03/09/2018

பெற்றோர்களே இதற்கு பொறுப்பு...


ஒருவரை மனத்தால் நினைத்து விட்டாலே அவருடன் வாழ்வதே தர்மம் என்று சொல்லி கொடுத்து வளர்த்திருந்தால் இப்படி பட்ட எண்ணங்கள் பிள்ளைகள் மனதில் தோன்றாது...

கற்பு என்பது உடல் சம்பந்தப்பட்ட விடயம் மட்டும் அல்ல... மனம் சம்பந்தப்பட்டதும் தான்...

பெற்றோர்கள் அவர்கள் நினைந்தவரை ஒதுக்கி அவர்களுக்கு பிடித்தவரை திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்...

இதனால் சிலருக்கு இப்படிபட்ட எண்ணங்கள் உருவாகிறது...

தமிழை கணினிப் பயன்பாட்டுக்கு கொண்டுவர தமிழீழ விடுதலை புலிகளுக்கு உதவியவர் காலமானார்...


இந்திய மொழிகளில் முதன் முதலாக தமிழே கணினிப் பயன்பாட்டுக்கு வந்தது. அந்த எழுத்துருவை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆவார்கள். அதற்குப் பின்புலமாக இருந்தவர் முன்னாள் ரொரன்ரோ பல்கலைக்கழக பேராசிரியரான கணிதமேதை சி.விஜயகுமார் அவர்கள் ஆகும். இவர் நேற்று 02/09/2018 ரொரன்ரோவில் காலமானார்.

1989களின் இறுதியில் இந்திய இராணுவத்துதோடு புலிகள் உக்கிரபோரில் ஈடுபட்டிருந்த வேளை புலம்பெயர் நாடுகளுக்கு விடுதலைப் புலிகளின் செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல தமது கிளைகள் ஊடாக புலிகள் செய்தி ஏடுகளை நடத்தி வந்தனர். போர் செய்திகளை உடனுக்குடன் வெளியிட முன்னைய அச்சமைப்பு வேகம் போதாமல் இருந்த காரணத்தால் புலிகள் புதிய முயற்சிகளில் இறங்கினர்.

அப்போது தான் முனைவர் சி.விஜயகுமார் அவர்கள் தன்னிடம் இருந்த திட்டத்தை விடுதலைப் புலிகளின் கனடாப் பொறுப்பாளர் ‘தொண்டைமானாறு’ குணம் அவர்களிடம் தெரிவித்தார். அத்திட்டத்திற்கு கணினிகள் மற்றும் உபகரணங்கள் வாங்க பெரும் நிதி தேவைப்பட்டது. இத்திட்டத்தை விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினரும் அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளருமான திரு.லோறன்ஸ் திலகர் அவர்களிடம் தெரிவித்து தலைமைப் பீடத்திடம் நிதி பெற ஆவன செய்தார் பொறுப்பாளர் குணம் அவர்கள்.


எழுத்துரு அமைக்க தமிழர் ஆர்வலர் குழு அமைக்கப்பட்டு விடுதலைப் புலிகளின் கனடிய அலுவலகத்தில் பணி நடைபெற்றது. வரைகலை கலைஞர்கள் திரு. பா.ஞனபண்டிதன், கரன் கிறாப் சசி, தவம்… போன்ற பலரின் உதவியோடு, சரஸ்வதி, ஓளவை, கீதவாணி, பூபாளம், திருமலை மற்றும் நாகந்தினி போன்ற எழுத்துருக்கள் அமைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் கனடா நாட்டுக் கிளையின் வெளியீடான ‘உலகத்தமிழர்;’ ஏடே இவ்வெழுத்துக்கள் கொண்டு வெளிவந்த உலகின் முதல் கணினி அச்சேறிய தமிழ் ஏடு ஆகும். இவற்றுக்கெல்லாம் அறிவுக் கருவூலமாக இருந்தவர் முனைவர் சி.விஜயகுமார் அவர்கள் ஆகும். இவரின் மறைவு தமிழினத்துக்கு பேரிழப்பாகும். அன்னரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் உறவினர்களுக்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிப்போம்...

உடல் நலக்குறைவால் திருமாவளவன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி...


சாதி ஒலிக்காம தூங்கிடாத எழுந்து வா மைனர் குஞ்சு...

புதிய நூறு ரூபா நோட்டு...



பூலோக சொர்க்கம் என்றால் அது நித்யானந்தவின் ஆசிரமம் தான்...

















தாயின் அன்பு கிடைக்காததால் திருடனுடன் வீட்டை விட்டு ஓடிப்போன மகள்.. 1 மணி நேரத்தில் மீட்கப்பட்டார்...


திருச்சியைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி. இவருக்குத் திருமணமாகி, 14 வயதில் தேவி (பெயர் மாற்றம்) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், காரைக்குடியைச் சேர்ந்த கோவிந்தராஜ், திருச்சியில் வேலைபார்த்தபோது அன்னலட்சுமியுடன் நட்பு ஏற்பட்டது. அதன்பிறகு மகளை அழைத்துக்கொண்டு கோவிந்தராஜுடன் சென்னை, கண்ணகி நகருக்கு வந்துவிட்டார் அன்னலட்சுமி.

கணவன் மனைவியாக வாழ்ந்த இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. அதன்பிறகு, முதல் மகளை அன்னலட்சுமி சரிவர கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த தேவி, கடந்த 30-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் அன்னலட்சுமி புகார் கொடுத்தார்.

