29/08/2017

முதலில் தமிழனுக்கு என்று ஒரு மாநிலம் வேண்டும்...


காவிகளின் கூடாரமா இருக்கும் இந்தியாவை அடக்க வேண்டும் என்றால் அது தமிழர்களால் மட்டுமே முடியும்..

தமிழர்கள் அப்படியான எழுச்சியயை உண்டு செய்ய முதலில் தமிழன் ஆளுமைக்குள் ஒரு மாநிலம் வேண்டும்..

அப்படி அமைந்தால் மட்டுமே அத்தனை பிரச்சனைக்கும் தமிழர்கள் எழுச்சியோடு போராடி வெற்றியும் அடைய முடியும்.

தற்போது இந்த இந்தியாவின் செல்ல குழந்தைகள் ஆரிய கள்ள குழந்தைகள் திராவிடம் நடத்தும் அடையாள போராட்டம் முழுக்க முழுக்க வடுகர்களின் ஆளுமைய தக்க வைக்கவும் தனது பொருளாதரத்தை உயர்த்த மட்டுமே போராட்டத்தை கையில் எடுத்து கொள்கிறார்கள்...

எடுத்து கொள்வது மட்டும் இல்ல வடுகர்களின் போரட்டம் என்பதே ஒரு வித மாஃபியா தான்..

தமிழர்கள் போரட்டம் என்பது தனது உயிரையும் மாய்து கொள்வார்கள் அந்த அளவுக்கு அதிலே உண்மை இருக்கும்.

அப்படியான தமிழர்களை வடுகர்கள் ஆளுமை செய்து தமிழர்களை எல்லாம் இன பற்று மொழி பற்று ஆளுமை பற்று இல்லாமல் ஒரு வித பண மது  பற்றுடன் ஓடுவதற்க்கு தள்ளிவிட்டுவிட்டார்கள் அப்படியான தமிழர்களை முதலில் மீட்க வேண்டும்.

வடுகர்கள் மார்வாடிகள் தமிழகத்தை கூறு போட்டு கொண்டு நம்மை வஞ்சித்து பெரும் முதலாளிகளா வாழ்கிறார்கள்.

இந்த ரேசில் தமிழன் கலந்துக்கவே வாயிப்பு இல்ல இதுல என்ன கொடுமைனா அவனுங்க ரேஸ் விளையாடும் திடல் தமிழர்களுடையது..

இனியும் நாம் விளையாடவில்லை என்றால் நாம் அவ்வளவுதான் முதலாளித்துவத்தை  கைபெற்றாமல் தனி நபர் வருமானத்துக்காக தமிழர்கள் ஓடினால் மாற்று முதலாளிகளை இங்க வீழ்த்த முடியாது அதை வீழ்த்தினால் மட்டுமே தமிழ் முதலாளிகளையும் காக்க முடியும் இல்லையெண்றால் நாளை தமிழர்களின் பெரும் நிறுவனங்களை கைப்பற்றுவார்கள் அதுவும் இல்லை என்றால் அவர்களின் கைப்பாவையா அந்நிறுவனங்களை அடக்குவார்கள் மாற்றுவார்கள்..

அப்படிதான் பல அண்ணாச்சிகள் மாறிவிட்டார்கள் ஒரு தலமுறை மாறினால் அடுத்த தலமுறைக்கு என்ன நடந்தது என்றே தெரியாது.

தமிழர்கள் பெரும் இயக்கங்களா மாறினால் மட்டுமே இங்கு இருக்கும் தமிழ் முதலாளிகள் இந்திய மார்வாடி வடுகனுக்கு காவிகளுக்கு அடிமையாக மாறாமல் இருக்க வாயிப்பு இருக்கு.

அவ்வாறு அரசியல் பலத்தை தமிழர்கள் நாம் அடைந்தால் மட்டுமே ஒட்டுமொத்த தமிழர்களையும் காக்க முடியும் காவிகளிடம் இருந்தும் மார்வாடிகளிடமிருந்தும் ஆரியனிடம் இருந்தும் தமிழனை மீட்க முடியும்..

இல்லயென்றால் காவிபக்கம் சாயும் அத்தனை தமிழ் நபர்களையும் குறை மட்டுமே சொல்லிகொண்டு இருப்போம் எவன் பக்கமும் தமிழன் சாயாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை முழுக்க முழுக்க நம் பங்கு. நாம் பலமாக இருந்தால் மட்டுமே எவனுக்கும் அடங்கி போகனும் என்ற எண்ணமே எந்த தமிழனுக்கும் வராது....

இத்தனை ஆண்டுகளாக தமிழகத்தை ஏய்தும், சுரண்டியும் பிழைத்து வந்த இந்தியாவை எதிர்ப்பது தான் நேர்மையான போராட்டமாக இருக்க முடியும்..


தமிழர்களின் மண் உரிமை, மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, கனிம வளங்கள் உரிமை, நீர் உரிமை , அரசியல் உரிமை என எல்லா வகையான உரிமைகளை பறித்ததோடு மட்டுமில்லாமல், இன்று தமிழினத்தை அழிப்பதற்கு இலங்கையோடு கூட்டு சேர்ந்து தமிழக மக்களின் போராட்டங்களை கால் தூசுக்கும் மதிக்காமல் நம்மை பார்த்து எள்ளி நகையாடுகிறது இந்திய வல்லாதிக்க அரசு.

இப்படியான மாபாதகமான அரசின் கீழ் தமிழ் மக்கள் வாழ்வது என்பது எந்த விதத்திலும் பாதுகாப்பு இல்லாதது.

ஈழத் தமிழர்களுக்கு மட்டும் இந்திய அரசு எதிரி அல்ல. தமிழக தமிழர்களுக்கும் இந்திய அரசே எதிரி நாடாக உருவெடுத்து உள்ளது.

இனி வரும் காலங்களில் இந்திய அரசே தமிழ்நாட்டில் இருந்து வெளியேறு என்ற முழக்கம் தான் தமிழ் மக்கள் வைக்க வேண்டிய முழக்கமாக இருக்க வேண்டும்...

நமக்கு தேவையான அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொண்டு, இந்திய அரசின் தலையீடு இல்லாத தன்னாட்சி பொருந்திய தமிழக அரசை நிறுவுவதே தமிழர்களின் எதிர்கால பணியாக இருத்தல் வேண்டும்...

தமிழகமெங்கும் ஆக்கிரமிப்பு நடத்தி வரும் இந்திய அரசின் அலுவலகங்கள், ராணுவ மையங்கள், ஆய்வுக் கூடங்கள், அணு உலைகள் என அனைத்தையும் தமிழகத்தை விட்டு வெளியேற்றுமாறு நாம் கோரிக்கை வைத்து போராட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து நடுவண் அரசு நிர்வாகமும் தமிழக அரசின் கீழ் இயங்குதல் வேண்டும்.

தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் இந்தியாவே, தமிழர் நிலத்தை விட்டு வெளியேறு என்ற ஒற்றை கோரிக்கை மட்டுமே நமக்கு உண்மையான நன்மையை பயக்கும் என்பதை உணர்ந்து நாம் அக்கோரிக்கையை வலுப்படுத்வோம்..

