10/07/2021

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் திமுக ஐ.லியோனி நியமனம்...

 


நியாயம் தானா நியாயம் தானா ஆபாச பேச்சாளரை நியமனம் செய்வது நியாயம் தானா?

வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் இயற்கை மருந்து மணத்தக்காளி கீரை...

 


தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தானாகவே வளர்ந்து இருக்கும் மணத்தக்காளி கீரையின் மருத்துவ பயன்களை பார்க்கலாம். மணத்தக்காளி வியர்வையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது.

சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து உண்டு வந்தால் நோய்கள் நீங்கி உடல் வன்மை பெறும்.

மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வர உட்சூடு, வாய்புண், முதலியவை நீங்கும். சிறுநீரை வெளியேற்றும். தேகம் குளிர்ச்சியாகும். உடல் வசீகரம் ஏற்படும்.

மணத்தக்காளி இலைகளை பறித்து, தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும் .பின்னர் துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

பசுமையான இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம்.

இதே போல் ஒரு நாளைக்கு 5 முதல் 6 இலைகளை பச்சையாக ந்மென்று சாப்பிட்டால் வாய்புண் வேகமாக குணமாகும்.

மணத்தக்காளி இலை சாற்றை 5 தேக்கரண்டி அளவில் தினமும் 3 வேளைகள் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். நாக்குப்புண்,குடல்புண் குணமாக, மணத்தக்காளி இலையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு சாப்பிடும் போது அதிக காரம் சேர்க்கக்கூடாது.

நாக்கு சுவையின்மை, வாந்தி உணர்வு ஆகியவற்றை போக்கும் தன்மை மணத்தக்காளி வத்தலுக்கு உள்ளது.

எனவே கர்ப்பிணி பெண்கள் குறைந்த அளவில், தினமும் இந்த வத்தலை உணவுடன் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டு வரலாம். மார்பு சளி இளகி வெளிப்படவும், மலச்சிக்கல் குறையவும் மணத்தக்காளி வத்தல் பயன்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில் மணத்தக்காளி வத்தல் கிடைக்கும்...

திமுக வின் ௮ந்தர்பல்டி ௭ண்: 0018...

 


சில ரொட்டி துண்டுகளுக்காக வாக்கு செலுத்திய முட்டாள் மக்களே ௮னுபவியுங்கள்...

திருநெல்வேலி ஸ்பெஷல் ௮ல்வா...

குறிப்பு : இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைவர் வேதாந்தா..  கலாநிதி மாறன் சம்பந்தி என்பது நினைவில் கொள்க...

கருணைக்கிழங்கை கொண்டு பைல்ஸ் மற்றும் உடல் எடையை குறைப்பது எப்படி?

 


கருணைக்கிழங்கு உடல் எடையை குறைத்து உங்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் காட்டக்கூடியது. கருணைக்கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை அதிகமாக யாரும் பயன்படுத்துவதில்லை.

கருணைக்கிழங்கு ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்படவும், மூல நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. இந்த கருணைக்கிழங்கின் பலன்களை இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

கருணைக்கிழங்கு ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் உடல் சக்தியை அதிகரித்து, உடல் உறுப்புகளுக்கு பலம் தருவதாகவும் இருக்கிறது.

உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் ஆகியவை நீங்கும். நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை குணமாகும்.

பெண்களை வாட்டி எடுக்கும் வெள்ளைப்படுதலை தடுக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. கருணைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் வலி காணாமல் போய்விடும்.

மூல நோய் உள்ளவர்கள் ஒரு மாதம் வரை வேறு உணவு எதையும் எடுத்துக் கொள்ளாமல், கருணைக்கிழங்கு ஒன்றை மட்டுமே சாப்பிட்டு, தாகம் அடங்க மோரை அருந்தி வந்தால் ஆசன வாயில் உள்ள பிரச்சனைகள் சரியாகி விடும்.

கருணைக்கிழங்கு ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. கல்லீரல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. உடலில் கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது நாட்டு மருந்து கடைகளில் வன சூரணாதி என்ற பெயரில் லேகியமாக விற்கப்படுகிறது...

வலிகள் மட்டும் தான் நீயும் கொடுத்தாய்...

 




வலிகள் மட்டுமே நிறைந்த
என் வாழ்க்கையில்...

நீ வந்தாய் இன்பமெனும்
நந்தவனமாக...

முதல்முறை அனுபவித்தேன்
சந்தோசமென்னும் இன்பத்தை...

நீ மட்டும்
என்ன விதிவிலக்கா...

நீயும் மீண்டும்
வலிகள்தான் கொடுத்தாய்...

சேமித்து வைக்க நினைவுகள்
என்று என்னிடம் ஏதும் இல்லை...

என் குறையை
நீ தீர்த்தாய்...

எனக்கு உன் நினைவுகளை
கொடுத்து சென்றாய்...

கண்ணீரும்
எனக்கு புதிதல்ல...

நீ அதிகமாகவே
கொடுத்து சென்றாய்...

உன் பிம்பம் பதிந்த
என் விழிகளுக்கு...

என் நண்பனுக்கு வந்த சோதனை..

 




மாஸ்க் போட்டு உங்க கிட்ட யாராச்சும் பேசினா... 

அவர் பேசியது புரியாட்டியும் பரவால்ல... 

புரிஞ்ச மாதிரி நடிங்க...  

புரியலை மறுபடி சொல்லுன்னு சொன்னா அவர் மாஸ்க் கீழ இறக்கிவிட்டு அல்லது கழட்டி விட்டுப் பேசுவார்..  

என் நண்பரிடம் அவர் உறவினர் மாஸ்க் போட்டு ஏதோ சொல்ல... 

அதற்கு புரியலை , கொஞ்சம் சத்தமா சொல்லுங்கன்னு நண்பர் கேட்க..

அவர் மாஸ்க் கழட்டிட்டு பக்கத்துல வந்து சத்தமா சொன்னாராம்....
எனக்கு கோவிட் பாசிட்டிவ்னு 😁

கட்சி பணிகளை தொடங்கினார் பாஜக அண்ணாமலை 😂

 


அப்போ பீகாரி பாண்டே என்ன தக்காளி தொக்கா..? 😂

 


இது என்ன என்று பார்க்கிறீர்களா?

 


இதுதான் நமது ஊரில் மழைக்காலங்களில் களையாக வளர்ந்து காய்க்கும் சொடக்குதக்காளி என்று கூறுவார்கள்.

இதன் விலை 100 கிராம்  இந்திய ரூபாயில் 150.

நமக்குத்தான் எதில் என்ன சத்து இருக்கிறது எதற்க்கு சாப்பிடுகிறோம் என்று தெரியாம தானே சாப்பிடுகிறோம்.

வெள்ளைக்காரனுக்குத்தான் எதை சாப்பிடுவது எப்படி சந்தை படுத்துவது எதை எப்போது உற்பத்தி செய்வது என்று தெரிந்து இருக்கிறது.

நமது அரசாங்க விவசாய ஆராய்ச்சி துறை அந்த அளவிற்க்கு இருக்கிறது...

பங்க பிரிச்சு தந்துட்டு போய்ட்டே இருங்க...