09/10/2018

அரசியலில் ஒரு சில நிகழ்வுகள் சத்தமே இல்லாமல் நடக்கும்…… சில நேரம் சத்தமாக…


5-10-18 : EPS - பன்வாரி சந்திப்பு அடுத்து, EPS-பொன்னார் சந்திப்பு TTV யோடு நீங்கள் இணைய வேண்டும் என Pressure கொடுத்ததாக தகவல்..

6-10-2018 : துணை வேந்தர்கள் நியமனத்தில் முறைகேடும் ஊழலும் நடந்துள்ளது - பன்வாரி லால் ஆட்சி கலைப்புக்கு முதல் படி இதுதான் என்று பேச்சு தமிழகம் முழுவதும் எழுந்தது.

கவர்னர் மிரட்டலுக்கு பயந்து கிட்டத்தட்ட மேற்கண்ட திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே narendramodi சந்திக்க வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்தது.

8-10-2018 : EPS - MODI சந்திப்பு …சந்தோஷமாக வெளியே வந்த EPS..

9-10-18 8 மணி : நக்கீரன், ஏப்ரல் மாதம் எழுதிய கட்டுரை-க்கு இன்று நக்கீரன் கோபாலை கைது செய்தது காவல் துறை.

10 மணி : அரசியல் தலைவர்களும், பத்திரிக்கையாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை. 

NakkeeranGopal செய்தியாளர்கள் மற்றும் வைகோ தர்ணா போராட்டம்.

12 மணி : கைதை வரவேற்று TTV பேட்டி.

1 மணி : பன்வாரிலால் Sex Scandal புகார் இந்தியா முழுமைக்கும் எதிரொலிக்க துவங்கியது. நக்கீரன், ஜெ. வரை எதிர்த்து நின்ற செயல்பாடுகள் விவாதமாக மாறத் துவங்கின.  ட்ரெண்டில் புரோகித் பெயர்.

புரோகித் பெயர் ஏறத் தயார் ஆகிறது.

2 மணி : தான் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் குறித்து கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், சில துணைவேந்தர்கள் மீதான புகாரும் கைதுகளும் தன்னை கவலை கொள்ளச் செய்துள்ளதாகவும்.., அதையே தான் கூறியதாகவும் மற்ற ஏதும் இல்லை என்றும் ஆளுநர் மாளிகை விளக்கம்.

(இப்போ திரும்ப மேல இருந்து படிங்க)

இப்போ இதுல Game Player யாருன்னு கண்டு பிடிச்சிட்டா……

நீங்க தான் சரியான அரசியல் சுவாசிப்பாளன்...

சேகுவேரா வின் நினைவு தினம் இன்று...


புரட்சியின் புனை பெயர் 
நீ இல்லாமல் போய்விட்டாய் 
இருந்திருந்தால் 
உனக்கும் முடிவு 
முள்ளி வாய்க்காளில் தான்..

நீ பொலிவிய காடுகளில் 
கோழையைப் போல் சுடப்பட்டாய் 
அன்று..

உன் தம்பிகள் முள்ளிவாயக்காளில் 
அம்மனமாய் புதைக்கப்பட்டார்கள் 
இன்று..

சே புரட்சியின் புனை பெயர் 
உன்னை போல தான் 
எங்கள் விடுதலையையும் 
அழிக்க முடியாது...

இளம் பெண்ணை படுக்கைக்கு அழைத்த வைரமுத்து...


காதலித்து பார் கருவக்காட்டுக்குள் அழைத்துசெல்வாய் காதலித்து பார்.

காதலித்து பார், கைரேகைகள் அழகாகும், கம்மாய்கரைகள் சொர்க்கமாகும் காதலித்து பார்.

காதலித்து பார், மசாஜ் செண்டர்கள் மறந்துபோகும், காண்டம்கள் கிழிந்துபோகும் காதலித்து பார்.

கை அருகே "பிட்டு சிடி" இருந்தும் பட்டினி கடந்து பழகுவாய்.

நேரங்கள் நிமிடங்களாகும், நிமிடங்கள் வருடங்களாகும் கடைசியாக காவல்துறைகள் கைதுசெய்யும் அதுவும் கடந்துபோகும் காதலித்து பார்.
                                     
- டோழர் வைரமுத்து டைரி குறிப்பிலிருந்து...

நக்கீரன் கோபால் மீதான 124 பிரிவை நீதிமன்றம் ரத்து செய்தது...


நக்கீரன் கோபால் கைதுக்கு காரணமான பத்திரிகையின் அட்டைப்படம்...


நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டிருப்பது கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் அரசப்பயங்கரவாதம் -சீமான் கடும் கண்டனம்...


நக்கீரன் கோபால் கைது அடக்கு முறையின் உச்சம்: உடனடியாக விடுவிக்க வேண்டும் - பாமக அறிக்கை...


நக்கீரன் குழும இதழ்களின் ஆசிரியர் நக்கீரன் கோபால் சென்னையில் இன்று திடீரென கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னையிலிருந்து புனே செல்லவிருந்த அவரை சென்னை மாநகரக் காவல் துறையினர் விமான நிலையத்தில் வழிமறித்து கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழக ஆளுனரின் பணிகளில் தலையிட்டதாக நக்கீரன் கோபால் மீது ஆளுனர் மாளிகையிலிருந்து புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆளுனரின் பணியில் ஒரு பத்திரிகையாளர் எவ்வாறு குறுக்கிட முடியும்? நக்கீரன் கோபால் எவ்வாறு குறுக்கிட்டார் என்பது தெரியவில்லை. அருப்புக்கோட்டை அரசு உதவி பெறும் கல்லூரி மாணவிகளை  சில பெரிய மனிதர்களின் பாலியல் தேவைகளை நிறைவேற்றக் கட்டாயப் படுத்தியது தொடர்பான வழக்கில் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டது குறித்து  நக்கீரன் இதழ்களில்  தொடர்ந்து எழுதப்பட்டு வந்தது தான் கைதுக்கு காரணம் என்று ஊடகத்துறையினர் கூறுகின்றனர்.

இது உண்மை என்றால் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீது இதைவிட மோசமானத் தாக்குதலையும், அச்சுறுத்தலையும் கட்டவிழ்த்து விட முடியாது. ஒருவேளை ஆளுனர் குறித்து எழுதப் பட்ட தகவல்கள் தவறானதாக இருக்குமானால் அதற்காக அவதூறு வழக்கு தொடரலாம். அதற்கு மாறாக ஊடக ஆசிரியரை கைது செய்வது ஜனநாயகத்தை படுகொலை செய்யக்கூடிய, கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கக்கூடிய செயலாகவே அமையும். இதை அனுமதிக்க முடியாது.

எனவே, நக்கீரன் கோபால் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை உடனே விடுதலை செய்ய வேண்டும்...

நிர்மலாதேவி வழக்கில், ஆளுநரை பற்றி அவதூறு கட்டுரை எழுதியதாக நக்கீரன் கோபால் கைது...


சலீம் - எனக்கு பிடித்த பாடல்...


நவீன கொத்தடிமையாய் நடத்தும் தொழிற்சாலை நிர்வாகங்களைக் கண்டித்து அறவழியில் போராடி வரும் என்பீல்டு, யமஹா தொழிலாளர்களின் சிக்கலில் அரசு தலையிட்டு உடனடித் தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் – சீமான் வலியுறுத்தல்...


காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரிலுள்ள சிறப்புப்பொருளாதார மண்டலத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள யமஹா, என்பீல்டு போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் அங்கு பணிசெய்யும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை நவீனக் கொத்தடிமைகளாய் நடத்தும் போக்கினைக் கண்டித்தத் தொழிலாளர்களின் அறவழிப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களது போராட்ட நோக்கங்களும், அவர்கள் எழுப்புகிற கோரிக்கை முழக்கங்களும் மிகத் தார்மீகமானவை. மண்ணின் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளித் தருவதாகக் கூறி அமைக்கப்பட்டு இந்நாட்டின் வரிச்சலுகைகளையும், இன்னபிற வசதிகளையும் மிக எளிதாகவும், மலிவாகவும் பெற்றுக் கொண்டு பெரும் இலாபத்தை ஈட்டிவரும் பன்னாட்டு தொழிற்சாலை நிர்வாகங்கள் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகளையே மறுத்து அவர்களை கொத்தடிமையாய் நடத்தி வருவது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் யமஹா மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்தியா யமஹா மோட்டார்ஸ் 150 கோடி முதலீட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  4,500க்கும் மேற்பட்டத் தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்கள் எண்ணிக்கை என்பது வெறும் 807 மட்டும்தான். மற்றத் தொழிலாளர்கள் யாவரையும் ஒப்பந்த மற்றும் பயிற்சித் தொழிலாளர்களாக வைத்து இதுநாள்வரை காலங்கடத்திக் கொண்டு வருகிறது. இரு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்து விடுவதாகக் கூறி அவர்களை வேலைக்கு நியமித்த நிர்வாகம், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவும் முன்வரவில்லை. எந்தவித ஊதிய உயர்வையும் அளித்திடவுமில்லை. அவ்வூதிய உயர்வும் ஆண்டுக்கு 7,00 ரூபாய் உயர்த்திக் கொடுத்தாலே பெரிய காரியம் என்கிற அளவில்தான் இருக்கிறது. விலைவாசி உயர்வு விண்ணைமுட்டி, பணவீக்கம் நாட்டின் பொருளாதாரத்தையே முடக்கிப்போடுகிற தற்காலச் சூழலில் இந்த 700 ரூபாய் ஊதிய உயர்வு எந்தவகையில் தொழிலாளர்களுக்குப் பயன்படும் என்பது ஆலை நிர்வாகத்திற்கே வெளிச்சம். இவ்வாறு தொழிலாளர் நல உரிமைகள் நசுக்கப்படுவது மட்டுமல்லாமல் தொடர் அடக்குமுறைகள் தொழிலாளர்கள் மீது ஏவப்பட்டு மனித உரிமை மீறல்களும் நடக்கின்றன. இவற்றிற்கெதிராகத்தான் அவ்வாலைத் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்பீல்டு தொழிற்சாலையில் 15 மாதங்களுக்கு மேலாகப் பணியாற்றிய 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய மறுத்ததோடு, அவர்களை பணிநீக்கமும் செய்துள்ளது. மேலும், தொழிற்சங்கம் அமைத்ததற்காக இரு நிரந்தரப் பணியாளர்களை நீக்கம்செய்து உத்தரவிட்டிருக்கிறது. இதற்கெதிராக அணிதிரண்டு 6,000க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி உள்ளிருப்புப் போராட்டத்தினைச் செய்துவருகின்றனர். ஆனால், இதுவரை எந்த தீர்வையும் முன்னெடுக்க ஆலை நிர்வாகம் முன்வரவில்லை.

