட்டார்...

டிடிவி. தினகரன் அல்லது சீமானுடன் கூட்டணி வைத்திருப்பார்...

வேல்முருகனுக்கு தேவை பணம் பணம் பணம் மட்டுமே...

துரோகம் என்பது வேல்முருகனின் இரத்ததிலே உள்ளவை தான்... ஆகையால் இதை எதிர்பார்த்தது தான்...

இந்த 5 எண்ணைகளை சமையல்களுக்கு பயன்படுத்தாதீங்க... மீறினால் இந்த அபாயம் நிச்சயம்...


https://youtu.be/tOI9rDr9Vxk

Subscribe The Channel For More News...

தமிழினத் துரோகி தவாக வேல்முருகன்...


இதுதான் சூரியன்.....


அண்டவெளியில் நம் சூரிய குடும்பத்தின் ஆதரமாக விளங்கும் சூரியனை குறிக்கும் கிழமை, ஞாயிற்றுக்கிழமை. நமது பூமியில் உயிர்களுக்கு மூலாதாரமே சுரிய ஒளி ஆகும்.சூரியன் பெருமளவு ஐதரஜன் (சுமார் 74%) மற்றும் ஈலியம்(24%) ஆகியவற்றையும், சிறிதளவு, இரும்பு, சிலிக்கன் நிக்கில், கந்தகம், ஒட்சிசன் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

இது காந்த ஆற்றல் மிகுந்த நட்சத்திரம் என் கண்டறியப்பட்டுள்ளது. சூரியமரு,(sunspot), சூரியஎரிமலை (solar flare), சுரியசுறாவளி (solar winds), ஆகிய விளைவுகளை சூரியனின் காந்தப்புலம் ஏற்படுத்துகிறது.

இந்த விளைவுகள் கதிரணு உயிர்ப்பு (solar activity) என்று கூறப்படுகிறது. சூரியன் தோராயமாக 25000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள விண்மீன் மண்டல மையத்தை சுமார் 225 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது.

இந்த தகவல்கள் நவீன கணித முறைப்படி கண்டறியப்பட்டுள்ளது...

நம்பிக்கையுடன் கூட்டணிக்காக காத்திருந்த டிடிவி. தினகரன்.. கழட்டி விட்ட வேல்முருகன்...


https://youtu.be/jgvtqquSXmE

Subscribe The Channel For more News...

இயற்கை வாழ்வியல் முறை...


இயற்கை சார்ந்த வாழ்வியல் என்றால் என்ன... அதன் அவசியங்கள் என்ன ?

அதனை திரும்ப அடையும் வழிகள் என்னென்ன ?

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தொல் தமிழர்கள் ஒரு காலகட்டத்தில் நாகரீகம் அடையத் தொடங்குகின்றனர். அப்போது அவர்கள் முதன் முறையாக நிலையான, சமூக வாழ்வை மேற்கொள்கின்றனர். இந்த சூழ்நிலையில் இதனை ஒட்டி அவர்கள், தனி மனித அளவிலும்,சமூக அளவிலும் பல பிரச்சனைகளை எதிர் கொள்ளத் தொடங்குகின்றனர்.

இவ்வாறு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இத்தகைய பிரச்சனைகளுக்கு, தீர்வுகளை தேடி பின்வருமாறு தேடல்களும், ஆராய்ச்சிகளும் தொடங்குகின்றன.

முதலில் அவர்கள் இயற்கையை கூர்ந்து கவனிக்கத் தொடங்குகிறார்கள்.பிறகு மெல்ல மெல்ல இயற்கையைப் பற்றி நல்ல புரிதல் ஏற்படுகின்றது.

மனிதனால் அடிப்படையில் எதையுமே புதிதாக படைக்க முடியாது என்பதை அறிகின்றனர். மனிதன் தனது ஒவ்வொரு தேவைகளுக்கும், இயற்கையை நேரடியாகவும், மறைமுகமாகவும் சார்ந்திருப்பதை அறிந்து கொள்கின்றனர்.

உடல் இயங்கத் தேவையான வெப்பம், காற்று, குடிநீர், உணவு ஆகியன இயற்கையிலிருந்தே பெறப்படுவது புரிகின்றது.

இது தவிர மனிதன், தன் செயல்பாடுகளுக்கு பல்வேறு வகையிலும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற சிறிய, பெரிய ஜீவராசிகளை அறிந்தோ, அறியாமலோ சார்ந்திருப்பதை தெரிந்து கொள்கின்றார்கள். இந்த அம்சம் மனிதனை போன்றே, மற்ற எல்லா உயினங்களுக்கும் பொருந்துவது தெரிய வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு உயிரினமும்,பிற உயிரினங்களுடன் கொண்டுள்ள உயிரியல் தொடர்புகளை உணர்ந்து கொள்கின்றார்கள். இவைகளை அடிப்படையாக் கொண்டு,  சமூக வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, இயற்கையிடமிருந்தே பெற முனைகின்றனர்.

மேலும் இதே வழியில், அன்றாட பணிகளை சிறப்பாக செய்து முடிக்கும் வழிமுறைகளையும் கண்டறிகின்றனர்.

இந்த அடிப்படையில் பல ஆண்டுகள் ஆராய்ந்து, நன்கு திட்டமிட்டு தமக்கான வாழ்வியலை வடிவமைக்கின்றனர். அது பல்வேறு துறைகளை உள்ளடக்கி முற்றிலும் இயற்கை சார்ந்ததாக அமைகின்றது.

அவைகள் இயற்கை சார்ந்த வானியல், இயற்கை சார்ந்த உணவுமுறைகள், இயற்கை சார்ந்த மருத்துவம், இயற்கை சார்ந்த வேளாண்மை, இயற்கை சார்ந்த தமிழ் மொழி, இயற்கை சார்ந்த uஉடற்பயிற்சி முறைகள் , இயற்கை சார்ந்த நீர் மேலாண்மை முறைகள், இயற்கை சார்ந்த கலைகள் மற்றும் பிற இயற்கை சார்ந்த அறிவியல் முறைகள் என்றவாறு பட்டியல் நீள்கின்றது.

இவ்வகையான வாழ்வியலை பின்னர், சில ஆயிரம் ஆண்டுகள் வரை சிறப்பாக கடைபிடித்து வந்துள்ளனர். இந்த அமைப்பே இயற்கை சார்ந்த வாழ்வியல் என்பதாகும். இவை அனைத்தும் எந்த வகையிலும் இயற்கைக்கு ஊறு விளைவிக்காத, முற்றிலும் இயற்கை சார்ந்த, அறிவு பூர்வமான வழிமுறைகள் ஆகும்.

சரி, மேற்சொன்னவைகளுக்கு என்ன ஆதாரம் ?.

