25/10/2018

இன்றைய மாப்பிளைகளின் நிலை...


கல்யாணம் முடிந்து இரண்டாவது நாள்
மணப்பெண்ணை அலங்காரம் செய்த
பியூட்டி பார்லருக்கு கணவன் சென்று
என் மனைவிக்கு அலங்காரம் செய்த
உங்களுக்கு என்னுடைய இந்த அன்பளிப்பு என்று, apple I phone -7 கொடுத்தார்,

பியூட்டி பார்லர் அக்காவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை, சிரிச்சுக்கிட்டே பிரிக்கையில் அதன் உள்ளே nokia-1100 இருந்துச்சு, [box only apple phone]. அக்கா பேந்த பேந்த விளிக்க..

இப்படித்தானே எனக்கும் இருந்திருக்கும் என்று மாப்பிள்ளை எரிச்சலோடு கூறிவிட்டு சென்று விட்டார்..

சாகும் தறுவாயில் இருக்கும் சனாதனம், வேறு வழியின்றி, மோடி அரசின் மூலம், தனக்கே உரிய சதி அஸ்திரங்களை பல முனைகளிலும் தொடுத்துப் பார்க்கிறது...


ஒருபக்கம் மார்க்சிஸ்ட் அரசை அகற்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கெதிராக சபரிமலையை ரணகளப்படுத்திக் கொண்டு; மறுபக்கம், முல்லைப்பெரியார் அணைக்குக் கீழே புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி இதோ என்கிறது.

ஏதோ ஏழு நிபந்தனைகளுடன் அனுமதியாம்; யாரை ஏமாற்றுகிறது மோடி அரசு? அப்பட்டமான சட்டமீறல் இதனைப் புரிந்துகொள்ளாதிருக்க, தமிழ்நாடு ஒன்றும் முட்டாளில்லை; அதேபோல் கேரளாவும்தான்.

செல்லுபடியாகாத இந்தத் தில்லுமுல்லு வேலைகளை நிறுத்திக்கொள்ளுமாறு மோடி அரசை எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

முல்லைப்பெரியார் அணைக்குக் கீழே புதிய அணை கட்டிக்கொள்ள கேரள அரசுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது ஒன்றிய பாஜக மோடி அரசு. அதற்கான சுற்றுச்சூழல் தாக்கம் கணக்கீட்டு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் கேட்டிருக்கிறது. இந்த அனுமதியை 7 நிபந்தனைகளுடன் வழங்குவதாகவும் சொல்லியுள்ளது.

நாம் கேட்கிறோம், இந்த 7 நிபந்தனைகள் என்ன மோடி அரசாகப் பார்த்து விதிப்பனவா? இது சட்டப்படியான நடைமுறையல்லவா! இதற்கு முல்லைப்பெரியாறு அணை ஒப்பந்தத்தில் சாத்தியமே இல்லாதபோது, ஏதோ நியாயவான் போலவும் கேரளாவின் நண்பன் போலவும் காட்டிக்கொள்வது ஏன்? இதனால், ‘மோடி அரசு ஒரு வேடதாரி’ என்பதை மறைத்துவிட முடியாது.

நாம் எழுப்பும் கேள்வி இதுதான்: அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாகவும் முல்லைப்பெரியார் அணை ஒப்பந்தத்திற்கு எதிராகவும் எப்படி இந்த அனுமதியை மோடி அரசு வழங்க முடியும்?
முல்லைப்பெரியார் அணை விடயத்தில் ஒப்பந்தத்தைத் தாண்டி ஒன்றிய அரசு பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. பிரச்சனை என்றால், அதுவும் கேரள அரசு எழுப்பினால், அதையும் நீதிமன்றம்தான், ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டே பேச முடியும். அதை விடுத்து முல்லைப்பெரியார் அணை விடயத்தில் மோடி அரசு மூக்கை நுழைப்பதை கடுமையாக எச்சரிக்கிறோம்.

தமிழ்நாட்டையும் தமிழக அரசையும் ஒரு பொருட்டாகக் கருதாமல், ஒன்றிய சுற்றுச்சூழல் துறையையும் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, அதிகார அத்துமீறல் செய்து, பாசிச-சனாதனப் போக்கில் இந்த அனுமதியைத் தயாரித்திருக்கிறது மோடி அரசு.

சட்டப்படி செல்லுபடியாகாத இந்தத் தில்லுமுல்லு அனுமதியை ஏற்கப்போகிறதா கேரள மார்க்சிஸ்ட் அரசு?

தமிழக அரசு இதில் என்ன செய்யப்போகிறது? இந்த வெற்றுவேட்டு அனுமதியைக் காட்டி தமிழக, கேரள இரு அரசுகளையுமே மடையர்களாக்கும் மோடி அரசின் கபடத்தைத் தோலுரித்துக் காட்டுவதுடன், அதனைக் கடுமையாக எச்சரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

7 நிபந்தனைகளில் 5ஆவது நிபந்தனை, ‘தற்போது வழங்கப்பட்டுள்ள ஆய்வு எல்லைகள் உச்ச நீதிமன்ற/பசுமைத் தீர்ப்பாய உத்தரவுற்கு கீழ்பட்டவை’ என்பது; இதுவும் அணை ஒப்பந்தத்தைக் கட்டுப்படுத்தாது என்பதை மோடி அரசுக்கு உறைக்கும்படிச் சொல்கிறோம்.