வெளியேறு.. வெளியேறு..
இந்தியன் எல்லாம் வெளியேறு...

திருட்டு திராவிடர்ஸ்...


2009க்கு பிறகு இனம் மொழி எல்லாம் எம்மை குடிகொண்டதால் எமது பொருளாதாரம் பரதநாட்டியம்  ஆடுகிறது...

அம்மாம் பெரிய பணக்காரர் வ உ சி சிதம்பரனார் சொத்துக்கள் எல்லாம் இழந்து ஓட்டையாண்டிய நின்றுருக்கார்...

ஒக்காலி 24 மணி நேரமும் போராடியவர் புரட்டியவர்னு பீலாவுட்ட இந்த கன்னட ஈ.வெ ராமசாமி நாய்க்கர் வாழ்நாளில் ஈட்டிய பணம் 125 கோடியாம்...

தமிழ்நாட்டில் சினிமாவிலிருந்து எம்.ஜி.ஆர் நாட்டின் முதலமைச்சர் ஆனாலும் ஆனார்...


அதைத் தொடர்ந்து சினிமாவில் நடிப்பவன் எல்லாம் முதலமைச்சர் கனவில் மிதக்கிறான்..

இதனால் தமிழ் சினிமாவும் தரம் கெட்டுப் போனது..

தமிழனின் வாழ்க்கையும் தரங்கெட்டுப் போனது...

கிரேக்கமும் தமிழகமும்...


சமீபகாலமாக செய்திகளில் கீரீஸ் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி பற்றி கேள்வி பட்டிருக்கலாம். பிரச்சனை என்னவென்று சுருக்கமா சொல்கிறேன்..

கீரிஸ்நாடு ஜெர்மன், அமெரிக்கா மற்றும் யூகே நாட்டிடம் இருந்து வளர்ச்சிகாக கடன் வாங்கியுள்ளது. தேதியில் வட்டியும் கட்டவில்லை, அசலும் கட்டவில்லை. வங்கி பணம் இல்லாம திவாலிகிருச்சுன்னு சொல்வாங்களே அதாவது டெபாசிட் கம்மி கடன் மட்டும் அதிகமா கொடுத்து திரும்ப வராமல் போண்டி ஆகுறது, அந்த நிலை தான் கிரீஸுக்கு. காரணம் என்னவா இருக்கும், கேவலமான பொருளாதார கொள்கை தான்.

சரி இங்க ஏன் தமிழகம் வந்தது?

அதிமுக அரசு ஆட்சிக்கு வரும் போது தமிழகதின் கடன் ஒரு லட்சம் கோடி. தற்போதைய அதிமுக சாதனை கடனை ரெண்டு லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது. அவர்கள் சொல்லும் சாக்கு உள்நாட்டு உற்பத்தில் 20% கடன் வாங்கலாம் என்று. ஆனால் இவர்கள் கொடுக்கும் புள்ளிவிபரம் நம்பக்கூடியதா?

உற்பத்தியை மட்டுமே கணக்கில் காட்டும் அதிமுக அரசு மனிதவள மேம்பாட்டை கோட்டைவிட்டு விட்டதே. மக்களுக்கு வேலை வாய்ப்பில்லாமல் இவர்கள் சொல்லும் உற்பத்தி கணக்கை எதிர்கட்சிகள் கூட கேள்வி கேட்காமல் இருக்கே ஏன்?

50 வருடங்களுக்கு முன்னால் ஒரு மணி நேரத்தில் 100 மீட்டர் துணி நெய்ய 50 ஆட்கள் உழைப்பு இருக்கும். அது ஒரு உதாரண கணக்கு அதே போல் மற்ற உற்பத்திக்கும் ஆனால் இயந்திரமான உலகில் அனைத்திற்கும் இயந்திரம் தான் பிரதானம், மனிதம் வெறும் கண்காணிப்பாளம் மட்டுமே. அதுக்கு எத்தனை ஆட்கள் உழைப்பு தேவைப்படும்? அப்படியானால் நம் மனிதவளம் எந்த லட்சணத்தில் இருக்கிறது?

வேலை செய்கிறார்கள் ஆனால் அவர்கள் தகுதிக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத வேலையில். கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத சம்பளத்தில் ஆனால் அரசு சொல்லும் தனிநபர் வருமானம் அதிகரித்து உள்ளது என்று.

அந்த புள்ளிவிபரம் அரசு பணியாளர்களின் சம்பள சதவிதம் கொண்டும், நுகர்வோர் பயன்பாடு கொண்டும் அளக்கப்படுகிறது.

அதாவது ஒரு லட்சம் சம்பளம் வாங்குபவனையும் ஆயிரம் சம்பளம் வாங்குபவனையும் ஒரே மாதிரியாக பார்க்கும் அரசு.

நிதி நெருக்கடியை சமாளிக்க டாஸ்மாக் என்ற விசத்தை மட்டுமே அரசு நம்பியிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.

இப்படியே குடிச்சிட்டு போனா எல்லாரும் செத்துபோய் குடிக்க ஆள் இருக்காதே. அப்போ தமிழக அரசு அண்டை மாநிலங்களில் சரக்கு விற்குமோ?

ஒரு அரசு நிதி நெருக்கடியை சமாளிக்கும் லட்சணமா இது?

சாப்பிடுவதற்கு மக்களுக்கு ரொட்டி இல்லை மன்னா என சொன்னதுக்கு ரொட்டி இல்லாட்டி என்ன கேக் சாப்பிட சொல்லுங்கன்னு சொன்னானாம் ஒரு முட்டாள் மன்னன். அந்த லட்ணத்தில் இயங்கிறது அரசு.

உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் சமமாக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதா?

ஒவ்வொரு சாமான்யனும் பெரும் கடனில் தான் இருக்கின்றான். அவனை சமாதானம் செய்ய இலவச தொலைகாட்சி, இலவச மின் விசிறி, இலவச மிக்ஸி கொடுத்து பின்னாடியே மின்சார கட்டணத்தை நாலு மடங்கு உயர்த்தி வயிற்றில் அடிக்கிறது அரசு.

மின்சாரத்தில் மட்டும் எத்தனை கோடிகள் ஊழல் (அல்லது இழப்பு. இப்படி தானே 2ஜி அலைகற்றையில் ஜல்லிடக்கிறானுங்க).

பெரும் முதலாளிகள் தன் சொந்த வருமானத்தில் மட்டுமே வருமான வரியாக அரசுக்கு வரி செலுத்துகிறான் ஆனால் ஒவ்வொரு சாமான்யனும் உன்னை போல என்னை போல ஒவ்வொருவனும் உற்பத்தி வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரி, கல்வி கூட நம் காசு தான் வரியாக போகின்றது.

சராசரியாக ஒவ்வொரு பொருளுக்கும் 40%க்கும் அதிகமான அளவு உற்பத்தி விலையை விட வரியாக நாம் கொடுக்குறோம்.