போலீஸார், தேவியைப் பல இடங்களில் தேடினர். தேவியின் தோழிகளிடம் விசாரித்தபோது,  தேவி ராஜா என்ற திருடனுடன் சென்றது தெரியவந்தது. ராஜாவின் வீடு தேனாம்பேட்டையில் உள்ளது. எனவே தேவிக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டு விட கூடாது என துரிதமாக செயல்பட்ட போலீசார் தேனாம்பேட்டை சென்று அங்கிருந்த தேவியை மீட்டு, பெற்றோரிடம்  ஒப்படைத்தனர்.

தேவியிடம் பெண் காவலர்கள் விசாரித்தபோது,  'என்னுடைய அம்மா இரண்டாவது கணவருடன் வாழ்வது எனக்குப்பிடிக்கவில்லை.  என்னை அவர் சரிவர கவனிப்பதில்லை. என்னிடம் அவர் அன்பாகப் பேசுவதில்லை. அதனால்தான் வீட்டை விட்டு வெளியில் சென்றேன்' என்று கூறியிருக்கிறார்...

கத்தார் நாட்டை தனித்தீவாக மாற்ற சவுதி திட்டம்...


சிறுமியிடம் சில்மிஷம் செருப்படி வாங்கிய கணக்கு வாத்தி...


சேலம்: காமம் கண்ணை மறைத்து கொண்டவர்களுக்கு சிறுமி என்ன, கிழவி என்ன? அப்படித்தான் சேலத்தில் நடந்துள்ளது.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே வித்யா மந்திர் என்ற உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அதனால் மாணவியின் அம்மா, பிள்ளைகள் எப்போதுமே ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று சொல்வார்கள் என்று நினைத்து வலுக்கட்டாயமாக ஸ்கூலுக்கு கிளப்பினார். ஆனால் சிறுமியின் பிடிவாதம் பலமாக இருக்கவே, சந்தேகம் அடைந்த அம்மா, "குழந்தையை ஏன் போக மாட்டேங்கிறே?" என்று விசாரிக்க ஆரம்பித்தார்.

உடனே சிறுமி தேம்பி தேம்பி அழ தொடங்கிவிட்டார், கணக்கு வாத்தியார் சதீஷ், பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி, அவர் தம்மிடம் நடந்து கொள்ளும் விதத்தையும் சிறுமி விவரித்தாள். இதைக்கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், சிறுமியிடம் "நாங்கள் பார்த்துக்கறோம், நீ இப்போ ஸ்கூலுக்கு கிளம்பு" என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தனர்.

பின்னர் நேற்று மதியம், உறவினர்களை திரட்டிக் கொண்டு பள்ளி முன் வந்து நின்றனர் பெற்றோர். பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த கணக்கு ஆசிரியர் சதீஷை பள்ளி வளாகத்தை விட்டு வெளியே இழுத்து வந்து போட்டனர். பின்னர் சரமாரியாக அடித்து உதைத்தனர். சிறுமியின் அம்மாவுக்கு ஆத்திரம் ஏறிக் கொண்டே போனது. ஒருகட்டத்தில் செருப்பை கழட்டி வெளுக்க தொடங்கினர்.

இப்படி ஒட்டுமொத்தமாக நம்மை கும்மி எடுப்பார்கள் என்று சதீஷ் கொஞ்சமும் நினைக்கவில்லை. பலத்த காயம் ஏற்பட்டு அங்கேயே சுருண்டு விழுந்தார். தகவல் அறிந்து பள்ளப்பட்டி போலீசார் அங்கு வந்தனர். பின்னர் விவரம் கேட்டறிந்து கணக்கு டீச்சர் சதீஷை அங்கிருந்து மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

3-ம் வகுப்பு படிக்கும் குழந்தையிடம் இவ்வளவு தரம்தாழ்ந்து நடக்கும் இந்த கணக்கு ஆசிரியர் இதற்கு முந்தைய காலங்களில் எவ்வளவு கேடு கெட்ட வாழ்க்கையை நடத்தியிருப்பாரோ, எத்தனை பெண்களிடம் இப்படிப்பட்ட வன்மத்தை காட்டி கேவலமாக நடந்து கொண்டிருப்பாரோ தெரியவில்லை. ஆசிரியர்களே ஆனாலும், காமம் தலைக்கேறி இப்படி படிக்கும் குழந்தைகளை தன் இச்சைக்கு பலியாக்க துடிப்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்...

எச்சை ஊடகமும் - அரசும்...


கைதிக்காக கஞ்சா கடத்திய காவலர் பணியிடை நீக்கம்...


சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளுக்காக கஞ்சா கடத்திய காவலரை போலீசார் கைது செய்தனர்.

புழல் மத்திய சிறையில் காவலராக பணியாற்றி வந்த பாலாஜி என்பவர், சிறையில் உள்ள விஜயபாஸ்கர் என்பவருக்கு  கஞ்சாவை பதுக்கி கொண்டு சென்ற போது, சிறை பாதுகாப்பு காவலர்கள் அவரை பரிசோதனை செய்து  கஞ்சாவை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய சிறைத்துறை அதிகாரிகள், புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்தனர்.

சிறைக்குள்ளேயே காவலர் சிறைவாசிக்கு கஞ்சா கொண்டு சென்றபோது கைது செய்யப்பட்ட சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது...

சுயநலம் பிடித்த உலகம் என சிலர் கூறுவது சரிதான்...


நீ விதைத்து கொண்டு செல், உன்னைப்போல் ஒருவன் கண்டிப்பாக வருவான்..

அவன் நீ விதைத்த அனைத்தையும் செம்மைப்படுத்துவான்...