தமிழில் உள்ள அற இலக்கியங்களின் ஒவ்வொரு வரிகளுமே இதற்கு சான்றாக அமைகின்றன. இவ்வாறான ஒரு அமைப்பு இல்லையென்றால் இப்படியெல்லாம் சிந்தித்திருக்கவே முடியாது.

மேலும் தொல்தமிழர்கள் பல்வேறு துறைகளிலும் இயற்கை சார்ந்து சிறந்து விளங்கியதைக் குறிப்பிடலாம். எஞ்சியுள்ள சான்றுகளாக சென்ற தலைமுறைவரை இருந்த வாழ்வியலைக் கொள்ளலாம். மற்றபடி ஏராளமான ஆதாரங்களை கால ஓட்டத்தில் நாம் இழந்து விட்டோம் ( அப்ப நடுவுல நிறைய பக்கத்த காணோமா?). இனி வருங்கால ஆராய்ச்சிகள் தேவையான ஆதாரங்களை கண்டெடுக்கும் என நம்புவோம்.

ஆனால் வருந்தக் கூடிய விஷயமாக இன்றைய நிலையில் நாம் இயற்கை சார்ந்த வாழ்வியல் என்பதை விடுத்து,இயற்கையை விட்டு விலகிய வாழ்வியல் என்ற நிலையையும் கடந்து, இயற்கைக்கு எதிரான வாழ்வியல் எனும் நிலையை அடைந்து விட்டோம்.

பெருமளவு காடுகளை அழித்து விட்டோம்; ஓசோன் படலத்தில் ஒட்டையை ஏற்படுத்தி விட்டோம்; புவி வெப்பத்தை அதிகரித்து விட்டோம்; எல்லா வகையிலும் இயற்கையை சீரழிக்கத் தொடங்கி விட்டோம்;

இதன் பலனை பல்வேறு நோய்களாகவும், அழுத்தம் நிறைந்த,மகிழ்ச்சி குறைந்த வாழ்க்கையாகவும் நாம் அனுபவித்து வருகின்றோம்; இன்னும் அனுபவிக்க போகின்றோம்.

மேலும் நம் முன்னோர்கள் இயற்கை வளங்கள் நிறைந்த பூமியை நமக்கு பரிசாக கொடுத்து விட்டு சென்றுள்ளனர். ஆனால் நாம் நமக்கு பின்வரும் சந்ததியினர்க்கு, மிக மோசமாக சீரழிக்கப்பட்ட இயற்கை வளங்களைக் கொண்ட ஒரு பூமியினை பரிசாக கொடுக்கும் சூழ்நிலையினை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில், இயற்கை சார்ந்த வாழ்வியல் என்பது இன்றைக்கு மிக அவசியமாகின்றது.

ஆனால் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் நாம், ஒவ்வொரு துறையிலும் Nano technology
என்ற அளவுக்கு மிக நுணுக்கமாக வளர்ந்து வருகின்றோம். இத்தகைய சூழ்நிலையில் இயற்கை சார்ந்த வாழ்வியலைப் பின்பற்றுவது, பல நூற்றாண்டுகள் வளர்ச்சியில் பின்னோக்கி செல்வது போல் ஆகாதா என நீங்கள் கேட்கலாம். நாம் இன்று, வளர்ச்சியில் Nano ( பத்து லட்சத்தில் ஒரு பங்கு ) அளவுக்கு நுணுக்கமாக முன்னேறினால், எதிர் கொள்ளும் பிரச்சனைகள் Tera ( பத்தாயிரம் கோடி ) அளவுக்கு பெருகி விடுகின்றன.

மேலும் இயற்கை ஏராளமான வளங்களை நமக்கு அள்ளி அள்ளி தருகின்றது.இயற்கை அளிக்கும் இத்தகைய எண்ணற்ற நன்மைகளை முழுமையாக பயன்படுத்தி கொள்வதே சிறந்த வாழ்வியலாக அமையும்.வானம் பொழிகின்றது; பூமி விளைகின்றது.நாம் வெறும் பயன்பாட்டாளர்களே.எனவே நம்முடைய உயர்ந்தபட்ச குறிக்கோளே, இயற்கையின் சிறந்த பயன்பாட்டாளர் என்ற நிலையை அடைவதாகத்தான் இருக்க முடியும். இதுதான் நம் வாழ்க்கையை வளப்படுத்தும்; மேலும் இயற்கைக்கு நாம் திருப்பி செலுத்தும் கைம்மாறாகவும் அமையும். ஆகையால் இயற்கை சார்ந்த வாழ்வியல் என்பது தவிர்க்கவே முடியாதபடி அவசியமாகின்றது. இதுவே நம் முன்னோர்கள், இன்றைய வணிகம் சார்ந்த சூழ்நிலையில் நமக்கு விட்டு சென்ற செய்தியாக அமையும் என்றால் அது மிகையாகாது.

சரி, இயற்கை சார்ந்த வாழ்வியலை எவ்வாறு திரும்ப அடைவது? நம் முன்னோர்கள் பல ஆண்டுகள்,பல மனித ஆயுட்காலங்களை செலவழித்து தங்கள் வாழ்வியலை வடிவமைத்தனர். இப்போது அதனை மீட்டெடுக்க, நாமும் அவ்வாறு பல ஆண்டுகளை செலவு செய்ய முடியாது. ஆகவே தொல்தமிழர்களின் வாழ்வியலை தொடர்ந்து ஆராய்ந்து, அதனை சிறிது சிறிதாக நம் வாழ்க்கையில் நடைமுறை படுத்துவது தான் மிகவும் எளிமையான, சிறந்த தீர்வாக அமைய முடியும்.

இவ்வகையில்...

முதல் படியாக நாம் இயற்கையை புரிந்து கொள்ளத் தொடங்க வேண்டும்.

நாம், நம் அன்றாட வாழ்க்கையை சிறிது சிறிதாக இயற்கை சார்ந்து வாழ ஆரம்பிக்க வேண்டும்.

அடுத்த்தாக இதனை சிறு ,சிறு குழுக்களாக இணைந்து சமூக அளவில் நடைமுறைப் படுத்த வேண்டும்.

இன்று நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு தனி மனித மற்றும் சமூக பிரச்சனைகளுக்கும், முன்னோர்களின் வழிமுறைகளை துணைக் கொண்டு, அவற்றுக்கான தீர்வுகளை இயற்கையிலிருந்து பெற வேண்டும்.

நம் முன்னோர்கள் தங்கள் அனுபவ அறிவின் மூலமே இயற்கையின் ஒவ்வொரு கூறுகளையும் உறுதி செய்தனர்.ஒவ்வொரு முறையும், நாமும் நம் அனுபவ அறிவைக் கொண்டு வழிமுறைகளை உறுதி செய்ய வேண்டும்.