நாம் வரி கட்ட மாட்டோம்னு சொல்லலையே, அப்படி மக்களை காக்க வேண்டிய அரசு தன் நிதி நெருக்கடியை சமாளிக்க மக்களுக்கு விசம் விற்பதை எப்படி அனுமதிப்பது.

அரசு மருத்துவமனையில் மது அடிமைகள் நாய் போல் பார்க்க படுகிறார். திருந்தலாம்னு போறவன் கூட ரெண்டு நாளில் இதுக்கு குடிச்சே சாவலாம்னு ஓடியாறான்.

டாஸ்மாக்கை மூடினால் கள்ளசாரயம் வருமாம். இப்ப மட்டும் என்ன நொள்ளசாராயம் விக்குதாம்.

சட்டபஞ்சாயத்து அமைப்பு மதுவின் தரத்தை சோதிட வேண்டும் என கேட்டத்தற்கு அரசு மறுத்து விட்டது பின் அவர்கள் கோர்ட் அனுமதியுடன் சோதித்து பார்த்ததில் நிர்ணயிக்கபட்ட அளவை விட ஆல்ஹகால் அதிகமாக இருந்தது. அதற்கு அவர்கள் தடை கோரியும் அதே சரக்கு வித்துகிட்டு தான் இருக்கு.

இங்கே பெரும் பணமுதலைகள் மேலும் பண டைனோசர்கள் ஆகவும் ஏழைகளும், சாமானயர்களும் நசுங்கி நாசமாக போகவும் தான் அரசு இயங்கி கொண்டிருக்கிறது.

டாஸ்மாக்கை ஒரேடியாக மூட முடியாது தான். கடைகளை குறைக்கலாமே. நேரத்தை குறைக்கலாமே.

இப்படியான போதை அடிமைகளை உருவாக்கி என்ன செய்ய கனவு கண்டுகொண்டிருக்கிறது. இதுதான் சிறப்பு பொருளாதாரமா?

நிச்சயம் இந்த பதிவு அதிமுக அடிமைகளுக்கு . ஆப்பு சொருகுன மாதிரி தான் இருக்கும்.

நீங்களெல்லாம் நேர்த்து விட்ட எருமைகள், கண்ணை கட்டிய கழுதைகள். இது உங்களாக எழுதப்பட்டதல்ல.

சமூகம்பால் அக்கறை கொண்ட ஒவ்வொரு சாமான்யனுக்காகவும் எழுதப்பட்டது...

கம்யூனிசமும் சாதி வெறியும்...


2011 தமிழக தேர்தலில் நாங்கள் படையாட்சி (வன்னியர்) என்று சுவர் விளம்பரத்தில் அப்பட்டமாக சாதியத்தை சொல்லி வாக்கு கேட்டவர்கள்தான் இந்த கம்யூனிஸ்டுகள்...

திமுக வின் சாதனைகள்...


இவர்கள் தப்பு செய்துவிட்டு பார்ப்பான் காரணம் என்று சொன்னது போல...


இங்கே இருக்குறவன் இந்த வடுக பயல்களை பார்த்துதான் சாதிய வன்மம் தமிழனுக்கு தொத்திக் கொண்டது என்று நாம் சொன்னால் உடனே மறுப்பு தெறிவிக்கிறாங்க..

அடேய் உன் தவறுக்கு ஆரியன் காரணம் என்றால்..

தமிழன் தவறுக்கு திராவிட வடுகன் தான் காரணம்..

ஆக ஆரியம் திராவிடம் இந்த இரண்டையும் வீழ்த்தினாலே தமிழனுக்குள் இருக்கும் ஏற்ற தாழ்வை நீக்கி விடலாம்...

திருட்டு திராவிட சாதி ஒழிப்பு நாடகத் தலைவன் கீ.வீரமணி யின் முகம்...


டி.எம். நாயர் வாழ்க..
ஜி.டி.நாயுடு வாழ்க..
ரெட்டி வாழ்க..
மேனன் வாழ்க..

இராமசாமி நாயக்கர் வாழ்க.

முத்துராமலிங்கத் தேவர்
ஐயையோ..

வன்னியர், கவுண்டர் அடேய்..

பிள்ளை ச்சீச்சி..

நாடார் சீ அசிங்கம்..

முதலியார் அடச்சீ..

பாத்தீங்களா பாத்திங்களா..

இந்த தமிழர்கள் எல்லாமே சாதி வெறி பிடித்தவர்கள்...

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க...


சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்...

இதைப் படித்த பின் வெங்காயத் தோலை தூக்கி போடவே மாட்டீங்க... பொக்கிஷமா நினைப்பீங்க...


உலகம் முழுவதும் சமையலில் பயன்படுத்தும் ஓர் பொதுவான காய்கறி தான் வெங்காயம். இந்த வெங்காயத்தின் சுவை வித்தியாசமாக இருப்பதோடு மட்டுமின்றி, இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் உள்ளடக்கியது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

பொதுவாக வெங்காயத்தைப் பயன்படுத்தும் போது, அதன் தோலை தூக்கி எறிந்து விட்டு, அதனுள் உள்ளதை தான் பயன்படுத்துவோம். இந்த கட்டுரையைப் படித்த பின், இனிமேல் அந்த வெங்காயத்தை தோலை நீங்கள் தூக்கி எறியமாட்டீர்கள். ஏன் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வெங்காய அடுக்குகள் :

பல அடுக்குகளைக் கொண்டது தான் வெங்காயம். ஆய்வுகளில் வெங்காயத்தில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமான அளவில் இருப்பதாக தெரிவிக்கின்றன. இதனால் இதனை அன்றாட உணவில் சேர்க்கும் போது உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

ப்ரௌன் நிற வெளி அடுக்கு :

வெங்காயத்தின் வெளிப்புறத்தில் உள்ள ப்ரௌன் நிற அடுக்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் போன்ற சரும ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் வளமான அளவில் உள்ளன.

வெங்காய தோல் :

வெங்காயத்தின் தோலில் உள்ள ஆற்றல்மிக்க நிறமியான க்யூயர்சிடின், தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கும் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், சக்தி வாய்ந்த மயக்க மருந்து பண்புகள் உள்ளன மற்றும் தூக்கமின்மையை சரிசெய்யும்.

இதர பண்புகள் :

வெங்காயத் தோலில் ஆற்றல் மிக்க ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன.

முக்கியமாக வெங்காயத்தின் தோலில் உள்ள சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையை உள்ளடக்கிய க்யூயர்சிடின், புற்று நோய்க்கு காரணமான செல்களை அழித்து, புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

ஆய்வுகளில் வெங்காயத்தின் தோலில் இருக்கும் கரையாத நார்ச்சத்து, குடலியக்கத்தின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து, குடல் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுப்பதாக தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், வெங்காயத் தோலில் உள்ள கரையாத நார்ச்சத்து பெருங்குடலில் தேங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றும், pH அளவை சீராக பராமரிக்கும்.

