22/12/2017

உலகம் வியந்த கணித மேதை சீனிவாச இராமானுஜன் பிறந்த தினம் இன்று...


தனது 33 வது வயதில் மரணம் அடைந்தார், உலக கணித வரலாற்றில் இவருக்கு நிகராக இன்னும் யாரும் பிறக்கவில்லை என்றால் அது மிகையாகாது.

ஈரோட்டில் பிறந்து கும்பகோணத்தில் வளர்ந்தார்.

3 வயது வரை இவர் பேசும் திறன் இல்லாமல் இருந்தார்.

ஆரம்பத்தில் இவரின் திறமையை கண்டு கொள்ளாத உலகம் அவரது வாழ்கையின் கடைசி காலகட்டத்தில் இராமானுஜத்தின் கணித ஆற்றலை பார்த்து உலகமே வியந்தது.

இவர் எழுதிய பல்வேறு தேற்றங்களுக்கான விடையை இன்னும் இந்த உலகம் இராமானுஜன் எப்படி இந்த விடையை கண்டு பிடித்தார் என்ற வழி தெரியாமல் திகைத்து நிற்கின்றது.

இவரது வாழ்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டுள்ளது. பார்ப்போரை திகைக்க வைக்கும்...

இலுமினாட்டி களும் இவ்வுலக முட்டாள்களும் (அடிமைகளும்).. யார் இந்த இலுமினாட்டிகள்?


வெறும் பத்தாயிரம் நபர்களை உள்ளடக்கிய ஒரு ரகசிய அமைப்பு.

இதில் பெரும்பான்மையோர் யுதர்கள், இந்த பத்தாயிரம் பேரை ஒரு யுத குடும்பம் என்றே சொல்லலாம்.

இவர்கள் இஸ்ரேல், அமேரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கிந்திய நாடுகளில் பரவிக்கிடக்கின்றனர்.

உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் இவர்கள் தான் காரணம்.

இந்த பத்தாயிரம் பேருக்கு வேலை செய்ய உலக முழுவதும் நிறைய புரோக்கர்கள் அதாவது மாமாக்கள் இருக்கின்றனர்..

உதாரணத்திற்கு இந்தியாவின் மன்மோகன்சிங், மோடி, சோனியாகாந்தி, அருண்ஜெட்லி, பா.சிதம்பரம், சுப்பிரமணிய சாமி, கருனாநிதி, ஜெயலலிதா, லல்லுபிரசாத் யாதவ், மம்தாபானர்ஜி இன்னும் பலர்....

இவர்களை பற்றி பின்னர் பார்ப்போம்..

இந்த பத்தாயிரம் பேருக்கும் தலைவி இங்கிலாந்து இளவரசி எலிசபெத்..

உலகில் பல்வேறு நாடுகளில் இயங்கும் நாற்பத்தைந்தாயிரம் பெரும் கம்பேனிக்கு (நிறுவனத்திற்கு) உரிமையாளர்கள் இந்த இலுமினாட்டி குடும்பம்....

இந்த நாற்பத்தைந்தாயிரம் கம்பேனிக்குள் உலகில் உள்ள அனைத்து காப்ரேட் கம்பேனிகளும் அடக்கம்.

இதில் பெரும்பான்மையான நிறுவனத்திற்கு முதலாளி அமேரிக்காவின் ரூபர்ட் மொரோடாக்.

அது மட்டுமல்ல இந்தியாவின் விஜய் டிவி, Zee டிவி, ஸ்டார் குரூப், அமெரிக்காவின் பாக்ஸ் நெட்வொர்க் இவைகளின் முதலாளியும் இந்த பர்ட் மொரோடாக் தான்..

இலுமினாட்டி என்ற இரகசிய சமூகத்தின் தலைமை யூதர்களே..

இல்லுமினாடிகள் மட்டுமல்ல freemason, Roth’s child (இவர்களே நீங்கள் கூறிய அந்த 13 குடும்பத்தை சேர்ந்தவர்கள்) இன்னும் நமக்கு தெரியாத சில ரகசிய சமூகங்களும் உலகை ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் முக்கியமாக யூத மதம், கிருஸ்தவ மதம், இஸ்லாம் எனும் மூன்று மதங்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது.

இந்த மூன்று மதங்களின் அடிப்படையிலும் உலகத்தில் ஒரு கண்கட்டு வித்தைகளில் தேர்ந்த ஒருவன் தோன்றுவான்.

அவனுக்கு ஒருகண் குருடாக இருக்கும் (இதுவே அவர்களின் ஒற்றைக்கண் சின்னத்துக்கு காரணம்).