இந்த வகையில் நம் முன்னோர்கள் பேரறிவு கொண்டவர்கள்;அவர்களுடன் ஒப்பிடும் போது இன்றைய நிலையில்,நாம் சிற்றறிவு படைத்தவர்களே.எனவே நம் அனுபவத்தால் அறிந்து கொள்ள முடியாத செய்திகளை அறிவியலின் துணை கொண்டு உறுதி கொள்ளலாம்.

இயற்கையை நாம் எவ்வளவுதான் சீரழித்துவிட்டாலும்,மீண்டும் அவற்றை ஓரளவுக்கு புதுப்பிக்க முடியும்.இந்த அடிப்படையில் இயற்கையை அழிவிலிருந்து காத்து, கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையை வளங்களை மேம்படுத்த வேண்டும்.

இந்த முயற்சிகளின், அடுத்தடுத்த கட்டங்களை வருங்காலம் தீர்மானிக்கும் என நம்புவோமாக.

எது எப்படியிருந்தாலும், இன்றைய நெருக்கடி நிறைந்த,பற்றமான வாழ்க்கைச் சூழலில் இயற்கை பற்றிப் பேசுவது இன்பம்; படிப்பது இன்பம்; சிந்திப்பது இன்பம்;எழுதுவது இன்பம்;மொத்தத்தில் இயற்கையோடு தொடர்பில் இருத்தல் மன அமைதியைத் தரும்.

இந்த அடிப்படையில் இனி வரும் காலங்களில், இந்த பக்கத்தில் இயற்கை சார்ந்த வாழ்வியலை திரும்ப மேற்கொள்வதில் உள்ள சாத்தியக் கூறுகளைப் பற்றி விவாதிக்கலாம்; நாம் இயற்கையை சீரழித்ததை நினைத்து குற்ற உணர்ச்சியில் வருந்தலாம்; இயற்கையையும், அதனை சிறப்பாக பயன்படுத்திய நம் முன்னோர்களின் அறிவையும் எண்ணி,எண்ணி வியக்கலாம்; இதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், சிறிய எல்லைக்குள்ளேயே முரண்படலாம்; நம்மை நாமே ஊக்கப்படுத்தி கொள்ளலாம்.

இயற்கை வாழ்வியல் சார்ந்த வாழ்க்கை வாழ  முயற்சிப்போம் அதில் வெற்றியும் காண்போம் என்ற நம்பிக்கையில் இயற்கை சார்ந்து தேடலை  தொடருவோம்...

இவர்களே தயாரித்து இவர்களே பரப்ப போகிறார்கள்...


இமயமலைக்கே சீனியர்.. மேற்கு தொடர்ச்சி மலை 1600 கி.மீ. நீள இயற்கை பொக்கிஷம் - உலக பாரம்பரிய சின்னமானதால் கூடுதல் கம்பீரம்...


இமயமலையை விட வயதில் மூத்தது, மொத்தம் ஆறு மாநிலங்களை கடந்து, 1600 கி.மீ. தூரம் நீண்டு பல அதிசயங்களை, பொக்கிஷங்களை தன்னகத்தே அடக்கி வைத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறது மேற்கு தொடர்ச்சி மலை. தேக்கு உள்பட பல அரிய மரங்கள், ஏராளமான உயிரினங்கள், ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் போன்ற சுற்றுலா தலங்கள், சபரிமலை, பழநி கோயில் போன்ற இன்னும் இன்னும் ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கும் இடம்தான் மேற்கு தொடர்ச்சி மலை. இவ்வளவு பெருமைகளுக்கும் அங்கீகாரம் கொடுக்கும் வகையில், ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

குஜராத்தின் தாபி பள்ளத்தாக்கில் தொடங்கி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகம்,  கேரளா, தமிழ்நாடு வழியாக இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியில் முடிகிறது மேற்கு தொடர்ச்சி மலை. 6 மாநிலங்களை தாண்டி மொத்தம் 1,600 கி.மீ. தூரம் நீண்டு 1 லட்சத்து 74 ஆயிரத்து 700 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகாவில் இது ‘சாயத்ரி மலை’ எனவும், தமிழகத்தில் பொதிகை மலை, ஆனைமலை, நீலகிரி மலை எனவும், கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இந்த மலையின் மிக உயரமான சிகரமாக கேரளாவில் உள்ள ஆனைமுடி விளங்குகிறது. 2 ஆயிரத்து 695 மீட்டர் உயரத்தில் உள்ள இதுதான் தென்னிந்தியாவின் உயரமான சிகரம்.

புவியியல், வரலாற்று அறிஞர்கள் இந்த மலை ‘கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதி’ என கூறுகின்றனர். பண்டைய காலத்தில் இந்த மலை தற்போதைய ஆப்ரிக்கா, மடகாஸ்கர், செஷல்ஸ் தீவுகளுடன் இணைந்திருந்தது. 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவியியல் மாற்றம் ஏற்பட்டபோது கோண்டுவானா நிலப்பரப்பில் இருந்து பிரிந்த தென்னிந்திய பகுதிகள், ஆசிய கண்டம் நோக்கி இடம் பெயர்ந்தன. இதோடு 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய பகுதிகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும் சேர்ந்து உருவான புவியியல் அமைப்பே மேற்கு தொடர்ச்சி மலை என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இத்தகைய தனித்துவம் வாய்ந்த புவியியல் அமைப்பு, காலப்போக்கில் அங்கு அரிய தாவரங்கள், உயிரினங்கள் உருவாக காரணமாக அமைந்தது. இங்குள்ள பல ஆயிரம் வயதுள்ள அடர்ந்த சோலை காடுகளை போன்று உலகில் வேறு எங்கும் காண முடியாது.

இந்த மலையில் உருவாகும் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி போன்ற பெரிய ஆறுகள் கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் சங்கமம் ஆகின்றன. பல்வேறு சிறிய ஆறுகள் மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக் கடலில் கலக்கின்றன. அதில் சிட்லாறு, பீமா ஆறு, மணிமுத்தாறு, கல்லாறு, பெண்ணாறு, பெரியாறு ஆகியவற்றின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டு, நீர் பாசனத்துக்கும் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள கோபாளி, கோய்னா, கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணசாகர், கேரளாவின் பரம்பிக்குளம், தமிழகத்தில் மேட்டூர் ஆகிய பெரிய அணைகள் முக்கியமானவை.

மேற்குத் தொடர்ச்சி மலையில் யானைகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, மிளா போன்ற மிருகங்கள், மான், சோலை மந்தி, சிங்கவால் குரங்கு, வரையாடு உள்ளிட்ட 139 வகையான பாலூட்டி இனங்கள், 508 வகை பறவைகள், நிலத்திலும் நீரிலும் வாழும் 176 வகை உயிரினங்கள் நிறைந்துள்ளன. இவற்றில் 119 வகை பட்டர் பிளை, பறக்கும் அணில், பறவை கீரி போன்ற அரிய உயிரினங்களும் அடங்கும்.