தொழிலாளர்கள் மீதான சுரண்டலுக்கெதிராக இதேபோன்று 10,000 க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் அங்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவோம் எனக் கூறி கால்பதிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுக்கிற அட்டைப்பூச்சிகளாக இருக்கின்றன. வரம்பற்ற மனித உழைப்பைப் பெற்றுக்கொள்ளும் நிர்வாகங்கள், உழைப்பாளர்களுக்குரிய அடிப்படை வசதிகளையோ, தார்மீக உரிமைகளையோ தர மறுத்து கொத்தடிமைகளாய் வைத்து அவர்களது இரத்தத்தை உறிஞ்சுகின்றன. அப்பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய தொழிலாளர் நலச்சட்டங்களையோ, விதிகளையோ துளியளவும் மதிப்பதில்லை. தங்களது கொள்ளை இலாபத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ள அந்நிறுவனங்கள், மண்ணின் மக்களை இன்னொரு காலனிய ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிற நிலைக்கு இட்டுச் செல்கின்றன.

ஆகவே, திருப்பெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குள் போராடிக் கொண்டிருக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டத் தொழிலாளர்களின் உரிமைக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த இவ்விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உடனடித் தீர்வைக் காண வழிவகைகளை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி

ஸ்டெர்லைட் ஆலையிடம் பணம் பெற்றவர்கள்...


நியமம் - (அட்டாங்க யோகம்)...


நியமம்...

ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுன் மன்னும் பராசத்தி யோடுடன்
 நீதியுணர்ந்து நியமித்த னாமே  - 555

பரசிவத்தை வேதங்கள் கூறும் அப்பொருளை அனுசரிக்கிறவனை சோதியை அந்தவிடத்தில் சுடும்படியான அக்கினியைப் பாதி பாகத்தில் சேர்ந்திருக்கும் பராசத்தியுடன் இவற்றை நியாயமான வழியில் அறிபவன் நியமத்தனாகும்

தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமங் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே.  -- 556

பரிசுத்தம், அருள், உள்ளடக்கம்,  பொறுமை, இணக்கம், சத்தியம், ஸ்திரத்தன்மை கொள்ளுதல் இவையல்லாமல் காமம், களவு, கொலை என்பவைகளைத் தீமையெனக் காண்டல் முதலியவை பூமியில் இந்தபத்தும் நியமமாகும்.

குறிப்பு: அரசன், கல்விமான், பணக்காரன், அறிவாளி இவர்கள் தக்க நிலைமையை அடைந்திருந்தும் தங்களுக்குச் சம்பந்தமில்லாத காரியத்தில் பிரவேசித்து இழிவான தன்மையை அடைவதுபோல, மனிதன் உலகத்தில் பிறந்து யுக்த வயதடைந்தவுடன் பார்வையினாலும், சேர்க்கையினாலும் சம்பாதித்துக் கொள்ளும் காரியங்களாகிய, பிறர் தம்மை மதிக்கவேண்டிய தென்கின்ற கொள்கை, பற்று, தன்னறிவைப் பெரிதாகக் கூறல், பதார்த்தங்களில் இச்சை, அவசியமில்லாததை உபயோகித்தல், டாம்பீகமாக நடத்தல் என்னும் இவை போன்றதை நியமித்துக் கொண்டு இழிவையடைதல் சகஜம்.  அவ்வாறின்றி, மேற்சொன்ன குணங்களை நீக்குவதே நியமமாகும்...

தமிழ் இனத்தின் தேசிய மரம்...


முதல் தமிழ் சங்கத் தலைவன் சிவன்...


கடவுளின் பெயர்  ஏக்-[ சுவா] / சிவா...

மாயன் இன  மக்கள் வழிபட்ட தெய்வம் முதல் தமிழ் சங்கத் தலைவன்  சிவன் முப்பாட்டன் ஆவான்.

இங்கே அதற்கான ஒற்றுமைகள்..

கடவுளின் பெயர்  ஏக்-[சுவா] / சிவா.

மாயன் நிறம் செவ் நிறம் ஆனால் வழிபட்ட கடவுளின் நிறம் கருப்பு.

சிவனை கருமை நிறம் கொண்டே குறிப்பார்கள்.

மாயன் இனத்தவர்களின் நிலப்பரப்பில் ஜாகுவார் இருந்தது புலிகள் இல்லை.

நம் தமிழர்களின் நிலப்பரப்பில் ஜாகுவார் அதிகம் இல்லை, புலிகள் அதிகம் இருந்தன.

புலித்தோல் இடுப்பில் / ஜாகுவார்தோல் தோளில். சூலம் /வேல், கழுத்தில் பாம்பு /கயிறு..

குறிப்பு : மெல்கிப்சன் இயக்கிய அபோகாலிப்டோ என்ற படத்தில் மாயன் இனத்தவர்கள் உரையாடலில் பல இடங்களில் தெளிவான  தமிழ் சொல் எச்சங்கள் இருந்தது என்பது சொல்லியல் ஆய்வாளர்களின் கூற்று. விரைவில் அதனின் விளக்க ஆவணங்கள் வெளிவர இருக்கிறது..

கொய்யால எவனை போய் நோண்டி நொங்கு எடுத்தாலும் ஆதி தமிழாகத் தான் இருக்கிறது...

இருந்தும் என்ன பயன்..?

பாஜக வின் ஏமாற்று வேலைகள்...


திருப்பதி முருகா...


திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டுவிட்டு வருகிறாராம், அடங்கப்பா, எந்த பெருமாள் கோவிலிலாவது மொட்டைபோடும் வழக்கம் உண்டா?

எந்த பெருமாள் வெறும் இரண்டு கைகளோடு இருக்கிறார்?

எந்த பெருமாளுக்கு ஈஸ்வரன் என்ற சைவ(சிவன்) பெயர் உள்ளது?

எந்தப் பெருமாள் கோவில் கொடிமரமும் தெப்பக்குளமும் இல்லாமல் இருக்கிறது?

எந்த ஆழ்வாராவது திருப்பதி பெருமாளைப் பாடியது உண்டா?

எந்த பெருமாள் சிலையாவது இடது கையை கீழே தொங்கப் போட்டபடி உள்ளங்கையை மட்டும் மடக்கி உயர்த்தியவாறு உள்ளதா?

(படத்தில் பார்க்க)

கோவிலைச் சுற்றி கிடைத்துள்ள கல்வெட்டுகள் பெரும்பாலும் தமிழ்க் கல்வெட்டுகள் என்பதை அறிவீரோ?

கோவில் சுவர் முழுக்க தமிழ் எழுத்துகள் சுண்ணாம்படித்து மறைக்கப்பட்டிருப்பதை கவனித்துள்ளீரா?

சங்கும் சக்கரமும் தோளில் ஒட்ட வைத்திருப்பதையும் அதன் பின்னால் போலியான பின்கைகள் ஒட்ட வைக்கப்பட்டிருப்பதையும் கூர்ந்து நோக்கியிருக்கிறீரா?

பெருமாள் கோவில்கள் பெரும்பாலும் மலைமீது  இருக்காதே?

தங்கத்தாலும் வைரத்தாலும் அடக்கம் செய்யப்பட்டுள்ள சிலை முருகர் சிலை என்றால் நம்புவீரா?

சங்கநூல்கள் வேங்கடத்தைப் பாடுகின்றன; (ஆனால் முருகன் என்று பாடவில்லை)..

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் 'வேங்கடத்து நெடியோனைப்' பாடுகிறார்.

அருணகிரிநாதர் முருகன் என்று அடையாளம் கண்டு 'வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மாமலையில் உறைவோனே!' என்று பாடுகிறார்.

சைவர்களும் வைணவர்களும் திருப்பதியைச் சொந்தம் கொண்டாட 12ம் நூற்றாண்டில் ராமானுஜர் கருவறையில் சங்கு சக்கரத்தை வைத்துவிட்டு அரச முத்திரையோடு பூட்டு போட்டாராம்.

மறுநாள் காலை திறந்துபார்த்தால் சங்கும் சக்கரமும் சிலைமேல் இருந்ததாம்.

சைவர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டனராம்..

உடனே சங்கு சக்கரத்தை சிலையோடு பொருத்தி வைணவத் தலமாக்கிவிட்டார்களாம்.

ஆம்ஸ்டர்டாமில் இருந்து ரோஜா மலர்கள், ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு,
பாரீஸில்  இருந்து வாசனைத் திரவியங்கள் என வளம் கொழிக்கும் திருப்பதி..

2013ம் ஆண்டில் மட்டும் 860கோடி வருமானம் ஈட்டியுள்ளது..

இந்த ஆண்டு 1000கோடி எதிர்பார்க்கப்படுகிறது..

எல்லாம் தெலுங்கருக்குத்தான்.

திருப்பதி மட்டுமா திருக்காளத்தியும் (காளஹஸ்தி) போனது..

நல்லவேலை ம.பொ.சி படைவீடான திருத்தணியை மீட்டுக்கொடுத்தார்;

திருப்பதியைச் சுற்றியிருக்கும் தமிழ் ஊர்களாவன,

சந்திரகிரி (தமிழர் - 60 %),
சித்தூர் (தமிழர்- 65%),
குப்பம்(தமிழர்-60 %),
நகரி(தமிழர்-55%),
புங்கனூர்(தமிழர்-50%),
சத்தியவேடு(தமிழர்-70 %),
திருக்காளத்தி(தமிழர்-65 %),
புத்தளப்பட்டு(தமிழர் -55%),
திருப்பதி(தமிழர்-55 %),
பல்லவனேறி(தமிழர்-50 %),
நெல்லூர்(தமிழர்-55 %),
கோவூர்(தமிழர்-60%),
உதயகிரி(தமிழர்-55%) ...