அவன் தன் திறமையையும் பலத்தையும் கொண்டு உலகையே தனது ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வர முயற்சிப்பான் இறுதியில் மாபெரும் யுத்தம் ஒன்றில் கொல்லப்படுவான் என்று முன்னறிவிப்பு கூறப்பட்டுள்ளது.

யூதர்கள் இவனை மெசையாஹ் என்றும் , கிருஸ்தவர்கள் இவனை antichrist என்றும், முஸ்லிம்கள் நாம் இவனை தஜ்ஜால் என்றும் அழைப்பார்கள்.

இந்த இலுமினாட்டிகளின் அனைத்து படுபாதக செயல்களின் இறுதி இலக்கு அவனது வருகையே.

அவன் வந்தபின் நிலைமை இன்னும் மோசமாகி விடும் என்பது வேறு.

இது யூதர்களின் சதிவலை என்று கூறினால், ஒருவேளை இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்றும் முஸ்லிம்களின் எதிரி யூதர்கள் என்பதால் அவர்களின் மீது நாங்கள் பழி போடுவதாக நீங்கள் எண்ணக்கூடும்.

ஒரு உதாரணம், அழகாக கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலப்படும்.

இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட அன்று அங்கே தொழில்புரிந்த அனைத்து யூதர்களும் விடுமுறையில் சென்றிருந்தனர்.

இது தற்செயலானதா என்று சற்று சிந்தித்து பார்த்தால் விடை கிடைக்கும்.

யூத சியோநிசவாதிகள் (இலுமினாட்டிகள்) தல்மூத் எனும் வேதத்தை பின்பற்றுகிறார்கள்.

அவர்களின் வேதத்தின் படி அவர்கள் யாரையும் கொல்லலாம், சொத்துக்களை அபகரிக்கலாம். அதற்கு அனுமதி உண்டு.

ஆனால் யூதர்களை கொல்ல முடியாது, யூதர்களை கொல்வதற்கு அனுமதி இல்லை.

அதனால் தான இரட்டை கொபுரத்தாக்குதலின் போது கூட யூதர்கள் தரப்பில் சேதம் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டார்கள்.

இன்னும் பல தகவல்கள் இதைப் போல் உண்டு...

தமிழா விழித்தெழு...


திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்....


பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர்2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்.

பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை).

1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது.

அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின் வரலாறு. தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ, சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டி எடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையைப் பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.

மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது...

இந்திய கார்பரேட் (இலுமினாட்டி) அரசியல்...


இலக்கியத்தில் வாழும் யாழ்...


தமிழர் கண்டு வாசித்த முதல் இசைச்கருவி யாழ் ஆகும்.

நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்கு யாழ் ஒர் அடிப்படைக் காரணமாகும்.

தமிழுக்கென்று சிறப்பான எழுத்து “ழ்”. “யாழ்” என்ற சொல்லில் ”ழ்” தாங்கி வருவதிலேயே தெரிகின்றது யாழ் தமிழுக்குரிய இசைக்கருவி என்று. 

யாழின் வகைகள் பல. அவை யாழ் வகைகள்...

பேரியாழ் (21 நரம்புகளை உடையது).
மகரயாழ் (17 நரம்புகளை உடையது).
சகோடயாழ் (16 நரம்புகளை உடையது).
செங்கோட்டியாழ் (7 நரம்புகளை உடையது).

இவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், சீரியாழ், மருத்துவயாழ், ஆதியாழ் எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.

மேலும், யாழ் நூலில் கூறப்படும் யாழ்கள், வில் யாழ் , சீறி யாழ், செங்கோட்டியாழ், பேரி யாழ், சகோட யாழ், மகர வேல்கொடி யாழ் , மகர யாழ் / காமன் கொடி யாழ் மற்றும், மகர யாழ் / வர்ணர் ஊர்தி யாழ்.

வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில்.

அந்த வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம்.

நான் சிறுவதாக இருக்கும் பொழுது இவ்விசைக்கருவியை "fair tale" கார்டோன்களில் கண்டதுண்டு.

வழக்கத்தில் இவ்விசைக் கருவியைக் கண்டிராததால் அது மேற்கத்திய இசைக்கருவி என்றும் கார்டூணுக்கு உரிய இசைக்கருவி என்றும் நினைத்ததுண்டு. பின்னர் உண்மை அறிந்த பின்னே. யாழ் தமிழன் கண்ட இசைக்கருவி என்றும் அதன் மகிமையும் புரிந்து கொண்டேன்.