மக்களாட்சி முறை உள்ள நாடு இது; இதில் சூழ்ச்சி, சதி, மோசடி, தில்லுமுல்லு இவற்றையே செயல்முறையாகக் கொண்டு நடக்கும் மோடியின் பாசிச-சனாதன ஆட்சிமுறை சட்டவிரோதமாகும். நிரந்தரமாக இதனைக் கைவிடுவதுடன், போலியான இந்தச் சுற்றுச்சூழல் அனுமதியையும் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி...

பாஜக மோடியும் 18 எம்.எல்.ஏ தீர்ப்பும்...


சீனா... செயற்கை நிலவை 2020 ல் நிறுவ இருக்கிறது...


இதன் மூலம்... 50 Km சுற்றளவுக்கு சாலைகளிலோ...வீட்டின் வெளியிலோ எந்த மின்சாரவிளக்குகளும் தேவைப்படாது என அறிவித்துள்ளது....

உலகத்திலிருந்து இருள் என்ற இயற்கையின் ஒரு பகுதியை மக்கள் உணராத வண்ணம் மாற்றுவதற்கான ஏற்பாடு தான் இது... இது உலகம் முழுக்க கொண்டுவரப்படும்... இரவு நேரமும் பகல் நேரத்தை போல் மாற்றப்படும்....

காரணம் ஒன்றே ஒன்று தான்.....

" இருள் தான் மனித சிந்தனையின் ஊற்று "

இருளில் தான் மனித சிந்தனைகள் தோன்றும்... பகல் வெளிச்சத்தில் செயல் செய்ய முடியும்...இரவு இருளில் தான் சிந்திக்க முடியும்.... எப்போதுமே பகலை உருவாக்குவதன் மூலம் மக்களை சிந்திக்காத ஒரு மாயை உலகத்தை உருவாக்க முற்படுகிறார்கள்....

இருளை அனுபவிக்க வேண்டும்.....

மெட்டி அணிவது ஏன்..?


மெட்டி அணிவது ஏன் என்று தெரியாமல் வெறும் சம்பிரதாயமாகவே அதனை பார்க்கின்றோம்.

ஆனால் அதற்கு பின்னால் தமிழனின் அறிவியல் ஒளிந்திருக்கிறது...

திருமணமான இந்து பெண்கள் கால்களில் மெட்டி அணிவார்கள்.

மெட்டி அணிவது திருமணம் ஆனதற்கு அடையாளம் மட்டுமல்ல, அது அறிவியலும் கூட. பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால், அவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் செயல்படும் என்று இந்திய வேதங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மெட்டி அணிவது திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் நல்ல நோக்கத்தை அளிக்கிறது.

அது மட்டுமல்லாமல், பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலான நடு விரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாக செல்கிறது என்று கூறப்படுகிறது.

ஆகவே பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் பெண்கள் கர்ப்பம் அடைந்து இருக்கும் போது மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். தற்பொழுது மயக்கம் ஏற்பட்டால் உடனே பெண்களை படுக்க வைத்து அவரின் கால் விரல்களை இறுக்கி பிடித்து கொண்டு உள்ளங்காலை தேய்ப்பார்கள்.

ஏனெனில் கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும் மயக்கம் சோர்வு போகும்.

இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.

காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோ, சோர்வு, மயக்கம் போன்றவற்றை குறைக்கிறது.

கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்..

அதுமட்டுமா? வெள்ளி ஒரு நல்ல கடத்தி (Good Conductor) என்பதால், பூமியின் துருவத்தில் இருந்து நிறைய ஆற்றலை உள்வாங்கி, உடல் முழுவதும் புத்துணர்ச்சியைப் பரவ செய்கிறது.

இதனாலயே வெள்ளியில் மெட்டி அணியப்படுகிறது...

இந்த சிலையை நிறுவுவதற்கு பாஜக மோடி செலவழித்த பணம் 3000 கோடி...


இதில் 10,00,000 மதிப்பில் தொழில்முனைவோருக்கு கடன் கொடுத்தால் 30,000 இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றி இருக்க முடியும்... ஒவ்வொரு தொழில் முனைவோருக்கு கீழும் 5 பேர் வேலை பார்த்தாலும்....

1,50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியிருக்க முடியும்....
ஆனால் இந்த தேசம்... ஒரு வெற்று சிலைக்கு கொடுக்கும் மதிப்பை இளைஞர்களுக்கு கொடுக்கவில்லை ....
( முத்ரா திட்டத்தை தூக்கிகொண்டு வரவேண்டாம்.. முத்ராவை பற்றி 100% தெரியும் அது செயல்வடிவம் பெறவில்லை..)...

சித்தராவது எப்படி - 23...


ஆனாய் ஆனால் அடைந்தாயா ? என்ற கேள்வி...

பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் வெகு விரைவாக பிரபலமாகி விடுவார்கள்..

பிரபலமாக ஒன்றும் செய்ய தேவை இல்லை... ஏதோ ஒரு தெய்வத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.. பிடித்து பிடித்து அதுவாய் ஆக வேண்டும்..

அதில் தன் நிலையை கரைத்து, அதில் தன் மன நிலையை பலவீனப் படுத்தி செயல் அற்ற ஒரு முடமான நிலைக்கு போக வேண்டும்..