1300களில் நாய்க்கெராட்சி வரும்வரை வேங்கடமலை என்ன அதற்கும் வடக்கே துங்கபத்திரை ஆற்றுக்கு தெற்கே என்றும் வேற்றினத்தார் நுழையவில்லை..

காலம் காலமாக தமிழர் பகுதியாக இருந்த வேங்கடம் இன்று தெலுங்கர் ஆட்சிக்குப் போய்விட்டது..

கோவிலைக் கட்டியவன் உன் பாட்டன் ஆனால் அங்கே தெலுங்கன் உன்னை 'ஜருகண்டி' என்று பிடித்துத் தள்ளுவான்..

பாலாஜி என்ற பெயரே 200ஆண்டுகள் முன்பு கிடையாது..

வடயிந்தியன் பாலாஜி என்ற பெயரை வைப்பான்; தமிழன் அந்தப் பெயரை வைத்துக் கொண்டு திரிகிறான்..

இருநூறாயிரம் (2லக்சம்) தமிழனைக் கொன்று தள்ளிய ராஜபக்ச மாமியார் வீட்டுக்கு வருவது போல திருப்பதி வந்துபோவான்..

அவன் தமிழகத்திற்கு வந்து போனால் கூட எவனும் கேட்க முடியாது.

உலகிலேயே பெரிய முருகன் சிலை மலேசியாவில் பத்துமலையில் உள்ளது..

இப்போது அதற்கு அருகிலேயே ராமர்கோவிலும் ஹனுமான் சிலையும் வந்தாயிற்று.

சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் சிலையைச் செய்து அனுப்பியவன் தமிழன்..

ஆனால் அங்கே வெந்நீர் ஊற்றிக் கொலை செய்யப்பட்டான் ஒரு தமிழன்..

தமிழன் என்றதும் மலையாளி கொலையாளி ஆகிவிடுகிறான்.

கேரளாவில் மலைமலையாக தங்கம் கிடைத்த பத்மநாபசுவாமி கோவில் கடைசி அறை திறக்கப்படவில்லை.. அந்த அறையில்தான் தங்கம் தமிழருக்குச் சொந்தம் என்று நிறுவும் சான்றுகள் உள்ளதாக தமிழுணர்வாளர்கள் கூறுகின்றனர்..

தங்கத்தை மலையாள அரசு வைத்துக் கொண்டது..

கண்ணகிக் கோவில் தமிழக எல்லைக்குள் உள்ளது ஆனால் மலையாள காவல்துறை அங்கே பண்ணுகிற அட்டூழியம் தமிழன் எவ்வளவு கையாலாகாதவன் என்று நிறுவுகிறது..

கண்டியை 'நுவர' என்றாக்கி சிங்களவன் வைத்துக்கொண்டான்.

 சமண வெள்ளைக் குளத்தை ஸ்ரவணபெலகோலா என்றாக்கி கன்னடவன் வைத்துக் கொண்டான்.

தஞ்சை பெரியகோயில் சோழர்காலத்து ஓவியங்களுக்கு மேலேயே நாய்க்கெர்கள் ஓவியம் வரைந்து சோழர் கல்வெட்டுகளைத் திருத்தி பெயர்த்து தமிழ் வரலாற்றை அழிக்க முயன்றுள்ளனர்..

குமரி அன்னை கோயிலை விட விவேகானந்தர் பாறையும் காந்தி மண்டபமும் பரவலாகிவிட்டது..

ராமேசுவரத்தில் எங்கே திரும்பினாலும் வடயிந்தியன் நிற்கிறான்..

கேட்டால் எல்லாரும் ஹிந்துவாம்..

ஹிந்து என்ற வார்த்தையே 1829ல் ஆங்கிலேயன் உருவாக்கியது என்று தெரியுமா?

ஆசியாவிலேயே பெரிய கோபுரம் திருவரங்கத்தில் (சிறிரங்கம்) அமைத்து, சீனாவில் கேண்ட்டான் (cantan) அருகே குப்ளாய்கான் (1300கள்) காலத்தில் சிவன்கோவில் கட்டி, உலகிலேயே பெரிய வழிபாட்டுத் தளமான அங்கோர்வாட்டை (கம்போடியாவில்) எழுப்பி, தஞ்சை பெரியகோவிலும் மதுரை மீனாட்சி கோவிலும் இன்றும் வானாளவ நிற்குமாறு பேரரசு செலுத்திய தமிழினமா இன்று இப்படிக் கேடடைந்துவிட்டது?

உன்னைக் கடவுளும் காப்பாற்றவில்லை..

கடவுளை நீயும் காப்பாற்றவில்லை..

பாக்கெட் பாலையே வாழ்க்கையில் தொட மாட்டீர்கள் இந்த சோதனைக்கு பின்னர்...


திருப்பதி: சைவ, வைணவ மோதலால் தமிழன் இழந்த மண்...


திருப்பதி முருகன் கோவில் இல்லை அது திருமாலின் உறைவிடம் என்போர் காட்டும் ஒரு வலுவான சான்று..

சிலப்பதிகாரத்தில் காடுகாண் காதையில் வரும்,

ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் *கையி னேந்தி*
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

என்ற பாடலைத்தான்,
அதாவது காவிரிக்கரையில் (திருவரங்கம்) கிடந்த வண்ணம் இருக்கும் இறைவன் வேங்கடத்தில் சக்கரமும் சங்கும் கையில் ஏந்தி வேங்கடத்தில் நிற்கிறான் என்று இதிலிருந்து அறியமுடிகிறது.

இதுதான் முறியடிக்கவியலாத வலுவான சான்று.

ஆனால் இதை வலுவிழக்கச் செய்ய முடியும்.

திருப்பதி சிலையில் சங்கும் சக்கரமும் கையிலா ஏந்தப்பட்டுள்ளது?

இல்லை. தோளில்தான் ஒட்டப்பட்டுள்ளது!

வேங்கடத்தைக் குறிக்கும் போது மறக்காமல் குறிப்பிடப்படும் பெரிய அருவி இன்று இல்லை.

அதேபோல ஆயிரம் தலையுடைய பாம்பின்மேல் அரங்கன் படுத்திருக்கவும் இல்லை.

சரி, சங்கும் சக்கரமும் திருமாலுக்கு மட்டுமே உரியதா?

இதே சிலப்பதிகாரத்தின் காடுகாண் காதைக்கு அடுத்துவருவது வேட்டுவ வரி அதில்,

சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச்
செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்
கங்கை முடிக்கணிந்த
கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்

தனது சடைமுடியில் கங்கையை அணிந்துள்ள, நெற்றியில் கண்ணை உடையவனின் (சிவன்) திருமேனியிலே மறைகள் போற்றும் பாதி பெண்ணுருவமான நீ,
உன் தாமரை போன்ற கைகளில் சங்கும் சக்கரமும் ஏந்தி சினத்தால் சிவந்த கண்ணுடைய சிங்கத்தின் மேலேறி நிற்பது என்ன மாயமோ?

என்று இதற்குப் பொருள்.

கொற்றவை கூட சங்கு சக்கரம் ஏந்தியுள்ளாள்!

பால்வெண் சங்கம் என்று வந்துள்ளது. திருமாலுக்கு பிடித்தது சாளக்கிராமம் என்ற கருப்பு சங்கு.

சிவனுக்கு பிடித்தது அதிவெண்மையான வலம்புரி சங்கு.

அழகாபுத்தூர் சிவன் ஆலயத்தில் முருகன் சங்கும் சக்கரமும் ஏந்தியுள்ளான்.

சரி நெடியோன் என்பது திருமாலுக்கு மட்டுமே உரிய பெயரா?

சிலப்பதிகாரம் மற்றொரு இடத்திலும் 'நீலமேனி நெடியோன் கோயிலைப்' பற்றிக் கூறுகிறது.

அகநானூறு (149) நெடியோன் என்று விளிப்பது திருப்பரங்குன்றத்து தலைவனை அதாவது முருகனை!!!

"வச்சிரத் தடக்கை நெடியோன் கோவில்" என்று புறநானூறு (241) கூறுகிறது. வச்சிரம் வைத்திருப்பவன் இந்திரன்.

மதுரைக் காஞ்சி தேவர்தலைவனை (இந்திரனை) 'மழுவாள் நெடியோன்' (453 - 467) என்கிறது.

பெரும்பாணாற்றுப்படை (402) கூறும் நெடியோன் கரிய நிறத்திலும் தொப்புள்கொடியில் நான்முகனைக் கொண்டவனாகவும் திருமாலுடன் ஒத்துபோகும் உருவத்துடன் உள்ளான்.

குமரிக்கண்டத்தில் ஆட்சி செலுத்திய பாண்டியமன்னன் பெயர் நெடியோன்தான் (மதுரைக்காஞ்சி 764).

சிலப்பதிகாரமே அழற்படுகாதையில் (56-61) பல அரசர்களை தோற்கடித்து நான்குவகை நிலங்களை கைப்பற்றிய மன்னனை 'உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன' என்று உவமை கூறுகிறது.

நடுகற்காதையில் பகைவரை வென்ற சேரனான செங்குட்டுவனை 'நிலந்தரு திருவின் நெடியோன்' என்று குறித்தலைக் காணலாம்.

நெடியோன் என்பது பொதுப்பெயர்.
உயர்ந்தவன் அல்லது உயரமானவன் என்று பொருள்படும்.

இது மன்னருக்கும் கடவுளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சரி கிடந்தநிலை திருமாலுக்கு மட்டுமே உரியதா?

திருப்பதிக்கு அருகே சுட்டபள்ளியில் உள்ள சிவனும் குலசேகரப்பட்டிணத்தில் உள்ள முருகனும் கூட கிடந்த நிலையில்தான் உள்ளனர்.

சிறுதெய்வங்களிலும் சில தெய்வங்கள் கிடந்தநிலையில் உண்டு.

சிறந்த எடுத்துக்காட்டு வண்டிமறிச்சம்மன்.

சிலப்பதிகாரத்தில் வரும் தெய்வங்களின் அடையாளங்கள் இன்றைய சிவன், திருமால், முருகன், துருக்கை ஆகிய தெய்வங்களுடன் ஒத்துப் போனாலும் அப்போது சைவமோ வைணவமோ இந்துமதமோ இருந்திருக்கவில்லை.

மாயோனை திருமாலாக்கி வைணவம் எடுத்துக்கொண்டது.

