14/02/2018

ஆட்சிமொழி ஆகக்கூடிய தமிழ் வழக்காடு மொழியாகக்கூட இல்லையே?


ஜனநாயகப் படுகொலையாளர்கள் பாதுகாப்பாக ஒழிந்து கொள்ள ஒரு இடம் இருக்கிறது என்றால் அது அம்பேத்கர் எனும் மாய பிம்பம்.

ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநில மொழியைத் தான் உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்த முடிவெடுத்தால் அப்புறம் உச்சநீதிமன்றத்தை மூடிவிட்டு போக வேண்டியது தான்.. என்று 1948ல் மொழிவாரி மாநில அமைப்பின் வாரியத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் அம்பேத்கரே சொல்லி விட்டாராம்.

அது என்ன அம்பேத்கரே ? அவரென்ன கடவுளா?

எல்லா ஹிந்தியனும் எப்படி சுற்றி வளைத்தாலும் இறுதியில் தமிழனுக்கு எதிராகவே வந்து நிற்கிறான்.

எங்கள் மாநிலத்தில் எங்கள் உயர்நீதிமன்றத்தில் எங்கள் மொழியில் வழக்காட உரிமை கொடுக்காத இந்த அராஜக நாடும் அதன் கையாலாக திகழும் உச்ச நீதிமன்றமும் எங்களுக்குத் தேவையில்லை.

எங்கள் மாநிலத்தை  நாடாக்குவோம்...

எங்கள் மொழி ஆட்சிமொழி ஆகும்...

பிறகு எங்கள் உயர்நீதிமன்றமே உச்சநீதிமன்றம் ஆகும்...

அதற்கு மேல் ஐ.நா சபை அல்லது போர் என்ற நிலையே உருவாகும்...

மராட்டிய ரஜினியே.. கன்னட கமலே... நீங்கள் யாரென உலகிற்கு காட்டிய குருவின் குடும்பத்தையே கவனிக்க முடியவில்லை?


எந்த தைரியத்தில் வருகிறாய் அரசியலுக்கு? 

பதில் அறிக்கை விடவும் கமல் மராட்டிய ரசினி.?

இலுமினாட்டிகளால் இந்தியாவில் நடத்தப்படும் மத அரசியல்...


தமிழா.. இவர்களை நாம் திருப்பி அடிக்காத வரை.. இவர்கள் திருந்தப் போவதில்லை...


சட்டமன்றத்தில் ஜெயலலிதா உருவ படத்திறப்பு பற்றி முகநூலில் பொங்கி எழுந்து கதறும் திமுக உடன்பிறப்புகளே...


இதே ராதாபுரம் பேருந்து நிலையத்தில் கருணாநிதி தனது தாயார் அஞ்சுகம் தந்தை முத்துவேலரின் சிலையை திறந்து வைத்துள்ளார்..

அப்போது அதை எதிர்த்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்த ஜெயலலிதா..

அஞ்சுகம் முத்துவேலர் இந்த நாட்டுக்கு செய்த நன்மை என்ன அந்த சிலைகளை அகற்றி காமராஜர் சிலையை வைக்க வேண்டும் என்றார்..

உடனே பாய்ந்து எழும்பிய கருணாநிதி 'தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை பெற்றதே அவர்கள் இந்த நாட்டுக்கு செய்த நல்ல வேலை'  என தனக்கேயுரிய நையாண்டியுடன் பதில் அளித்தார்..

இது மட்டுமா இந்த வீரமணி இருக்கானே..

உயிரோடு இருக்கும் போதே கருணாநிதிக்கு சென்னையில் சிலை வைத்தான்..

அடேய் திமுக பதர்களே, உங்க வரலாறு இருக்கே, பதர்களே, அதை இன்னும் தோண்டணுமா...

கல்வெட்டுகளை அழிப்பதில் கன்னட, வட இந்திய கூட்டு... ஆயிரக்கணக்கான தமிழ்க் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டு வருகின்றன...



மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள்.. வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி...

பதிவு செய்த நாள்: பிப் 04, 2018...

மைசூரில் உள்ள, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு ஆவணங்கள், கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவதால், தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், மத்திய தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட கல்வெட்டு ஆய்வுகளில், இதுவரை, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள், மை படிகளாகவும், எழுத்துப்படிகளாகவும் எடுக்கப்பட்டுள்ளன.

அவை, கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள, தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், அவற்றை பாதுகாக்கவோ, பராமரிக்கவோ, தமிழ் தெரிந்த தொல்லியல் அறிஞர்களை, மத்திய அரசு நியமிக்கவில்லை.