அந்த தெய்வ சிந்தனையில், தனக்கு இறைவனால் அளிக்கப் பட்ட கடமைகளை உதறி தள்ளி விட்டு, அவன் சிந்தனையிலேயே தன் ஜீவ சக்தி முழுமையாக இழந்து எந்த உலக குறிக்கோளையையும் பற்றி நிற்க முடியாத அளவிற்கு பலம் இழந்து, அதனால் உலகப் பற்றுகளை பற்ற முடியாமல் எந்த பற்றும் பற்றாத ஞானி என்ற போலியான பட்டம் பெற்று, தன் முடிவு காலத்தில் தேள் கொட்டிய திருடன் போல், உயிர் துயரத்தை சொல்ல முடியாமல் பெரும் வேதனையை அனுபவித்து, தன் துன் மரணத்தை ஜீவ சமாதியாக தன்னை போற்றியவர்களால் கொண்டாடி கொள்ள வேண்டியது தான்..

நிகழ் கால மகா சக்தியாகிய சிவகலப்பு என்ற உன்னத நிலையை அறவே இழந்து, சவகலப்பு நோக்கிய பயணமே அது..

சிவனை சதா காலம் தன் மனதால் நினைத்து நினைத்து சிவனை பற்றிய விசயங்களாகவே ஆகி விடுவார்களே தவிர சிவன் பெற்ற சக்தியை ஒரு சிறு துளியேனும் பெற்றார்கள் என்றால் கேள்வி குறிதான்...

மனதால் ஆனார்கள் ஆனால் சக்தியை அடைந்தார்களா என்றால் துளியும் இருக்காது..

நிகழ் காலத்தில் இருக்க துளிசக்திகூட இல்லாத அளவிற்கு தெய்வ சிந்தனையால் மோன நிலை என்ற நிகழ் கால தொடர்பை அறுந்த சவ நிலைக்கு ஒத்த மயக்க நிலையை மக்கள் அதிகமாக மதிப்பது ஒரு அறியாமையே...

சிவநிலை என்ற உயர்ந்த தத்துவம் நாம் இழந்து பல காலம் ஆகிவிட்டது..

அதை மீண்டும் நிலை நிறுத்துவது என்பது முடியாதது போல் தோன்றினாலும் நிறைநிலை மனிதன் தோற்றத்திற்கான இரகசியங்கள் வெளிப் பட்டுக் கொண்டு இருப்பதால் அது முடியும் என்பதே உறுதியாக தெரிகிறது..

சில உறுதி செய்யப் படாத விதிவிலக்குகள் பக்தியோகத்தில் இருந்தாலும், அவைகள் தனது இரகசியங்களை வெளிப்படுத்த முடியாத நிலையில் பழைமையாக உள்ளது...

காளி பக்தரான மிக பிரபலமடைந்த இராமகிருஷ்னர் மோன நிலையிலேயே மயங்கி மயங்கி தன் தேகத்தை காப்பாற்றும் வல்லமையை இழந்து புற்று நோயால் மரண அடைந்தார்..

உலகிற்கு, உலக உய்ய என்ன உளவுகளை வைத்து சென்றார் என்றால் கேள்விக் குறிதான்..

ஆனால் உளவுகளை பக்தி யோகம் தாண்டிய நிலையில் சில தகுந்த உளவுகளை வைத்து விட்டுப் போன 3000 ஆண்டுகள் வாழ்ந்த, திருமூலருக்கு எந்த மடங்களும் அமைப்புகளும் இல்லை..

காரணம் மயக்கத்தை நீக்கி தெய்வீக விழிப்பு நிலையாகிய சிவகலப்பை தந்ததால், மயக்கத்தை விரும்பும், மாயையில் சிக்கிய மக்கள், அதனை விரும்பவில்லை..

மயக்கம் தரும் போதை பொருள்களிலும், மயக்கம் தரும் கருத்து போதைகளிலும் மயங்கி கிடக்கவே மனிதனின் சோம்பல் மனம் விரும்புகிறது..

ஆகவேதான் விழிப்பு நிலையில் உள்ள புத்தியும், அறிவும், செயல் படவேண்டிய அவசியம் ஆகிறது..

அவை செயல் பட தொடங்கி விட்டால் எந்த மயக்கமும், தன்னை மறந்த மோன நிலையும், தூக்கமும், முடிவில் மரணமும் இல்லை என்பதாகிறது..

இந்த உயர்ந்த உன்னத நிலை, வெறும் சாதாரண சுவாச ஒழுங்கில் உள்ளது என்றால் மனம் ஏற்றுக் கொள்வது இல்லை..

விழிப்பு நிலையை வெறுப்பதே மனதின் இயல்பு..

இந்த உலகம் ஒரு நிறைநிலை மனிதன் வரவுக்காக ஏங்கி கொண்டு இருக்கிறது..

அந்த ஏக்கத்தை போக்க நிறைநிலை மனிதனாக முனைவோமாக....

கேரளா ஐயப்பன்...


கேரளாவில் உள்ள ஐய்யப்பன், இந்திய மகரிஷி என்ற பெயரில்
கி.மு.4000 இல் எகிப்து கெய்ரோவில்  "இம்போத்" என்று கடவுளாக வணங்கப்பட்டார். அவர் எகிப்தின் தேவன் என்ற அழைக்கப்படுகிறார்.