இன்னும் நம்மில் பலருக்கு இந்த உண்மை தெரியாமலே உள்ளது.

பண்டைய நாகரிகங்கள் எல்லாவற்றிலும் யாழ் என்ற இசைக்கருவி பயன்பாட்டில் இருந்துள்ளது. கிரேக்க பாரம்பரியத்தில் இதைக் காணலாம்.

ஆங்கிலத்தில் யாழ் இசைக்கருவியை ஹார்ப் (harp) என்று அழைப்பர். இன்னும் அவர்களிடையே நவீன யாழாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் தமிழர்கள் மறந்துவிட்ட இசைக்கருவியாக யாழ் திகழ்கின்றது. 

இன்று இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது.

இராமயணத்தில் இலங்கை அரசனாக இராவணனை சித்தரிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. இராவணன் சிறந்த யாழ் வித்வான் என்றும் கூறப்பட்டுள்ளது. இராவணன் இயற்றிய இசைநூலின் பெயர் இராவணியம் ஆகும், யாழ் மீட்டுபவர்களை யாழ்பாணர் என்றழைப்பர்.

இலங்கைக்கு யாழ்பாணம் என்று பெயர் வந்திருக்க இதுவும் ஒரு காரணம் என்றும் கூறலாம்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் யாழ் சிந்து சமவெளி நாகரீகத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

தொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக் குறிக்கும்.

இது மிடற்றிசை அதாவது குரலிசை, நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை) ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும்.

இந்த பண்வகைகளை ‘யாழின் பகுதி’ எனவும் இசைநூலை ‘நரம்பின் மறை’ எனவும் தொல்காப்பியர் குறித்துள்ளார்.

பண்டைக்காலத்தில், தந்தி கருவியான யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன என அறியலாம்.

மேலும், அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பு, பல்வகை யாழ்கள் மற்றும் யாழின் அமைப்புகள் தொடர்பான குறிப்புகள் பல இருக்கின்றன.

சிலப்பதிகரம் தமிழிசையைப் பற்றி தெளிவாக விளக்கும் தமிழிசை நூலாகத் திகழ்கிறது.

சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையில் யாழாசிரியனின் அமைதியும், கானல் வரி மற்றும் வேனிற் காதையில், யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எங்கனம் இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

சீவக சிந்தாமணி எனும் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இலக்கிய நூலிலும் யாழ் பற்றி பேசப்பட்டிருக்கிறது.

காந்தர்வதத்தை என்னும் இசையில் தேர்ந்த பெண்ணுக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், யாழுக்கு நேரக்கூடிய குற்றங்கள், யாழுடன் சேர்ந்து பாடுவதற்கான இலக்கணம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

பருந்து பறக்கும் பொழுது நிழல் அதனைத் தொடர்வது போன்று மிடற்றிசையும் , யாழிசையும் இணைந்து இருத்தல் வேண்டும் என்றும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

திருமுறையாசிரியர்களின் பதிகங்களில் யாழ் இறையாடலுக்குப் பயன்பட்ட இசைக்கருவியெனப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

திருஞான சம்பந்தர் இயற்றிய தேவாரப்பதிகங்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அழகாக யாழில் வாசித்திருக்கின்றார். இவர் இசை மீட்டுவதால் தான் திருஞானசம்பந்தரின் பாடல் சிறக்கிறது என்று கூறிய அவருடைய சுற்றத்தாரின் சொல்லைத் தாங்க முடியாமல், தான் வாசிக்க முடியாத அளவிற்கு ஒரு பாடலை அருள சம்பந்தரிடம் வேண்டினார் திருநீலகண்ட யாழ்பாணர். அவரின் வேண்டுதலுக்கு இணங்க “மாதர் மடப்பிடியும்” எனும் பாடலை அருளினார். கமகங்களைச் சரியாக யாழில் இசைக்க முடியாமல் நீலகண்ட யாழ்பாணர் தனது யாழை உடக்க முற்பட்டப்போது அதை திருஞானசம்ந்தர் தடுத்தக் கதையும் உண்டு. இதுப் போன்று பக்தி இலக்கியங்களிலும் யாழின் பயன்பாடு அதிகமாகவே காணப்படுகின்றன.

பொருநராற்றுப் படையில் யாழ் பற்றிய வர்ணனை ஒன்று காணப்படுகிறது. அதி அற்புதமான வர்ணனையாகவும் கருதப்படுகின்றது. ஒப்பனைச் செய்யப்பட்ட மணமகளின் அழகிய தோற்றம் போலக் காட்சியளிக்கிறது யாழ் என்கிறார் பொருநராற்றுப் படை இயற்றிய புலவர். இத்தகைய யாழை மீட்டி பாணர்கள் இசையைப் பொழியும் போது, அதன் இசையில் மயங்காதவர்கள் எவரும் இல்லை என்கிறார்.