நீ யார்? நான் யார்..?


நீ முன்னர் எதுவாக இருந்தாய் என்று அறிந்து கொள்ள விரும்புகிறாய், அதே போன்று எதிர் காலத்தில் எதுவாக இருப்போம் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறாய், ஆனால், இன்றைக்கு நீ யார் என்பது உனக்கு தெரியுமா?

அதை அறிந்து கொள்ள முயன்று இருகின்றாயா? இன்றைக்கு நீ யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது மிகமுக்கியம்.

உன்னையே நீ அறிந்து கொண்டால் உனது கடந்த காலமும் உனக்கு தெரியும்.  எதிர் காலத்தையும் புரிந்து கொள்வாய்...

வாழ்க வளமுடன்...

பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்...


திமுகவும் பிராடுத்தனமும்...


இத்தனை காலமா அரை டவுசர் பசங்க தான் கேவலமா photoshop செய்து நாடே காறி துப்பியதுனு பார்த்தால்..

இப்போது இங்கயும் ஒரு பித்தலாட்ட கூட்டம் photoshop செஞ்சி ஊர ஏமாத்த பாக்குது...

என்னமோ சாக்கிரடீஸ், கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் போன்றவர்களை போல...

போயும் போயும் உள்ளூர் வெங்காய வியாபாரிய போய் வச்சிருக்காங்களேனு நினைச்சிற கூடாது...

அதற்கு ஒரு காரணம் இருக்கு...

தானும் ஈவெரா வழியில் தெலுங்கு சாதியை மறைத்து திராவிடர் என புனைந்து தமிழரை ஏய்த்து பிழைப்பதற்கு இதான் உதவும்...

கார்பரேட் கைகூலி பாஜக மோடியும் பெட்ரோல் விலையும்...


இன்றைய  (02-09-2018) ஞாயிற்றுக்கிழமை  காலை 6 மணி முதல்  பெட்ரோல் மற்றும் டீசல் விலை..

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.92  (+0.17 காசு).

டீசல் விலை லிட்டருக்கு ரூ.74. 77 (+0.36 காசு).

( அடைப்பு குறிக்குல் இருப்பது நேற்றைய விலையில் மாற்றம்)...

கார்பரேட்டுகளின் பாஜக - காங்கிரஸ் கட்சிகள்...


தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் புதிய நீதிபதி நியமனமும் குழப்பங்களும்...


ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இதனடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்திருந்தது.

இதன்படி நீதிபதி எஸ்.ஜே.வசிப்தார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.ஆனால் திடீரென்று அந்த குழுவின் தலைவரான எஸ்.ஜே.வசிப்தார் தன் சொந்த காரணங்களுக்காக இந்த குழுவில் என்னால் அங்கம் வகிக்க முடியாது என்று தனது பதவியை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் புதிதாக ஒரு  ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அந்த இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கே.பி.சிவசுப்பிரமணியம் மற்றும் ஆர். ரவீந்திரன் ஆகியோரை நியமிக்க பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்தது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்த வேதாந்தா நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு நீதிபதியையும் நியமிக்கக் கூடாது என்று வாதாடியது. இதனடிப்படையில் மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த தருண் அகர்வால் என்ற ஓய்வு பெற்ற நீதிபதியை தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்திருக்கிறது.https://www.google.co.in/amp/s/wap.business-standard.com/article-amp/pti-stories/ngt-appoints-ex-judge-justice-tarun-agrawal-as-chairman-of-panel-to-decide-vedanta-s-plea-118083100486_1.html

நமக்கெல்லாம் நன்றாக தெரியும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனத்தின் அதிபர் குஜராத்தை சேர்ந்த அனில் அகர்வால் என்று இப்போது அதே குஜராத்தை சேர்ந்த தருண் அகர்வால் என்ற ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை மிக முக்கியமான வழக்கில்  தலைமைப் பொறுப்பில்  நியமித்திருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது.

இது ஏதோ 'அகர்வால்' என்ற பெயரை வைத்து நாம் சந்தேகத்தைக் கிளம்புகிறோம் என்று குறுகிய எண்ணத்தோடு யாரும் பார்க்க வேண்டாம். உண்மையிலேயே தற்போது ஆய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தருண் அகர்வால் ஏற்கனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் 2008இல் காசியாபாத்தில் பிராவிடண்ட் பண்ட் நிறுவனத்தை நடத்தி மக்கள் பணத்தை முறைகேடு செய்த முக்கிய குற்றவாளியை விடுவித்தார்கள் என்ற ஊழல் குற்றச்சாட்டிற்காக இடமாற்றம் செய்யப்பட்டவர் என்பது மிக முக்கியம்.

https://m.hindustantimes.com/delhi-news/pf-scam-tainted-judges-forgiven/story-qa0m3CJznjV0SMsCEkTrGI.html

அப்படிப்பட்டவர் இந்த ஆய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது என்பது நமது சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது...

இந்த சேனலில் நடிப்பவர்களை தான் அதிகம் விளம்பரங்களில் காண முடிகிறது நல்லது, கெட்டது தெரிந்து நடிக்கிறார்களா இல்லை, பணம் என்ற காகிததிற்க்காக வா?


உனக்கு நிகர் நீயே...


விரும்பத்தக்கவராய் ஒரு மனிதரை வாழ்வில் கண்டடைவது மிகவும் நல்லது. ஆனால் உங்களை நீங்களே விரும்புவது வளர்ச்சியின் முதல் படிநிலை.