சேயோனை முருகனாக்கி சைவம் எடுத்துக்கொண்டது.

மாயோன்தான் திருமால் என்று பழந்தமிழ் இலக்கியம் எங்கும் கூறவில்லை.

மாயோன் அன்ன மால் என்கிறதுதான் நற்றினை (37:1) கூறுகிறது.

மால் மாயோன் ஆகியோர் கடவுளரா?

கலித்தொகையில் தலைவன் மாலுக்கும் (104:35) மாயோனுக்கும் (109:17) ஒப்பானவனாக புகழப்படுகிறான்.

புறநானூறு பாண்டிய மன்னின் புகழ் மாயோனின் புகழுக்கு ஒப்பானது என்கிறது (57:1)

ஆக மால், மாயோன் ஆகியோர் ஏற்கனவே புகழ்பெற்றிருந்த *மனிதர்கள்* என்று கருதமுடியும்.

சங்க நூல்களிலே வேங்கடமும், அதனைச் சூழ்ந்த நாட்டிற்கும் தலைவரென விளங்கிய
புல்லி (அகம் 61, 83, 209, 393-புறம் 385),
திரையன் (அகம் 85),
ஆதன் உங்கன் (புறம் 389) என்போரும் புகழ்பெற்ற மன்னர்கள்.

மலைபடுகடாம் பாடும் நன்னன் வேண்மான், வேல் உடையவனாகவும் திருவார் மார்பன் என்றும் புகழப்படுகிறான்.
வேல் முருகனுடன் தொடர்புடையது, திருவாழமார்பன் என்பது மார்பில் திருமகளைக் கொண்ட திருமாலைக்குறிப்பது.
மதுரைக்காஞ்சி (611) முருகனை நன்னன் என்றே அழைக்கிறது.

மேலும் ஒரு சான்று தரவா?

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும்  திருமலை மேல் எந்தைக்கு,
இரண்டுருவும்  ஒன்றாய் இணைந்து
- பேயாழ்வர், (மூன்றாம் திருவந்தாதி 63)

அதாவது சடை, மழு, சூழரவு இவை சிவனின் அடையாளங்கள்,
நீள்முடி, சக்கரம், பொன்னாண் இவை திருமாலின் அடையாளங்கள்,

இரண்டும் கலந்த உருவம்தான் திருப்பதியில் உள்ளது என்று பொருள்.

திருப்பதியில் நடக்கும் வில்வ அர்ச்சனை, பாலாஜி என்பதில் பாலா என்ற  வேலைக் குறிக்கும் வடசொல் என பல சான்றுகள் சைவத்தின் தொடர்புக்கு வலுசேர்க்கின்றன.

என்றால் திருமால் என்ற சொல் அப்போது இருந்ததில்லையா?
இருந்துள்ளது.
காடுகாண் காதையிலேயே
திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்
பெருமால் கெடுக்கும் பிலமுண் டாங்கு
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகா ரணியோடு
இட்ட சித்தி யெனும்பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்றுள வாங்குப்
புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்

திருமால் குன்றம் மலையின் மேலே
புண்ணிய சரவணம் என்ற  பொய்கை இருந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார் இளங்கோவடிகள்.

அதுதான் இன்றைய அழகர் மலை.
பழைய பெயர் 'திருமாலிருஞ்சோலை'.
மலைக்கு மேலே சுனையும் உண்டு.
இதனை சிலம்பாறு (சிலம்பு!) என்றும் கூறுவர்.

ஆனால் இவ்விரண்டிற்கும் நடுவில் இருக்கும் பழமுதிர்சோலை பற்றி எந்த குறிப்பும் இல்லை.

அழகர்தான் முருகரோ என்ற ஐயம் தோன்றுகிறது.

காரணம் முருகனைத்தான் அழகன் என்று கூறுவர்.

இளங்கோவடிகள் திருமால் என்று முருகனைக் குறிப்பிட்டுள்ளார் என்றுகூடச் சொல்லலாம்.

சரவண என்பது முருகருடன் தொடர்புடையதா?

ஆம். குன்றக்குரவையில்
'சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
திரு முலைப் பால் உண்டான்
திருக் கை வேல்' என்று வருகிறது.

அதாவது ஆறுகுழந்தையாகப் பிறந்து சரவணப் பொய்கையில் ஆறு (கார்த்திகைப்) பெண்களிடம் தாய்ப்பால் குடித்த முருகன் கையில் இருக்கும் வேல் என்பதிலிருந்து இதை அறியலாம்.

அழகர் ஆற்றிலிறங்குவது நாயக்கர்கள் காலத்தில்தான் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

காலங்காலமாக அழகர் மலையில் இருந்து அலங்காநல்லூர் வழியாக தேனூரில் வைகையாற்றிலிறங்கிய அழகரை, நாயக்கர்கள் இறங்கவிடாது தடுத்து முறையை மாற்றி மதுரையிலேயே இறக்குகின்றனர்.

மேலேயிருந்த சிலம்பாற்றில் 'ராக்காயி' அம்மனை உட்காரவைத்தனர்.

கள்ளழகர் நகைகள் தெலுங்கு குடும்பத்தின் பொறுப்பில்தான் உள்ளது.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் நாயக்கர்களால் முருகனின் படைவீடான பழமுதிர்சோலையே மறைக்கப்பட்டது.

அதை வெளிக்கொணர்ந்து இப்போது தற்காலக் கோவிலான சோலைமுருகன் கோவிலை 1950களில் நிறுவியவர் அண்ணல் கி.பழனியப்பனார்.

அப்பதிவு தமிழர் மண்மீட்பை அடிப்படையாகக் கொண்டது.

அதாவது நாயக்கர்காலத்தில் வைணவ ஆதரவும் தெலுங்கு ஆதரவும் தமிழர் பகுதியான திருப்பதியை பறித்து தெலுங்கு வைணவரிடம் கொடுத்துவிட்டன.

திருமால் பக்தரோ முருக பக்தரோ தமிழர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்ளாமல் திருப்பதியை மீட்டுவந்தால் போதும்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


அரசியல் என்பது ஒரு நாடக மேடை...


அதில் நடிப்பவர்களின் நடிப்பை கண்டு ஏமாறாதீர்...

இட ஒதுக்கீடும், திராவிட அயோக்கிய தனமும்...


பெரியார் தான் இட ஒதுக்கீடு வாங்கி தந்தார்..

நீங்க படிக்கிறதே அவர் போட்ட பிச்சை தான்' என்று மார்தட்டும் பெரியார் தொண்டர்களுக்கு....

மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு.. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர, கர்னாடக, மலையாள நிலங்களை உள்ளடக்கியது... இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது... இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு... எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை --- பெரியார்...

ஆக, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆந்திர, கன்னட, கேரளா பகுதிகள் இருந்தது உண்மை..

அந்த சென்னை ராஜ்தானிக்காக எடுக்கப்பட்ட சாதி பட்டியலில் நாயக்கர், மராட்டியர், சக்கிலியர், கன்னடர், மலையாளி என்று பலரும் இருந்தனர். அப்போது MBC கிடையாது. BC மற்றும் SC மட்டுமே...

பின்பு மொழிவாரி மாநிலங்கள் கேட்டும் ஆந்திர, கர்னாடக, கேரளாவினர் தனி தேசிய இனங்களாக பிரிந்து சென்றனர்.

இருந்தாலும் தமிழர் என்ற தேசிய இனமாக எழவிடாமல் 'நாம எல்லாம் திராவிடர்' என்று திரும்பவும் காயடித்தார் பெரியார்.

இது விஷயம் அல்ல. இனி பார்க்க போவது தான் விஷயம்.

மொழி வாரி மாநிலம் பிரிந்து போனதற்கு முன்பு இருந்த அதே சாதி பட்டியலை தான் இன்று வரை நாம் இட ஒதுக்கீட்டுக்கு பயன்படுத்தி வருகிறோம்.

இந்த உண்மையை எந்த திராவிட அயோக்கியனாவது உங்களுக்கு சொல்லி இருக்காங்களா...?

தமிழர் அல்லாத சாதிகள் அந்த சாதி பட்டியலில் சுமார் 20 சதவீதத்துக்கும் மேல்..

அவர்களுக்கு இன்றும் தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு BC / SC பட்டியலில் இருந்து கொடுத்து கொண்டு தான் இருக்கிறான் திருட்டு திராவடர்கள்..

எவன் ஊட்டு சலுகையை எவண்டா அனுபவிக்கிறது...?

இன்றைய ஆந்திர கர்னாடக கேரளாவில் எவனாவது இது மாதிரி தமிழனுக்கு ஒதுக்கீடு தரானா...?

மாநிலம் பிரிச்ச உடனே அவன் அவன் அவனுக்கு புரோஜனமா சாதி பட்டியலை தயாரிச்சி, அவனுக்கு மட்டுமே பயன்படும் படி இட ஒதுக்கீடு மாத்திகிட்டானே....?

ஏண்டா திராவிட சொம்புகளா, நீங்க ஏன் இன்னும் மாத்தாம இருக்குகீங்க...? கேட்டா, 'அவன் நம்ம ஆளு தான், கொடுத்தா என்னன்னு கேப்பீங்க. இதை பக்கத்து மாநிலத்தில் கேட்டு தமிழனுக்கு வாங்கி தர உங்களுக்கு துப்பு இருக்கா...?

ஆனா தமிழன் மட்டும் பெருந்தன்மையா இருக்கணும்...? பரவா இல்லை. இருந்தாலும் உங்க கேள்விக்கு பதில் சொல்றோம்..

இப்படி அயோக்கிய தனமான இட ஒதுக்கீட்டை தமிழ் நாட்டில் திராவிட ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வந்ததால் வந்த வினைகளின் ஒரு சில உதாரணங்கள் இவை...

ஒரு கோடிக்கும் மேல் வன்னியர்கள் உண்டு. ஆனால் அரசு பணியாளர்களில் அவர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் கூட இல்லை. ஆக BC இட ஒதுக்கீட்டால் வன்னியருக்கு பிரயோஜனம் இல்லை.

MBBS சீட்டில் 180 இல் கோனாருக்கு வெறும் 5 தான். அப்போ மீதியை யார் ஆட்டையை போடுறா...?

