விரும்பத்தக்கவராய் ஒரு மனிதரை வாழ்வில் கண்டடைவது மிகவும் நல்லது. ஆனால் உங்களை நீங்களே விரும்புவது வளர்ச்சியின் முதல் படிநிலை.
நுட்பமான பண்புகள் வாய்ந்த ஒரு மனிதரை மனதுக்குள் பாராட்டுவது மிகவும் நல்லது. அத்தகைய மனிதராக உங்களை நீங்களே வளர்த்தெடுப்பது வளர்ச்சியின் அடுத்த படிநிலை.
மதிப்பும் அன்பும் ஈடுபாடும் காட்டும் விதமாக வாழ்வில் ஒருவரைக் காண்பது மிகவும் நல்லது. அத்தகைய சிறப்புகள் அனைத்தையும் பெறும் விதமாய் நீங்களும் வளரமுடியும் என்பதை உணர்வதே முக்கியமான படிநிலை.
இன்னொருவரின் வாழ்வை நீங்கள் வாழ முடியாது. ஆனால் உயர்ந்தவர்களின் தாக்கம் பெற்று உங்கள் வாழ்வை நீங்கள் வடிவமைக்க முடியும்.
வாழ்க்கை உங்களைக் கேட்கும் கேள்விகளுக்கு நீங்களே விடையாக இருங்கள்.
வாழ்க்கை உங்கள் முன்வைக்கும் சிக்கல்களுக்கு நீங்களே தீர்வாக இருங்கள்.
நீங்கள் தனித்தன்மை வாய்ந்த ஒரு மனிதர் என்பதை நீங்கள் முதலில் நம்புங்கள்.
நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை எந்த நிலையிலும் நீங்கள் கைவிடாதீர்கள்.
நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்ததையெல்லாம் எப்படியாவது செய்து காட்டிவிடுங்கள்.
வாழ்வை மதித்து ரசித்து வாழ்வதென்று முடிவெடுங்கள். அதில் உறுதியாக இருங்கள்.
அன்பும் ஆனந்தமும் பரவசமும் மிக்க வாழ்வை வாழ்வதென்பதில் உறுதியாக இருங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.