வழிப்பறிக் கொள்ளையர்கள் கூட இந்த இசையைக் கேட்டதும், தங்களது கொலை, கொள்ளை செய்யும் எண்ணத்தைக் கைவிட்டு விடுவார்களாம். தங்களது கையில் மறைத்து வைத்துள்ள கொடிய கொலைக் கருவிகளைக்கூட இசையில் மயங்கிக் கீழே போட்டு விடுவார்கள் என்கிறார் புலவர்.

கல்லாடம் என்னும் சைவ நூல் கல்லாடர் என்பவரால் இயற்றப்பட்டது. ஒன்பதாம் திருமுறைகளில் ஒன்றான இந்த நூல் கி.பி. 11-ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய கல்லாடம் அகப்பொருள் நூலாகும். கல்லாடத்தில் நாரதப்பேரியாழ், தும்புருயாழ், கீசகயாழ், தேவயாழ் என்று நான்கு வகை யாழ்கள் பற்றிய செய்திகள் உள.

நாரதப் பேரியாழ் 1000 நரம்புகளைக் கொண்டது. தும்புருயாழ் 9 நரம்புகளையும், கீசக யாழ் 100 நரம்புகளையும் கொண்டுள்ளது என்கிறது.

மேலும், சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம், திருமங்கலம் கோயில்களிலும், பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும், யாழ் குறித்தான பல சிற்பங்களைப் பார்க்கலாம். (இந்த சிற்பங்களின் புகைப்படங்கள் இணையத்தில் காணலாம்).

கொங்குவேளிர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டது பெருங்கதை என்ற காப்பியம். இதில் யாழ், வீணை, குழல், வளை, வயிர் ஆகிய ஐந்து பண்ணிசைக் கருவிகளாகும். பறை, முழவு, முரசு, தண்ணுமை, தடாரி, குடமுழா, பாண்டில் ஆகிய ஏழு தாளக் கருவிகளும் மனிதக் குரலும் இசையெழு தளங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. (தமிழர் இசை ப. 263).

யாழ்நூல், நாரதகீதக்கேள்வி ஆகிய இசை நூல்கள் இருந்தன என்று கூறப்படுகிறது. ‘கேள்வி’ என்ற சொல் யாழ்க் கருவியையும், இசை நூலையும் குறிக்கும். இசைப்பயிற்சி பெறுவோர் இத்தகைய நூற்களைக் கற்றுத்தேற வேண்டும் என்கிறது.

யாழும் பாடலும் வேறுபாடின்றி ஒத்து இயங்குதல் வேண்டும். பண்ணிசை விதிகளை நன்கு அறிந்த குற்றமற்ற கேள்வியறிவு உடையவர்களே சிறந்த இசை வல்லுநர் ஆவார் என்கிறது பெருங்கதை.

யாழினை இசைப்பதற்கென்றே 'பாணர்' என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர்.

அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.

ஈழத்தவரான சுவாமி விபுலாநந்தர் 1947 இல் ”யாழ் நூல்” என்னும் தமது இசைத் தமிழ் நூலில் யாழைப் பற்றி பல விரிவான ஆய்வுகளைத் தொகுத்துள்ளார்.

யாழ் தமிழர்களின் வாழ்வில் ஒன்றி இருந்ததை இதில் காணலாம். யாழ் மட்டுமல்ல இன்னும் பல தமிழன் கண்ட தமிழ் இசைக்கருவிகள் இலக்கியங்களிலும் புராணங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன.

மீட்க வாய்பில்லை என்றாலும் பரவாயில்லை அதைப் பற்றி அறிந்து கொள்ள முற்படுவோமே...

பாஜக வின் 19 மாநில ஆட்சிப் பெருமை...


1. மகாராஷ்டிரா சிவசேனை ஆதரவிலான மைனாரிட்டி அரசு.

2. ஆந்திரா சந்திராபாபு நாயுடுவின் அரசு.

3. பீஹார் நிதிஷ் குமாரின் அரசு.

4. காஷ்மீர் பி.டிபி தலைமையிலான அரசு.

5. கோவா காங்கிரஸ் எம் எல் ஏக்களை திருடி அமைத்த அரசு. அதுவும் கோவா பார்வார்டு கட்சி மற்றும் மகாராஷ்டிராவாதி கோமன்டக் கட்சி ஆதரவுடன்.