முக்குலத்தோர் தொடங்கி கவுண்டர் என அனைத்து தமிழ் சாதிகளின் நிலைமையும் இது தான்..

BC யில் இப்படி என்றால், SC பிரிவில் எந்த அடிப்படையில் அருந்ததியினருக்கு 3% சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொடுத்தீங்க...?

அப்போ யார் தான் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறா...?

தமிழக அரசு செகரட்டியெட்டில் தெலுங்கர்கள் மட்டும் சுமார் 40%க்கும் மேல். இது எப்படி சாத்தியமானது?

இருக்கும் அனைத்து திராவிட கட்சிகளின் தலைவர்களும், பெரும்பான்மை அமைச்சர்களும் தெலுங்கர்களே...

ஆக, தமிழர் அல்லாதோரின் விகிதாச்சாரத்துக்கு அதிகமாகவே அவர்கள் இட ஒதுக்கீட்டால் இங்கே பயன் அடைத்துள்ளனர் என்பதும், தமிழ் சாதிகள் திருவோடு ஏந்தி கொண்டு தான் உள்ளனர் என்பதற்கும் இவை சில உதாரணங்கள் மட்டுமே...

ஏம்பா திராவிட சிகாமனிகளா,
இப்படி என் தமிழ் சாதிக்கு வர வேண்டிய சலுகை எல்லாத்தையும் கமுக்கமாக நீங்க அனுபவிச்சுக்கிட்டு இருக்குறதும் இல்லாம, 'கவுண்டரோட இட ஒதுக்கீட்டை ஒரு பறையர் தான் பரிச்சிகிட்டார்' என்று எங்களுக்குள்ளையே சண்டையை மூட்டி விட்டுகிட்டு இருக்கீங்களே.....

எவ்ளோ பெரிய அயோக்கியர்கள் நீங்கள்...?

சுதந்திரம் வாங்கிய நாள் முதல் இன்று வரை சாதி வாரியான இட ஒதுக்கீடு தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது என்று RTI மூலம் தமிழகத்துக்கு கேள்வி அனுப்பப்பட்டு உள்ளது...

ஆக தமிழக அரசு பதில் கொடுத்தாலும் சிக்கல், கொடுக்காவிட்டாலும் திராவிட யோக்கிய சிகாமணிகளுக்கு சிக்கல் தான்...

அந்த புள்ளி விவரம் வெளியில் தெரியும் போது 'பெரியாரும், திராவிடமும் இட ஒதுக்கீடு மூலம் தமிழனை கை தூக்கி விட்டாங்க' என்ற பொய் பிம்பம் சுக்கு நூறாக உடையும்...

தமிழா உனக்கு தமிழகத்தில் வேலை இல்லாமல் செய்து தமிழகத்தை விட்டு உன்னை வெளியேற்றி வெளி நாட்டில் அடிமைப் படுத்திக் கொண்டிருக்கிறது இந்த திராவிடம்..

தமிழனை சாதி வெறியனாக சித்தரித்து.. வந்தேறி திராவிடனுக்கு உன் அரசு பணியை கொடுத்து உன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது...

தமிழினத்தையும் தமிழினத் தலைவரையும் அழிக்க... திருட்டு திராவிடம் செய்த சதி வேலைகளை பாரீர்...


பரந்த தமிழ் மாநிலம்...


1930களில் மொழிவாரி மாநில உரிமைகள் அளிக்கப்பட்டபோது...

முற்கால வரலாறு அனைத்தும் மறந்துவிட்டு..

ஐனநாயக முறைப்படி நேர்மையாக
அன்றைய சூழலில் மக்களின் பெரும்பாண்மை மற்றும் நில அமைப்பை அடிப்படையாகக் கொண்டுதமிழ் மாநிலம் அமைக்கப் பட்டிருந்தால் அது இவ்வளவு பெரியதாக இருந்திருக்கும்...

இது தவிர குடகு நம்முடன் இணையத் தயாராக இருந்தது..

அந்தமான் தீவுக்கூட்டத்தில் பெரிய தீவான பெரிய-அந்தமானில் தமிழர் பெரும்பாண்மை என்ற வகையில் அத்தீவுக்கூட்டம் முழுவதும் நமக்குக் கிடைத்திருக்கும்..

இது நடந்திருந்தால் காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்சனை, ஈழப் பிரச்சனை, மலையகத் தமிழர் பிரச்சனை, அகதிப் பிரச்சனை என எந்த பிரச்சனையும் இருந்திருக்காது...

நாம் 1900களில் மற்ற இனங்களைப் போல அரசியல் விழிப்புணர்வும் இனவுணர்வும் பெற்றிருந்தால் நாம் இன்று சந்திக்கும் பல பிரச்சனைகள் இருந்திருக்காது.

மனம் சோராமல் இழந்ததை மீட்போம்...

இந்திய மக்களை காப்பரேட்களுக்கு விற்கும் பாஜக மோடி...


மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க மாநில தன்னாட்சி வேண்டும்...


இந்திய அரசியல் சட்டம் 370 – இது தமிழகத்திற்க்கு ஏன் வேண்டும்..

இதுவரை தமிழர்களுக்கு இந்திய அரசு எந்த ஒரு வகையிலும் பாதுகாப்பு கொடுத்ததில்லை.

தமிழன் கர்நாடாகாவில் தாக்கபட்டாலும் சரி..

கேரளாவில் தாக்கபட்டாலும் சரி..

சிங்கவர்களால் கொல்லபட்டாலும் சரி..

ஆந்திரவால் கொல்லப் பட்டாலும் சரி..

இந்திய அரசு துளியும் கவலைபட்டதில்லை அப்பறம் என்ன புடுங்கின பாதுகாப்பு கொடுத்துட்டானுங்க.

மத்திய அரசின் அதிகாரம் என்பது என்ன?

இந்தி மொழியை தமிழகத்தில் திணிப்பது.

தமிழ் தெரியாத வடநாட்டவர்களை தமிழ்நாட்டில் இருக்கும் துறைகளில் பணியில் அமர்த்துவது?

தமிழ் மொழியை புறக்கணித்து முற்றிலும் கிந்தி, ஆங்கில மையமாக மாற்றுவது.

மேலும் தமிழகத்தில் இருக்கும் எண்ணற்ற இந்திய அரசின் துறையில் வடநாட்டவர்களே பெரிய பதவிகளில் அமர்த்தபடுகிறார்கள்.

பணியில் கீழ்நிலையில் இருந்து மேல் நிலைவரை வடநாட்டவர்கள்..

எந்த பதவியில் தமிழகத்தில் இருந்தாலும் தமிழ் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது..

ஆனால் தமிழன் இந்திய அரசு துறையில் பணி செய்ய வேண்டுமானால் கிந்தி நேரடியாகவும், முறைமுகமாகவும் கட்டாயமாக திணிக்கபடுகிறது.

எ-டு... இந்திய தேர்வுகளில் இந்திக்கு மட்டும் அனுமதி உண்டு, தமிழ் மொழியில் நடத்த அனுமதி கிடையாது?

தமிழகத்தில் இருக்கும் வழக்காடு மன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி கிடையாது?

அன்று,

வெள்ளையனுக்கு கப்பம் கட்டி கொண்டு அவன் நம் மேல் திணித்த ஆங்கிலத்தை பொருத்து கொண்டு அடிமையாக வாழ்ந்தோம்...

இன்று,

வடநாட்டவர்களுக்கு வரி பணம் செலுத்தி கொண்டு அவர்கள் நம் மீது திணிக்கும் கிந்தியை பொருத்து கொண்டு அடிமையாக வாழந்து வருகிறோம்?

இதற்க்கு பெயர் விடுதலையா?

இந்திய அரசியல் சட்டம் 370 ..

இது தமிழகத்திற்க்கு ஒரு முழுமையான விடுதலை இல்லை என்றாலும் ஒரு தற்காலிகமான பாதுகாப்புகாகும்...

தமிழ் குடியரசு ஒன்றே முழுமையான மெய்யான விடுதலை...

ஹைட்ரோகார்பன் எச்சரிக்கை...


தமிழினமே விழித்துக்கொள்...


உலகின் 99 வீதமான நாடுகளிலும் அவர்கள் மொழியை கட்டாயம் படித்தாலே, அந்த மொழியில் தேர்ச்சி பெற்றாலே அவர்கள் நாட்டு குடியுரிமை வழங்கப்படுகின்றது...

ஆனால் எம் மொழியை பாதுக்காக,
எம் இனத்தவருடன் நாம் தமிழில் பேசுவோம் என்றால், நாம் அனைவரும் தமிழர் என்றால், எம் மொழி காக்கப்பட வேண்டும் என்றால், எம்மை தமிழ் நாசிக்கள் என்று கூறுகின்றது, வந்தேறி திராவிடமும், ஆரியமும், அவற்றுக்கு சொம்படிக்கும் முறைதவறி பிறந்த கும்பல்...

அதனால் நான் கவலை கொள்ளவில்லை , தமிழ் நாசிக்களில் ஒருவனாக நான் இருப்பதில் பெருமை கொள்கிறேன், தமிழர்களே நீங்களும் இருங்கள்...

பால் பாக்கெட் உண்மைகள்...


பால் பாக்கெட் உண்மைகள்...


இது சதியா? அல்லது விதியா?


உலகின் பல இனங்கள் காட்டில் வேட்டையாடி உண்ட போது இங்கே நாம் கல்லணையை கட்டி கொண்டு இருந்தோம்.

அங்கே மக்கள் பேச மொழியே தோன்றாத போது இங்கே நாம் இலக்கியங்கள் படைத்தோம்.

பலருக்கு நிலத்தில் மட்டுமே போர் புரிய தெரிந்த காலத்தில், இங்கே நிகரற்ற ஒரு கப்பற்படையை வைத்திருந்தோம்.

பல மன்னர்கள் அடுத்த பகுதியை வெற்றி கொண்டு சாதனை என கூறிய போது, தெற்காசியா முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் வைத்து ஆண்ட தமிழர்கள் நாம்.

இவ்வளவு சாதித்த நம் இனத்தின் வாழ்வாதாரமே இன்று பல இன்னல்களோடு உள்ளது...

பெட்ரோல் விலை குறைய வேண்டுமானால், மோடிக்கு மீண்டும் வாக்களிக்காதீர் - டீலரின் துணிவு...