அவர் ஒரு வானியலாளர், மருந்து, கணிதவியலாளர்,. "இம்போத்" முதல் பண்டைய எகிப்திய படி பிரமிட் மிகப்பெரிய அளவிலான வெட்டு கல் கட்டுமானமாக கருதப்படும் பிரமிடை கட்டியவராக கருதப்பட்டது. பிரதான "சக்ராரா டிஜோசரின்" படி பிரமிடு வடிவமைப்பே எகிப்தின் மற்றைய பிரமிடுகளுக்கு வரவு வைக்கப்படுவதாக நம்பப்படுகிறது. எகிப்தில் பிரமிடுகள் உருவாக்க உதவிய ஒரு கடவுள் அவர் என எகிப்தியர்கள் அழைகின்றனர்.

விஷ்ணுவின் 9 வது அவதாரம் அவர். கேரளாவிலிருந்து எகிப்திற்கு விமானம் போன்ற பறக்கும் தட்டுகளில் ஃப்ளைலிங் சாஸரில், வந்ததாக கூறப்படுகிறது. "இம்போத்" என்ற பெயரை "சமாதானத்தோடே வருகிறவர்" என்றே எகிப்தியர்கள் மொழிபெயர்க்கின்றனர்.
அவர் ஒரு "காஸ்மோஸ் கட்டிட வடிவமைப்பாளர்" என்றும். நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கம் கற்றுக்கொடுத்தார். " என பண்டைய எகிப்தியர்கள் கூறுகின்றனர்.

ஒரே ஒரு கேள்வி ... எகிப்திய மேம்பட்ட நாகரீக வளர்ச்சிக்கு உதவிய, "இம்போத்"யின் அறிவு விண்ணிலிருந்து வந்ததா? அல்லது அவர் எப்படி தனது அறிவைப் பெற்றார்? யாரிடமும் கற்றுக் கொண்டார்? ஒருவேளை எகிப்தியர்கள் கூறுவது போல அவர்,  விண்ணிலிருந்து பறக்கும் பொருளில் வந்த, மனித மற்றும் வேற்றுலக இனங்களுக்கிடையான சமாதான_கடவுளா?…

நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்...


உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்...

ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,

இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,

மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,

நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள்.

ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது..

நோய் வந்த பிறகு தான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது..

மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள்.

ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.

உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது..

இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன..

அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்..

உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக் காற்று தான்..

நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது..

மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும்.

ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம்.

இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை.

நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.

எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார்...

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...


தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாமா?


இது ஒரு எச்சரிக்கை பதிவு படித்து விட்டு கட்டாயமாக படியுங்கள்...

தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது.. என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....

இனிக்கும் செய்தியல்ல..

தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாமா?

முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.

தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்..

தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது.

யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள்.

இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன.

ஆனால், அதிர்ச்சி தரும் விஷயம்...

அந்தத் தேனீக்கள் இப்போது 'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன..

ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால், நிச்சயம் இதுதான்..

ஒட்டு மொத்த மக்கள் தொகையாலும் பூமிக்கு விளையாத நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.

அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது.

தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்து கொண்டால் தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.

தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்...

உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு. மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ..

இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.

மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும்.

ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.

இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.

ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும் தான் வேலை.

ஆண் தேனீக்கு, ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை.

மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.

உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.

தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. தேன் கூட்டை அறுங்கோண வடிவத்துல கட்டும்.

ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம முழுசாப் பயன்படுத்த முடியும்.

ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்தில் கூடு கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும்.

கூட்டின் கட்டுமானம் திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும்.

பூக்களின் மகரந்தம், மதுரம்...

இரண்டும் தான் தேனீக்களின் உணவு.

அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டுவிடும். அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது?

குளிர் காலங்கள், பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது.

தேனீக்கள் தேன் சேகரித்துப் பதப்படுத்துவது தான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.

தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில் இருக்கும் 'தேன் பை’யில் சேகரித்துக் கொள்ளும்.

அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும்..

கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும்.

அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டு வந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.

ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால் தான், ஒரு துளி தேன் சேரும்.

கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும்.

பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.

பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும்.
இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகு தான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும்.

தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள்.

அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்!

இந்த வேலை நடக்கும் போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

இனப்பெருக்கக் காலத்தில் மட்டும் தான் அதற்கு வேலை வரும்.

அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும்.

அதை எந்த ஆண் தேனீ துரத்திப் பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி.

புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்து விடும். அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள் தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்து கொள்ளும் முறை அட்டகாசமானது.

உணவுத் தேவை ஏற்படும் போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து விட்டுக் கூட்டுக்குத் திரும்பும்.

கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள், தாங்கள் கண்டு பிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும்..

இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன..

வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.

வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.

வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம்.

வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்...

இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.

இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.

தேன் சேகரிக்கும் போது தேனீக்களின் காலில் ஒட்டிக் கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும் போது, விதவிதமான கூட்டணியுடன் பரவும்.

இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம்.

தேனீக்களை அதிகம் காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.

காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!

'அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன ஆபத்து?'

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்து வரும் உயிரினங்கள்..

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்து விட்டன.

அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.

ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம்.

தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக் கொத்தாகக் காணாமல் போய்விடும்.

ராணி மட்டும் கூட்டில் இருக்கும்.

பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்து விடும். இல்லையெனில், வேறு கூடு தேடிப் போய்விடும்.

பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்.

செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்து விடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்து போய் பறந்து போய் அலைந்து திரிந்து இறந்து விடும்.

மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் 'விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.

அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றே விடும்.

இப்படி விவசாயத்தில் 'வணிக லாபத்துக்காக’ மனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்துவருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது.

அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்து விட்டனர். வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள்.

பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது. இதை நாம் எப்போது உணர்வோம்?' என்று வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்து விட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது! என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....

சிலம்பாட்டம்...


தமிழரின் பழமை வாய்ந்த விளையாட்டுகளில் பல்லோராலும் பரவலாக அறியப் பட்டிருக்கின்ற விளையாட்டு சிலம்ப விளையாட்டாகும்.

இவ்விளையாட்டானது ஆண்களுக்கு உரிய விளையாட்டாகும்.

இவ்விளையாட்டு பரத நாட்டியத்தோடு ஒத்துபோகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

பழங்காலத்தில் மலைவாழ் மக்கள் விலங்குகளை வேட்டையாடவும், கொடுவிலங்குகளின் தாக்குதலை எதிர்கொள்ளவும் கம்புகளைக் கருவியாகப் பயன் படுத்தியிருக்கின்றனர்.

இதுவே, பின்னர் சிலம்பக் கலையாக வளர்ச்சிப் பெற்று வந்திருக்கின்றது.

சிலம்பம் தற்காப்புக் கலையாக இருப்பினும், பெரும்பாலும் தமிழர் திருவிழாக்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் மக்கள் கண்டுகளிக்கும் வீர விளையாட்டாக அரங்கேறுகின்றது. சிலம்பம் ஆட கட்டாயம் கம்பு வேண்டும்.

இதற்கு மூங்கிற் கழி பயன்படுகின்றது.

மூவேந்தர்கள் முதற்சங்க காலந்தொட்டே சிலம்பக் கலையை போற்றி பேணி வளர்த்து வந்துள்ளனர் என்பது வரலாற்று உண்மையாகும்.

திருவிளையாடற் புராணத்திலும் வைத்திய நூலான பதார்த்த குணசிந்தாமணியிலும் சிலம்பாட்டம் இருந்ததற்கான குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.
சிலம்பப் பயிற்சி ஒருவரின் நோயைத் தீர்த்து ஒருவரின் உடலையும் வலுப்படுத்திக் கொள்ள வழிவகுக்கின்றது.

சிலம்பாட்டம் என்பது வெறுமனே கம்பை மட்டும் வைத்து விளையாடும் விளையாட்டல்ல. மாறாக ஈட்டி, சுருள்வால், கட்டாரி, சங்கிலி, மான்கொம்பு போன்றவற்றை வைத்து விளையாடும் விளையாட்டாகும்.

முற்காலத்தில் போர்ச்சிலம்பம் இருந்திருக்கின்றது. அதனைப் போருக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கின்றனர்.

திருவிழாக் காலங்களிலும் முக்கிய நிகழ்வுகளிலும் கம்பைப் பலவிதமாகச் சுழற்றும் விளையாட்டு தீச்சிலம்பம் என்று சொல்லப்படுகின்றது.

தமிழரின் விளையாட்டே இன்று கராத்தே, குங்பூ, தேக்கோவா என உறுமாறி பிற நாடுகளில் வளர்ச்சிப் பெற்றுள்ளது.

இவ்விளையாட்டுப் போட்டியின் போது, விளையாட்டாளர் எதிரியின் கம்பு தன் உடலில் படாதவாறு தடுக்கவும், தன் கம்பால் எதிரியின் உடலின் பல்வேறு இலக்குகளைத் தொடவும், எதிரியின் கம்பைத் தட்டிவிட்டு வெறுங்கையராக்கவும் முற்படுவர்.

ஏனெனில், எதிரியின் கம்பு பறி போய்விட்டால் அது வெற்றியாகக் கொள்ளப்பட்டு ஆட்டம் நிறைவுறும்.

தமிழரின் வீர விளையாட்டான சிலம்பக் கலையை தமிழர்கள் போற்றிப் புரந்துக்கொள்ளாதக் காரணத்தினால், இக்கலை இன்று அருகி வரும் கலைகளில் ஒன்றாக விளங்குகின்றது.

உலகத்தமிழர்கள் தனித் தன்மையுடன் கூடிய தமிழர் விளையாட்டுகளை முன்னெடுத்துச் செல்ல ஆவணச் செய்ய வேண்டும்.

தமிழால் முடிந்தால் தமிழரால் முடியும்...

கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்ச‍ம் பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால்...


தினமும் காலை நேரத்தில் கறிவேப்பிலை இலைகளுடன்  ஒரு பேரிச்சம் பழத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்த‍ சோகையால் பாதிக்க‍ப்பட்ட‍ ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த‍ ஓட்ட‍ம் சீராகும்..

ரத்த சோகை நோயும் முற்றிலும் குணமடையும் என்கிறார்கள் மருத்துவர்கள்..

உங்கள் மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனை பெற்று உட் கொள்ள‍வும்...

திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகள் சாதனை...


குங்குமம் வைப்பது எதற்காக....?


சுமங்கலிப்பெண்களின் தலை உச்சியின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள்..

அம்பிகையின் உச்சியில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது..

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்..

குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்..

பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்..

அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும்..

திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது..

தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்..

திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் உச்சியின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்..

கட்டை விரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித் தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும்.

குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது...

சமூக ஏற்றத் தாழ்வில்லாத பண்டைய தமிழர் வாழ்வு...


அழகிய முத்துக்கள் எவ்வாறு உருவாகின்றன?


