24/05/2021

வயிற்றுப்புண்ணை போக்கும் அருமருந்துகளின் பட்டியல்...

 


அருகம்புல், துளசி, அரசு, கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை, வில்வம், கற்பூரவல்லி, புதினா, வல்லாரை, தூதுவளை,  மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை, செம்பருத்தி, முருங்கை இலை, மணத்தக்காளி, வெந்தயகீரை இவற்றை தினமும் நம் அன்றாட உணவில்  சேர்த்துக் கொள்வது வயிற்று புண்ணுக்கு நல்லது.

இளநீரை தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

அதே போல் முற்றிய தேங்காய் பருப்புகளை நன்கு காயவைத்து,  செக்காடப்பட்டு எதுவும் கலக்காமல் இருக்கும் தேங்காய் எண்ணெயை வயிறு எரிச்சலின் போது குடிக்கலாம். இப்படி குடித்தால் சிறிது நேரத்தில்  எரிச்சல் குறைந்து விடும்.

அத்துடன் இளநீர் நம் உடலில் சிறு குடலில் உண்டாகும் புழுக்களை அழிக்கிறது. இவற்றில் உள்ள உப்புத்தன்மை  மற்றும் வழுவழுப்பு தன்மை  குடலில் உள்ள புண்களை குணப்படுத்துகிறது. இவை சிவப்பு ரத்த அணுக்கள் அழியாமல், ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்றுகிறது...

சென்னை தண்டையார்பேட்டையில் ரேஷன் உணவு பொருட்களை ஆட்டோவில் கடத்தல்...

 


தன் முதலாளி அம்பானி உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடிக்க வரி மூலம் கொள்ளையடிக்கும் பாஜக மோடி...

 


சீத்தாப்பழம்...

 


சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது..

சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும்.

இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்..

சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.

இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.

மருத்துவ பயன்கள்:

1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.

10. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்...

நீட் தேர்வும் திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டமும்...

 


குறிப்பு : நீட் தேர்வு கொண்டு வந்ததும் திமுக - காங்கிரஸ் தான்... நீதிமன்றத்தில்   தமிழ மாணவர்களுக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் வாதாடி கட்டாயமாக திணித்ததும் திமுக - காங்கிரஸ் தான்...

சத்தீஸ்கரில் இளைஞரை அடித்த மாவட்ட ஆட்சியரை வேலையை விட்டு தூக்கிய முதல்வர்...

 


நோய்களும் உணர்வுகளும்...

 


நம் உடலை ஒரு பிரம்மாண்டமான தொழிற்ச் சாலையோடு ஒப்பிடலாம். இந்த தொழிற்ச்சாலையில் சராசரியாக 75 லட்சம் கோடி தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதாங்க ஜீன்கள்.

நாம் செய்யும் வேலைக்கு தகுந்தாற்போல் மற்ற தொழிலாளர்களும் அதற்கு ஒத்திசைவாக செயல்படுவார்கள். அதாவது நடத்தல், உண்ணல், பேசுதல், உறங்குதல் போன்ற வேலைகள்.

அந்த வேலைகள் நடைபெரும் போது நாம் உணர்வுகளை அதன்வசம் விடாமல் நம் எதிர்மறை சிந்தனைகளால் மாற்றினால் உடற்கூறு அதை நோயாக வெளிப்படுத்தும்.

இதனை பாதிக்கும் முக்கியமான நான்கு சிந்தனைகள் உள்ளன. அவை பயம், வெருப்பு, பழியுணர்ச்சி மற்றும் தாழ்வு மனப்பான்மை. இவை எதும் உங்களிடம் இல்லை எனில் நிச்சயமாக என்னால் கூற முடியும், உங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று.

சித்தர்களின் கூற்றுப்படி நமக்கு ஏற்படும் 4448 நோய்களும் இந்த நான்கே காரணிகளால் தான் ஏற்படுகின்றன. இங்கு சில உதாரணங்களை கொடுக்கிறேன்.

பயம் நுரையீரல் சம்மந்தபட்ட நோய்களையும்(சளி, ஆஸ்துமா போன்றவை), வெருப்பு வயிறு சம்மந்தப்பட்ட நோய்களையும்(அல்சர், சிறுநீரக கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவை), பழியுணர்ச்சி இரத்த சம்மந்தப்பட்ட நோய்களையும் (கேன்சர், இதய அடைப்பு போன்றவை), தாழ்வு மனப்பான்மை தோல் சம்மந்தப்பட்ட நோய்களையும்(தோல் வியாதி, அலர்ஜி போன்றவை) உருவாக்குகிறது.

நம் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சி அதிர்வுகள் நம் உடலின் சராசரி அதிர்வுகளை மாற்றுவதாலேயே இப்படி உடற்கூறு நோயை வெளிப்படுத்துகிறது.

