அதிக மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதையும், புழக்கத்தில் வெளியிடுவதையும் ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்து இருக்கலாம் என்று எஸ்பி.ஐ.,யின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
இந்நிலையில், எஸ்.பி.ஐ வங்கியின் ஆய்வறிக்கையான எக்கோபிளாஷ் என்கிற ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. இதை எஸ்.பி.ஐ வங்கி குழுமத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் செளமியா கோஷ் எழுதி உள்ளார். இதில், மக்களவையில் சமீபத்தில் சமர்பிக்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி, கடந்த மார்ச் மாதம் வரை 3.5 லட்சம் கோடி என்கிற அளவில் சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அதே சமயம் டிசம்பர் 8ம் தேதிப்படி, 13.32 லட்சம் கோடி உயர் மதிப்புடைய நோட்டுகள் இருந்தன என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதே சமயம் மக்களவையில் வெளியிடப்பட்ட நிதித்துறையின் ஆய்வறிக்கையின் படி, டிசம்பர் 8ம் தேதி வரை, புதியதாக 1,695 கோடி 500 ரூபாய் நோட்டுகளும், 365 கோடி 2000 ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டு இருந்தன. இவற்றின் மொத்த ரூபாய் மதிப்பு 15.78 லட்சம் கோடி ஆகும். ஏற்கனவே புழக்கத்தில் இருப்பது 13.32 லட்சம் கோடி ரூபாய், அச்சடிக்கப்பட்டது 15.78 லட்சம் கோடி ரூபாய் எனில் இன்னமும் 2.46 லட்சம் கோடி ரூபாய் பணத்தை வெளியிடாமல் ரிசர்வ் வங்கி தன் கைவசம் வைத்து உள்ளது என்பதை புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது.
2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் இருப்பதால், மீதம் இருக்கும் நோட்டுகளையும் வெளியிட்டால் அதிக சில்லறை தட்டுப்பாடு வரலாம் என்று கருதி ஆர்.பி.ஐ வங்கி உயர் மதிப்பு நோட்டுகளை வெளியிடாமல் வைத்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், உயர் மதிப்பு நோட்டுகள் அச்சடிப்பதையும் ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்து உள்ளது. சில்லறை தட்டுப்பாட்டை சமாளிக்க புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் புழக்கத்தில் விடப்பட்டு இருந்தாலும், இன்னமும் நிலைமை சரியாகவில்லை.
இந்த நிலைமைய சமாளிக்க ரிசர்வ் வங்கி குறைந்த மதிப்புடைய நோட்டுகளை அச்சடித்து இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.