தமிழ்நாட்டிலுள்ள பூர்வீக நாய்களுக்கு ஏற்பட்ட கொடுமை….


நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டே திரிவதால் அந்த விலங்கின் பெயர் நாய்.

தமிழ்நாட்டில் நாய்களுக்கு நடுகற்கள் வைத்து வழிப்பட்டார்கள்.

மலைப்பகுதியில் யானைளை எதிர்த்து விரட்டும் நாட்டு நாய்கள் இம்மண்ணில் இப்பொழுதும இருக்கிறது.

தமிழர்க்கும் நாய்க்கும் 30000 ஆண்டுகள் தொடர்பு உண்டு.

தமிழகத்தில் நாய்களுக்காகவே பாரிவேட்டை என்ற போட்டியிருந்தது.

தமிழகத்தில் இராசபாளையம், கோம்பை, கன்னி, ஆலங்கு, என ஏராளமான நாட்டு நாய்கள் உள்ளது.

தமிழில் நாய்களுக்கு, எகினம், ஞாளி, கடிநாய், குக்கர், கூரன் என 25 பெயர்கள் உள்ளது.

நாய்களுக்கு 220 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் (Cells) உண்டு. மிகக்குறைந்த அதிர்வெண்(16-20Hz) அதிகமான அதிர்வெண் (70 -100Khz) உணரும் .

ஆனால் இன்று நாட்டு நாய்களை வீட்டில் வளர்ப்பதில்லை.

நாய்களை Cross செய்து நாயின் குணத்தை உனக்கான மிருகமாக மாற்றியதே மனிதா உன் சிறப்பே.

Blue cross கூப்பிடுக்கப்பா?.

நாயின் குணத்தை மாற்றிய அறிவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்குமா, இந்த மனிதநேய Cross கள்?

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா விற்பனைக்கு...


ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள்...


நம்மில் ஒவ்வொருவரும் ஒரு சில சந்தர்ப்பங்களில் ஆழ்மனதில் அற்புத சக்தியை நம் வாழ்க்கையில் கண்டிருப்போம். நாம் ஒருவரைப் பற்றி எண்ணி அவர் நேரில் வருவதைக் கண்டிருக்கலாம் அல்லது அவரிடமிருந்து phone call வந்திருக்கலாம். ஒருவரிடம் ஒன்று சொல்லவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அதேவேளையில் அவரே அந்தப் பேச்சை நம்மிடம் எடுத்திருக்கலாம். Phone call வந்தவுடன் இவராகத்தான் இருக்கும் என எண்ணி receiver ஐ எடுத்தால் பேசுவது நினைத்த அதே நபராக இருந்திருக்கலாம். ஆனால் அந்த விடயங்கள் மிகச் சாதாரணமானவையாக இருப்பதாலும், நம்மை ஆழ்மன சக்தியாளராக நினைக்காததாலும் அவற்றைப் பெரிதாக நினைப்பதில்லை.

ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள் பல தரப்பட்டவை. அவையாவன...
 
Psycho kinesis...

இது வெளிப்பொருட்கள் மீது இருக்கும் கட்டுப்பாடு, பொருட்களை பார்வையிலேயே நகர்த்துவது, அசைப்பது போன்றவை.
                       
நினாகுலாகினா என்ற ரஷ்யப் பெண்மணிக்கு இந்த சக்தி இருந்தது.

Extra sensory Perception (ESP)...
                       
இது நம் ஐம்புலன்களின் துணையில்லாமல் தகவல்கள் அறியமுடிவது ஆகும்.
                       
உதாரணமாக; Cards ஐ வைத்து Josep pernks  செய்த ஆராய்ச்சிகள் அவர்  எடுத்த  cards  எது  என்பதை  பார்க்காமலேயே  சொல்ல  முடிந்தது.

Telepathy...

இது ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்திகளை அனுப்புவது ஆகும். இது ஆழ்மன ஆராய்ச்சி  வகையில் சேர்க்கப்படுகிறது. மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தியை இயல்பாகவே காணலாம். தாய்-குழந்தை, கணவன்-மனைவி, நெருங்கிய நண்பர்களிடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருப்பதை நம்மில் காணமுடியும். வளர்க்கும் செல்லப் பிராணிகளுடன் கூட சில மனிதர்களுக்கு இந்த சக்தி இருக்கும்.

Claivoyance or Remote viewing...
         
இது வெகுதொலைவில் உள்ளதை காணக்கூடிய சக்தி ஆகும். ஆபிரிக்கக்  காடுகளில் அமெரிக்க விமானம் விழுந்து கிடந்த இடத்தை அட்ச ரேகை, தீர்க்கரேகையோடு ஒரு பெண்மணி சொன்னதை உதாரணமாகக் கொள்ளலாம்.
         
ஆவிகளுடன் பேசமுடிவதையும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் இந்தவகையிலேயே சேர்க்கிறார்கள்.

Psychometry...
                       
இது ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விடயங்களையும் மனிதர்களையும் அறியமுடிவதாகும். இதற்கு உதாரணமாக Petter heerkoes என்ற டச்சுக்காரரை சொல்லலாம்.   இவர் 1943ல் கீழே விழுந்து மண்டை உடைந்ததில் இந்தச் சக்தியை எதேச்சையாகப் பெற்றார். இவர் கொலை, கொள்ளை நடந்த இடங்களில் கிடைக்கும்  தடயப் பொருட்களினைக் கொண்டு குற்றவாளிகளை விபரிப்பதில் வல்லவராகயிருந்தார். 

Precognition...
                       
இது நடப்பதை முன்கூட்டியே அறியும் சக்தியாகும். உதாரணமாக Chrittus என்ற ஞானி பல விபத்துக்களை நடப்பதற்கு முன்கூட்டியேசொன்னார்.

Post cognition..
                 
இது என்ன நடந்தது என்பதை நடந்த பின்னர் அறிய முடிந்த சக்தியாகும். சில வெளிநாடுகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆழ்மன சக்தியாளர்களின் இந்த சக்தியைக் காவல்துறை அதிகாரிகள் இரகசியமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

Astral projection or out of Body experience (OBE)...
                 
உடலை விட்டு வெளியேறி பலவற்றையும் காணும் சக்தியாகும். இந்தசக்தியை செத்துப் பிழைத்தவர்கள் என்று சொல்லப்படும் மரணம் வரை சென்று சில வினாடிகள் கழித்து உயிர்பெற்ற சிலர் உணர்ந்திருக்கிறார்கள். இது குறித்து Dr. Charls dard ஆராய்ச்சி செய்திருக்கிறார்.

1967ல் அவர் செய்த ஒரு ஆராய்ச்சியில் படுத்த நிலையில் உள்ள ஒரு ஆழ்மன சக்தியாளர் அடுத்த அறையில் தரையில் எழுதிவைக்கப்பட்டிருந்த 5 இலக்க எண் என்ன என்பதை சரியாகச் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.

Psychic Healing or Spiritual Healing...
                 
இது மருந்துகளின் உதவியின்றி நோய்களைக் குணப்படுத்தும் சக்தி ஆகும். இந்த குணப்படுத்தும் சக்தியைப் பலர் ஆழ்மன சக்திவகையில் சேர்ப்பதில்லை. இது தெய்வீக சக்தி அல்லது மாற்று சிகிச்சை சக்தி வகைகளிலே சேர்க்கின்றனர். ஆனாலும் இது ஆழ்மன சக்திகளில் சேர்ப்பது மிகப் பொருத்தமானது.

ஆழ்மன சக்திகள் முழுவதையும் இந்த 9 வகைகளில் அடக்கிவிட முடியாது என்ற போதிலும் இவையே மிக முக்கியமானவை எனலாம்...

தமிழக கடலை ஸ்டெர்லைட்க்கு விற்ற பாஜக - அதிமுக...


நமது கடல் இனி வேதாந்தாவின் சொத்து..

ஆம். தமிழகக் கடல் வளங்களை விழுங்க வருகிறது வேதாந்தா...

ஒரு சதுர அடிக்கு 80 பைசா கொடுத்து வாங்கிய கூத்து..

தமிழகத்தில் மூன்று இடங்களில் மீத்தேன் எடுக்க அனுமதி என்று உண்மையைச் சுருக்கி பொய்யான செய்தியைப் பரப்புகின்றன திருட்டு ஊடகங்கள்.

இது மூன்று இடம் அல்ல மூன்று மண்டலம்.

மொத்தம் 5099 சதுர கிலோ மீட்டர் (ஏறத்தாழ சேலம் மாவட்டம் அளவு).

இம்மண்டலங்களில் முதற்கட்டமான 24 ஹைட்ரோகார்பன் (மீத்தேன்) கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. (இதுதான் மூன்று இடமாம்).

இதில் இரண்டு அதாவது 1794 + 2574= 4368 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் (புதுக்கோட்டை மாவட்டம் அளவு பெரியது) கடலில் வேதாந்தா கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஹைட்ரோகார்பன் எடுக்க தாரைவார்க்கப் பட்டுள்ளது.

மீதி 731 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி.

ஒரு சதுர கிலோமீட்டர் என்பது ஒரு கிலோமீட்டர் நீளமும், ஒரு கிலோமீட்டர் அகலமும் கொண்ட சதுரம் ஒன்றின் பரப்பளவுக்குச் சமமானது.

ஒப்பந்தத்தின் படி வேதாந்தா ஒரு ச.கீ.மி நிலத்திற்கு 90 லட்சம் விலை தரவேண்டும் (இதையும் முதலிலேயே தரவேண்டாம் சாவகாசமாகத் தரலாம்).

அதாவது வேதாந்தா சதுர அடிக்கு 83 பைசா கொடுக்கிறது. ONGC எனும் அரச கார்ப்பரேட் நிறுவனமோ அதையும் தராது. ஓசியிலேயே நம்மை ஒழித்துகட்ட வருகிறது.

OLAP எனும் இந்த புதுவிதமான தாராளமான ஒப்பந்தப்படி காலவரையறை இல்லாமல் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகியன என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அரசாங்கம் கேள்வி கேட்க முடியாது. வேண்டுமானால் பாதுகாப்பு  கொடுக்கலாம்.

(மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பினால்) நெடுவாசலில் இருந்து அகற்றப்பட்ட இந்த திட்டம் இப்போது வேறு மூன்று மண்டலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தின் முழு கடற்கரையும் அதை ஒட்டிய கடல் பகுதியும் வருகிறது.