எனவே உங்கள் மனதில் இருந்து இந்த நான்கு காரணிகளையும் தூக்கி எரியுங்கள். பின் உங்கள் உடல் எதர்க்காக வடிவமைக்கப்பட்டதோ அதை செய்யும்.

இந்த மனயிருக்கத்தை நீங்கள் அகற்றி மகிழ்ச்சியான மனநிலையில் உங்களால் தொடர்ந்து இருக்க முடிந்தால் சர்க்கரை அளவு சீராவதையும், புற்றுநோய் செல்கள் கரைவதையும், அனைத்து நோய்களும் வெளியே ஓடியிருப்பதையும் கண்டு வியந்து போவீர்கள். இதனை இன்னும் துரிதப்படுத்த விரும்பினால் தியானம் செய்யுங்கள். இவை அனைத்திற்கும் ஹிப்னாடிசத்தில் தீர்வு உண்டு...

ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு சரியான ஆப்பு...

 


இன்னைக்கு ஒருத்தனும் வீட்டுல இல்ல😃😃

 


நோய் தீர்க்கும் ஆடாதோடா...

சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.

ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது.

ஆடா தோடைவின் முருத்துவ பெயர் ( Adhatoda zeylanicaணீ) ஆகும்.

இது உடலில் தசைப்பகுதிகளில் ஏற்ப்படும் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள் இதில் இருக்கும் வாசிசின் என்னும் வேதிப்பொருள் நுரையீரல் செல்களில் புகுந்து வேலை செய்து விரிவடைய செய்வதால் ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை இது குணப்படுத்துகிறது.

நீண்ட நாள் தொடந்த சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும். இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்க வைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.

இவைகளுடன் திப்பிலி, ஏலம், அதிமதுரம், தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு (ஆஸ்த்துமா) தீரும்.

இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும். இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.

ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்...

மதுரை மக்கள் கலாட்டா...

 


தமிழக அரசு கலாட்டா...

 


அகத்திக் கீரையீன் சிறப்பு..

 


அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..

சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு மருந்திடுதல் எனும் ஒரு பழக்கம் தமிழ் மக்களை ஆட்டி வந்திருக்கிறது;

கணவனின் அன்பு தொடர மனைவியும், மனைவியின் அன்பு தொடர கணவனும், விலை மாதர்கள் தங்களுக்கு தொடர்ந்து வாடிக்கையாளர் கிடைக்கவும் இந்த மருந்திடுதலை பயன் படுத்தினர்.

உள்ளுக்குல் ஒரு சில கூட்டு மருந்துகளை சேர்த்து கொடுத்து விட்டால் அதை அருந்தியவர் கொடுத்தவரிடம் தொடர்ந்து அன்புடன் இருப்பார் என்பது ஒரு நம்பிக்கை .

அத்தகைய மருந்திடுதல் எனும் தோஷத்தை நீக்கும் சத்தி அகத்திக்கு உண்டு .

அகத்திக் கீரையை உண்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பித்த தொடர்பான நோய்கள் நீங்குகும்,

வாரத்துக்கு ஒரு முறையேனும் தவறாமல் அகத்தி கீரையை சமைத்து சாப்பிடடால் தேகத்தில் உஷ்ணம் தணியும் கண்கள் குளிர்ச்சி பெறும். குடல் புண் ஆறும் சிறு நீர் மற்றும் மலம் தாரளமாக கழியும். பித்து எனும் மனக் கோளாறும் நீங்கும்,

அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும் .

இதற்கு அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நான்கு பங்கு சின்ன வெங்காயம் சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினசரி ஒரு வேளை குடிக்கலாம்.

அகத்தி கீரையையும் மருதாணி இலையையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.

அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.

உடம்பில் காண படும் தேமலுக்கு அகத்தி கீரையீன் இலையை தேங்கா எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.

அகத்தி கீரையை சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிடலாம்..

அகத்தி கீரையை ஏகாதசி அன்று விரதமிருந்த பிறகு துவாதசியன்று உணவில் அகத்தி கீரை உடன் நெல்லிக்காயையும் சேர்த்துக் கொள்வது சிறப்பு, எதையும் அர்த்ததுடன் தான் நம் முன்னோர்கள் வகை படுத்தியுள்ளனர்.

நாம் அதை மதித்து நடக்க வேண்டும்..

அகத்தி கீரைக்கு எல்லா மருந்துகளின் வீரியத்தையும் முறிக்கும் சக்தி உண்டு .எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்..

வாரம் ஒரு முறை மட்டுமே அகத்தியை உபயோகிக்க வேண்டும் .. அதிகம் உபயோகித்தால் சொறி சிரங்கு வரும்...

இந்த செல்ஃபி நாய்களுக்கு எல்லாம் கொரோனா வைரஸ் பத்தாது...

 


கார்ப்பரேட் பாஜக மோடி அரசு கைகூலி உச்சநீதிமன்றம்...