அதனால், மிக முக்கிய ஆவணங்களான கல்வெட்டுப் படிகள், தமிழ் தெரியாத, தமிழ் கலாசாரத்தின் மீது வெறுப்பு உடைய அலுவலர்களால் அழிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

இது குறித்து, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது...

மத்திய தொல்லியல் துறை சார்பில், மஹாராஷ்டிரா முதல் கன்னியாகுமரி வரை, கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள், நேரடியான எழுத்துப்படிகளாகவும், மை படிகளாகவும் சேகரிக்கப்பட்டன.

அவற்றை, ஜி.எஸ்.கை என்ற, தலைமை கல்வெட்டு ஆய்வாளர், 1967ல், மைசூரில் உள்ள, தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தின், கல்வெட்டு பிரிவுக்கு அனுப்பி வைத்தார். இவ்வாறு, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டு சார்ந்த ஆவணங்கள் அனுப்பப்பட்டன.

அப்போது, கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் பல, தற்போது இல்லை.
எங்களைப் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள், மைசூருக்கு சென்று, கல்வெட்டு படிகளை ஆய்வு செய்ய அனுமதி கேட்டால், அங்குள்ள வட இந்திய அலுவலர்கள், அனுமதி மறுக்கின்றனர்.

மேலும், எதைக்கேட்டாலும், அவை, ஏற்கனவே காணாமல் போய்விட்டன என்கின்றனர்.

தொல்லியல் துறை படியெடுத்த கல்வெட்டு செய்திகளை, புத்தகமாக பதிப்பித்து, தொல்லியல் துறை நுாலகத்தில் வைக்க வேண்டும்.
தமிழக ஆய்வாளர்கள் பார்க்க வசதியாக, சென்னையில் உள்ள, மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவுக்கு, அந்த ஆவணங்களை அனுப்பி, பராமரிக்க வேண்டும்.

ஏற்கனவே, தமிழகத்தில், மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்வு அறிக்கைகள் வெளிவராத நிலையில், இது போன்ற ஆவண அழிப்பில், துறை சார்ந்தோரே ஈடுபடுவதை தடுத்து நிறுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்...

இந்தியாவில் இஸ்லாமியரை எதிர்த்து வயிற்றை வளர்ப்போம்... வெளிநாட்டில் இஸ்லாமியர் காலில் விழுந்து வயிற்றை வளர்ப்போம்... இப்படிக்கு பாஜக மோடி...


பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம்...


திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன...

இதை மற்றவர்களும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அமெரிக்கா இதற்கும் பதிப்புரிமை (copyright) வாங்கி விடும்.

பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு. அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின் சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும்.

திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மணப்பெண்ணிற்கும் மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர்.

இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே. தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலிதங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா?

மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில் வருத்தம் அளிக்கும் விசயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை.

கோவில்களுக்கு செல்லும் பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே.

கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும். மேலும் கோபுரகலசங்களும் இடி தாங்கியாகவே செயல் பட்டு வருகின்றன.

பிறகு ஏன் இடி தாக்குகின்றது என கேட்கின்றீர்களா?

முறையான பராமரிப்பற்ற காரனங்களுக்ககவே அவ்வப்பொழுது அப்படி நடக்கின்றது. முழுமையான ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்கள் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளில், சுற்று வட்டார பகுதிகளில் இடி தாகும் அபாயம் இல்லை. சும்மாவா சொன்னாரு பாரதியார் கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று?

இவை எதுவும் தெரியாமல் பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டு தானும் நாசமாவதுடன் மற்றவர்களையும் கெடுக்கின்றனர்...

கார்பரேட் பொருள்களை உண்ணாதே...


பாசிட்டிவ் எனர்ஜி...


உலகம் முழுமைக்கும் ஆக்க சக்திகளாக இருப்பவற்றை பாசிட்டிவ் எனர்ஜி என்கிறோம். ’நீங்க நல்லா இருக்கணும், வாழ்க வளமுடன்’ போன்ற வாழ்த்துச் சொற்கள் பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை சேர்ந்தவை.

வங்கி வாசலில் பேனா இல்லாமல் தவித்தும்போது உதவியவரிடம் புன்முறுவலிடம் நன்றி என சொல்வது, சாலையில் நடப்பட்ட மரத்திற்கு ஒருவாளித் தண்ணீர் ஊற்றுவது போன்ற பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை வெளிப்படுத்தும் செயல்கள் தான். நற்செயல்களின் மூலாதாரம், பாசிட்டிவ் எனர்ஜி. அது ஒன்றின் வளர்ச்சியை கூட்டும். அவ்வளர்ச்சியை பாதுகாக்கும்.