இந்த மலையில் தேக்கு மரக்காடுகள் அதிகம் உள்ளன. தேக்கடி சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்களில் பூக்கும் மலர்கள், மலையின் அழகை ரம்மியமாக்குகிறது. தேயிலை தோட்டங்கள், காபி தோட்டங்கள், ஏலக்காய், மிளகு போன்ற பணப் பயிர்கள் விளைகின்றன. இதிலிருந்து கிடைக்கும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி அன்னிய செலாவணியை அள்ளித் தருகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கும் மேற்கு தொடர்ச்சி மலை பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

அரபிக் கடலில் வீசும் குளிர்ந்த காற்று, மேற்கு தொடர்ச்சி மலையில் மோதி மழை தருகிறது. இதுதான் தென்மேற்கு பருவ மழையாகும். தென்னிந்தியாவின் நீர் ஆதாரமே இந்த மலைதான். இத்தகைய சிறப்புமிக்க மேற்கு தொடர்ச்சி மலையை பாரம்பரிய சின்னமாக அறிவிப்பதற்கு முன்பு மத்திய அரசின் நிபுணர் குழு ஆராய்ச்சி நடத்தி அறிக்கை பெற்றுள்ளது. அதில் ‘மேற்குத் தொடர்ச்சி மலையில் 60 சதவீதம் பகுதி புலி, யானைகள் காப்பகம், சரணாலயங்கள், தேசியப் பூங்கா, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக ஏற்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட வேண்டிய வனப் பகுதி 25 சதவீதம். இதை பாதுகாக்க யுனெஸ்கோ பல ஆயிரம் கோடி நிதி அளிக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமை வளத்தை மேம்படுத்த வேண்டும். மழை வளம் தொடர்ந்து கிடைக்க மலை வளம் காக்கப்பட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

இந்த மலையின் மைந்தர்களாக வாழும் பளியர், படுகர், இருளர் போன்றவர்களை சுற்றுச்சூழலை காரணம் காட்டி மலைப்பகுதியில் இருந்து விரட்டுவதற்காகவே இந்த அறிவிப்பு என்ற குற்றச் சாட்டையும் சிலர் எழுப்பியுள்ளனர். உண்மையில், பல நூறு ஆண்டுகளாக இந்த மலையில் வாழும் இவர்கள்தான் உண்மையான சுற்றுச் சூழல் பாதுகாவலர்கள். இவர்களையே மேற்குத் தொடர்ச்சி மலையின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் காவலர்களாக நியமிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் வலியுறுத்துகின்றனர்.

மலையை குடைந்து குவாரி அமைத்து கனிம வளத்தை அழிப்பதில் கர்நாடகாவும், புதிய அணை, மின் உற்பத்தி திட்டமிடுவதில் கேரளாவும் முனைப்பு காட்டுவதுதான் நம் நெஞ்சில் வேல் பாய்ச்சுகிறது. மழை குறைவுக்கு முக்கிய காரணம் காடுகள் அழிக்கப்படுவதுதான் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு குழு தலைவர் அப்பாஸ் கூறும்போது, “மேற்குத் தொடர்ச்சி மலைக்கு உலக அங்கீகாரம் கிடைத்து பாரம்பரிய பட்டியலில் அறிவிக்கப்பட்டு இருப்பது இந்திய நாட்டுக்கே பெருமை. குறிப்பாக தமிழகத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம். இதன்மூலம் மலையில் கேரளா, கர்நாடகம் புதிய அணை கட்ட முடியாத நிலையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். மலையின் சுற்றுச்சூழலுக்கு பாதகம் ஏற்பட அனுமதிக்க கூடாது. மலையில் மரங்கள் உள்ளிட்ட இயற்கை செல்வங்களை அழியாமல் காக்க முன்வர வேண்டும். உலகில் எங்குமில்லாத அரிய உயிரினங்களுக்கு ஆபத்து நேரக் கூடாது. இதன் மூலம் மலை வளம் காக்கப்படும்’’ என்றார்.

உற்பத்தியாகும் ஆறுகள்..

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகள்: பத்ரா, பீமா, சாலக்குடி, சித்தாறு, கோதாவரி, கபினி, காளி, கல்லாயி, காவிரி, கோய்னா, கிருஷ்ணா, குண்டலி, மகாபலேஷ்வர், மலபிரபா, மணிமுத்தாறு, நேத்ராவதி, பச்சையாறு, பரம்பிக்குளம், வைகை, பெண்ணாறு, சரஸ்வதி, சாவித்ரி, ஷராவதி, தாமிரபரணி, தபதி, துங்கா, வீணா.

அருவிகளும் ஆன்மீக தலங்களும்...

குற்றாலம், அகஸ்தியர், சுருளி, அப்பே, சுஞ்சனா சுட்டே, சோகக், சாலக்குடி, கல்கட்டி, உஞ்சள்ளி, பாணதீர்த்தம், சத்தோடு, சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சி என இந்த மலை தொடர்ச்சியில் உள்ள அருவிகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது. கோவா, பாலக்காடு போன்ற கணவாய்களும் அமைந்துள்ளன.

ஆன்மிகத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலை புகழின் உச்சியில் நிற்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயில், பழநி மலை, கற்புக்கரசி கண்ணகி கோயில் போன்றவை இதில்தான் அமைந்துள்ளன. மலைகளின் அரசி என்றழைக்கப்படும் குளு குளு ஊட்டி, இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல், ஏற்காடு போன்ற கோடை வாசஸ்தலங்களும், சுற்றுலா பயணிகளை கவரும் தேக்கடியும் அமைந்துள்ளன.

களக்காடு முண்டந்துறை, பிடிஆர் புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், அகத்தியமலை, நீலகிரி உயிர்க்கோள காப்பகம் மற்றும் இந்திரா காந்தி தேசிய பூங்கா, பந்திப்பூர் உள்ளிட்ட பல தேசிய பூங்காக்களும் ஸ்ரீவில்லிபுத்தூர், தலைக்காவிரி, வயநாடு உள்ளிட்ட ஏராளமான இடங்களில் காட்டுயிர் வாழ்விடங்கள் மற்றும் பறவைகள் வாழ்விடங்களும் அமைந்துள்ளன...

கோஹினூர் வைரம் மர்மங்களும் - உண்மைகளும்...


https://youtu.be/Pw6kPDdIhvE

Subscribe The Channel For More News...

காவிரிப்பூம்பட்டினம் - கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம்...


பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த - காவிரிபூம்பட்டினம்...

கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்.

ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம், இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள்..

தமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த காவிரிப்பூம்பட்டினம். பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்த அழகிய நகரம்..

காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "சிலப்பதிகார" நூல் விவரிக்கிறது.

இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, வியட்நாம், கம்போடிய, இந்தோனேசியா, வங்காள தேசம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான்.. இந்த துறைமுகத்தில் சுமார் 10,000 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது..