6. மணிப்பூர் காங்கிரஸ் எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி அமைத்த அரசு.

7. அருணாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி அதன் முதலமைச்சர் தற்கொலை செய்து அங்கு நடந்த கேவலங்களுக்கு பின்னர் பாரதிய ஜனதாவின் சில எம்.எல்.ஏ க்களுடன் ஒரு ஆட்சி நடக்கின்றது.

8.அசாமில்  மைனாரிட்டி பாஜக ,  அசாம் கன பரிசத் , போடோ லேண்ட் மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி.

9. நாகாலாந்தில்  மாநிலக் கட்சிக்கு 4 எம் எல் ஏ பாரதிய ஜனதா ஆதரவு.

10. சிக்கிம்  மாநிலத்தில் சிக்கிம் ஜனநாயகக் கட்சி.

11.ஜார்கண்டில்   ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுடனான கூட்டணி அரசு. 

பாரதியஜனதா தனிப் பெரும் பான்மையுடன் ஆட்சி செய்யும் மாநிலங்கள்..

1.குஜராத்,
2.உத்தர்பிரதேஷ்
3.மத்தியப் பிரதேஷ்
4. இராஜஸ்தான்.
5.சத்தீஸ்கர்
6.ஹிமாச்சல் பிரதேஷ்,
7.உத்தர்கான்ட்
8.ஹரியானா.

பாரதிய ஜனதா இன்னமும் உள்ளே நுழைய விடாமல் தடுக்கும் மாநிலங்கள்...

1) தமிழ்நாடு
2) கேரளா
3) தெலுங்கானா
4) ஒரிசா
5) மேற்கு வங்கம்
6) வடகிழக்கு மாநிலங்கள்.

பாரதிய ஜனதா வின் 19 மாநில ஆட்சி பெருமையை  உற்றுப் பார்த்தால் அதன் பொய்கள் தெரியும்...

Biological weapons பதிவு 4 : செயல்திட்டம் முன்னோட்டம்...


சீத்தாப்பழத்தில் இத்தனை மருத்துவ குணமா..?


சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.

இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால் தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

பழத்தில் உள்ள சத்துக்கள்...

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்...

சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள் குணமடையும்...

சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

மேனி பளபளப்பாகும்...

விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்.

எலும்பு பலமடையும்...

சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்...

சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்...

சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.

இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.

பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது...

குண்டலினியோக தவம்...


ஆரம்பத்தில், பத்து நிமிடம் குண்டலினி யோக தவம் (Meditation) செய்தோமானால், தொடக்கத்தில் அரை நிமிடம் மனம் நிலைத்திருந்தது என்றாலும் அதுவே லாபம் தான்.

அது மாத்திரம் இல்லை; நாம் உயிர்ச் சக்தியின் மீது மனதை நிலைக்க வைத்துத் தவம் (Meditation) செய்யும் போது, Beta Wave (அலைநீளம் 14 - 40 Cycles) என்ற நிலையிலிருந்து Alpha Wave (அலை நீளம் 8 - 13 Cycles) என்ற நிலை...க்கு மனம் வந்து விடும்.

அதைத்தான் சொப்பன நிலை அல்லது "சாக்கரம்" என்று சொல்லுவார்கள்.

அந்தச் சொப்பன நிலை எதுவோ அந்த Alpha அலைக்கு வந்தும் விழிப்போடு இருக்கிறோம்.

அதாவது தூக்கத்துக்குரிய நிலை வந்தும் விழிப்போடு இருக்கிற போது தான் அது யோகம். ஆனால் அதே Alpha அலை வந்து உறங்கி விட்டோமானால் அது தூக்கம்.

அந்த நிலையிலேயே நாம் தவம் (Meditation) செய்து பழகி வருகிற பொழுது அங்கும் இங்கும் மனது ஓடியது என்றாலும் அதிகமாக உணர்ச்சி வயம் பட்ட இடம் 20,30,35 Cycles போகாமல், அப்படி மனம் ஓடாமல், இந்த 14,15,16,18 வரைக்கும் ஓடித் திரும்புகிறது பாருங்கள், அது லாபந்தானே கடைசி வரையிலும்?