பாசிட்டிவ் எனர்ஜியின் பகையாளிதான் நெகட்டிவ் எனர்ஜி. ’அவன் அழியணும், அந்த குடும்பம் அழியணும், அவன் வீட்டு மாடு சாகணும், விவசாயம் பொய்க்கணும், பிசினஸ் நொடிக்கணும்’ போன்ற வசவு உணர்வுகள் நெகட்டிவ் எனர்ஜியை சேர்ந்தது. ஒன்றின் அழிவை, ஒருவரின் துயரத்தை நேசிக்கக்கூடியது. தீய நிகழ்வுகளின் தூண்டுகோலாக இருப்பது நெகட்டிவ் எனர்ஜி. இத்தகைய இரண்டு எனர்ஜிகளின் பிறப்பிடம், வாழ்விடம் எது? மனிதனின் சிந்தனை அறைதான்.

இரு சக்திகளும் ஒரே அறையில்தான் வித்தாக விழ்கிறது. அதில் எந்த விதை செடியாகும், எந்த விதை மரமாகும் என்பது அம்மனிதனுக்குக் கிடைக்கிற சூழ்நிலையே முதலில் முடிவு செய்கிறது.

மனிதன் தனக்குக் கிடைக்கிற சூழ்நிலையால் சிந்தனைகளைப் பெறுகிறான். இயல்பாகவே நல்ல சூழ்நிலையை பெறுகிறவன் பாக்கியசாலிதான். அவனுக்கு நற்சிந்தனை, நல்ல செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு எளிதில் கிட்டிவிடும். சமூகம் ’நல்லவர்’ என்ற பட்டியலில் சீக்கிரமே இணைத்துக் கொள்ளும்.

இவர், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை வாழ்த்தும் உணர்வு போன்ற பண்புகளால் கட்டமைக்கப்படுவார். இவரிடம் நெகட்டிவ் எனர்ஜி அடங்கிக் கிடக்கும். இவரது ஆளுமையில் மற்றவர்கள் கட்டுண்டு போவர். எதிர்பாராதவிதமாக நல்ல சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றம் அடையும். நெகட்டிவ் எனர்ஜி ஆளுமை செய்ய முற்படும். எனினும் அவரது நற்சிந்தனை அனுபவத்தால் அது நிரந்தரமாகி விடாமல் பாசிட்டிவ் எனர்ஜியை நோக்கி உடனுக்குடன் மீண்டு கொள்வார்.

கடலில் எவ்வாறு ஒவ்வொரு நாளும் நீர் தளும்பலில் உள்வாங்குதல், வெளி தள்ளுதல் ஏற்படுகிறதோ, அப்படி ஒரு நிகழ்வு போல மனிதனின் மன நிலையில் இத்தகைய ஏற்ற இறக்கங்களை சூழ்நிலைகள் நாளொரு பொழுதும் உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

இயல்பிலேயே நல்ல சூழ்நிலை, குடும்பநிலை அமையாதவர்கள், சூழ்நிலையின் பாதிப்பால் வாழ்வில் தன்னம்பிக்கை இழந்து, விரக்தி நிறைந்து, பயம், கோபம் மிகுந்து. மற்றவர்களை ஏக்கத்தோடும், பொறாமையோடும் காண்பவர்களாகவும், தன்னையே தனக்குள் தாழ்த்தி கொண்டும் வாழ்வர். இவரிடம் எளிதில் நெகட்டிவ் எனர்ஜி வெற்றி கொள்ளும். ஆளுமை செய்யும். பாசிட்டிவ் எனர்ஜி அடங்கிக் கிடக்கும். எதிர்பாராதவிதமாக தீய சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றமடையும். அடங்கிக் கிடந்த பாசிட்டிவ் எனர்ஜி துளிர்க்கும். எனினும் அது நிரந்தரமாக வளர்ந்து விடாமல் அதுநாள் வரை ஆதிக்கம் செய்த நெகட்டிவ் எனர்ஜி கண்காணிக்கும். ஒவ்வொரு நாளும் இந்த எனர்ஜி மாற்றம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