இந்த நகரம் அழகான இரண்டு முக்கிய ஊர்களை கொண்டிருந்தது.

ஒன்று கடலோரம் இருந்த "மருவுர்பாக்கம்" மற்றொன்று இதன் மேற்க்கே அமைந்த "பட்டினப்பாக்கம்".

இந்த இரண்டு ஊர்களையும் பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தேட்டங்கள், இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது..

இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது..

அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராம இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள்.. பகல் அங்காடியின் பெயர் "நாளங்காடி", இரவில் நடப்பது "அல்லங்காடி"...

ஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்க்கரை ஓரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது.. இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர்.. இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பட்டு வியாபாரிகள், மீன், கறி வியாபாரிகள், பானை, தானியங்கள், நகை, வைர வியாபாரிகள் நிறைந்து காணப்பட்டனர்..

பட்டினப்பாக்கம்...

இங்கு அரச குடும்பம், அரசுத் துறை உயர் அதிகாரிகள்,பணக்கார வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர், ஜோதிடர், ராணுவம், அரண்மனை நடனக் கலைஞர்கள் போன்றவர்கள் இருந்தனர்.

இங்கு ஐந்து மன்றங்கள் அமைக்கபட்டிருந்தன...

(௧) வெள்ளிடை மன்றம்
(௨) எலாஞ்சி மன்றம்
(௩) நெடுங்கல் மன்றம்
(௪) பூதச்சதுக்கம்
(௫) பாவை மன்றம்

இந்த ஊரை மேலும் அழகுப்படுத்தியத் தோட்டங்கள்...

(௧) இளவந்திச்சோலை
(௨) உய்யணம்
(௩) சன்பதிவனம்
(௪) உறவனம்
(௫) காவிரிவனம்

பட்டினப்பாலை என்ற சங்க நூல், இந்த நகரின் அழகை பல இடங்களில் விவரிக்கின்றது. அடுக்கு மாடிகளை அப்போதே கொண்ட இந்த நகரில், ஏணிகள் மற்றும் மரப் படிகளால் மேல் மாடிக்கு சென்றுள்ளனர். நகரின் எல்லா இடங்களிலும், பல வடிவங்களில் சோழர் கொடிகள் பரந்த வண்ணம் இருந்துள்ளது.

இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் "சுனாமி" வடிவில் வந்தது இந்த நகருக்கு அழிவு. சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலையால், இந்த நகரை உரு தெரியாமல் அழித்துவிட்டு சென்றது.

மணிமேகலை நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது.

அதாவது வருடா வருடம் தவறாமல் "இந்திர விழா" கொண்டாடும் சோழ மன்னன், அந்த ஆண்டு கொண்டாடத் தவறியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது.

இங்கு கிடைக்கப்பெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு இந்த ஊரில் "சிலப்பதிகார அருங்காட்சியகம்" ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரத்தை இன்னமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது.

இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னுமும் வெளிவராத நம் பெருமைகளும், அறிய தகவல்களும் வெளி வர வாய்ப்புள்ளது.

தமிழர்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும். அதே போன்று நமக்கு பின் வருபவர்களுக்கும் நம் வரலாற்றை கற்பிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை...

கால வாய்ப்பாடு...


துரைமுருகன் மகனுக்கு சீட்டா.. திமுக பிரமுகர் விலகல்.. பாமகவில் சேர்ந்தார்...


துரைமுருகன் மகனுக்கு சீட் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவிலிருந்து விலகிய பிரமுகர் பாமகவில் போய்ச் சேர்ந்தார்.

திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் திமுக எந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது நேற்றே இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதில் வேலூர் தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

இந்த தேர்தலில் திமுக போட்டியிடும் 20 இடங்களில் ஏறத்தாழ 8 இடங்களில் திமுக தலைவர்களின் வாரிசுகளே போட்டியிடுகிறார்கள். இதனால் அடிமட்ட தொண்டர்கள் முதல் கட்சியின் நிர்வாகிகள் வரை பலரும் அதிருப்தியில் உள்ளனர். கள்ளக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு சீட் கொடுக்கப்பட்டால் அங்கு தேமுதிக எளிதாக வென்று விடும். ஆகவே பொன்முடியின் மகன் கவுதம சிகாமணிக்கு போட்டியிட இடம் கொடுக்கக் கூடாது என்று ஸ்டாலினிடம் திமுக நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதையும் மீறி கவுதம சிகாமணிக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

இதுபோலவே வேலூர் தொகுதியை திமுகவின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு கேட்டு கருணாநிதி உயிரோடு இருக்கும் போதே துரைமுருகன் காய் நகர்த்தி வந்தார். ஆனால் அப்போது அவருக்கு சீட் வழங்கப்படவில்லை மாறாக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்பட்டது. அப்போது திமுகவில் பல உள்ளடி வேலைகள் நடைபெற்றதால் திமுக கூட்டணி அப்போது தோற்றதாக கூறப்படுகிறது.

வேலூரை பொருத்தமட்டில் அங்கு வன்னியர்களின் வாக்கு வங்கி அதிகம். அதிமுக கூட்டணியில் இப்போது புதிய நீதி கட்சி சார்பில் A.C சண்முகம் போட்டியிடுகிறார். கடந்தமுறையே பலவீனமான பாஜக கூட்டணியில் இருந்து கொண்டே தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செங்குட்டுவனை விட 63393 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று வெற்றி வாய்ப்பை பறிகொடுத்திருந்தார். இந்நிலையில் வன்னியர் வாக்கு வங்கி பலமாக உள்ளதால் எப்படியும் சொந்த சாதி பலத்தால் வென்று விடலாம் என்று துரைமுருகன் தரப்பு கணக்கு போட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் திமுகவினரிடம் துரைமுருகனுக்கு எதிராக அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தின் திமுக முக்கிய பொறுப்பாளரும் முன்னாள் சேர்மனுமான சிவூர் துரைசாமி அதிருப்தி காரணமாக திமுகவில் இருந்து விலகியுள்ளார். தற்போது அவர் பாமகவில் இணைந்துள்ளார்.

மாவட்டத்தில் கணிசமான ஆதரவாளர்களையும் நல்ல செல்வாக்கையும் பெற்றுள்ள துரைசாமி தேர்தல் நெருக்கத்தில் பாமகவில் இணைந்துள்ளது திமுகவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சில நிர்வாகிகள் வெளியேற தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது...

தக்காளி சட்னி செய்வது எப்படி.?


https://youtu.be/5YU6_MqDzXM

Subscribe The Channel For More Recipes...

பித்தப்பை என்றால் என்ன...?