பார்ப்பதற்கு அழகாக இருக்கும் முத்துக்கள், பெண்களை வர்ணிப்பதற்கும் அவர்களின் கழுத்து, காது, இடுப்பு போன்றவற்றினை அலங்கரிப்பதற்கும் பயன் படுத்தப்படுகின்றன.

முத்துப் போன்று பற்கள், முத்துச் சிரிப்பு என்று வர்ணிக்க பயன்படும் இந்த முத்துக்கள் இயற்கையின் சிறந்த படைப்புகளுன் ஒன்று.

முத்துக்கள் உருவாவது எப்படி?

சிப்பிக்குள் தோன்றும் கெட்டியான பொருளே முத்து எனப்படுகிறது.

கடலில் காணப்படும் முத்துச் சிப்பியினுள் சிறிய திண்மப் பொருளொன்று புகுந்து கொண்டால் உயிருள்ள அந்தச் சிப்பி தன் புறத்தோல் அடுக்காகிய எபிதீலியம் என்னும் படலத்தால் அதை நன்கு பொதிகின்றது.

நாளடைவில் அச்சிப்பியில் சுரக்கும் திரவம் மெல்லிய அடுக்குகளாக அதன் மீது படிந்து முத்தாக மாறுகிறது.

முத்து உருவாகும் போது மெல்லிய அடுக்குகள் பொதியப்படுவதினால் அது ஒளியை உட்பிரவேசிக்கவும் பிரதிபலிக்கவும் ஏற்ற தன்மையுடையதாகக் காணப்படுகின்றது.

இதனால் சாதாரண முத்துக்கள் கூட பார்ப்பதற்கு மிகவும் ஒளிர்வுடையதாகத் தோன்றுகின்றன.

கறுப்பு நிறமான முத்துக்களும் மிக அருமையாகக் காணப்படுகின்றன.

முத்துக்களின் வகைகள்..

முத்துக்கள் நன்னீரில் உருவானவையா, கடல் நீரில் உருவானவையா, அவற்றை உருவாக்கிய முத்துச்சிப்பி வகை, உருவான பிரதேசம் என்பவற்றைப் பொறுத்து முத்துக்களின் இயல்புகள் வேறுபடுகின்றன.

முத்துக்களில் அக்கோயா முத்து, தென்கடல் முத்து, தகித்தியன் முத்து, நன்னீர் முத்து போன்ற வகைகள் உள்ளன.

சிலவகைகள் அரிதாகவே கிடைக்கின்றன, இதனால் முத்துக்களின் மதிப்பும் அதிகம்.

சிப்பியிலிருந்து முத்தை பிரித்தல் முட்டை வடிவிலான முத்துக்கள் பொதுவாகத் தென்பட்டாலும் உருண்டையான தோற்றமுடைய முத்துக்களுக்கே (Pearls) மதிப்பு அதிகம்.

தூசி, மிதமிஞ்சிய வெப்பம், ஈரலிப்புத்தன்மை போன்றவற்றினால் முத்து பழுதுறும் வாய்ப்பு ஏற்படலாம்.

இயற்கை முத்துக்கள்...

அவிகுலிடி சிப்பிகளிலும், யூனியனி என்னும் மட்டிகளிலும் உற்பத்தியாகும் முத்துக்கள் இயற்கை முத்துக்கள் ஆகும்.
செயற்கை முத்துக்கள் சிப்பியின் உட்புறம் முத்துப்போல் அழகான மெல்லிய பொருள் ஒன்றினால் மூடியிருக்கும். இதை நேக்கர் என்பர்.

அந்த நேக்கரினால் உருவாக்கிய மணியை உயிருள்ள முத்துச் சிப்பியின் திசுவிற்கும் சிப்பிக்குமிடையே கவனமாக திணிப்பார்கள்.

அவ்வாறு திணிக்கப்பட்ட சிப்பிகளை கூண்டு ஒன்றினுள் வைத்து நீரில் பாதுகாப்பாக அமிழ்த்தி விடுவார்கள்.

நாளடைவில் மணிகள் பொதிக்கப்பட்டு முத்துக்கள் உருவாகும். தோற்றத்தில் பெரிய முத்துக்கள் பெறுவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

இவ்வாறு பெறப்படும் முத்துக்கள் செயற்கை முத்துக்கள் எனப்படும்.

இந்த அரிய முறையை ஜப்பானியர் ஒருவர் 1804 ஆம் ஆண்டு கண்டு பிடித்தார்.

முத்துக்களின் தரத்தை எக்ஸ்-கதிர் எண்டாஸ் கோப் என்னும் கருவியின் மூலம் துல்லியமாகக் கண்டு பிடித்து விடலாம். சில வகை மீன்களின் செதில்களைக் கொண்டு முத்துச்சாறு (Pearlessence) உற்பத்தி செய்யப்படுகின்றது.

ஊன் பசையுடன் கலந்து கண்ணாடி மணிகள் மீது அவற்றைப் பூசி முத்துக்கள் தயாரிக்கின்றனர்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


மூட்டு வலி முழுமையான நிவாரணம் வேண்டுமா ?


இதை முயற்சி செய்து பாருங்கள்...

முடக்கொத்தான் இலை ஒரு கைப்பிடி
கொத்தமல்லி 50 கிராம்
கருஞ்சீரகம் 30கிராம்
சுக்கு 10கிராம்
சித்தரத்தை 10கிராம்
மிளகு 10 கிராம்
கொடம்புளி இரண்டு துண்டுகள்
பெருங்காயம் சிறிதளவு
பூனைக்காலி விதை பத்து

எல்லாவற்றையும் நன்றாக தட்டி ஒரு பானையிலிட்டு 8 டம்லர் நீர்விட்டு  பாதியாக வற்ற வைத்து..