பலமுறை நிகழும் இத்தகைய மாற்றங்களில் அதிகமாக எந்த எனர்ஜி அவரை வழி நடத்துகிறதோ அதன் பலன்களை, பாதிப்புகளை அவரது வாழ்விலும், அவரைச் சேர்ந்தவர்கள் வாழ்விலும் எதிரொலிக்கும். உதாரணமாக பாசிட்டிவ் எனர்ஜி மிகுந்த ஒருவரை டிராஃபிக்கில் கெட்ட வார்த்தையால் ஒருவன் திட்டி விடுகிறான் என வைத்துக்கொள்வோம். திட்டியவனைத் திரும்ப மோசமான கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டும் என தோன்றும். முடியாது. அப்போது மனதில் நெகட்டிவ் எனர்ஜி எழும். திட்டியவன் மீது பாய வேண்டிய நெகட்டிவ் எனர்ஜி சம்மந்தமே இல்லாமல் அலுவலகத்தில் பணி செய்யும் எளிய ஊழியரின் சிறு தவறைச் சுட்டிக்காட்டி அவர் மீது பாய்ந்து விடும். அவர் என்ன செய்வார் அவருக்குச் சாதகமான இடத்தில் வெளியிடுவார். இப்படியாக இது பரவும்.

ஆக உள்வாங்கப்படும் எனர்ஜியைப் பொறுத்து சார்ந்தவர்களையும் பாதிக்கும், அல்லது பலனளிக்கும்.

மனிதர்கள் தங்களுக்குள் எழுப்பிக்கொள்ளும் எனர்ஜிகளில் ஒவ்வொரு நாளும் எந்த சக்தியின் ஆதிக்கம் அதிகரிக்கிறதோ, அதற்கான விளைவுகளை அவர் சார்ந்துள்ள சமூகமும், இந்த உலகமும் சந்திக்கிறது.

இத்தகைய பலப் பரிட்சை, அதனால் எழும் விளைவுகளால்தான் இந்த உலகம் பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த மனிதகுலம் அனைத்திற்கும் முழுமையாகவும், முழுநேரமும் பாசிட்டிவ் எனர்ஜி சூழ்ந்திருக்க உத்தேசித்தே மதங்களின் உபதேசங்கள், வழி நடத்தைகள் அமைந்திருக்கின்றன. உலகில் மதங்கள் அனைத்துமே நற்சிந்தனைகள், நற்செயல்களை வழிமொழிகின்றன.

நான் எப்போதோ படித்த நிகழ்வு ஒன்றை இங்கே நினைப்படுத்துகிறேன். ’மகிழ்ச்சியை விதைப்பவர்’ என்ற பெயரில் அதைப் படித்த நினைவு. ஒருவர் தினமும் காலையில் பத்து ரூபாய்க்கு ஒரு ரூபா நாணயங்களாக மாற்றிக்கொண்டு நடைப்பயிற்சிக்குச் செல்வாராம். செல்லும்போது வேண்டுமென்றே அங்கொன்றும், இங்கொன்றுமாக நாணயங்களை வேண்டுமென கிழே போட்டு வைப்பாராம். காலையில் அதைக் கண்டெடுக்கும் பிற மனிதர்கள் ’இன்று அதிஷ்ட நாள்’ என சிறு மகிழ்ச்சிக்கு உள்ளாவர் இல்லையா? அதற்காகத்தான் அப்படிச் செய்வாராம். ஏனெனில் அம்மகிழ்ச்சி அலைகள் சமூகத்திற்குத்தானே திரும்பவும் கிடைக்கும். அதற்காக அப்படி நடந்துகொள்வாராம் அம்மனிதர்.

சூழ்நிலை தான் ஒரு மனிதனுக்கு சிந்தனைத் தருகிறது. அச்சிந்தனையே அவனிடமிருந்து சொல்லாக வெளிவருகிறது. அச்சொல்லே அவனது செயலாகிறது. தொடர்ச்சியான செயலே பண்பாகிறது. அப்பண்பே அம்மனிதன் மரபணுவில் பதிவு பெறுகிறது. அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

எனவே வாழும் வீட்டில் சமூகத்தில், நாட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை பரவ விடுங்கள். அதை உருவாக்குங்கள். உங்களுக்கும் சமூகம் பாசிட்டிவ் எனர்ஜியையே திரும்ப வழங்கும்...

தூத்துக்குடியை காப்போம் தமிழா...


ஆலையில் இருந்து வெளியிடப்படும் நச்சுபுகை மற்றும் கழிவுநீர் நிலத்தடி நீரை பாதிப்பதால்...

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்...

இதில்  இந்த ஆலையை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது..

அதனாலயே மக்கள் உயிரை காப்பாறி கொள்ள போராடி வருகின்றனர் இப்போது....

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட வேண்டாம். காப்பாற்றுவோம்...


சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என  ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை..

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.

மேலும் விபரங்கள் கீழே...