பித்தப்பை என்பது கல்லீரலுக்கு வலப்புறமாக, கீழே, ஒரு 'கோல்ப்' பந்தின் அளவுள்ள பேரிக்காய் வடிவிலுள்ள ஒர் உட்பையாகும். இதுனுடைய முக்கிய பயன்பாடு என்னவென்றால் நாம் உண்ணும் உணவிலுள்ள கொழுப்புப் பொருட்களைச் சீரணிக்க உதவும், இயற்கை இயக்கியான, பித்தநீரைச் சேகரித்து அனுப்புவதாகும். பித்தநீரானது கல்லீரலில் உற்பத்தி செய்யப்பட்டு, பித்தப்பையில் தற்காலிகமாக இருப்பு வைக்கப்படும் ஒரு பசும் பொன் வண்ண திரவமாகும்.

கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை நாம் உட்கொண்டதும் பித்தப்பையில் விடுதலை செய்யப்படும். பித்த நீரானது, சாதாரணமாக பித்தப்பை குழாய், மற்றும் பித்தநீர்க்குழாய் என்றழைக்கப்படும். இழை நாளங்களின் வழியே சிறு குடலுக்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள கொழுப்புப பொருட்களைச் சீரணிக்க உதவும்.

பித்தப்பை சிக்கல்கள் யாருக்கு உண்டாகும் ?

பொதுவாக பித்தப்பை சம்பந்தமான சிக்கல்கள் தோன்றுவதற்கு வாய்ப்பிற்கு பல காரணங்கள் உள்ளன. நாம் உண்ணும் உணவுப் பொருட்களிலுள்ள கொழுப்புச்சத்தை நம் உடல் எவ்வாறு செரிமாணம் செய்கிறது என்பதையும், பித்தப் பையில் ஏதேனும் தொற்றுநோய் உள்ளதா என்பதையும் பொருத்துப் பித்தப்பை சிக்கல்கள் உண்டாகின்றன என்று நம்பப் படுகிறது.

பின் கண்ட பருவத்தினருக்குப் பித்தப்பை சிக்கல்கள் தோன்ற பெரிதும் வாய்ப்புகளுள்ளன என ஆய்வுகள் சுட்டுகின்றன.

வயது நாற்பதுகளிலுள்ள பெண்கள் அதிக எடையும் பருமனுமுள்ள ஆண்கள், பெண்கள். பால் சம்பந்தமான உணவுப் பொருட்களையும் விலங்கு கொழுப்புப் பொருட்களையும், பொரிக்கப்பட்ட உணவு வகைகளையும் அதிகமாக உட்கொள்ளும் மக்கள். பித்தப்பை சிக்கல்களுள்ள மக்களின் பெற்றோர்கள், உடன் பிறப்புகள், குழந்தைகள்.

பித்தப்பை சிக்கல்கள் எப்படி உண்டாகின்றன ?

பொதுவாக பித்தப்பையில் பித்தக்கற்கள் ஏற்படுவதால் பித்தப்பை சிக்கல்கள் உண்டாகின்றன. பித்தப் பையின் உள்ளே பித்த நீரும் பிற நீர்ம இரசாயனங்களும் அளவுக்கு அதிகமாகும் போது, அதன் விளைவாக இரசாயன கலப்பு ஏற்பட்டுக் கனப் பொருட்களாகவும் வண்டல் படிவங்களாகவும் ஏற்படுகின்றன. காலப் போக்கில் இந்த வண்டல்கள் உருவில் பெரியதாக வளர த் தொடங்கி பித்தக் கற்களாகின்றன.

பித்தக்கல் பெரியதாக இருந்து பித்தநீர்க் குழாயில் பயணம் செய்யும்போது, பித்தப் பையில்ருந்து பித்த நீரின் வெளியேற்றத்தைத் தடை செய்யக்கூடும். வெளியேற்றும் வழி அடைக்கப் படுவதால் பித்தப்பை வீங்கத் தொடங்கும்.

பித்தநீரால் பித்தப்பை முழுதும் நிரப்பப்பட்டதும் பித்தநீரின் பின்னோட்டம் நிகழ வாய்ப்புள்ளது. இதன் விளைவாக பித்தப்பை தொற்று நோயால் பீடிக்கப் படுகிறது.

உணவுக்குப் பின்னர், சிறப்பாக பொரிக்கப் பட்ட உணவு, பொரியல் முதலிய எண்ணெய்ப்பாங்கான உணவுப் பொருட்களை உண்டபின்னர் வலது பக்க, மைய வயிற்றுப் பாகத்தில் பெரும் வலி ஏற்படுவது இந்நோய் அறிகுறிகளில் அடங்கும். மெல்ல இந்த வலி முதுகுக்கும் தோளின் நுனிபாகத்திற்கும் பரவக்கூடும்.

இதைத்தவிர குமட்டல், வாந்தி, காய்ச்சல், மஞ்சள் காமாலையும் உண்டாகும்.

திறந்த பித்தப்பை அறுவை மருத்துவம்...

வயிற்றினை பெரியதாக அறுத்து பித்தப் பையை அகற்றுவது காலங் காலமாக நடைபெற்று வரும் மருத்துவ முறையாகும். அதிக அளவில் இரத்தக்கசிவு, தொற்று நோயால் பீடிக்கப் படுவது இந்த முறையிலுள்ள சிக்கல்களும் அபாயமுமாகும். இதனை இப்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் செய்வது இல்லை..

லேப்ரோ ஸ்கோபிக் பித்தப்பை அறுவை மருத்துவம்...

தற்போது, இந்தப் புதிய நுட்பத்தின் மூலம் 1 செ.மீக்கும் குறைந்த வட்ட முள்ள 4 சிறு துளைகள் செய்யப்பட்டு அவற்றின் வழியே பித்தப்பை அகற்றுதல் சிறப்பாக நடத்தப் படுகிறது.

ஒரு லாப்ரோ ஸ்கோப் (ஒரு புகைப்படக் கருவியுடன் இணைக்கப்பட்ட ஒரு தொலைநோக்கி) ஒரு சிறு துளையின் மூலம் உள்ளுர செலுத்தப்பட்டு, பித்தப்பையின் பெரிய அளவு காட்டி பெறப்படுகிறது. இன்னொரு சிறு துளையின் வழியே அறுவை கருவிகள் உள்ளே நுழைக்கப்படும்.

பித்தப்பை நாளமும், பித்தப்பைக்குக் குருதியை எடுத்துச் செல்லுப் தமணியும் கண்டு பிடிச்சப்பட்ட பின்னர் பற்றுக்கோள்களால் (forceps) கெட்டியாகப் பற்றப்பட்டுக் கல்லீரலின் அடியிலுள்ள பித்தப்பை தனித்துக் துண்டாக்கப்படும்.

இந்த வைத்தியம் முடிந்ததும் சிறு துளைகள் ஓரிரு தையல் மூலம் அத்துளைகள் மூடப்படும். ஒரு சில மாதங்களில் அந்தத் துளைகளின் தடயமே இல்லாமல் மறைந்து போகும்...