நுட்பமான பண்புகள் வாய்ந்த ஒரு மனிதரை மனதுக்குள் பாராட்டுவது மிகவும் நல்லது. அத்தகைய மனிதராக உங்களை நீங்களே வளர்த்தெடுப்பது வளர்ச்சியின் அடுத்த படிநிலை.

மதிப்பும் அன்பும் ஈடுபாடும் காட்டும் விதமாக வாழ்வில் ஒருவரைக் காண்பது மிகவும் நல்லது. அத்தகைய சிறப்புகள் அனைத்தையும் பெறும் விதமாய் நீங்களும் வளரமுடியும் என்பதை உணர்வதே முக்கியமான படிநிலை.

இன்னொருவரின் வாழ்வை நீங்கள் வாழ முடியாது. ஆனால் உயர்ந்தவர்களின் தாக்கம் பெற்று உங்கள் வாழ்வை நீங்கள் வடிவமைக்க முடியும்.

வாழ்க்கை உங்களைக் கேட்கும் கேள்விகளுக்கு நீங்களே விடையாக இருங்கள்.

வாழ்க்கை உங்கள் முன்வைக்கும் சிக்கல்களுக்கு நீங்களே தீர்வாக இருங்கள்.

நீங்கள் தனித்தன்மை வாய்ந்த ஒரு மனிதர் என்பதை நீங்கள் முதலில் நம்புங்கள்.

நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை எந்த நிலையிலும் நீங்கள் கைவிடாதீர்கள்.

நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்ததையெல்லாம் எப்படியாவது செய்து காட்டிவிடுங்கள்.

வாழ்வை மதித்து ரசித்து வாழ்வதென்று முடிவெடுங்கள். அதில் உறுதியாக இருங்கள்.

அன்பும் ஆனந்தமும் பரவசமும் மிக்க வாழ்வை வாழ்வதென்பதில் உறுதியாக இருங்கள்...

பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்...


காமவெறியில் இரண்டு குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. கணவனுக்கும் விஷம் வைத்தார்...


சென்னை கிண்டியை அடுத்து  குன்றத்தூரை சேர்ந்த விஜய் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிராமி தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற மகளும் உள்ளனர். அபிராமிக்கு  அதே பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டது  இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது.

தனது மனைவிக்கு வேறொருவருடன் கள்ளக் காதல் விவகாரம் அறிந்த கணவர் விஜய்  கள்ளத்தொடர்பை கைவிடக்கோரி  பலமுறை கூறியும் அபிராமி அதனை ஏற்க மறுத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று விஜய் மாதம் கடைசி என்பதால் வேலை அதிகமாக இருந்ததால் அலுவலகத்திலேயே தங்கிவிட்டார், இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அபிராமி, டீயில் விஷத்தைக் கலந்து கொடுத்து குழந்தைகளை கொன்று விட்டு சுந்தரத்துடன் எஸ்கேப் ஆனர்.

இந்நிலையில், வேலை முடிந்து இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த கணவர் விஜய் வீட்டின் கதவு லேசாக சாத்தப்பட்டிருந்தது திறந்துப் பார்த்ததும் தனது குழந்தைகள் இறந்துக் கிடந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சியில் அலறித் துடித்தார்.

தகவலறிந்த போலீசார் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இரு சடலங்களையும் மீட்டு  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அவரது அபிராமிக்கு பலமுறை போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. மேலும் தனது கள்ளக் காதலன் சுந்தரத்துடன் அபிராமி எஸ்கேப் ஆனது தெரிந்துள்ளது.

இதனையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் விசாரணையில் குன்றத்தூர் - போரூர் நெடுஞ்சாலையில் இருந்ததை அறிந்த போலீசார் கள்ளக் காதலன் சுந்தரத்தை கைது செய்தனர். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியதில் அபிராமியுடன் இருந்த கள்ளக்காதலை ஒப்புக் கொண்டார். மேலும் தனக்காகவே அவரது குழந்தைகளை அபிராமி கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து,  அபிராமியையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்ல, தான் கள்ளக் காதலனுடன் எஸ்கேப் ஆகும் முன்பாக  அபிராமி கணவருக்கும் தேனீரில் விஷம் கலந்து வைத்துவிட்டு சென்றுள்ளார். அதை அவர் குடிக்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.  உடல் சுகத்திற்காக பெற்ற பிள்ளைகளை கொன்றுவிட்டு தனது கணவரையும் கொள்ள விஷம் வைத்துவிட்டு பக்காவாக ப்ளான் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

வலிகளை தாங்க முடியுமென்றால் அந்த புத்தகமாக இருக்க முயற்சி செய்யுங்கள்...


இல்லையேல் அந்த புத்தகத்தை இடையூறு செல்லாமல் உங்கள் வழியில் சென்று விடுங்கள்...

எண்ணெய் வள நாடான UAEக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 34 ரூபாய்க்கும், டீசல் 36 ரூபாய்க்கும் பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது...


உள்நாட்டில் பெட்ரோல் 81 ரூபாய், டீசல் 74 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.

UAEயுடன் சேர்த்து இன்னொரு எண்ணெய் வள நாடான ஈராக், அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஜோர்டான், ஆஸ்திரேலியா, ஹாங்காங், சிங்கப்பூர், மொரீஷியஸ் , மலேசியாவிற்கும் இந்தியா பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்துள்ளது.

உலகளவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் 24,100 கோடி டாலருக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது சர்வதேச சந்தையில் 3.9 சதவீதமாகும்.