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு   மருத்துவாிடம் சென்றால்,சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்து பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால், விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,காலில் இருந்தால் காலை துண்டித்து விடுவதும்,தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும், விரலையும் அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும் அதனுடைய வலி..

இதற்க்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது..

எனது தாயாருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள், புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள். முடிவில் மரணத்தை தான் தழுவ வேண்டும். இதுதான் நிலை..

இதற்க்கு கண்கண்ட மருந்து..

ஆவாரம் இலை..

இந்த இலையை அம்மியில், மிக்ஸியில், அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிட வேண்டும்.

இதுபோல் ஒருநாள் விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிா்ந்து பலாின்  கால்களை விரல்களை காப்பாற்றுவோம்...

இந்த வேலையை வடநாட்டுல வைச்சுக்கங்கடா இது தமிழ்நாடு புரிதா...


தமிழா சிந்தித்துப் பார்...



மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பிறகும் அதன் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் இல்லாத சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கி தமிழர்களின் வேலை வாய்ப்பினை தட்டிப் பறிப்பது அயோக்கியத்தனம் இல்லையா?

இதனை என்றாவது முற்போக்கு பிற்போக்கு முகமூடிகள் தட்டிக் கேட்டது உண்டா?

எப்போ தான் எம் மக்கள் புரிஞ்சிக்க போறாங்களோ...


வெங்காயத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாமா?


வெங்காயத்தில் 50 மருத்துவ குணங்கள் உள்ளது..

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.

சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சம அளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினால் மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்து விட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்...

இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்...


தமிழ்நாட்டில் திராவிடன் என்ற முகமூடியில் வாழும் சிறுபான்மை மொழியினரே..


கர்நாடக மாநிலத்தில் பிறமொழி எவ்வாறு நீக்கப்படுகிறது என்பதை என்றாவது கண்டித்தது உண்டா?

கர்நாடகத்தில், துவக்கப் பள்ளியில் இருந்து கன்னடம் மட்டுமே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என 1982-ம் ஆண்டு கோகாக் கமிட்டி அறிக்கை வெளியிட்டது.

எங்கும் கன்னடம், எதிலும் கன்னடம் என்ற நிலை இருந்து வந்தது.

இதை ஆதரித்து கர்நாடகம் முழுவதும் ராஜ்குமார் சுற்றுப்பயணம் செய்து தமிழ் மொழிக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டார்.

கன்னட மொழிக்காக போராட்டம் நடத்தினார்.

தமிழை அழிக்க முயலும் இந்த அறிக்கையை திரும்பப் பெறுமாறு தமிழர்கள்போராட்டம் நடத்தினர்.

இதனால் தமிழர்கள் குடிசைகள் கொளுத்தப்பட்டன.

தமிழ்பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டனர்.

தமிழர் நடத்திய ஊர்வலங்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

1982-ம் ஆண்டு தமிழர்கள் நடத்திய இந்த வீரப் போராடட்த்தில் கோலார் தங்கவயலைச் சேர்ந்த மோகன், பால்ராஜ், உதயகுமார், பரமேசு என்ற நான்கு தமிழ் இளைஞர்களும், பெங்களுரில் இரண்டு தமிழ் இளைஞர்களும் துப்பாக்கி குண்டுக்கு பலியானார்கள்..

இதை எதிர்த்து எம்.ஜ.ஆர். அறிக்கை வெளியிட்டார்..

உயிரிழந்த தமிழர்களுக்கு இழப்பீடு வழங்கி, அஞ்சலியும் செய்தார். இது ராஜ்குமார் அபிமானிகளுக்கு கோபம் ஏற்படுத்தியது.

1982-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கேட்டு விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமியை சந்திக்க எம்.ஜி.ஆர். பெங்களூர் வந்தார்.. அப்போது அவர் கண்ணெதிரிலேயே வேனில் ஒட்டப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்தை ராஜ்குமார் அபிமானிகள் செருப்பால் அடித்து அவமானப்படுத்தினர்.

இந்த சம்பவத்திற்கு பின்பு தான் நடிகர் ராஜ்குமார் சென்னையிலிருந்து குடும்பத்துடன் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார்.

காவிரி நடுவர் நீதி மன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியதை ஒட்டி கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 300 தமிழர்கள் உயிரிழந்தனர்.

தமிழர்கள் நடத்தி வந்த கடைகள், தொழில் நிறுவனங்கள் தமிழர் வீடுகள் சூறையாடப்பட்டன.

தமிழர்கள் உயிருக்கு அஞ்சி நடந்தே தமிழ்நாட்டுக்குச் சென்றார்கள்.