ஆகையினாலே, நாம் உட்கார்ந்து அமைதியாகத் தவம் (Meditation) செய்கிற போதே, நம்மை நாம் திருத்திக் கொள்வதற்கு, நம்மை நாம் வலுப்படுத்திக் கொள்வதற்கு, நம்முடைய மனதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு, உறப்படுத்திக் கொள்வதற்கு, இதுவரையிலும் செய்த தவறுகளையெல்லாம் திருத்திக் கொண்டு நாம் மனிதர்களாக மாறுவதற்கு ஏற்ற பயிற்சியைச் செய்கிறோம் என்ற ஒரு தெளிவு, ஒரு உணர்வு எல்லாருக்கும் வர வேண்டும்.

அது வந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள், அந்த அக்கரையோடு நீங்கள் தவம் செய்கிற போது அதனால் பெறுகின்ற பலன் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும், எல்லா அம்சங்களிலும், உங்களை பிரகாசிக்கச் செய்யும் என்பதை அனுபவ ரீதியாக நீங்கள் விரைவிலேயே உணர்ந்து கொள்வீர்கள்...

தீர்ப்பு ஊழலை ஊக்கப்படுத்துகின்றது , பிரதமர் மோடி தலையிட வேண்டும் - 2ஜி தீர்ப்பு குறித்து சுப்ரமணியன் சுவாமி பேட்டி...


மைசூர் பருப்பு - விற்பனைக்கு வந்த விபரீதம், வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கும் தமிழகம், தண்டுவடமே செயலிழக்கும் அபாயம்...


குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட பருப்பை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் தமிழக அரசு கண்டித்து மக்கள் எந்த வித எதிர்ப்பையும் காட்டாதது ஆச்சர்யமளிக்கிறது.

மைசூர் பருப்பில் டி-அமினோ-ப்ரோ-பியோனிக் ஆசிட் உள்ளது. இதனைத் தொடர்ந்து உணவில் பயன்படுத்தினால் கால் மூட்டுக்கள் மற்றும் தண்டுவடம் கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுகளை இழந்து பக்கவாதத்தை ஏற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டு, தேசிய அளவில் தடை செய்ய இந்திய மருத்துவக் கழகம் பரிந்துரைத்தது.

சமீப காலமாக ரேசனில் மசூர் பருப்பு தான்  வழங்குகிறா்கள். இந்ந பருப்பால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி 10 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த இரண்டு மாதமாக ரேசன் கடைகளில் நியோகிக்கிறார்கள். இப்போது உளுத்தம் பருப்பையும் தடை செய்துள்ளார்கள்.

துவரம் பருப்பு அதிக விலையாக இருந்தபோதும், தமிழகத்தில் வெகு சிலரே மைசூர் பருப்பைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஒரு காலத்தில் மதிய உணவுத் திட்டத்தில் மைசூர் பருப்பே பயன்படுத்தப்பட்டது. இதனால், உடலுக்கு ஏற்படும் தீங்கை முன்னிறுத்தி, 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து சத்துணவில் பயன்படுத்தத் தடை கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நியாய விலை கடைகளில் மைசூர் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது.

குறைந்த விலையில் பரவலாக அப்பருப்பு மக்கள் மத்தியில் விற்கப்பட்டது. பார்க்கிறதுக்கு ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் இந்தப் பருப்பு, வெந்ததும் மஞ்சள் நிறத்துக்கு மாறிவிடும்.

துவரம் பருப்பில் செய்யும் உணவில் இருக்கும் டேஸ்ட் மைசூர் பருப்பில் இருக்காது. துவரம் பருப்பில் புரோட்டீன் அதிகம் இருக்கும். எனவே மைசூர் பருப்பு எந்தவிதத்திலும் உடலுக்கு நல்லதில்லை...

கிடைப்பது மட்டுமே உனக்கானது, கொடுக்கப்பட்ட எல்லாம் அவர்களுக்கானது..


அவர்கள் கொடுத்ததே கேள்வி கேட்காமல் வாங்கி கொள்ளும் அடிமை மட்டுமே நீ...

மனதை கட்டுபடுத்த முடியுமா?



உடல் அங்கங்களின் அதிர்வுகள் பல வகையில் மாறி மாறி அதிரும் வரை மூளையும் பல்வேறு எண்ணங்களின் தொடர்பிலேயே இருக்கும்.

உடல் உறுப்புகளின் அதிர்வுகளினால் ஏற்படும் மின்சக்தி மாறுபாடு மூளையை வெவ்வேறு அலைவரிசைகளில் டியூன் செய்கிறது.

உடல் உறுப்புகள் உருவாக்கும் இந்த சிக்னல்கள் மூளையை அடைவதை தடுக்க வேண்டும், இல்லை நிறுத்த வேண்டும்.