இரத்த அழுத்தத்தை சீரகமே சரி பண்ணிடுமாம்...


திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கசாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும்.

சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும்.

நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு குவளை குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கசாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்...

போராளி முகிலன் எங்கே.?


பொள்ளாச்சி கொடூரத்தை கண்டித்து நிர்வாண போராட்டம்.. பெண் எழுத்தாளர் அழைப்பு...


கோவை பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பேஸ்புக் நண்பர்கள் மூலம் கற்பழிக்கப்பட்ட நிகழ்வு தற்போது வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளதால், தமிழகமே மிகுந்த பரபரப்பிற்குள்ளாகி உள்ளது.

இந்நிகழ்விற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சினியுலகத்தை சேர்ந்த பிரபலங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கற்பழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக மணிப்பூரில் நடந்தது போன்று நாம் ஏன் நிர்வாணமாக ரோட்டில் நடந்து சென்று கோட்டையை முற்றுகையிட கூடாது? என எழுத்தாளர் கொற்றவை அதிரடியாக பேசியுள்ளார்.

மேலும், இதில் பாதிக்கப்படும் பெண்கள் குறைந்தப்பட்சம் அந்த விஷயத்தை வெளியில் கூற வேண்டும் எனவும் கூறினார்...

இத்தனை நாள் தமிழர் வரலாற்றை திராவிட வரலாறு என்றார்கள்..


தற்போது கீழடியவே நாங்க தான் உலகிற்கு சொன்னோம்னு பொய்யை பரப்பும் தமிழர் அல்லாத கூட்டம்...

http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60440-why-is-the-central-government-stubborn-in-the-keeladi-excavation-matter-hc.html

பாஜக எச்.ராஜா சர்மாவும் மோசடிகளும் - மலரும் நினைவுகள்...


சீட்டு கம்பெனி நடத்தி சொந்த கட்சி காரங்க பணத்தை எல்லாம் ஆட்டைய போட்ட எச்ச ராஜா சர்மா எல்லாம் தேசப் பத்தனாம்...

திமுக செய்த சாதனைகள் இது தான் டா...


குழந்தைகளோட ஞாபக சக்தியை எப்படி அதிகரிக்கலாம்...


குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகமாக இருக்க வேண்டுமானால், அது அந்த தாயின் கையில்தான் இருக்கிறது. சின்ன வயதிலிருந்தே எங்களுடைய குழந்தைகளுக்கு எந்த விசயத்தையும் நல்லா மனசுல பதியுற மாதிரி சொல்லிக் கொடுத்தால், அதை அவர்கள் மறக்கமாட்டார்கள்.

சில குழுந்தைகளுக்கு படித்ததையெல்லாம் மறந்து தேர்வில் தோல்வி நிலையை அடையும் போது, அது அவர்களுக்கு ஒரு மனதில் துன்பத்தை தந்து வேதனையைத் தருகிறது.

அப்படி இருக்கும் குழந்தைகளது ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில வழிமுறைகள்.. ஞாபக சக்தியை அதிகரிக்க...

1. எதையும் முழு கவனத்தோடு தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், அதுவே எளிதில் புரிந்து மனதில் பதியும், ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எதையும் புரியாமல் படிக்கக் கூடாது என்று சொல்லி பழக்க வேண்டும்.

2. நினைவாற்றல் பெருக்கும் கலை (mnemonics) வைத்து எதையும் சொல்லிக் கொடுங்கள். அவ்வாறு செய்தால் அதை அவர்கள் மறக்க மாட்டார்கள்.

3. படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும்.

4. குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்ல வேண்டும்.

5. மாவு சத்து உள்ள உணவுகளை விட, புரதச்சத்து நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது. ஏனென்றால் மாவுச்சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும்.

6. முக்கியமாக தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்தால், நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் தகவல்களை குறுகியகால நினைவகத்திலிருந்து (Short term in memory) இருந்து, நீண்டகால நினைவகத்திற்கு (Long term in memory) பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிகவும் முக்கியமான பயிற்சி ஆகும் .

ஆகவே இத்தகைய பழக்கத்தை குழந்தைகளுக்கு வரவழைத்தால், அவர்களது ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சுறுசுறுப்போடும் இருப்பாங்க...

தமிழனின் உப்பும் கார்பரேட் வியாபாரமும்...


மனம் 2...


மனிதன் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நாம் பல வெற்றியாளர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம் , படித்திருப்போம்.

ஆனாலும் நம் மனம் பல நேரங்களில் இதை ஏற்றுக்க கொள்வதில்லை , வாழ்க்கையில் இதைப் பயன்படுத்துவது இல்லை.

நாம் அதை ஏற்றுக் கொண்டாலும் நம்முடன் இருக்கும் சிலர் அல்லது நமது சமூகம் நம்மை எதிர்மறையாக பேசி நம்முடைய நம்பிக்கையைக்  குறைத்து விடுகின்றனர்.

இப்படிப் பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களுக்காக மனதை எவ்வாறு பயன்படுத்தி வெற்றி காண்பது..

எதிர்மயையாக பேசுபவர்களை எவ்வாறு சமாளிப்பது..

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் மனதை எவ்வாறு பயன்படுத்தி வெற்றி கொண்டனர் என்பதை வரும் பதிவுகளில் காண்போம்..
   
உங்களால் முடியும் உங்களால் முடியாது என்று நீங்கள் எதை எண்ணினாலும் இரண்டும் சரிதான்.

இது ஹென்றி போர்ட் அவர்களின் அனுபவ வார்த்தைகள்...

தமிழ் தேசிய அரசியல் மட்டுமே தமிழரை காக்கும்...


இந்தியம், திராவிடம் இது இரண்டையும் நம்பி நம்பி ஏமார்ந்தது போதும்.. விழித்திடு தமிழா...

விரதம்....


விரதம் என்பது வைராக்கியம் எனப்பொருள் படும். தான் பட்டினி கிடந்து இல்லாதவர்க்குப் பசிதீர்த்தலே உயர்விரதமாகும்.

கல்லுக்குப் பால் ஊற்றிப் பாழாகப் போகும்படி செய்துவிட்டனர்மூர்க்கர்கள்.

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட அத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே...

பாமக போட்டியிடும் தொகுதியும்.. எதிர் கட்சியும்...


கண்டங்கத்திரியின் மருத்துவ பயன்கள்...


மனிதனுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பவைதான் கற்ப மூலிகைகள். கற்பம் என்றால் உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைப்பது. இதில் மூலிகைகள் பல உள்ளன. ஒவ்வொரு மூலிகைகளுக்கும் அதனதன் தன்மைப்படி தனித்தனி மருத்துவக் குணங்கள் உண்டு. இதில் கண்டங்கத்திரி ஒரு கற்ப மூலிகை. இதனுடைய மருத்துவப் பயன்கள் ஏராளம்.