இது கஜினி முகமது இந்தியா மேல 18 முறை படையெடுத்து நாட்டை சுரண்டிட்டு போனான் என சொன்னதைவிட இது மிக அதிகம். இங்கே சுரண்டுவது உள்நாட்டு கஜினிகள்...

உணவு வணிகம்...


இதிலுள்ள ஒவ்வொன்றை பற்றியும் அடுத்த வாரம் தனித்தனி பதிவுகளாக வரும்...

தமிழ்நாடு தனிநாடாக விடுதலை பெற வேண்டுமா? தோழர் தமிழரசன் கோரிக்கை அவசியமானதா?


தமிழக அரசின் இன்றைய கடன் 1.21லட்சம் கோடி ரூபா. இதற்கு வட்டியாக 10754 கோடி ரூபா தமிழக அரசு கட்டுகிறது.

ஒவ்வொரு தமிழன் தலையிலும் 13862 ரூபா கடன் சுமத்தப்பட்டுள்ளது அதாவது பிறக்கும் ஒவ்வொரு தமிழக்; குழந்தையும் 13862ரூபா கடனுடனே பிறக்கின்றது.

4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் மொத்த கடன் தொகை 55448 ரூபா. ஒரு குடும்பத்திற்கு கொடுக்கும் இலவச பொருட்கள் பெறுமதி சுமார் 4000 ரூபா எனில் மிகுதி 51448 ரூபா எங்கே சென்றது?

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் சம்பளம் 1 லட்சம் ரூபா. மாதாந்த சம்பளம்  1 லட்சம்ரூபா பெற்றுக்கொண்ட கலைஞர் கருணாநிதியின் குடும்ப சொத்தின் பெறுமதி 45 ஆயிரம் கோடி ரூபாக்கள்.

மாதாந்த சம்பளம் 1 ரூபா மட்டுமே பெற்றுவந்த ஜெயா அம்மையாரின் சொத்து மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாக்கள்.

இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் இந்த இருவரும் எப்படி கோடிக் கணக்கான ரூபா சொத்துக்கள் சேர்த்தார்கள்?

ஏன் இவர்களின் வருமானத்திற்கு மேலான சொத்தை இதுவரை பறிமுதல் செய்ய முடியவில்லை?

அப்படியாயின் இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?

இந்திய அரசின் கைப் பொம்மைகளாக இவர்கள் செயற்படுவதற்கு சலுகையாகவே இவர்களது ஊழல் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது.

வெள்ளைக்காரன் காலத்தில் தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட வரித்தொகை ஒரு வருடத்தில் சுமார் 350 கோடி ரூபா.

ஆனால் தற்போது கொள்ளைக்கார இந்திய மத்திய அரசு தமிழகத்தில் வசூலிக்கும் வரி கடந்த ஆண்டு மட்டும் 85000கோடி ரூபா.

85000கோடி ரூபா வரியாக வசூலிக்கும் மத்திய அரசு தமிழகத்திற்கு திருப்பி உதவியாக கொடுக்கும் பணம் 28000கோடி ருபா மட்டுமே. அதிலும் அடுத்த அண்டு முதல் 6000கோடி ரூபா குறைக்கப்படவிருக்கிறது.

இந்திய மத்திய அரசு,
நேபாளத்திற்கு 14000 கோடி ருபாவையும், பூட்டானுக்கு 8000 கோடி ரூபாவையும்,
இலங்கைக்கு 10000கோடி ரூபாவையும், மங்கோலியாவுக்கு 6000 கோடி ரூபாவையும் வழங்கியுள்ளது.

ஆனால் 85000கோடி ரூபாவை வரியாக வழங்கும் தமிழ்நாட்டிற்கு மழை வந்தபோது வழங்கிய உதவி தொகை வெறும் 1940 கோடி ரூபா மட்டுமே.

தமிழ்நாடு தனக்குரிய உதவியை பெற முடியாதது மட்டுமல்ல தன்னிடமிருந்து பெறப்படும் பணத்தை இலங்கைக்கு வழங்குவதைக்கூட தடுக்க முடியாத அடிமை நிலையில் உள்ளது.

தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து பெறப்படும் பணத்திலதான்; தமிழக மீனவனைக் கொல்லும் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

இலங்கை கடற்படைக்கு யுத்த கப்பல் வழங்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலைக்கும் உதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழக தமிழன் அடிமை நிலையில் இருப்பதையும், இந்திய அரசால் தமிழ்நாடு சுரண்டப்படுவதையும் தோழர் தமிழரசன் உணர்ந்துகொண்டார்.

அவர் தமிழ்நாடு விடுதலை பெறவேண்டும் என விரும்பினார். தமிழக தமிழன் தன் அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே ஈழத் தமிழனின் விடுதலைக்கும் உதவ முடியும் என நம்பினார்.

இவ்வாறு அவர் சிந்தித்து, உணர்ந்து செயற்பட்டமையினாலே அவர் இந்திய அரசின் உளவுப்படைகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.

01.09.2017 அவரது நினைவு தினமாகும்.
அவரது நினைவை போற்றுவோம்...

அம்பாணிக்கு மாமா வேலை பார்க்கும் பாஜக மோடியே...


தமிழர் ராமர்பிள்ளையின் கை விலங்கை மட்டும் கட்டவிழ்த்து விடு...

உலகிற்கு மட்டுமல்லாது உனக்கும் சேர்த்தே குறைந்த விலைக்கு எரிபொருளை பிச்சை போடுகிறோம்...

1008 இதழ் தாமரை எப்படி மலரும்?


காலை எழுவது முதல் இரவு படுக்க போவது வரை ஒரு மனிதன்  எப்படி, எப்படி இருக்க வேண்டும் என்பதை நித்திய கரும விதி என்று உபதேசம் செய்து உள்ளார்.