உடல் உருவாக்கும் சிக்னல்களை தடுக்க முடியாது. ஆனால் அதை ஒரே மாதிரி மாற்ற முடியும்.

உடல் அணுக்களின் அதிர்வை முடிவு செய்வது கோட்சாரம். அதாவது கிரகங்களின் இடமாற்றம்.

உடல் கிரக கதிர்வீச்சுகளினால் பாதிக்கப்பட்டாலும், நம் மனோ வலிமையால் அதில் இருந்து தப்பலாம்.

உடல் தான் மறைமுகமாக எண்ணங்களை தொடர்பு கொள்ள உந்துகிறது.

உடல் அணுக்களை ஒரே லயத்திற்கு கொண்டு வர தொடர் மந்திர உச்சரிப்புகள் அவசியம்.

உடலை சார்ந்தே எண்ணங்கள் இருந்தாலும் அதே எண்ணங்களால் இந்த உடலின் அதிர்வை மாற்ற முடியும்.

உடல் உணர்ச்சிகள் எண்ணங்களையும், எண்ணங்கள் உடல் உணர்ச்சிகளையும் மாற்றவல்லது.

உடல் உணர்வுகளை தொடர் சுயகருத்தேற்றத்தின் மூலம் நம் கட்டுபாட்டிற்கு கொண்டு வர முடியும்.

உடலை யோகாவால் தளர்த்தி, அடிக்கடி "என் மனம் என் கட்டுபாட்டில் உள்ளது" என மனதால் நினைத்து வர மனம் அடங்கியே தீரும்.

உடலும் மனமும் தங்கள் கட்டுபாட்டிற்கு வந்துவிட்டால், பிறகு என்ன இந்த வானமே எல்லை...

பாஜக கலாட்டா...


என்னாது 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்திட்டாங்களா?


அதிக மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதையும், புழக்கத்தில் வெளியிடுவதையும் ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்து இருக்கலாம் என்று எஸ்பி.ஐ.,யின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

இந்நிலையில், எஸ்.பி.ஐ வங்கியின் ஆய்வறிக்கையான எக்கோபிளாஷ் என்கிற ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. இதை எஸ்.பி.ஐ வங்கி குழுமத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் செளமியா கோஷ் எழுதி உள்ளார். இதில், மக்களவையில் சமீபத்தில் சமர்பிக்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி, கடந்த மார்ச் மாதம் வரை 3.5 லட்சம் கோடி என்கிற அளவில் சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அதே சமயம் டிசம்பர் 8ம் தேதிப்படி, 13.32 லட்சம் கோடி உயர் மதிப்புடைய நோட்டுகள் இருந்தன என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதே சமயம் மக்களவையில் வெளியிடப்பட்ட நிதித்துறையின் ஆய்வறிக்கையின் படி, டிசம்பர் 8ம் தேதி வரை, புதியதாக 1,695 கோடி 500 ரூபாய் நோட்டுகளும், 365 கோடி 2000 ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டு இருந்தன. இவற்றின் மொத்த ரூபாய் மதிப்பு 15.78 லட்சம் கோடி ஆகும். ஏற்கனவே புழக்கத்தில் இருப்பது 13.32 லட்சம் கோடி ரூபாய், அச்சடிக்கப்பட்டது 15.78 லட்சம் கோடி ரூபாய் எனில் இன்னமும் 2.46 லட்சம் கோடி ரூபாய் பணத்தை வெளியிடாமல் ரிசர்வ் வங்கி தன் கைவசம் வைத்து உள்ளது என்பதை புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது.

2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் இருப்பதால், மீதம் இருக்கும் நோட்டுகளையும் வெளியிட்டால் அதிக சில்லறை தட்டுப்பாடு வரலாம் என்று கருதி ஆர்.பி.ஐ வங்கி உயர் மதிப்பு நோட்டுகளை வெளியிடாமல் வைத்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், உயர் மதிப்பு நோட்டுகள் அச்சடிப்பதையும் ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்து உள்ளது. சில்லறை தட்டுப்பாட்டை சமாளிக்க புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் புழக்கத்தில் விடப்பட்டு இருந்தாலும், இன்னமும் நிலைமை சரியாகவில்லை.

இந்த நிலைமைய சமாளிக்க ரிசர்வ் வங்கி குறைந்த மதிப்புடைய நோட்டுகளை அச்சடித்து இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது...

Biological weapon பதிவு 3... எய்ட்ஸ் செயற்கையாக அதிகம் பரப்பபட்டதே...


தமிழரல்லாதார் ஆட்சி அம்பலப்படுத்திய பாரதியார்...