சுருக்கமாகக் கூறினால்...

நமது வளமான பூமியை,
பொன்முட்டை இடும் வாத்தை, எங்கிருந்தோ ஒருவன் வந்து அறுக்கப் போகிறான்...

பாஜக மோடி டிஜிட்டல் இந்தியாவை தன் நண்பர் அம்பானிக்கு விற்றார்...


இயமம் - (அட்டாங்க யோகம்)...


1.  இயமம்...

கொல்லான் பொய் கூறான் களவிலான் என்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லா னியமத் திடை நின் றானே - 554

கொலை செய்யாமை (ஜீவ இம்சை செய்யாதிருத்தல், ஜீவனுக்கு உதவியாய் இருக்கும் விந்துவை நாசம் செய்யாதிருத்தல்).

பொய் சொல்லாமை, திருடாமை, பிறரால் தூஷணையடையாமை, அடக்கமுடைமை, நடுவுநிலைமையான வார்த்தையைச் சொல்லவல்லான், முடிந்தமட்டில் அன்னமிட்டு உண்ணுதல் (ஐயமிட்டு உண்ணுதல்), குற்றமில்லாமை, குடியும் காமமில்லாமை, இவைகளையுடையவன் இயமத்தினிடை நிற்பவனாகும்.

ஒரு அரசன், கல்விமான் தனவந்தன், அறிவாளி என்னும் பதவிகளில் தங்களை அமைத்துக்கொள்ள விருப்பமுடையவர்கள் அந்த லட்சியங்களுக்குத் தகுந்தது போல் தங்கள் நடையுடை பாவனைகளை மாற்றிக்கொள்வதுபோல, ஞானி என்னும் நிலையைப் பொருத்தமாக்கிக் கொள்ளவேண்டிய ஒரு சாதகன் மனித தேகத்துக்கு இயற்கையாகப் பொருந்தியிருக்கும் ஞான விரோதச் செயலை நீக்குவது, அதாவது சுக்கிலத்தைக் கழித்தலையும், கோபம், காமம், பஞ்சேந்திரியங்கள் ஆகிய இவற்றை வீணான காரியங்களுக்கு உபயோகித்தலை ஒழிப்பதாகும்.

குறிப்பு: ஐயமிட்டு உண்ணுதல் - ஐ - ஐயன் தலைவன், அருட்பெரும்ஜோதி ஆண்டவன் நம் தலைவன்.  அவனுக்கு ஆவியை இட்டு உண்ண வேண்டும்.  ஆவியே ஆண்டவனுக்கு நெய்வேத்தியம் (உள்ளுறையும் ஆவி நெய் வேத்தியம் என்று தாயுமானவர் கூறியதை சிந்திக்கவும்).  அதாவது நாம் உண்ட அன்னத்தின் பயனாகிய ஆவியை இறைவனுக்கு அர்ப்பணித்து அதன் பிறகே உண்ண வேண்டும்.

உண்மையான நைவேத்தியம் என்ன என்பதை தக்க குருவிடம் கேட்டு தெளிவு பெறவும்...

ஒன் மோர் தமிழன்....


கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக மற்றொரு தமிழர் பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்..

துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டது: தமிழக ஆளுநர் பேச்சு...


சென்னை: தமிழகத்தில் துணைவேந்தர் பதவிக்கான நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் இன்று நடைபெற்ற உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், பல கோடி ரூபாய் பரிமாற்றத்தால் நியமனம் நடைபெற்றதாக தெரிய வந்தது. முதலில் நான் அதை நம்பவில்லை.

ஆனால், தமிழகத்தில் துணைவேந்தர் பதவிக்கான நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டது. துணை வேந்தர் பதவிக்காக பணம் புரண்டது கண்டு வருத்தமடைந்தேன். துணைவேந்தர் நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும். எனவே, துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்தைக் கண்டு, அதனை மாற்ற நினைத்தேன். இதுவரை 9 துணைவேந்தர்களை தகுதியின் அடிப்படையில் நியமித்துள்ளேன்.

மேலும், பல கோடி ரூபாய் பணம் கொடுத்து துணை வேந்தர் பதவி வாங்கப்பட்டிருக்கிறது என்று பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக ஏராளமான புகார்கள் எழுந்த நிலையில், தமிழக ஆளுநர் இன்று அதனை பட்டவர்த்தனமாக வெளி உலகுக்குத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

பாஜக - அதிமுக - நீதிமன்றம் - ஸ்டெர்லைட் சதிகள்...


கற்பூரவள்ளி மருத்துவ குணம் பற்றிய தகவல்...


கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.

வியர்வை பெருக்கியாகவும், காச்சல் தணிக்கும் மருந்தாகும்.

இலைச் சாற்றை சர்கரை கலந்து குழந்தைகளுக்குக்கொடுக்க சீதள இருமல் தீரும்.

இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும். சூட்டைத் தணிக்கும்.

இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காச்சல் போகும்.

இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்

இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.

கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.

தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.

மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த...

குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.

இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும்.

அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள். குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்...

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்.?


பாஜக மோடியும் தமிழின அழிப்பு சதியும்...


கீழடி ஆய்வினை குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்ற எண்ணத்திலே நடுவண் (மத்திய ) அரசு திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களை அஸ்ஸாமிற்கு பணி மாற்றம் செய்தது.

அதுவே ஒருசர்ச்சையாய் மாறிப் பல ஆராய்ச்சியாளர்களும் துறை சார்ந்த சான்றோரும் வேண்டிய பிறகும் மத்திய அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.

தொல்லியல் ஆய்வு துறை விதிகளின்படி எந்த ஆராய்ச்சியாளர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தாரோ அவரே அதற்கான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே. இப்படி இருக்க திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களிடம் இருந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சி பொருட்களை வேறு ஒரு அதிகாரியிடம் ஒப்படைக்கும்படியும் அந்த ஆராய்ச்சியின் அறிக்கையைத் திரு.அமர்நாத்திடம் இருந்து பிடுங்கி மற்றொரு அதிகாரியிடம் நடுவண் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சிந்து சமவெளி  நாகரிகம் ஆரம்பித்து, ஆதிச்சநல்லூர், கீழடி வரை விடாது கரும் புள்ளியாய் நம்மை இன்றுவரை விரட்டுவதே தொடர் கதை ஆகிப் போனது.

இதை எல்லாம் தட்டி கேட்க வேண்டிய நமது ஆட்சியாளர்களோ நடுவண் அரசாங்கத்தின் அடிமைகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

பல்லாயிரம் வருடப் பெருமை கொண்ட தமிழ் இனத்திற்கு இந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட திட்டமிடபட்ட அழிவிற்கு 2019 ஆம் ஆண்டிலாவது ஒரு முற்றுப்புள்ளி வைப்போம் என நம்புவோம்.

இதனை நடுவண் அரசாங்கம் திரும்ப பெறாவிட்டால் உயர்நீதிமன்றத்தையோ உச்ச நீதிமன்றத்தையோ அணுகுவதைத் தவிர வேறு வழி இல்லை..

- கார்த்திகேய சிவசேனாபதி...

தமிழினத்தை அழிக்கும் பாஜக மோடியின் கூஜா நீதிமன்றம்...


சனி...


ஜாதகத்தில் லக்கினம் அல்லது சந்திரனுக்கு 8ல் சனி இருப்பவர்கள் தினம் தினம் போராடி ஜெயிக்க வேண்டும்.

வாழ்வில் பலவிதமான சோதனைகளைக் கடந்து எதிர் நீச்சல் போட வேண்டும்.

அதிலும் சனி திசை அல்லது ஏழரைச்சனி அல்லது அஷ்ம சனி தொடர்புண்டானால் தீராத நோய், தொடர் மனக்கவலைகள், விரக்தி, காரணமில்லா பயம், தற்கொலை எண்ணம் போன்றவை தலை தூக்கும்.

பரிகாரம்:

1. நெல்லிக்காய் சாறு குடித்தல், பூமிக்கு கீழ் விளையும் உணவுப் பொருட்களை உண்ணுதல்.

2. ஶ்ரீரங்கம், திருப்பதி போன்ற பெருமாள் ஸ்தலங்கள், ஐயப்பன் கோவில் வழிபாடு மற்றும் முருகனின் அறுபடை வீடுகள் வழிபாடு, அதில் குறிப்பாக திருச்செந்தூர் முருகன் சன்னதி வழிபாடு நன்மை தரும்.

3. காலபைரவ மற்றும் துர்க்கை வழிபாடு...

பூமி கோளவடிவமானது என்பதனை நிரூபிக்கும்... சில அடிப்படை கேள்விகள்?


1: நீங்கள் இரவு வானத்தில் பார்க்கையில், பூமியில் சில புள்ளிகளிலிருந்து சில விண்மீன்களை மட்டுமே காண முடியும்.

ஆஸ்திரேலியாவில் ஒருவர் இரவு நேரத்தில் காணும் வானத்தின் விண்மீன்களை, இங்கிலாந்தில் உள்ள ஒருவர் காணமுடியாது. உதாரணமாக, தென் அரைக்கோளத்திலிருந்து போலாரஸ், வட ஸ்டார் ஆகியவற்றை நீங்கள் பார்க்க முடியாது. பூமி தட்டை என்றால், எல்லோரும் ஒரே நட்சத்திர மண்டலங்களை தான் பார்க்க முடியும்.

2: பூமி கோளம் என நிரூபிக்க உங்கள் நிழலை அளவிட வேண்டும். அளந்தால் பின் பூமி தட்டை இல்லை என அறியலாம்.

குறிப்பாக பூமத்திய ரேகையிலிருந்து வெவ்வேறு தூரங்களில் நீங்கள் இரண்டு நபர்களைக் நிருத்தி, அவர்களின் நிழல்களை ஒரே நேரத்தில் அளவிடுங்கள், அவற்றின் நிழல்கள் வேறுபட்ட நீளமாக இருக்கும். ஆனால் பூமி தட்டை என்றால், அவற்றின் நிழல்கள் ஒரே மாதிரியாக இருக்கும்.