மேலும் வெங்காயத் தோல் கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கும். அவை:

* டைப்-2 நீரிழிவு
* இதய நோய்கள்
* இரையக குடலிய பிரச்சனைகள்
* உடல் பருமன்
* குடல் புற்றுநோய்

எப்படி வெங்காயத் தோலை உட்கொள்ளலாம்?

வெங்காயத்தின் தோலை ஸ்டீயூவ் வடிவிலோ, சூப் வடிவிலோ அல்லது தேநீர் வடிவிலோ எடுக்கலாம். இப்போது நாம் வெங்காய தோல் கொண்டு எப்படி டீ தயாரிப்பது என்று பார்ப்போம்.

வெங்காய தோல் டீ - முதலில் வெங்காயத்தின் தோலை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் கொதிக்கும் நீரை ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் கழித்து, அந்நீரை வடிகட்டி, தேன் கலந்து, இரவில் படுக்கும் முன் ஒரு கப் குடிக்க வேண்டும்..

குறிப்பு : வெங்காயத் தோலை கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பயன்படுத்தக்கூடாது...

தமிழர் இசையே உலகத்திலேயே மிகவும் பழமை.....


குமரிக்கண்டத்து இசை..

உலகத்திலேயே மிகவும் பழமையுடைய இசைத் தமிழர் இசையே.

உலகில் சிறந்த இசை இந்திய இசையே. அதிற்சிறந்தது தமிழிசையே.

தமிழிசையே இன்று உழையிசை அடிப்படையில் தாய்பண்களையும், கிளைப்பண்களையும் வகுத்தும், பழந்தமிழ் குறியீடுகளையும் பண் பெயர்களை வடச்சொல்லாக மாற்றியும் ”கருநாடக சங்கீதம்” எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர்.

கேள்வியைச் சுருதி என்றும், நிலையை ஸ்தாய் என்றும் மொழி பெயர்க்கப்பட்டுப் பயன்படுத்தப் படுகிறது.

குமரிக்கண்டத்துத் தமிழர் நுண்மாண் நுழை புலத்தராயும் , தலைசிறந்த நாகரிகமுடையராயும், எஃகுச் செவியராயும் இருந்தமையால், ஏழு பேரிசையும், ஐந்து சிற்றிசையும் ஆகிய பன்னீரிசையை (சுரத்தை) யும் கண்டு ஆயப்பாலை என்னும் முறையில் எழு பாலைப்பண்களைத் திரிந்ததும் அன்றி, அப்பன்னீரிசையும் வட்டப்பாலை என்னும் முறையில் 24 ஆகவும், திரிகோணப்பாலை என்னும் முறையில் 48 ஆகவும், சதுரப்பாலை என்னும் முறையில் 96 ஆகவும் நுட்பமாகப் பகுத்து எல்லையற்ற இசைப் பேரின்பத்தை நுகர்ந்திருந்தனர் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கண்டுணர்த்துயுள்ளனர்.

பேரிசை ஏழு (ஸ்வரங்கள் 7): குரல் (ஸட்ஜம்; ஸ), துத்தம் (ரிஷபம்; ரி), கைக்கிள்ளை (காந்தாரம்; க), உழை (மத்தியமம்; ம) இளி (பஞ்சமம்; ப), விளரி (தைவதம்; த), தாரம் (நிஷாதம்; நி) என்பவையாகும். சிற்றிசையை (ரி,க,ம,த,நி) ஆகணம் என்று, குரலும் (ஸ) இளியும் (ப) அல்லாத பேரிசையை அந்தரம் என்றும் வழங்கினர்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-13...


டேனியல் டங்க்ளஸ் ஹோம் (1833-1886) ஆவிகளுடன் சம்பந்தப்படுத்தி பேசப்பட்டவர்களில் மிகப் பிரபலமானவர். ஸ்காட்லாண்டில் பிறந்த அவர் தாயாரின் சகோதரி மேரி குக் என்பவரால் வளர்க்கப்பட்டார். சிறு வயதிலேயே பெரியம்மாவுடன் அமெரிக்கா சென்ற ஹோமிற்கு இளமையிலேயே நெருங்கியவர்களின் இறப்பு ஆவி ரூபத்தில் அடிக்கடி தெரிய வந்தது. இந்தக் காலத்தைப் போல 19 ஆம் நூற்றாண்டில் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாததால் சில இறப்புகள் அவரால் உடனடியாக அறியப்பட்டு சில நாட்கள் கழித்து கடிதம் வந்த பின்பே உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

அவருடைய 17ஆம் வயதில் தாய் "டேன், 12 மணி" என்று சொன்னதாய் காட்சி கண்டார். பெரும்பாலும் அவருக்கு ஏற்படும் காட்சிகள் இறந்தவர்கள் சம்பந்தப் பட்டதாகவே இருப்பதால் தாய் மரணமடைந்து விட்டார் என்று உணர்ந்தார் ஹோம். பின்பு தாயார் அந்தக் குறிப்பிட்ட நாளில் 12 மணிக்கு காலமானார் என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது. தாயாரின் மரணத்திற்குப் பிறகு அந்த வீட்டில் சத்தமாகத் தட்டுவது, தட்டு முட்டுச் சாமான்கள் எல்லாம் அங்குமிங்குமாக இடம் பெயர்வதெல்லாம் நிகழத் துவங்க அவரது பெரியம்மா பயந்தார். சிலர் சைத்தான் ஹோமை ஆக்கிரமித்துள்ளது என்று கருதினார்கள். ஒரு முறை ஒரு டேபிள் தானாக நகர ஆரம்பிக்க ஹோமின் பெரியம்மா பையிளை அதன் மீது வைத்தார். அப்போதும் அது நிற்காமல் போகவே தன் முழு எடையையும் அதன் மேல் போட்டு தடுத்துப் பார்த்தார். ஆனாலும் டேபிள் நகர்வது நிற்கவில்லை. தன் வீட்டுக்குள் சைத்தானின் சேட்டைகளை அறிமுகப்படுத்தி விட்டதாகக் கூறி அந்த அம்மையார் ஹோமை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.

ஆனாலும் அவரையும் அவரது சக்திகளையும் நம்பிய நண்பர்கள் அவருக்கு உதவினார்கள். ஆவிகளுடன் தொடர்பு கொண்டு தகவல்கள் சொல்ல ஆரம்பித்தார். அவருடைய இளம் வயதிலேயே நியூயார்க் மாகாணத்தின் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜான் எட்மண்ட்ஸ், பெனிசில்வேனியா பலகலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ராபர்ட் ஹாரே போன்றவர்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள்.


தனக்கு கிடைத்த ஆவிகளுடன் தொடர்பு கொள்ள முடிந்த அபூர்வ சக்திகள் இறைவனால் அளிக்கப்பட்டது என்று நம்பிய ஹோம் தன் சேவைகளுக்கு யாரிடமும் பணம் வசூலிக்கவில்லை. ஆனால் அவர் பெரிய செல்வந்தர்கள் தாங்களாகத் தந்த பரிசுகளையும், பண உதவிகளையும் மறுக்கவில்லை. அரசர்களும், பெரும் செல்வந்தர்களும், பிரபலங்களும் அவரை ஆதரித்தனர்.