உடல் மலங்களை நீக்குபவன் ஆரோக்கியமாக வாழலாம்? மன மலங்களை போக்குபவனே, மரணமிலாது வாழலாம்? 

உடல் மலத்தில், ஏழாவது ஆதாரமாக சகஸ்ரதளமாக நம் உச்சந்தலையில் உள்ள கோழை சொல்லபடுகிறது.  இதை நீக்குவது தவம் செய்பவர்களுக்கு  மட்டுமே  சாத்தியம்.

இந்த கோழை முழுவதும் நீங்கினாலே, நம் மூளை கொஞ்சம் கொஞ்சமாக இயங்க ஆரம்பிக்கும். தலையிலுள்ள கோழை நீங்க ஒரே வழி தவம் செய்வது தான்.

குரு உபதேசம் பெற்று நம் மெய்பொருளாகிய - திருவடியை நம் கண்களில் உள்ள ஒளியை குரு தீட்சை மூலம் உணர்ந்து , அந்த ஒளியை நினைந்து உணர்ந்து தவம் இயற்ற நெகிழ்ச்சி உண்டாகும், கண்ணில் கனல் பெருகும்.

அந்த ஞானக்கனல் உள்நாடி மூலமாக அக்னி கலையை அடைந்து அங்கிருந்து மேலே சகஸ்ரதளம் நோக்கி செல்லும் ஞானக்கனல் பெருக பெருக அந்த உஷ்ணத்தால் பல காலங்களாக உறைந்து போன கோழை மெல்ல மெல்ல உருகி  மூக்கு வழியாகவும் தொண்டை வழியாகவும் வெளியேறும்.

எவ்வளவு கோழை உள்ளதோ அவ்வளவு காலம் நாம் கடுமையாக தவமியற்ற வேண்டும். "தவம் செய்வார்க்கு அவம் ஒருநாளுமில்லை" நாம் செய்யும் தவம், நம் ஞானத்தீயை நம் கண்வழி பெருக்கி அதனால் அது சகஸ்ரதளத்தை அடைந்து உணர்வு உண்டாகி  அனலால் இளகி கோழை கரைத்து ஒழுகும். இது சாதனை அனுபவம்.

தலைப் பகுதியிலுள்ள கோழை முழுவதமாக வெளியேறும் பட்சத்தில் மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒளி அலைகளால் அதிர்வு ஏற்பட்டு கொஞ்சங் கொஞ்சமாக இயங்க  ஆரம்பிக்கும்.

கோழையால் கவிழ்ந்து இருந்த மூளை பகுதி கனம் குறைந்ததும் மலர ஆரம்பிக்கும். 

அதுவரை கவிழ்ந்து இருந்த தாமரை இதழ்கள் மலர ஆரம்பிக்கும்.

1008  பகுதியாக சிறு சிறு  பகுதியாக மூளை இருப்பதால் தான் 1008  இதழ் தாமரை என்றனர்.

ஒளி - சுத்த ஒளி, பொன்னொளி எழும்பி பிரகாசிப்பதால் இதை வள்ளலார் 1008  மாற்று  பொற்கோவில் என்றார்.

ஒவ்வொரு மனிதனும் தன் தலையிலுள்ள 1008  மாற்று பொற்கோவிலில், நடுநாயகமாக ஒளிவிட்டு பிரகாசிக்கும் அருட்பெருஞ்சோதியை தரிசிக்க வேண்டும். அவனே மரணமிலா பெருவாழ்வு பெறுவான். 

எத்தனையோ பிறவிகள் பிறந்து விட்டோம். இனிமேல் இந்த விளையாட்டு , வினை  ஆட்டுவிக்கும் பிறவி வேண்டாம்.

பிறந்த இப்பிறப்பிலே தானே இனி  பிறவாமல் இருக்க இறவாமல் இருக்க வழி தேடுவோம். 

விழியிலே இருக்கும் ஒளியை உணர்ந்து மேன்மை அடைவோம்...

யார் மனதையும் புண்படுத்த அல்ல...


குழந்தைகளுக்கு மனிதன் மட்டுமே கற்று தருகிறார்கள் அறிவு நாகரீகம் என்ற பெயரில்...

மதவெறி,
ஜாதிவெறி,
பொறாமை,
வெறுப்பு ,
கெடுதல் எண்ணம்,
வேற்றுமை,
கோபம்,
பகைவன்,
எதிரி,
ஆசை,
பேராசை,
காழ்புணர்ச்சி,
அடிமை படுத்தல்,
சுயநலம்,
இயற்கையை அழித்தல்,
இன்னும் பல...

நிதானமாக யோசித்து பாருங்கள்...


இந்த செய்திகள், நிகழ்வுகள், கேலி பதிவுகளால் நம் வாழ்க்கை எப்போதாவது மேம்பட்டு இருக்கிறதா...?

அது ஏன்..? என்று யோசித்து இருக்கிறீர்களா..?

நாம் ஏன்..? இந்த அமைப்பு இப்படி இருக்கிறது என எப்போதாவது சிந்தித்து பார்த்து இருக்கின்றோமா..?

உடலை எப்பவும் ஆரோக்கியமா வெச்சுக்கணுனா... எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க...


உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை. ஏனெனில் எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த சிறிய பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் இந்த எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சனையைக் கூட எளிதில் தீர்த்துவிட முடியும்.

