1. ஈழத்தில் இனப் படுகொலையை நடத்தியது யார் ?
2. ஏன் நடத்தினார்கள்?
3. இதுவரை நாம் செய்தது என்ன?
4. இனி என்ன செய்யப் போகிறோம்?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிய, மறைக்கப்பட்ட நம் தமிழர் வரலாறை நாம் சற்றே திரும்பிப் பாப்போம்.......
பாகம்-1 :
ஆதி மனிதன் பிறந்த இடம் குமரிக்கண்டம்.
முதல் மனித நாகரீகம் தோன்றிய இடமும் குமரிக்கண்டம்.
மனிதனானவன் பேசிய முதல் மொழி தமிழ்.
இன்றைய தமிழகத்தையும், இலங்கையையும், அதற்கும் தெற்கே மூழ்கிப்போன பெரும் பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு மாபெரும் நிலப்பரப்பு தான் குமரிக்கண்டம்.
அந்தக் குமரிக்கண்டத்தில் காலம் காலமாய் வாழ்ந்து வந்தவர்கள் தமிழ்க்குடிகளே ஆவர்.
49 நாடுகள் கொண்ட ஒரு மாபெரும் பேரரசை பாண்டிய அரசர்கள் கட்டி ஆண்டு வந்தனர்.
இயற்கைச் சீற்றத்தின் காரணமாக குமரிக்கண்டம் அழிவைச் சந்திக்க நேரிட்டதால் அங்கு வாழ்ந்து வந்த தமிழர்கள், நாவாய்களின் மூலமாக உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றனர்.
சென்ற இடங்களில் எல்லாம் மிகப் பெரிய அரசுகளையும், நாகரீகங்களையும் உருவாக்கினர்.
எகிப்து, சுமேரிய, சிந்து சமவெளி நாகரீகங்களையும் உருவாக்கியவர்கள் தமிழர்களே ஆவர்.
மாபெரும் வெள்ளம், அதன் விளைவுகள், மக்கள் நாவாய்களின் மூலமாகத் தப்பித்து வந்தது பற்றி உலகின் பழம்பெரும் நாகரீகங்களைச் சேர்ந்த மக்கள் பேசிவந்ததே குமரிக்கண்டம் இருந்ததற்கான சான்றாகும்.
ஆழிப் பேரலையின் காரணமாக இன்றைய இலங்கையானது, தாய்த் தமிழகத்திடம் இருந்து பிரிந்து போய், ஒரு தனித் தீவானது.
குமரிக்கண்டத்தில் இருந்த நாற்பத்தொன்பது நாடுகளில் ஏழாவது நாடாக இன்றைய இலங்கையின் நிலப்பரப்பு இருந்தது.
ஏழு நாடு என்ற வார்த்தைதான் பின்னாட்களில் மருவிப்போய் ஈழ நாடு என மாறியிருக்கிறது.
இலங்கை, ஈழம் ஆகிய இரு சொற்களின் வேர்ச்சொல் ஏழு என்பதாகும்.
ஈழம், இலங்கை ஆகிய சொற்கள் ஒரே தீவைக் குறிக்கும் இரு வேறு சொற்களாகும்.
சிந்து சமவெளி நாகரீக எழுத்துக்களும், தமிழி எழுத்துக்களும் ஒன்றாகப் பொறிக்கப்பட்ட ஒரு உலோகப் பட்டை ஈழத்தில் ஆகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த எழுத்துக்கள் ‘தீவுக்கோ’ ” என்று பொருள் தருகின்றன.
தீவுக்கோ என்றால் ஈழத்தீவை ஆளும் அரசன் என்று பொருள்.
ஈழத்தீவு முழுவதற்கும் ஒரே அரசன் தான் இருந்துள்ளான்.
அவன் தமிழ் பேசிய அரசன் ஆவான்.
அதனால் தான் ஈழ அரசனைக் குறிக்கும் சொல் தமிழில் உள்ளது..
ஈழ மண்ணின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே என்று மேலும் நிரூபிக்கும் வண்ணமாக யாழ்ப்பாண நகரிலும், மட்டக்களப்பு பகுதிகளிலும், சுமார் 2600 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக்கள் கொண்ட மட்கலங்களை தொல்லியல் துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சிந்து சமவெளி நாகரீக எழுத்துக்கள் கொண்ட பாறை ஓவியங்கள் தமிழக மாவட்டமான விழுப்புரத்திலும் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆசியாவிலேயே மிகவும் பழமையான நாகரீகம் என்று சொல்லப் பட்டது சிந்து சமவெளி நாகரீகம் ஆகும்.
அந்த நாகரீகத்தின் சம காலத்திலேயே தமிழன் அதனோடு தொடர்பில் இருந்திருக்கிறான் என்பதற்கு தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் கிட்டியுள்ள ஆகழ்வாராய்ச்சி முடிவுகளே சான்றாகும்.
மிகவும் தொன்மையான குடிகளான தமிழர்களால் நாகரீகத்தின் உச்சத்தை அடைய முடிந்தது.
கலை, இலக்கியம், இசை, மொழி, அறிவியல் என அனைத்திலும் வளர்ந்த சமூகமாய் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர்.
தமிழர்களின் வழிகாட்டிகள் சித்தர்கள் ஆவார்கள்.
தமிழரின் ஆதி மெய்யியல் இன்று வெவ்வேறு பெயர்களில் உலகெங்கிலும் பரவிக்கிடக்கிறது.
அதற்குக் காரணம் குமரிக் கண்டத்திலிருந்து சென்ற தமிழர்களே ஆவார்கள்...