1868ல் அட்லாண்டிக் கேபிள் கம்பெனி என்ற பிரபல நிறுவனத்தின் தலைமை பொறியியல் வல்லுனர் க்ராம்வெல் வார்லெ என்பவருடனும், பின்னர் லண்டன் வாதக்கலை சமூக நிறுவனத்துடனும் சேர்ந்து ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் சுமார் ஐம்பதை ஹோம் நடத்தினார். லண்டன் சமூக நிறுவனத்தினருடனான நிகழ்ச்சிகளில் சுமார் முப்பது பேர் கலந்து கொண்டனர். அவர்கள் 1871ல் சமர்ப்பித்த அறிக்கையில் சத்தங்கள், அதிர்வுகள், யாரும் தொடாமலேயே பொருள்களின் அசைவுகள், கண்ணுக்குத் தெரியாத இசைக்கருவிகளில் இருந்து இசை, பரிச்சயமில்லாத சில முகங்கள், சில கைகள் ஆகியவற்றை கண்டதாகவும்/ கேட்டதாகவும் கூறினார்கள்.

ஹோமைப் பற்றிப் படித்து ஆர்வம் கொண்ட விஞ்ஞானி சர் வில்லியம் க்ரூக்ஸ் என்பவர் தானும் ஹோமை வைத்து ஆராய்ச்சிகள் நடத்தினார். அவருடன் லண்டனின் ராயல் சொசைட்டியின் இன்னொரு விஞ்ஞானி சர் வில்லியம் ஹக்கின்ஸ் உட்பட எட்டு கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர். ஒரு ஆராய்ச்சியில் ஒரு மரப்பலகையின் எடையை ஹோம் தொடாமலேயே கூட்டிக் குறைத்துக் காண்பித்தார்.

இன்னொரு ஆராய்ச்சியில் ஒரு பிரத்தியேக கூண்டு ஒன்றைத் தயாரித்து அதில் ஒரு இசைக்கருவியைத் தலைகீழாக வைத்து இசைக்கருவியின் பின்புறத்தை மட்டும் ஹோமால் ஒரு கையால் தொட முடிகிறாற் போல் அந்தக் கூண்டை ஹோம் அமர்ந்திருந்த மேசையினடியில் தள்ளி வைத்தார்கள். ஹோமின் மறு கையை மேசையின் மேல் வைக்கச் சொன்னார்கள். (விளக்கப்படம் இங்கு தரப்பட்டுள்ளது).
ஹோம் தொட முடியாத அந்த இசைக்கருவியின் ஆணிப்பட்டையில் இருந்து வித விதமாக இசை கிளம்பியதைக் கண்டு அனைவரும் வியந்தனர். ஒரு சந்தர்ப்பத்தில் ஹோம் அந்த இசைக்கருவியை எடுத்து அருகில் இருந்தவர் கையில் தந்த பின்னரும் கூட, யார் கைகளும் இசைக்கருவி மீது இல்லாத போதும் கூட இசை நிற்கவில்லை.


இது போன்ற நிகழ்ச்சிகளில் பலரும் வித்தியாசமான விளக்கொளிகளைக் கண்டனர். தட்டப்படும் ஓசையைக் கேட்டனர். மணிக்கட்டு வரையே தெரியக் கூடிய கைகளை மட்டும் கண்டனர். கூடியிருந்தவர்களுடன் அந்தக் கைகள் கை குலுக்கியும், மேசை நாற்காலிகளை நகர்த்தியும், இறந்தவர்களிடம் இருந்து செய்திகளை அங்கு வைக்கப்பட்டிருந்த எழுத்தட்டைகளை சேர்த்து வைத்துக் காட்டியும் அங்குள்ளவர்களை பிரமிக்க வைத்தன. ஹோம் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் போது தன் கைகளையும் கால்களையும் அங்குள்ளவர்களைப் பிடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வார். தான் ரகசியமாக எதையும் இயக்குவதில்லை என்பதைப் புரிய வைக்க அப்படிச் செய்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

1852 முதல் ஹோம் செய்து காட்டிய இன்னொரு அற்புதம் அந்தரத்தில் நிற்பது. க்ரூக்ஸ் உட்பட பலர் அதைக் கண்டுள்ளார்கள். ஹோம் தரையிலிருந்து சுமார் ஆறு அங்குலங்கள் அந்தரத்தில் உயர ஆரம்பித்து பத்து வினாடிகள் அந்தரத்திலேயே நின்று மறுபடி தரைக்கு வந்ததைக் கண்ட ·ப்ராங்க் பொட்மோர் என்பவர் சாட்சிகளுடன் பதிவு செய்துள்ளார். பல சமயங்களில் பல அடிகள் மேலே அந்தரத்தில் நின்று காண்பிக்க இதில் ஏதோ ஏமாற்று வேலை இருக்கிறது என்று சந்தேகப்பட்ட ஒரு பத்திரிகை இது போன்ற ஏமாற்று வேலைகளை அம்பலப்படுத்துவதில் சமர்த்தரான எ·ப். எல். பர் என்ற நிருபரை அனுப்பியது.

அமெரிக்காவில் கனெக்டிகட்டில் வார்ட் சேனே என்ற செல்வந்தரின் வீட்டில் ஹோம் நிகழ்ச்சி ஒன்றில் பர் கலந்து கொண்டார். குறை காணப் போனவர் உண்மையாகவே அசந்து போனார். அந்தப் பத்திரிகையாளர் எழுதினார். "ஹோமின் கையை நான் பிடித்திருந்தேன். திடீரென்று ஹோம் தரையிலிருந்து ஒரு அடி தூரம் மேலே அந்தரத்தில் நின்றார். நான் அவருடைய காலையும் தொட்டுப் பார்த்தேன். மறுபடி கீழே வந்த அவர் அடுத்த முறை இன்னும் மேலே அந்தரத்தில் நின்றார். மூன்றாவது முறையோ அந்த அறையின் விட்டத்தைத் தொட்டுக் கொண்டு அந்தரத்தில் நின்றார். என்னைப் போல் அங்கு கூடியிருந்த அனைவரும் அதிசயித்து நின்றோம்...."


1868 டிசம்பரில் லார்ட் அடாரே, லார்ட் லிண்ட்சே, கேப்டன் வின்னே என்ற மூன்று பிரபலங்கள் முன்னிலையில் லார்ட் அடாரேயின் மாளிகையில் மூன்றாவது மாடியில் ஒரு அரை ஜன்னல் வழியாக அந்தரத்தில் வெளியே சென்று மறு அறையின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்தார். அந்த செய்தி பல பேரை பிரமிக்க வைத்தது என்றால் பலரை கடுமையாக விமரிசிக்க வைத்தது. அந்த மூன்று நபர்களும் சமூகத்தில் பெரிய மனிதர்கள், ஹோமிற்கு கள்ள சாட்சி சொல்ல வேண்டிய அவசியம் இல்லாதவர்கள் என்றாலும் அவர்களை ஹிப்னாடிசம் செய்து ஹோம் இதை நம்ப வைத்திருக்கலாம் என்று சிலர் விமரிசித்தார்கள்.