பங்கரப்பா வீட்டில் இருந்தும், காந்தி நகரில் உள்ள ராஜ்குமாரின் வஜ்ரேஸ்வரி அலுவலகத்தில் இருந்தும், ராஜ்குமார் சங்க கட்டிடத்தில் இருந்தும் கன்னட ஆதரவாளர்கள் லாரிகளிலும், வேன்களிலும் அனுப்பி வைக்கப்படடனர்.

அப்போது நடந்த தாக்குதலை தமிழர்கள் யாரும் மறக்க முடியாது.

உடைமைகளை இழந்த தமிழர்கள் சாம்ராஜ் நகர் வழியாக சத்தியமங்கலம் வந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த தமிழர்கள் உதவினர்.

இதை அறிந்த நல்லூர், ராமபுரம் போலீசார் கர்நாடகத்தில் இருந்து வந்த தமிழர்களையும், அவர்களுக்கு உதவியவர்களையும் அடித்து உதைத்து துன்புறுத்தினர்.

இதை கேள்விப்பட்ட வீரப்பன் கோபம் கொண்டு அந்த போலீஸ் நிலையத்தை தரைமட்டமாக்கி 6 காவலர்களையும் சுட்டுக் கொன்றார்.

வீரப்பனிடம் இயற்கையாகவே தமிழ் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது இதன் மூலம் உறுதியாகிறது என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது..

உண்மையை அறிந்துக் கொள்ள இங்கே சென்று பார்க்கவும்...

http://tamil.oneindia.com/news/2000/10/14/blood.html

தீ மிதிப்பது பக்தி அல்ல புத்தி...


சந்தேகம் இருந்தால் "Fire walk" என்று கூகுள் சென்று டைப் செய்து பாருங்கள்...

குடம் புளியால் கிடு கிடுவென்று உடல் எடை குறையுமா?


குடம்புளி என்றொரு வஸ்து கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

சிலருக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் பலருக்கும் தெரிந்திருக்காது என்பதும் உண்மை.

குடம்புளி அல்லது கோக்கம் புளி என்று தமிழிலும் மலபார் டாமரிண்ட் என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் குடம்புளியின் அறிவியல் பெயர் கார்சீனியா கம்போஜியா.

இன்றளவில் உடல் எடை குறைப்பு விசயத்தில் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை செய்யும் எடை குறைப்பு கேப்ஸ்யூல்களில் பெருமளவு பயன்படுத்தப் படுவது இந்த குடம்புளி தான்.

கார்சீனியா கம்போஜியா கேப்ஸ்யூல்கள் என்ற பெயரில் இவை விற்பனைக்கு வந்திருக்கின்றன.

குடம்புளி எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு அதன் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

இந்தக் குடம்புளி  2000 வருடங்களுக்கு முன்பு இந்தியச் சமையலறைகளில் தினமும் பயன்படுத்தப் பட்டு வந்தது.

நாம் இன்று பயன்படுத்தும் புளியின் வரலாறு வெறும் 300 வருடங்கள் தான்.

ஆனால் குடம்புளி அல்லது பழம்புளியின் வரலாறோ 2000 வருடங்களுக்கும் முற்பட்டது.

தற்போதைய சீமைப் புளி போலல்லாமல் இந்தக் குடம்புளியானது செடிகளில் விளைகிறது.

தட்டையான சதைப்பற்றுடன் கூடிய பூசணிக்காய் வடிவ குடம்புளி பழமானதும், பறிக்கப்பட்டு காய வைக்கப்படுகிறது.

காய்ந்த புளி பல வருடங்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.

குடம்புளியில் இப்போது நாம் பயன்படுத்தும் புளி போல சுள்ளென்ற புளிப்புத் தன்மை இருப்பதில்லை, மாறாக புளிப்புத் தன்மையுடன் சற்றே தூக்கலாக துவர்ப்புச் சுவையும் இருக்கும்.

அதோடு இது பழநறுமணப் பொருள் வகைப்பாட்டில் வருவதால் இதைப் பயன்படுத்திச் சமையல் செய்யும் போது பதார்த்தங்களில் அதீத மணம் தெருமுனை வரை நீளும் என்பதும் உறுதி.

குடம்புளி விளையும் இடங்கள்...

இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா, அத்துடன் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் விளையும் இந்தக் குடம்புளி கேரளா மற்றும் பிற தென்னிந்திய பகுதிகளிலும், நீலகிரி மலைச்சரிவுகளிலும் வளர்க்கப்படுகின்றது.

புளிப்புச் சுவையுடைய இது புளிக்கு மாற்றாக இப்போதும் கேரளாவில் அன்றாடச் சமையலில் பயன்படுத்தப்படுகின்றது.