பொதுவாக எலுமிச்சையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது என்றால், உடல் பருமன், தொண்டைப் புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைப் போக்கும் என்பது தான். ஆனால் இதில் இவற்றைத் தவிர, இன்னும் பலருக்கும் தெரியாத நன்மைகள் நிறைந்துள்ளன. எலுமிச்சையானது உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் மிகவும் சிறந்தது.

இப்போது எலுமிச்சையை சாப்பிட்டால், எந்த பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அதில் எலுமிச்சையைப் பற்றிய உங்களுக்குத் தெரிந்ததை நாங்கள் சொல்ல மறந்திருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

சரியான குடலியக்கத்திற்கு...

தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராக செயல்படுவதோடு, குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.

தொண்டை புண்ணை சரிசெய்ய...

எலுமிச்சையில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகிவிடும்.

இளமையை தக்க வைக்க...

எலுமிச்சை அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க...

எலுமிச்சையில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியமும் உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அப்போது உண்ணும் உணவுகளில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...

எலுமிச்சையில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளதால், அதனை சாப்பிட்டால், உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இதனால் எந்தவிதமான நோய் தாக்குதல்களில் இருந்தும் தப்பிக்கலாம்.

கொழுப்பை குறைக்க...

எலுமிச்சை ஒரு சிட்ரஸ் பழம். அத்தகைய பழத்தின் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களானது கரைக்கப்படும். எனவே உடல் எடையை குறைக்க தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.

குமட்டலை போக்க...

சிலருக்கு பயணம் மேற்கொள்ளும் போது, வாந்தி வருவது போல் உணர்வார்கள். அவ்வாறு குமட்டல் ஏற்படும் போது, எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால், குமட்டலைப் போக்கலாம்.

வாத நோயை சரிசெய்ய...

எலுமிச்சையில் நீர்ப்பெருக்கப் பொருள் அதிகம் உள்ளது. அதாவது, எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். எனவே வாத நோய் உள்ளவர்கள், எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் நல்லது.

புற்றுநோயை தடுக்க...

அனைவருக்குமே எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது என்று தெரியும். அதேப் போன்று இதில் பல வகையான புற்றுநோயை தடுக்கும் பொருளும் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் எலுமிச்சையை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், புற்றுநோயின் அபாயத்திலிருந்து விடுபடலாம்.

தலைவலியை போக்க...

உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் இருந்தால் வருவது தான் தலைவலி. இத்தகைய தலைவலியைப் போக்குவதற்கு, எலுமிச்சை டீ மிகவும் சிறந்ததாக இருக்கும்.

நாடாப்புழுக்களை அழிக்க...

குழந்தைகளுக்கு வயிற்றில் நாடாப்புழுக்களானது இருக்கும். இவ்வாறு வயிற்றில் புழுக்கள் இருந்தால், வயிற்று வலி மற்றும் வழக்கத்திற்கு மாறாக மலம் கழிக்க நேரிடும். இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு எலுமிச்சை மிகவும் உதவியாக இருக்கும். எப்படியெனில் எலுமிச்சையில் புழுக்களை அழிக்கக்கூடிய அளவில் சக்தியானது உள்ளது.

உணவை செரிப்பதற்கு...

அனைவருக்குமே செரிமானப் பிரச்சனை அவ்வப்போது வரும். இவ்வாறு செரிமானப் பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் குணமாகிவிடும்.

உடலை சுத்தப்படுத்த...

தினமும் உடலில் நச்சுக்களானது பலவாறு உள்ளே நுழையும். உதாரணமாக, ஜிங்க் உணவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவற்றின் மூலம் நுழையும். ஆனால் அத்தகைய நச்சுக்களை போக்கும் சக்தி எலுமிச்சைக்கு உள்ளது. எனவே தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

பற்களை ஆரோக்கியமாக வைக்க...

எலுமிச்சை சாற்றில், உப்பு மற்றும் கடுகு எண்ணெய் ஊற்றி, அதனை வாயில் ஊற்றி கொப்பளித்தால், பற்களில் உள்ள கறைகள், பாக்டீரியாக்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கி, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

காயங்களை குணப்படுத்த...

உடலில் ஏதேனும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால், அப்போது அதனை குணமாக்குவதற்கு, அன்த இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை தடவினால், காயங்களில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, காயங்கள் எளிதில் குணமாகிவிடும்.

முகப்பருவை போக்க...

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு ஒரு சிறந்த பொருள் என்றால் அது எலுமிச்சை தான். எனவே தான் சரும பராமரிப்பில் எலுமிச்சை அதிகம் சேர்க்கப்படுகிறது.

கல்லீரல் பிரச்சனைக்கு...

எலுமிச்சையை தினமும் உணவில் சேர்த்தால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்

பிறப்புறுப்பை சுத்தமாக்க...

பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்த பயமாக உள்ளதா? அப்படியெனில், கெமிக்கல் இல்லாத இயற்கைப் பொருளான எலுமிச்சையைக் கொண்டு சுத்தம் செய்தால், பிறப்புறுப்பில் எந்த ஒரு பக்கவிளைவும் வராமல் இருக்கும்.

கண் பிரச்சனையை போக்க...

எலுமிச்சையில் ரூடின் என்னும் பொருள் உள்ளது. ஆகவே எலுமிச்சை உணவில் சேர்த்தால், கண் பார்வை கூர்மையாவதோடு, ரெட்டினாவில் உள்ள பிரச்சனைகளையும் சரிசெய்யலாம்

சிறுநீரகக் கற்களை கரைக்க...

எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. எனவே சிறுநீரகக் கல் பிரச்சனை இருப்பவர்கள், எலுமிச்சை ஜூஸை அவ்வப்போது குடித்து வந்தால், சிட்ரிக் ஆசிட்டானது சிறுநீரகக் கற்களை கரைத்துவிடும்...

பாஜக - அதிமுக - ஸ்டெர்லைட் சதிகள்...


உச்ச நீதிமன்ற நீதிபதியால் 2008ல் இடமாற்றம் செய்யப்பட்டார்....

எழுத்து பிழை மன்னிக்கவும்... சரியாக புரிந்து கொள்ளவே சுட்டி காட்டியுள்ளோம்...

விஜயபாஸ்கர் ஊழல்: வருமானவரித் துறை கடிதம் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - பாமக அறிக்கை...


தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல்கள் மூலம் கோடிக்கணக்கில் சொத்துக் குவித்தது குறித்தும், இயற்கை வளக் கொள்ளையில் ஈடுபட்டது குறித்தும் ஆதாரங்களுடன் வருமான வரித்துறை புகார் அளித்தும் அப்புகார்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழல் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரைக் காப்பாற்ற முதல்வர் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அடுத்தடுத்து ஊழல் புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில், அவரது வீட்டில் கடந்த ஆண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ள முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து தமிழக அரசுக்கு கடந்த ஆண்டே கடிதம் எழுதிய வருமானவரித் துறை, அவற்றின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அக்கடிதத்தின் நகலையும், அக்கடிதத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்களை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த இல்லத்தில் நடத்தப்பட்ட மொத்தம் ரூ.20 லட்சம் கணக்கில் காட்டப்படாத பணம் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், அதில் ரூ.12.96 லட்சம் பழுப்பு நிற உறைகளில் அரசுப் பணிக்கான நேர்முகத் தேர்வுக் கடிதம், செவிலியர் இடமாற்ற ஆணை ஆகியவற்றுடன் வைக்கப்பட்டிருந்தாகவும் அக்கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. உறைகளில் வைக்கப்பட்டிருந்த பணம் முழுவதும் கையூட்டாக பெறப்பட்டதாக விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி  ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதவிர, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அமைச்சரின் உதவியாளர் சீனிவாசன் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட 9 பக்க வரவு-செலவு  ஆவணத்தில் சுகாதாரத்துறை சார்ந்த நியமனங்கள் மற்றும் ஒப்பந்தங்களுக்காக 2016-ஆம் ஆண்டு ஜுலை முதல் நவம்பர் வரையிலான ஆகிய 5 மாதங்களில் மட்டும் கையூட்டாக ரூ.20.76 கோடி வசூல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அந்தக் கடிதத்தில் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான நிலத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் விதிகளை மீறி 72 மீட்டர் ஆழத்திற்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளன. அனுமதிக்கப்பட்ட அளவை விட 850% கூடுதலாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தமிழக அரசுக்கு வர வேண்டிய ரூ.15 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் வருமான வரித்துறை கூறியிருக்கிறது. இந்தக் கடிதம் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும்  அமைச்சர் விஜயபாஸ்கர் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல் மூலம் சேர்த்ததாக வருமானவரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப் பட்ட தொகை கடலில் மூழ்கியிருக்கும் பனிக்கட்டியின் முனை அளவு தான். அதுவே இந்த அளவுக்கு என்றால் விஜயபாஸ்கர் செய்த ஊழல்கள், அடித்த இயற்கை வளக் கொள்ளைகள் ஆகியவற்றின் உண்மையான மதிப்புகளை கணக்கிட்டால், அதைக் கொண்டு  தமிழகத்தில் பாதியை வாங்கி விட முடியும். விஜயபாஸ்கர் செய்த ஊழலை விட நூறு மடங்கு அதிக ஊழலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான் ஒரு ஊழல்வாதிக்கு இன்னொரு ஊழல்வாதி ஆதரவு என்ற அடிப்படையில் தான் விஜயபாஸ்கரின் ஊழலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சகித்துக் கொண்டிருப்பதுடன், அவரை சட்டத்தின் கைகளை வளைக்காமல் காப்பாற்றிக் கொண்டும் இருக்கிறார்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழல்கள் ஆதாரங்களுடன் அம்பலப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள குட்கா ஆலைகளில் வருமானவரித்துறை மேற்கொண்ட சோதனைகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கில் கையூட்டு கொடுத்ததற்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து தமிழக அரசு வருமான வரித்துறை எழுதிய கடிதத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், அது குறித்து வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. விஜயபாஸ்கரின் நண்பர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக வாக்களிக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு  ரூ.89 கோடி அளவுக்கு பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து  காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த போதிலும்  அதன் மீது எந்த மேல்நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மொத்தத்தில் தமிழகத்தில் நடப்பது மக்களைக் காப்பதற்கான அரசு அல்ல.... ஊழல்வாதிகளை காப்பதற்கான ஜனநாயக விரோத அரசு.

தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கான லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்த பிறகும், அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும் கூட அந்த அமைப்பை  பினாமி அரசு ஏற்படுத்தவில்லை. அத்தகைய அமைப்பு ஏற்படுத்தப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அமைச்சரவையும் உள்ளே செல்ல வேண்டியிருக்கும் என்ற அச்சம் காரணமாகவே லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த பினாமி அரசு தயங்குகிறது. இதை அனுமதிக்க முடியாது.

அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான அனைத்து ஊழல் குற்றச்சாற்றுகள் குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும். விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்...

உண்மையான ஆரோக்கியத்திற்கு....