அதை கேப்டன் வின்னே உறுதியாக மறுத்தார். 'என்னை அறிந்தவர்கள் யாரும் என்னை அப்படி வேறொருவர் ஹிப்னாடிசம் செய்து நம்பவைக்க முடியும் என்று கூற மாட்டார்கள். அப்படியெல்லாம் ஏமாறக் கூடியவன் அல்ல நான்" என்றார். மேலும் ஹோம் நல்ல ஆரோக்கியமானவராக இருக்கவில்லை. காசநோயால் பாதிக்கப்பட்ட அவர் மிக பலவீனமாக இருந்தார். மூன்றாவது மாடியில், அதுவும் டிசம்பர் குளிரில் சர்க்கஸ் செய்து காட்டுவது போல் தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அளவு செய்து காட்டக் கூடிய சக்தியெல்லாம் அவரிடம் இருக்கவில்லை என்பதும் உண்மை.

இந்த அற்புதங்களுக்கெல்லாம் காரணமாக ஹோம் என்ன சொல்கிறார்? ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் சக்தி கொண்ட அவர் இந்த நிகழ்வுகளுக்கு தான் காரணமல்ல என்கிறார். இதெல்லாம் நட்பான ஆவிகள் மூலமே சாத்தியமாகிறது. ஆனால் அவை எல்லாம் என் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை...

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மேலும் பயணிப்போம்....

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைவு காரணமாக கடந்த 30 நாட்களில் 52 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு...


பாஜக மோடியின் மூன்றாண்டு ஆட்சி...


-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு
-மருந்து பொருள் விலை உயர்வு
-ரயில் கட்டண விலை உயர்வு
-கேஸ் விலை உயர்வு
-புதிய வரிகள்
-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
-ரூபாயின் மதிப்பு
- மோடி வெளிநாட்டு பயணங்கள்
- வெளியுறவு கொள்கை
- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
- உதய் மின்திட்டம்
- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
- பலுசிஸ்தான் தலையீடு
- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
-ஜி.டி.பி குளறுபடி
-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார்
-அந்நிய நேரடி முதலீடு
-தூய்மை இந்தியா திட்டம்
-மேக் இன் இந்தியா
-டிஜிட்டல் இந்திய திட்டம்
-அணு உலை
-புல்லட் ரயில்
-நில கையகப்படுத்தும் மசோதா
-ஸ்மார்ட் சிட்டி
-ஹிந்தி திணிப்பு
-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
-நீதிபதிகள் நியமனம் தாமதம்
-ஜி.எஸ்.டி
-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
-IT ஊழியர்கள் பணி நீக்கம்
-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு
-கல்புர்கி கொலை
-ரோஹித் வெமுலா
-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்
-ரகுராம் ராஜன் மாற்றம்
-ஜல்லிக்கட்டு
-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
-ஜியோ சிம் விளம்பரம்
-லலித் மோடி
-வியாபம்
-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
-தனி விமானம் 2000 கோடி
-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
-15 லட்சம் ஆடை
-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
-தேச பக்தி நாடகங்கள்
-மேகாலயா கவர்னர் காம லீலை
-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு
-சமஸ்கிருதம் திணிப்பு
-புதிய கல்வி கொள்கை
-பொது சிவில் சட்டம்
-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
-மாட்டு கறி தடை
-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
-அயோத்தி ராமர் கோவில்
-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
-SBI மினிமம் பேலன்ஸ் 5000
-மாட்டு அரசியல்
-நீட் தேர்வு
-ரேஷன் மானியம் நிறுத்தம்...

ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் தான் வைத்துக் கொள்ள வேண்டும், முதல்வருக்கு வாகன ஓட்டி எழுதிய கடிதம் - வைரலாகும் மின்னஞ்சல் புகார்...


டிஜிடல் உலகில் ஒரினலை தான் கொண்டு செல்ல வேண்டும் எனக் கூற என்ன காரணம் ?

ஒரிஜினல் காணாமல் போய் விட்டால் என்னால் வாகனம் ஓட்ட முடியாது நான் எப்படி வெளியே செல்வது ? மீண்டும் லைசன்ஸ் எளிதில் கிடைக்குமா ?

ஏற்கனவே போக்குவரத்து காவலர்கள் மக்களிடம் பணம் பறிக்கும் நிலையில் இந்த சட்டம் அவர்களுக்கு மேலும் வசதியாக அமைந்துள்ளது.

எனது சொந்த ஊர் நாமக்கல் எனில் சென்னை வரும் போது காணாமல் போய் விட்டால் யாரிடம் ? எங்கு சென்று வாங்குவது ?

எனவே இந்த உத்தரவை திரும்ப பெறும் படி கேட்டுக் கொள்கின்றேன்...

சோப்பு சீப்பு கண்ணாடி எல்லாம் அப்படி தானே வருது....


டெல்லி இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளரை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்த ஆம்ஆத்மி வேட்பாளர்...


டெல்லியில் நடைபெற்ற பவனா இடைத் தேர்தலில் 24 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் ராம் சந்ரா வெற்றி பெற்றுள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் பாஜக விட குறைவான வாக்குகளை பெற்று காங்கிரஸ் 3 வது இடத்திற்கு சென்றது.

பவனா தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளராக இருந்த பிரகாஷ் என்பவர் பாஜகவில் சேர்ந்ததால் இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. மேலும பிரகாஷ் யே பாஜக வேட்பாளராக பாஜக கட்சி இந்த முறை இடைத் தேர்தலில் நிறுத்தியது.

எனினும் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

பாஜகவிற்கு சென்றதால் இருந்த எம்எல்ஏ பதியை பிரகாஷ் இழந்துள்ளார் என பிற கட்சி பிரமுகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தற்போது வெற்றிபெற்றுள்ள ஆம் ஆத்மி வேட்பாளர் ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர் ஆவார்...

பிகாரில் தெறிக்கவிட்ட லல்லு பிரசாத் யாதவ்...


பாஜக மோடி அரசுக்கு எதிராக பீகாரில் மொத்த மக்கள் படையுடன் களமிறங்கிய லல்லு.. மொத்த இந்தியாவையும் தெறிக்கவிட்டுள்ளார்.

அனைத்து எதிர்கட்சிகளும், மோடி அரசு, RSS அனைவரும் வாயடைத்து போயிருப்பார்கள்...

பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


1,000 ருபாய் நோட்டு விரைவில் வெளியிடப் போவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு...

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நாளை டெல்லி பயணம், சசிகலா பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை வாபஸ் பெற முடிவு...


ஓணம் பண்டிகையும் தமிழர் அறிவியலும்...


இந்நாள் மலையாளிகள், முன்னாள் சேர-தமிழர்களின் விழா ஓணம்...

தமிழர்களின் திருவிழா என்றாலே அது வானியல் திருவிழா தான். ஓணமும் ஒரு வானியல் திருவிழாவே.

ஓணம் பற்றி சொல்லப்படும் வரலாறு...