இது 2000 அடிகள் வரை உயரமுடைய கேரள மலைப்பகுதிகளில் வெகுவாகக் காணப்படுகிறது.

இதன் பழங்கள் கூம்பு மற்றும் சற்று ஒடுங்கிய முட்டை வடிவமுடன் 50 முதல் 150 கிராம் எடையுடன் இருக்கும்.

குடம்புளி எங்கே கிடைக்கும்.?

பொதுவாக நாட்டு மருந்துக் கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த குடம்புளி தற்போது மக்களிடையே உணவு விசயத்தில் ஏற்பட்ட மனமாற்றம் மற்றும் விழிப்புணர்வின் பின் பெரிய டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

கணிசமான மக்கள் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சாதாரணப் புளியுடன் ஒப்பிடுகையில் விலை தான் சற்று அதிகம்.

நாம் வழக்கமாக தற்போது பயன்படுத்தும் புளி விலை கிலோ 100 ரூபாய் என்றால் குடம்புளியின் விலையோ அதை விட மும்மடங்கு அதிகமாக இருக்கிறது.

குடம்புளியின் பயன்...

குடம்புளி உடலில் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது.

மேலும் உடல் எடை குறைப்பு விசயத்திலும் குடம்புளியின் பங்கானது சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப் பட்ட உண்மை.

மனித மூளையின் பயனியல் கிளாட்டில் செரட்டோனின் உற்பத்தியைத் தூண்டி அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவும் குடம்புளி உதவுகிறது என சித்த மருத்துவர்கள் கருதுவதால் சித்த மருத்துவத்தில் குடம்புளி ஒரு முக்கியமான சேர்மானப் பொருளாக இன்றளவிலும் நீடித்து வருகிறது.

குடம்புளியில் இருக்கும் ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் மூளைநரம்புகளிடையே தகவல் பரிமாற்றத்திற்கு உதவக் கூடிய செரட்டோனின் செயல்பாட்டைத் தூண்டும்.

இதனால் பசி உணர்வு கட்டுப்படுத்த படுத்தப்பட்டு உடல் எடை குறைய வாய்ப்பு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நமது பமரபார்ந்த புளி குடம்புளி தான் என்றால் அது ஏன் இப்போது அதிகமாகப் புழக்கத்தில் இல்லை?

குடம்புளியைப் பொறுத்தவரை அதன் விளைச்சல் இந்தியாவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பரவலாகக் காணப் படுகிறது என்பதோடு அதன் விலையும் அதிகம் என்பதால் மூன்னூறு வருடங்களுக்கு முன்பு அறிமுகமான இப்போதைய புளி அதை ஓரங்கட்டி விட்டு இந்தியச் சமையலறைகளில் முதலிடம் பெற்றிருக்கலாம் என்பததை தாண்டி இதில் யோசிக்க தேவையான ஆதாரங்களென எதுவுமில்லை.

அதோடு நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாகக் கிடைக்கிறது எனும் குறிப்பை ஒட்டி யோசித்தால் அங்கே கிடைக்கக் கூடிய ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அனைத்து உணவுப் பொருட்களும் நம் அன்றாட வாழ்வில் மளிகைக் கடைகளில் சரளமாகக் கிடைப்பதில்லை என்பதோடு மிகச் சிறிய அளவில் மட்டுமே நாம் பயன்படுத்தப் போகிறோம் என்பதாலும் அதற்கான தேவை குறைந்திருக்கலாம்.

இதெல்லாம் தமிழ்நாட்டில், ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளாவில் குடம்புளியில் தான் மீன் குழம்பு சமைத்து சாப்பிடுகிறார்கள்.

எப்போதுமே மரபார்ந்த விசயங்களைப் பின்பற்றுவதிலும் தக்க வைத்துக் கொள்வதிலும் முதலிடம் வகிக்கும் கேரளா இந்த விசயத்திலும் நம்மை முந்திக் கொண்டு முன்னுதாரணமாகி விட்டது.

எந்தெந்த சமையலில் குடம்புளி சேர்க்கலாம்?

காரக் குழம்பு, மீன் குழம்பு, ரசம், சாம்பார் என நாம் வழக்கமாகப் புளி சேர்த்து சமைக்கும் அத்தனை உணவுப் பொருட்களிலும் குடம் புளி சேர்த்து சமைக்கலாம்...

குறுக்கு வழியில் தமிழக முதல்வரான எடப்பாடி சொத்து மதிப்பு...