3: நமது கிரகத்தின் மையத்தின் மீது எல்லோரையும் இழுக்கும் ஈர்ப்பு, உலகில் எங்கிருந்தாலும் ஒரே எடையை தான் குறிக்கிறது. ஆனால் ஒரு தட்டையான புவியாக இருந்தால், வட்டு விளிம்பில் உள்ளவர்கள் பக்கவாட்டாக இழுக்கப்படுவார்கள், மையத்தில் உள்ளவர்கள் கீழே இழுக்கப்படுவார்கள். இந்த சுருங்கி, விரியும் விளைவு மனிதனை மணரமடைய வழிவகுக்கும்.

இந்த பிரச்சனையைச் சமாளிக்க, பிளாட் ஈரப்பணியாளர்கள், பூமியில் புவியீர்ப்பு போன்ற எதுவும் இல்லை என முடிவெடுத்திருக்கிறார்கள் - உங்களுக்கு தெரியும், ஈர்ப்பு விசைதான் முழு அண்டத்தையும் முழுவதையும் ஒன்றாக இணைக்கிறது..

4: பருவ காலங்களை விவரிப்பதற்கு, தட்டை பூமியின் மீது சூரியன் மேலே ஒரு வட்டத்தில் சுற்றி வருவதாக வாதிடுகிறார். ஆனால் பூமி தட்டையானதாக இருந்தால் எல்லோருக்கும் ஒரே இரவும்,ஒரே பகலும் தான் நிகழும்..

5: பூமி கிரகத்தில் கோடான கோடி இரும்பு உருவாக்கிய காந்தப்புலம் உள்ளது. பூமி தட்டை என்றால், அதற்க்கு எந்த மையமும் இருக்காது. பூமி தட்டையாக இருந்தால் கிரகம் ஒரு காந்த புலத்தை உருவாக்கிய ஒரே வழியில் சுழற்ற முடியாது.

இந்த பரிசோதனைகளை 1851 ஆம் ஆண்டில் லியோன் ஃப்யூகோல்ட் முதலில் நிரூபித்தார், இதன் முடிவு. பூமி கோளமே, அது உங்களை இந்த பிரபஞ்சத்தில் சுழற்றி வருகிறது. என்பதை நிரூபிக்கிறது...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


அமேசான் காட்டில் வாழ்ந்த கியாபோ இந்தியர்கள், வடக்கு பிரேசிலில் உள்ள பாரா மாகாணத்தில் குடியேறினர், இந்த மக்களுக்கு வானிலிருந்து இறங்கி பார்வையாளர்கள் தங்களுக்கு ஞானத்தையும் அறிவையும் அளித்தனர். என்று கயாபோ புராணம் கூறுகிறது.

இந்த பரலோக கடவுளை கயாபோ இந்தியர்கள் வணங்கினர். அவரது பெயர் பெப் கோரோடோடி, இது கயாபோ மொழியில், "பிரபஞ்ச போராளி" என்று பொருள்.

கயாபோ மூதாதையர்கள் செவிவழி செய்தி படி, தங்கள் தெய்வங்கள் வானத்தில் இருந்து வந்து மனிதர்களுக்கு விவசாயம், மருத்துவம், வானியல் ஆகியவற்றை கற்றுத்தந்தனர். என்று தங்கள் சந்ததியினருக்கு அறிவுறுதிகிறனர்.

ஒரு நாள், புகாட்டோ-டை என்ற மலைகளில் ஒரு மங்கலான இடி மின்னல் கேட்டது.  அது ஒரு பாதையை உருவாக்கியது. அதில் ஒரு பாதகமான வாகனம் தென்பட்டது. , அது அதன் பாதையில் அனைத்தையும் அழிக்க முடிந்தது. அதில் இறங்கி வந்தவரே பெப் கோரோடோடி. மரங்கள் மற்றும் கற்களை தூசியாக மாற்றிவிடும் சக்திவாய்ந்தவை ஆயுதங்கள் அவர்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. வியக்கத்தக்க வகையில், அவரது ஆக்கிரமிப்பு போர்வீரர் பழங்குடி மக்களை பயமுறுத்தினர், ஆரம்பத்தில் அன்னிய ஊடுருவலுக்கு எதிராக போராட முயற்சித்தனர். எனினும், அவர்களின் எதிர்ப்பு பயனற்றது.
போரில் ஒவ்வொரு முறையும் தங்கள் ஆயுதங்களை பீப் கோரொரோட்டியின் ஆடைகளை தொட்டது, மக்கள் தரையில் விழுந்தனர்.

காலப்போக்கில், கயாபோ மக்களின் மனப்பான்மை பரலோகத்திலிருந்து வந்த அந்நியரை நோக்கி தீவிரமாக வணங்க மாறியது. அவர் அழகாக மட்டுமல்ல, விதிவிலக்காக நல்ல மனதுடன் இருந்தார். விரைவில் உள்ளூர் மக்கள் அவரை மிகவும் பிடிக்க. அவர் மக்களை மந்திர கடவுள் என்று அழைத்தனர், அவரும் அவர்களுக்கு உதவியாக இருந்தார்.

கயாபோ புராணத்தின் படி - ஆயிரம் ஆண்டுகளாக தந்தைக்கு மகனைப் பற்றி விவரிக்கிறார் - பெப் கோரோரோட்டி ஒரு பள்ளியை உருவாக்கியவர், அங்கு கிராமங்களில் உள்ள பல நடைமுறை விஷயங்களைப் பயிற்றுவித்தார், அவை அவற்றின் அன்றாட வாழ்வில் பயன்பாடும் முக்கியத்துவமும் கொண்டிருந்தன.

ஒரு மாணவன் பாடங்களை புறக்கணித்ததாக அவ்வப்போது நடந்தது. பெப் கோரொர்த்தி பின்னர் அவரது சிறப்பு ஆடைகளை அணிந்து, காணாமல் போன மாணவனை கண்டுபிடிக்க உடனடியாக உதவியது. பேப் கோரோரோட்டிவிலிருந்து யாரும் மறைக்கவோ அல்லது ஓடவோ முடியாது, அவர்கள் முயற்சி செய்தால், அவர் ஒளியின் ஒரு பீங்கான் மூலம் அவர்களை முடக்குகிறார். விண்வெளி பார்வையாளரின் மற்றொரு அசாதாரண அம்சம் அவருக்கு ஊட்டச்சத்து தேவை இல்லை என்று இருந்தது.

அவர் குடித்துவிட்டு சாப்பிட்டார். ஒரு நாள் மர்மமான ஒன்று நடந்தது. பெப் கொரோரொட்டி திடீரென்று காணாமல் போனது. அவர் திரும்பி வந்தவுடன், அவர் மிகவும் கோபமாக இருந்தார், சத்தமாக கத்தினார். அவரது சாதனங்கள் ஒன்று காணாமல் போனதால் அவர் ஆத்திரமடைந்தார். அந்தப் பொருளை கண்டுபிடிப்பதற்கு மக்களை தேட ஆணையிட்டார், ஆனால் அவர்கள் தேடியும் அந்த பொருள் கிடைக்கவில்லை. அவர்கள் தங்கள் எஜமானிடம் வந்தபோது, அவருடைய உடல் நடுங்கியது, அவரை தொட்டவர்கள் தரையில் விழுந்து கிடந்தனர்.

ஒரு நாள், பெப் கோரொரொட்டி தனது சொந்த வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடிவு செய்தார். அவரை அவர்கள் தங்களுடன் தங்குவதை உறுதிப்படுத்த முயற்சித்தனர், ஆனால் அவர்களது முயற்சிகள் வீண் போனது. இடி மற்றும் தூசி தொடர்ந்து, பெப் கோரோரொட்டி வானத்தில் ஏறினார். அவர் ஒருபோதும் திரும்பி வரவில்லை என்றாலும், மக்கள் தொடர்ந்து பிரபஞ்சத்திலிருந்து பெருமளவில் வருகை தந்தனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் பெப்ப் கோரொரோட்டி வழிபாட்டு முறை கண்டுபிடித்தது, சர்வதேச கவனத்தை ஈர்த்த நிகழ்வு ஆகும். வெள்ளை மாளிகையின் உலகைப் பார்க்கவும் ஆராயவும் சில இளம் இந்தியர்கள் முதல் முறையாக ரியோ டி ஜெனிரோவிற்கு வந்தபோது இது நிகழ்ந்தது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள், அவர்கள் அமைதியாகவும் கவனமாகவும் அனைத்தையும் கவனித்தனர். இது வேற்றுகிரக கலாச்சார பரிமாற்றத்திற்கான நல்ல வாய்ப்பாக இருந்தது.

முதலில், கயாபோ இந்தியர்கள் அப்பல்லோ 11ல் ஒரு விண்வெளி வீரர் அணிந்திருந்த உடையை கண்டதும், மிகவும் உற்சாகமாக ஆனார்கள் அவர்கள் கூச்சல் போட தொடங்கினர் "இது அவன்தான்! அவர் எங்களிடம் வந்தார்!" என மகிழ்ச்சி அடைந்தனர்.

பிரேசிலின் காட்டில் உள்ள பழங்கால மக்களால் தங்கள் முன் நிற்ப்பது ஒரு நவீன கால விண்வெளி வீரர் என்று தெரியாது. அவர்கள் இதற்கு முன்பு வானிலிருந்து இறங்கி தங்கள் கடவுளுக்கு. பண்டைய கலாச்சாரங்களைப் போலவே சடங்குகளை செய்தார்கள், அவர்கள் அவரை கடவுள் என்றே அழைத்தார்கள்...

கலையரசி - இந்தியாவின் முதல் வேற்றுக்கிரகவாசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் படம்...

09.10.2018 இன்று தனது 50 வது பிறந்தநாள் காணும் பாமக வின் முதலமைச்சர் வேட்பாளர் திரு. அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...


தனது 35 இளம் வயதில் முன்னாள் இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்...

முன்னாள் பசுமை தாயகத்தின் தலைவர்...

இப்பொழுது தமிழக Badminton Association தலைவர்...

Indian Badminton Association பொருளாளர்...

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் (mp)

பாமக வின் youth wing leader...

108 ன் கதாநாயகன்...

உலக விருதுகளுக்கு சொந்தக்காரர்...


இன்னும் என்னற்ற சாதனைகளை செய்து, சாதித்துக் காட்டிய, சாதனைகள் படைத்த....

மருத்துவர் அன்புமணி இராமதாஸ். MBBS, London macro econology அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....