மகாபலி என்ற அசுர குல (அசுரன் அப்படின்னாலே தமிழன் தான். பலி-பலம் பொருந்திய வலிமையானவன்; மகாபலி, பாகுபலி - மிகுந்த பலமுடையவன்) மன்னன் நல்லாட்சி செய்தவர். இந்த நல்லாட்சிக்கு அங்கீகாரம் அளிக்க நினைத்தார் விஷ்ணு என்ற விண்ணவன்.

விஷ்ணு வாமன (குள்ள) அவதாரம் எடுத்து வந்து அரசன் மகாபலியிடம் தனக்கு 3 அடி நிலம் தேவை என கேட்டார். 3 அடி நிலம் தானே என தன் குரு சுக்ர ஆச்சாரியாரின் சொல்லையும் மீறி சரி என்றார் மன்னர். உடனே முழு உருவம் எடுத்த விஷ்ணு ஒரு பாதத்தை விண்ணிலும், மறு பாதத்தை பூமியிலும் வைத்து மூன்றாவது அடி வைக்க இடம் கேட்க, மன்னன் தன் தலையையே கொடுத்தார்.


(கெளரவம் திரைப்படத்தில் பெரியவர் சிவாஜி தனக்குப் போட்டி வக்கீலான இளைய சிவாஜியை நினைத்து பாடும் பாடலில் இந்த வரலாறும் சொல்லப்படும்.
அந்தப்பாடல்: நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா?)

மன்னரின் தலையில் பாதம் வைத்து  பாதாள உலகம் செல்லுமாறு அழுத்தினார் விஷ்ணு.

தன் நாட்டு மக்களை நேசிப்பதாக மன்னர் மகாபலி சொல்லவே விஷ்ணுவும் சரி ஒவ்வொரு வருடமும் வந்து விட்டு போ என்றார்.


இந்த நல்ல மன்னரை வரவேற்கவே பூக்கோலம் கொண்டு ஓணம் திருவிழா என விழாக் கொண்டாடுகின்றனர் சேர மக்கள்.

இந்த வரலாறுக்குப் பின் இருக்கும் தமிழர் வரலாறு.

கி. மு 10,000 ஆண்டளவில் சிந்துவெளி முதல் கேரள பகுதி வரை ஆண்ட தமிழின காலக்கட்டத்தில் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளுக்கு சென்று வருவது சாதாரண விசயமாக இருந்தது. அதனால் தமிழர் உலகப்பரப்பை 7 பகுதிகளாக, உலகங்களாக பிரித்து வைத்திருந்தனர்.


பாதாளம் அல்லது படு பாதாளம் என்று இன்றும் நாம் சொல்லும் வார்த்தையின் பொருளும் காலடியில் இருக்கும் நிலத்தின் செங்குத்தான பிளவு, மிக ஆழமான குழி என்பதே. தமிழக பகுதியில் ஒரு பெரிய குழியை தோண்டிக்கொண்டே சென்றால் பூமியின் அடுத்த பகுதியில் நாம் வெளியேறும் இடம் மாயன்கள் (தமிழர்கள்) வசித்த அதே தென், மத்திய அமெரிக்கா பகுதி தான்.

ஆக பாதாளம் என்று மிகச் சரியாக கணக்கிட்டு தமிழர்கள் சொன்ன பகுதிக்கு சென்று வந்த தமிழ் மன்னன் தான் மகாபலி மன்னன்.

(மாயன்கள் பற்றி விளக்கமாக விரைவில் இன்னொரு பதிவில் காண்போம்.)

இந்த வரலாறுக்குப் பின் இருக்கும் தமிழரின் வானியல் அறிவியல்


சேர தமிழர்கள் நிலா சிரவன நட்சத்திரத்திலும், சூரியன் சிங்க நட்சத்திரக்கூட்டத்திலும் இருக்கும் நாளில் ஓணம் கொண்டாடுகிறார்கள்.

பழந்தமிழர் குமரிக்கண்ட அழிவைக் கணக்கில் கொண்டு (கி. மு. 10,000 ஆண்டளவில்) துவங்கப்பட்ட "கொல்ல வருஷம்" என்று இன்றும் அந்தக் கோர நிகழ்வை நினைவு கூர்கிறார்கள் அந்த சேர மலையாளிகள்..

சங்க காலத்தில் தமிழர்களின் திருவிழா இந்த திருவோணம்.


பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில், பாண்டிய மக்கள் திருவோணத்தை பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.

"கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓண நன் நாள் கோணம் தின்ற வடு வாழ் முகத்த சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை மறம் கொள் சேரி மாறுபொரு செருவின் மாறாது உற்ற வடு படு நெற்றி சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர் கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…"

தமிழரின் 10 நாள் திருவிழா :

ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும்.

அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர்.


நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர்.

ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகைச் செலுத்துவது இதன் சிறப்பம்சம்.

ஆறாம் நாள் திருக்கேட்டை (திரிக்கேட்டா) , ஏழாம் நாள்மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத் திருவிழா முடிவடைகிறது.

இது பற்றி மேலும் விளக்கம் காண:

பழந்தமிழர்கள் வருடக்கணக்கை ஆவணியில் (ஆகஸ்ட்-செப்டம்பரில்) வரும் சம பகல்-இரவு (Autumnal Equinox) நாளினைக்கொண்டும் தொடங்கி இருக்கிறார்கள்.

மேற்கத்திய வானியலில் (Aquila- பறவை) நட்சத்திரக்கூட்டத்தில் (தமிழில் அக்கிலா என்பதும் பறவையைக் குறிக்கும் சொல். காண்க:) அல்டைர் (Altair) என்றழைக்கப்படும் மைய நட்சத்திரத்தின் இரு புறமும் இரண்டு நட்சத்திரங்கள் காம்மா, பீட்டா என அழைக்கப்படுகிறது.

இந்த அல்டைர் நட்சத்திரத்திற்கு தமிழர் வைத்த பெயர் திருவோணம். திருவோணம் நட்சத்திரம் சிரவனா என்றும் அழைக்கப்படுகிறது.

27 நட்சத்திரக்கூட்டங்களில் 2 நட்சத்திரங்கள் தான் திரு என்ற அடைமொழி பெறுகிறது. ஒன்று திருவாதிரை (Betelgeuse), மற்றொன்று இந்த திருவோணம் (Altair ).

1. காம்மா, பீட்டா இரண்டு துணை நட்சத்திரங்களும் சம அளவில் நிலை நிறுத்தும் தராசு போன்று செயல்படுவதைக் குறிக்கிறது.

2. மகாபலி மன்னனும் தன் குருவின் பேச்சைக்கேட்டிருந்தால் தூர தேசத்துக்கு செல்ல வேண்டி இருக்காது என்றும் பொருள் குறிக்கிறது.

3. சிரவண நட்சத்திரம் என்ற சொல்லின் சமசுகிருத பொருளும் கேட்டல் என்பதையே குறிக்கும். காண்க:

4. காந்தி அடிகளை பாதித்த இரண்டு நாடகங்களில் ஒன்றான சிரவண நாடகத்தின் கருத்தும் கேட்டல் என்பதையே குறிக்கும். (இன்னொரு நாடகம் அரிச்சந்திரன்).