டிராஃபிக் ராமசாமி போராடியும் அகற்றப்படாத பேனர்களுக்கு மத்தியில் மதுரையில் உரையாற்றி முடித்த பாஜக தமிழிசை...


மற்ற கட்சிகளை போன்று நாங்கள் இல்லை எனக் கூறும் தமிழிசை சட்டத்தை மீறி வைக்கப்பட்ட பேனர்களுக்கு மத்தியில் உரையாற்றியதற்கு என்ன பதில் கூறுவார் ? எல்லா கட்சியும் வைக்கிறது தானே என்பதை தவிர வேறு என்ன பதில் கூற முடியும் ? என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

பாஜகவை பார்த்து அரசாங்கம் இப்படி பயப்பட என்ன தான் காரணம் அப்படி உள்ளுக்குள் என்ன தான் நடக்கின்றது நடந்துள்ளது என டிராஃபிக் ராமசாமிக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பேனர் அகற்றப்படவில்லை எனில் தான் வழக்கு தொடரப்போவதாக டிராஃபிக் ராமசாமி கூறியிருந்தது குறிப்பிடதக்கது...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவிலுள்ள வானிலை ஆய்வு மையத்தலாம் இழுத்து மூடுங்கடா...


உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் திருவள்ளுவர்...


சிங்கப்பூரில் உள்ள பிரபல MDIS கல்வி நிலைய வளாகத்தில் திருவள்ளுவர் சிலை.

சிங்கையில் உள்ள பிரபலமான மேலாண்மை பட்டப்படிப்பு வழங்கும் MDIS என்னும் (Management Development Institute of Singapore) கல்வி வளாகத்தின் நுழைவாயிலில் உலகின் தலைசிறந்த பத்து சிந்தனையாளர்களின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழர்களின் பெருமையான திருவள்ளுவருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சிலைகள் நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பலருக்கும் இது குறித்த செய்தி தெரியாது. அதனால் இதை பற்றியான செய்தியை நாம் பதிவு செய்கிறோம்.

பல்லாயிரம் பன்னாட்டு மாணவர்கள் பயிலும் இந்த கல்வி நிலையித்தில் இத்தைகைய சிந்தனையாளர்களின் சிலைகளை வைத்திருப்பது, மாணவர்களுக்கு நன்னெறிகளை கற்றுக் கொடுப்பதொடு, நன்மை தீமைகளை மாணவர்கள் பகுத்துணர்ந்து அறிய இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளது MDIS நிர்வாகம்.

இதில் உள்ள உலகின் தலை சிறந்த சிந்தனையாளர்களின் பட்டியில் இதோ…

லூயிஸ் பாஸ்டர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இப் கால்டன், பென் ஜான்சன், அரிஸ்டாட்டில், திருவள்ளுவர், பிளாடோ, கன்புயுசியஸ், சாக்ரடிஸ் மற்றும் மரியா மாண்டேசரி..

இந்த சிலைகளை இந்த கல்வி நிலையத்தில் நிறுவுவதற்கு காரணமாக இருந்தவர் MDIS நிறுவனத்தின் பொதுச் செயலாளர் முனைவர் தேவேந்திரன் ஆவார். தமிழரான இவரது தாய் தந்தையின் பூர்வீகம் இலங்கை ஆகும்.

இக்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களை மனதளவில் ஊக்கப்படுத்தவும், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை பெறுவதற்கும் இந்த தலைசிறந்த மனிதர்களின் உருவச் சிலைகள் உதவும் என்பதற்காக தேவேந்திரன் இந்த சிலைகளை கல்வி நிலையத்தின் வாசலில் நிறுவி உள்ளார்.

பன்னாட்டு மாணவர்கள் இப்போது யார் திருவள்ளுவர் என்பது பற்றியும் உலகப் பொது முறையாம் திருக்குறள் பற்றியும் அறிந்து வருவது தமிழர்களுக்கு பெருமை தானே.

இது போல் உலகில் பல்வேறு நாடுகளிலும் திருக்குறளின் பெருமையை பற்றியும் திருவள்ளுவரை பற்றியும் அறியுமாறு தமிழர்கள் தங்களால் முடிந்த செயல்களை செய்ய வேண்டும்.

தமிழுக்கு பெருமை சேர்க்கும் இத்தகைய செயலை நாம் அனைவரும் பாராட்டுவோம்...

ஒரு சொட்டு தணண்ணீர் கூட இல்லாமல் போன நகரத்தின் கதை தெரியுமா ?


உணவு அரசியல் - எம் மக்களே ஒரு 20 நிமிடம் உங்களுக்காக ஒதுக்கி இந்த பதிவை பார்க்கவும்...