1920ல் தமிழரல்லாத ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவை பற்றி மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் எழுதியது...

புதிதாகச் சென்னை நிர்வாக சபையில் சேர்ந்தபிராமணரும் - பஞ்சமரும் -ஐரோப்பியருமாகிய பிறருமல்லாதார் வகுப்பைச் சேர்ந்த மந்திரிகள்,தமிழரும் அல்லாதார் என்றுஒருவர் என்னிடம் வந்து முறையிட்டார்..

ஹும்! இந்த பாஷை சரிப்படாது..

நடந்த விஷயத்தை நல்ல தமிழில் சொல்லுகிறேன்..

தமிழ் வேளாளர் ஒருவர்,இப்போது மந்திரிகளாக சேர்ந்திருக்கும் ரெட்டியாரும், நாயுடுவும், ஸ்ரீ ராமராயனிங்காரும் தெலுங்கர்கள் என்றும்..

தமிழ்நாட்டிற்குப் பிரதிநிதியாக இவருள் எவருமில்லாமை வருந்தத்தக்க செய்தியென்றும் என்னிடம் வந்து முறையிட்டார்...

(பாரதி தமிழ்: பக்.403)...

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்…


படுக்கைகள் பலவிதம்..

எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை மருத்துவ திறவுகோல் என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது..

கம்பளிப் படுக்கை – குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்..

கோரைப் பாய் – உடல்சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்..

பிரம்புபாய் – சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்..

ஈச்சம் பாய் – வாதநோய் குணமாகும். உடல்சூடு, கபம் இவை அதிகரிக்கும்….

மூங்கில் பாய் – உடல்சூடும், பித்தமும் அதிகரிக்கும்..

தாழம் பாய் – வாந்தி, தலைசுற்றல், பித்தம் நீங்கும்..

பேரீச்சம் பாய் – வாதகுன்ம நோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்..

இலவம் பஞ்சு படுக்கை – உடலில் ரத்தம், தாதுபலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்..

மலர்ப் படுக்கை – ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்..

இரத்தினக் கம்பளம் – நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்..

இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்...

பனை ஓலை பாய் - பல சரக்கு வெல்ல மண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்..

மூங்கில் நார் பாய் -  வீடு, அலுவலகங்களில் தடுப்பு சுவர், மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்..

நாணல் கோரை பாய் -  மக்கள் பயன்பாட்டிற்கு...

விஞ்ஞான ஊழல் செய்தவர் என்று பேர் எடுத்தவனுங்ககிட்ட....



2Gவழக்கு எல்லாம் ஒரு பொருட்டே இல்ல....

தமிழக ஊழல் அரசு நம் வரிப்பணத்தை கட்சிக்கு செலவு செய்து விட்டு... நம்மிடம் வசூலிக்கிறது...


அதிமுக தர்மயுத்த கோஷ்டிக்கும்.. பாஜக மோடிக்கும் சேர்த்தே களிசோறு ரெடியாகுதே...


அப்போ எய்ம்ஸ் டாக்டர்கள் வந்து தான் காலி பண்ணியிருக்கானுங்கனு சொல்லுது இந்த தகவல்கள்...

ஜெயலலிதாவின் உடலை தோண்டியெடுத்து ஏன் டி.என்.ஏ. பரிசோதனை ஏன் செய்யக் கூடாது?- உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி...


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு என தன்னை அறிவிக்கக்கோரி அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில் அவர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த வழக்கு மூத்த நீதிபதி வைத்தியநாதன் முன் இன்று விசாரணக்கு வந்தபோது அம்ருதா ஜெயலலிதாவின் மகள் தான் என்று வழக்கறிஞர் பிரகாஷ் வாதாடினார்.
கீழ்த்தரமான விளம்பரத்துக்காக அம்ருதா வழக்கு தொடுக்கவில்லை எனவும் வாதிட்டார். இடையில் குறுக்கிட்ட நீதிபதி, அம்ருதா தொடர்ந்த வழக்கில் மரபணு பரிசோதனைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது என கேள்வி எழுப்பினார்.

இடையில் அரசு தரப்பில் டிஎன்ஏ சோதனைக்கு அனுமதித்தால் ஆயிரம் பேர் இதுபோன்று வருவார்கள் என அரசுத் தரப்பு வாதிடப்பட்டது.

இதனையடுத்து, அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்களில் கையெழுத்து உள்ளிட்ட பல குளறுபடி உள்ளது எனக்கூறி வழக்கு விசாரணையை நாளை(டிச.,22)க்கு ஒத்தி வைத்துள்ளார்...