5. அந்த நாடகத்தில் உடற்குறையுள்ள பெற்றோரை இருபக்க கூடையில் சுமந்து சென்ற சிரவண என்ற அவர்களின் ஒரே மகன் பெற்றோருக்கு தண்ணீர் தர குளத்தில் இறங்கியபோது இராமனின் தந்தை தசரத அரசன் ஏதோ விலங்கு என்றெண்ணி அம்பெய்தி கொல்ல, அவனின் பெற்றோர் தசரத மன்னனுக்கு சாபம் விடுக்கின்றனர்: மகனின் பிரிவால் வருந்துவார் என்று. அதன் பிறகே பிறந்த இராமன் வனவாசம், தசரதனுக்கு பிரிவு வலி. காண்க:

இரண்டு நட்சத்திரங்களும் (காம்மா, பீட்டா) காலத்தால் முந்தைய, அழிவு நோக்கிய நட்சத்திரங்கள். மைய நட்சத்திரமோ (அல்டைர் அ  திருவோணம் அ சிரவனா) பிரகாசமானது, காலத்தால் பிந்தியது.

இப்படி தமிழரின் வானியல் அறிவு பல பழங்கதைகளாய், அறிவுரையாய், வரலாறாய், திருவிழாக்களாய் உருமாறி இருக்கிறது.

முன்னாள், இந்நாள் தமிழர்கள் அனைவருக்கும் திருவோண நல் வாழ்த்துக்கள்...

ட்ராமா யுத்தத்தின் ஒரு கோரிக்கையான சிபிஐ விசாரணை குறித்து இதுவரை இருவரும் வாய் திறக்கவில்லை...


தமிழர்களுக்குள் தீராத பகையை உருவாக்கியுள்ள, இந்த ஆரிய இனம், திராவிட இனம் என்ற கேள்விக்கு அறிவியல் சார்ந்த நோக்கு எவ்வாறு இருக்கிறது?


மசசூசட்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்தியத் துரையில் இந்த கேள்வியில் ஆராய்ச்சி செய்யும் அறிவியலாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கு சில நாட்கள் முன்பு நடை பெற்றிருக்கிறது.

அதில் ஆரியர்கள் வந்தேரிகள் என்கிற நோக்கு உடை பட்டுப் போயிருக்கிறது.

University of Massachusetts Dartmouth, Center for Indic Studies
July 3, 2006
Press Release

Scientists Collide with Linguists to Assert Indigenous origin of Indian Civilization

Comprehensive population genetics data along with archeological and astronomical evidence presented at June 23-25, 2006 conference in Dartmouth, MA, overwhelmingly concluded that Indian civilization and its human population is indigenous.

In fact, the original people and culture within the Indian Subcontinent may even be a likely pool for the genetic, linguistic, and cultural origin of the most rest of the world, particularly Europe and Asia.

Leading evidences come from population genetics, which were presented by two leading researchers in the field, Dr. V. K. Kashyap, National Institute of Biologicals, India, and Dr. Peter Underhill of Stanford University in California. Their results generally contradict the notion Aryan invasion/migration theory for the origin of Indian civilization.

Underhill concluded "the spatial frequency distributions of both L1 frequency and variance levels show a spreading pattern emanating from India", referring to a Y chromosome marker. He, however, put several caveats before interpreting genetic data, including "Y-ancestry may not always reflect the ancestry of the rest of the genome"

Dr. Kashyap, on the other hand, with the most comprehensive set of genetic data was quite emphatic in his assertion that there is "no clear genetic evidence for an intrusion of Indo-Aryan people into India, [and] establishment of caste system and gene flow."

Michael Witzel, a Harvard linguist, who is known to lead the idea of Aryan invasion/migration/influx theory in more recent times, continued to question genetic evidence on the basis that it does not provide the time resolution to explain events that may have been involved in Aryan presence in India.

Dr. Kashyap's reply was that even though the time resolution needs further work, the fact that there are clear and distinct differences in the gene pools of Indian population and those of Central Asian and European groups, the evidence nevertheless negates any Aryan invasion or migration into Indian Subcontinent.

Witzel though refused to present his own data and evidence for his theories despite being invited to do so was nevertheless present in the conference and raised many questions.  Some of his commentaries questioning the credibility of scholars evoked sharp responses from other participants.

Rig Veda has been dated to 1,500 BC by those who use linguistics to claim its origin Aryans coming out of Central Asia and Europe. Archaeologist B.B. Lal and scientist and historian N.S. Rajaram disagreed with the position of linguists, in particular Witzel who claimed literary and linguistic evidence for the non-Indian origin of the Vedic civilization.

Dr. Narahari Achar, a physicist from University of Memphis clearly showed with astronomical analysis that the Mahabharata war in 3,067 BC, thus poking a major hole in the outside Aryan origin of Vedic people.

Interestingly, Witzel stated, for the first time to many in the audience, that he and his colleagues no longer subscribe to Aryan invasion theory.

Dr. Bal Ram Singh, Director, Center for Indic Studies at UMass Dartmouth, which organized the conference was appalled at the level of visceral feelings Witzel holds against some of the scholars in the field, but felt satisfied with the overall outcome of the conference.

"I am glad to see people who have been scholarly shooting at each other for about a decade are finally in one room, this is a progress", said Singh.

The conference was able to bring together in one room for the first time experts from genetics, archeology, physics, linguistics, anthropology, history, and philosophy. A proceedings of the conference is expected to come out soon, detailing various arguments on the origin of Indian civilization.

Bal Ram Singh, Ph.D.
Director, Center for Indic Studies
University of Massachusetts Dartmouth
285 Old Westport Road
Dartmouth, MA 02747

ஆரியர்கள் என்கிற ஒரு இனமுண்டா? என்றால் அப்படிப் பட்ட ஒரு இனமே இல்லை என்பதே இதன் தீர்ப்பு.

சமஸ்கிருதத்தில் "ஆரிய" என்றால் Noble - "தலை சிறந்த" என்று பொருள். அது ஒரு குணாதிசயத்தை தான் குறித்து வந்துள்ளது.

அதற்கு இன முத்திரை கொடுத்து இந்தியர்களை வட ஆரியர்கள், தென் திராவிடர்கள் என்று பிரித்து சண்டை மூட்டி அந்த சண்டையில் வெளி நாட்டவர் குளிர் காய்ந்தது தான் மிச்சம்.

இதில் திரு. விட்சல், இது வரை ஆரிய படை யெடுப்புக் கோட்பாட்டை தன் உயிரினும் மேலாக பாதுகாத்து வந்தவர். தன் தவறை ஒத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

இல்லாத ஆரியத்தை உருவாக்கி அதற்கு மாற்றாக திராவிடம் என்ற வார்த்தையை உருவாக்கி தமிழனை முட்டாளாக வைத்திருக்கிறது பிழைக்க வந்த வந்தேறிக் கூட்டம்...