கண்டங்கத்திரி படர்செடி வகையைச் சார்ந்தது. இது எல்லா இடங்களிலும் செழித்து வளரும் தன்மை கொண்டவை.

இதன் இலை, பூ, காய் பழம், விதை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. கார்ப்புச் சுவை கொண்ட இது சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.

காச சுவாசங் கதித்தஷய மந்தமனல் வீசுசுரஞ் சன்னி விளைதோடம்-ஆசுறுங்கால் இத்தரையு னிற்கா, எரிகாரஞ் சேர்க்கண்டங் கத்திரியுண் டாமாகிற் காண் -அகத்தியர் குணவாகடம்.

பொருள் - கண்டங்கத்திரிக்கு காசம், சுவாசம், ச(ஷ)யம், அக்கினி மந்தம், சன்னி, வாதம், தோச(ஷ) நோய்கள், தீச்சுரம், வாதநோய், ரத்தசுத்தி போன்றவற்றைத் தடுக்கும் குணமுண்டு.

கண்டங்கத்திரியின் மருத்துவப் பயன்கள் சுவாச நோய்களுக்கு

இன்றைய புறச்சூழ்நிலை மாறுபாட்டால் உண்டான அசுத்தக் காற்றை சுவாசிக்கும்போது அவை உடலில் ஒவ்வாமையை உண்டுபண்ணி நுரையீரலைப் பாதிக்கிறது. மேலும் உடலுக்குத் தேவையான பிராண வாயுவை தடைசெய்கிறது. இதனால் மூச்சுக் குழல் தொண்டைப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. சளிபிடித்துக் கொள்ளுதல், மூக்கில் நீர் வடிதல், அதிகளவு தும்மல் மூச்சுத் திணறல் போன்றவை உண்டாகிறது.

சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கண்டங்கத்திரிக்கு உண்டு.

கண்டங்கத்திரியின் தன்மை பற்றி அகத்தியர் கூறும் கருத்து இதோ.

மாறியதோர் மண்டைச்சூலை
கூறியதோர் தொண்டைப்புண்
தீராத நாசிபீடம்.

தலையில் நீர் கோர்த்தல், சூலை நீர் எனப்படும் கப நீர், பித்த நீர் இவற்றை சீராக்கி செயல்படுத்தி மாற்றவும், தொண்டையில் நீர்க்கட்டு, தொண்டை அடைப்புகள், மூக்கில் நீர் வடிதல், சளி உண்டாதல் போன்றவற்றிற்கும், மூச்சுத் திணறல், இருமல், ஈழை, இழுப்பு இவற்றிற்கும் சிறந்த நிவாரணம் தரக்கூடியது கண்டங்கத்திரி என அகத்தியர் பெருமான் கூறுகிறார்.

இன்றைய சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் முதல் பெரிய அளவில் வியாபார நோக்கோடு சித்த, ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் மருந்துசெய் நிறுவனங்கள் வரை சித்த, ஆயுர்வேத மருந்துகளில் கண்டங்கத்திரியை உபயோகிக்கின்றனர்.

பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் குணமுள்ளவை. அந்த வகையில் ஒத்த குணமுடைய மூலிகைகளான கண்டங்கத்திரி, இண்டு, இசங்கு, தூதுவளை சம அளவு எடுத்து அதனுடன் ஆடாதோடை சேர்த்து இடித்து நீரில் கொதிக்கவைத்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் மேற்கண்ட சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் குணமாகும்.

மாற்றுமுறை...

கண்டங்கத்திரி இலை, இண்டு இலை, இசங்கு இலை, தூதுவளை இலை, ஆடாதோடை இலை இவற்றை நிழலில் காயவைத்து சம அளவு எடுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் இருவேளை 1 தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வரலாம்.

கண்டங்கத்திரி கசாயம்...

இண்டு, இசங்கு, கண்டங்கத்திரி, ஆடாதோடை, தூதுவளை, துளசி இலை, வால்மிளகு, சுக்கு, திப்பிலி இவற்றில் தலா 5 கிராம் அளவு எடுத்து இடித்து பொடித்து இரண்டாகப் பிரித்து காலையில் 1 பங்கை 2 கிண்ணம் நீரில் கொதிக்க வைத்து 1 கிண்ணமாக வற்ற காய்ச்சி வடிகட்டி அருந்தவேண்டும். அவ்வாறே மற்றொரு பங்கை மாலையில் செய்து அருந்தவேண்டும். இது தீராத இழுப்பு வருத்தம் (Asthma), வலிப்பு நோய் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.

கண்டங்கத்திரி காது, மூக்கு, தொண்டை, வயிற்றுப்பகுதி மூதலிய இடங்களில் உள்ள தேவையற்ற சளியைப் போக்குகிறது.

கண்டங்கத்திரிக்கு ரத்தத்தில் சளியையும், ரத்தக் குழாய்களில் உண்டாகும் கொழுப்பு அடைப்புகளையும் நீக்கும் தன்மை உண்டு. அதேபோல் மார்புச் சளியை நீக்கி குரல்வளையில் தேங்கிநிற்கும் சளியை நீக்கி சுவாசத்தை சீராக்கும்.

கண்டங்கத்திரி இலையின் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் பூசி வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும். தலைவலி, சரும பாதிப்பு இவைகளுக்கு மேல்பூச்சாகப் பூசினால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

கண்டங்கத்திரி எல்லா பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது. இதனை முறைப்படி பயன்படுத்தி நாமும் நோயின்றி வாழ்வோம்.

கண்டங்கத்தரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து “தசமூலம்” என்பதாகும். இது பத்து மூலிகைகளின் வேர்களை கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத் திரியும் ஒன்றாகும்.

மருத்துவ பயன்கள்...

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ள வேண் டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும்.

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல் லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வர அவை நீங்கும். காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு இதன் இலையை இடித்து எடுத்து சாற்றுடன் ஆளிவிதை எண்ணெய் சமஅளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசிவர மறையும்.

கண்டங்கத்திரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசிவர நன்மை தரும். கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியை தூண்டும். கழிச்சலை உண்டாக்கும். வெண் குட்டத்திற்கு இதன் பழம் சிறந்த மருந்தாகும். கண்டங்கத்திரி பழங்களை பறித்து சட்டியிலிட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக் கொண்டு நான்கு பங்கெடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண்குட்டம் உள்ள இடங்களில் பூசி வர வெண்புள்ளிகள் மறையும்.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம். பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும். நெருப்பில் இவற்றை போட புகை எழும். இந்த புகையை பற்களின் மேல்படும்படி செய்ய வலி தீரும். இதன் பழத்தையும் உலர்த்தி பொடித்து நெருப்பில் போட புகை வரும். இதனாலும் பல்வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும்...