காலை மாலை விதம்  ஒரு டம்ளர் சாப்பிட்டுவர இளந்த சக்திகள திரும்ப பெற்று கை கால் அசதி, மூட்டுவலி, உடல் பலவினம், பாலியல் பலவினம், உடல்நடுக்கம் போன்றைவை  குணமாகி வலிமையும் இளமையும் உண்டாகும்....

இந்த பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்...

வங்கி தேர்வும் பாஜக மோடியின் சதியும்...


டால்ஃபின் ஓர் உலக அதிசயம்...


அதற்கென்று மொழி உண்டு அவை தங்களுக்கள் பேசி கொள்கின்றன என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறாகள்.

அதற்கென்று இசையும் உண்டு.

டால்ஃபின்கள் பாடும் இவை தவிர புத்திசாலிதனம், சமூக உணர்வு, உதவும் தன்மை இரக்கம் என்று பலவித உணர்வுகள் கொண்டது டால்ஃபின்..

டால்ஃபின் மனிதனைவிட வலது மூளையை (Right hemisphere) உபயோகிக்கிறதென்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

கடலில் மூழ்கித்தத்தளிக்கும் மனிதர்களை டால்ஃபின்கள் தங்கள் முதுகில் சுமந்து கரை சேர்த்திருக்கின்றன.

டால்பின்கள் சொல்லி வைத்தாற்போல் ஒரே சமயத்தில் தண்ணீருக்கு வெளியே பாய்ந்து டைவ் அடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம், அதை விட ஆச்சரியம் சில நோய்களை டால்ஃபின்கள் குணப்படுத்துவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.

மனநிலை பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் தொடர்ந்து சில நாள்கள் டால்ஃபின்களோடு விளையாடிய பிறகு முழுமையாக குணமடைந்தார்கள்.

பார்வையிழந்த ஒரு பெண், டால்ஃபினகளை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி ஒருவரை மணந்து கொண்டார் கணவரின் வீட்டு தோட்டத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நிறைய டால்ஃபின்கள் உண்டு. ஒரு முறை நீச்சலடிக்க குளத்துக்குள் மெல்ல இறங்கிய அந்த பெண்ணுக்கு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.

டால்ஃபின்கள் ஏதேதோ தன்னிடம் பேச முயற்சிப்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது சில நாள்களில், டால்ஃபின்கள் தண்ணீருக்குள் அவருக்கு வழிகாட்ட ஆரம்பித்தன.

டெலிபதி மூலம் தண்ணீரில் பந்து எங்கேயிருக்கிறது என்பதைக்கூட அந்த பெண்ணால் கண்டு பிடிக்க முடிந்தது.

ஒருநாள் பார்வையிழந்த அந்த பெண்ணுக்கு டால்பின்கள் விதவிதமான வண்ணங்களை மாற்றி மாற்றிக் காட்டின மனக்கண்முன்.

டாக்டர் ஜான் லில்லி என்கிற டால்ஃபின் ஆராய்ச்சியாளர் நெத்தியடியாக ஒரு கருத்தை சொல்கிறார் நாம் வேற்றுக் கிரகங்களில் (நம்மை விட புத்திசாலியான) மனிதர்கள் (aliens) இருக்கிறார்களா என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். ஆனால் நமக்கு அருகிலேயே உள்ள மீன் உருவம் கொண்ட ஏலியன்ஸ் தான் டால்ஃபின்கள்...

ஹெல்மெட் மார்க்கெட்டிங்...


பிரம்மத்தை நோக்கி - 2...


மரண பயம் இல்லாத மனிதர் எவரும் இல்லாத அளவிற்கு மரணம் நம்மை பயமுறுத்தி வைத்துள்ளது. இங்கு இருப்பதெல்லாம் அப்படியே இருக்கும், தான் மட்டுமே இல்லாது போய் விடுவோம் என்கிற அறியாமை தான் அதற்கு காரணம்.

உண்மையில் இல்லாமல் போவது நம் மனதும் உணர்வும் மட்டுமே. மரணத்திற்கு பின் இல்லாமல் போவது இவை இரண்டும் தான். உண்மையில் இல்லாமல் இருப்பவை தான் இவை.

உன் உடலை விட்டு உயிர் நீங்கிய பின் உடலை எரித்து சாம்பலாக்கிய பின் எது உள்ளதோ அதுவே உண்மை. அதுவே நிரந்தரம்.

அதற்கு ஆதியுமில்லை, அந்தமுமில்லை. அது நிலையான ஒன்று. தியானத்தின் மூலம் இந்த நான் என்கிற அறியாமையை கடந்து அந்த உண்மை நிலையில் நீ பிரவேசித்து விட்டால் உனக்கு மரணமில்லை.

மரணம் எதில் நிகழுமோ அதையே தொலைத்த பின் மரணம் எங்கு நிகழும். கடந்தகால எண்ணங்களை நீ என நினைப்பது அறியாமை தானே, அந்த எண்ணங்கள் நீயா?

இல்லை அதே போல் ஒவ்வொரு கனமும் மாறிக்கொண்டே இருக்கும் இந்த உணர்வு தான் நீயா? இவை இரண்டும் அல்லாத சாட்சி தன்மையாகிய பிரம்மமே நீ...

பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்...

பாஜக மோடியின் வங்கி மோசடிகள்...


நெஞ்சு சளி நீங்க மருந்துவம்...



தினமும் துளசிச் சாரை பருகினால் நெஞ்சு சளி கரையும்..

நெஞ்சு சளி நீங்க நெல்லிக்காய், மிளகு, தேன் மருந்து..

நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும்..

நெஞ்சு சளி நீங்க புதினா, மிளகு மருந்து..

புதினா இலை (ஒரு கைப்பிடி) மிளகு(3) இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.

நெஞ்சு சளி குணமாக வெற்றிலை மருந்து..

வெற்றிலைச் சாற்றில் இரண்டு சொட்டுக்களை காதில் விட்டால் சளி ஒழுகுவது நிற்கும்.

நெஞ்சு சளி குணமாக வெற்றிலை, இஞ்சி மருந்து..

வெற்றிலைச் சாறு, இஞ்சிச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து குடித்தால் மார்பு சளி, சுவாசக் கோளாறுகள் குணமாகும்.

நெஞ்சு சளி குணமாக பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை மருந்து..

பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை வைத்து துவையல் செய்து சுடுசோற்றில் நெய்யிட்டு உண்ண மார்பு சளி நீங்கும்...

திருட்டு திராவிட த்தின் துரோகங்கள்...





தந்த ரோகம் - பல்பொடி...


அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை...

பல்பொடி செய்முறை..

1 - சுக்கு
2 - காசுக்கட்டி
3 - கடுக்காய்
4 - இந்துப்பு

இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும்.

இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல், பல் ஆட்டம், பல் சொத்தை, இவை அனைத்தும் நீங்கும்.

இதனைக் கொண்டு காலை, மாலை, தினமும் இருமுறை பல் துலக்கி வர பல் நோய்களே வராது...

அரேபியாவில் மோதல்கள் தொடங்கி விட்டன...


கன்னட ஈ.வே.ரா வளர்ப்பு மகளே மணியம்மை...


அப்பா அப்பா என்று அம்மை மனம் குளிர, வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும்..

அம்மா அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும்.

இக்காட்சியைக் கண்டு பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.

அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார்.

- அண்ணாதுரை (திராவிட நாடு 03.07.1949).

பெரியாரின் மறுபக்கம் தொடரில் (பாகம் 14) ஈ.வே.ரா - மணியம்மை திருமணம் பற்றி விமர்சித்து அண்ணாதுரை எழுதிய முழு கட்டுரையும் உள்ளது...

பாமக அன்புமணி அவர்கள் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் கேள்வி...


விழித்துக்கொள் எம் தமிழினமே...



அதிமுக எம்.ஜி.ஆர் திருடிய திருச்செந்தூர் முருகனின் வைரவேல்...


சின்னப்ப தேவர் தன் குலதெய்வமான மருதமலை முருகன் கோவில் படிக்கட்டுகளின் இருபுறமும் மின் விளக்குகள் அமைத்தார்.

அதைத் திறந்து வைக்க எம்.ஜி.ஆரை அழைக்க அவர் தி.மு.க வில் இருந்து கொண்டு ஆன்மீக நிகழ்ச்சிக்கு வர இயலாது என்று கூறிவிடுகிறார்.

உடனே தேவரின் தாய் எம்.ஜி.ஆரிடம் வேண்டுகோள் விடுக்க அவர் ஒத்துக் கொண்டு விழாவிற்கு வந்தார்.

இதை பலரும் பெருமையாகக் கூறுவார்கள்.

ஆனால் இதே 1980 வாக்கில் எம்.ஜி.ஆர் திருச்செந்தூர் முருகனுடைய வைரவேலைத் திருடி பலகோடிக்கு விற்றார் அப்போதிருந்த அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் இதற்கு உடந்தை.

தி.மு.க வினர் இதை பெரிய பிரச்சனையாக்க சி.ஜே.ஆர்.பால் என்பவர் தலைமையில் விசாரணை கமிசன் கூட அமைக்கப்பட்டது.

ஆனால் வேல் கடைசிவரை கிடைக்கவில்லை.

கோயில் பொறுப்பாளர் சுப்பிரமணியபிள்ளை மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.

(இதைக் கண்டித்து கருணாநிதி நீதிகேட்டு நெடும்பயணம் என்று மதுரை முதல் திருச்செந்தூர் வரை நடைபயணம் கூட போனார் 1981ல்).

அதன் பிறகு இதே எம்.ஜி.ஆர் பல கோடி மதிப்புள்ள ராமேஸ்வரம் லட்சுமணர் சிலையை திருடினார்.

அது தொடர்பான வழக்கு இப்போது சூடுபிடித்துள்ளது.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி வைரவேலை கண்டுபிடிக்க முயன்றிருப்பார் என்று நினைத்தால் நீங்களும் அன்றைய தமிழர்கள் போல அப்பாவியே.

அன்று கருணாநிதி குற்றம் சாட்டிய ஆர்.எம்.வீரப்பனும் சண்முகநாதனும் இன்று அவரது உயிர் நண்பர்கள்.

தமிழக கோவில்களில் சிலைகள் திருட்டு போவது மிகவும் சகஜமாகி, அதன் பிறகு அதற்கென்று தனி தடுப்புத்துறை உருவாக்கப்பட்டு அதன் பிறகும் சிலை திருட்டு திராவிட மாபியாக்களால் நடந்து கொண்டே தான் இருக்கிறது...